வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் இருக்கிறது!
செழுமை, சமாதானம், நல்வாழ்க்கை! இக்காரியங்கள் ஆ, எவ்வளவாய் விரும்பத்தக்கவை! ஆனால் நீங்கள் உங்கள் நாட்களை எப்படிச் செலவிடுகிறீர்கள்? தங்கள் குடும்பங்களை ஆதரித்துவரும் ஆண்கள் அநேகத் தடவைகளில் தங்களுக்கு பலர் வேலையில்லாமற்போகும் பயமுறுத்தலை இடைவிடாமல் எதிர்ப்படுகிறார்கள். குடும்ப பொறுப்புள்ள மனைவிகள் பலர், நீண்ட நேரம் ஒரே ரீதியாய் நாளுக்குநாள் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறவர்களாகவும், என்றாலும் அதில் பெரும்பாலும் திருப்தியைக் கண்டடையாதவர்களாயும் இருக்கிறார்கள். இளைஞர் மிகப் பலர் இதைப் போன்ற வாழ்க்கை எதிர்பார்ப்புடன் வளர்ந்து வருகிறார்கள். வாழ்க்கை தங்களை அதிக தயவாய் நடத்திவந்திருப்பதாக உணருகிற ஒரு சிலருக்குங்கூட, எதிர்காலம் நிச்சயமில்லாமையால் மங்கலாக இருக்கிறது.
2 உண்மையில், வாழ்க்கைக்கு இருப்பதெல்லாம் இதுதானா? இந்த உலகத்தில் நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் பாருங்கள், இந்த ஒழுங்குமுறை மோசமாய் நோய்வாய்ப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. மின்சக்தி குறைபாட்டில் நெருக்கடிகள், விரைந்துகொண்டிருக்கும் பணவீக்கம், உணவு குறைபாடுகள், சுற்றுப்புற சூழ்நிலையின் தூய்மைக்கேடு, புரட்சிகள், மறைமுக சூழ்ச்சிப்போர்கள் மற்றும் நேர்முகப்போர்கள், அணுசக்தி போராயுதங்களின் குவிப்பு, ஜாதி வேறுபாட்டுப் பிரச்னைகள், மனிதவர்க்க பெரும்பான்மைப் பொதுமக்களுக்குள் பொங்கியெழும் திருப்தியில்லாமை ஆகியவை அதற்கு இருந்துகொண்டிருக்கின்றன. மனித வாழ்க்கைக்கும் உயிர்த்தப்பிப் பிழைப்பதற்கும் பயமுறுத்தலையளிக்கும் பிரச்னைகளிலிருந்து பூமியின் எந்தப் பாகமும் விடுதலை பெற்றதாய் இல்லை!
3 ‘என்னைப் பாதிக்காத வரையில் கவலை ஏன்?’ என்ற மனப்பான்மையைச் சிலர் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இது, ஆ, எவ்வளவு குறுகிய நோக்கு! வெகு சீக்கிரத்தில் இந்தப் பிரச்னைகள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் நிச்சயமாகப் பாதிக்கப் போகிறதென்பது தப்பிக்கொள்ளமுடியாத முடிவு.
4 பொருளியல், விஞ்ஞானம், அரசியல் போன்ற துறைகளில், மனிதத் தலைவர்கள், அகில உலக அளவில்—தங்களால் இயன்ற பரிகாரங்களை முன் கொண்டுவந்திருக்கின்றனர். என்றாலும் இவையெல்லாம் பயனற்றவையாகவும் திருப்தியளிக்காதவையாகவும் நிரூபிக்கிறதல்லவா? முன்கொண்டுவரப்பட்ட நிவாரண திட்டங்கள் அவைகளில் பல துவங்கப்படாமலேயுங்கூட போய் விடுகின்றன. உலகத் தலைவர்களில் எவரும் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய மெய்யான பரிகாரங்களை அளிக்கமுடியாது. இதன் விளைவாக, மனிதவர்க்கத்தில் பெரும்பான்மையர் வாழ்க்கையில் நோக்கமற்று இருப்பவர்களாகத் தோன்றுகின்றனர்; “புசிப்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்ற பொது மனப்பான்மையை அவர்கள் ஏற்கிறார்கள்.
5 மேற்கூறிய இவ்வார்த்தைகள் பைபிளில் 1 கொரிந்தியர் 15:32-ல்a காணப்படுகின்றன. ஆனால் இவை நம்பிக்கையுள்ள நோக்கு நிலையை ஊக்கப்படுத்தும் ஓர் சூழமைவில் காணப்படுகின்றன. மனிதவர்க்கத்தின் பிரச்னைகளைத் தீர்க்கும் பரிகாரத்தை பைபிள் வைத்திருக்கக்கூடுமா? பைபிளை வேண்டாமென்று தள்ளுகிற ஆட்கள் நிச்சயமாகவே பலர் இருக்கின்றனர். என்றாலும், உலக விவகாரங்களின் நிலையற்ற நிலைமையைக் கருதுகையில், ஒருவேளை பைபிளுக்குத் திரும்ப ஒருமுறை கவனத்தை செலுத்துவதற்கு ஏற்ற சமயமாக இருக்கலாம். எப்படியாயினும், பைபிள் ஒரு மிகப் பண்டையகால புத்தகம், இதன் சில பாகங்கள் 3,400-க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டவை. மனிதவர்க்க எல்லா ஜாதிகளின் ஜனங்களுடைய நன்மதிப்பையும் இது பெற்றிருக்கிறது. இது மிகப்பெரும் எண்ணிக்கையான பேச்சு வழக்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதன் விநியோகமானது மனித சரித்திரத்தில் மற்ற எந்த பிரசுரத்திற்கும் மேலாக மிக அதிகமாய் மீறிவிட்டிருக்கிறது. அப்படியானால், வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் இருக்கிறது என்று இது நமக்குக் காட்டுகிறதா?
வாழ்க்கையின் பிரச்னைகளுக்கு பதில்களைக் கண்டடைதல்
6 பைபிளைக் குறைகாண்பவர் சிலர் ஏழ்மையான மக்களைக் கொள்ளையிடுவது, சிலுவைப்போர்கள், குரூர மத விசாரணைகள், இருபதாம் நூற்றாண்டின் போர்கள் ஆகியவற்றைப் போன்ற கிறிஸ்தவ மண்டலத்தின் நடத்தைப் பதிவைச் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். இவ்வாறு நடக்கும்படி பைபிள் மக்களைச் செய்விக்கிறதென்றால், எங்களுக்கு அதில் எதுவும் வேண்டாம் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இப்படிப்பட்ட இரத்தப்பழியுள்ள ஆட்கள், கிறிஸ்தவத்திற்கு எதிர்மாறான செயல்களைச் செய்வதற்கு, பைபிளை வெறும் ஒரு அங்கியாகத்தானே பயன்படுத்தியிருக்கின்றனர்.? பைபிள்தானேயும் அவர்களுடைய செயல்களை மிகக் கண்டிப்பாகக் கண்டனம் செய்து, அவர்களைப் போலிக் கிறிஸ்தவர்களாக வெளிப்படுத்திக் காட்டுகிறது. உண்மையில், நீதியொழுக்க முறையான வாழ்க்கையை வாழும்படியே பைபிள் வெளிப்படையாகப் பரிந்துரைக்கிறது.
7 பைபிளைக் குறைகூறும் வேறு சிலர், பைபிள் விஞ்ஞானப் பூர்வமற்றது, பழமைப்பட்டது, மேலும் அது பழங்கால கற்பனைக் கதைகளடங்கிய புத்தகம் என்று வாதாடுகின்றனர். ஆனால் இது உண்மைதானா? மனிதன் எங்கிருந்து வந்தான்? தற்போதைய நிலைமைகளின் அர்த்தமென்ன? மனித வாழ்க்கை பூமியிலிருந்து அழிக்கப்பட்டுப் போகுமா? எதிர்காலம் மனிதவர்க்கத்திற்கு என்ன வைத்திருக்கிறது? ஆகிய நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கிற இப்படிப்பட்ட இன்றியமையாத கேள்விகளுக்கு நம்பிக்கையான பதில்கள் இன்றுள்ள நமக்குத் தேவையாக இருக்கின்றன.
8 மக்கள் அடிக்கடி கேட்கும் இந்தக் கேள்விகளுக்கும் வேறு பல கேள்விகளுக்கும் பைபிள் பதிலளிக்கிறது,? பழங்கால கற்பனைக் கதைகளை அது சொல்வதில்லை. அதற்குப் பதிலாக மெய்மையான காரியங்களைப் பற்றியே அது பேசுகிறது. உண்மை என்னவென்றால், உலகத்தின் ஒவ்வொரு பாகத்திலுமுள்ள ஆட்கள் தங்களுக்கு மெய்யான திருப்தியும் மனநிறைவும் கொண்டிருக்கிற முறையில் தங்கள் வாழ்க்கையை உபயோகிக்கும்படி பைபிள் அவர்களை வழிநடத்தியிருக்கிறது. நீங்கள் பைபிளை ஆராய்ந்து பார்க்கையில், அது உங்கள் கேள்விகளுக்குப் பதில்களைக் கொடுக்கிறதென்றும் உங்கள் வாழ்க்கையில் மெய்யான சந்தோஷத்தைக் கண்டடைவதற்கேதுவான நடைமுறையான உதவியை உங்களுக்குக் கொடுக்கிறதென்றும் நீங்கள் காண்பீர்கள். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க அது உங்களுக்கு உதவி செய்யும்.
இப்பிரபஞ்சம் எப்படி வந்தது
9 வாழ்க்கையைப் பற்றியதெல்லாம் என்னவென்று கண்டுபிடிக்க நாம் விரும்புகிறோமென்றால், பதிலளிக்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளில் ஒன்று: வாழ்க்கையின் தொடக்கம் என்ன? என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், நாம் எங்கிருந்து வந்தோம்? நாம் உயிர் வாழ்ந்திருப்பதன் நோக்கம் என்ன? என்பதாகும். “கடவுள் வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்று பைபிள் சொல்லுகிறது. (ஆதியாகமம் 1:1, NW) ஆனால் நவீன கால சிந்தனையாளர் பின்வருமாறு கேட்கின்றனர். ஒரு சர்வ வல்லமையுள்ள கடவுள்—ஒரு சிருஷ்டிகர் உண்மையில் இருக்கிறாரா? இந்தப் பிரபஞ்சம் பரிணாமத்தினால் உண்டான பலன் என்பதாகப் பலர் நம்புகின்றனர் என்பது உண்மையல்லவா?
10 வான்கோள நிலை இயக்கங்களைக் காட்டும் பொறியை நீங்கள் எப்பொழுதாவது போய் பார்த்திருக்கிறீர்களா? அப்படியானால் வானங்களில் இருப்பதை அப்படியே ஒரு வளைந்த மாடம் போன்ற தளத்தின்மீது புறவுருப்படுத்திக் காட்டுவதற்குத் திட்டமிடப்பட்ட அந்தக் கடுஞ்சிக்கலான இயந்திர நுட்பத்தின் பேரிலும், நம்முடைய சூரிய மண்டலத்து மாதிரிகளின் திருத்தமான இயக்கத்தின்பேரிலும் நீங்கள் சந்தேகமில்லாமல் வியப்படைந்திருப்பீர்கள். மனிதனுடைய நிழற்படக் கலை மற்றும் பொறியமைப்புக் கலைத்திறமையின் ஆ, எப்பேர்ப்பட்ட சிறந்த உற்பத்தி பலன் இது! என்று நீங்கள் எண்ணியிருக்கலாம். ஆனால் ஓர் இமைப்பொழுது எண்ணிப்பாருங்கள். இந்தப் பிரபஞ்சத்தின் மாதிரி உருவமைப்பைத் திட்டமிடுவதற்கு இப்பேர்ப்பட்ட செயல்திறம் வாய்ந்த மனிதர் தேவைப்பட்டிருந்தால், இந்த மிகப் பிரமாண்டமான பிரபஞ்சத்தைத் தானேயும் கட்டியமைக்க நிச்சயமாகவே இவர்களைப் பார்க்கிலும் மிக மிக அதிக செயல்திறம் வாய்ந்த அறிவாற்றலுடையவர் தேவைப்பட்டிருக்க வேண்டும்.
11 பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே சார்லஸ் டார்வின் இந்தப் பிரபஞ்சமெல்லாம் பரிணாமத்தின் உற்பத்திப் பலன் என்ற கோட்பாட்டை உருவாக்கினான். ஆனால் இதையெல்லாம் ஒருவரும் உண்டாக்கவில்லை என்று நீங்களுங்கூட நினைக்கிறீர்களா? உயிர் ஏதோ தற்செயலாய் உண்டாயிற்றென்று நீங்கள் எண்ணுகிறீர்களா? பரிணாமக் கோட்பாடு குறைபாடுள்ளதாயிருக்கிறதென்று புத்திகூர்மையுள்ள பல ஆட்கள் காண்கின்றனர். உதாரணமாக, சரித்திராசிரியனாகிய அர்னால்ட் டோயன்பீ பின்வருமாறு கூறினான்:
“டார்வீனிய பரிணாமக் கோட்பாடு, இந்தப் பிரபஞ்சம் உண்டாயிருப்பதற்கு சாத்தியமான, மாற்று வழியின் உடன்பாடான ஒரு விவரத்தை அளித்திருக்கிறதென்று நான் நினைக்கிறதில்லை.”1
ஏன் டார்வின்தானேயும் உயிரின் ஊற்றுமூலத்தை விவாதிக்கையில் பின்வருமாறு ஒப்புக்கொண்டான்:
“கடவுள் இருப்பதைப் பற்றியதில் மெய்ப்பிக்கும் மற்றொரு ஊற்றுமூலமானது பகுத்தறிவோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டில்லை என்பது என்னை உறுத்துகிறது. இந்த பிரம்மாண்டமான மற்றும் அதிசயமான பிரபஞ்சம், ‘கடந்த காலத்துக்குள்’ பின்னோக்கவும் எதிர்காலத்திற்குள் வெகு தூரம் நோக்கவும் திறமையுடைய மனிதன் உட்பட, வெறும் தற்செயலின் அல்லது தவிர்க்கமுடியாத நிலையின் விளைவு என்பதாக எண்ணிப் பார்ப்பது உச்ச அளவில் கடினமாயிருப்பதன் அல்லது முற்றிலும் கூடாததாய் இருப்பதன் இயல்பான முடிவாய் இது அமைகிறது. இவ்வாறு சிந்தனை செய்கையில், ஒரு முதல் காரணரை நோக்கும்படி நான் வற்புறுத்தப்படுகிறவனாய் உணருகிறேன்.”2
12 ஆம், ஒரு பெரிய முதற்காரணர், ஒரு சிருஷ்டிகர்—கடவுள்—இருக்க வேண்டுமென்று தர்க்கப்படியான தெளிவான நியாயம் நமக்குச் சொல்லுகிறது! மனிதனின் மிக அதிக வல்லமை வாய்ந்த தொலை நோக்காடிகள் கடவுளுடைய அதிசயமான பிரபஞ்சத்தின் ஆழங்களை நுணுக்கமாக ஆய்வு செய்ய வெறுமென தொடங்க மாத்திரமே கூடும் என்பதை நாம் சிந்தனைசெய்து பார்க்கையில், மனிதனின் ஞானமும் திறமைகளும் கடவுளுடைய மகா மேம்பட்ட ஞானத்தாலும் வல்லமையாலும் நிச்சயமாகவே மிக மிகச் சிறியதாகத் தோன்றும்படி செய்யப்படுகின்றனவென்று நாம் மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் காணப்போகிறபடி நாம் மகிழ்ச்சியும் அர்த்தமுமுள்ள வாழ்க்கையை அனுபவித்து களிக்க விரும்புகிறோமென்றால் கடவுளைக் காட்சியிலிருந்து விட்டுவிட முடியாது. நம்முடைய பூமி உட்பட, இந்தப் பிரபஞ்சத்தைச் சிருஷ்டிப்பதில் அவர் நிச்சயமாகவே ஒரு நோக்கத்தைக் கொண்டவராக இருந்திருக்க வேண்டும். அவருடைய மகத்தான நோக்கங்களைப் பற்றி நாம் மேலுமதிகம் கற்று வருகையில், வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் இருக்கிறது என்று காண நாம் எதிர்பார்க்கலாம்.
பூமியில் ஜீவன் துவங்கிய விதம்
13 இப்பிரபஞ்சத்தின் வானவெளியிலிருக்கும் இந்தச் சிறு புள்ளியாகிய—பூமிக்குத்தானே—நாம் இப்பொழுது நம்முடைய கவனத்தைத் திருப்பலாம். இந்தப் பூமி ஒரு தனிப்பட்ட அழகை உடையதாய் இருக்கிறது. இது வண்ணம் நிறைந்ததாயிருக்கிறது. மேலும் அதிசயமான பல்வேறு வகைப்பட்ட உயிருள்ள பொருட்களால் செழிப்பாக்கப்பட்டிருக்கிறது. இதன் மேல் உயிர் இருக்கிறது. சந்திரனுக்கு பயணப்பட்ட வான வெளி வானோடிகளில் ஒருவன் இதைப் பின்வரும் வார்த்தைகளில் விவரித்தான்:
“இப்பிரபஞ்சம் முழுவதிலும் நாங்கள் பார்த்த இடத்திலெல்லாம், இந்தப் பூமி மாத்திரமே நிறத்தை உடையதாக இருந்தது. இங்கே நாங்கள் கடல்களின் திண்ணிய ஒளிர் நீல நிறத்தையும், நிலத்தின் மஞ்சள் பழுப்பு மற்றும் காவி நிறங்களையும், மேகங்களின் வெண்ணிறங்களையும் பார்க்க முடிந்தது . . . வானங்களிலெல்லாம் இதுவே பார்ப்பதற்கு மிக அதிக அழகு வாய்ந்ததாக இருந்தது. இங்கே இருக்கிற மக்கள் தங்களுக்கு இருப்பதை மதித்துணராதவர்களாக இருக்கிறார்கள்.3
இந்தப் பூமி, இந்த மிகப் பரந்த பிரபஞ்சத்தில் ஓர் ரத்தினமாகத் தோன்றி நிற்கிறதென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. உண்மையில் அது உயிரினங்கள் நிறைந்ததாயிருக்கிறது. நிச்சயமாகவே இவ்வனைத்து உயிரினங்களிலும் ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அது என்னவென்பதை நாம் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கலாம்.
14 உயிர் எங்கிருந்து வந்ததென்று கண்டுபிடிப்பது மிகக் கடினமாக இல்லை. பைபிள் எழுத்தாளன் ஒருவன் 3,000 ஆண்டுகளுக்கு முன்பாகப் பின்வருமாறு கூறுகையில் உயிரின் அந்த மூலகாரணரைக் குறிப்பிட்டுக் காட்டினான்:
“கடவுளே, உமது கிருபை [அன்புள்ள இரக்கம்] எவ்வளவு அருமையானது! . . . உம்மிடத்திலேயே ஜீவ ஊற்று இருக்கிறது; உமது வெளிச்சத்திலே வெளிச்சம் காண்போம்.”—சங்கீதம் 36:7, 9, தி.மொ.
பைபிளைப் பிடிவாதமாய் குறை கண்டுபிடிக்கும் சிலருங்கூட கடவுளே உயிரின் மூல காரணர் என்று ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாய் இருந்திருக்கிறார்கள். பரிணாமக் கோட்பாட்டாளனாகிய டார்வினுங்கூட, தொடக்கத்தில் உயிர் சிருஷ்டிகரால் ஒருசில உருவங்களுக்குள் அல்லது ஒன்றுக்குள் ஊதப்பட்டிருக்க”5 வேண்டுமென்று ஒப்புக்கொண்டான். ஆனால் கடவுள் “ஒரு சில உருவங்களுக்குள்” உயிரை ஊதக்கூடுமென்றால், அதே விதமாய் ஆயிரக்கணக்கான சிருஷ்டிக்கப்பட்ட “வகைகளுக்குள்,” அதனதன் முறையில் அவர் ஏன் அதை ஊதமாட்டார்? இதையே அவர் செய்தார் என்று பைபிள் சொல்லுகிறது! உயிருள்ள ஒவ்வொன்றையும் “அதனதன் வகைப்படி” அவர் சிருஷ்டித்தார். (ஆதியாகமம் 1:12, 21, 24, 25) முதல் மனிதனைக் கடவுள் சிருஷ்டித்தது பின்வரும் இவ்வார்த்தைகளில் விவரிக்கப்பட்டிருக்கிறது:
“கடவுளாகிய யெகோவா மனிதனைத் தரையினின்றெடுத்த மண்ணினால் உருவாக்கி ஜீவ சுவாசத்தை அவன் நாசியில் ஊதினார். அப்படியே மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான்.”—ஆதியாகமம் 2:7.
பைபிளின்படி, அவ்வாறே மனித உயிர் இங்கே வந்தது, 6,000 ஆண்டுகளுக்கு முன்புதானே—கடவுளுடைய நேரடியான சிருஷ்டிப்பின் மூலமாய் உண்டாயிற்று. வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் இருக்கிறது என்பதை மதித்துணர இந்த உண்மையை நாம் விளங்கிக்கொள்வது இன்றியமையாதது.
15 சிருஷ்டிப்பை பற்றிய பைபிளின் நேர்முகமான இந்த விவரத்திற்கு எதிர்மாறாக பரிணாமக் கோட்பாட்டாளரின் விளக்கங்களில் சில, வாசிப்பதற்கு விசித்திரக் கற்பனைகளைப்போல் இருக்கின்றன. உதாரணமாக, ஒரு பரிணாமக் கோட்பாட்டு விஞ்ஞானி பின்வருமாறு எழுதுகிறான்:
“முன்னொரு காலத்திலே வெகு காலத்திற்கு முன்பு, ஒருவேளை இருநூற்றைம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பாக, கொடிய சூரியனுக்குக் கீழ், நவச்சார ஆவி கரைந்திருந்ததும் அதன் மேல் நச்சுக்காற்று மூடியிருந்ததுமான ஒரு சமுத்திரத்தில், உயிரியல் கவியலான கூட்டணுக்களின் ஒரு குழம்பின் மத்தியில்; எவ்விதமோ தன்னைப்போன்று மற்றொன்றை உண்டாயிருக்கச் செய்யக்கூடிய—மேலும் இதிலிருந்து மற்ற எல்லாம் பின் தொடர்ந்து வரும் ஓர் அணுக்கரு அமிலக் கூட்டணு தற்செயலாய் உண்டாயிற்று!” (தடித்த எழுத்துக்கள் கூட்டப்பட்டன)5
இது உங்களை நம்பும்படிச் செய்கிறதா? பரிணாமக் கோட்பாட்டாளராகிய லெகோம்டி டு நூவே, ஒரே ஒரு புரத கூட்டணு, ஆதரவான நிலைமைகளின்கீழ் பூமி அளவான இரசாயனங்களின் ஒரு சமுத்திரத்தில், தன்னைத்தானே உண்டுபண்ணக்கூடிய அந்தச் தற்செயல் நிகழ்ச்சியின் சாத்தியக் கூற்றை கணக்கிட்டார். அது 10 243 பில்லியன்கள் (அதாவது இலக்கமாகிய 1-க்குப் பின்னால் 243 பூஜ்யங்கள் பின்தொடரும். அத்தனை ஆயிரங் கோடிகள்) ஆண்டுகளில் ஒரே ஒரு தடவை மாத்திரமே நேரிடக்கூடும் என்று அவர் சொன்னார்.6 என்றபோதிலும், ஓர் உயிருள்ள செல் (உயிரணு) ஒரு புரத கூட்டணுவால் அல்ல. ஆயிரக்கணக்கான புரத கூட்டணுக்களாலும், அதோடுகூட வேறு பல சிக்கலான பொருட்களாலும் ஆகியதாக இருக்கிறது! நிச்சயமாகவே உயிர் தற்செயலாக உண்டாகவில்லை!
16 பரிணாமக் கோட்பாட்டில் உண்மை நிகழ்ச்சிகளுக்கு முரண்படுபவை மிகுதியாக இருக்கின்றன! உதாரணமாக, தாவரம், மிருகம், மனிதன் ஆகிய உயிருள்ள எல்லாவற்றைக் குறித்ததிலும், ஒவ்வொன்றும் அதனதன் இனப்படியே இனப் பெருக்கமுறக்கூடும் என்பது மாறாத பிறப்பு மூலத்துக்குரிய சட்டமாயிருக்கிறது. இந்த ஒவ்வொரு இனத்திற்குள்ளேயே மாற்றங்கள் இருக்கலாம். பற்பல வகை நாய்கள் இருப்பதில் இதைக் கவனிக்கலாம். என்றபோதிலும், நாய் இனம் எப்பொழுதும் நாய்களையே பிறப்பிக்கக்கூடும். அது பூனையுடனோ, அல்லது மற்ற இனங்களுடனோ கலப்புறச் செய்யப்பட முடியாது. பரிணாமக் கோட்பாட்டாளருக்கு மிகுந்த மனமுறிவுண்டாக, பாறைகளில் தங்கியிருக்கும் புதை படிவங்கள், இனங்களுக்கிடையே இருந்ததாகக் கூறப்பட்ட “காணாமற்போன இடையிணைப்புக்குரிய இனங்களை” அளிக்கத் தவறிவிட்டன. மேலும்—பரிணாமக் கோட்பாட்டாளர் பாராட்டுவதற்கு நேர்மாறாக—“வகை மாற்றங்கள்” (மாறுதலடைந்து புது உயிரினம் தோன்றுதல்) அல்லது உயிர்மங்களாலான மாற்றங்கள் அநேகமாய் எப்பொழுதும் தீங்குள்ளவையாய் இருக்கின்றன; மனிதவர்க்கத்தின் காரியத்தில் விகாரத் தோற்றத்துடன் கூடிய அறிவிலிகளை அல்லது மற்றக் குறைபாடுகளுள்ள மனிதரையே உண்டுபண்ணுகின்றன. பிரசித்திப்பெற்ற விஞ்ஞானிகளில் சிலர் பரிணாமக் கோட்பாட்டைக் “கற்பனைக் கதை,”7 “புத்திக்கூர்மையான மதிப்பீடு,”8 “விஞ்ஞான பெயரின் கீழ் பொய்த் தோற்றம் கொள்ளும்படி செய்யப்பட்டிருக்கிற மிகப் பெரிய பொய் கதை”9 என்பவற்றைப் போன்ற சொற் கூற்றுகளால் இப்பொழுது விவரிப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.
17 ஆனால் மனிதன்தானேயும் “கற்பனை”யாக இல்லை. அவன் உயிர் வாழ்கிறான். அறிவுத்திறம் வாய்ந்த ஒழுக்க சிருஷ்டியாக, “கடவுளுடைய சாயலில்” உண்டாக்கப்பட்டு மனச்சாட்சியால் ஆளப்பட்டு அவன் வாழ்ந்திருப்பதுதானேயும் எல்லா கீழான உயிரினங்களிலிருந்தும் அவனை முற்றிலும் தனியே பிரித்து வைக்கிறது. ஆகையால், மிருகங்களைப் போல் வெறுமென உயிரைக்காத்து வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கிலும் இன்னும் அதிகம் வாழ்க்கைக்கு இருக்கவேண்டும். கடக்கமுடியாத ஒரு மிகப்பெரிய பிளவு மனிதனை மிருகங்களிலிருந்து தனியே பிரிக்கிறது. எந்த மிருகம், அதன் ஒவ்வொரு இளங்கன்றையும் பராமரித்து பயிற்றுவிப்பதில் இருபது ஆண்டுகள் அளவான ஒரு காலப்பகுதியை செலவிடுகிறது? மனிதன் மாத்திரமே அன்பு, பரிவு, முன்னோக்கு, புதிதாகக் கண்டுபிடித்தல், மேலும் அழகு, கலைகள், இன்னிசை முதலியவற்றிற்கான மதித்துணர்வு ஆகிய இந்த அதிசயமான பண்புகளை உடையவனாகவும் பயன்படுத்துகிறவனாகவும் இருக்கக்கூடும். இவ்வளவு நிறைவான முறையில் அமைக்கப்பட்டிருப்பதற்காக நன்றியுள்ளவர்களாய், உயிரை நேசிக்கிற மனிதர் எல்லாரும், பூர்வ அரசனாகிய தாவீது வெளிப்படுத்திக்கூறும் பின்வரும் கூற்றில் அவனோடு சேர்ந்துகொள்ள வேண்டுமல்லவா? “யெகோவாவே, . . . நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டுபண்ணப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்.”—சங்கீதம் 139:4, 14.
“பரிணாம”க் கோட்பாடு வாழ்க்கைக்கு என்ன செய்திருக்கிறது
18 பரிணாமக் கோட்பாடு இன்று இத்தனை அநேக ஆட்களால் வெகு எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதேன்? ஒரு காரணமானது அதோடு சேர்ந்து செல்வது ஒருவனுக்கு காலத்துக்கேற்ற புது நடைப் பாணியாகவும் பொதுமக்கள் சுவைக்கேற்ப இசைந்துபோகும் காரியமாகவும் இருந்திருக்கிறது. மேலும், சிருஷ்டிகருக்கோ அவருடைய நீதியொழுக்கச் சட்டங்களுக்கோ உத்தரவாதத்தை உணராமல் ‘தங்கள் சொந்த போக்கில் செல்ல’ விரும்புகிற சுயேச்சையான அல்லது ஒழுக்கக்கேடான நடத்தையுள்ள ஆட்களுக்கு தப்பிப்போகும் ஒரு வழியை இது அளித்திருக்கிறது. ‘சரித்திர சுருக்கம்’ என்று ஆங்கிலத்தில் தலைப்பு கொண்ட புத்தகத்தில், H.G. உவெல்ஸ் என்பவர் இந்தப் பரிணாமக் கோட்பாடு எப்படி உற்பத்தியாயிற்று என்று விவரித்து பின்வருமாறு சொல்லுகிறார்: “பழைய நல்லொழுக்க மாறாத நிலைகளை மாற்றி பதிலீடு செய்வதற்கு இது கட்டியெழுப்பும் எதையும் கொண்டுவரவில்லை . . . ஒரு மெய்யான ஒழுக்கக் கட்டுணர்ச்சி சிதைவே விளைவாயிற்று.”10 வாழ்க்கையை வாழத்தக்கதாக்குவதை நோக்கி அது எவ்வித உதவியும் செய்யவில்லை.
19 சரித்திராசிரியனாகிய உவெல்ஸ் பரிணாம போதகத்தின் மேலுமான விளைவைக் குறித்து பின்வருமாறு சொல்லுகிறான்: “மிகுந்த செல்வாக்குள்ள ஆட்கள் . . . தாங்கள் பிழைத்திருப்பதற்குப் போராடின திறத்தின் பயனாக மேலோங்கி செல்வாக்குப் பெற்றதாகவும், இதில் பலவான்களும் தந்திரமுள்ளவர்களும், பலவீனராயும் முழுவதும் நம்பிவிடுகிறவர்களாயும் இருக்கிறவர்களுக்கு மேல் மேம்படுவதாகவும் நம்பினர் . . . ஆகையால் மனிதத் தொகுதியில் பெரிய வேட்டை நாய் போன்றவர்கள் எளியவர்களைக் கொடுமை செய்து கீழ்ப்படுத்த வேண்டுமென்பது அவர்களுக்குச் சரியாகத் தோன்றினது.” இவ்வாறு பரிணாமக் கொள்கையானது, கொடுமை மிகுந்த போர் செய்வதற்கு “கிறிஸ்தவ மண்டலத்திற்கு” சுய சாக்குபோக்கு விளக்கத்தை அளித்தது. பரிணாமமும் கிறிஸ்தவர்களும் என்ற ஆங்கில புத்தகம், 1914-ல் நடந்த முதல் உலகப் போரின் அவல நிகழ்ச்சியையும் பின்னால் நாஜி கோட்பாட்டின் மட்டுக்கு மீறிய கொடுமைகளையும் டார்வினுடைய போதகத்தின் விளைவென்பதாகக் கற்பித்துக் கூறுகிறது.12 இதே விதமாய், கம்யூனிஸம் எழும்பினதற்கும் பரிணாமக் கோட்பாடு அதன் உத்தரவாதப் பங்கை ஏற்கவேண்டும். உயிரினவகை வேறுபாட்டுத் தோற்றம் என்ற டார்வினுடைய புத்தகத்தை வாசிக்கையில் கார்ல் மார்க்ஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதை அவன், கடவுளுக்கு “மரண அடியைக்” கொடுப்பதாக விவரித்தான்.13 மேலும் அவன் கூறினதாவது:
“டார்வினுடைய புத்தகம் அதிக முக்கியமானது, சரித்திரத்தில் சமுதாயப் பிரிவு போராட்டத்திற்கு ஓர் அடிப்படையாக எனக்குச் சேவை செய்கிறது.”14
இந்நாள் வரையாக, கம்யூனிஸ நாடுகள் உலக ஆதிக்கத்தை அடையவேண்டுமென்ற தங்கள் இலக்கை பரிணாமக் கோட்பாடு போதகமாகிய “தகுதியுடைய உயிர்கள் எஞ்சி வாழ்தல்” என்றதன் அடிப்படையின் பேரிலேயே நாடித் தொடருகின்றன. மற்ற நாடுகள் தாங்கள் பிழைத்து வாழ வேண்டுமென்பதற்காகப் போரில் சேர்ந்து கொள்ளுகின்றன. அதன் விளைவே இந்த அணுசக்தி சகாப்தத்தின் பெரும்படியான போராயுதப் போட்டியாகும். மனிதவர்க்கம் முழுவதன் உயிரும் ஆபத்தில் இருக்கிறது.
20 இது உங்கள் சொந்த வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது, இந்த பரிணாமக் கோட்பாட்டில் சிக்கிக்கொள்வது உங்களுக்குத் தனிப்பட்ட விதமாய்த் தீங்குண்டாவதாக இருக்கக்கூடும். பரிணாமம் உண்மையென்றால், வாழ்க்கை நோக்கமற்றதாகவும் அர்த்தமில்லாததாகவும் ஆகிவிடும். அது வெறுமென பிழைத்து வாழ்வதற்குப் போட்டியிட்டு ஓடிக் கொண்டிருப்பதாயும், மரணத்தையே கடைசி பலனாகக் கொண்டிருப்பதாயும் இருக்கும். “மிகத் தகுதி பெற்றது தப்பிப் பிழைத்தல்” என்பதில் நம்பிக்கை வைப்பதனால் இந்தப் பரிணாமக் கொள்கைக்காரனுக்கு தன்னுடைய உடன் தோழனாகிய மனிதனை நேசிப்பதற்கோ, நற்பாங்குடைய ஒழுக்கநெறியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கோ, பகுத்தறிவில்லா முரட்டு மிருகங்களிலிருந்து வேறுபட்ட முறையில் நடந்துகொள்வதற்கோ எவ்விதத் தூண்டுதலும் இல்லாதிருக்கிறது. பரிணாமக் கொள்கையானது முற்றிலும் எதிர்மறையான முறையில் மனிதவர்க்கத்தைப் பாதிக்கிறது. வாழ்க்கையைப் பற்றிய கேள்விகள் எதற்கும் திருப்திகரமான ஒரு பதிலை அது கொடுக்கமுடியாது. பைபிளோ அவற்றிற்குப் பதில்களைக் கொடுக்கக்கூடும்.
வாழ்க்கை ஏன் இவ்வளவு பிரச்னைகளால் நிரம்பியிருக்கிறது?
21 இந்த நிலைமையை ஒரு குடும்பம் அழகிய நெடுஞ்சாலை வழியே பயணப்படுவதற்கு ஒப்பிடலாம். இது மிகச் சிறந்த ஒரு பரதீஸின் வழியாகச் செல்லுகிறது. ஒரு நல்ல பயணத்திற்கு எல்லாம் அனுகூலமாய் இருக்கிறது. என்றபோதிலும், பக்கத்தில் ஒரு விசாலமான பாதையையும், அதில்: “அபாயம்—உட்பிரவேசியாதே” என்ற ஓர் எச்சரிப்புக் குறியையும் காண்கிறார்கள். அதைப்பற்றி அறிய வேண்டுமென்ற ஆசையும் சுதந்தர மனப்பான்மையும் அவர்களை மேற்கொள்ளுகின்றன. அவர்கள் அந்தப் பாதைக்குள் பிரவேசித்து நெடுஞ்சாலையை விட்டு மேலும் மேலும் தொலைவாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். கடைசியில், கீழே செல்லும் ஒரு செங்குத்து சரிவுக்கு வருகிறார்கள். இப்பொழுது அவர்கள் தடுத்து நிறுத்தமுடியாமல் தள்ளிக்கொண்டு செல்லும் நிலையில் பயணப்படுகிறார்கள். திரும்ப அந்த நெடுஞ்சாலைக்கு திரும்பி வந்து சேர்வது அவர்களுக்கும் கூடாத காரியமாய் விட்டிருக்கிறது. தடுப்புக் கருவிகள் கெட்டுப் போய்விட்டன. நிறுத்த முடியாத நிலையாய்விட்டது. அவர்கள் மேலும் மேலும் வேகமாகக் கீழ்நோக்கிச் சரிந்துகொண்டே போகின்றனர். கடைசியாக ஒரு செங்குத்தான பாறையின்மேல் மோதி நொறுங்கி அழிந்துபோகின்றனர்.
22 மனிதவர்க்கத்தைக் குறித்ததிலும் இவ்வாறே இருப்பதாக பைபிள் காட்டுகிறது. ஏதேன் தோட்டத்தில் கடவுள் முதல் மனிதனுக்காக ஒரு பாதை எச்சரிப்புக் குறியை வைத்தார். அதாவது: ‘இந்த ஒரு பழத்தை நீ சாப்பிடக்கூடாது’ என்பதே. அந்த மனிதனும் அவனுடைய மனைவியும் இந்த எளிதான கட்டளைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் கடவுளுக்கு தங்கள் அன்பைக் காட்டும்படி கேட்கப்பட்டனர். ஆனால் அப்படிச் செய்ய அவர்கள் தவறினர். அவர்கள் தெரிந்து வேண்டுமென்றே நெடுஞ்சாலையை விட்டு விலகி அலைந்து, கடவுளுடைய நியாயத்தீர்ப்பின்கீழ் மரணத்தையும் அழிவையும் அடையும்படி வழிநடத்துகிற பாவ பாதைக்குள் பிரவேசித்தனர். ரோமர் 5:12-ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “ஒரே மனுஷனால் பாவமும் பாவத்தினால் மரணமும் உலகத்தில் வந்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் பரவினது.” இவ்வாறாக, நாம் கீழ்ப்படியாத ஆதாமின் சந்ததியாராக இருப்பதால்; நாம் எல்லாரும் இந்த விரும்பத்தகாத பாதையில், மனித குடும்பத்தின் அந்தப் பெற்றோர் பரதீஸில் அனுபவித்து மகிழ்ந்த அந்தப் பரிபூரணத்திலிருந்து தூர விலக்கப்பட்டவர்களாய்ப் பிரயாணப்பட வேண்டியதாக இருந்திருக்கிறது. சமீப ஆண்டுகளில் இந்தப் பாதை, ஆ, எவ்வளவு ஆட்டி அலைப்பதாகவும் வெறுப்பு விளைவிப்பதாகவும் ஆகிவிட்டிருக்கிறது! அது திரும்பி வரமுடியாத ஒரே திசைப் போக்காயுள்ள விசாலமான பாதை, இவ்வுலகத்தின் அரசியல்வாதிகள் அல்லது ஞானிகள் ஒருவருமே திரும்பி வரும் வழியை மனித குடும்பத்திற்குக் காட்டமுடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். அதில் செல்லும் ஒவ்வொரு ஆளுக்கும் அந்தப் பாதையின் முடிவு மரணமே. மனிதவர்க்க உலகம் முழுவதன் அழிவு தெளிவாகத் தெரியும் சாத்தியமாகிவிட்டிருக்கிறது.
23 ஆனால், இதோ! ஓர் ஒளிக்கதிர் ஒரு பக்கப்பாதை வழியாகப் பிரகாசிக்கிறது. அந்த விசாலப் பாதையிலிருந்து நெடுஞ்சாலைக்குத் திரும்ப வழிநடத்துகிற குறுகிய ஒரு பாதை. முதல் பார்வையில், அது மட்டுக்கு மீறி இடுக்கமாய்த் தோன்றுகிறது. அதற்குள் திரும்பிப் போவது கடினமாயிருக்கும். விசாலமான பாதை வழியாக, விளைவைப் பற்றிக் கவலைப்படாமல் துணிந்து பயணப்பட்டுக்கொண்டிருக்கிற மக்களின் இந்தப் பெருங்குடும்பம் இந்த குறுகிய பாதையைக் கண்டும் காணாததுபோல் இருந்துவிட தெரிந்துகொள்கின்றனர். பொது கூட்டத்தோடு சேர்ந்து சென்று கொண்டிருப்பதையே மேலாக விரும்பித் தெரிந்துகொள்கின்றனர். வசதிக்காகவும் அது அளிக்கிற தற்காலிகமான கிளர்ச்சிகளுக்காகவும் மிகப் பெரும்பான்மையான மக்கள் அந்த விசாலமான பாதையிலேயே தொடருகின்றனர். எதிரேயுள்ள அபாயத்தைப் பற்றிய மேலுமான எச்சரிக்கைகளுக்கு அவர்கள் செவி கொடுக்கிறதில்லை. என்றாலும் விழிப்புள்ள சில ஆட்கள் அந்த குறுகிய பாதைக்குள் செல்லும்படி திரும்புகின்றனர். அது அவர்களுக்குச் சில இன்னல்களை அளிப்பதாய் இருக்கிறது. அவர்கள் விழிப்பாய் இருக்கவேண்டியதாக இருக்கிறது. ஆனால், காலப்போக்கில் அது பயணப்படுவதற்கு இன்பமானதாகிவிடுகிறது. முடிவில் அது அவர்களைத் திரும்பக் கொண்டுவரப்பட்ட நிறைவான பரதீஸுக்கு வழிநடத்துகிறது. அந்த மகிழ்ச்சி நிரம்பிய சமாதானமுள்ள பரதீஸில் தங்கள் கண்கள் நிறைவாய் மகிழ்ந்து களிகூரச் செய்வது ஆ, அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட இன்பமாய் இருக்கிறது!
24 மறுபடியுமாக, பைபிள் காட்டுகிறபடி, மனித குடும்பத்தைக் குறித்ததில் இதுவே உண்மையாய் இருக்கிறது. பெரும்பான்மையர் தங்கள் சுதந்தரத்தை வற்புறுத்தி, அழிவுக்குச் செல்லும் அந்த விசாலமான பாதையில் பயணப்படுகிறவர்களாய் அந்தப் பொதுக்கூட்டத்தோடு சேர்ந்து சென்றுகொண்டிருக்கையில், திரும்பிவரும் ஒரு வழி திறக்கப்பட்டிருக்கிறது. கடவுளுடைய குமாரனாகிய இயேசு இங்கே இந்தப் பூமியில் இருக்கையில் இதற்குக் கவனத்தை இழுத்து, பின்வருமாறு கூறினார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.” (யோவான் 14:6) இயேசு மனித குடும்பத்திற்காகத் தம்முடைய உயிரையுங்கூட பலி செலுத்துகிறவராய் பூமியில் கடவுளுடைய சித்தத்தை உண்மையுடன் நிறைவேற்றினதனால், கடவுள் அவரை “உயிரின் தலைமை செயல் முதல்வராக” இருக்கும்படி நியமித்தார். மேலும், “சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க”வும் கடவுளுடைய நோக்கங்களைத் தெரியப்படுத்தவும் அவர் இந்த உலகத்திற்குள் வந்தார். (அப்போஸ்தலர் 3:15; யோவான் 18:37) கடவுளுடைய பூமிக்குரிய பரதீஸில் சந்தோஷ வாழ்க்கையை முழு நிறைவாய் அனுபவித்து மகிழும்படி வழிநடத்திச் செல்லுகிற அந்த அழகிய நெடுஞ்சாலைக்குத் திரும்பிச் செல்லும் அந்த வழியை மனித குடும்பத்தின் அங்கத்தினருக்கு அவர் ஒருவரே காட்டக்கூடியவராக இருக்கிறார்.
25 பரிபூரண சுகத்துடனும் சந்தோஷத்துடனும் என்றுமாக வாழும் எதிர்பார்ப்புடன் கூடிய மிகமிக அழகியதாக்கப்பட்ட ஒரு பூமிக்குள் செல்லும் வரையிலுமாக இப்பேர்ப்பட்ட ஒரு நெடுஞ்சாலையில் பயணப்பட நீங்கள் விரும்புவீர்களா? மெய்யாகவே, இந்த வகையான வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் இருக்கும்!
26 கடவுள் நியமித்திருக்கிற உயிரின் தலைமை செயல் முதல்வரில் விசுவாசம் வைத்து, செயலில் காட்டுவதன் மூலம் அந்த உயிரை அடைவதற்கான வழியை நாம் கண்டடையக்கூடும். வாழ்க்கைக்கு நோக்கம் இருக்கையிலும், எதிர்காலத்திற்குள் வெகுதூரம் நீடித்துச் செல்லும் திருப்திகரமான மற்றும் நற்பலனளிக்கும் வாழ்க்கையை வாழ்வதற்குரிய உறுதியான நம்பிக்கையும் இருக்கையில் வாழ்க்கை மிகவும் வேறுபட்டதாய் இருக்கிறது. இந்த நம்பிக்கையின் உண்மை நிறைவேற்றத்தை நாம் எப்படி அடையக்கூடும். தம்முடைய தகப்பனிடம் செய்த ஜெபத்தில் இயேசு தாமே பின்வருமாறு பதிலளிக்கிறார்: “ஒன்றான (ஒரே) மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) வேத எழுத்துக்களைத் தளராமல் முயற்சி எடுத்து ஆராய்வதன் மூலம் நாம் சத்தியத்தைக் கற்றுக்கொள்ளலாம்; மேலும் அதை அனுதினமும் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம், நாம் இப்பொழுதேயுங்கூட உண்மையில் வாழ்வதற்கு தொடங்கக்கூடும்!
உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் உலக நிலைமைகள்
27 மறுப்புக்கிடமின்றி, உலக நிலைமைகள் மோசமாகிக் கொண்டே போகின்றன. பெரிய நகரங்களில் வறுமையும் பெருங்குற்றச் செயல்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும்சரி, உங்கள் உணவு பண்டங்களுக்கு அதிகத்தையும், உங்கள் இறைச்சிக்கு அதிகத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். மேலும் வெறுமென உங்களை உயிரோடு வைத்துக்கொள்வதற்கான செலவுங்கூட படிப்படியாய் ஏறிக்கொண்டேயிருக்கிறது. பல இடங்களில், அக்கிரமம் தெருக்களில் நடமாடிக் கொண்டிருக்கிறது. அதிகப்படியான வன்முறைச் செயல்களும் போருங்கூட திடீரென்று எந்தச் சமயத்திலும் தொடங்கக்கூடியவையாகத் தோன்றுகின்றன. மனிதவர்க்கம் அழிவடைவதற்கு, பாதையில் கீழ்நோக்கி மோதி வீழ்ந்து நொறுங்குவதற்கு, வேகமாய் விரைந்துகொண்டிருப்பதுபோல் இருக்கிறது.
28 இந்த எல்லாவற்றிற்கும் பின்னாலுள்ள சக்தி எது? அது ஒரு பொல்லாத ஆவி ஆளாகிய “உலகமனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்.” தேசங்களின் செயலாட்சிக்குப் பின்னால் இவன் செல்வாக்குச் செலுத்தி அவற்றை ஆட்டுவிக்கிறான். என்றபோதிலும், சாத்தானின் அதிகாரத்தை அகற்றி கிறிஸ்துவின் பரலோக ராஜ்யத்தின் மூலமாய் மனிதவர்க்கத்தின்மேல் இசைவு பொருந்திய அன்புள்ள ஓர் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான கடவுளுடைய காலம் வந்துவிட்டது. உயிரை நேசிக்கிறவர்களை, சந்தோஷ நிலையில் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழும்படி திரும்ப நேரே அந்த நெடுஞ்சாலைக்குக் கொண்டு வருவதற்கான அவருடைய காலம் இதுவே. ஆனால் சாத்தான் வெளியேற மறுக்கிறான். ஆகையால், இன்று, “பூமியில் . . . குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சங்கால மாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்து வரும்.” (வெளிப்படுத்துதல் 12:9, 12) மனிதவர்க்கத்தை அழிவுக்குள் ஆழ்த்த வேண்டுமென்பதே அவனுடைய இலக்கு.
29 இதைப்பற்றி எவ்வித சந்தேகமுமில்லை! இன்று பூமியில் நீங்கள் எங்கு பார்த்தாலும், “உலக முழுவதும் பொல்லாங்கனுக்குள்” அதாவது சாத்தானுக்குள் கிடக்கிறதென்பதற்கு அத்தாட்சி காணப்படுகிறது. (1 யோவான் 5:19) ஆனால் தன்னுடைய பொல்லாத நோக்கத்தில் சாத்தான் வெற்றியடைய கடவுள் அவனை அனுமதிக்கமாட்டார்! இந்த உலக சமுதாயத்தின் அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறதென்பது உண்மையே. என்றாலும், கடவுள் உயிர்களைக் காப்பாற்றும்படி நோக்கங்கொண்டிருக்கிறார். பைபிளில் எழுதப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களில், தாம் இதை எப்படிச் செய்யப்போகிறாரென்று அவர் காட்டுகிறார்.
உயிர்களைக் காப்பாற்றுவதற்கு பைபிள் தீர்க்கதரிசனம் எப்படி உதவி செய்கிறது
30 பைபிள் தீர்க்கதரிசனங்கள் பல கவனிக்கத்தக்க வண்ணமாய் ஏற்கெனவே ஒரு நிறைவேற்றமடைந்துவிட்டன. உதாரணமாக, இயேசு இந்தப் பூமியில் காணப்படுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தத் தீர்க்கதரிசனங்கள் அவருடைய பிரசங்க வேலைக்குரிய தேதிகளை நுட்பமாய்ச் சரியாக முன்னறிவித்தன—பொ.ச. 29-லிருந்து 33 வரை—இது மட்டுமல்லாமல் அவருடைய வாழ்க்கையையும் மரணத்தையும்பற்றிய ஏராளமான நுட்ப விவரங்களையும் முன்னறிவித்தன. இவை யாவும் நிறைவேற்றமடைந்தன. மேலும், இயேசு தாமே, முக்கியமாய்க் கவனிக்க வேண்டிய சில தீர்க்கதரிசனங்களைக் கூறினார். இவற்றில் ஒன்று “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைப்” பற்றியது. இந்த முதல் நூற்றாண்டில் யூத காரிய ஒழுங்குமுறையில் கவனிக்கத்தக்க வண்ணமாய் நிறைவேற்றமடைந்தது.
31 மத்தேயு 24:3, 15-22-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறபடி, “பாழாக்குகிற அருவருப்பு” ஆகிய ரோமப் பேரரசின் சேனைகளால் எருசலேம் முற்றுகையிடப்படும் என்பதை இயேசு, முன்கூட்டியே சுட்டிக் காட்டினார். கிறிஸ்தவர்கள் இதைக் காண்கையில் “தாங்கள் மலைகளுக்கு ஓடிப்போகத்” தொடங்கவேண்டும் என்று தம்முடைய தீர்க்கதரிசனத்தில் அவர் கூறினார். முப்பத்திநான்கு ஆண்டுகளுக்குப் பின்னால், இந்தச் சேனைகள் உண்மையில் வந்தபோது இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் பல அம்சங்களை நிறைவேற்றின. அவற்றில் சில “கூர்ந்த கம்பங்களால் காவலரண் போட்டு” நகரத்தைச் சுற்றி வளைந்து கொண்டது. “பரிசுத்த ஸ்தலத்தில்” தானேயும் நிற்கும்படி எருசலேமின் ஆலய மேற்கு மதில் வரையாகவும் உட்புகுந்தது ஆகியவை. (லூக்கா 19:43; மத்தேயு 24:15) ஆனால் வெளியேறக் கூடாததாகக் காணப்பட்ட இந்த சூழ்நிலைமைகளில் கிறிஸ்தவன் நகரத்தைவிட்டு எப்படி வெளியேறக்கூடும்?
32 திடீரென்று, வெளிப்படையான எந்தக் காரணமுமில்லாமல் இந்த ரோம சேனைகள் பின்வாங்கிப் போய்விட்டன! இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிதலாக, கிறிஸ்தவர்கள் தங்கள் உயிருக்காக யோர்தான் நதிக்கு அப்புறத்திலுள்ள மலைகளுக்கு இப்பொழுது ஒடிப்போகக்கூடியவர்களாக இருந்தார்கள். பின்னால், இந்த ரோம சேனைகள் சேனாதிபதி டைட்டஸின் கீழ் திரும்பி வந்தன. பொ.ச. 70-ல் எருசலேமும் அதன் ஆலயமும் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. சரித்திராசிரியனாகிய ஜொஸிபஸ்ஸின்படி முற்றுகையும், பஞ்சமும் பட்டயமும் 11,00,000 தேசாபிமான யூதர்களின் உயிர்களைப் போக்கின, 97,000 பேர் கைதிகளாக அடிமைத்தனத்திற்குட்பட கடத்திக்கொண்டு போகப்பட்டார்கள். ஆனால் பைபிள் தீர்க்கதரிசனத்திற்குக் கீழ்ப்படிவதன்மூலம் உண்மையில் உயிரை நேசித்தவர்கள் உயிர் தப்பிப்பிழைத்தார்கள்.
33 முன்னறிவிக்கப்பட்ட இந்த முதல் நூற்றாண்டு சம்பவங்களை பொ.ச.1914 முதற்கொண்டுள்ள இந்தச் சந்ததியில் சம்பவிக்கப்போவதாக இருந்த உலகத்தை அதிரச் செய்யும் சம்பவங்களின் ஒரு மாதிரியாக உபயோகித்துக் கொண்டிருந்தார். உயிர்கள் இன்றுங்கூட காப்பாற்றப்பட வேண்டியது அவசியமாய் இருக்கிறது! ஏனென்றால், இப்பொழுது நாம் “இந்தக் காரிய ஒழுங்குமுறையின்” அதாவது சாத்தானின் ஆதிக்கத்தின் கீழுள்ள இந்த முழு உலக ஒழுங்குமுறையின் “முடிவை” வந்தடைந்திருக்கிறோம். 1914 முதற்கொண்டு நடந்துவரும் சம்பவங்கள் இவ்வாறு இருப்பதாக ஆ, எவ்வளவு தெளிவாய் நிரூபிக்கின்றன! இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் கடைசி நிறைவேற்றமாக இந்த ஆண்டு, முதல் உலக யுத்தத்தின் இரத்தக் குளிப்பில் “ஜனத்துக்கு விரோதமாய் ஜனம்” எழும்புகையில் “வேதனைகளுக்கு ஆரம்பத்தைக்” கண்டது. முன்னறிவிக்கப்பட்டபடி “மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும்” இதைப் பின்தொடர்ந்தன. இந்த முதல் உலக யுத்தத்தைப் பார்க்கிலும் மிக அதிகப் பயங்கரமான ஓர் இரண்டாம் உலக யுத்தம் பின்தொடர்ந்தது, மேலும் “அக்கிரமம் மிகுதியாவது” இப்பொழுது பூமியைத் தொல்லைப்படுத்திக்கொண்டிருக்கிறது. (மத்தேயு 24:7-13; லூக்கா 21:10, 11) தேசங்கள் தத்தளிக்கின்றன. அவற்றில் எதற்குமே வெளியேற வழி தெரியவில்லை.
34 ஆனால் கடவுளுக்குத் தெரியும்! பூமியின் தன்னல ராஜ்யங்களை அல்லது தேசங்களைத் தாம் நியாயந்தீர்ப்பதைப் பற்றிப் பேசுகிறவராய், கடவுள் தாம் “என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்” என்றும், “அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்” என்றும் அறிவிக்கிறார். (தானியேல் 2:44) பின்பு அது, இயேசுவின் ராஜ்ய ஆட்சியை ஏற்றுக்கொண்டிருக்கிற எல்லாருக்கும் சமாதான நிலைமைகளின்கீழ் உயிரை அளிக்கும். உயிரை நாடித் தேடுகிற இப்படிப்பட்ட ஆட்களுக்கு உதவி செய்ய, இன்று மெய்க் கிறிஸ்தவர்கள், இயேசுவின் அந்தப் பெரிய தீர்க்கதரிசனத்தின் மேலுமான பகுதியின் நிறைவேற்றமாக உயிரைக் காக்கும் ஒரு வேலையில் ஈடுபடுகிறார்கள். அதாவது: “ராஜ்யத்தின் இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் சகல ஜனங்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்” என்பதே.—மத்தேயு 24:14, NW.
35 நிச்சயமாகவே, இந்த “முடிவு” எப்பொழுதுதான் வரும் என்பதை அறிய நாம் மிக அதிக அக்கறைகொண்டவர்களாக இருக்கிறோம். ஏனெனில், நம்முடைய உயிர்தானேயும் மெய்யாகவே இதில் உட்பட்டிருக்கிறது! யோபு 24:1-ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “பழிவாங்கவேண்டிய அந்த நாள் சர்வ வல்லவருக்கு இரகசியமாக இல்லை, என்றாலும் அவரை அறிகிறவர்களுக்கு அதன் தேதியைப் பற்றிய குறிப்பு இல்லை.” (The New English Bible) அது மிக சமீபமாய் இருக்க வேண்டும்! ஏனெனில் பொ.ச. 1914-ல் “வேதனைகள்” தொடங்குவதைக் கண்ட ஆட்களைக் குறித்து இயேசு: “இவையெல்லாம் சம்பவித்துத் தீரும்வரை இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது” என்று சொல்லுகிறார். (மத்தேயு 24:34, தி.மொ.) “இவையெல்லாம்” என்பதில் இயேசு, இதைச் சொல்வதற்கு முன்புதானே விவரித்தபடி, இன்றைய சீரழிந்த சமுதாயத்தின் அழிவும் அடங்கியிருக்கிறது: “அக்காலத்தில் மிகுந்த உபத்திரவமுண்டாயிருக்கும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகமுண்டானது முதல் இந்நாள் வரையாகவும் நேரிட்டதுமில்லை; இனி நேரிடப்போவதுமில்லை. அந்நாட்கள் குறுக்கப்படாதிருந்தால் மாம்சமான எதுவும் தப்பிப்போவதுமில்லை. தெரிந்தெடுக்கப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறுக்கப்படும்.” (மத்தேயு 24:21, 22, தி.மொ.) “இந்த மிகுந்த உபத்திரவம்” குறுக்கப்படாதிருந்தால் மனிதவர்க்கம் தானாகவே, இந்தப் பூமியிலிருந்து அழிந்துவிடும்! ஆனால், சந்தோஷகரமாக, கடவுளை நேசிக்கிறவர்கள் எல்லாரும் உயிர் தப்பிப் பிழைத்திருக்கலாம். “யெகோவா, தம்மில் அன்பு கூருகிற யாவரையும் காப்பாற்றுவார்; தெய்வபயமற்றவர் யாவரையுமோ அழிப்பார்.” (சங்கீதம் 145:20) பைபிள் தீர்க்கதரிசனத்திற்கு நீங்கள் செவிகொடுப்பீர்களானால், நீங்களுங்கூட தப்பிப் பிழைத்து தொடர்ந்து வாழ்ந்திருப்பீர்கள்.
நித்திய ஜீவனடைவதற்குத் தப்பிப் பிழைக்கும் வழி
36 இந்தத் தப்பிப் பிழைக்கிறவர்களுக்குள் நீங்கள் இருப்பீர்களா? அழிவை நோக்கி விரைவாய்ச் சரிந்து செல்லும் அந்த விசாலமான பாதையைவிட்டு விலகுவீர்களா என்பதன் பேரில் இது சார்ந்திருக்கிறது. உயிருக்கு வழிநடத்துகிற பாதையின் வழி நெடுகிலும் இருக்கிற அந்த அறிவிப்புக் குறிகளுக்கு நீங்கள் கீழ்ப்படிவதன் பேரில் இது சார்ந்திருக்கிறது. நீங்கள் உண்மையில் வாழ விரும்புகிறீர்களென்றால், இது மட்டுக்குமீறி கடினமாக இல்லை. கடவுளையும் அயலானையும் நேசிக்கக் கற்றுக்கொள்வதை இது குறிக்கிறது. 1 யோவான் 5:3 சொல்லுகிற பிரகாரம், “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்பு கூருவதாம்.” அவர் நம்மிடம் எதிர்பார்க்கிற சில காரியங்கள் யோவானின் இந்த நிருபத்தில் (2:15-17-ல்) முன்னால் கூறப்பட்டிருக்கின்றன:
“உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூருவானானால் அவனில் பிதாவின் அன்பில்லை, ஏனெனில், உலகத்திலுள்ளதெல்லாம், மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவியத்தின் வீண் பெருமையெல்லாம் பிதாவுக்குரியதல்ல உலகத்திற்கேயுரியது. உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகிறது; கடவுளின் சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறான்.”
“அந்த மிகுந்த உபத்திரவத்தி”னூடாக முழுவதுமாய்க் கடந்து, திரும்பக் கொண்டுவரப்பட்ட பரதீஸுக்குள் செல்லுமளவாகக் கடவுளுடைய பாதுகாப்பையும் தயவையும் பெற்று, என்றென்றும் நிலைத்து வாழ்ந்திருக்கும்படி, நாம், கடவுள் வெறுக்கிற காரியங்களாகிய—இன ஒழுக்கக்கேடு, பேராசை, நேர்மையில்லாமை, பொய் சொல்லுதல், திருடுதல், இவ்வுலகத்தின் சண்டைச் சச்சரவுகள்—முதலியவற்றிலிருந்து விலகவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இப்பொழுதேயுங்கூட நாம் வாழ்க்கையை வாழத்தகுந்ததாக்கக்கூடும்.
37 தம்முடைய சீஷர்களைக் குறித்து இயேசு தாமேயும் பின்வருமாறு கூறினார்: “நான் இந்த உலகத்தின் பாகமானவனல்லாதது போலவே, அவர்களும் இந்த உலகத்தின் பாகமானவர்களல்லர்.” (யோவான் 17:16; NW) இதை நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்படிப் பொருத்திப் பிரயோகிக்கிறோம்? அதன் கடவுளும் அதிபதியுமாகிய, “பொல்லாங்கனான” சாத்தானின் கீழ் உண்மையில் அழிவுக்கு முன்னேறிக்கொண்டிருக்கிற உலகத்தின் குறிக்கோள்களிலிருந்தும் திட்டங்களிலிருந்தும் நாம் நம்மை விலக்கிப் பிரித்துக்கொள்ள வேண்டுமென்று இது அர்த்தங்கொள்ளுகிறது. நம்முடைய அன்றாடக வாழ்க்கையில், கடவுளுடைய சட்டத்திற்கு முரண்படுகிற உலக நடவடிக்கைகளில் நாம் பங்குகொள்ளாதவர்களாக இருக்க வேண்டும். மத்தேயு 24:3-ம் 25:31-ம் காட்டுகிறபடி, “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவி”னுடைய அடையாளமானது பரலோகத்தில் ராஜ்ய வல்லமையில் இயேசுவின் “வந்திருத்தலு”க்குங்கூட அடையாளமாக இருக்கிறது. ஆகையால், 1914-ம் ஆண்டு முதற்கொண்டு “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும் (கடவுளுக்கும்) அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதா காலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்” என்ற இந்தத் தீர்க்கதரிசனமுங்கூட நிறைவேற்றப்பட்டிருக்கிறது. (வெளி. 11:15) இதுவே அந்த ராஜ்யத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கான காலம்! நம்முடைய எதிர்கால வாழ்க்கை கடவுளுடைய ராஜ்யத்தின் பேரில் சார்ந்திருக்கிறது. அப்படியானால், நாம் நம்முடைய கால யுத்தங்களையோ, புரட்சிகளையோ, அரசியல் கிளர்ச்சிகளையோ, உலக பிரகாரமான திட்டங்களையோ மனச்சாட்சியுடன் ஆதரிக்கக்கூடுமா? இவை தங்கள் குறிக்கோள்களில் தோல்வியடைவது நிச்சயம். ஏனென்றால் கடவுளுடைய ராஜ்யம் மாத்திரமே செய்யக்கூடியதைத் தாங்கள் செய்வதாக உரிமை பாராட்டிக்கொள்ளுகின்றன. அந்த முழு ஒழுங்குமுறையும் அழிவுக்குரிய தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் அதை ஒட்டிச் சரிசெய்ய முயலுவதில் ஏன் பங்குகொள்ள வேண்டும்? அதற்கு மாறாக, நித்திய பரிகாரமாகிய—கடவுளுடைய ராஜ்யத்திற்கு—முழு இருதயத்தோடு ஆதரவளிப்போம்!
38 இது நாம் அரசிலாக் கோட்பாட்டாளராக வேண்டுமென்று அர்த்தங்கொள்ளுகிறதா? இல்லவேயில்லை! ஏனெனில் “தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல் சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்.” (1 கொரிந்தியர் 14:33) இருந்துவரும் அரசாங்கங்கள் தொடர்ந்திருக்கும் வரையில், அவற்றின் சட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிந்து அவற்றின் ஆளும் அதிபதிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார். ரோமர் 13:1 பின்வருமாறு சொல்லுகிறது: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்.” இது, வரிகளைச் செலுத்துவதன் மூலமும், எல்லா சட்டங்களையும் அவை கடவுளுடைய சட்டத்திற்கு எதிர்ப்பாக இராத “நிபந்தனையின் பேரில் கைக்கொள்வதன் மூலமும் ‘இராயனுக்குச்’ (அரசாங்கத்திற்குச்) செலுத்த வேண்டியதை அவனுக்குச் செலுத்தவேண்டுமென்று அர்த்தங்கொள்ளுகிறது.”—மாற்கு 12:17.
39 மேலும் கடவுளை நேசிப்பதோடுகூட நம்முடைய அயலானுக்கும் நாம் அன்பு காட்டவேண்டும். நம்முடைய சொந்தக் குடும்பத்தில் தானேயல்லாமல் வேறு எங்கே நாம் இதை மேம்பட்ட முறையில் தொடங்கக்கூடும்! ஆனால் இதை நாம் எப்படிச் செய்யலாம்? கொலோசெயர் 3:18-21-ல் திருத்திய மொழிபெயர்ப்பு பைபிள் தெளிவாய் இதற்குப் பதிலளிக்கிறது:
“மனைவிகளே, ஆண்டவருக்குள் தகுந்தபடி உங்கள் புருஷருக்கு அடங்கியிருங்கள் (கீழ்ப்பட்டிருங்கள்). புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்பு கூருங்கள், அவர்கள் மேல் கசந்துகொள்ளாதிருங்கள். பிள்ளைகளே, பெற்றோருக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படியுங்கள்; இது ஆண்டவருக்கு உகந்தது. பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் மனந்தளர்ந்து போகாதபடி, அவர்களுக்கு எரிச்சலுண்டாக்காதிருங்கள்.”
ஒற்றுமைப்பட்ட ஒரு குடும்பத்தைக் கட்டியமைப்பதற்கு இது நிச்சயமாகவே ஒரு சிறந்த ஆதாரம்! குடும்பத்தில் மட்டுமல்லாமல், மற்ற எல்லாருடன் கொள்ளும் கூட்டுறவுகளிலும், நாம் இந்தப் பண்புகளாகிய “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும்” வளர்த்து வரலாம். மேலும் எல்லாவற்றிலும் முதன்மையானது எது? “இவை எல்லாவற்றிற்கும் மேலும் அன்பினால் உங்களை உடுத்துவித்துக்கொள்ளுங்கள், ஏனெனில் அது ஒற்றுமையின் பரிபூரண கட்டு.”—கொலோசெயர் 3:12, 14, NW.
40 கடவுளையும் அயலானையும் நேசிக்கிற இந்த அன்பைத் தங்கள் வாழ்க்கையில் உண்மையில் பொருத்திப் பிரயோகிக்கிற எந்த தொகுதியான ஆட்களாவது இன்று பூமியில் இருக்கிறார்களா? என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம். இப்படிப்பட்ட ஒரு தொகுதி இருக்கிறது. உங்களுடைய சுற்றுப்புறத்தில் ராஜ்ய மன்றம் ஒன்று இருக்கிறதென்றால் இவர்களைக் கண்டுபிடிக்க அவ்வளவு தூரம்தானே, நீங்கள் தேட வேண்டியதாயிருக்கிறது. இவர்கள் ஒரு அகில உலகத் தொகுதி, இலட்சக்கணக்கான எண்ணிக்கையானவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாகமாக அவர்கள் வெறும் சாதாரண மக்களே, தங்களுடைய சுற்றுப்புறத்தார் பெரும்பான்மையரிலிருந்து அனுபவ சூழ்நிலையில் வித்தியாசமானவர்களாக இல்லை, மேலும் சாதாரணமாய், அவர்களுடைய சமுதாயத்தில் மற்றவர்கள் செய்கிற அதே அன்றாடக வாழ்க்கைத் தொழில்களை அவர்கள் செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய முதல் அன்பை அவர்களுடைய கடவுளுக்கே அவர்கள் கொடுக்கிறார்கள். அவருடைய சித்தம் பூமியில் செய்யப்பட வேண்டுமென்று அவர்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறார்கள். அதற்கேற்றவாறு அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆகவே, பைபிளைப் படிப்பதிலும், அதன் நியமங்களைத் தங்கள் அனுதின வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிப்பதிலும், அதன் செய்தியைத் தங்கள் அயலாருக்குச் சொல்வதிலும் அவர்கள் மிகுந்த ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகள். உங்கள் சமுதாயத்திலுள்ள ராஜ்ய மன்றத்தில் நீங்கள் அவர்களைச் சந்தித்துப் பாருங்கள். அங்கே எந்த சடங்குமுறையோ, காணிக்கைத் தட்டுகளை நீட்டுதலோ, விறைப்பான வெறும் ஆசாரமோ இல்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்., இவற்றிற்குப் பதிலாக, இப்பொழுதுதானேயும் வாழ்கையில் பேரளவான திருப்தியை அடைந்துகொண்டிருக்கிறவர்களும், பரதீஸான ஒரு பூமியில் பரிபூரணத்தில் நித்திய “ஜீவனை அடையும்படி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறவர்களுமான அனலான இருதயமுள்ள மக்களை நீங்கள் காண்பீர்கள்.
41 இந்த நம்பிக்கையை உடையவர்களும் அதனால் வாழ்கிறவர்களுமான இந்த மக்களுடன் கூட்டுறவுகொள்ள நீங்கள் விரும்புவீர்களல்லவா? பைபிள் நியமங்களின்படி வாழ்வதன் மூலம் உண்டாயிருக்கிற உலகமெங்கும் விரிவான ஒற்றுமை அவர்களுக்கு இருக்கிறது. தேசங்கள் தீர்வு காண்பதில் வெற்றிபெற முடியாமல் நூற்றாண்டுகளாக உழைத்து வந்திருக்கிற, போர், ஜாதி வேறுபாடு, தேசாபிமான வெறி ஆகியவற்றைப் போன்ற பிரச்னைகளை இவர்கள் தங்கள் சொந்த தொகுதிகளுக்குள் தீர்த்திருக்கின்றனர். பைபிள் சொல்லுகிறபடி அவர்கள் வாழ்க்கை நடத்துவதனால் தங்களுக்குள் இவர்கள், அடிப்படையாய் வன்முறை, பெருங் குற்றச்செயல், நேர்மையில்லாமை, ஒழுக்கக்கேடு ஆகியவை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு விலகியவர்களாக இருக்கிறார்கள். சமுதாய பொல்லாங்குகளால் இவர்கள் வாதிக்கப்படுகிறதில்லை. இவர்களுடைய எண்ணிக்கையில் ஒருவன் மோசமாய்த் தவறு செய்துவிட்டாலும்—இது அரிதாக ஏற்படுகிறபோதிலும்—அவன் மனம் வருந்தி திரும்புகையில், அன்புடன் திரும்ப நிலைநிறுத்தப்படுவான். கடவுள், “மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே (ஒரே மனிதனிலிருந்து, NW) தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்”தார் என்று தெரிந்திருக்கிறவர்களாய் அவர்கள், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனைப்பற்றிய தங்கள் கருத்து, அவனுடைய சமுதாயநிலை, அவனுடைய கல்வி அல்லது அதனால் அவன் குறைவுபடுவது, அவனுடைய ஜாதி அல்லது அவன் தோலின் நிறம் ஆகியவற்றால், பாதிக்கப்பட அனுமதிக்கிறதில்லை.—அப்போஸ்தலர் 17:26.
வாழ்க்கைக்கு இன்னும் மிக அதிகம் இருப்பதேன்!
42 உயிரை நேசித்து தங்கள் உயிரைக் காக்கும்படி இப்பொழுது நடவடிக்கை எடுக்கிறவர்களுக்கு மிக மேன்மையான ஓர் எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த எதிர்காலம் எதைப்போல் இருக்கும்? இன்று மனித குடும்பத்தில் இத்தனையநேகர் அனுபவிக்கிற இந்தச் சலிப்பூட்டுகிற வாழ்க்கையைப்போல் சற்றும் இராது. “முந்தினவைகள்”—இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையின் துக்கம், மரணம், வேதனை ஆகியவை—ஒழிந்துபோய்விட்டிருக்கும்.” ஆகையால், எது இதைப் பின்தொடர்ந்துவரும்? கடவுள் தாமே அறிவிக்கிறார்: “இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்.” (வெளிப்படுத்துதல் 21:4, 5) அந்தப் புதிய காரிய ஒழுங்குமுறையில், பரலோக அரசராகிய இயேசு கிறிஸ்து, மனிதவர்க்கக் குடும்பம் முழுவதன் மீதும் ஒரு “நித்திய பிதா”வாக அன்புடன் ஆட்சி செலுத்துவார். “அவருடைய ராஜாதிகாரப் பெருக்கத்திற்கும் சமாதானத்திற்கும் முடிவில்லை.” நியாயமும் நீதியும் இந்த ராஜ்யத்தின் அஸ்திபாரங்களாக இருக்கும். (ஏசாயா 9:6, 7) இந்த நிலைமைகளின் கீழ் வாழ்க்கை ஆ, எவ்வளவு திருப்தி தருவதாயும் மகிழ்ச்சியனுபவமாயும் இருக்கும்! நம்முடைய உடன் தோழரான மனிதரிடம் அன்புள்ளவர்களாய், பூமியில் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் வாழ்க்கை ஒரு நோக்கத்தை உடையதாக இருக்கும். பிரேதக்குழிகளிலுள்ளவர்களுங்கூட “அவருடைய சத்தத்தைக் கேட்டு” அந்தப் பரதீஸான பூமியை அனுபவித்து மகிழும்படி வெளிவருவார்கள் என்று இயேசு நமக்கு நிச்சயமளிக்கிறார்.—யோவான் 5:28, 29.
43 இந்தத் “தற்போதைய பொல்லாத காரிய ஒழுங்குமுறை” அந்த விசாலமான பாதையில் திடீரென்று கீழ்நோக்கி வேகமாய் வீழ்ந்து அழிவுக்குட்படப் போகிறது. ஆனால் நீங்கள் அதனுடன் வீழ்ந்துபோக வேண்டியதில்லை. இரத்தப்பழியுடைய இந்தப் பூமியின் ராஜ்யங்களை அழிக்க கடவுள் வருகையில், உயிரை நேசிக்கும் கடவுளுடைய சொந்த ஜனங்களோடுகூட சேர்ந்தவர்களாய் நீங்கள் உங்களுடைய உயிர் அழியாமற் காத்துவைக்கப்படும்படி செய்யலாம்:
“என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே புகுந்து உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு சினம் கடந்து போகுமட்டும் கொஞ்ச நேரம் ஒளிந்துக்கொள். இதோ, பூமியில் குடியிருப்போரின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களைத் தண்டிப்பதற்கு யெகோவா தமது ஸ்தானத்திலிருந்து வெளிப்பட்டு வருவார்; பூமி தன்னில் சிந்துண்ட இரத்தத்தை மறையாதிருக்கும்; தன்னிடத்தில் கொல்லப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.”—ஏசாயா 26:20, 21, தி.மொ.
44 ஆகையால் பைபிளுடைய தராதரங்களின்படி உண்மையான வாழ்க்கையை வாழ நீங்கள் இப்பொழுதே தொடங்குவதன் மூலம், முன்னோக்கிப் பார்வையைச் செலுத்தும் ஆர்வமுள்ள கடவுளுடைய ஜனங்களைக் கொண்ட சமுதாயத்துடன் “மிகுந்த உபத்திரவத்தினூடே” உயிருடன் கடந்து, இந்தப் பூமியிலிருந்து ஒருபோதும் மரித்துப் போகாமலிருப்பதில் நீங்கள் பங்குகொள்ளலாம். நிச்சயமாகவே, இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு “திரள் கூட்டத்தார்” ஒருபோதும் சாகாமல் வாழ்ந்திருக்கக்கூடும் என்று திடநம்பிக்கையுடன் சொல்லலாம்!
45 பூமியெங்குமுள்ள தம்முடைய சாட்சிகளாலாகிய இந்த உயிருள்ள சமுதாயத்தில், இப்பொழுதேயுங்கூட நடைமுறையில் சாத்தியமாயிருக்கிற ஒன்றை யெகோவா உண்டுபண்ணியிருக்கிறார்! அது உங்களுக்குங்கூட நடைமுறையில் சாத்தியமாய் இருக்கக்கூடும்! பரதீஸான பூமியில் அது வெகு முனைப்பாய் நடைமுறையில் சாத்தியமாய் இருக்கும், அங்கே கடைசியாக “சுவாசமுள்ள யாவும்” மகா உயிரளிப்பவராகிய யெகோவா தேவனைத் துதிக்கும். (சங்கீதம் 150:6) மெய்யாகவே வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் இருக்கிறது!
REFERENCES
1. Intellectual Digest, December 1971, p. 59.
2. Charles Darwin: His Life, chapter 3, p. 66.
3. The Yomiuri, Tokyo, January 17, 1969.
4. Charles Darwin, Origin of Species, concluding sentence.
5. Isaac Asimov, The Wellsprings of Life, 1960, pp. 224, 225.
6. Lecomte du Noüy, Human Destiny, 1947, p. 34.
7. Prof. John N. Moore, Michigan State University, paper of December 27, 1971, p. 5
8. Isaac Asimov, The Wellsprings of Life, 1960, p. 34.
9. M. S. Keringthan, The Globe and Mail, Toronto, November 26, 1970, p. 46.
10. H. G. Wells, The Outline of History, 3rd Edition, 1921, p. 956.
11. Ibid, p. 957.
12. Philip G. Fothergill, Evolution and Christians, 1961, p. 17.
13. Himmelfarb, Darwin and the Darwinian Revolution, p. 398.
14. J. D. Bernal, Marx and Science, 1952, p. 17.
[அடிக்குறிப்புகள்]
a வேறு முறையில் குறிப்பிட்டிருந்தால் தவிர, இந்தப் பிரசுரத்தில் கொடுக்கப்படும் வேத வசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. NW-New World Translation; தி.மொ.-திருத்திய மொழிபெயர்ப்பு
[கேள்விகள்]
1. ஏன் இத்தனையநேகர் வாழ்க்கையில் இவ்வளவு குறைவான மகிழ்ச்சியைக் காண்கிறார்கள்? (பிரசங்கி 1:14, 15; 2:17, 18)
2. மனிதவர்க்கத்திற்கு எதிர்காலம் எப்படித் தோன்றுகிறது? (ஏசாயா 60:2)
3. எதிர்காலத்தைப்பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும்? (வெளிப்படுத்துதல் 3:10)
4, 5. (எ) மனிதவர்க்கத்தின் பெரும்பான்மையர் என்ன மனப்பான்மையை ஏற்பதாகத் தோன்றுகிறது, ஏன்? (பி) பைபிள் ஏன் இதற்குப் பரிகாரத்தை வைத்திருக்கக்கூடும்? (2 தீமோத்தேயு 3:16, 17; ரோமர் 15:4; 1 கொரிந்தியர் 10:11)
6. கிறிஸ்தவ மண்டலத்தை பைபிள் எப்படிக் கருதுகிறது? (யாக்கோபு 1:27; 5:3-5)
7, 8. (எ) என்ன கேள்விகளுக்கு பைபிள் பதிலளிக்கக்கூடும்? (மத்தேயு 7:7)
(பி) பைபிள் எப்படிப் பல ஆட்களுக்கு உதவி செய்திருக்கிறது? (சங்கீதம் 119:105, 165)
9, 10. (எ) பைபிளின்படி, இந்தப் பிரபஞ்சத்தின் தொடக்கம் என்ன? (ஏசாயா 45:12, 18) (பி) சிருஷ்டிப்பைப் பற்றி இந்தப் பிரபஞ்சம்தானே எப்படி சாட்சி பகருகிறது? (எபிரெயர் 3:4)
11. உலகப் பிரகாரமாய் சிந்தனை செய்கிற கல்விமான்களில் சிலர் எதை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தப்படுகிறவர்களாய் உணர்ந்திருக்கின்றனர்? (ரோமர் 1:20-23)
12. நாம் எதை மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொள்ள வேண்டும்? ஏன்? (அப்போஸ்தலர் 14:15-17)
13. கடவுளுடைய சிருஷ்டிப்பில் இந்த பூமி ஏன் தனிப்பட்டதாய்த் தோன்றி நிற்பதாய் இருக்கிறது? (சங்கீதம் 104:24)
14. உயிர் எங்கிருந்து வந்தது? எப்படி? (சங்கீதம் 104:30, 31)
15. உயிர் தற்செயலாய் உண்டாயிருக்கக்கூடுமா? (சங்கீதம் 100:3)
16. பரிணாமக் கோட்பாட்டை ஒரு “கற்பனைக் கதை” என்று ஏன் சொல்லலாம்? (1 தீமோத்தேயு 1:3, 4)
17. மிருகங்களை விட, மனிதன் எந்த வகைகளில் அதிக ஆச்சரியத்துக்குரிய விதத்தில் படைக்கப்பட்டிருக்கிறான்? (ஆதியாகமம் 1:27, 28)
18, 19. பரிணாமக் கோட்பாடு (எ) நீதியொழுக்கங்களை (சங்கீதம் 10:3, 4), (பி) ஆளும் அதிபதிகளின் மனப்பான்மையை (1 யோவான் 3:15) எப்படிப் பாதித்திருக்கிறது?
20. பரிணாமக் கோட்பாட்டில் நம்பிக்கை வைப்பது உங்களுடைய சொந்த வாழ்க்கையை எப்படிப் பாதிக்கக்கூடும்? (கொலோசெயர் 2:8)
21, 22. (எ) மனிதனின் தற்போதைய நிலைமையை எதற்கு ஒப்பிடலாம்? (பி) எந்த “எச்சரிப்புக் குறி”க்கு ஆதாம் கீழ்ப்படிய தவறினான். அதன் விளைவு என்ன? (ஆதியாகமம் 2:15-17; 3:17-19)
23, 24. (எ) யோவான் 14:6-ன் அர்த்தமென்ன? இயேசுவைக் குறித்ததில் இது எப்படி உண்மையாய் இருக்கிறது? (பி) அந்த நெடுஞ்சாலைக்குத் திரும்பி வருவது உங்களுக்கு எப்படி நன்மை பயக்கும்? (யோவான் 3:16)
25. பரதீஸிய பூமியில் வாழ்க்கை ஏன் எல்லாவற்றையும் பார்க்கிலும் மிக விரும்பத்தக்கது? (வெளிப்படுத்துதல் 21:3, 4)
26. நீங்கள் உண்மையில் சத்தியத்தைக் கற்பது எவ்வளவு முக்கியமானது? (யோவான் 8:31, 32)
27. இப்பொழுது எப்படிப்பட்ட சூழ்நிலைமையில் நம்மை நாம் காண்கிறோம்? (2 தீமோத்தேயு 3:1)
28. இந்த எல்லா தொல்லைகளுக்கும் பின்னால் இருப்பவன் யார்? அவனுடைய இலக்கு என்ன? (2 கொரிந்தியர் 4:4)
29. இந்தக் காலத்திற்கான கடவுளுடைய நோக்கம் என்ன? (சங்கீதம் 37:9-11)
30. நம்முடைய நாட்களைக் குறித்த பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிச்சயமாக நிறைவேற்றம் அடையுமென்று நீங்கள் ஏன் திடநம்பிக்கையுள்ளவர்களாக இருக்கலாம்? (2 பேதுரு 1:19-21; தானியேல் 9:24-27)
31, 32. பொ.ச. 70-ல், தீர்க்கதரிசனம் உயிர்களைக் காப்பாற்ற எப்படி உதவி செய்தது? (லூக்கா 21:20-24)
33. இன்றைய எந்த நிலைமை அந்த யூத ஒழுங்குமுறையின் கடைசி நாட்களுக்கு ஒத்திருக்கிறது? (லூக்கா 21:25, 26)
34. உயிர்களைக் காப்பாற்ற கடவுள் எப்படி நடவடிக்கை எடுக்கிறார்? (தானியேல் 2:44)
35. (எ) முடிவு எப்பொழுது எப்படி வரும்? (பி) தீர்க்கதரிசனத்திற்குச் செவிகொடுப்பது எப்படி உங்களுக்கு நன்மை பயக்கக்கூடும்? (லூக்கா 21:34-36)
36. 1 யோவான் 2:15-17-ஐ உங்கள் அன்றாடக வாழ்க்கையில் நீங்கள் எப்படிப் பொருத்திப் பிரயோகிப்பீர்கள்? (மாற்கு 12:28-31)
37. (எ) எந்த முறையில் நாம் “இந்த உலகத்தின் பாகமானவர்களல்லர்” என்பதாக இருக்க வேண்டும்? (யோவான் 15:17-19) (பி) கடவுளுடைய ராஜ்யத்திற்கு ஆதரவை நீங்கள் எப்படிக் காட்டக்கூடும்? (மத்தேயு 6:33)
38. இன்றைய ஆளும் அதிபதிகளிடமாக நாம் என்ன மனப்பான்மையை ஏற்க வேண்டும்? (லூக்கா 20:25)
39. அயலானிடத்தில் அன்பை நீங்கள் எப்படிக் காட்டலாம்? (1 கொரிந்தியர் 13:4-7)
40. யெகோவாவின் சாட்சிகள் எப்படிப்பட்ட ஆட்கள்? (யோவான் 13:34, 35)
41. பெரும் பிரச்னைகளை இந்தச் சாட்சிகள் எப்படித் தீர்த்திருக்கின்றனர்? (அப்போஸ்தலர் 10:34, 35)
42. உயிரை நேசிக்கிறவர்களுக்கு என்ன எதிர்காலம் காத்திருக்கிறது? (சங்கீதம் 72:1-8)
43. உங்கள் உயிர் அழியாமற் காத்துவைக்கப்படுவதற்கு நீங்கள் செய்யக்கூடியதென்ன? (செப்பனியா 2:2, 3)
44. எந்த மிகச் சிறப்பான வாய்ப்பு இப்பொழுது உங்களுக்கு முன்பாக இருக்கிறது? (உபாகமம் 30:19, 20)
45. (எ) இப்பொழுதும் எதிர்காலத்திலும் எது நடைமுறையில் சாத்தியமாய் இருக்கிறது? (1 தீமோத்தேயு 6:11, 12) (பி) வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் இருக்கிறது என்பதை நீங்கள் நன்றியோடு மதித்துணருகிறீர்களென்று எப்படிக் காட்டலாம்? (1 தீமோத்தேயு 6:17-19)
[பக்கம் 6-ன் படம்]
நம்முடைய சூரிய மண்டலத்தின் மாதிரிகளை திறமையுள்ள விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர். அப்படியானால் இந்த மாபெரும் பிரபஞ்சத்தை தானேயும் உருவாக்கிட மிக அதிகமான அறிவாற்றலுடையவரை தேவைப்படுத்தாதா?
[பக்கம் 8-ன் படம்]
பூமியைக் குறித்து ஒரு விண்வெளி வீரர், “வானங்களிலெல்லாம் இதுவே பார்ப்பதற்கு மிக அதிக அழகு வாய்ந்ததாக இருந்தது” என்று விவரித்தார். இதற்குக் காரணம், இது கடவுளால் உண்டாக்கப்பட்ட உயிர் வாழ்வை கொண்டிருக்கிறது.
[பக்கம் 10-ன் படங்கள்]
பற்பல வகையான நாய்களில் இனக்கலப்பு கூடிய காரியம். ஆனால் அவை பூனை போன்ற வேறொரு “இனத்தோடு” இனக்கலப்புறுவது கூடாத காரியம்
[பக்கம் 11-ன் படம்]
The Seattle Times, November 21, 1971
The Washington Daily News, December 27, 1971
The Express, Easton, Pa., May 3, 1973
[பக்கம் 12, 13-ன் படங்கள்]
மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையேயுள்ள பெரும் பிளவை ஒரு பாலத்தினால் இணைப்பது கூடாத காரியம். அவை வித்தியாசப்பட்ட “இனங்களாக” சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன
[பக்கம் 15-ன் படம்]
மகத்தான பரதீஸில் வாழ்வதற்கே மனிதன் சிருஷ்டிக்கப்பட்டான். ஆனால் அவன் அதைத் தொடர்ந்து அனுபவித்துக் களிப்பதானது கீழ்ப்படிதலின்மீது சார்ந்திருந்தது
[பக்கம் 20-ன் படம்]
ரோமிலுள்ள தீத்து வளைவில் காணப்படும் இந்தக் கல்வெட்டில் பொ.ச.70-ல் நடைபெற்ற எருசலேமின் அழிவை சரித்திரமாக பதிவு செய்கிறது
[பக்கம் 21-ன் படம்]
பைபிள் தீர்க்கதரிசனங்களுக்கு செவிகொடுத்தலானது முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் உயிர்களைக் காப்பாற்றியது. அதுபோன்று செய்வது உங்களுடைய உயிரையும் இன்று காப்பாற்றக்கூடும்
[பக்கம் 23-ன் படம்]
‘முதல் உலக யுத்தமானது மொத்த யுத்தத்திற்குரிய இந்த நூற்றாண்டை அறிமுகப்படுத்தியது. ஒருபோதுமே இத்தனை அநேக தேசங்கள் உட்பட்டிருந்ததில்லை, ஒருபோதுமே இவ்வளவு பரந்த வண்ணமாயும் கண்மூடித்தனமாயும் படுகொலை நடந்ததில்லை.’—“முதல் உலக யுத்தம்,” H. W. பால்ட்வின் என்பவராலாகியது.
[பக்கம் 23-ன் படம்]
40,00,00,000 ஆட்கள் கடுமையான போஷாக்கு குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது
[பக்கம் 29-ன் படம்]
தெய்வபக்தியுள்ள ஆட்களடங்கிய புதிய சமுதாயம் உண்மையான வாழ்க்கையை அனுபவித்து என்றென்றுமாக கடவுளைத் துதிக்கும்