பைபிள் தன்னில்தானே முரண்பாடுள்ளதா?
“கடவுள் பொய் சொல்லக்கூடாதவர்” என்று பைபிள் அறிவிக்கிறது. (எபிரெயர் 6:18, NW) அப்படியிருக்க, அவருடைய புத்தகம் எப்படி வெளிப்படையான முரண்பாடுகளையும் குறிப்பிடத்தக்க ஒத்திசைவின்மைகளையும் கொண்டிருக்க முடியும்? முடியாது. அப்படியிருக்க, ‘ஏன் இந்த ஒத்திசைவின்மை?’ என்று நீங்கள் ஒருவேளை கேட்கக்கூடும்.
பல நூற்றாண்டுகளாக அதிக சிரமத்துடன் கையால் பிரதியெடுக்கப்பட்டு வந்ததும் இந்நாளிற்குரிய பிரபலமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டதுமான ஒரு புத்தகத்தில் நாம் எதிர்பார்க்கக்கூடியபடி, ஒருசில எழுத்து பிழைகள் உள்ளே பிரவேசித்தன. ஆனால் அவை எதுவும் முழு பைபிளினுடைய பரிசுத்த ஆவியின் ஏவுதலின் பேரிலோ ஆணையுரிமையின் பேரிலோ சந்தேகத்தை சுமத்தும் அளவுக்கு பரந்த ஒன்றாகவோ முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ இல்லை. கவனமான ஆராய்ச்சியின் மூலம் முரண்பாடு போல் தோன்றக்கூடியவற்றிற்கு நேர்மையான விடை காண்பிக்கப்படலாம். பைபிள் தன்னில்தானே முரண்பாடுள்ளது என்று பல தடவை உரிமைப்பாராட்டக்கூடிய ஆட்களில் பலர் முற்றுமான ஒரு பரிசோதனையை சுயமாக செய்து பார்க்கவில்லை. ஆனால் பைபிள் நம்புவதற்கும் அதனால் இயக்குவிக்கப்படுவதற்கும் விரும்பாத ஆட்களால் எடுத்துரைக்கப்படும் இந்த கருத்துகளையே அவர்கள் வெறுமென ஏற்றுக் கொள்கின்றனர். “காரியத்தைக் கேட்கும் முன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்” என்ற எச்சரிக்கையை பைபிள் நீதிமொழிகள் 18:13-ல் தருகிறது.
சில வேளைகளில், எண் இலக்கம் சம்பந்தப்பட்டவற்றில், நிகழ்ச்சிகளின் வரிசை முறைகளில், மேற்கோள்களை எடுத்துரைப்பதில், மற்றும் இதுபோன்ற காரியங்களில் பைபிள் எழுத்தாளர்கள் எல்லா சமயங்களிலும் ஒத்துப்போவதாக தெரியவில்லை, என்ற தகவலை காண்பித்து சிலர் ஆட்சேபிக்கின்றனர். ஆனால் பின்வருபவற்றை கவனியுங்கள்: ஒரு சம்பவத்தைப் பார்த்த பல்வேறு சாட்சிகளை அழைத்து தாங்கள் எதைப் பார்த்தார்களோ, அதை எழுதிவைக்கும்படி நீங்கள் கேட்பீர்களேயாகில் வார்த்தைகளிலும் விவரங்களிலும் எல்லா பதிவுகளும் முற்றுமாக ஒன்றுபோலிருக்குமா? அவை அப்படியிருக்குமானால் எழுத்தாளர்கள் இரகசியமாக ஒன்றுகூடி எழுதிவைத்துவிட்டார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படாதா? அப்படியிருக்க, பைபிள் எழுத்தாளர்களும் தங்களுடைய சொந்த எழுத்து மொழி நடைகளை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டனர், அதே சமயத்தில் அவருடைய கருத்துகளும் சம்பந்தப்பட்ட தகவல்களும் திருத்தமாக எடுத்துரைக்கப்படுவதை அவர் பார்த்துக் கொண்டார்.
முந்தின எழுத்துகளிலிருந்து எடுத்துக் காட்டப்படும் மேற்கோள்களை புதிய எழுத்தாளரின் தேவைகளையும் நோக்கங்களையும் பூர்த்தி செய்வதற்கு ஏற்றார்போல் அதன் ஆரம்ப வாக்கியங்களிலிருந்து இலேசாக மாற்றியமைக்கப்படலாம். எனினும் அந்த அடிப்படை கருத்தோ அல்லது எண்ணமோ மாற்றப்படுவதில்லை. சம்பவங்களை வரிசைப்படுத்தி வைப்பதைக் குறித்ததிலும் இதுவே சொல்லப்படலாம். ஒரு எழுத்தாளர் கால கணிப்பு முறை சார்ந்த வரிசையை அதிக கண்டிப்புடன் பின்பற்றக்கூடும். மற்றொருவர் சம்பவங்களை அவற்றின் கருத்து தொடர்புக்கு இசைவாக வரிசைப்படுத்தக்கூடும். அதே போல் ஒன்றைவிட்டு விடுவதும்கூட எழுத்தாளரின் நோக்குநிலைக்கேற்பவும் மற்றும் அவர் அந்த பதிவை சுருக்குவதன் காரணமாகவும் இருக்கலாம். ஆகையால், மத்தேயு இயேசுவினால் சுகப்படுத்தப்பட்ட இரண்டு குருடர்களைப் பற்றி பேசினான். ஆனால் மாற்குவும் லூக்காவும் ஒரே ஒருவனைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். (மத்தேயு 20:29-34; மாற்கு 10:46; லூக்கா 18:35) மத்தேயுவின் பதிவு முரணானது அல்ல. அவன் வெறுமென எண்ணிக்கையை குறித்ததில் அதிக திட்டவட்டமாக இருக்கிறான். அதே சமயத்தில் மாற்குவும் லூக்காவும் இயேசு யாருடன் உரையாடினாரோ அந்த ஒரு மனிதன் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார்கள்.
காலத்தை கணக்கிடுவதிலும்கூட வித்தியாசப்பட்ட முறைகள் இருந்தன. யூதா தேசத்தினர் இரண்டு பஞ்சாங்கங்களை பயன்படுத்தினார்கள்.—சமய சார்புள்ள பஞ்சாங்கம் மற்றும் உலகியல் சார்ந்த பஞ்சாங்கம், அல்லது விவசாய பஞ்சாகம்; ஒவ்வொன்றும் ஆண்டின் வித்தியாசப்பட்ட காலப்பகுதியில் ஆரம்பித்தன. ஒருசில நிகழ்ச்சிகளை குறிப்பிடுகையில் எழுத்தாளர்கள் மாதத்திலும் தேதியிலும் வேறுபடுவார்களேயானால் அவர்கள் வெறுமென வித்தியாசப்பட்ட பஞ்சாங்கங்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். கிழக்கத்திய நாட்டவர் அடிக்கடி பின்னத்தை பயன்படுத்தினர். ஓர் ஆண்டின் பகுதிகளை முழுமையான ஆண்டுகளாக கணக்கிட்டார்கள். அவை வெகு அண்மையிலிருந்த முழுமையான எண்ணிற்கு இசைய முழுமையாக்கப்பட்டுவிட்டது. உதாரணமாக, ஆதியாகமம் 5-ம் அதிகாரத்தில் காணப்படும் வம்ச வரலாற்று பதிவேடுகளில் இதை கவனியுங்கள்.
முரண்பாடுகளை “இணக்குவித்தல்”
ஒரு வசனத்திற்கு நேர் முரணாக சொல்லும் மற்றொரு வசனம் பைபிளில் இருக்கிறதல்லவா? பைபிளை குறைகூறுபவர்களால் சுட்டிக்காட்டப்படும் ஒருசிலவற்றைக் கவனிப்போம்.
யோவான் 3:22-ல் இயேசு “ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்” என்று நாம் வாசிக்கிறோம், இன்னும் சற்று கூடுதலாக வாசிக்கையில் யோவான் 4:3-ல் “இயேசு தாமே ஞானஸ்நானம் கொடுக்கவில்லை” என்று வாசிக்கிறோம். மற்ற வேத வசனங்கள் சுட்டிக் காட்டுவதைப் போல் இயேசுவின் சீஷர்கள் தான் உண்மையில் முழுக்காட்டுதல் கொடுக்கும் செயலை அவருடைய நாமத்திலும் அவருடைய வழிநடத்துதலின் கீழும் நடப்பித்து வந்தார்கள். ஒரு குறிப்பிட்ட கடிதத்தை ஒரு அலுவலக அதிகாரி மற்றும் அவருடைய செயலாளர் ஆகிய இருவருமே எழுதினதாக உரிமை பாராட்ட முடியும். இந்த காரியமும் அதற்கு ஒப்பாகவே இருக்கிறது.
கூடுதலாக, ஆதியாகமம் 2:2-ல் தேவன் “தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு” ஓய்ந்திருந்தார் என்று குறிப்பிடும் ஒரு வசனம் இருக்கிறது. இதனை வேறுபடுத்திக் காட்டும் இயேசுவின் குறிப்பு யோவான் 5:17-ல் சொல்வதாவது, பிதா “இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார்.” ஆனால் சூழ்நிலை பொருத்தம் காண்பிக்கிறபடி ஆதியாகமத்தில் உள்ள பதிவு கடவுளுடைய பொருட் சம்பந்தமான சிருஷ்டிப்பு கிரியைகளைப் பற்றி குறிப்பாக பேசுகிறது. ஆனால் இயேசுவோ தேவனுடைய தெய்வீக வழிநடத்துதல் மற்றும் மனிதவர்க்கத்தினரை பராமரித்தல் சம்பந்தப்பட்டதில் அவருடைய கிரியைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
முரண்பாடுபோல் தோன்றக்கூடிய மற்றொன்று யாத்திராகமம் 34:7-ஐ எசேக்கியேல் 18:20-துடன் ஒத்துப் பார்க்கையில் காணப்படுகிறது. முதல் வேத வசனம் “பிதாக்கள் செய்த அக்கிரமத்தை பிள்ளைகளிடத்திலும் பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும்” விசாரிப்பார் என்று சொல்லுகிறது. ஆனால் அடுத்த வேத வசனம், “குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தை சுமப்பதுமில்லை” என்று சொல்லுகிறது. இந்த வேத வசனங்கள் ஏன் முரண்பாடுபோல் தோன்றுகின்றன? ஏனெனில் அவை சூழமைவிலிருந்து தனியே பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதனை சூழ்ந்துள்ள தகவலையும் பின்னணி அமைப்பையும் ஆராய்ந்து பாருங்கள். அப்பொழுதுதானே பிதாக்களை மட்டுமல்லாமல் பிள்ளைகளையும் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் தண்டிப்பேன் என்று கடவுள் ஏன் சொன்னார் என்பது தெளிவாக தெரிகிறது. அதாவது இஸ்ரவேலர் ஒரு ஜனமாக அவருக்கு எதிராக பாவம் செய்து சிறைபட்டு போகையில் என்ன நடக்கும் என்பதையே அவர் பேசிக்கொண்டிருந்தார். மறுபட்சத்தில் குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை என்று குறிப்பிடுகையில், அவர் தனிப்பட்ட கணக்கு கொடுத்தல் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
இயேசுவின் பிறப்பு சம்பந்தப்பட்ட பதிவுகளில் அதாவது மத்தேயு 1:18-25 மற்றும் லூக்கா 1:26-38-ல் உள்ள பதிவுகளில் வித்தியாசங்கள் காணப்படலாம். ஆனால் அவை முரண்பாட்டை சுட்டிக் காட்டுகின்றனவா?
ஒரே பிரபலமான ஆளைப்பற்றிய இரண்டு வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தை நீங்கள் எப்பொழுதாவது வாசித்திருக்கிறீர்களா? அப்படியானால் இந்த வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் கட்டாயமாகவே முரண்பாடுகள் எதுமில்லாமலேயே வித்தியாசப்படுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அவை பெரும்பாலும் அவ்வாறிருப்பதற்கு காரணம் எழுத்தாளரின் தனிப்பட்ட எண்ணப்பதிவுகள் அல்லது அவர் பயன்படுத்தும் ஊற்றுமூலம். ஒரு காரியத்தை தன்னுடைய விவரிப்பில் எடுத்துரைப்பதற்கு எழுத்தாளர் எதை முக்கியமானதாக காண்கிறார் என்பதன் பேரிலும் அவர் விவரித்துக் கொண்டு செல்லும் கோணம், யாருக்காக எழுதுகிறாரோ அந்த ஆட்களை மனதில் கொண்டிருப்பது ஆகியவற்றின் பேரிலும் சார்ந்திருக்கிறது. இவ்வாறாக, புறஜாதி வாசகர்களை மனதில் கொண்டு எழுதப்பட்டவை சில உண்மைகளை ஏற்கெனவே புரிந்துகொண்டும் ஏற்றுக் கொண்டுமிருக்கும் யூதருக்காக எழுதப்பட்டவையிலிருந்து வித்தியாசப்படும்.
கவனமாக பரிசோதனை செய்யாவிடில் ஒன்றுக்கொன்று முரண்பாடுபோல் தோன்றக்கூடிய பைபிள் வாசகங்களில் இவை வெறும் ஒருசில உதாரணங்களேயாகும். ஆனால் எழுத்தாளர்களின் நோக்குநிலையையும் சூழமைவையும் மனதில் கொண்டு கவனமாக ஆராய்கையில் அவற்றில் முரண்பாடுகளே கிடையாது. ஆனால் அவை கூடுதலான ஆராய்சியை தேவைப்படுத்தும் வாக்கியங்களே. பெரும்பாலான ஆட்கள் அவசியமான முயற்சியை எடுக்க தவறுகின்றனர். என்றாலும் “பைபிள் தன்னில்தானே முரண்படுகிறது” என்று வெறுமென சொல்லுவதை அதிக சுலபமானதாக காண்கின்றனர்.
நம்முடைய நம்பிக்கைக்கு தகுதியானது