ஏசாயா
2 யூதாவையும் எருசலேமையும் பற்றி ஆமோத்சின் மகனான ஏசாயா பார்த்த தரிசனத்தின் விவரம்.+
2 கடைசி நாட்களில் இப்படி நடக்கும்:
யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்.+
எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.
எல்லா தேசத்து ஜனங்களும் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.+
3 அங்கே வருகிற பலதரப்பட்ட ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து,
“வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.
யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+
அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.
நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள்.+
4 ஜனங்களுக்கு அவர் தீர்ப்பு கொடுப்பார்.
பலதரப்பட்ட ஜனங்களின் விவகாரங்களைச் சரிசெய்வார்.
அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள்.
ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள்.+
ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது.
போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.+
6 கடவுளே, நீங்கள் யாக்கோபின் வம்சத்தாராகிய உங்கள் ஜனங்களைக் கைவிட்டுவிட்டீர்கள்.+
ஏனென்றால், கிழக்கே இருக்கிறவர்கள் செய்வதையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள்.
பெலிஸ்தியர்களைப் போல மாயமந்திரம் செய்கிறார்கள்.+
அவர்களோடு மற்ற தேசத்தாரின் பிள்ளைகள்தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.
7 அவர்களுடைய தேசம் வெள்ளியாலும் தங்கத்தாலும் நிறைந்திருக்கிறது.
அவர்களுடைய சொத்துகளுக்கு அளவே இல்லை.
அவர்களுடைய தேசம் குதிரைகளால் நிறைந்திருக்கிறது.
அவர்களுடைய ரதங்களுக்கு அளவே இல்லை.+
8 அவர்களுடைய தேசம் ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களால் நிறைந்திருக்கிறது.+
அவர்கள் தங்களுடைய கைகளால் செய்த உருவங்களை வணங்குகிறார்கள்.
தங்களுடைய விரல்களால் செதுக்கிய சிலைகளைக் கும்பிடுகிறார்கள்.
9 அதனால், அவர்களுக்குத் தலைகுனிவுதான் வரும்.
அவர்களை நீங்கள் மன்னிக்கவே மாட்டீர்கள்.
10 யெகோவா மகிமையோடும் மகத்துவத்தோடும் வரும்போது,
பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்போது,+
பாறைகளுக்குள் மறைந்துகொள்ளுங்கள், குழிகளுக்குள் ஒளிந்துகொள்ளுங்கள்.
11 மனிதனின் ஆணவம் அடக்கப்படும்.
தலைக்கனம் பிடித்தவனுக்குத் தலைகுனிவு வரும்.
அந்த நாளில் யெகோவா மட்டுமே உயர்ந்திருப்பார்.
12 அது பரலோகப் படைகளின் யெகோவாவுடைய நாள்.+
அந்த நாள், அகந்தையும் அகம்பாவமும் பிடித்தவர்களுக்கு எதிராகவும்,
உயர்ந்தோர், தாழ்ந்தோர் என அத்தனை பேருக்கு எதிராகவும்,+
13 லீபனோனில் உயர்ந்தோங்கி நிற்கும் தேவதாரு மரங்களுக்கு எதிராகவும்,
பாசானின் கருவாலி மரங்களுக்கு எதிராகவும்,
14 உயரமான மலைகளுக்கு எதிராகவும்,
உயர்ந்த குன்றுகளுக்கு எதிராகவும்,
15 பெரிய கோபுரங்களுக்கு எதிராகவும், கோட்டைச் சுவர்களுக்கு எதிராகவும்,
16 தர்ஷீசின் கப்பல்களுக்கு+ எதிராகவும்,
அழகான படகுகளுக்கு எதிராகவும் வரும்.
17 மனிதனின் ஆணவம் அடக்கப்படும்.
தலைக்கனம் பிடித்தவனுக்குத் தலைகுனிவு வரும்.
அந்த நாளில் யெகோவா மட்டுமே உயர்ந்திருப்பார்.
18 ஒன்றுக்கும் உதவாத தெய்வங்கள் அடியோடு அழிந்துபோகும்.+
19 யெகோவா மகிமையோடும் மகத்துவத்தோடும் வரும்போது,
பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்போது,+
உலகத்தைக் கதிகலங்க வைக்கும்போது,
ஜனங்கள் கற்பாறைக் குகைகளிலும், குழிகளிலும் ஒளிந்துகொள்வார்கள்.+
20 அவர்கள் வணங்கிவந்த வெள்ளி, தங்க சிலைகளை அன்று ஒழித்துக்கட்டுவார்கள்.
எதற்கும் உதவாத அந்தத் தெய்வங்களைத் தூக்கிப் போடுவார்கள்.
மூஞ்சுறுகளும் வவ்வால்களும் தங்குகிற இடங்களில் வீசியெறிவார்கள்.+
21 யெகோவா மகிமையோடும் மகத்துவத்தோடும் வரும்போது,
பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்போது,
உலகத்தைக் கதிகலங்க வைக்கும்போது,
அவர்கள் பாறைகளின் இடுக்குகளிலும் பொந்துகளிலும் ஒளிந்துகொள்வார்கள்.
அவனுக்கு என்ன மதிப்பு இருக்கிறது?