பாடல் 110
யெகோவா தரும் சந்தோஷம்
1. சந்தோஷமாய் நாம் சொல்ல ஏங்கும் ஆட்சி,
நம் தேவனின் நல்லாட்சியே!
கம்பீரமாய் நம் கால்கள் நடைபோடும்,
நம் மீட்பு வருகின்றதே!
(பல்லவி)
நெஞ்சில் நன்றி பொங்க பாடுகின்றோம்,
சந்தோஷ வானில் செல்கின்றோம்!
நம் தேவன் யெகோவா தரும் சந்தோஷம்,
நம்மை இன்று வாழ வைக்குதே!
மண்ணில் தேவனுக்கு சேவை செய்ய,
சந்தோஷம் நெஞ்சில் தங்குதே!
வானை ஆளுகின்ற மகா ராஜாவை,
எங்கும் சொல்ல உள்ளம் ஏங்குதே.
2. நம் நெஞ்சிலே, ஓர் பாடல் அரங்கேறும்,
தேவாட்சிதான் பேரரசே!
அஞ்சாமலே, நம் தேவன் யெகோவாவை,
ஊர் கேட்க கொட்டு முரசே!
(பல்லவி)
நெஞ்சில் நன்றி பொங்க பாடுகின்றோம்,
சந்தோஷ வானில் செல்கின்றோம்!
நம் தேவன் யெகோவா தரும் சந்தோஷம்,
நம்மை இன்று வாழ வைக்குதே!
மண்ணில் தேவனுக்கு சேவை செய்ய,
சந்தோஷம் நெஞ்சில் தங்குதே!
வானை ஆளுகின்ற மகா ராஜாவை,
எங்கும் சொல்ல உள்ளம் ஏங்குதே.
(பாருங்கள்: 1 நா. 16:27; சங். 112:4; லூக். 21:28; யோவா. 8:32.)