படைப்பாளருக்கு புகழை உரித்தாக்குவது
“பூக்கள் அழகுக்கும் பழங்கள் பயனுக்கும் இருக்கின்றன. ஆனால் பழங்களிலும் அநேகம் அழகாக இருக்கின்றன. நமது பரலோகப் பிதா அழகை பயனுள்ளவற்றோடே இணைத்து உண்டாக்க விரும்புகிறார்.” இந்த மேற்கோள் ஒரு மதப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதல்ல. இது தி சைல்ட்ஸ் புக் ஆஃப் நேச்சர் என்ற ஒரு அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். 1887-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் வர்த்திங்டன் ஹூக்கர், எம்.டி., குடும்பங்களிலும் பள்ளிகளிலும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க இந்தப் புத்தகத்தை உபயோகிக்கும்படி நோக்கம்கொண்டார்.
இந்தப் புத்தகம் எழுதப்பட்ட பாணி, இதை எழுதியவரின் படைப்பாளர் மீதான நம்பிக்கைக்கும் பயத்திற்கும் சாட்சி பகருகிறது. டாக்டர் ஹூக்கர் தொடர்ந்து எழுதுகிறார்: “பூமியில் உள்ள பழங்களில் இருக்கும் வெவ்வேறு வகையான மகிழ்ச்சிதரும் சுவைகள் மிக அதிகம். உங்களால் நினைக்கமுடிகிற அத்தனையநேக பழங்களையும் நினைத்துப் பார்த்தால் அது உங்களுக்குப் புரியும். கடவுளுடைய தாராள நற்குணத்திற்கு இது என்னேவொரு அத்தாட்சி! அவர் ஏதோ ஒருசில காரியங்களைக் கொண்டல்ல ஆனால் அபரிமிதமான காரியங்களால் நமக்குத் திளைப்பூட்டுகிறார். இந்த உலகில் மகிழ்ச்சி தரக்கூடிய காரியங்கள் கிட்டத்தட்ட எல்லையற்ற வகைகளில் கிடைக்கின்றன. ஒரு நபர் இவையனைத்தையும் தெரிந்திருந்தும், தன்னை உண்டாக்கியவருக்கு எவ்வித நன்றியுணர்ச்சியும் இல்லாமல் நாளுக்குநாள் வாழ்வது என்னே ஒரு வினோதமானதாக இருக்கிறது!”
தி சைல்ட்ஸ் புக் ஆஃப் நேச்சர் முதன்முதலில் வெளியிடப்பட்டபோது, டார்வினின் கொள்கைகள் ஏற்கெனவே அநேகமாக முப்பது ஆண்டுகளுக்கு பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும், 19-ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்திலும்கூட, ஒரு பாடநூல் இயற்கையின் அதிசயங்களுக்காக குருட்டாம்போக்கான தற்செயல் நிகழ்வை அல்ல, ஆனால் கடவுளை இவ்வளவு பகிரங்கமாக புகழமுடியும் என்பதை டாக்டர் ஹூக்கரின் புத்தகம் காண்பிக்கிறது.—ஏசாயா 40:26-ஐ ஒப்பிடுக.