உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sg படிப்பு 22 பக். 113-116
  • பலன்தரத்தக்க முன்னுரைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பலன்தரத்தக்க முன்னுரைகள்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ****************
  • ******************
  • ஆர்வத்தைத் தூண்டும் முன்னுரை
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • ஏசாயா புத்தகத்துக்கு அறிமுகம்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • யோபு புத்தகத்துக்கு அறிமுகம்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • நீதிமொழிகள் புத்தகத்துக்கான அறிமுகம்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
sg படிப்பு 22 பக். 113-116

படிப்பு 22

பலன்தரத்தக்க முன்னுரைகள்

1 அக்கறையைத் தூண்டுதல். ஒரு பேச்சின் முன்னுரை தலைப்புப் பொருளின்பேரில் அக்கறையைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். அது உங்கள் கேட்போர் கூட்டத்தின் கவனத்தைக் கவர்ந்து அதைத் தொடர்ந்துவரவிருப்பதற்கு தகுந்த கவனத்தைச் செலுத்த அவர்களைத் தயார்செய்ய வேண்டும். இதை நிறைவேற்றுவதற்கு, உங்கள் தலைப்புப் பொருளின் மதிப்பை கேட்போருக்குக் காண்பிப்பது அவசியமாகும்.

2 ஒரு பேச்சில் அக்கறையைத் தூண்டுவதற்கு மிகச் சிறந்த ஒரு வழி உங்கள் கேட்போரை உட்படுத்துவதாகும். இந்தத் தகவல் அவர்களுக்கு அத்தியாவசியம், இது அவர்களுடைய வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதை அவர்கள் உணரட்டும். அவ்விதமாகச் செய்கையில், கேட்போரின் நிலையிலிருந்து நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். அப்படியென்றால் நீங்கள் சொல்வது கேட்போரின் பொது அறிவுக்குட்பட்டதாக இருக்க வேண்டும். அது ஓர் உதாரணமாக, அல்லது ஒரு பிரச்சினையாக, அல்லது வரிசையாக கேள்விகளாக இருக்கலாம். ஆனால் கேட்போர் அதைப் புரிந்துகொண்டு, தங்களுக்கு அதைப் பொருத்துவதற்காக அது எப்போதும் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றாகவே இருக்க வேண்டும்.

3 சில சந்தர்ப்பங்களில் உங்கள் முன்னுரையில் தப்பெண்ணத்தை மேற்கொள்வது அவசியமாயிருக்கலாம். கலந்தாலோசிக்கப்படும் தலைப்புப் பொருள் மிகவும் கருத்து மாறுபாட்டுக்குரிய ஒன்றாக இருந்தால், இது விசேஷமாக உண்மையாக இருக்கும். இப்படிப்பட்டச் சந்தர்ப்பங்களில் உங்கள் குறிப்பை நிலைநிறுத்தும் விவாதங்களைப் பலன்தரத்தக்கவிதத்தில் எடுத்துரைக்கும்வரை கேட்போர் கவனத்தை ஈர்த்துவைக்க வேண்டுமானால் உங்கள் முன்னுரை அத்தியாவசியமானது. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சாதுரியமான முறையில் முதலில் அதைக் குறிப்பிட்டுவிட்டு பின்னர் நீங்கள் கலந்தாலோசிக்க விரும்புகிற பொருளோடு தொடர்வதன் மூலம் அநேகமாக பொதுவான மறுப்பை மேற்கொள்ளமுடியும்.

4 நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது எப்போதும் அடிப்படை முக்கியத்துவமுடையதாகும். ஆனால் உங்கள் முன்னுரையின் மூலமாக அக்கறையைத் தூண்டுவதற்கு, நீங்கள் எவ்வாறு சொல்கிறீர்கள் என்பதே பேச்சின் வேறு எந்தப் பாகத்தையும்விட ஒருவேளை மிக அதிக முக்கியமானதாகும். இந்தக் காரணத்துக்காகவே என்ன சொல்லப்போகிறீர்கள் என்பது மட்டுமல்லாமல், அதை நீங்கள் எடுத்துரைக்க திட்டமிட்டிருக்கும் முறையின் சம்பந்தமாகவும் கவனமான முன்தயாரிப்பு உங்கள் முன்னுரைக்குத் தேவையாயிருக்கிறது.

5 சாதாரணமாக, சுருக்கமான, எளிய வாக்கியங்கள் உங்கள் முன்னுரையின் நோக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்றும். முன்னுரைக்கிருக்கும் குறுகிய நேரத்தில் உங்கள் நோக்கத்தை நிறைவேற்ற வார்த்தைகளின் தெரிவு அத்தனை அத்தியாவசியமாக இருப்பதன் காரணமாக, முதல் இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களை மிகவும் கவனமாகத் தயாரிப்பது பிரயோஜனமாயிருப்பதை நீங்கள் காணக்கூடும். உங்கள் ஆரம்ப வார்த்தைகள் அவற்றுக்குத் தகுதியுள்ள மற்றும் தேவையான எல்லா விளைவையும் எடுத்துச்செல்வதற்கு நீங்கள் வாசிக்கும்பொருட்டு உங்கள் குறிப்புகளில் எழுதிக்கொள்ளுங்கள் அல்லது அவற்றை மனப்பாடம் செய்துவிடுங்கள். தவிர, இது ஆரம்பத்தில் உங்களுக்கு அதிகமான தன்னம்பிக்கையையும், தொடர்ந்து சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்துப் பேசுவதற்கு தேவையான நிதானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பையும் அளிக்கும்.

6 உங்கள் முன்னுரை அளிப்பின் தொடர்பாக மேலுமான சில வார்த்தைகள் இந்தப் பேச்சுப் பண்பின் சம்பந்தமாக இந்தக் குறிப்புகளைக் குறித்து உங்கள் ஆலோசகர் அக்கறையுள்ளவராக இருக்கமாட்டார். உங்களுக்கு நடுக்கமாக இருந்தால், வேகத்தைக் குறைத்துத் தாழ்ந்த தொனியில் பேசுங்கள். நம்பிக்கையோடு பேசுங்கள், ஆனால் கர்வமாக இருப்பதுபோன்ற எந்த ஓர் அபிப்பிராயத்தையும் தவிர்க்கப்பாருங்கள். இப்படிப்பட்ட ஒரு தோற்றம் ஆரம்பத்திலேயே உங்கள் கேட்போரை விலகிப்போகச் செய்யக்கூடும்.

7 ஒரு பேச்சுக்கு முன்னுரை முதலில் அளிக்கப்பட்டாலும், பேச்சின் பொருளுரை நன்றாக ஒழுங்குபடுத்தப்பட்ட பின்புதானே இது பொதுவாக அதிக பலன்தரத்தக்க வகையில் தயாரிக்கப்படுகிறது. நீங்கள் தயாரித்திருக்கும் பொருளைச் சரிவர அறிமுகப்படுத்தும் பொருட்டு என்ன சொல்வது மிகச் சிறந்ததாக இருக்கும் என்பதை அறிந்துகொள்வதற்கு இது உங்களை அனுமதிக்கும்.

****************

8 தலைப்புக்குப் பொருத்தமாக. உங்கள் முன்னுரை தலைப்புக்குப் பொருத்தமாக இருந்தால்மட்டுமே அது தலைப்புப் பொருளுக்குள் பலன்தரத்தக்கவிதமாக வழிநடத்திச் செல்லும். பேசுவதில் உங்கள் நோக்கத்துக்குப் பங்களிப்பதை மாத்திரமே முன்னுரையில் பயன்படுத்துவதற்கு மிகுதியான கவனம் செலுத்தப்பட வேண்டும். இது நிச்சயமாகவே, ராஜ்ய செய்தியின் மதிப்புக்கிசைவாகவும், கேட்போர் மத்தியிலிருக்கக்கூடிய அந்நியர்களைப் புண்படுத்தாதிருக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.

9 முன்னுரை நீங்கள் கலந்தாராயும் தலைப்புப் பொருளுக்கு வழிநடத்துவது மட்டுமல்லாமல், நீங்கள் கையாளப்போகும் பொருளின் குறிப்பிட்ட அம்சத்தை தெளிவாக அறிமுகப்படுத்த வேண்டும். அப்படியென்றால் உங்கள் தலைப்புப் பொருளைக் குறிப்பிட்ட ஒரு தலைப்புக்குக் கட்டுப்படுத்திக்கொண்டு பின்னர் ஏதாவது ஒரு வகையில், அந்தப் தலைப்பை நடைமுறைக்கு ஒத்துவரும் அளவில், முன்னுரையில் அடையாளங்காட்டுவதை அர்த்தப்படுத்துகிறது. நீங்கள் தலைப்பைத் திட்டவட்டமாக குறிப்பிடவில்லையென்றால், சில சமயங்களில், முன்னுரையில் முக்கிய அல்லது தலைப்பு வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். இவ்விதமாக உங்கள் பேச்சின் தலைப்புக் குறிப்பாகத் தெரிவிக்கும் தலைப்புப் பொருளின் மற்ற சில அம்சங்களை நீங்கள் சிந்திக்க உங்கள் கேட்போர் எதிர்பார்க்கமாட்டார்கள்.

10 எல்லா பேச்சுக்களும் ஏதோ ஒன்றில் ஆரம்பித்து மற்றொன்றில் முடிவடைவதாக இல்லாமல் ஒன்றாக இணைந்து முழுமையாக இருக்க வேண்டும். மேலுமாக, முன்னுரை தலைப்புக்குப் பொருத்தமாக இருக்கும் இந்த விஷயம், முன்னுரை அக்கறையைத் தூண்டுவதாக இருப்பதோடு சமநிலைப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில், ஆரம்பத்தில் ஒரு நல்ல கதைக்கென்று தலைப்பைத் தியாகம் செய்யக்கூடாது. உங்கள் பொருளைத் தெரிவுசெய்வதில் பேச்சின் நோக்கம் மேலோங்கியதாக இருக்க வேண்டும். அது பேச்சின் பொருளுரைக்குப் பொருத்தமாக அதோடு ஒன்றிவர வேண்டும்.

******************

11 அளவாக. ஒரு முன்னுரை எவ்வளவு நீளமாக இருக்க வேண்டும்? எல்லா நிலைமைகளுக்கும் பொருந்துகிற திட்டவட்டமான ஒரு பதில் கிடையாது. முன்னுரையின் நீளம் தலைப்புப் பொருளுக்கு அனுமதிக்கப்பட்ட நேரம், பேச்சின் நோக்கம், உட்பட்டிருக்கும் கேட்போர் கூட்டம் இன்னும் இதுபோன்ற அநேக காரியங்களைச் சார்ந்திருக்கிறது.

12 உண்மையில், ஒரு பேச்சைக் கேட்கையில், தடையில்லாத இணைப்புக்காக முன்னுரைக்கும் பொருளுரைக்கும் இடையே தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு பிரிவை உணர்வது பொதுவாக கடினமாக இருக்க வேண்டும். உங்கள் பேச்சு ஆலோசனைத் தாளில் இந்தப் பண்பைக் கையாளும்போது உங்கள் ஆலோசகர் இந்தப் பிரச்சினையைத்தான் கொண்டிருப்பார். ஒவ்வொரு மாணாக்கரும் தன் பேச்சில் ஏதோ சில அறிமுக குறிப்புகளை உபயோகிக்கிறார், ஆனால் ஆலோசகர் இதில் அக்கறையுள்ளவராக இருப்பார்: உங்கள் கேட்போர் கூட்டம் அளிக்கப்படவிருக்கும் முக்கிய விவாதங்களுக்கு நீங்கள் வருவதற்கு முன்பாகவே அமைதியற்றவர்களாகிவிடும் அளவுக்கு முன்னுரை அத்தனை சம்பந்தமில்லாததாக, அத்தனை விளக்கமாக, அத்தனை நீளமானதாக இருக்கிறதா?

13 அக்கறையைத் தூண்டும் பண்புகளைத் தியாகம் செய்யாமலே, முன்னுரை திட்டவட்டமாக, ஒழுங்காக மற்றும் தொடர்வரிசை முறையான எண்ணங்களில் வேகமாக தலைப்புப் பொருளிடமாக நடத்திச்செல்ல வேண்டும். அது இடைவெளிகளில்லாமல் முழுமையாக இருக்க வேண்டும். இது கவனமுள்ள சிந்தனையைத் தேவைப்படுத்துகிறது, ஏனென்றால் உங்கள் ஆரம்பமானது தலைப்புப் பொருளுக்கு அத்தனை சம்பந்தமில்லாததாக இருப்பதன் காரணமாக அதற்கு நீண்ட மற்றும் விவரங்களோடுகூடிய விளக்கம் தேவையாக இருக்கும், அப்படியென்றால் முன்னுரையைத் திருத்தி ஒருவேளை ஒரு புதிய ஆரம்பக்கட்டத்தைக் கண்டுபிடிப்பது மிகச் சிறந்ததாக இருக்கும்.

14 முன்னுரைக்கும் பேச்சின் பொருளுரைக்குமிடையே கவனிக்கத்தக்க ஒரு பாகுபாடு காண்பது கடினமாக இருக்குமானால், உங்கள் முன்னுரை அளவாக இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. கேட்போர் கூட்டம் உண்மையில் தங்களை அறியாமலே உங்கள் விவாதங்களுக்குச் செவிகொடுத்துக்கொண்டிருக்கும் வகையில் அவர்களை உங்கள் பொருளுக்குள் அத்தனை நேர்த்தியாக கொண்டுவந்திருக்கிறீர்கள் என்பதை அது சுட்டிக்காட்டும். மறுபட்சத்தில், நீங்கள் எப்போதுதான் குறிப்புக்கு வரப்போகிறீர்கள் என்பதாக அவர்கள் யோசிக்க ஆரம்பித்தால், அப்பொழுது உங்கள் முன்னுரை அளவுக்கு அதிகமாக நீண்டதாய் இருக்கிறது என்பதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம். இது அடிக்கடி வீட்டுக்கு வீடு அளிப்புகளில் ஒரு பலவீனமாக இருக்கிறது, இங்கே உங்கள் முன்னுரைகளின் அளவை ஒரு வீட்டுக்கும் மற்றொன்றுக்கும் இடையே மாற்றிக்கொள்வதற்கான தேவை அடிக்கடி ஏற்படுகிறது.

15 நிகழ்ச்சிநிரலிலுள்ள ஒரே பேச்சை நீங்கள் கொடுத்துக்கொண்டிருந்தால் அல்லது ஒரு மாணாக்கர் பேச்சை கொடுத்துக்கொண்டிருந்தால், உங்கள் முன்னுரை மற்ற சமயங்களிலிருப்பதைக் காட்டிலும் நீண்டதாக இருக்கலாம். ஆனால் உங்கள் பேச்சு ஒரு தொடர்பேச்சின் பாகமாக, அல்லது ஊழியக் கூட்டத்தில் ஒரு பாகமாக இருக்குமானால், உங்கள் முன்னுரை சுருக்கமாகவும் குறிப்பாகவும் இருக்கலாம், ஏனென்றால் அது ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஒன்றாக இணைந்த முழுமையானதினுடைய ஒரு பாகமாக இருக்கிறது. நீளமான, சிக்கலான முன்னுரைகளின் மூலம் மிகுதியான நேரம் அநாவசியமாக செலவழிக்கப்படுகிறது. நீங்கள் அளிக்கவிருக்கும் கருத்துக்களை எடுத்துச்செல்வது உங்கள் பேச்சின் பொருளுரையே.

16 சுருக்கமாக சொல்லப்போனால், உங்கள் முன்னுரை தொடர்பை ஏற்படுத்தி, அக்கறையைத் தூண்டி நீங்கள் கலந்தாலோசிக்க இருக்கும் தலைப்புப் பொருளுக்குள் நடத்திச்செல்வதற்கு மாத்திரமே. நடைமுறைக்கு சாத்தியமான அளவு இதை துரிதமாகச்செய்து உங்கள் தலைப்புப் பொருளின் உண்மையான சாராம்சத்துக்குச் செல்லுங்கள்.

[கேள்விகள்]

1-3. ஒரு பேச்சின் முன்னுரையில் எந்த வழிமுறைகளின் மூலமாக தலைப்புப் பொருளுக்கு உங்கள் அக்கறையைத் தூண்டலாம்?

4-6. அக்கறையைத் தூண்டுவதற்கு வேறு என்ன காரியங்கள் நம்முடைய முன்னுரைகளுக்கு உதவக்கூடும்?

7. நீங்கள் எப்பொழுது உங்கள் முன்னுரையைத் தயாரிக்க வேண்டும்?

8-10. எவ்விதமாக நம்முடைய முன்னுரைகளைத் தலைப்புக்குப் பொருத்தமானதாக ஆக்கலாம்?

11-14. அளவான முன்னுரையாக இருக்கிறதா என்பதை என்ன விதத்தில் நாம் தீர்மானிக்கலாம்?

15, 16. தொடர்பேச்சின் பாகமாக இருக்கையில் ஒரு பேச்சின் முன்னுரை எவ்வளவு நீண்டதாக இருக்க வேண்டும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்