யோசுவா
15 யூதா கோத்திரத்துக்கு அவரவர் குடும்பத்தின்படி ஒதுக்கப்பட்ட* பகுதி+ ஏதோமின்+ எல்லை வரைக்கும், அதாவது சீன் வனாந்தரம் வரைக்கும் நெகேபின் தென்முனை வரைக்கும், விரிந்திருந்தது. 2 அவர்களுடைய தெற்கு எல்லை உப்புக் கடலின்*+ முனையில், அதாவது தெற்கே பார்த்தபடி இருக்கிற விரிகுடாவில், ஆரம்பித்து 3 தெற்கே அக்கராபீம்+ மேட்டைக் கடந்து, சீனுக்குப் போனது. பின்பு, காதேஸ்-பர்னேயாவின்+ தெற்கிலிருந்து மேலே ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதார்வரை போய், கர்க்கா பக்கமாகத் திரும்பியது. 4 அங்கிருந்து அஸ்மோனுக்குப்+ போய், எகிப்தின் பள்ளத்தாக்குவரை*+ விரிந்திருந்தது. அந்த எல்லை கடலில்* முடிவடைந்தது. இதுதான் அவர்களுடைய தெற்கு எல்லை.
5 உப்புக் கடல்தான், அதாவது யோர்தானின் முகத்துவாரம்* வரையில் இருக்கிற பகுதிதான், அவர்களுடைய கிழக்கு எல்லை. உப்புக் கடலின் விரிகுடாவில், யோர்தானின் முகத்துவாரத்தில், வடக்கு எல்லை ஆரம்பித்தது.+ 6 அந்த எல்லை பெத்-ஓக்லாவரை+ போய், பெத்-அரபாவுக்கு+ வடக்கு வரையில் போனது. அங்கிருந்து ரூபனின் மகனாகிய போகனுடைய+ கல் வரையில் போனது. 7 பின்பு, அது ஆகோர் பள்ளத்தாக்கிலுள்ள+ தெபீர்வரை போய் வடக்கே கில்காலுக்குத்+ திரும்பியது. பள்ளத்தாக்கின்* தெற்கிலுள்ள அதும்மீம் மேட்டுக்கு முன்பாகத்தான் கில்கால் இருக்கிறது. பின்பு, அந்த எல்லை என்-சேமேஸ்+ நீரூற்றுகளைக் கடந்து என்-ரொகேலில்+ முடிவடைந்தது. 8 அங்கிருந்து பென்-இன்னோம்* பள்ளத்தாக்குவரை,+ தெற்கே உள்ள எபூசியர்களின்+ மலைச் சரிவுவரை, அதாவது எருசலேம்வரை,+ அந்த எல்லை போனது. பின்பு, அது இன்னோம் பள்ளத்தாக்கின் மேற்கே இருக்கிற மலையின் உச்சிவரை போனது. அந்த மலை, ரெப்பாயீம் பள்ளத்தாக்கின் வடமுனையில் இருக்கிறது. 9 அந்த எல்லை, மலை உச்சியிலிருந்து நெப்தோவா நீரூற்றுவரை+ போய், எப்பெரோன் மலையில் இருக்கிற நகரங்கள்வரை விரிந்திருந்தது. பின்பு பாலா வரையில், அதாவது கீரியாத்-யெயாரீம்+ வரையில், போனது. 10 அது பாலாவிலிருந்து மேற்கே திரும்பி சேயீர் மலைவரை போய், வடக்கே உள்ள யெயாரீம் மலைச் சரிவுவரை, அதாவது கெசலோன்வரை, போனது. பின்பு பெத்-ஷிமேசுக்கு+ இறங்கி திம்னாவுக்குப்+ போனது. 11 அங்கிருந்து அது வடக்கே இருக்கிற எக்ரோனின் சரிவுவரை போய்,+ சிக்ரோனிலிருந்து பாலா மலையைக் கடந்து, யாப்னியேலுக்குப் போய், கடலில் முடிவடைந்தது.
12 பெருங்கடலும்* அதன் கரையோரப் பகுதிகளும் மேற்கு எல்லையாக இருந்தன.+ யூதா கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி நாலாபக்கமும் கிடைத்த எல்லை இதுதான்.
13 யெகோவா கட்டளை கொடுத்தபடியே, யூதா வம்சத்தார் மத்தியில் எப்புன்னேயின் மகன் காலேபுக்கு+ யோசுவா ஒரு பங்கு கொடுத்தார். அவருக்கு கீரியாத்-அர்பாவை (அர்பா என்பவன் ஏனாக்கின் தகப்பன்), அதாவது எப்ரோனை, கொடுத்தார்.+ 14 அதனால் ஏனாக்கின்+ மூன்று மகன்களான சேசாய், அகீமான், தல்மாய்+ ஆகியவர்களை அங்கிருந்து காலேப் துரத்தியடித்தார். 15 பின்பு, அவர் தெபீருக்குப் போய் அங்கிருந்த ஜனங்களைத் தாக்கினார்.+ (தெபீர் முற்காலத்தில் கீரியாத்-செப்பேர் என்று அழைக்கப்பட்டது.) 16 அதன்பின் காலேப், “கீரியாத்-செப்பேரைக் கைப்பற்றுகிறவனுக்கு என் மகள் அக்சாளைக் கல்யாணம் செய்து கொடுப்பேன்” என்று சொன்னார். 17 காலேபின் சகோதரனாகிய கேனாசின்+ மகன் ஒத்னியேல்+ அதைக் கைப்பற்றினார். அதனால், அவருக்குத் தன் மகள் அக்சாளை+ காலேப் கல்யாணம் செய்து கொடுத்தார். 18 அவள் தன் கணவனுடைய வீட்டுக்குப் போகும்போது, தன் அப்பாவிடம் ஒரு நிலத்தைக் கேட்டு வாங்கச் சொல்லி தன் கணவனைத் தூண்டினாள். கழுதையிலிருந்து அவள் கீழே இறங்கியபோது* காலேப் அவளிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.+ 19 அதற்கு அவள், “தயவுசெய்து எனக்கு ஒரு அன்பளிப்பு கொடுங்கள். தெற்கில்* நீங்கள் எனக்குக் கொடுத்த நிலம் வறண்ட நிலமாக இருக்கிறது. அதனால் நிறைய தண்ணீர் இருக்கிற நிலத்தையும்* கொடுங்கள்” என்று கேட்டாள். அவள் கேட்டபடியே மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் இருக்கிற நீர்வளமுள்ள நிலத்தை அவர் கொடுத்தார்.
20 இதுதான் யூதா கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கொடுக்கப்பட்ட நிலங்களின் விவரம்.
21 யூதா கோத்திரத்தின் தென்முனையில், ஏதோமின் எல்லையைப்+ பார்த்தபடி இருக்கிற நகரங்கள் இவைதான்: கப்செயேல், ஏதேர், யாகூர், 22 கீனா, திமோனா, அதாதா, 23 கேதேஸ், ஆத்சோர், இத்னான், 24 சீப், தேலெம், பெயாலோத், 25 ஆத்சோர்-அதாத்தா, கீரியோத்-எஸ்ரோன், அதாவது ஆத்சோர், 26 ஆமம், சேமா, மொலாதா,+ 27 ஆத்சார்-காதா, எஸ்மோன், பெத்-பாலேத்,+ 28 ஆத்சார்-சுவால், பெயெர்-செபா,+ பிஸ்யோத்யா, 29 பாலா, ஈயிம், ஆத்சேம், 30 எல்தோலாத், கெசீல், ஓர்மா,+ 31 சிக்லாகு,+ மத்மன்னா, சன்சன்னா, 32 லெபாவோத், சில்லீம், ஆயின் மற்றும் ரிம்மோன்.+ கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 29.
33 சேப்பெல்லாவிலுள்ள+ நகரங்கள் இவைதான்: எஸ்தாவோல், சோரா,+ அஷ்னா, 34 சனோவா, என்-கன்னீம், தப்புவா, ஏனாம், 35 யர்மூத், அதுல்லாம்,+ சோக்கோ, அசெக்கா,+ 36 சாராயிம்,+ அதித்தாயீம், கெதேரா மற்றும் கேதெரொத்தாயீம்.* கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 14.
37 சேனான், அதாஷா, மிக்தால்-காத், 38 திலியான், மிஸ்பே, யோக்தெயேல், 39 லாகீஸ்,+ போஸ்காத், எக்லோன், 40 காபோன், லகமாம், கித்லீஷ், 41 கெதெரோத், பெத்-டாகோன், நாமா மற்றும் மக்கெதா.+ கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 16.
42 லிப்னா,+ ஏத்தேர், ஆசான்,+ 43 இப்தா, அஷ்னா, நெத்சீப், 44 கேகிலா, அக்சீப் மற்றும் மரேஷா. கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 9.
45 எக்ரோன், அதன் சிற்றூர்கள்* மற்றும் கிராமங்கள். 46 எக்ரோனுக்கு மேற்கே அஸ்தோத்தின் பக்கத்தில் இருக்கிற நகரங்கள் மற்றும் கிராமங்கள்.
47 அஸ்தோத்,+ அதன் சிற்றூர்கள் மற்றும் கிராமங்கள்; காசா,+ அதன் சிற்றூர்கள் மற்றும் கிராமங்கள்; எகிப்தின் பள்ளத்தாக்கு, பெருங்கடல் மற்றும் கரையோரப் பகுதி.+
48 மலைப்பகுதியிலுள்ள நகரங்கள்: சாமீர், யாத்தீர்,+ சோக்கோ, 49 தன்னா, கீரியாத்-சன்னா, அதாவது தெபீர், 50 ஆனாப், எஸ்தெமொ,+ ஆனீம், 51 கோசேன்,+ ஓலோன் மற்றும் கீலோ.+ கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 11.
52 அராப், தூமா, எஷியான், 53 யானூம், பெத்-தப்புவா, ஆப்பெக்கா, 54 உம்தா, கீரியாத்-அர்பா, அதாவது எப்ரோன்,+ மற்றும் சீயோர். கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 9.
55 மாகோன்,+ கர்மேல், சீப்,+ யுத்தா, 56 யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோவா, 57 கேயின், கிபியா மற்றும் திம்னா.+ கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 10.
58 அல்கூல், பெத்-சூர், கேதோர், 59 மகாராத், பெத்-ஆனோத் மற்றும் எல்தெகோன். கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 6.
60 கீரியாத்-பாகால், அதாவது கீரியாத்-யெயாரீம்,+ மற்றும் ரப்பா. கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 2.
61 வனாந்தரத்திலுள்ள நகரங்கள்: பெத்-அரபா,+ மித்தீன், செக்காக்கா, 62 உப்பு நகரமாகிய நிப்சான் மற்றும் என்-கேதி.+ கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 6.
63 எருசலேமில்+ குடியிருந்த எபூசியர்களை+ யூதா வம்சத்தாரால் விரட்டியடிக்க முடியவில்லை.+ அதனால், எபூசியர்கள் இன்றுவரை யூதா வம்சத்தாரோடு சேர்ந்து எருசலேமில் குடியிருக்கிறார்கள்.