பிரான்ஸில் எல்லா திசைகளிலும் விஸ்தரிப்பு
பிரான்ஸிலுள்ள “விழித்தெழு!” நிருபர்
யெகோவாவின் சாட்சிகளின் வணக்கம் அவர்களுடைய பிரசங்க வேலை நடவடிக்கைகள், பெரிய அளவில் மொழிபெயர்ப்பது, அச்சடிப்பது, பைபிள் பிரசுரங்களை வெளியிடங்களுக்கு அனுப்புவது போன்ற காரியங்களையும் உட்படுத்துகிறது. தங்களுடைய நேரத்தை, சக்திகளை மற்றும் திறமைகளை மனமுவந்து செலவழிக்கும் வாலண்டியர்களால் இந்த வேலைகளெல்லாம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு தேசத்திலும் இவர்களுக்கு “பெத்தேல்” என்றழைக்கப்படும் ஒரு கட்டிடத்தில் தங்கும்வசதியும் உணவும் அளிக்கப்படுகிறது. “கடவுளுடைய வீடு” என்பது அதன் அர்த்தம். பிரான்ஸில் முதல் பெத்தேல் வீடு பாரீஸில் ஸ்தாபிக்கப்பட்டது. என்றபோதிலும் நகருக்குள்ளும் புறம்புமாக செய்யப்பட்ட பல மாற்றங்களுக்குப் பின்பு, 1959-ல் ஒரு புதிய பெத்தேல் வீடு, அலுவலகம் மற்றும் அச்சகம் பெளலான் பில்லன்கோர்ட்டில், பாரீஸின் புறநகர் பகுதியில் கட்டப்பட்டது. அந்த சமயத்தில் பிரான்ஸில் வெறுமென 14,000 சாட்சிகள் மட்டுமே இருந்தனர்.
1970-களின் ஆரம்பத்தில், பிரான்ஸுக்கு தேவையான பைபிள் பிரசுரங்கள் புரூக்கிலின் நியு யார்க்கில் அச்சடிக்கப்பட்டு, லி ஹாவர், நார்மண்டி, என்ற இடத்திற்கு கப்பலில் அனுப்பப்பட்டது. லூவியர்ஸ் என்ற இடம் பாரீஸுக்கும் நார்மண்டி கடலோர பகுதிக்கும் நடுவே வசதியாக அமைக்கப்பட்டிருப்பதால், ஒரு டிப்போ அங்கே திறக்கப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இந்த மாற்றம் 1973-ல் செய்யப்பட்டது, ஏற்றுமதி செய்யும் இலாக்காவும், அங்கேயுள்ள சிறிய அச்சகமும் பெளலானிலிருந்து லூவியர்ஸுக்கு மாற்றப்பட்டது. இந்த சமயத்தின்போது, பிரான்ஸிலிருக்கும் சாட்சிகளின் எண்ணிக்கை 48,000-மாக வளர்ந்திருக்கிறது.
1975-ல் பிரஞ்சு அரசாங்கம் காவற்கோபுரம் பத்திரிகை அனுப்பப்படுவதை சட்டப்பூர்வமாக அனுமதித்தது. பிறகு பிரான்ஸுக்கும் மற்றும் 15 பிரஞ்சு பேசும் தேசங்களுக்குமான காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான சந்தா கோப்புகள் சுவிட்சர்லாந்திலிருந்து லூவியர்ஸுக்கு மாற்றப்பட்டது. இது லூவியர்ஸில் பத்திரிகைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது, மேலும் அதிக ஆட்களும் அவர்களுக்கான இடமும் தேவைப்பட்டது. எனவே, இன்கார்வில் என்ற இடத்தில் 34 அறைகளைக் கொண்ட ஒரு வீடு கட்டப்பட்டது. இது லூவியர்ஸ் அச்சகத்திலிருந்து சில நூறு கெஜங்கள் தூரம் மட்டுமே இருந்தது. இது முழுவதுமாக வாலண்டியர் சேவை செய்த சாட்சிகளினால் கட்டப்பட்டு, 1978-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கூடுதலான விஸ்தரிப்பு
பிரான்ஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் 1,200 சபைகளுக்கு பத்திரிகைகளும், மற்ற பைபிள் பிரசுரங்களும் பெரிய வாகனங்கள் மூலமாக சேர்க்கப்பட்டன. இதைப் பராமரிக்கவும், பழுதுபார்க்கவும், 1984-ல் ஒரு நேர்த்தியான புதிய மோட்டார் வண்டியை நிறுத்தி வைக்கும் கூடம் லூவியர்ஸ் அச்சகத்திற்கு எதிரே கட்டப்பட்டது.
மேலும் 1980-களின் தொடக்கத்திலே, புரூக்கிலின், நியூ யார்க்கிலுள்ள ஆளும் குழு இரண்டு ஆப்செட் ரோட்டரி அச்சகங்களை பிரான்ஸுக்கு அனுப்புவதன் மூலம் அவர்கள் தானே பத்திரிகைகளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக தங்களுடைய சொந்த பத்திரிகைகளை அச்சடிக்க முடியும் என்று தீர்மானித்தது. இந்த புதிய அச்சடிக்கும் உத்தரவாதம் லூவியர்ஸில் ஒரு புதிய மூன்று மாடி அச்சாலை கட்டப்படுவதை தேவைப்படுத்தியது. 1973-ம் ஆண்டு நிறுவப்பட்ட அச்சாலையோடு இணைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய விஸ்தரிப்பு ஏறக்குறைய 140,000 சதுர அடிகள் (13,000 சதுர மீட்டர்) கூடுதலான தரை அளவை அளிக்கிறது. முதலிலிருந்த லூவியர்ஸ் கட்டிடத்தைவிட ஆறு மடங்கு பெரிதாக இருந்தது.
தாராளமான உதவிகள்
இந்த கட்டிட வேலைகள் பிரான்ஸில் நடந்தபோதிலும் முற்காலத்திய கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களைப்போன்று யெகோவாவின் சாட்சிகள் ‘தங்களுடைய விலைமதிப்புள்ள பொருட்களால் யெகோவாவை கனப்படுத்தினார்கள்.’ (நீதிமொழிகள் 3:9; எஸ்றா 1:4; 7:15, 16) உதாரணமாக பிரெஞ்சு பதிப்பின் நம் ராஜ்ய ஊழியம் கட்டிட வேலையின் முன்னேற்றத்தைக் குறித்தும், புதிய அச்சாலையில் விலையுயர்ந்த, தீக்கு இறையாகாத கதவுகள் பொருத்தப்பட வேண்டும் என்று அறிக்கை செய்தபோது, எட்டு வயதான சாராவும் அவளுடைய சகோதரனாகிய ப்ரெடிரிக்கும் தங்களுடைய சேமிப்புகளை “அச்சாலையின் கதவுகளுக்காக” நன்கொடையாக அனுப்பினர். வாரகடைசியில் கட்டிட வேலையில் உதவி செய்வதன் மூலமும், சிலர் யெகோவாவை கனப்படுத்தினர். ஆனால் மற்றவர்களோ, ஒரு சில வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்குங்கூட உதவி செய்ய வந்தனர்.
புதிய அச்சாலையின் கட்டிடம் ஒரு வர்த்தக நிறுவனத்தால் கட்டப்பட்டது. ஆனால் எல்லா விதமான மர வேலைகள், குழாய்கள் போடுவது, மின்சார இணைப்புகள், உள் அறைகளை அழகுபடுத்துவது போன்றவை சாட்சிகளின் வாலண்டியர் தொகுதிகளினால் செய்யப்பட்டது. இந்த அருமையான ஆவியையும் மனநிலையையும் கண்ட சாட்சியாக இல்லாத ஒரு தொழிலாளர் பின்வருமாறு சொன்னார்: “கட்டிட வேலையாட்களின் ஒரு தொகுதியில் நான் அனுபவித்த சூழ்நிலையில் இதுவே சிறந்ததாயிருப்பதைக் காண்கிறேன். கட்டிட நிறுவனத்தில் வேலை செய்துவந்த சாட்சியாக இல்லாத ஒருவரும்கூட தனக்கு விடுமுறையாக இருந்த நாளில், இலவசமாக வந்து வேலை செய்தார்.
மகிழ்ச்சியான ஒரு பிரதிஷ்டை
மே 4, 1985 அன்று காலை, பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தாளிகள் புதிய கட்டிடத்தை சுற்றி பார்ப்பதில் மகிழ்ச்சியடைந்தார்கள். பிரான்ஸின் எட்டு பட்டணங்களுக்கும் இந்தப் பிரதிஷ்டை நிகழ்ச்சிநிரல் ஒலிபரப்பப்பட்டது. அதற்கு ஆஜராயிருந்தவர்களின் முழு எண்ணிக்கை 56, 537. M.G. ஹென்ஷெல், யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழுவின் ஒரு அங்கத்தினர், பிரதிஷ்டை பேச்சைக் கொடுத்தார். யெகோவாவின் வணக்கத்திற்கும் சேவைக்கும் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் யெகேவாவின் நற்குணத்திற்கு சான்றாக இருக்கிறது என்பதை நினைப்பூட்டினார்.
பிரான்ஸில் யெகோவாவின் வேலை விரிவடைவதில், லூவியர்ஸில் இருக்கும் புதிய அச்சகம் ஒரு அம்சமாக மட்டுமே இருக்கிறது. லியான்ஸில் இருக்கும் பெரிய மாநாட்டு மன்றங்கள் மர்செயில்ஸ், பாரீஸ் மற்றும் வட பிரான்ஸ் ஆகிய இடங்களுக்கும் திட்டமிடப்பட்டிருக்கின்றன. சிலவற்றில் கட்டிட வேலை ஏற்கெனவே துவங்கிவிட்டுமிருக்கிறது. பிரான்ஸில் பல்வேறு இடங்களில் விரைவாகக் கட்டப்படும் ராஜ்ய மன்றங்களும் திட்டமிடப்பட்டிருக்கின்றன.
பிரான்ஸில் ஏறக்குறை 90,000 சுறுசுறுப்புள்ள சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தை பிரசங்கிப்பவர்களாயிருக்கிறார்கள். மேலும் போன வருடம் 1,78,000-ற்கும் அதிகமானோர் கிறிஸ்துவின் மரண ஞாபகார்த்தத்திற்கு ஆஜராயிருந்தார்கள். ஆம், இதைச் சிந்திக்கையில், நிச்சயமாகவே பிரான்ஸில் எல்லா திசைகளிலும் விஸ்தரிப்பு இருந்திருக்கிறது. (g86 2/22)
[பக்கம் 19-ன் படம்]
பிரான்ஸில் லூவியர்ஸிலுள்ள புதிய அச்சாலை, மற்றும் பிரதிஷ்டை பேச்சு கொடுக்கும்போது M.G. ஹென்ஷல்