அன்பின் இரண்டு மிகப்பெரிய வெளிப்பாடுகளுக்குப் போற்றுதல் காண்பித்தல்
“அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாம் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.”- 1 யோவான் 4:19.
யெகோவா தேவனும் இயேசுகிறிஸ்துவும் நம்மிடமாகக் காண்பித்திருக்கும் அன்பின் மிகப்பெரிய வெளிப்பாட்டிற்கு நாம் எப்படி நம்முடைய மிகச்சிறந்த போற்றுதலைக் காண்பிக்கலாம்? ஒரு முக்கியமான வழி, தம்முடைய பிதாவின் நாமத்திற்கும் ராஜ்யத்திற்கும் சாட்சிகொடுப்பதில் தளராது ஈடுபட்ட இயேசுவைப் பின்பற்றுவதாகும். (பேதுரு 2:21) அவர் வீடுகளிலும் ஜெபாலயங்களிலும் கடற்கரைகளிலும் சாட்சி கொடுத்து வந்தார். நமக்கு முன்பாகத் திறந்திருக்கும் ஒன்பது குறிப்பிடத்தக்க வழிகளைக் கவனிப்போமாக.
வீட்டுக்கு வீடு ஊழியம்
2. நம்முடைய அன்பையும் போற்றுதலையும் காண்பிப்பதற்கிருக்கும் முதலாவதும் மிகக் குறிப்பிடத்தக்கதுமான வழி, தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை வீடுவீடாகச் சென்று அறிவிப்பதாகும். இதைச் செய்வது நம்முடைய பாகத்தில் உண்மையிலேயே பேச்சு சுயாதீனத்தைத் தேவைப்படுத்துகிறது. ஏனென்றால் இது மற்றவர்களை நேரிடையாக சந்திப்பதை உட்படுத்துகிறது. அவர்களில் பலர் நம்மை எரிச்சலுடன் பார்க்கக்கூடும். நாம் மக்களின் மனப்பான்மையில் வித்தியாசத்தை எதிர்பட்டாலும், கோபம், கசப்பு அல்லது நேரிடையான எதிர்ப்பு போன்றவற்றை சந்திக்க நேரிட்டாலும் நாம் தொடர்ந்து வீடுவீடாய்ச் செல்வதற்குக் கடவுளிடமும் நம்முடைய அயலகத்தாரிடமும் நமக்கு உண்மையான அன்பு தேவைப்படுகிறது.—எசேக்கியேல் 3:7-9.
3. தம்முடைய 12 அப்போஸ்தலர்களுக்கும், பின்னால் 70 சுவிசேஷகர்களுக்கும் இயேசு கொடுத்த அறிவுரைகளைக் கொண்ட சுவிசேஷ பதிய மிகத் தெளிவாகக் காண்பிப்பதாவது, அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை வீடுவீடாகப் பிரசங்கிக்க வேண்டும் என்பதே. (மத்தேயு 10:5-14; லூக்கா 10:1-7) தான் வீடுவீடாகச் சென்றதைக் குறித்து பவுல் அப்போஸ்தலர் 20:20-ல் குறிப்பிடுகிறான். அந்த வார்த்தைகள் மேய்ப்பர்கள் செய்யும் சந்திப்பு வேலைக்குப் பொருத்தப்பட்டது, ஆனால் அது எந்த வேலையைக் குறித்தது என்பதை வசனம் 21 சந்தேகம் நீங்க தெளிவுப்படுத்துகிறது. பவுல் பின்வருமாறு கூறுகிறான்: “தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்து, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும், நான்”—கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு அல்ல— “யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக ‘தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும் இயேசுவை விசுவாசிப்பதைக் குறித்தும்’ அவர்களை ஊக்குவிக்க மாட்டார். மாறாக, கூட்டங்கள் அல்லது ஊழியத்திற்குக் கூடுதலான போற்றுதலைக் கொண்டிருக்கும்படியாகத் தன் உடன் கிறிஸ்தவர்களை உட்சாகப்படுத்துகிறார் அல்லது அவர்களுடைய தனிப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க உதவி செய்கிறார்.
4. வீட்டுக்கு வீடு சந்திப்புகள் செய்வதற்கு நமக்கு சிறந்த வேதப்பூர்வமான ஆதாரம் இருப்பது மட்டுமல்லாமல், அந்த வேலையில் யெகோவாவின் ஆசீர்வாதம் இருக்கிறது என்பதற்கு அதன் கனிகள் தாமே அத்தாட்சி பகர்கின்றன. ஆம், “ஞானமோ தன் செயல்களால் நியாயமென்று [நீதியென்று, AV] தீர்க்கப்படுகிறது” (மத்தேயு 11:19, தி.மொ.) நீதிக்காக பசிதாகமுள்ளவர்களிடமாகத் தங்களை வழிநடத்தியிருக்கும் தேவதூதர்களில் வழிநடத்தலுக்கான அத்தாட்சியை வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கிறவர்கள் கண்டிருக்கிறார்கள். தாங்கள் உதவிக்காக ஜெபித்துக்கொண்டிருந்ததாகவும், சாட்சிகளின் சந்திப்பு தங்களுடைய ஜெபத்திற்கான பதில் என்றும் வீட்டுக்காரர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
5. வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்துக்காண்பித்தல் என்ற ஆங்கில புத்தகம் வெளி ஊழியத்திற்கு நமக்கு எவ்வளவு பெரிய உதவியாயிருக்கிறது! பைபிள் கலந்தாலோசிப்புகளுக்கான அநேக அருமையான முன்னுரைகளும் அத்துடன் பைபிள் சம்பந்தமான அல்லது மத சம்பந்தமான ஏராளமான பொருள்களின்பேரில் பயனுள்ள விஷயங்களும் அதில் அடங்கியிருக்கிறது. எனவே அதை எடுத்துச் செல்கிறவர்களாக மட்டுமில்லாமல், அதை பயன்படுத்துகிறவர்களாகவும் இருங்கள். விஷேசமாக பயனியர்கள் இந்த அருமையான வெளி ஊழிய உதவிப் புத்தகத்திற்காக ஏராளமான போற்றுதலைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை நீங்கள் இன்னும் அதிக முழுமையாகவும் திறம்பட்ட விதத்திலும் பயன்படுத்துவதன்மூலம் கடவுளுடைய அன்புக்கு உங்கள் போற்றுதலைக் காண்பிக்க முடியுமா?
6. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குபெறுவதன்மூலம் நாம் தனிப்பட்ட விதத்தில் மிகுந்த நன்மை பெறுகிறோம் என்ற உண்மையை நாம் கவனியாதிருக்கக்கூடாது. கிறிஸ்தவர்களாக நாம் விசுவாசத்தின் அடிப்படையில் செயல்படும்போது, அது அதிகமாக உறுதிப்படுகிறது, நாம் நம்பிக்கையுடன் பேசும்போது நம்முடைய சொந்த நம்பிக்கைதானே பிரகாசமடையாதிருக்க முடியாது. கலாத்தியர் 5:22, 23-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவியின் கனிகளை நாம் விருத்தி செய்வதற்கு வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஒழுங்காகப் பங்குபெறுவதற்கு ஒப்பான வேறொன்று இருக்கமுடியாது. அது அப்படித்தான் இருக்க வேண்டும், ஏனென்றால் பைபிள் பின்வருமாறு உறுதியளிக்கிறது: “உதாரணகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.”—நீதிமொழிகள் 11:25.
மறுசந்திப்புகள் செய்தல்
7. கடவுளும் கிறிஸ்துவும் நம்மிடமாகக் காண்பித்திருக்கும் அன்புக்கு நல்ல பிரதிபலிப்பைக் காண்பிக்க இருக்கும் இரண்டாவது வழி, ராஜ்ய செய்தியினிடமாக அக்கறை காண்பித்த ஆட்களை மறுபடியும் சந்திப்பதாகும். தாங்கள் ஏற்கெனவே பிரசங்கித்த ஆட்களைக் குறித்து பவுலும் பர்னபாவும் அக்கறையுடையவர்களாயிருந்தனர். (அப்போஸ்தலர் 15:36) உண்மை என்னவெனில், நாம் கொள்கையில் முரண்பட்டில்லை என்பது மறுசந்திப்பு செய்வதை தேவைப்படுத்துகிறது. நாம் வீட்டுக்கு வீடாகவும், சந்தர்ப்பம் கிடைக்கும் சமயங்களிலும் அல்லது தெருக்களிலும் சாட்சிபகரும்போது, “தங்களுடைய ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவர்கள்” கிடைப்பார்களா என்று பார்க்கிறோம். (மத்தேயு 5:3) இப்படியிருக்க அவர்களுக்கு ஒரு குவளை ஆவிக்குரிய தண்ணீரைக் கொடுப்பதோ, அல்லது ஒரு துண்டு ஆவிக்குரிய அப்பத்தைக் கொடுப்பதோ போதாது. அவர்கள் ஜீவபாதையில் வருவதற்கு அவர்களுக்குக் கூடுதலான உதவி தேவைப்படுகிறது.
8. நம்முடைய முதல் முயற்சிகளைச் சத்தியத்தின் விதைகளை விதைப்பதற்கு ஒப்பிடலாம். ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 3:6, 7-ல் குறிப்பிட்டபடி அதிகம் தேவைப்படுகிறது. அவன் விதைத்தது மட்டும் போதாது. அந்த விதைகளுக்குத் தண்ணீரும் தேவை, அப்பொல்லோ கொடுத்ததுபோல். அப்பொழுதுதானே கடவுள் அதை விளையச் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். வேலையின் இந்த அம்சம் சிலரால் அசட்டை செய்யப்படுகிறது. என்றாலும் சிலர் இதைத்தான் கிறிஸ்தவ ஊழியத்தின் மிக எளிதான அம்சமாகக் கருதுகின்றனர். ஏன்? ஏனென்றால் மறுபடியும் சந்திக்கப்படும் ஆட்கள் ஏற்கெனவே அக்கறை காண்பித்தவர்கள்.
வீட்டு பைபிள் படிப்புகள் நடத்துதல்
9. ராஜ்யத்தின் செய்தியில் அக்கறை காண்பித்த ஆட்களை ஒழுங்காக மறுபடியுமாகச் சந்திக்கும் பலன்தான் ஒரு வீட்டு பைபிள் படிப்பு-நம்முடைய போற்றுதலைக் காண்பிப்பதற்கான மூன்றாவது வழி, அது உண்மையிலேயே நம்முடைய ஊழியத்தின் மிகச் சந்தோஷத்துக்குரியதும் மிகுந்த பலனுள்ளதுமான ஊழிய அம்சமாக இருக்கக்கூடும். ஏன்? ஆட்கள் பைபிள் சத்தியத்தை அறிகிற அறிவிலும் போற்றுதலிலும் வளருவதைக் காண்பதும், அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்வதைக் காண்பதும், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்காக அவர்கள் தங்களை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறும் வரையாக அவர்களுக்கு உதவி செய்வதும் எவ்வளவு மகிழ்ச்சிக்குரிய காரியம்! அப்படிப்பட்டவர்கள் உண்மையிலேயே நம்முடைய ஆவிக்குரிய பிள்ளைகளாகவும் நாம் அவர்களுடைய ஆவிக்குரிய பெற்றோர்களாகவும் கருதப்படலாம்.—1 கொரிந்தியர் 4:14, 15; 1 பேதுரு 5:13-ஐ ஒப்பிடவும்.
10. ஒரு நல்ல உதாரணத்தைக் கவனியுங்கள். மிஷெனரி ஒருவர் கரீபியன் தீவுகளில் ஒன்றில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருந்தபோது ஒழுங்கும் சுத்தமுமாயில்லாத ஒரு வீட்டில் ஒரு ஹிப்பி தம்பதிகளைச் சந்தித்தார். இருந்தாலும் அவர்கள் அக்கறை காண்பித்தனர். ஒரு பைபிள் படிப்பு புத்தகம் அளிக்கப்பட்டது, மற்றும் அந்தத்தம்பதிகளோடு ஒரு பைபிள் படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது அவர்கள் விவாகமாகாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அநேக பிள்ளைகள் இருந்தார்கள். படிப்பு தொடர்ந்து முன்னேறியபோது அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும், வீடுங்கூட நல்ல தோற்றத்தைக் கொண்டிருக்க ஆரம்பித்தன. பின்பு தங்களை விவாகஞ் செய்து வைக்கும்படியாக அந்தத் தம்பதிகள் இந்த மிஷெனரியைக் கேட்டுக்கொண்டதானது, முழுக்காட்டுதல் பெறுவதற்கான வாய்ப்பை அவர்களுக்குத் திறந்துவைத்தது. பின்பு ஒருநாள் அந்தப் புதிய சகோதரன், தான் அதுவரை வாங்கியிராத வாகன ஓட்டுனர் லைசென்ஸை மகிழ்ச்சியுடன் காண்பித்தார். ஆம், அவர் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு முன்பு, ஒரு விவாக லைசென்ஸையோ அல்லது வாகன ஓட்டுனர் லைசென்ஸையோ பெற்றுக்கொள்வதற்கான அவசியத்தைக் காணவில்லை, ஆனால் இப்பொழுதோ அவர் கடவுளுடைய சட்டங்களுக்கும் இராயனுடைய சட்டத்திற்கும் கீழ்ப்படிகிறார்.
தெரு ஊழியம்
11. தேவனும் கிறிஸ்துவும் நமக்காகச் செய்தவற்றிற்கு நம்முடைய போற்றுதலைத் தெரிவிப்பதற்கான நான்காவது வழி, தெரு ஊழியமாகும். அதில் பங்குபெறும்போது நாம் ஒரு விதத்தில் நீதி மொழிகள் 1:20, 21-ஐ சொல்லர்த்தமாக நிறைவேற்றிட உதவுகிறோம்: “ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது. அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒலிமுக வாசலிலும் நின்று கூப்பிட்டு பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது.”
12. ராஜ்ய பிரசங்கிப்பின் இந்த ஊழிய அம்சத்தில் நாம் ஒழுங்காகப் பங்குகொள்வதற்குப் பல நல்ல காரணங்கள் உண்டு. ஆட்களை வீடுகளில் சந்திப்பதுதானே அநேக இடங்களில் அதிக கடினமாக இருக்கிறது. அவர்கள் ஏதாவது ஒரு வகையான பொழுதுபோக்கிலோ, கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதிலோ அல்லது வேலை செய்வதிலோ ஈடுபட்டவர்களாயிருக்கின்றனர். மேலும், அநேகர் மற்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாத தனியார் கட்டத்தொகுதிகளில் அல்லது அரசு கட்டடங்களில் வசிக்கக்கூடும். இதில் அறைவசதிகள் கொண்ட ஹோட்டல்களில் வசிப்பவர்கள் சேர்க்கப்படவில்லை. ஆனால் பொதுவாக தெருக்களில் மக்களைக் காணக்கூடியவர்களாய் இருக்கிறோம்.
13. ஐக்கிய மாகாணங்களில் ஒரு மூப்பர் நடத்தும் பைபிள் படிப்புகளில் நான்கு படிப்புகள் அவர் தெரு ஊழியம் செய்யும்போது முதலாவது சந்திக்கப்பட்டவர்கள். அவர் மௌனமாக நிற்பதில்லை. (சில நாடுகளில் அதைத்தான் சட்டம் அனுமதிக்கக்கூடும்) மாறாக, நண்பருக்குரிய புன்முறுவலுடனும் உற்சாகமான தொனியுடனும் அவர் நின்றுகொண்டிருக்கும் ஆட்களை, பேருந்துக்கு காத்துக்கொண்டிருப்பவர்களை நெருங்குகிறார். அவருடைய ‘வார்த்தைகள் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேரினதாயும்’ இருப்பதோடு ஒவ்வொருவரையும் எப்படி அணுகவேண்டும் என்பதை விவேகத்தோடு செய்கிறார். (கொலோ. 4:5, 6; 1 பேதுரு 3:15) இப்படிப்பட்ட தெரு ஊழியம் மூலமாக அவர் பைபிள் படிப்புகளைப் பெற்றிருப்பதோடுகூட பலருக்குப் பிரசுரங்களைப் பெற்றிருப்பதோடுகூட பலருக்குப் பிரசுரங்களை அழிப்பதிலும் வெற்றிகண்டிருக்கிறார். ஆம், ஒழுங்காகத் தலை சீவி நண்பருக்குரிய புன்சிரிப்போடுகூட தாராளமாக அணுகிப் பேசுகிறவராகவும் இருப்பதன் மூலம் நீங்கள் தெரு ஊழியத்தில் மிகத் திறம்பட்டவர்களாயிருக்கலாம். அன்மையில் ஐந்து சாட்சிகள் வியாபார ஸ்தலங்களில் உயிர்-அது எப்படி இங்கு வந்தது? பரிணாமத்தின் மூலமா அல்லது சிருஷ்டிப்பின் மூலமா? என்ற ஆங்கில புத்தகத்தின் 30 பிரதிகளை விநியோகித்தனர். இவற்றில் பல தங்கள் வாகனங்களில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்களிடம் விநியோகிக்கப்பட்டது.
சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சாட்சி கொடுத்தல்
14. கடவுளும் கிறிஸ்துவும் நம்மிடமாக காண்பித்திருக்கும் அந்த மிகுந்த அன்புக்கு நாம் போற்றுதலைக் காண்பிப்பதற்கான ஐந்தாவது வழி சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சாட்சி கொடுத்தலாகும். நீதிக்காகப் பசிதாகமுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதிலும் பிரசுரங்களை அளிப்பதிலும் இந்த முறை எவ்வளவு பலனுள்ளதாயிருந்திருக்கிறது! எபேசியர் 5:15, 16-ல் [NW] சொல்லப்பட்டிருக்கும் ஆலோசனைக்கு செவிகொடுக்க அதாவது ‘கிடைக்கும் காலத்தை வாங்கிக்கொள்ள’ இது ஒரு சிறந்த வழியாகும். மிஷெனரி ஒருவர் டாக்ஸியில் சென்றுகொண்டிருக்கும்போது உடன் பயணியுடன் பேச ஆரம்பித்தார். அவர் அக்கறைக் காண்பிக்கவே மறுசந்திப்புகள் செய்யப்பட்டு ஒரு பைபிள் படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது. இன்று அவர் ஒரு கிறிஸ்தவ மூப்பராக இருக்கிறார். வேறொரு இடத்தில் ஒரு மூப்பர் ஒரு பெண்மணியுடன் பேசினார். அவள் ஒரு யூதனை விவாகஞ்செய்வதற்காகத் தன் மதத்தை மாற்றிக்கொண்டவளாயிருந்தாள். மோசே, நோவா, தாவீது போன்றவர்களின் முதலாவது வாழ்ந்தது யார் என்று கேட்டாள். இதற்கு அவளுக்குத் தேவைப்படுவது என்னுடைய பைபிள் கதை புத்தகம், ஏனென்றால் இந்தப் புத்தகம் பைபிள் சம்பவங்களைக் கால வரிசையின்படி கொண்டிருக்கிறது என்றார் அந்த மூப்பர். இவர் தனக்கு முற்றிலும் பழக்கமில்லாதவராயிருந்தும் அவள் உடனடியாகத் தன் விலாசத்தையும் அந்தப் புத்தகத்திற்கான நன்கொடையையும் கொடுத்து அதைத் தபால் மூலம் அனுப்பும்படியாகச் சொன்னாள்.
15. சில சமயங்களில், நம்மீது எரிச்சலடைந்து விடுவார்களோ என்ற பயத்தில், நம் பக்கத்தில் அமர்ந்திருக்கும் உடன் பயணிகளுடன் ஒரு சம்பாஷணையைத் துவங்கத் தயங்கக்கூடும். ஆனால் அதற்கு சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேசத் துவங்குவது எத்தனை சமயங்களில் நல்ல பலன்களைக் கொண்டதாயிந்திருக்கிறது. கடவுளுடைய நற்குணத்திற்கும் மக்களின் தேவைக்கும் மதித்துணர்வு கொண்டவர்களாயிருப்பது தேவையான தைரியத்தைப் பெற்றுக்கொள்ள உதவும். ஆம், “தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்தபுத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.”-2 தீமோத்தேயு 1:7.
புதியவர்களை வரவேற்பது
கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் நம்முடைய நன்றியறிதலைக் காண்பிப்பதற்கான ஆறாவது வழி, நம்முடைய ராஜ்ய மன்றத்திற்கு வரும் புதியவர்களை வரவேற்பதாகும். அயலார் பேரிலுள்ள அன்பு, நம்முடைய வணக்க ஸ்தலத்திற்கு வருகைதரும் எந்த ஒரு புதியவரையும் கவனிப்பதற்கு நம்மை விழிப்பாய் வைக்க வேண்டும். அவர் தனிமையாக உணராதபடி, அவருடைய ஆவிக்குரிய நலனில் உண்மையான அக்கறை காட்டும் நண்பர்கள் மத்தியில் அவர் இருக்கிறார் என்று உணரும்படி செய்வோமாக. அநேகமாய் நம்மைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அல்லது ஆர்வம் அவரை இங்கு கொண்டுவந்திருக்கலாம். அவர் உண்மையிலேயே நீதிக்குப் பசிதாகமுள்ளவராயிருக்கக்கூடும். அவர் பேரில் நாம் காண்பிக்கும் உண்மையான அக்கறை ஒரு பைபிள் படிப்பைத் துவங்குவதற்கும், அவர் ஜீவ பாதையில் கால் வைப்பதற்கும் வழிநடத்தக்கூடும். (மத்தேயு 5:3, 6; 7:13, 14) உண்மையில் இதுதான் நடந்திருக்கிறது. காவற்கோபுர கிலியட் பைபிள் பள்ளியின் முதல் வகுப்பிலிருந்த ஒரு மிஷெனரியின் இரண்டு நல்ல படிப்புகளின் மாணாக்கர்கள் தான் முதலாவதாக ராஜ்ய மன்றத்தில் சந்தித்தவர்கள் என்றார்.
கடிதங்கள் மூலம் சாட்சி கொடுத்தல்
17. கடவுளும் கிறிஸ்துவும் நமக்குக் காண்பித்திருக்கும் அன்புக்கும் நல்ல விதத்தில் பிரதிபலிப்பவர்களாக இருப்பதற்கு ஏழாவது வழி கடிதங்கள் மூலம் சாட்சிகொடுத்தலாகும். அநேக சமயங்களில் சாட்சி கொடுக்க இந்த முறையைப் பயன்படுத்துகிறவர்கள் அருமையான போற்றுதல் கடிதங்களைப் பெற்றிருக்கின்றனர். சரீர ஊனத்தின் காரணத்தால் தற்காலிகமாக வெளி ஊழியத்திற்கு செல்ல முடியாத நிலையிலிருக்கும் முழுநேர பயனியர்கள் இந்த முறையைக் கையாளுகின்றனர். உதாரணமாக: 12 பிள்ளைகளையுடைய ஒரு குடும்பம் இருந்தது. ஒருநாள் அவர்களுடைய தகப்பன் வீடுதிரும்பியபோது, அவர்களில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடைப்பதைக் கண்டார். தன்னுடைய ஒரு மகனின் காதலன் இதைச் செய்தான். கிறிஸ்தவ மண்டல குரு வர்க்கத்தினிடமிருந்தும் தனக்கு ஆறுதல் கிடைக்கவில்லை. ஒரு நாள் தான் முன்பின் அறியாத ஒருவரிடமிருந்து, ஒரு சாட்சியிடமிருந்து, ஒரு கடிதத்தைப் பெற்றார். அவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட இந்தக் கவலைக்குரிய சம்பவத்தை செய்தித்தாளில் வாசித்த அந்தச் சாட்சி ஒரு கடிதத்துடன்கூட சத்தியம் புத்தகத்தையும் அனுப்பியிருந்தார். அவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்ததும் இதுதான். இன்று அவர் ஒரு வைராக்கியமுள்ள சாட்சியாக இருக்கிறார்.
தொலைப்பேசியின் மூலம் சாட்சி கொடுத்தல்
18. சாட்சி கொடுப்பதற்கு இருக்கும் வழிகளில் எட்டாவதுதான் ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காகத் தொலைப்பேசியைப் பயன்படுத்துதல். இது சாட்சி கொடுப்பதில் மகிழ்ச்சிதரும் அனுபவமாகவும் திறம்பட்ட முறையாகவும் நிரூபித்து வருகிறது. ஊழியத்தின் இந்த அம்சத்தில் அதிகமதிகமான சாட்சிகள் திறம்பட்டவர்களாக ஆகிவருவதுதானே இம்முறைக்குக் கொடுக்கப்படும் சிபாரிசாக இருக்கிறது. இதன் மூலமாக நாம் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்திக்க முடியாத சிலரை செய்தியினால் எட்ட முடிகிறது. தொலைப்பேசி மூலமாக சாட்சி பகரும் காரியத்தை விவேகத்துடனும் தயவுடனும், சாதுரியத்துடனும், திறமையுடனும் செய்யும்போது அப்படிப்பட்டவர்கள் நேரடியாக வீடுகளில் சந்திப்பதிலிருந்ததைவிட நல்ல பிரதிபலிப்பு இருந்திருக்கிறது.
19. ஆங்கிலம் பேசப்படும் ஒரு தேசத்திலிருக்கும் ஜப்பான் மொழி பேசும் சபை தொலைப்பேசி எண்களுடைய புத்தகத்தைத் தங்களுடைய பிராந்தியத்தின் ஒரு பாகமாகப் பயன்படுத்தி வருகிறது. ஜப்பானிய பெயர்களைக் கொண்டிருப்பவர்களைப் பிரஸ்தாபிகள் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு, அக்கறையுள்ளவர்களைத் தனிப்பட்ட விதத்தில் சந்திக்க ஏற்பாடு செய்கின்றனர். இந்த வழியில் அவர்கள் பல படிப்புகளை ஆரம்பித்திருக்கின்றனர்.
நல்ல நடத்தை மூலமாக சாட்சி கொடுத்தல்
20. நம்முடைய கடவுளுக்குத் துதியைக் கொண்டுவருவதற்கான ஒன்பதாவது வழி நம்முடைய நல்நடத்தையாகும். நம்முடைய நல் நடத்தைதான் நம்முடைய மிகச்சிறந்த பிரசங்கம் என்றார் ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர். உண்மையில், யெகோவாவின் சாட்சிகளுடைய உயர்ந்த ஒழுக்கத்தைக் குறித்து செய்திப் பிரிவுகள் மறுபடியும் மறுபடியுமாகப் போற்றுதலைப் தெரிவித்திருக்கின்றன. ஒரு அறிக்கை பின்வருமாறு குறிப்பிடப்பட்டது: “ஜெர்மனி குடியாட்சியில் யெகோவாவின் சாட்சிகளே அதிக நேர்மையான மக்கள்,” பள்ளித் துவக்கத்தின்போது ஒரு சாட்சி பள்ளி புரோஷூரைத் தன் ஆசிரியரிடம் கொடுத்தாள். தனக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று நேரடியாகச் சொல்லி அதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். என்றபோதிலும் அவளுடைய நல்நடத்தை சிறந்த போற்றுதலைத் தேடித்தந்தது மட்டுமின்றி அந்த ஆசாரியன் மனப்பான்மையில் ஒரு மாற்றத்தையே ஏற்படுத்தியது. தங்களுடைய பிள்ளைகளின் பள்ளி ஆசிரியர்களிடமிருந்து இதுபோன்ற கடிதங்களைச் சாட்சிகளின் பெற்றோர்கள் பெறுகிறார்கள்: “உங்களுடைய நம்பிக்கைகளின் வெற்றி உங்கள் பிள்ளைகளையும் சார்ந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.”
21. உலக மக்கள் யெகோவாவின் சாட்சிகளைக் குறித்து நல்லது சொல்லுகிறார்களென்றால், அது கடவுளையும் கிறிஸ்துவையும் கனப்படுத்தாமலிருக்க முடியாது. அது அப்படித்தான் இருக்க வேண்டும். மனிதர் நம்முடைய நற்கிறியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற தேவனை மகிமைப்படுத்தும்படி, நம்முடைய வெளிச்சத்தை அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கச் செய்யவேண்டும் என்று இயேசு சொல்லவில்லையா? (மத்தேயு 5:16) ஆம், நம்முடைய நல்நடத்தையின் மூலம் நாம் சத்தியத்தை அலங்கரிக்க முடியும். (தீத்து 2:10) நம்முடைய நல் நடத்தை கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் துயைக் கொண்டுவருகிறது, மற்றும் மற்றவர்களை ஜீவ பாதையில் கொண்டுவர உதவுகிறது என்ற உண்மைதானே நம்முடைய நடத்தை எல்லா சமயத்திலும் குற்றப்படுத்தப்படாமலிருப்பதன் பேரில் ஆழ்ந்த பேரில் ஆழ்ந்த அக்கறையுள்ளவர்களாயிருப்பதற்குப் பலமான காரணமாக இருக்கிறது.
22. யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் நமக்கு செய்திருக்கும் காரியங்களுக்கெல்லாம், முக்கியமாக அவர்களுடைய அன்பின் மிகப்பெரிய வெளிப்பாட்டிற்கு நம்முடைய போற்றுதலைக் காண்பிக்க நமக்குப் பல வழிகள் இருக்கின்றன என்பதைப் பார்த்தோம். இந்தக் காரியங்ளைச் செய்யும்போது அயலார் பேரிலிருக்கும் நம்முடைய அன்பையும் நிரூபித்துக்காட்டலாம்.
23. கடைசியாக, கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆசரிப்பதன் மூலமாகவும் அன்பின் அந்த இரண்டு பெரிய வெளிக்காட்டிற்கு நம்முடைய போற்றுதலைக் காண்பிக்கலாம். பூமியில் மனிதனாக இருந்த இயேசு தம்முடைய கடைசி இரவின்போது தம்முடைய மாம்சத்திற்கும் இரத்தத்திற்கும் சின்னமாக அப்பத்தையும் திராட்சரசத்தையும் பயன்படுத்தி ஒரு வருடாந்தர ஞாபகார்த்த போஜன ஆசரிப்பை ஏற்படுத்தினார். இந்த ஆசரிப்பு அவருடைய மரண ஞாபகார்த்தமாக ஆசரிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். (1 கொரிந்தியர் 11:23-26) கர்த்தருடைய இராப்போஜனம் அடுத்த ஆண்டும் ஆசரிக்கப்படும். இயேசுவின் கட்டளைக்கு இணங்க, உலகமெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் ஒன்று கூடிவருவார்கள், அதைத்தவரவிடாதீர்கள்! (W87 2/15)
விமர்சனக் கேள்விகள்
இயேசு எப்படி, எங்கு சாட்சி கொடுத்தார்?
கடவுளுடைய மகா அன்புக்குப் போற்றுதல் காண்பிக்கிறவர்களாக நாம் இயேசுவை என்னென்ன வழிகளில் பின்பற்றலாம்?
[கேள்விகள்]
1. இயேசு நமக்கு என்ன முன்மாதிரி வைத்தார்?
2. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நீங்கள் எப்படித் தொடர்ந்து நிலைத்திருக்கலாம்?
3. வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வதற்கு என்ன வேத வசன ஆதாரத்தைக் கொண்டிருக்கிறீர்கள்?
4. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குகொள்ள நம்மை உற்சாகப்படுத்துவது என்ன?
5. நம்முடைய வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கு நமக்கு அருமையான உதவியாக இருப்பது என்ன?
6. ராஜ்யத்தின் செய்தியை வீடுவீடாக எடுத்துச்செல்வதில் நமக்கு என்ன தனிப்பட்ட நன்மை இருக்கிறது?
7, 8. தற்கரீதியான மற்றும் நடைமுறையான என்ன காரணங்களுக்காக நாம் மறுசந்திப்பு செய்ய வேண்டும்?
9. ஒரு வீட்டு பைபிள் படிப்பு நடத்துவதை ஏன் உங்கள் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்?
10. வீட்டு பைபிள் படிப்பு நடத்துவதன் மதிப்பை சுட்டிக் காட்டும் இரண்டு எடுத்துக்காட்டுகள் என்ன?
11. 12. (எ) தெரு ஊழியத்தில் பங்குகொள்ள உற்சாகப்படுத்தும் என்ன வேதப்பூர்வமான ஊக்குவித்தலை உடையவர்களாயிருக்கிறோம்?
13. தெரு ஊழியம் என்ன பலன்களைக் கொண்டிருக்கக்கூடும்? உதாரணத்துடன் விளக்குங்கள்.
14.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சாட்சி கொடுத்தலின் மதிப்பு எப்படித் தெளிவாயிருக்கிறது?
15. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள கவனமாயிருப்பதற்கு நமக்கு எது உதவும்?
16. ராஜ்ய மன்றத்திற்கு வருகை தரும் அந்நியர்களை ஏன் கவனியாமலிருந்துவிடக்கூடாது?
17. கடிதங்கள் எழுதுவதன் மூலம் சாட்சிகொடுத்தல் என்ன பலன்களை உடையதாயிருக்கக்கூடும்?
18, 19. நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான வேறு என்ன வழிகளும் பலனுள்ளதாயிருப்பதை சிலர் கண்டிருக்கின்றனர்? ஏன்?
20, 21. நம்முடைய நல்நடத்தை என்ன நல்ல பலன்களையுடையதாய் இருக்கும்? உதாரணம் கொடுங்கள்.