பாதுகாப்பான ஓர் எதிர்காலம்—இதை நீங்கள் எப்படிக் கண்டடையலாம்
பாதுகாப்பு வேண்டுமென்ற மெய்யான ஆவல் எல்லா வாழ்க்கைத் துறைகளிலுமுள்ள மக்களுக்கும் உண்டு. நிச்சயமாக இதையே நீங்கள் உங்களுக்கும் உங்களுக்கு அன்பானவர்களுக்கும் விரும்புகிறீர்கள். திட்டமாய்ச் சொல்ல முடியாத ஏதோ ஓர் எதிர்காலத்தில் மேம்பட்ட நிலைமைகள் வருமென்ற வெறும் வாக்குறுதியை பார்க்கிலும் அதிகத்ததைப் பெரும்பான்மையினர் விரும்புகின்றனர். இப்பொழுதுதானே நாம் எதிர்ப்படும் வாழ்க்கையின் அவசர பிரச்னைகள் இருக்கின்றன. இப்பொழுதுதானேயும் நமக்கு மெய்யான பாதுகாப்பை அளித்து, வரப்போகிற ஆண்டுகளிலும் அவ்வாறு தொடர்ந்து அளித்து வரப்போகிற ஒன்றே தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட பாதுகாப்பு கூடியகாரியமாய் இருக்கிறதா?
2 இது கூடிய காரியமென்று நம்புகிற ஆட்கள் எல்லா மரபினரிலும் பூமியின் எல்லா பாகங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு அக்கறையூட்டுகிற இந்தப் பாதுகாப்பு, பின்வருமாறு எழுதின தேவாவியால் ஏவப்பட்ட கடவுளுடைய ஒரு தீர்க்கதரிசியால் வெகு காலத்திற்கு முன்பாக விவரிக்கப்பட்டது: “மெய் நீதியின் வேலை சமாதானமாக வேண்டும்; மெய் நீதியின் சேவை, வரையறையில்லா காலத்திற்கும் அமைதியும் பாதுகாப்புமாக வேண்டும். என் ஜனம் சமாதான தாபரங்களிலும் முழு உறுதி நம்பிக்கையுள்ள உறைவிடங்களிலும் தொல்லையற்ற இளைப்பாறும் இடங்களிலும் குடியிருக்க வேண்டும்.” (ஏசாயா 32:17, 18)aதற்போதைய உலகக் கலவரத்தின் மத்தியிலும் பூமியின் எல்லா பாகங்களிலும் லட்சக்கணக்கான ஆட்கள் ஏற்கெனவே சமாதானமான பாதுகாப்பை அனுபவித்து மகிழத் தொடங்குகின்றனர். இன்னும் மகிழ்ச்சி மிகுந்த ஓர் எதிர்காலத்தை ஆவலோடு நோக்கியிருப்பதற்கும் அவர்களுக்குக் காரணம் இருக்கிறது. நீங்களுங்கூட இவர்களோடு இப்படிப்பட்ட நன்மைகளில் பங்குகொள்ளலாம்.
3 இப்பொழுது மிகவும் சமீபமாய் இருக்கிற காலமாகிய, ‘ஜனங்களைப் பயந்து நடுங்க வைக்க ஒருவரும் இருக்கப்போகாத ஒரு காலத்தை’—குற்றச் செயலுக்கு முடிவுண்டாகியிருக்கும், மேலும் ஒருவருடைய உடமைக்கும் உயிருக்குந்தானே ஏற்படும் அபாயத்திற்கு முடிவுண்டாயிருக்கும் அந்தக் காலத்தை—இந்த ஆட்கள் எதிர்பார்க்கிறார்கள். (மீகா 4:4) “பூமியில் ஏராளமான தானியம் இருக்கப் போவதனால்” பசி இனிமேலும் இராத அந்த நாளை, இப்பொழுது உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் பலர் காண்பார்கள் என்று நம்புவதற்கு அவர்களுக்கு நல்ல காரணம் இருக்கிறது. (சங்கீதம் 72:16, NW) மேலும் “அவர்களுடைய கண்ணீர்யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின,” என்ற இந்த வாக்கின் நிறைவேற்றத்தைத் தாங்கள்தாமே காணும்படி ஆவலாக எதிர் நோக்குகிறார்கள். (வெளிப்படுத்துதல் 21:3,4) இப்படிப்பட்ட காரியங்கள் உண்மையில் நடந்தேறுமென்று அவர்கள் எப்படி அவ்வளவு நிச்சயமாய் இருக்கக்கூடும்? இந்த வாக்குகள் கடவுளுடைய சொந்த வார்த்தையாகிய பைபிளில் காணப்படுவதினாலேயே.
4நம்முடைய எதிர்காலத்தைப்பற்றி பைபிள் சொல்லுவது சரித்திரத்தின் போக்குகளைப் பொருள்படுத்திக்கூறும் வெறும் மனித முயற்சிகளின் விளைவல்ல. எழுதுவதற்கு மனிதர் பயன்படுத்தப்பட்டனர், ஆனால் அவர்களுடைய மனம் கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்பட்டது. இவ்வாறாக அந்தச் செய்தி கடவுளிடமிருந்து வந்திருக்கிறது. அதன் பொருளடக்கங்களின் மூலகாரணத்தைக் குறித்து பைபிள் தானேயும் பின்வருமாறு சொல்லுகிறது: “வேத வாக்கியங்களிற் கண்ட எந்தத் தீர்க்கதரிசனமும் அவனவன் வியாக்கியானத்தினால் வருவதல்ல. தீர்க்கதரிசனம் ஒருபோதும் மனுஷ சித்தத்தினால் வரவில்லை; கடவுளினிடமிருந்து வந்ததையே பரிசுத்த ஆவியினால் ஏவப்படுகிறவர்களாய் மனுஷர் பேசினார்கள்.” (2 பேதுரு 1:20, 21, தி.மொ.) கடவுள் இதை எப்படிச் செய்யக் கூடுமென்பதை விளங்கிக்கொள்வது இன்று நமக்குக் கடினமாய் இருக்க வேண்டியதில்லை. வானவெளியில் பயணம் செய்யும் மனிதருங்கூட பூமிக்குச் செய்திகளை அனுப்பியிருக்கின்றனர். இவை குறிப்பிடத்தக்கத் தெளிவுடன் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அப்படியானால், பரலோகத்தில் இருக்கிற கடவுள், இதைப் பார்க்கிலும் மிக மேம்பட்ட முறையில், தம்முடன் ஒத்திசைவில் இருந்த உண்மையுள்ள மனிதருக்குச் செய்திகளை அனுப்பியிருக்க முடியாதா? நிச்சமாகவே முடியும்! அப்படியானால், ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை நீங்கள் எப்படிக் கண்டடையக்கூடும் என்பதைப்பற்றி பைபிள் சொல்வதைச் சோதித்துப் பார்க்கும்படி நாங்கள் நல்ல காரணத்துடனேயே உங்களை அழைக்கிறோம்.
உண்மையான உதவியை எங்கே கண்டடையக்கூடும்?
5 வாழ்க்கையை மெய்யாய் உள்ளபடி நோக்க பைபிள் நமக்கு உதவி செய்கிறது. நம்முடைய நிலையான சுகநலத்தைக் கருத்தில் கொண்டு, நிலைத்திருக்கும் காரியத்தில் நம்முடைய நம்பிக்கையை வைக்கும்படி அது நம்மைத் துரிதப்படுத்துகிறது. இன்று கோடிக்கணக்கான ஆட்கள் பொருளுடைமைகளில் தங்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள். பணம் மற்றும் வேறு பொருளுடைமைகளின் விலை மதிப்பை ஒப்புக்கொள்ளுகிறபோதிலும், வாழ்க்கையில் இவை பெரிய காரியமல்லவென்று பைபிள் காட்டுகிறது. ‘ஒருவன் ஏராளமான செல்வத்தை உடையவனாக இருக்கிறபோதிலுங்கூட அவனுடைய உயிர் அவன் வைத்திருக்கிற பொருட்களின் பலனாக வருகிறதில்லை,’ என்ற மறுக்க முடியாத சத்தியத்தை பைபிள் கூறுகிறது. (லூக்கா 12:15, நியூ உவோர்ல்ட் டிரான்ஸ்லேஷன், NW) உடமைகள் தங்கள் விலைமதிப்பை இழக்கக்கூடும். அவை கொள்ளையிடப்படக்கூடும் அல்லது அழிக்கப்படக்கூடும். அவற்றை உடையவனுடைய உயிர், அவனுடைய பணத்தைத் திருட முயலும் ஒருவனால் ஆபத்துக்குள்ளும் ஆக்கப்படலாம். மெய்யான பாதுகாப்பு வேறு எங்கேயாவது இருக்கவேண்டும். ஆனால் எங்கே?
6 மனிதத் தலைவர்கள் வாக்குக் கொடுக்கிறதைச் சுற்றி எதிர்காலத்திற்கான தங்களுடைய எல்லா நம்பிக்கைகளையும் கட்டுகிற ஆட்கள் இருக்கின்றனர். நீங்கள் அப்படிச் செய்ய வேண்டுமா? தனித்தத் தலைவர்கள் நேர்மையுள்ளவர்களாக அல்லது திறமையுள்ளவர்களாக இருக்கிறார்களா என்பதைப் பற்றியதில் எந்தக் கேள்வியையும் எழுப்பாமலேயே, பைபிள் அவர்களெல்லோரும் மரித்துப்போகிறார்கள் என்று நம்மை நினைப்பூட்டுவதன் மூலம் நேரே காரியத்தின் உள் மையத்திற்குச் செல்லுகிறது. ஞானமாய் அது பின்வரும் எச்சரிக்கையைக் கொடுக்கிறது: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” (சங்கீதம் 146:3, 4) ஆகையால், பெரும்பாலும், மனிதத் தலைவர்கள் மனிதவர்க்கத்தின் ஒரு பாகத்தினருடைய விவகாரங்களில் ஒரு சில ஆண்டுகளுக்கு மாத்திரமே செல்வாக்குச் செலுத்துகிறார்கள். நீண்டகால பாதுகாப்பைக் குறித்ததில் தங்களுக்குத்தாமே அவர்கள் கொடுத்துக் கொள்ளக்கூடிய காலத்திற்கு அதிகமாக எவ்விதமும் அவர்கள் உங்களுக்குக் கொடுக்க முடியாது.
7 ஆனால் இதைக் கொடுக்கக்கூடிய ஒருவர் இருக்கிறார். இவர் வானங்களையும் பூமியையும் உண்டாக்கின சிருஷ்டிகர். இந்தப் பூமி உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே அவர் இருந்து கொண்டிருந்தார்; இந்த இருபதாம் நூற்றாண்டு கடந்து வெகு காலமாய் விட்ட பின்பும் அவர் தொடர்ந்து இருந்து கொண்டிருப்பார். சங்கீதம் 90:2 அவரிடம் சொல்லுகிற பிரகாரம்: “ஆதியந்தமில்லாத சதா காலங்களிலும் நீரே கடவுள்.” அவரே உயிரின் ஊற்றாக இருக்கிறார், உயிருள்ளவற்றை ஆதரித்து வருவதற்கான ஆற்றலை பூமிக்குக் கொடுத்தவரும் அவரே. அவ்வாறாக நாம் தற்போது சுகநலத்துடன் இருப்பதும் எதிர்காலத்திற்கான நம்முடைய நல்வாய்ப்பு நம்பிக்கைகளும் அவர் பேரிலேயே சார்ந்திருக்கின்றன. இதன் காரணமாகவே, நாம் மெய்யான எந்தப் பாதுகாப்பை அனுபவிக்க வேண்டுமென்றாலும் நமக்கு அவருடன் ஒரு நல்ல உறவு தேவையாக இருக்கிறது.
8 தேவைப்படுகிறதெல்லாம் ஒருவருடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு மதத்தை வைத்திருப்பதே என்று இது கருத்துக்கொள்ளுகிறதா? இந்த முடிவுக்கு வருவது தவறாக இருக்கும். கடவுள் தம்முடன் நட்பான உறவை ஒரு குறிப்பிட்ட வகையான ஆட்களுக்கு அளிக்கிறார். எவ்வகையானவர்களுக்கு? பைபிள் இவர்களைப் பின்வரும் முறையில் விவரிக்கிறது. “உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும், . . . தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.” (யோவான் 4:23, 24) கடவுளை ‘உண்மையுடன்’ அல்லது ‘சத்தியத்துடன்’ வணங்குகிற ஒருவராக நீங்கள் இருக்கிறீர்களா? உங்கள் நம்பிக்கைகள், கடவுளுடைய வார்த்தையில் ‘சத்தியபரராகிய கடவுளால்’ குறித்து வைக்கப்பட்டிருக்கிறதோடு முற்றிலும் ஒத்திருக்கின்றனவாவென்று காண்பதற்கு, அவற்றைக் கடவுளுடைய வார்த்தையின் ஒளியில் நீங்கள் ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்களா? (சங்கீதம் 31:5) அப்படிச் செய்ய நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? சத்தியத்திற்கு ஒத்திராத போதகங்களும் பழக்கச் செயல்களும் ஒருவருக்கும் நிலையான நன்மை தருபவையாக இல்லை. இவை காரியங்களை உண்மையில் இருக்கிறபடி காணாமல் அசட்டையாய் இருக்கும்படி மக்களைச் செய்விக்கின்றன; இவை மக்களைத் தவறான வழியில் நடத்துகின்றன. ஒரு ஆள் சத்தியத்தை அறிவதற்கான உண்மையான விருப்பத்தையும் மேலும் தன்னுடைய வாழ்க்கையைச் சத்தியத்துடன் ஒத்திசைவுபடுத்துவதற்கான தேவை ஏற்படுகையில் அதற்கேற்ற சரிப்படுத்தல்களைச் செய்யவும் மனமுள்ளவனாக இருந்தால் மாத்திரமே உண்மையான பாதுகாப்புடன் வருகிற மனத்திருப்தியை அவன் அடையக்கூடும். மிக அதிக முக்கியமான சத்தியங்களில் ஒன்று கடவுள் தாமே யார் என்பது உட்பட்டதாய் இருக்கிறது.
9 அவருடைய தனிப்பட்ட பெயர் உங்களுக்குத் தெரியுமா? அது “கடவுள்” அல்லது “கர்த்தர்” என்பதல்ல. “திருவாளர்” “அரசர்” ஆகியவை பட்டப் பெயர்களாக இருப்பதைப் போலவே இவை பட்டப் பெயர்களே. என்றபோதிலும், தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பின்படி சங்கீதம் 83:17-ல் பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது: “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்.” இது மனிதர் கடவுளுக்குக் கொடுத்திருக்கிற பெயர் அல்ல. (1936-ல் பிரசுரிக்கப்பட்ட) தமிழ் திருத்திய மொழிபெயர்ப்பில் காட்டியிருக்கிறபடி கடவுள் பின்வருமாறு சொல்லுகையில் தாமே தமக்காகப் பேசுகிறார்: “நானே யெகோவா, என் நாமம் இதுவே.” (ஏசாயா 42:8) மூல எபிரெய வேத எழுத்துக்களின் சில மொழிபெயர்ப்பாளர்கள் இந்தப் பெயரை “யாவே” என்று மொழிபெயர்க்கின்றர். மற்றவர்கள் வெறுமென “கர்த்தர்” என்ற பதத்தைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் இந்தக் குறிப்பிட்ட தேர்வுகளில் அவர்கள் இதை இங்கே காட்டியிருக்கிறபடி தடித்த எழுத்துக்களில் அச்சிடுகின்றனர், இவ்வாறு அவர்கள் தங்களுடைய மொழிபெயர்ப்பில் தாங்கள் கூறுவதைப் பார்க்கிலும் அதிகம் மூல மொழி வசனத்தில் இருக்கிறதென்று குறிப்பாகத் தெரிவிக்கின்றனர்.
10 ஓர் உதாரணமாக, உங்கள் சொந்த பைபிளில் சங்கீதம் 8:9-ஐ நீங்கள் எடுத்துப் பார்க்கலாம், ஆங்கில காமன் பைபிளின்படி (இது 1973-ல் பிரசுரிக்கப்பட்டது. கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டண்ட் வேத பேராசிரியர்களால் ஆதரித்துக்கூறும் புற குறிப்பை உடையதாய் இருக்கிறது), அது வாசிப்பதாவது: “ஆ கார்த்தாவே, எங்கள் கர்த்தாவே, உம்முடைய பெயர் பூமி முழுவதிலும் ஆ எவ்வளவு மேன்மையுள்ளதாய் இருக்கிறது!.” “கர்த்தர்” என்று ஒரே வசனத்தில் இரண்டு தடவைகள் வரும் இந்தச் சொல் வெவ்வேறுபட்ட அச்சு வகைகளில் கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். முதல் வருவதில் ஆங்கிலத்தில் “LORD” என்பதாக, முதலெழுத்துக்கு “L” என்று பெரிய பெரும்வகை எழுத்தும் மற்றவற்றிற்கு பெரும்வகை எழுத்துக்களும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன, ஆனால் இரண்டாவது தடவை வரும் அதே சொல் “Lord” என்பதாக முதலெதுத்து பெரும் வகையிலும் மற்றவை சிறிய வகையிலும் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. (கத்தோலிக்க நியூ அமெரிக்கன் பைபிளில் இது சங்கீதம் 8:10-ல்bகாணப்படுகிறது.) என்றபோதிலும், மற்ற மொழிபெயர்ப்புகள், எதையும் மறைக்க முயலாமல், இந்த வசனத்தைப் பின்வருமாறு மொழிபெயர்க்கின்றன: “யெகோவாவே எங்கள் கடவுளே, உம்முடைய பெயர் பூமி முழுவதிலும் ஆ, எவ்வளவு மேம்மையுள்ளதாய் இருக்கிறது!”
11 சில மொழிபெயர்ப்பாளர்கள், கடவுளுடைய தனிப்பட்ட பெயரைப் பயன்படுத்தாதனால் அதிகப்பட்ட ஆட்கள் பைபிளை ஏற்கும்படி தாங்கள் செய்வதாக எண்ணக்கூடும். ஆனால் மூல மொழி வாக்கியத்தில் மற்ற எதைப் பார்க்கிலும் மிக அதிகப்பட்ட வண்ணமாய் அடிக்கடி தோன்றுகிற இந்தப் பெயரை மறைக்க அவர்கள் முயலுகையில் மொழிபெயர்ப்பாளராக அவர்கள் நேர்மையுள்ளவர்களாய் இருக்கிறார்களா? மக்கள் தம்முடைய பெயரைத் தெரிந்துகொள்ளும்படியே உண்மையான கடவுள் விரும்புகிறார். பூர்வ எகிப்து அரசனுக்கு, அதுவரை அவனைத் தாம் ஏன் கொல்லாமல் விட்டு வைத்தார் என்பதைக் குறித்துச் சொல்லும்படி தம்முடைய ஊழியனாகிய மோசேயினிடம் கடவுள் கூறினபோது இதை அவர் தெளிவாக்கினார். ஏன் அவ்வாறு விட்டு வைத்தார்? “என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியியெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும்,” என்று கடவுள் சொன்னார். (யாத்திராகமம் 9:16) கடவுளுடைய பெயரை உபயோகப்படுத்துவதும், மரியாதையுடன் அவ்வாறு செய்வதும் நமக்கு முக்கியமானது, நாம் சத்தியத்தை நேசிப்போமானால் நம்மை ஒரே மெய்க் கடவுளாகிய யெகோவாவின் வணக்கத்தாராக அடையாளங்காட்ட நாம் தயங்க மாட்டோம்.
12 என்றபோதிலும், கடவுள் அங்கீகரிக்காத ஏதோவொன்றோடு அவருடைய பெயரைச் சம்பந்தப்படுத்தாதபடி கவனமாய் இருக்கவேண்டும். “தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்,” (யோவான் 4:24) என்பதை நினைவுபடுத்துக் கொள்ளுங்கள். ‘கடவுள் ஆவியாயிருக்கிறார்,’ என்ற இந்த உண்மையை நாம் மதித்துணருவோமானால், மேலும் அவரை “ஆவியோடு,” அதாவது, ஆவிக்குரிய வழிகளில் நாம் வணங்குகிறோமென்றால், கடவுளைக் குறித்துக் காட்ட காட்சிப் பொருட்களை நாம் உபயோகிக்கமாட்டோம். யோவான் 1:18-ன்படி ‘கடவுளை ஒருவனும் ஒருபோதும் கண்டதில்லை.’ ஆகையால் அவரைக் குறித்துக்காட்டும் எந்த படத்தையோ, செதுக்கியெடுக்கும் உருவத்தையோ உண்டாக்குவது கூடாத காரியம். பார்க்கவோ, கேட்கவோ, பேசவோ முடியாத, மேலும் அதற்கு முன்னால் குனிந்து வணங்குகிறவர்களுக்கு உதவிசெய்ய ஒரு விரலையுங்கூட எழுப்ப முடியாத ஒரு சிலை, உயிருள்ள கடவுளை ஒருபோதும் சரியாய்க் குறித்துக் காட்ட முடியாது. நிச்சயமாகவே சில சிலைகள் கடவுளைத்தாமே குறித்து நிற்கும்படி கருதப்படவில்லை. என்றாலும் கேள்வி என்னவென்றால், அவை மத பக்திக்குரிய கருவிகளாக இருக்கின்றனவா? கடவுள் பத்துக் கற்பனைகளைக் கொடுத்தபோது இப்படிப்பட்ட ஒரு நோக்கத்துக்காக எவ்விதமான சிலைகளையும் உண்டுபண்ணக்கூடாதென்று திட்டவட்டமாய் கூறினார். அவர் கட்டளையிட்டதாவது: “எதற்கும் ஒப்பான எந்தச் சொரூபத்தையும் செய்துகொள்ள வேண்டாம். நீ அவைகளை வணங்கவும் சேவிக்கவும் வேண்டாம்.” (யாத்திராகமம் 20:4, 5, திருத்திய மொழியெர்ப்பு) யெகோவா அங்கீகரிக்காத பொருட்களை நாம் உபயோகிப்பதற்குப் பதிலாக, சத்தியத்தை நேசிப்பதானது கடவுளை அவர் உண்மையில் இருக்கிறபடி அறிந்துகொள்ளும்படி நமக்கு உதவி செய்யும்.
13 அவருடைய பண்புகள் அப்பேர்ப்பட்டவையாக இருப்பதனால், நீதியை நேசிக்கிற எல்லோருடைய நம்பிக்கையையும் பெறுபவையாக இருக்கின்றன. எந்த மனிதனுடையதைப் பார்க்கிலும் மிகமிக மிஞ்சுகிற சர்வவல்லமை ஞானம் ஆகியவற்றைப் போன்ற அவருடைய பண்புகளில் சில, பொருள் சம்பந்தப்பட்ட அவருடைய படைப்பு வேலைகளில் தெளிவாய்க் காணப்படுகின்றன. சூரியன் மறைகையில் தோன்றும் அழகு, பறவைகளின் இனிமையான பாடல்கள், பூக்களின் நறுமணம் மேலும் நீங்கள் அனுபவித்து மகிழும் பல சுவைகள் ஆகிய எல்லாம் மனிதவர்க்கத்தின் பேரிலுள்ள கடவுளுடைய அன்பைப் பிரதிபலிக்கின்றனவென்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா? என்றாலும் பைபிள் இதற்கும் அப்பால் சென்று கடவுளைப்பற்றி நமக்கு இன்னுமதிகத்தைச் சொல்லுகிறது. சரியானதை யெகோவா உறுதியாய்க் கடைப்பிடிக்கிறார், என்றாலும் அவர் இரக்கமும் பரிவுமுள்ளவராக இருக்கிறார் என்று பைபிள் வெளிப்படுத்துகிறது. அது அவரைப் பின்வருமாறு விவரிக்கிறது: “யெகோவா, யெகோவா, உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் சத்தியமுமுள்ள கடவுள்; ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக ஒருக்காலும் தீர்க்காதவர் (யாத்திராகமம் 34:6, 7 திருத்திய மொழிபெயர்ப்பு) பூர்வ இஸ்ரவேல் ஜனத்தைப் பல நூற்றாண்டுகளாகக் கடவுள் கையாண்டு நடத்தின அவருடைய நடவடிக்கைகளைப் பற்றி பைபிள் சொல்லுகிறது. இந்த நடவடிக்கைகள் அவருடைய இந்தப் பண்புகளை உயிர்ப்புள்ள வண்ணமாய் நிரூபித்துக் காட்டுகின்றன. மேலும் “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்கு பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும்” அந்த எழுதப்பட்ட பதிவு நிரூபிக்கிறது. (அப்போஸ்தலர் 10:34, 35) எல்லா வகையான ஆட்களும் தம்முடன் ஒரு நல்ல உறவை அனுபவித்து மகிழ வேண்டுமென்று அவர் விரும்புகிறார். இது கூடியதாக இருக்கும்படி அவர் தயவுடன் ஏற்பாடு செய்திருக்கிறார்.
14 உண்மையான கடவுளின் போற்றத்தக்க இந்தப் பல பண்புகளுக்கு நன்றியோடுகூடிய மதித்துணர்வை ஒருவன் தன்னில் வளர்த்து வருகையில் என்ன நடக்கிறது? கடவுளுடைய “பெயர்” அவனுக்கு மேலும் மேலும் ஆழ்ந்த அர்த்தத்தைக் கொடுப்பதாகிறது. அவன் யெகோவாவில் தன் நம்பிக்கையை வைத்து காரியங்களைக் கடவுளுடைய வழிகளில் செய்கிறான். இதன் பலனாக அவன் பாதுகாப்பை அனுபவிக்கிறான். நீதிமொழிகள் 18:10 பின்வருமாறு சொல்லுகிற பிரகாரம் இது இருக்கிறது: “யெகோவாவின் திருநாமம் பலத்த கோபுரம் [அரண்], நீதிமான் அதற்குள் ஓடி அடைக்கலம் பெறுவான்.”
15 இந்தப் பாதுகாப்பானது எதிர்காலத்திற்கான ஒருவனின் எதிர்பார்ப்பையும் உட்படுத்துகிறது. மெய்யாகவே, யெகோவாவின் பேரிலேயே மனிதவர்க்கம் முழுவதின் எதிர்காலமும் சார்ந்திருக்கிறது. ஏன்? ஏனென்றால் இந்தப் பூமி அவருடைய படைப்பு, இதில் வாழ்கிற எல்லோரும் உயிரைத் தொடர்ந்து காத்து வருவதற்கு அவருடைய ஏற்பாடுகளின்பேரில் சார்ந்திருக்கின்றனர். தம்முடைய ஜனங்களுக்கு பாதுகாப்பும் மகிழ்ச்சியுமுள்ள வாழ்க்கை நிலைமைகளை அளிக்கும்படியான தம்முடைய நோக்கத்தை பைபிளில் அவர் கூறியிருக்கிறார். தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதிலிருந்து சர்வவல்லமையுள்ள கடவுளை, வானத்திலோ பூமியிலோ உள்ள எதுவும் தடுத்து வைக்கமுடியாது. என்றபோதிலும் அந்த நோக்கமானது நம்முடைய சுயாதீன விருப்பத்தைப் பறித்துக் கொள்வதில்லை. ஒரு காரியத்தின் பேரில், நம்முடைய எந்த கருத்தையும் ஏற்காமலேயே நம் ஒவ்வொருவருடைய விதியையும் அது முடிவு கட்டிவிடுவதில்லை. ஆனால் ஒரு பாரமான தீர்மானத்தை நமக்கு முன் வைக்கிறது: யெகோவா நமக்குச் செய்திருக்கிற எல்லாவற்றிற்காகவும், இனியும் எதிர்காலத்தில் அவர் செய்யப்போகிறவற்றிற்காகவும் நமக்கிருக்கும் நன்றியோடுகூடிய மதித்துணர்வு நம்முடைய வாழ்க்கையை அவருடைய சித்தத்திற்கு இசைவாகக் கொண்டுவரும்படி நம்மைத் தூண்டி செயல்படுத்துகின்றனவா? ஒருவன் நம்பத் தவறுவதானது, யெகோவா மெய்யான கடவுள் என்ற இந்த உண்மையை மாற்றிவிடப் போகிறதில்லை, அவருடைய நோக்கத்தை மாறுபடச் செய்யப்போகிறதுமில்லை. ஆனால் இந்த அன்புள்ள நோக்கத்திலிருந்து ஒருவன் தான் பலனடைகிறானா இல்லையா என்பதை இது தீர்மானிக்கக்கூடும். இது உண்மையில் உயிரையோ மரணத்தையோ தெரிந்துகொள்வதாய் இருக்கிறது.
பாதுகாப்பில்லாமை மனித வாழ்க்கையை ஏன் பாழ்படுத்துகிறது?
16 யெகோவாவின் நோக்கம் எப்படி உண்மையான பாதுகாப்பில் பலனடைகிறதென்பதை மதித்துணர, இன்று வாழ்க்கையைப் பாதுகாப்பில்லாததாக்குகிற காரியங்கள் சிலவற்றை நாம் நன்மை பயக்கும் விதத்தில் முதலில் நினைப்பூட்டிக்கொள்ளலாம். இவற்றில் சில அன்பில்லாமை, சட்டத்தை மதியாமை, மற்றவர்களின் உடமையை மதிக்கத் தவறுதல், தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும்படி பொய்களையும் வன்முறையையும் பயன்படுத்துதல் ஆகியவை. மேலும், நோய் மற்றும் முன்னோ பின்னோ எப்போதாவது மக்கள் சாகின்றனர் என்ற உணர்வும் கூடுதலாக இருக்கின்றன. தனிப்பட்ட அனுபவத்திலிருந்தும் கூர்ந்த கவனிப்பிலிருந்தும் இக்காரியங்கள் மனித வாழ்க்கையை எப்படிப் பாதிக்கின்றனவென்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இவையெல்லாம் எப்படி நேரிட்டன? இதற்குப் பதில் பைபிளில் காணப்படுகிறது.
17 ஆதாம், ஏவாள் ஆகிய நம்முடைய முதல் மனித பெற்றோரை யெகோவா படைத்தபோது, அவருடைய வேலை மிகவும் நன்றாயிருந்தது என்று பைபிளின் முதல் புத்தகம் தானே நமக்குச் சொல்லுகிறது. நோயில் விளைவடைவதற்கேதுவான எவ்விதக் குறைபாடும் அவர்கள் உருவமைப்பில் இருக்கவில்லை; என்றென்றுமாக வாழ்ந்திருப்பதற்குரிய எதிர்பார்ப்பு அவர்களுக்கு முன்பாக இருந்தது. அன்புடன் கடவுள் அவர்களுக்கு ஏதேனில் ஒரு தோட்ட பூங்காவை, ஒரு பரதீஸை அவர்களுடைய வீடாகக் கொடுத்தார். தயாளத்துடன் அவர் அவர்களுடைய உயிரைப் பராமரித்துவர அவர்களுடைய தோட்ட வீட்டில் ஏராளமான வித்தைப் பிறப்பிக்கும் தாவரவர்க்கத்தையும் கனி கொடுக்கும் மரங்களையும் வைத்தார். மேலும் மீன்கள், பறவைகள் மற்றும் எல்லா மிருகங்களின் மேலும் ஆதிக்கத்தைச் செலுத்தவும், பூமியைப் பண்படுத்தவும், பூகோளம் முழுவதும், தாம் அவர்களை வைத்திருந்த அந்தப் பரதீஸைப்போல் ஆகும்வரை தங்கள் சந்ததியினரால் பூமியைக் குடியேற்றவும் அவர்களுக்குக் கட்டளையிடுவதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையை ஒரு நோக்கத்தாலும் நிரப்பினார். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பாதுகாப்பான உணர்ச்சி இயல்பாகவே இருந்தது, ஆனால் இந்தப் பாதுகாப்பை அவர்கள் தொடர்ந்து அனுபவித்து மகிழவேண்டுமென்றால் அவர்கள் ஒன்றைச் செய்ய வேண்டியதாக இருந்தது.
18 கடவுளிடம் கொண்டிருந்த உறவில் தங்களுக்குரிய இடத்தை அவர்கள் கண்டுணர்ந்துகொள்ள வேண்டியவர்களாக இருந்தார்கள். பூமியும் அதிலுள்ள எல்லா பொருட்களும் தங்களுடைய சிருஷ்டிகருக்கு உரியவை, ஆகையால் இவை எப்படி உபயோகப்படுத்தப்பட வேண்டுமென்பதைத் தீர்மானிப்பதற்கு அவரே உரிமையுடையவராக இருந்தார். உயிர் தானேயும் நிபந்தனையின் பேரில் கொடுக்கப்பட்ட ஒரு பரிசாக இருந்தது; அதாவது, ஆதாமும் ஏவாளும் தங்களுடைய பரலோகத் தகப்பனுக்கு அன்புள்ள கீழ்ப்படிதலைக் கொடுத்துவர வேண்டிய இந்தத் தேவையைத் தொடர்ந்து பூர்த்தி செய்துவரும் இந்த நிபந்தனையின் பேரில் அவர்கள் உயிரைத் தொடர்ந்து அனுபவித்துக் களிக்கக்கூடும். இந்தத் தேவையின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துவதற்கு யெகோவா மனிதனுக்குப் பின்வரும் இந்த கட்டளையை கொடுத்தார்: “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதைப் புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” (ஆதியாகமம் 2:16, 17) கீழ்ப்படிதலானது மனிதன் கடவுளை அரசராக ஏற்றுக் கொள்ளுதலை நிரூபித்துக் காட்டும்; கீழ்ப்படியாமையானது கடவுளுடைய பரிபூரண சித்தத்தை அவன் ஏற்க மறுத்துவிடுவதைக் குறிக்கும். இந்தச் சட்டமானது எவ்வித கடினமும் உட்பட்டதாக இருக்கவில்லை. மனிதனுக்குத் தேவையான எதையும் அவனுக்கு இல்லாமற்போகும்படி செய்யவில்லை, ஆனால் இது ஓர் எளிய என்றபோதிலும் செயல் திட்பம் வாய்ந்த பரீட்சையை, ஆம், அவன் வாழ்ந்த சூழ்நிலைகளுக்குத் தகுந்த ஒரு பரீட்சையை வைத்தது. இது தங்கள் பரலோகத் தகப்பனுக்கு அன்பைச் செயலில் நிரூபித்துக் காட்டுவதற்கான வாய்ப்பை ஆதாமுக்கும் அவனுடைய மனைவியாகிய ஏவாளுக்கும் அளித்தது.
19 ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்திலுள்ள இந்தப் பைபிள் பதிவு, இதில் அவர்கள் தவறினார்கள் என்று காட்டுகிறது; கடவுள் ‘கட்டுப்படுத்தி விலக்கி வைத்த’ அந்த மரத்திலிருந்து அவர்கள் வேண்டுமென்றே சாப்பிட்டார்கள். அந்த மனித ஜோடியால் முன்னால் அனுபவித்துக்களிக்கப்பட்ட அந்தப் பாதுகாப்பு சிதறடிக்கப்பட்டது. இன்று பாதுகாப்பற்ற நிலையை உண்டுபண்ணுகிற அந்த காரியங்கள் அக்காலத்தில்தானே முதன் முதலாக ஆரம்பமாயிற்று. அங்கே கடவுள்பேரில் அன்பு குறைவுபட்டது, அவருடைய சட்டம் அசட்டை செய்யப்பட்டது, அவருடைய உடமைக்கு மதிப்பு காட்டப்படவில்லை கடவுளால் கண்டனம் செய்யப்பட்டு, ஆதாமும் ஏவாளும், ஏதேனிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். பரதீஸுக்கு வெளியே, அவர்களுடைய சொந்த மகனாகிய காயீன் உட்பட அவர்களுடைய சந்ததியில் பலர் வன்முறையில் ஈடுபட்டவர்களாய் மேலும் கீழ்ப்பட்ட நிலைக்குள்ளானார்கள். கடவுளுடைய சட்டத்தை வேண்டுமென்றே அசட்டை செய்யாதவர்களுங்கூட, பாவத்தைச் சுதந்தரித்ததன் விளைவுகளைத் தங்கள் சொந்த உடல்களில் உணர்ந்திருக்கின்றனர். ரோமர் 5:12 விளக்குகிற பிரகாரம்: “ஒரே மனுஷனால் [ஆதாமால்] பாவமும் பாவத்தினால் மரணமும் உலகத்தில் வந்ததுபோலவும் எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால் மரணம் எல்லோருக்கும் பரவினது.”—திருத்திய மொழிபெயர்ப்பு.
20 என்றபோதிலும், கலகத்தை நோக்கிய முதல் முயற்சி ஆதாமுடனோ அவனுடைய மனைவியுடனோ தொடங்கவில்லை என்பது கவனிக்கப்படவேண்டும். ஒரு “சர்ப்பம்” ஏவாளுடன் பேசி, கடவுளுடைய சட்டத்தை மீறும்படி வஞ்சனையால் அவளை ஆவலூட்டி ஏய்த்ததாக பைபிள் குறிப்பிடுகிறது. நிச்சயமாகவே, சொல்லர்த்தமான ஒரு சர்ப்பம் பேசாது; அந்தச் சர்ப்பத்தின் பின்னால் இருந்த அந்த சக்தியைப் பைபிள் பிற்பகுதியில், ஒரு காணக்கூடாத ஆவி ஆள் என்பதாக அடையாளங் காட்டுகிறது. இந்த ஆவி ஆள் பொல்லாதவனாக இருக்கும்படி படைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், மனிதரைக் குறித்ததில் உண்மையாக இருந்ததைப்போலவே, கடவுளின் இந்த ஆவி குமாரனும் விருப்ப சுயாதீனத்தை அதாவது, தன்னுடைய இயல் வலிமைகளைத் தான் எப்படிப் பயப்படுத்தப்போகிறான் என்பதைத் தெரிந்துகொள்ளும் திறமையை உடையவனாக இருந்தான். தவறான ஆசைகளை மனதில் வைத்துப் பேணுவதன் மூலம் அவன் பெருமையை வளர்த்தான்; மற்ற சிருஷ்டிகள் தன்னை ஒரு கடவுளாக வணங்கும்படி அவன் விரும்பினான். இந்தத் தன்னுடைய குறிக்கோளை அடையும்படி அவன் தொடர்ந்த போக்கால் தன்னைக் கடவுளுக்குச் சத்துருவாக, அதாவது சாத்தானாகவும் மேலும் பழிதூற்றுபவனாக, அதாவது பிசாசாகவும் ஆக்கிக்கொண்டான்.
21 அவன் ஏவாளை அணுகி, முதலாவதாகக் கேள்விகளைக் கேட்டான், பின்பு நேர்முகமாய்க் கடவுளுக்கு எதிர்மாறாகப் பேசி ஏவாளிடம்: [விலக்கப்பட்ட மரத்தின் கனியைச் சாப்பிட்டால்] நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் [தேவனைப்போல், NW] இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்.” (ஆதியாகமம் 3:1-5) பெண்ணானவளுக்கு இது, தனக்கு இருந்தவற்றைப் பார்க்கிலும் மேலான ஏதோவொன்றாகத் தொனித்தது. ஆனால் இதை நம்புவதன் மூலம் அவள் உண்மையில் மேம்பட்ட பாதுகாப்பை அடைந்தாளா? மீறுதலில் அவளைச் சேர்ந்துகொள்வதன் மூலம் அவளுடைய கணவன் தன் நிலையை மேலும் உயர்த்திக் கொண்டானா? இல்லை; அது முழுவதும் பொய்யாக இருந்தது. அவர்கள் மரித்தபோது இது முடிவாக மெய்ப்பிக்கப்பட்டது. இந்நாள் வரையாக மனிதர் தொடர்ந்து மரித்து வருகின்றனர்.
22 மிக முக்கியமான கேள்விகள் அங்கே ஏதேனில் எழுப்பப்பட்டன. இவை எல்லா சிருஷ்டிப்பின் பாதுகாப்பையும் பாதிக்கின்றன. கடவுளுடைய உண்மை எதிர்த்து பேசப்பட்டது. இது அவருடைய ஆட்சியின் சரியான தன்மையையும் நீதியையும் கேள்விக்குட்படுத்தியது. நல்லது எது கெட்டது எது என்பதைக் குறித்ததில் மனிதன் தானே தன் சொந்த தீர்மானங்களைச் செய்து, தன் சொந்த தராதரங்களை வைத்து, தன் சொந்த அரசனாகவும் நடந்துகொள்வானானால் அது மனிதனுக்கு மேம்பட்டதாய் இருக்குமென்ற ஆலோசனை முன் கொண்டுவரப்பட்டது. சாத்தானின் கலகமும், இந்த முதல் மனித ஜோடி கடவுளுக்கு உண்மை தவறாதவர்களாக நிரூபிக்கத் தவறினதும், கடவுளுடைய புத்திக்கூர்மையுள்ள மற்ற சிருஷ்டிகள் என்ன செய்வர் என்பதைக் குறித்த கேள்வியை எழுப்பியது. இவர்களில் எவராவது கடவுளுக்கு உண்மை தவறாதவர்களாக நிலைத்திருப்பார்களா? பின்னால் மனிதனாகிய யோபின் நாட்களில் சாத்தான் கடவுளைச் சேவித்தவர்கள் அன்பின் காரணமாக அல்ல, தன்னல நோக்கங்களுடனேயே சேவித்தார்கள் என்று குற்றஞ்சாட்டினான். “யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?” என்று சாத்தான் விவாதித்தான். (யோபு 1:9) கடவுளுடைய சத்துருவாகிய தான் ஒருவனைச் சோதிக்கும்படி அனுமதிக்கப்பட்டால் எவனும் உத்தமத்தைக் காத்துக் கொள்ளமாட்டான் என்று அவன் மறைமுகமாகக் குறிப்பிட்டான். இந்தக் கேள்விகள் தீர்க்கப்படும்வரையில் மனிதவர்க்கம் மறுபடியும் ஒருபோதும் பூரண பாதுகாப்பை அனுபவித்துக் களிக்கமுடியாது, என்றபோதிலும் நீதியை நேசிப்பவர்கள் எல்லோருக்கும் முழு திருப்தியுண்டாக இந்தக் கேள்விகள் தீர்க்கப்படக்கூடுமென்று யெகோவா அறிந்திருக்கிறார். இதைக் கருத்தில்கொண்டு அவர் ஏற்பாடுகளையும் செய்தார்.
ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தைக் கூடியதாக்குகிற ஏற்பாடுகள்
23 நம்முடைய முதல் பெற்றோர் கடவுளுக்கு விரோதமாகச் செய்த கலகத்திற்காக அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு அளிக்கப்பட்டபோது, இன்னும் பிறவாதிருந்த சந்ததியை யெகோவா மறந்துவிடவில்லை. தெய்வீக ஆட்சியின்கீழ் வாழ நாம் விரும்புகிறோமா இல்லையா என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளக்கூடியதாக்குகிற ஒரு நோக்கத்தை அவர் அன்புடன் வகுத்தமைத்தார். இந்த நோக்கம் கடவுளுடயை குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைச் சுற்றி சுழலுகிறது.
24 இந்தக் குமாரன் பரலோகப் பகுதியில் யெகோவாவின் முதல் சிருஷ்டியாக இருந்தார். “பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய . . . சகலமும் அவரைக் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டது,” என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. (கொலோசெயர் 1:15-17) என்றாலும் கடவுளுடைய குறித்த காலத்தில், அவருடைய குமாரன் தம்முடைய பரலோக மகிமையைப் பின்னால் விட்டுவிட்டு பூமியில் ஒரு மனிதனாக அற்புதமாய்ப் பிறந்தார். இந்தப் பிறப்பைப் பற்றிச் சொல்லும்படி முன்னதாக அனுப்பப்பட்ட காபிரியேல் தூதன், பிறக்கப்போகிற அந்தப் பிள்ளை கடவுளாக இருப்பார் என்று சொல்லவில்லை. அதற்கு மாறாக, “தேவனுடைய குமாரனின்” பிறப்பாக அதை அவன் அறிவித்தான். (லூக்கா 1:35) இயேசுதாமே தாம் கடவுளாக இருப்பதாய் உரிமை பாராட்டவில்லை. தனக்கு வணக்கத்தைத் தேடினவனாகிய சாத்தானைப்போல் அவர் நடக்கவில்லை. உண்மையுடன் அவர்: “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்,” என்று சொன்னார். (யோவான் 14:28) ஆகையால், சத்தியபரராகிய கடவுளுடன் சரியான உறவை அனுபவித்துக்களிக்க, அவருடைய குமாரனைக் கடவுளாக அல்லது கடவுளுக்குச் சமமாகப் பேசி அவருக்கு வேறுபட்ட ஒரு பதவியை நாம் குறிப்பிட்டுக் கூறக்கூடாது.
25 இங்கே பூமியில் இயேசு, தனக்கு முன்னோருபோதும் இருந்திராத அனுபவத்திற்கு ஆளானார். பரலோகத்தில் அவர் தம்முடைய தகப்பனின் சித்தத்தைச் செய்வதில் குறையற்றவராக இருந்திருந்தார். என்றாலும் பூமியில் ஒரு மனிதனாக, முக்கியமாய் வேதனைகளுக்கும் அநியாயமான இழிவுபடுத்துதலுக்கும் அவர் உட்படுத்தப்படுவாராகில் அவர் தொடர்ந்து உண்மை தவறாதவராக நிரூபிப்பாரா? ஒருவரும், கடவுளுடைய இந்த முதன்மையான குமாரனுங்கூட, சோதனைக்கு உட்படுத்தப்படுகையில் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்கமாட்டார்கள் என்று நிரூபிக்க சாத்தான் உறுதியாய்த் தீர்மானித்திருந்தான். ஆனால் இயேசு உண்மை தவறாமல் கடவுளுடைய வார்த்தையைப் பற்றியிருந்தார், அதைத் தம்முடைய வழிக்காட்டியாகக் கொண்டு அதன்பேரில் நம்பியிருந்து, சோதனையை மேற்கொள்ள அதை மேற்கோளாக எடுத்துக் கூறினார். தவறு செய்யும்படி வற்புறுத்தி நெருக்கப்பட்டபோது அவர்: “அப்பாலே போ சாத்தானே! உன் கடவுளாகிய யெகோவாவையே நீ வணங்கவேண்டும், அவர் ஒருவருக்கே நீ பரிசுத்த சேவை செய்யவேண்டும்” என்று எழுதியிருக்கிறதே, என்று சொல்லி அதற்கு இடங்கொடுக்க உறுதியாய் மறுத்துவிட்டார். (மத்தேயு 4:10, NW) அரசராக யெகோவாவுக்கு இயேசு மரணம் வரையாகத் தம்முடைய உண்மை தவறாமையைக் காத்துவந்தார். மேலும் ஆதாம் எதிர்ப்பட்டிருந்த எதைப் பார்க்கிலும் மிக அதிகக் கடுமையான சோதனைகளின் கீழ் இவ்வாறு செய்தார். இப்படியாக, சாத்தான் சாட்டியிருந்த பொய்க் குற்றச் சாட்டுகளிலிருந்து இயேசு தம்முடைய தகப்பனின் பெயரைப் பரிசுத்தப்படுத்தினார். தம்முடைய முன்மாதிரியின் மூலம், சோதனைகளை எப்படி வெற்றியுடன் மேற்கொள்வது என்பதையும், நாமுங்கூட யெகோவாவின் ஆட்சியை உண்மை தவறாமல் விடாப்பிடியாய்ப் பற்றி நிற்கிறவர்கள் என்று எப்படி நிரூபிப்பதென்பதையும் இயேசு நமக்குக் காட்டினார்.
26 ஆயினும் வெறும் ஒரு சிறந்த முன்மாதிரியைப் பார்க்கிலும் அதிகத்தைக் கடவுளுடைய குமாரன் நமக்கு அளித்தார். “அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்,” (மாற்கு 10:45) என்று இயேசு தாமேயும் விளக்கினார். பாவத்திலிருந்தும் பாவத்தின் விளைவாக வருகிற நோயிலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதவர்க்கம் என்றாவது விடுதலை செய்யப்பட வேண்டுமென்றால் இது அவசியமாய் இருந்தது. கடவுளுடைய சட்டத்தின்படி இந்த மீட்பின் விலைக்கிரயமானது, ஆதாமால் இழக்கப்பட்ட பரிபூரண மனித உயிருக்குச் சரிசமமான ஒரு பரிபூரண மனித உயிராக இருக்க வேண்டும். ஆதாமின் எந்த அபூரண சந்ததியானும் இதை அளித்திருக்க முடியாது. அன்புடன் யெகோவா தாமேயும் இந்த ஏற்பாட்டைச் செய்தார். அவர் தம்முடைய சொந்த குமாரனை பூமிக்கு அனுப்பினார். பின்பு, இயேசுவின் மரணத்தைப் பின்தொடர்ந்து, கடவுள் அவரை மறுபடியும் உயிர்த்தெழுப்பினார், இப்பொழுது ஓர் ஆவி ஆளாக அவரை எழுப்பினார், மேலும் மனிதவர்க்கத்திற்காகப் பலியாய்க் கொடுத்த அவருடைய மனித உயிரின் விலைமதிப்பையும் யெகோவா ஏற்றுக்கொண்டார். இது ஆதாம் இழந்ததைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை நமக்குத் திறந்துவைத்தது. பைபிள் விளக்குகிற பிரகாரம்: “தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை (செயல் முறையில்) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3:16) கடவுளுடைய குமாரன் கற்பித்ததை நாம் கற்று அதற்கு முற்றிலும் இசைவாக வாழ்வதன்மூலம், அவரைச் செயல் முறையில் விசுவாசித்து வருகிறோமென்றால், ஆ, எப்பேர்ப்பட்ட அதிசயமான எதிர்பார்ப்புகளை நமக்குக் கூடியதாக்குகிறது!
27 இப்படிப்பட்ட விசுவாசமானது அரசாங்கத்தில் யெகோவா தம்முடைய குமாரனுக்குக் கொடுத்திருக்கிற அந்தப் பங்கை மதித்துணருவதும் உட்பட்டதாய் இருக்கிறது. இயேசு தம்முடைய நாளின் அரசியல் விவகாரங்களில் தம்மை உட்படுத்தவில்லை; எந்த மனித அரசாங்கமும் யெகோவாவின் ஆட்சியை ஆதரிக்கவில்லை என்று அவர் அறிந்திருந்தார். கடவுளில் நம்பிக்கை வைத்திருப்பதைப்பற்றி இப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் என்ன சொன்னாலும் அக்கறையில்லை, அவர்களெல்லோரும் நன்மை தீமையைப் பற்றியதில் தங்கள் சொந்த தராதரங்களையே வைத்து வந்தனர். இவ்வாறாக, அவர்கள் ஒப்புக்கொண்டாலும்சரி ஒப்புக்கொள்ளாவிட்டாலும்சரி, அவர்கள், கடவுளுடைய எதிரியாகிய பிசாசாகிய சாத்தானின் தலைமை வழிநடத்துதலைப் பின்பற்றிக்கொண்டிருந்தனர்; இவனை “இந்த உலகத்தின் அதிபதி” என்று பைபிள் அடையாளங்காட்டுகிறது. (யோவான் 14:30) மனிதரின் அரசாங்கங்கள் இருந்து வரும்படி கடவுள் அனுமதித்திருக்கும் வரையில் அவர்களுக்குச் செலுத்தவேண்டிய வரிகளைச் செலுத்தி, அவர்கள் சட்டங்களுக்குக் கீழ்படிந்துவரும்படி இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்தார். என்றாலும் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்திற்குரிய ஒரே நம்பிக்கையானது கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமாகவே வருமென்று அவர் தெளிவாக்கினார்; கடவுளுடைய இந்த ராஜ்யம் உண்மையாகவே நீதியுள்ள ஓர் அரசாங்கமாக பரலோகத்திலிருந்து தானே ஆட்சி செய்வதாய் மனிதவர்க்கம் முழுவதன்மீதும் அதிகாரத்தைச் செலுத்தும். ஆகையால் கடவுளிடம் பின்வருமாறு ஜெபிக்கும்படி அவர் கற்பித்தார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” பைபிளில் பதிவு செய்து வைத்திருக்கிறபடியே இந்த ராஜ்யத்தின் சட்டங்களுக்கு இசைவாக வாழும்படி இயேசு அவர்களை ஏவினார். மேலும், “ராஜ்யத்தின் இந்த நற்செய்தியை” எங்குமுள்ள ஜனங்களுக்கும் பிரசங்கிக்கும்படியும் அவர் கட்டளையிட்டார்.—மத்தேயு 6:10; 24:14.
28 இந்த ராஜ்யமானது யெகோவாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கான அவருடைய செயலாற்றும் பிரதிநிதியாக இருக்கிறது. இது அறிவுள்ள சிருஷ்டிகள் எல்லோரையும் யெகோவாவின் அரசாங்கத்தின் கீழ் ஒற்றுமைப்படுத்தும். இந்தப் பரலோக அரசாங்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையில், யெகோவாவின் உன்னத அரசதிகாரத்திற்கு, அவருடைய ஆட்சிக்கு உண்மை தவறாதப் பற்றுதியை நிரூபித்திருக்கிற, இந்தப் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட ஆட்கள் அடங்கியிருப்பர். அவர்கள் ஒரு “சிறு மந்தை” என்பதாகப் பேசப்பட்டிருக்கின்றனர். (லூக்கா 12:32) அவர்களுடைய எண்ணிக்கை, “பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்” என்பதாக வரையறுக்கப்பட்டிருக்கிறதென்று பைபிளின் கடைசி புத்தகம் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 14:1, 3) என்றபோதிலும் அரசதிகாரம் ஒப்படைக்கப்பட்டிருக்கிற அந்த முதன்மையானவர் கடவுளுடைய சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே, தெய்வீகத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, இவருக்கே யெகோவா, “சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்கு ஆளுகையும் மகிமையும் ராஜ்யமும்” கொடுக்கிறார், (தானியேல் 7:13, 14, தி மொ.) இந்தத் தெய்வீக ஏற்பாட்டுக்கு முற்றிலும் இசைவாக வாழ்வது நம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. இப்படிச் செய்ய மறுக்கிறவர்கள் மற்றவர்களின் பாதுகாப்பில் குறுக்கிட்டுக் கெடுத்துக் கொண்டிருக்கும்படி என்றுமாக விடப்படமாட்டார்கள்.
29 ஏதேனில் கலகம் ஏற்பட்டது முதற்கொண்டு மனித ஆட்சியின் விளைவை அனுபவித்துப் பார்க்க மனிதருக்கு ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகள் இருந்திருக்கின்றன. இந்த ஆட்சி அழிவுண்டாக்குவதாகவே இருந்திருக்கிறது. சரியாகவே பைபிள், கடவுள் தம்முடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றப்போகிற அந்தக் காலம் இந்தச் சந்ததியின்போதே என்று சுட்டிக் காட்டுகிறது. மனிதவர்க்கத்தின் பிரதான சத்துருவாகிய பிசாசான சாத்தானுக்கு இது எதைக் குறிக்கும்? அவனும் அவனுடைய பேய்களும் மனிதவர்க்கத்தை மோசம் போகக்கூடாதபடி ‘அபிஸுக்குள் தள்ளப்பட்டு, முற்றிலும் செயலற்றவர்களாக்கப்படுவார்கள். (வெளிப்படுத்துதல் 20:1-3) கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் நிறைவேற்றப்படுவதானது மனிதரின் அரசாங்கங்களுக்கு எதைக் குறிக்கும்? “அந்த ராஜ்யம் . . . அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்,” என்று பைபிள் முன்னறிவிக்கிறது. (தானியேல் 2:44) பொய்யர், திருடர், வன்முறைச் செயல்களைப் பழக்கமாய்ச் செய்கிறவர்கள் ஆகியோருக்கு இது எதைக் குறிக்கும்? “துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.” (சங்கீதம் 37:10) யெகோவாவின் ஆட்சியை அசட்டையுடன் புறக்கணிக்கிறவர்களுக்கு இது எதைக் குறிக்கும்? நோவாவின் நாட்களில், “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்,” நீதியை நிறைவேற்றும்படி கடவுள் தம்முடைய குமாரனை உபயோகிக்கிற இப்பொழுதுங்கூட இவ்வாறே இருக்கும்.—மத்தேயு 24:39.
30 யெகோவாவின் ஆட்சியை உண்மை தவறாமல் ஆதரித்துப் பற்றியிருப்பவர்களாகத் தங்களை நிரூபித்திருக்கிறவர்களுக்கு இதெல்லாம் எதைக் குறிக்கும்? கடவுளுடைய நீதியுள்ள புதிய ஒழுங்குக்குள் விடுதலையைக் குறிக்கும். பூர்வ இஸ்ரவேல் ஜனத்துடன் வைத்துக் கொண்ட கடவுளுடைய செயல் தொடர்புகளில் இது வாழ்க்கையில் கொண்டிருக்கப்போகிற விளைவுகளை குறித்து ஒரு முன்மாதிரி அளிக்கப்பட்டது. பின்வருமாறு சொல்லும்படி கடவுள் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தபடியே இது நடந்தேறிற்று; “நீங்கள் . . . உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்திலே தங்கி வாழவேண்டும். சுற்றிலுமுள்ள உங்கள் எல்லா சத்துருக்களிலிருந்தும் அவர் நிச்சயமாகவே உங்களுக்கு இளைப்பாறுதலைக் கொடுப்பார், நீங்கள் நிச்சயமாகவே பாதுகாப்பாய்த் தங்கியிருப்பீர்கள்.” (உபாகமம் 12:10, NW) அரசனாகிய சாலொமோனின் ஆட்சியின்போதிருந்த நிலைமைகளைக் குறித்து பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: “தாண் (வடகோடியிலிருந்து) துவக்கிப் பெயெர்செபா மட்டும் (தெற்கு வரையுலும்) யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச் செடியின் நிழலிலும், அத்திமரத்தின் நிழலிலும், சுகமாய்க் (பாதுகாப்பாய்க்) குடியிருந்தார்கள்.” (1 இராஜாக்கள் 4:25) கடவுளுடைய சட்டத்திற்கிணங்க, ஒவ்வொரு குடும்பமும் பயிர்செய்து வாழ்க்கை நடத்துவதற்கு அதன் சொந்த நிலத்தை உடையதாக இருந்தது. கடவுளுக்குக் கீழ்ப்படிதலானது அவருடைய ஆசீர்வாதத்தில் பலனடைந்தது, மேலும் அவர் வாக்குக் கொடுத்திருந்தபடியே, இது, ‘குறிக்கப்பட்ட அதனதன் காலத்தில் தேசத்திற்கு மழையை’ அருளினதும் உட்பட்டிருந்தது. (உபாகமம் 11:13-15) பொருளாதார பாதுகாப்பும் இருந்தது.
31 இது, வெறும் ஒரு சரித்திர பதிவாக அல்ல, ஆனால் நமக்கு ஊக்கமூட்டுதலாகவே பைபிளில் பதிவு செய்யப்பட்டது. பூமி முழுவதன் மீதும் அரசராயிருக்கும்படி யெகோவா நியமித்திருக்கிறவராகிய கர்த்தரான இயேசு கிறிஸ்து, “சாலொமோனைப் பார்க்கிலும் மேலான மதிப்பு வாய்ந்தவர்” என்பதாக வேத எழுத்துக்களில் பேசப்பட்டிருக்கிறார். (லூக்கா 11:31, NW) கிறிஸ்துவின் ஆட்சியின் கீழ், சாலொமோனின் நாட்களின்போது யூதாவிலும் இஸ்ரவேலிலும் இருந்து வந்தவற்றைப் பார்க்கிலும் மேம்பட்ட நிலைமைகள் பூமியைச் சுற்றி எங்கும் பரவியிருக்கும். சங்கீதம் 72 இந்த ஆசீர்வாதங்களைப் பின்வரும் முறையில் அழகாய் விவரிக்கிறது: “அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு சமுத்திரந் தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும் [ஐப்பிராத்] நதி தொடங்கிப் பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர் அரசாளுவார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும். பூமியின் மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப் போல அசையும்.” (சங்கீதம் 72:7, 8, 14, 16) இயேசு தம்முடைய ராஜ்யத்திற்கு வருகையில் தன்னை நினைவு கூறும்படி கேட்ட ஒரு மனிதனுக்கு இயேசு கிறிஸ்து விவரித்தபடியே அப்பொழுது வியாபித்திருக்கப்போகும் நிலைமை இருக்கும். இயேசு அவனிடம்: “நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்,” என்று சொன்னார்.—லூக்கா 23:43.
32 ஆதாமிலிருந்து பாவத்தைத் தாங்கள் சுதந்தரித்ததன் காரணமாக ஒருவேளை ஏற்கெனவே மரித்திருக்கிறவர்கள் அப்பொழுது மறந்துவிடப்படமாட்டார்கள். அவர்களுங்கூட கடவுளுடைய குமாரனின் மீட்பின் கிரய பலியால் மீட்கப்படுகிறார்கள். உற்சாகமூட்டுவதாய் பைபிள் பின்வருமாறு முன்னறிவிக்கிறது: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு.” (அப்போஸ்தலர் 24:15) இதன் கருத்தென்ன? “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என்று பைபிள் சொல்லுகிறது. (பிரசங்கி 9:5) அவர்கள் பிரேதக் குழியில் உயிரற்றவர்களாக இருக்கிறார்கள். அப்படியானால், உயிர்த்தெழுதல், திரும்ப உயிருக்கு வருவதைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்துவுடன் பரலோக வாழ்க்கையில் பங்குகொள்ளப்போகிறவர்களாய் இருக்கிற “சிறு மந்தை”யைச் சேர்ந்தவர்களைத்தவிர உயிர்த்தெழுப்பப்படபோகிற மற்ற எல்லோரும் மனித உருவில் இருப்பார்கள். இங்கே பூமியிலேதானே நித்தியமாய் வாழும் எதிர்பார்ப்பைத் தங்களுக்குமுன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
33 மனித குடும்பம் புதுபிக்கப்படுவதற்கான ஒரு காலமாக இது இருக்கும். விசுவாசத்தைச் செயலில் காட்டுகிற எல்லோருக்கும் இயேசுவின் பலியின் விலைமதிப்பைப் பிரயோகிப்பதன் மூலம், பரலோக ராஜ்யத்தின் வழி நடத்துதலின் கீழ் பாவத்தின் எல்லா தடமும் அதன் எல்லா விளைவுகளும் நீக்கப்படும். இது மனிதவர்க்கத்திற்கு எதைக் குறிக்குமென்பதை இயேசு பூமியிலிருந்தபோது, செயல் முறையில் விளக்கிக் காட்டினார். அவர் எல்லா வகையான நோய்களையும் சுகப்படுத்தினார், குருடருக்குத் திரும்பப் பார்வையளித்து முடவரையுங்கூட சுகப்படுத்தினார். கடவுளுடைய புதிய ஒழுங்கில், இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவிக்கப்போகிற ஆட்களால் இந்தப் பூமி நிரம்பியிருக்கும். கடவுள் “அவர்கள் கண்களினின்று கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமிராது, துக்கமும் அலறுதலும் வேதனையும் இனி இரா, முந்தினவை ஒழிந்துபோயின,” என்பது தெய்வீக வாக்கு. (வெளிப்படுத்துதல் 21:4, தி.மொ.) ஆம், வாழ்க்கையைப் பாதுகாப்பற்றதாக்கியிருக்கிற எல்லா காரியங்களும் ஒழிந்துபோய்விட்டிருக்கும். ஆ, இது எப்பேர்ப்பட்ட மகத்தான எதிர்பார்ப்பு.
34 ஆனால் பாதுகாப்பு தருகிற எல்லா காரியங்களும் எதிர்காலத்திற்கென்றே ஒதுக்கி வைக்கப்பட்டில்லை. இப்பொழுதுதானே அதிகம் அனுபவித்து மகிழப்படக்கூடும்.
இப்பொழுது அனுபவித்து மகிழக்கூடிய பாதுகாப்பு
35 ஒருவன் வாழ்க்கையில் எதிர்படவேண்டிய மற்ற சூழ்நிலைமைகள் என்னவாக இருந்தாலும், ஒருவனுக்கு அன்றாடக உணவும் போதிய உடையும் உறுதியளிக்கப்பட்டிருந்தால் அவன் உயர்ந்த அளவான பாதுகாப்பை உடையவனாக இருக்கிறான் என்று பெரும்பான்மையான ஆட்கள் ஒப்புக்கொள்வர். இதோடுகூட, அவன் முக்கியமாய் கூட்டுறவுகொள்ளுகிற ஆட்கள் ஒருவருக்கொருவர் மெய்யான அன்பை உடையவர்களாக இருக்கிறார்களென்றால், இது அந்தப் பாதுகாப்போடு மற்றொரு பரப்பளவைக்கூட்டும். எதிர்காலம் என்ன வைத்திருக்கிறதென்று அவன் அறிவானென்றால் இதுவுங்கூட அவனுக்கு இருக்கக்கூடிய ஏதாவது நிச்சயமற்ற உணர்ச்சியைக் குறைத்து வைக்கும்படி உதவிசெய்யும். ஆனால் மக்களில் பெரும்பான்மையினர் இப்படிப்பட்ட பாதுகாப்பு உணர்ச்சியை அனுபவித்து மகிழுவதில்லை. இது, கடவுளுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டிருக்கிற பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வாக்குறுதிகள் எதிர்காலத்தில் மாத்திரமே உண்மையாய் நிறைவேறுமென்று அர்த்தங்கொள்ளுகிறதா? அல்லது அந்த வாக்குறுதிகளில் விசுவாசம் வைத்து அவற்றிற்கு இசைவாக நடந்து வருவதன் மூலம் இப்பொழுதுதானேயும் ஆட்கள் பாதுகாப்பைப் கண்டடையக்கூடுமா? ஒருமித்த முறையில் இப்பொழுது இப்படிச் செய்துகொண்டிருக்கிற ஆட்கள் இருக்கிறார்களா?
36 யெகோவாவின் சாட்சிகள் என்று அறியப்படுகிற இந்தக் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தையை உண்மையுள்ளதாகக் கண்டிருக்கிறார்கள். அதைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த வைப்பது இப்பொழுதுதானேயும் மிகச் சிறந்த நன்மைகளைக் கொண்டுவருகிறதென்பதை அவர்கள் அனுபவித்திருக்கிறார்கள். இந்த நன்மைகள் ஒருவன் தன் அன்றாடக வாழ்க்கையில் ஆவிக்குரிய காரியங்களுக்குச் சரியான முக்கியத்துவத்தைக் கொடுப்பதிலிருந்து வருகின்றன. நிச்சயமாகவே, பூமியிலுள்ள எல்லோரும் அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் மனம் சாய்ந்திருந்தாலும்சரி இல்லாவிடினும்சரி பூமி விளைவிக்கிறவற்றிலிருந்து நன்மையடையக்கூடும் என்பது மெய்தான். ஆனால், தம்முடைய ஊழியத்தை முதலாவது வைக்கிறவர்களின் சுகநலத்தில் கடவுள் விசேஷித்த அக்கறை எடுக்கிறார் என்று பைபிள் காட்டுகிறது. தம்முடைய சீஷர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும். (மத்தேயு 6:31-33) ஆனால் “இவைகளெல்லாம்” அதாவது உடல் சம்பந்தமாய் ஒருவனைப் பாதுகாத்து வருவதற்குத் தேவையாயிருக்கும் பொருட்களெல்லாம் அவர்களுக்கு எப்படி கிடைக்கும்? கிறிஸ்தவ சபை அவர்களை பண சம்பந்தமாய் ஆதரிக்கிறதென்பதல்ல, அதற்கு மாறாக, அவர்களெல்லோரும் மனப்பூர்வமான வேலையாளர்கள். மேலும் மக்கள் உண்மையில் யெகோவாவின் ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தங்கள் வாழ்க்கையில் பெரிய காரியங்களாக ஆக்குகையில், அவர்கள் தங்கள் வாழ்க்கையின் தேவைகளைச் சம்பாதிக்க எடுக்கும் முயற்சிகளை கடவுள் ஆசீர்வதிக்கிறார். “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்,” என்ற அவர்களுடைய ஜெபத்திற்கு அவர் பதிலளிக்கிறார். (மத்தேயு 6:11) தற்போதைய உலகம் இருந்து வருகையில் பொருள் சம்பந்தமாய் ஏராளத்தைத் தருவதாக யெகோவா தம்முடைய ஊழியருக்கு வாக்குக் கொடுக்கிறதில்லை, என்றாலும் அவர்களுக்கு உண்மையில் தேவையானவை அவர்களுக்கு கிடைக்குமென்று அவர் நிச்சயமாகவே உறுதியளிக்கிறார். அவர்கள் அதை அடையும் படி சிறந்த விதத்தில் பார்த்துக்கொள்ளக்கூடிய வேறு எவரும் இல்லை.
37 பொருள் சம்பந்தப்பட்ட தேவைகளை இவர்களுக்கு அளிக்கிற இந்தப் பெரியவர், இப்பொழுது பாதுகாப்புக்கு முக்கியமாய் இருக்கிற வேறு ஒன்றுங்கூட இவர்களுக்குக் கிடைக்கக்கூடும்படி செய்கிறார். நீங்கள் நன்றாய்த் தெரிந்திருக்கக்கூடியபடி ஒருவனுடைய கூட்டாளிகள் அவனில் உண்மையான அக்கறை எதுவும் இல்லாத ஆட்களாக இருக்கிறார்களென்றால், அவன் பொருள் சம்பந்தப்பட்ட வாழ்க்கைத் தேவைகளை உடையவனாயிருப்பது அவன் திருப்தியாயும் பாதுகாப்பாயும் உணரும்படி அவனைச் செய்யப் போவதில்லை. மக்கள் பொய்ச் சொல்லி ஏமாற்றுகையில் மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்குச் சிறிதும் அக்கறையில்லாமல் அவர்கள் தங்கள் நாவை உபயோகிக்கையில்; பொருளுடைமைகளை, தோலின் நிறத்தை அல்லது எந்தத் தேசத்தான் என்பதை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் மற்றவர்களை நியாயந்தீர்க்கையில்; மேலும் மறைந்துள்ள தன்னல உள்நோக்கத்தால் தூண்டப்பட்டு அநேகமாய் “தயவு” காட்டப்படுகையில் பாதுகாப்பில்லாமை வளரச் செய்யப்படுகிறது. இந்த வகையான மக்களுக்குள் மிகவும் குறைவுபடுவது அன்பே—அதாவது, மற்றவர்களின்பேரில் உண்மையான தன்னலமற்ற அக்கறையே குறைவுபடுகிறது. அப்படிப்பட்ட அன்பு—வெறும் ஒரு சில தனியாட்களுக்குள் அல்ல, ஒரு முழு சமுதாயத்தின் மக்களுடைய முனைப்பான தனிப் பண்பாக—உண்மையில் காணப்படக்கூடுமா? கூடுமென்று இயேசு கிறிஸ்து நமக்கு நிச்சயமளிக்கிறார். அவர் சொன்னதாவது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதனால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” நம்முடைய நாளில் இப்படிப்பட்ட ஆட்கள் இருப்பார்கள் என்று அவர் அறிந்திருந்தார், ஏனென்றால் அவர் தம்முடைய சீஷர்களிடம்: “இதோ! உலகத்தின் [இந்தக் காரிய ஒழுங்குமுறையின்] முடிவு பரியந்தம், சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்,” என்று சொன்னார்.—யோவான் 13:35; மத்தேயு 28:20.
38 உங்கள் கூட்டாளிகளுக்குள் இந்த அன்பு இல்லாததாக நீங்கள் கண்டிருக்கிறீர்களென்றால், அப்பொழுது நீங்கள் வேறு எங்கேயாவது பார்க்க வேண்டும். பைபிள், 1 யோவான் 4:8-ல் தேவையான வழிநடத்துதலை அளிப்பதாய் பின்வருமாறு சொல்லுகிறது: “அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.” இவ்வாறு, உண்மையாகவே ‘கடவுளை அறிகிற’ ஜனங்களுக்குள்ளேயே இப்படிப்பட்ட அன்பு காணப்படக்கூடும். இது, மதபக்தியுள்ள எல்லா ஆட்களிலும் நீங்கள் இதைக் காண்பீர்களென்று கருத்துக்கொள்ளுகிறதில்லை; இப்படி இருக்கிறதில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால், ஒரே மெய்க்கடவுளாகிய யெகோவாவை அறிந்து, அவருடைய பெயரை மரியாதையுடன் கையாண்டு, தங்கள் வாழ்க்கையை அவருடைய சித்ததிற்கிசைய கொண்டுவரும்படி உள்ளப்பூர்வமாய் முயலுகிறவர்களுக்குள் நீங்கள் இந்த அன்பைக் காண்பீர்கள். இப்படிப்பட்டவர்களுடன் கூட்டுறவு சந்தேகமில்லாமல் நன்மைகளை பயக்குவிக்கும்.
39 நிச்சயமாகவே, இம்முறையில் ஓர் ஆள் மீதியான உலகத்தின் அக்கிரம நடத்தையின் விளைவுகளுக்கு விடுபட்டவனாகி விடுகிறதில்லை. இருந்தபோதிலும், அவன் தான் கடவுளின்பேரில் சார்ந்திருப்பதைத் தனியே ஒப்புக்கொண்டு, பைபிளில் குறித்து வைக்கப்பட்டிருக்கிற சரி தவறுக்குரிய கடவுளுடைய தராதரத்தை முற்றிலுமாய் ஏற்றுக்கொள்ளுகையில் மிகுதியான நன்மைகளை அடைகிறான். தலைவலியிலும், மனத்துயரத்திலுமே விளையக்கூடிய செயல்களில் உட்படுவதற்கு எதிரான அவன் பாதுகாககப்படுகிறான். நீதிமொழிகள் 1:33 சொல்லுகிற பிரகாரம்: “எனக்குச் [அதாவது, தெய்வீக ஞானத்திற்குச்] செவிகொடுப்பவன் மோசமின்றி வசிப்பான், தீமை விளைவிக்கும் திகிலுக்கு விலகி அமர்ந்திருப்பான்.” (தி.மொ.) அவனுடைய வாழ்க்கையை சிருஷ்டிகரின் சித்தத்திற்கு இசைவாக அவன் உபயோகிக்கிறானென்றால் அது உண்மையான அர்த்தத்தால் நிரம்பியுள்ளதாகக்கூடும். மிகப்பல ஆட்கள் அனுபவிக்கும் ஏமாற்றத்தில் பங்குகொள்வதற்குப் பதிலாக, மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்கு ஒரே மெய்யான பரிகாரமாகிய—கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ளும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்வதிலிருந்து வரும் பலனாகிய அந்த மகிழ்ச்சியில் அவன் பங்குகொள்ளக்கூடும். இயேசு கிறிஸ்து இப்படிப்பட்ட ஒரு வேலையை முன்னறிவித்துப் பின்வருமாறு கூறினார்: “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”—மத்தேயு 24:14, NW.
40 இந்தப் பிரசங்க வேலையில் பங்குகொள்ளுகிறவர்கள் எதிர்காலத்தை நோக்குகையில் அவர்கள் பயத்தால் நிரம்பப்படுகிறதில்லை. பைபிளைப் படித்து, அது சொல்வதை நம்பியிருப்பதால், எதிர்காலம் என்ன வைத்திருக்கிறதென்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். உலக விவகாரங்களில் உண்டாகும் வெறுப்பு விளைவிக்கிற ஒவ்வொரு உற்பத்திகளாலும் மனச்சங்கடப்பட்டுக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, அவற்றில், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைக் குறித்த பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை அவர்கள் காண்கிறார்கள். கடவுளுடைய அரசாட்சியைத் தொடர்ந்து அவமதித்து தங்கள் உடன் தோழரான மனிதர் சந்தோஷ வாழ்க்கை அனுபவிப்பதைக் கெடுப்பதில் விடாப்பிடியாய் ஊன்றியிருக்கிற எல்லோரையும் இப்பொழுது சீக்கிரத்தில் இந்தச் சந்ததியில்தானே கடவுள் அழிக்கப்போகிறார் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். திடநம்பிக்கையுடன், 2 பேதுரு 3:13-ல் குறித்து வைக்கப்பட்டிருக்கிற நம்பிக்கையின் நிறைவேற்றத்திற்கு ஆவலோடு எதிர்நோக்குகின்றனர், அது சொல்வதாவது: “அவருடைய வாக்குத்தத்தின்படியே நீதிவாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”
41 இந்த வகையான பாதுகாப்பே இப்பொழுது யெகோவா தேவனின் கிறிஸ்தவ வணக்கத்தாரால், ஆம் “பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுகிற”வர்களால் அனுபவித்துக் களிக்கப்படுகிறது. இது அவர்கள் யெகோவாவின் நீதியுள்ள தராதரங்களுக்குத் தங்களைக் கீழ்ப்படுத்தி அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் செயல்பட வைப்பதன் பலனாக வருகிறது. ஏசாயா 32:17, 18-ல் முன்னறிவித்திருக்கிறபடி: “மெய் நீதியின் வேலை, சமாதானமாக வேண்டும்; மெய் நீதியின் சேவை, வரையறையில்லா காலத்துக்கும் அமைதியும் பாதுகாப்புமாக வேண்டும். என் ஜனம் சமாதான தாபரங்களிலும் முழு உறுதி நம்பிக்கையுள்ள உறைவிடங்களிலும் தொல்லையற்ற இளைப்பாறும் இடங்களிலும் குடியிருக்க வேண்டும்.” இவர்கள் யெகோவாவின் உன்னத ஆட்சியை உண்மை தவறாமல் ஆதரிக்கிறவர்கள். நல்லது கெட்டது என்பதைப் பற்றியதில் அவர்கள் தங்கள் சொந்த தராதரங்களை ஏற்படுத்தி வைத்துக் கொள்வதில்லை, உலகத்தின் பிரச்னைகளைத் தாங்களாகவே தீர்க்கும்படி அவர்கள் முயலுகிறதில்லை. யெகோவா செய்திருக்கிற அன்புள்ள ஏற்பாடாகிய இயேசு கிறிஸ்துவின் பொறுப்பிலுள்ள அவருடைய ராஜ்யத்தை அவர்கள் நன்றியறிதலுடன் ஏற்று ஆதரிக்கிறார்கள்.
42 அவர்கள் அனுபவித்து மகிழும் இந்தப் பாதுகாப்பில் பங்குகொள்ள உங்களுக்குப் பிரியமா? நீங்கள் பங்குகொள்ளக்கூடும்.
இதைப்பற்றி நீங்கள் என்ன செய்யலாம்?
43 முதல் படிகளில் ஒன்று இப்படிப்பட்ட பாதுகாப்பை அனுபவித்து மகிழுகிற ஜனத்துடன் நீங்கள் கூட்டுறவுகொள்ள வேண்டும். இவ்வாறாக, நீங்கள் தேடிக்கொண்டிருப்பது உண்மையில் இதுதானாவென்பதை நீங்கள் தாமே கண்டுகொள்ளலாம். யெகோவாவின் சாட்சிகள், உங்கள் பகுதியிலுள்ள ராஜ்ய மன்றத்தில் தங்கள் கூட்டங்களுக்கு வரும்படி உங்களை அன்புடன் வரவேற்கிறார்கள். அவர்களுடைய கூட்டங்கள் ஆசாரங்களால் நிரம்பியில்லை. மேலும் காணிக்கைகளும் கேட்கப்படுகிறதில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள். அதற்குப் பதிலாக, கடவுளுடைய வார்த்தையைப் பற்றியும் அது நம்முடைய வாழ்க்கையை எப்படி பாதிக்கிறதென்பதைப் பற்றியும் அர்த்தமுள்ள கலந்தாராய்ச்சி அங்கே நடத்தப்படுகிறது. பைபிள் நமக்கு பின்வருமாறு ஆலோசனை கூறுகிறது: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்துச் சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தக் கடவோம்.” (எபிரெயர் 10:24, 25) இந்த ஆவியையே நீங்கள் ராஜ்ய மன்றத்தில் காண்பீர்கள்.
44 இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு வருவது மற்றவர்கள் அனுபவித்து மகிழும் இந்தப் பாதுகாப்பை நீங்கள் காணக்கூடும்படி செய்யும், சந்தேகமில்லாமல் இந்தக் கூட்டுறவு உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும், நீங்கள்தாமே இப்படிப்பட்ட பாதுகாப்பை உடையவர்களாக இருக்க வேண்டுமானால் இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. உங்களுடைய மிகப் பெரிய தேவையானது யெகோவா தேவனுடன் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உறவை நீங்கள் உடையவர்களாக இருப்பதே. இவர் பேரிலேயே உங்களுடைய தற்போதைய சுகநலமும் எதிர்காலத்திற்கான உங்களுடைய எல்லா எதிர்பார்ப்புகளும் சார்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட உறவு முயற்சியில்லாமல் வெறுமெனே கிடைக்குமென்று நம்மில் எவரும் எடுத்துக்கொள்ள முடியாது. இந்த உறவுடன் நாம் பிறந்ததில்லை. நாமெல்லோரும் பாவியாகிய ஆதாமின் சந்ததியார், ஆகையால் கடவுளிடமிருந்து உறவு தொலைவாக்கப்பட்ட மனித குடும்பத்திற்குள் நாம் பிறந்திருக்கிறோம். யெகோவாவின் தயவை அடைய, நாம் அவரிடம் ஒப்புரவாவது அவசியம், அது, அவர் தம்முடய குமாரனின் பலியின் மூலமாய் செய்திருக்கிற அன்புள்ள ஏற்பாட்டில் வைக்கும் விசுவாசத்தின் அடிப்படையின் பேரில் மாத்திரமே கூடியதாயிருக்கிறது. இயேசுதாமே சொன்ன பிரகாரம்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”—யோவான் 14:6.
45 நம்முடைய உயிருக்காகக் கடவுளுக்கே நாம் கடன்பட்டிருக்கிறோம் என்றும், கடவுளுக்குக் கீழ்ப்படிவதில் தம்முடைய வாழ்க்கையை உபயோகிக்கத் தவறும் எந்தத் தவறுதலும் மீறுதல் என்றும் நாம் தெளிவாக மதித்துணரவேண்டும். கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நாம் வாழ்க்கையை உபயோகிக்கத் தவறின கடந்தகால தவறுதலுக்காக நாம் உண்மையில் மனம் வருந்துகிறோமென்றால் நாம் அந்தத் தவறான போக்கை வேண்டாமென்று தள்ளி மனந்திரும்பி, நம்முடைய வாழ்க்கையைக் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாகக் கொண்டு வருவோம். இயேசு தம்முடைய சீஷர்கள் செய்யவேண்டுமென்று சொன்னதைச் செய்வதும் அதாவது, தங்களைத் தாங்களே சொந்தம் கைவிடுவதும் உட்பட்டிருக்கிறது. (மத்தேயு 16:24) இதைச் செய்கிறவன் கடவுளுடைய சித்தத்திற்கு எவ்வித அக்கறையும் செலுத்தாமல் வெறுமென தன் சொந்த தன்னல விருப்பங்களைத் திருப்தி செய்வதற்கே தன் வாழ்க்கையை வாழ்வதற்குத் தனக்கு உரிமை இருப்பதாக இனிமேலும் பாராட்டுகிறதில்லை. அதற்கு மாறாக கடவுளுடைய குமாரன் வழிநடத்துகிறபடி கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு அவன் தன்னை முற்றிலுமாய்க கீழ்ப்படுத்துகிறான். அதுவே சரியாக இருப்பதனாலும், யெகோவா செய்கிற ஒவ்வொன்றும் ஒரு நல்ல மற்றும் நீதியுள்ள நோக்கத்தையுடையதாய் இருக்கிறதென்றும், நாம் நீதியை நேசிக்கிறோமென்றால் கடவுள் செய்வது நமக்கு ஆசீர்வாதங்களில் பலனடைகிறதென்றும் அவன் திடமாய் நம்புகிறதாலும் அவன் இதைச் செய்கிறான். அவன் மெய்யாகவே யெகோவாவைத் தன் முழு இருதயத்தோடும், மனதோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும் நேசிக்கிறான். (மாற்கு 12:29, 30) தன்னுடைய சொந்த இருதயத்தில் இப்படிப்பட்ட ஓர் உறுதிசெய்து ஒப்புக்கொடுத்திருப்பதால், அவன் இயேசு கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றுகிறவனாகவும், தம்முடைய சீஷருக்கு அவர் கொடுத்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதலாகவும் யாவரறிய தண்ணீர் முழுக்காட்டுதலுக்குத் தன்னை முன்வந்து அளிக்க ஆயத்தமாய் இருக்கிறான். கடவுளுடைய வார்த்தையில் குறிக்கப்பட்டிருக்கிற இந்த முறையில் மாத்திரமே, ஒருவன் உண்மையான கடவுளுடன் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உறவுக்குள் வந்து, அவருடைய ஊழியர்கள் அனுபவித்துக் களிக்கிற அந்தப் பாதுகாப்பில் பங்கு கொள்ளக்கூடும்.
46 இதன் பின்பு நீங்கள் சாத்தானால் ஆதரித்து வாதாடப்பட்ட சுதந்தர போக்கை மெய்யாகவே வேண்டாமென்று தள்ளிவிட்டீர்களென்றும்; நன்மை தீமையைக் குறித்ததில் உங்கள் சொந்த தராதரங்களை நீங்கள் வைக்கிறதில்லை என்றும்; யெகோவாவையே உங்கள் அரசராக நீங்கள் உண்மையில் விரும்பிகிறீர்களென்றும் செயலின் மூலம் தொடர்ந்து நிரூபித்து வருவது இன்றியமையாதது. நீதிமொழிகள் 3:5, 6-ல் கூறப்பட்டிருக்கிறபடி நீங்கள் செய்ய வேண்டும்: ‘உன் சுய புத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவர்.’ ஆம், அவர் உங்கள் பாதைகளை உண்மையான மற்றும் நிலையான பாதுகாப்பின் வழியில் நடத்துவார்.
47 யெகோவா மனிதவர்க்கத்திற்கு செய்திருக்கிற இந்த அன்புள்ள ஏற்பாடுகளை மெய்யாகவே ஏற்றுக்கொள்கிற எல்லோருக்கும் ஆ, எப்பேர்ப்பட்ட மகத்தான ஆசீர்வாதங்கள் வருகின்றன! அவருடைய ஆட்சியின் கீழ் உறுதியான நிலை நிற்கையை எடுப்பதன் மூலம், அவர்கள் இப்பொழுதும் பாதுகாக்கப்படுகிறார்கள் எதிர்காலத்திலும் திட நம்பிக்கையான எதிர்பார்ப்புகளை அவர்கள் உடையவர்களாக இருக்கிறார்கள். யெகோவாவின் அன்புள்ள இரக்கத்தின் மற்றும் உண்மையின் காரணமாகவும் அவர்கள், கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பொறுப்பிலுள்ள கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் மனிதவர்க்கத்திற்கு வரப்போகிற அந்த முற்றிலும் திருப்தியளிக்கும் பாதுகாப்பில் பங்குகொள்வார்கள்.
[அடிக்குறிப்புகள்]
a வேறு வகையில் குறிப்பிட்டிருந்தால் தவிர, இந்தப் பிரசுரத்திலுள்ள வேதவசன மேற்கோள்கள் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து கொடுக்கப்படுகின்றன.
b மொழிபெயர்ப்பாளர்களால் பயன்படுத்தப்படுகிற இந்த உபாயத்தை நியூ இங்கிலிஷ் பைபிளில் சங்கீதம் 135:5-லும் நெகேமியா 10:29-லும் மேலும் நன்றாக காணலாம்.
[கேள்விகள்]
1. உங்களுக்கும் உங்களுக்கு அன்பானவர்களுக்கும் என்ன வகையான பாதுகாப்பை நீங்கள் விரும்புவீர்கள்?
2. (எ) பாதுகாப்பைப்பற்றி பைபிள் ஏசாயா 32:17, 18-ல் என்ன சொல்லுகிறது?(பி) இப்படிப்பட்ட நிலைமைகள் உங்கள் மனதைக் கவருகின்றனவா?
3. மனிதவர்க்கத்திற்குப் பாதுகாப்பில் பலனடைய போகிற வேறு எதையாவது பைபிள் வாக்குக்கொடுக்கிறதா? (வெளிப்படுத்துதல் 21:4,5)
4. பைபிளை எழுதுவதற்கு மனிதர் பயன்படுத்தப்பட்டபோதிலும், அதில் எழுதப்பட்டிருக்கிறவை ஏன் உண்மையில் கடவுளிடமிருந்து வந்தவை? (2 தீமோத்தேயு 3:16, 17)
5. பணத்தையும் மற்ற உடமைகளையும் குறித்ததில் என்ன மெய்மையான நோக்கத்தை ஏற்கும்படி பைபிள் நம்மை ஊக்கப்படுத்துகிறது? (பிரசங்கி 7:12)
6. எதிர்காலத்திற்கான நம்முடைய எல்லா நம்பிக்கைகளையும் மனிதத் தலைவர்கள் வாக்குக் கொடுக்கிறதைச் சுற்றிக் கட்டுவது ஏன் விவேகமல்ல?
7. (எ) நீண்டகால பாதுகாப்பை நமக்கு உண்மையில் அளிக்கக்கூடியவர் யார்? ஏன்? (அப்போஸ்தலர் 17:28) (பி) அந்தப் பாதுகாப்பை நாம் அனுபவித்துக் களிக்கவேண்டுமென்றால் நமக்கு என்ன தேவையாக இருக்கிறது?
8. (எ) எவ்வகையான ஆட்களுக்காகக் கடவுள் தேடுகிறார்? (பி) ஆகையால், அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய தனியாட்களாகிய நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய மனமுள்ளவர்களாய் இருக்கவேண்டும்? (மத்தேயு 7:21-23)
9, 10. (எ) கடவுளுடைய தனிப்பட்ட பெயர் என்ன? (பி) கடவுளுடைய பெயர் என்னவென்று ஒரு நண்பனுக்கு நிரூபிக்கும்படி எந்த வேத வசனங்களை நீங்கள் உபயோகிப்பீர்கள்? (சி) சில மொழிபெயர்ப்பாளர்கள் எப்படி இந்தப் பெயரை மறைத்து வைக்க முயன்றிருக்கிறார்கள்? (சங்கீதம் 110:1)
11. (எ) கடவுளுடைய பெயரை அறிவதும் அதைப் பயன்படுத்துவதும் உண்மையில் முக்கியமானதா? (அப்போஸ்தலர் 15:14) (பி) நாம் உண்மையில் யெகோவாவை நேசிக்கிறோமென்றால் அந்தப் பெயரை நாம் ஒவ்வொருவரும் எப்படி உபயோகப்படுத்த வேண்டும்? (ஏசாயா 43:10)
12. வணக்கத்தில் சிலைகளை உபயோகிப்பதைக் கடவுள் எப்படிக் கருதுகிறார்? (சங்கீதம் 115:3-8 உபாகமம் 7:25)
13. (எ) யெகோவா எப்படிப்பட்ட கடவுள்? (பி) அவருடைய பண்புகளில் எது உங்கள் இருதயத்தைத் தனிப்பட்ட முறையில் கவருகிறது?
14. ஒருவன் உண்மையில் தன் நம்பிக்கையை யெகோவாவில் வைக்கையில் அவனுடைய வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்படுகிறது? (நீதிமொழிகள் 3:5,6)
15. (எ) நம்முடைய எதிர்காலம் ஏன் யெகோவாவின் பேரில் சார்ந்திருக்கிறது? (பி) என்ன பாரமான தீர்மானத்தை ஒவ்வொரு ஆளும் எதிர்ப்படுகிறான்? (உபாகமம் 30:19, 20)
16. இன்று வாழ்க்கையைப் பாதுகாப்பில்லாததாக்குகிற காரியங்களில் சில யாவை?
17. தொடக்கத்தில், எது ஆதாமும் ஏவாளும் அனுபவித்த பாதுகாப்புக்கு உதவி செய்தது? (ஆதியாகமம் 1:31; 2:8, 15)
18. ஆதாமும் ஏவாளும் தொடர்ந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென்றால் அவர்கள் பங்கில் என்ன தேவைப்பட்டது? (பி) யெகோவா அவர்களுடைய கீழ்ப்படிதலை எப்படிப் பரீட்சை செய்தார்? இது ஏன் ஒரு முக்கியமான காரியம்? (லூக்கா 16:10)
19. (எ) பாதுகாப்பற்ற நிலையை உண்டுபண்ணும் எந்தக் காரியங்கள், ஆதாம் ஏவாளின் பாவத்தின் சம்பந்தமாக முதலும், அதன் பின்பும் தெளிவாக உணரப்பட்டன? (பி) ரோமர் 5:12-ல் விளக்கப்பட்டிருக்கிறபடி, ஆதாமின் எல்லா சந்ததியாரும் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்?
20. (எ) ஏதேனில் கலகம் யாரிலிருந்து தொடங்கிற்று? (வெளிப்படுத்துதல் 12:9) (பி) அவன் எப்படி பிசாசாகிய சாத்தான் ஆனான்? (யாக்கோபு 1:14, 15)
21. (எ) ஏவாளுடன் பேசுகையில் சாத்தான் என்ன காரியங்களை மெய்யென்று வாதாடினான்? (பி) சாத்தான் சொன்னதை நம்பி அதன்படி நடந்ததன் மூலம் அவள் ஏன் தன் நிலையை உயர்த்திக் கொண்டவளாகவில்லை?
22. (எ) அங்கே ஏதேனில் என்ன மிக முக்கியமான கேள்விகள் எழுப்பப்பட்டன? இவை எப்படி எல்லா சிருஷ்டிப்பின் பாதுகாப்பையும் பாதிக்கின்றன? (பி) யோபின் நாட்களில் மேலுமான என்ன குற்றச்சாட்டு செய்யப்பட்டது? இது மறைமுகமாக என்ன குறிப்பிட்டது? (யோபு 1:7-12; 2:1-5)
23. (எ) நம்முடைய முதல் பெற்றோரின் பேரில் நியாயத்தீர்ப்பைக் கூறுகையில் யெகோவா எதை நமக்குக் கூடியதாக்கினார்? (2 பேதுரு 3:9) (பி) மனிதவர்க்கத்தின் எதிர்காலத்திற்கான யெகோவாவின் ஏற்பாடு யாரைச் சுற்றி சுழலுகிறது?
24 (எ) இயேசு மனிதனாவதற்கு முன்பாக என்ன வகையான வாழ்க்கையை உடையவராக இருந்திருந்தார்? (பி) அவரைக் கடவுளாக அல்லது கடவுளுக்குச் சமமானவராக நாம் ஏன் பேசக்கூடாது? (யோவான் 17:3)
25. பூமியில் மனிதனாக மிகுந்த நெருக்கடியின்கீழ் தம்முடைய உத்தமத்தை இயேசு நிரூபித்ததன் மூலம் எதை நிறைவேற்றினார்?
26. பரிபூரண மனிதனாக மரித்த இயேசுவின் மரணத்திலிருந்து வேறு என்ன பலனுண்டாயிற்று? இது நமக்கு எதைக் கூடியதாக்குகிறது? 1 தீமோத்தேயு 2:3-6.
27. (எ) இயேசு ஏன் அரசியல் விவகாரங்களில் தம்மை உட்படுத்திக்கொள்ளவில்லை? (யோவான் 18:36) (பி) அரசாங்கங்களைக் குறித்ததில் என்ன மனப்பான்மையைக் கொண்டிருக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றினவர்களுக்குக் கற்பித்தார்? (மத்தேயு 22:17-21)
28. கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன, அதற்கு நம்முடைய மதித்துணர்வை நாம் எப்படிக் காட்டக்கூடும்? (மத்தேயு 6:33)
29. (எ) எவ்வளவு காலமாக மனித ஆட்சி இருந்து வந்திருக்கிறது? இப்பொழுது இன்னுமதிக காலத்திற்கு அது ஏன் தொடர்ந்திராது? (எரேமியா 17:5) (பி) இது சாத்தானுக்கு எதைக் குறிக்கும்? (சி) மனித அரசாங்கங்களுக்கு என்ன சம்பவிக்கும்? (டி) பொல்லாத ஆட்களுக்கு என்ன நேரிடப்போகிறது? (இ) யெகோவாவின் ஆட்சியை அசட்டையாய்ப் புறக்கணிக்கிறவர்களுக்கு என்ன சம்பவிக்கும்? (2 தெசலோனிக்கேயர் 1:6-9)
30. யெகோவாவின் ஆட்சியை உண்மை தவறாமல் ஆதரித்துப் பற்றியிருக்கிறவர்களுக்கு இதெல்லாம் எதைக் குறிக்கும்? (வெளிப்படுத்துதல் 7:9, 10, 13, 14)
31. சங்கீதம் 72-ல் விவரித்திருக்கிறபடி, கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் பூமி முழுவதிலும் பாதுகாப்புக்கு உதவி செய்யும் என்ன நிலைமைகள் வியாபித்திருக்கும்?
32. (எ) மரித்தோருங்கூட இந்த மகத்தான ஏற்பாடுகளிலிருந்து பலனடைவது எப்படிக் கூடியதாகும்? (பி) உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் எங்கிருந்து திரும்பி வருவார்கள்? (எசேக்கியேல் 18:4; யோபு 14:13)
33. (எ) எந்த வழிவகையின் மூலமாய் நோயும் மரணமும் நீக்கப்படும்? (மாற்கு 2:1-12) (பி) ஒரு பாதுகாப்பான எதிர்காலத்திற்காக யெகோவா செய்திருக்கிற இந்த ஏற்பாடுகளிலிருந்து தனிப்பட்டவர்களாய் நீங்கள் தாமே பலனடைய விரும்பிகிறீர்களா?
34. இப்பொழுதுதானே அனுபவித்துக் களிக்கக்கூடிய உண்மையான பாதுகாப்பு ஏதாவது இருக்கிறதா?
35. இங்கே குறிப்பிடப்பட்ட எந்தக் காரியங்கள் போதிய தனிப்பட்ட பாதுகாப்பில் பலனடையும்?
36. (எ) எந்தச் சூழ்நிலைமைகளின்கீழ், கடவுள், இப்பொழுது தானேயும் அன்றாடக உணவையும் உடையையும் தாம் அளிப்பார் என்று சொல்லுகிறார்? (பி) இப்படிப்பட்ட பாதுகாப்பை யார் அனுபவித்து மகிழுகின்றனர்? இந்தத் தேவை பொருட்களை அவர்கள் எப்படி அடைகிறார்கள்? (எபேசியர் 4:28)
37. (எ) என்ன நடத்தை மற்றும் மனநிலை வகைகள் பாதுகாப்பில்லாமையைப் பெருக்குகின்றன? (பி) இந்த வகையான ஆட்களுக்குள் அடிப்படையாய் என்ன பண்பு குறைவுபடுகிறது? (சி) இப்படிப்பட்ட அன்பு எங்கே காணப்படுமென்று இயேசு சொன்னார்?
38. இப்படிப்பட்ட அன்பை உடையவர்களை அடையாளங் கண்டுகொள்ள பைபிள் நமக்கு எப்படி உதவி செய்கிறது? (1 யோவான் 4:20, 21)
39. இப்படிப்பட்ட ஆட்களுக்குள் வெறுமென இருப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய பாதுகாப்புக்கும் தன்னுடைய வாழ்க்கையில் சந்தோஷமனுபவிப்பதற்கும் உதவி செய்யக்கூடிய வேறு எதையும் ஒருவன் செய்யக்கூடும்?
40. யெகோவாவின் சாட்சிகள் எதிர்காலத்தைப்பற்றி எப்படி உணருகிறார்கள்? ஏன்? (லூக்கா 21:28-32)
41, 42. (எ) ஆகையால், தொந்தரவு நிறைந்த உலகத்தின் மத்தியில் தாங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிற போதிலுங்கூட, அப்பொழுது தானேயும் யெகோவாவின் சாட்சிகள் உயர்ந்த அளவான பாதுகாப்பை ஏன் அனுபவித்து மகிழுகிறார்கள்? (பி) யெகோவாவின் சாட்சிகளால் அனுபவிக்கப்படுகிற அந்தப் பாதுகாப்பையே நீங்களும் விரும்புகிறீர்களா?
43. யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றத்துக்குச் செல்வதன் மூலம் எதை நீங்கள் தாமே காணக்கூடியவர்களாக இருப்பீர்கள்?
44. (எ) ராஜ்ய மன்றத்திலுள்ள மற்றவர்களின் வாழ்க்கையில் நீங்கள் காண்கிற அந்தப் பாதுகாப்பை நீங்கள் தாமே தனிப்பட்டவர்களாய் அனுபவித்து மகிழவேண்டுமென்றால், உங்களுக்கு என்ன தேவை? (பி) இப்படிப்பட்ட ஓர் உறவை நம்மில் எவரும் ஏன் வெறுமென அப்பொழுதைக்கு உண்மையென்று எடுத்துக்கொள்ளக்கூடாது? அதை நாம் எப்படி அடையக்கூடும்?
45. (எ) உயிரைப்பற்றியதிலும் நம்முடைய வாழ்க்கை எப்படி உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்பதைப் பற்றியதிலும் நாம் முதலாவதாக எதை மதித்துணர வேண்டும்? (வெளிப்படுத்துதல் 4:11) (பி) யெகோவாவை மகிழ்விக்க, நாம் தனிப்பட்டவர்களாய் அவரைப்பற்றி எப்படி உணரவேண்டும்? (சி) தண்ணீர் முழுக்காட்டுதல் ஏன் முக்கியமானது? ஒருவன் முழுக்காட்டப்படுவதற்கு தயாராய் இருப்பதற்கு முன்பாக எது அவசியமாய் இருக்கிறது? (மத்தேயு 28:19, 20)
46. யெகோவா நம்முடைய அரசராக இருக்க நாம் உண்மையில் விரும்புகிறோம் என்பதை நாம் எப்படிச் செயலில் நிரூபித்துக் காட்டுகிறோம்?
47. யெகோவாவின் அன்புள்ள ஏற்பாடுகளை உண்மையில் ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு என்ன பாதுகாப்பு வருகிறது?
[பக்கம் 7-ன் படம்]
நம் எதிர்கால எதிர்பார்ப்புகள் வானத்தையும் பூமியையும் உண்டாக்கியவரை சார்ந்திருக்கின்றன
[பக்கம் 13-ன் படம்]
நம்முடைய முதல் பெற்றோரைப்பற்றிய பைபிள் பதிவானது இன்றைய மனித வாழ்க்கையை பாதுகாப்பில்லாமை ஏன் பாழ்படுத்துகிறது என்று காட்டுகிறது
[பக்கம் 22-ன் படம்]
கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் குற்றச்செயலுக்கும் ஒருவரின் உடைமை மற்றும் உயிருக்குமான ஆபத்திற்கும் ஒரு முடிவு இருக்கும்
[பக்கம் 24-ன் படம்]
வியாதியும் மரணமும் நீக்கப்படும் என்று கடவுளுடைய வார்த்தை வாக்களிக்கிறது—ஆம், மரித்துபோன நமக்கு பிரியமானவர்களுங்கூட மறுபடியும் உயிர் வாழ்வார்கள்
[பக்கம் 4-ன் படம்]
இப்பொழுது வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்கள் பட்டினியே இல்லாத நாளை காண்பர்