அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதன் சவால்
ஏனெனில் கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்குத் தனிப்பட்ட முன்மாதிரியைப் பின் வைத்துப்போனார்—1 பேதுரு 2:21, பிலிப்ஸ்.
நீ ங்கள், எப்போதாவது மணற்பரப்பான கடற்கரை ஓரமாகவோ அல்லது பனிமூடப்பட்ட வெளியையோ கடந்து நடக்கும்போது, அங்கு, உங்களுக்கு முன்பாக யாரோ ஒருவர் நடந்து விட்டுச் சென்ற காலடிகளின் மாதிரியால் கவர்ந்திழுக்கப்பட்டவர்களாக உங்களைக் கண்டுணர்ந்திருக்கிறீர்களா? ஒருவேளை, நீங்கள் ஒரே மாதிரியான காலடிகளை தெரிந்து கொண்டு உங்களுடைய சொந்த காலடிகள் கூடியவரையில் அவ்வாறே இருக்கும் அளவுக்கு ஒத்து வைத்து அதைப் பின்தொடர முயற்சி செய்திருக்கிறீர்களா? அவ்வாறு செய்திருந்தீர்களேயானால் அது எளிதான ஒன்றல்ல என நீங்கள் கண்டுணர்ந்திருப்பீர்கள். உண்மையில், வேறொருவருடைய அடிச்சுவடுகளை அடையாள அர்த்தமாகவோ சொல்லர்த்தமாகவோ பின்பற்றுவதானது ஓர் மெய்யான சவால். ஆகிலும் நாம் நம்மை கிறிஸ்தவர்கள் என்றழைத்துக் கொள்வதன் மூலம் இதையே செய்ய, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை கவனமாக பின்பற்ற நம்முடைய விருப்பத்தை காட்டுகிறோம்.
2 இந்தச் சவாலை எதிர்ப்படுவதற்கு தேவையான முயற்சி எடுக்க நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? இதைவிட அதிக மேலாக எது வந்தாலும் அவ்வாறு செய்ய நீங்கள் உறுதிகொண்டவர்களாக இருக்கிறீர்களா? அவ்வாறு இருந்தீர்களேயானால், சொல்லர்த்தமான அடிச்சுவடுகளில் பின்தொடருவதன் கஷ்டங்களை முழுமையாக தெரிந்துணருவீர்கள், மேலும் அது தானே கிறிஸ்துவின் அடையாள அர்த்தமுள்ள அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் உங்களை அதிக வெற்றிகரமுள்ளவர்களாக்கக்கூடும்.
இசைவாக நடக்க கற்றுக்கொள்ளுங்கள்
3 ஒவ்வொருவரும் நடப்பதில் தனி மாதிரியான முறையை உடையவர்களாக இருக்கிறோம். உதாரணமாக, ஒரு நபர் தன்னுடைய பாதத்தை வைப்பதன் பேரில் எவ்வாறு அதன் கோணம் வேறுபடுகிறதோ அதைப் போலவே காலை அகல வைத்து நடப்பதன் அளவும் நபருக்கு நபர் வேறுபடுகிறது. அவருடைய கால்விரல்கள் நேர் முன்னோக்கியவாறு இருக்கலாம், அல்லது உள்நோக்கியோ வெளிநோக்கியோ திரும்பியிருக்கலாம், அதாவது ஒருவேளை இன்னொரு பாதத்தைவிட அதிக தனித்தன்மை வாய்ந்த ஒரு பாதத்தின் கோணத்தில் திரும்பியிருக்கக்கூடும். இந்த சவாலை உங்களால் உணர முடிகிறதா? வேறொருவருடைய அடிச்சுவடுகளில் கவனமாக பின்தொடர நீங்கள் அவருடைய பாத நிலைக்கும் காலை அகல வைத்து நடப்பதன் அளவுக்கும் இசைய நடக்க வேண்டும். தொடக்கத்தில், இது இயல்புக்கு மாறான ஒன்றாக தோன்றக்கூடும், ஆனால், இது செய்தாகவேண்டும். வேறு வழியே கிடையாது.
4 கிறிஸ்து, தன் காலத்தில் வாழ்ந்தவர்களுக்குள்ளே “பாவம் அறியாத” ஒரு பரிபூரண மனிதனாக இருந்ததன் காரணமாக, அவர் நடந்த முறையானது, அடையாள அர்த்தத்துடன் பேசுகையில், தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக இருந்தது. (2 கொரிந்தியர் 5:21) இயல்பாகவே மனிதர்கள் அபூரண பாவிகளாக இருப்பதன் காரணமாக, இயேசுவின் அடிச்சுவடுகளில் நடப்பது அவர்கள் சாதாரணமாக நடக்கும் முறையாக இல்லை. இதைக் குறித்து பவுல், கொரிந்துவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்டிச் சொன்னதாவது: “பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?” இயல்பாகவே அபூரண ஜனங்களிடம், “மாம்சத்தின் கிரியை”களான, பொறாமையினிடமாகவும் வாக்குவாதங்களினிடமாகவும் மனச்சாய்வுகள் இருக்கின்றன. இயேசுவோ அன்பின் வழியில் நடந்தார். மேலும், “அன்புக்குப் பொறாமையில்லை . . . சினமடையாது.” ஆகவே கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடப்பதானது, ஓர் அபூரண ஆளுடைய அடிச்சுவடுகளில் வெறுமென தொடர்ந்து வரும்படி கேட்கப்படுவதைக் காட்டிலும் மிக உயர்ந்த ஓர் சவாலாக அது இருக்கிறது.—1 கொரிந்தியர் 3:3; 13:4, 5; கலாத்தியர் 5:19, 20; எபேசியர் 5:2, 8-ஐயும் பாருங்கள்.
5 அபூரணத்தன்மையைத் தவிர, தேவனுடைய சித்தத்தைப் பற்றிய அறியாமையுங்கூட ஓர் ஆள் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடப்பதிலிருந்து தடை செய்யக்கூடும். பவுல் எபேசிய கிறிஸ்தவர்களை பின்வருமாறு அறிவுறுத்தினான். “மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள் அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்தார்கள்—எபேசியர் 4:17, 18.
6 இன்று, ஜனங்கள் ராஜ்ய பிரசங்கிப்பு வேலையின் மூலம் வீணான ஆதாயங்களை நாடுவதற்கு இருதய கடினத்தினால் தூண்டப்பட்டு புத்தியின் அந்தகாரத்திலும், தேவனுடைய நோக்கங்களைக் குறித்த அறியாமையிலும், தங்கள் இஷ்டமான வழியில் நடப்பதிலுமிருந்து நிறுத்த கட்டாயமாக ஊக்குவிக்கப்படுகிறார்கள். “கிறிஸ்துவுக்குள் நடந்துகொள்ள,” அவருடைய பரிபூரண முன்மாதிரிக்கு இசைய நடக்கும்படி உற்சாகமளிக்கப்படுகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் “எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கி”றார்கள். (கொலோசெயர் 2:6, 7; 2 கொரிந்தியர் 10:5) இப்பேர்ப்பட்ட சவாலை எதிர்பட மனமுவந்த ஜனங்கள் தங்கள் விசுவாசத்தில் உறுதிப்படுத்தப்படுகிறார்கள். கிறிஸ்து நடந்த வழியில் நடப்பதற்கு அவர்கள் நன்கு பழக்கப்படுகையில், அதுதானே அவர்களுக்கு மிகவும் எளிதான ஒன்றாக ஆகிவிடுகிறது.
7 என்றாலும், இது பல முறைகளில் ஓர் சவாலாக இருக்கிறது. பரிபூரண சிருஷ்டிக்கும் அபூரண சிருஷ்டிக்கும் முற்றிலும் வித்தியாசம் இருக்கிறது. ஆகவே ஒரு பரிபூரண முன்மாதிரியைப் பின்பற்ற முற்படுகையில் அபூரண சிருஷ்டிகள் பெரும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். சிலர், சுதந்தரித்திருக்கும் சில காரியங்களினிமித்தமாகவும், சுற்றுப்புற சூழ்நிலைகளின் காரணமாகவும் மற்றவர்கள் செய்வது போல கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கு இணங்கி வருவதைக் கடினமானதாக காணலம். ஆனால் கடும் முயற்சியுடன் பிரயாசப்பட மனமுவந்தவராய் இருக்கும் எவருக்கும் அது கூடிய காரியமாகும் என யெகோவா நமக்கு உறுதியளிக்கிறார். “என்னைப் பெலப்படுத்துகிற அவராலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு,” என பவுல் அப்போஸ்தலன் சொன்னான். (பிலிப்பியர் 4:13, NW; 2 கொரிந்தியர் 4:7-ஐயும் 12:9-ஐயும் பாருங்கள்.) இது அனைத்து கிறிஸ்தவர்களின் விஷயத்திலும் பொருத்தமாகவே இருக்கிறது.
கவனம் செலுத்துங்கள்
8 நாம் எங்கே அடியெடுத்து வைக்கிறோமோ அதன் மீது முழு கவனம் செலுத்தாமல் சொல்லர்த்தமான அடிச்சுவடுகளில் பின் தொடர நம்மால் முடியாது. நம்முடைய கண்கள் நம்மை சூழ நடக்கும் காரியங்களின் பேரிலோ அல்லது மற்ற காரியங்களின் பேரிலோ ஊன்றவைக்கப்பட்டதாய் அலைந்து திரிகிறதென்றால் நாம் ஏதாவது ஒரு சமயம் தவறாக அடியெடுத்து வைத்துவிடுவதன் வரம்புக்குள்ளாகிறோம். நாம் கூர்ந்து கவனித்து முழு கவனத்தையும் ஒருங்கே செலுத்தினால் தவிர பின்பற்றவேண்டிய அடிச்சுவடுகளிலிருந்து நாம் வழி விலகிச் சென்று விடுவோம். இதற்கிணங்க, நம்மிடத்தில் உள்ள வேலைகளின் மீதான மனதை சிதறவைக்கும் முன்னெச்சரிப்பற்ற இரைச்சல்களிலிருந்தோ அல்லது மற்ற எதிர்பாரா கவனச் சிதறல்களிலிருந்தோ விசேஷமாக, நாம் எப்போதும் விழிப்புடனிருப்பதற்கான தேவை இருக்கிறது.—யோபு 18:10, 11-ஐ ஒத்துப் பாருங்கள்.
9 அடையாள அர்த்தமுள்ள விதத்தில், இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றுபவர்களின் விஷயத்திலுங்கூட இது உண்மையானதாக இருக்கிறது. தங்கள் இருதயங்கள் “பெருந்திண்டியினாலும், வெறியினாலும், லவுகீக கவலையினாலும் பாரமடையாதபடிக்கு” தங்களைக் குறித்து கவனமுள்ளவர்களாய் இருக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றினவர்களை எச்சரித்தார். (லூக்கா 21:34) இயேசுவின் அடிச்சுவடுகளிலிருந்து நம்முடைய கவனத்தை அகற்ற இவ்விதமான அன்றாடக கவனச் சிதறல்களை சாத்தான் பயன்படுத்துகிறான். நாம் முன்னெச்சரிக்கையுடன் இல்லாத சமயத்தில் நம்மை இடறிவிழச் செய்ய, எதிர்பாராத சூழ்நிலைமைகளாகிய எதிர்ப்பு, நோய் அல்லது பணவீக்கம் போன்றவற்றை அனுகூலப்படுத்திக்கொள்ள சாத்தான் விரைவாக செயல்படுகிறான். “நாம் விட்டு விலகாதபடிக்கு” இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள நாம் தானே “கேட்டவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும்.” வேறு வார்த்தைகளில் சொன்னால், முன்னிருந்ததைக் காட்டிலும் நாம் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் அதிக கவனமாக கண்களை ஊன்ற வைக்க வேண்டும்.—எபிரெயர் 2:1; 1 யோவான் 2:15-17-ஐயும் பாருங்கள்.
விலகாதிருங்கள்
10 ஜனத்திரள் அடங்கிய கடற்கரையிலே, ஈரமான மணலில் அநேக அடிச்சுவடுகள் பதிந்திருக்கக்கூடும், மேலும் பதிந்து கிடக்கும் சில அடிச்சுவடுகள் நாம் பின் தொடருவதன் குறுக்கே செல்லக்கூடும். பதிந்து கிடக்கும் அநேக அடிச்சுவடுகள் பார்ப்பதற்கு ஓரளவுக்கு ஒரே மாதிரியாக தோன்றக்கூடும். நாம் சரியான அடிச்சுவடுகளை பின்பற்றுகிறோம் என்பதில் நிச்சயமாயிருப்பது, ஆம் எவ்வளவு முக்கியம்! இல்லையென்றால், நாம் தவறான திசையில் செல்பவர்களாக ஏமாற்றமடைவோம். ஆவிக்குரிய கருத்திலே, இதுதானே வினைமையான விளைவுகளை கொண்டிருக்கக்கூடும். காண்பதற்கு சரியானதாக தோன்றக்கூடிய ஆனால் உண்மை நிலையில் சரியல்லாத அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதன் ஆபத்தானது பின்வரும் நீதிமொழியில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதன் முடிவோ மரண வழிகள்.”—நீதிமொழிகள் 16:25.
11 இப்பேர்ப்பட்ட மெய்யான அபாயத்தின் காரணமாகவே, பவுல் பூர்வ கிறிஸ்தவ சபையிலுள்ள தன் சகோதரர்களுக்கு பின்வருமாறு எச்சரிக்கும்படி வலியுறுத்தப்பட்டான். “உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; . . . சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல . . . நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.” (கலாத்தியர் 1:6-9) பவுலின் முன்மாதிரிக்கிசைந்து, இன்று, யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவானது, கள்ள அடிச்சுவடுகளை வைத்துவிட்டு செல்லக்கூடிய கள்ள சகோதரர்களைக் குறித்தும் விசுவாச துரோகிகளைக் குறித்தும் எச்சரித்துக்கொண்டே வருகிறது. தேவ வழிநடத்துதலைக் கொண்டு கிறிஸ்து தங்களுக்கு முன் வைத்துப்போன பாதையிலிருந்து விலக உண்மைக் கிறிஸ்தவர்கள் விரும்புகிறதில்லை.—சங்கீதம் 44:18.
12 கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைக் கொண்ட அடையாளக் குறிகளுக்கு கூர்ந்த கவனத்தை செலுத்துவதன் மூலம் நாம் தவறாக வழிநடத்தப்படுவதிலிருந்து விலக்கப்படுகிறோம். இயேசுவைக் குறித்ததிலும், அவருடைய போதகங்களைக் குறித்ததிலும், கிறிஸ்தவ சபை செயல்படும் முறையைக் குறித்ததிலுமான திருத்தமான அறிவுதானே “ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தை” அடையாளங்கண்டுகொள்ள உதவுகிறது. இதுதானே “கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தை புரட்டு”கிறவர்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. (2 தீமோத்தேயு 1:13) மற்ற பெயரளவில் சுவிசேஷங்கள்—உண்மைத்தன்மையில் கள்ள அடிச்சுவடுகள்—இந்தச் சத்தியத்தின் மாதிரிக்குள் பொருந்துவது கிடையாது. இவை இதை புரட்டி, காரியங்களை ஊன்ற வைப்பதிலிருந்து தொடர்பற்றதாக செய்கிறது. அடிப்படையான பைபிள் சத்தியங்களையும் நியமங்களையும் தெளிவுபடுத்துவதற்கு மாறாக இவை அவற்றிற்கு முரணாக இருக்கின்றன. யெகோவாவின் சேவையில் இன்னுமதிகமாக செயல்பட உற்சாகமளிப்பதற்கு பதிலாக, இவை, சோர்வுறச் செய்யக்கூடிய முறையில் விவாதிக்கின்றன. அவர்களுடைய செய்தி உடன்பாடானதல்ல, மேலும் யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் மகிமைப்படுத்துகிறதில்லை; அவை எதிர்மறையானதும், குற்றங்கண்டுபிடிக்கிறதும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. நிச்சயமாகவே நாம் இத்தகைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற விரும்புகிறதில்லை.
சீரான முன்னேற்றத்தில் தொடர்ந்திருங்கள்
13 நாம் நடக்கையில், நம் கால்களை அகட்டி வைப்பதன் அளவானது நம் நடையின் வேகத்தினால் ஓரளவு தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாகவே, நாம் எவ்வளவு வேகமாக நடக்கிறோமோ, அந்த அளவுக்கு நாமும் நம்முடைய கால்களை அகட்டி வைக்கிறோம். நாம் எவ்வளவு மெதுவாக நடக்கிறோமோ அந்தளவுக்கு நம்முடைய அடிகளும் குறைகின்றன. இவ்வாறு யாரோ ஒருவருடைய சொல்லர்த்தமான அடிச்சுவடுகளை பின்தொடர நாம் அவருடைய வேகத்திற்கு நம்முடைய நடையை இணைவாக வைத்துக் கொள்ள வேண்டும். இதைப்போலவே, நம்முடைய தலைவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய அடையாள அர்த்தமுள்ள அடிச்சுவடுகளில் வெற்றிகரமாக நாம் நடக்க வேண்டுமானால், அவருடைய நடை வேகத்திற்கு இசைய தொடர்ந்து நடக்க வேண்டும்.
14 கிறிஸ்துவின் நடைவேகத்திற்கு இசைய நடக்காமலிருப்பதானது பின்வரும் இரண்டு காரியங்களில் ஒன்றை குறிக்கும். யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்ற இயேசு பயன்படுத்திவரும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யை மீறி துணிச்சலோடு விரைவுபடுத்த முயலுவது அல்லது அந்த “அடிமையின்” வழிநடத்துதலை பின்பற்றுவதில் பின்தங்கி மெதுவாக செயல்படுவது. (மத்தேயு 24:45-47) முதலில் சொல்லப்பட்டதற்கு உதாரணமாக, கடந்த கால சூழல்களில், சில கிறிஸ்தவர்கள், அமைப்பு சார்ந்த அல்லது கொள்கை சார்ந்த மாற்றங்களும் சீர்ப்படுத்துதல்களும் தேவையானது, முன்னமே செய்திருக்கவேண்டியது என உணர்ந்து அவர்கள் சகிக்க மனதில்லாதவர்களானார்கள். காரியங்கள் தாங்கள் விரும்பும் அளவுக்கு வேகமாக செல்கிறதில்லை என அவர்கள் உணர்ந்து, மனசோர்வடைந்தவர்களாக, யெகோவாவின் ஜனங்களிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டார்கள். எவ்வளவு முட்டாள்தனம்! ஆ, எவ்வளவு முன்னறிவு திறமில்லாமை! பலமுறை அவர்களை மன அமைதியற்றவர்களாக செய்த அதே காரியமே பிற்பாடு—யெகோவாவின் உரிய காலத்தில்—மாற்றப்பட்டது.—நீதிமொழிகள் 19:2; பிரசங்கி 7:8, 9.
15 காரியங்கள் எவ்வாறு வேகமாக முன்னேற்றத்தோடு செல்லவேண்டும் என்பதை தூண்ட முயற்சி செய்வதற்கு பதிலாக யெகோவா செயல்படுவதற்கு காத்திருப்பது ஞானமான மார்க்கமாகும். பூர்வ காலத்து அரசனாகிய தாவீது சிறந்த முன்மாதிரியாக இருந்தான். அவன், யெகோவா, அவருக்குரிய காலத்தில் தனக்கு ராஜ்யபார உரிமையை கொடுப்பதற்கு முன்பாக, அதை அரசனாகிய சவுலுக்கு விரோதமாக சதித்திட்டமிட்டு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். (1 சாமுவேல் 24:1-15) அவனைப்போலவே, “தாவீதின் குமாரனாகிய” இயேசுவும் தம்முடைய பரலோக ராஜ்யபாரத்தில் முழுமையாக உட்புக தான் காத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்தார். அவர் தமக்கு பொருந்தும்படி உரைக்கப்பட்ட பின்வரும் தீர்க்கதரிசனத்தை அறிந்திருந்தார்: “உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும்” என்பதே. ஆகவே யூதர்களில் ஒரு தொகுதியினர் அவரை “ராஜாவாக்கும்படிக்குப் பிடித்துக்கொண்டு செல்ல விரும்பினபோது” அவர் உடனே விலகிவிட்டார். (மத்தேயு 21:9; சங்கீதம் 110:1; யோவான் 6:15) எபிரெயர் 10:12, 13-ற்கிசைய சுமார் 30 ஆண்டுகள் கடந்தும் கூட இயேசு தன் ராஜ்யபாரத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். 1914-ல் ஸ்தாபிக்கப்பட்ட கடவுளுடைய ராஜ்யத்தின் உரிமையுள்ள அரசராக பதவியில் அமர்த்தப்படுவதற்கு முன்பு, சற்றேறக்குறைய 19 நூற்றாண்டுகள் அவர் உண்மையில் காத்துக்கொண்டிருந்தார்.
16 என்றாலும், சீரான முன்னேற்றத்தில் தொடர்ந்திருக்க தவறுவதானது படிப்படியாக சோர்வடைவதை, பின்தங்கி மெதுவாக செயல்படுவதையுங் குறிக்கலாம். இதற்கிணங்க, கடவுளுடைய வார்த்தை நம்முடைய வாழ்க்கையில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்று குறிப்பிட்டுக் காட்டினால், நாம் தாமதமின்றி செயல்படுகிறோமா? அல்லது தேவன் பொறுமையாக இருப்பதனால், பின்னால் அப்பேர்ப்பட்ட மாற்றங்களைச் செய்தால் எளிதாயிருக்கும் என எண்ணி விவாதித்திருக்கிறோமா? யெகோவா பொறுமையுடனிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் தேவைப்படுகிற சரிப்படுத்துதல்களைச் செய்வதில் நாம் தளர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் பொறுமையாயில்லை. மாறாக, “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” (2 பேதுரு 3:9, 15) அப்படியானால், “உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி நான் தாமதியாமல் தீவிரித்தேன்” என்று சொன்ன சங்கீதக்காரனைப் பின்பற்றுவது எவ்வளவு சிறந்தது.—சங்கீதம் 119:60.
17 ராஜ்ய பிரசங்கிப்பைக் குறித்ததிலும் நாம் பின்தங்கி, மெதுவாக செயற்படுகிறவர்களாய் இருக்கக்கூடும். மத்தேயு 25-ற்கிணங்க, இயேசு “வெள்ளாடுகளிலிருந்து” “செம்மறியாடுகளைப்” பிரித்து மனிதவர்க்கத்தை நியாயந்தீர்க்கிறார். “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம்” பற்றிய பிரசங்கித்தலின் மூலமே இது பெரும்பாலும் செய்து முடிக்கப்பட்டுவருகிறது. (மத்தேயு 24:14; 25:31-33; வெளிப்படுத்துதல் 14:6, 7) இந்தப் பிரித்தெடுக்கும் வேலையை நிறைவேற்றுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கிற காலமானது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. (மத்தேயு 24:34) கிடைக்கப்பெற்ற காலமானது முடிவை நெருங்குவதனால், இயேசு வேலையை தீவிரமாக்குவதை நாம் எதிர்பார்க்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம், அவர் கடவுளுக்கு உதவும் கருவியாக செயல்படுகிறார், அவர், இந்தக் கூட்டிச்சேர்ப்பு வேலையைப் பற்றி பேசுகிறவராக பின்வருமாறு வாக்களிக்கிறார்: “யெகோவாவாகிய நான் ஏற்றக்காலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.” (ஏசாயா 60:22) அவருடைய குமாரனின் அடிச்சுவடுகளைக் கவனமாக பின்பற்றும் தேவனுடைய உடன் வேலையாட்களாக, நாம், நம்முடைய சரீர சூழ்நிலைகளும் வேதப்பூர்வ உத்தரவாதங்களும் அனுமதிக்கிறவரையில், ராஜ்ய பிரசங்கித்தலின் முன்னேற்ற வேகத்தை தீவிரப்படுத்துகிறோமா? லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் அவ்வாறே செய்கிறார்கள் என வெளி ஊழிய அறிக்கைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன!
மட்டுக்குமீறிய தன்னம்பிக்கையை அறவே வெறுத்தொதுக்குங்கள், உற்சாகமிழக்காமலிருக்க போராடுங்கள்
18 வேறொருவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் நாம் எவ்வளவுக்கெவ்வளவு நீடித்து உறுதியாய் தரித்திருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவருடைய நடக்கும் முறையானது நமக்கு அதிகமாக பழக்கப்பட்டுவிடும். நாம் ஒருவேளை மனநிறைவினையுடையவர்களாக ஆகிவிடுவோமேயானால், ஏதாவது ஒரு சமயம் தவறாக அடியெடுத்து விடுவோம். இவ்வாறு, இயேசுவின் அடையாள அர்த்தமுள்ள அடிச்சுவடுகளைப் பின்பற்றுகையில், நாம் அவருடைய பூரண நடைபாதையில் தேர்ச்சியடைந்துவிட்டோம் என உணர்ந்து, நம்முடைய சொந்த பலத்திலும் திறமைகளிலும் கவனமில்லாமல் சார்ந்து, மட்டுக்குமீறி தன்னம்பிக்கை கொண்டவர்களாக ஆகிவிடுவதன் அபாயத்தை கண்டுணர்ந்துகொள்ளவேண்டும். லூக்கா 22:54-62-ல் பதிவாகியுள்ள பேதுருவின் அனுபவம் சமயோசிதமான எச்சரிப்பாக உதவுகிறது. 1 கொரிந்தியர் 10:12-ன் உண்மைத்தன்மையையும் அது அழுத்திக் காண்பிக்கிறது. அது சொல்வதாவது: “தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.”
19 அபூரணத்தன்மையின் காரணமாக, கிறிஸ்தவர்களில் ஒவ்வொருவரும் அவ்வப்போது தவறாக அடியெடுத்து வைத்துவிடுவதுண்டு. விலகிச்செல்வதானது கொஞ்சம் கொஞ்சமாக நேரிடும் மற்றவர்களால் கவனிக்கப்படாத ஒன்றாக இருக்கலாம். அல்லது எல்லாரும் காணும்படியாக அந்தளவுக்கு வெளிப்படையாக குறியைத் தவறுவதாகவும் இருக்கலாம். எவ்வாறாக இருந்தாலும் பின்வரும் பவுலின் நேர்மையான ஒப்புக்கொள்ளுதலை நினைவில் வைப்பது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது: “ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். நிர்ப்பந்தமான மனுஷன் நான்!” (ரோமர் 7:19, 24) நிச்சயமாகவே, இவ்வார்த்தைகள் தவறு செய்வதற்கான சாக்குப்போக்காக கருதப்படக்கூடாது. மாறாக, குறைபாடுகளுடன் போராடிக்கொண்டிருக்கிற உண்மைத்தவறா கிறிஸ்தவர்களுக்கு இவை ஊக்கமூட்டுதலாக இருக்கின்றன. இயேசுவின் பூரண அடிச்சுவடுகளில் நடப்பதற்கான சவாலை எதிர்ப்பட அவர்கள் எடுக்கும் பிரயாசத்தில் விடாமுயற்சியுடன் தரித்திருக்க இதுதானே அவர்களுக்கு உதவுகிறது.
20 “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்” என நீதிமொழிகள் 24:16 சொல்லுகிறது. ஜீவனுக்கான நம்முடைய ஓட்டத்திலே, அதைக் கைவிடும்படியான வற்புறுத்தலை எவருமே எண்ணக்கூடாது. இவ்வோட்டமானது பணிவுடன் மேற்கொள்ளக்கூடிய மாரத்தான் ஓட்டத்தைப்போல் இருக்கிறது, நூறு கெஜ விரைவோட்டத்தைப்போல் அல்ல. இதில் விரைவாக ஓடுபவன், இலேசாக தவறான ஒரு அடியெடுத்து வைப்பானேயானால், பந்தயத்தில் அவன் நம்பி எதிர்ப்பார்த்த எல்லா வாய்ப்புகளையும் இழக்க நேரிடும். எனினும் மாரத்தான் ஓட்டக்காரனானவன் இடறிவிழந்தாலும்கூட மீண்டும் எழுந்து, ஓட்டத்தைத் தொடர்ந்து, அதை முடிப்பதற்கு நேரமிருக்கிறது. ஆகவே ஏதோ ஒரு தனிப்பட்ட காரியத்தில் தவறாக அடியெடுத்து வைப்பதுதானே “நிர்பந்தமான மனுஷன் நான்!” என நீங்கள் கூக்குரலிடும்படி நேரிட்டால், மீண்டும் சரியான நிலைமைக்கு வர உங்களுக்கு காலமிருக்கிறது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். உங்கள் தலைவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய பாதைகளில் மறுபடியும் வர உங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. நம்பிக்கை இழக்க காரணம் ஏதும் இரா! விட்டுக்கொடுக்க காரணம் ஏதும் இரா! “இயேசுவுடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரு”வதற்கான சவாலை தெய்வீக உதவியுடன் நீங்கள் வெற்றியோடு மேற்கொள்ள தீர்மானமுள்ளவர்களாய் இருங்கள்.—1 பேதுரு 2:21. (w88 5⁄1)
கிறிஸ்தவர்கள் ஏன்
◻ இசைய நடக்க கற்றுக்கொள்ள வேண்டும்?
◻ கூர்ந்த கவனத்தைச் செலுத்த வேண்டும்?
◻ சத்தியத்தின் சட்டத்தை நினைவிற்கொள்ள வேண்டும்?
◻ சீரான முன்னேற்றத்தில் தொடர வேண்டும்?
◻ மட்டுக்குமீறிய தன்னம்பிக்கையை அறவே வெறுத்தொதுக்க வேண்டும்?
◻ உற்சாகமிழக்காமலிருக்க போராட வேண்டும்?
[கேள்விகள்]
1, 2. (எ) எது ஓர் மெய்யான சவாலாக இருக்கக்கூடும், கிறிஸ்தவர்களுக்கு இது ஏன் அக்கறைக்குரிய ஒன்றாக இருக்கிறது? (பி) இங்கு என்ன கேள்விகள் எழுப்பப்படுகின்றன?
3. வேறொருவருடைய அடிச்சுவடுகளை பின்தொடருவதானது தொடக்கத்தில் ஏன் இயல்புக்கு மாறான ஒன்றாக தோன்றக்கூடும்?
4. இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதானது ஏன் தனித்தன்மை வாய்ந்த ஓர் சவாலாக இருக்கிறது?
5, 6. (எ) கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை ஏன் அநேக ஜனங்கள் பின்பற்றுகிறதில்லை, இது பவுல் என்ன புத்திமதியைக் கொடுக்கும்படி வழிநடத்தினது? (பி) இன்று, ஜனங்கள் எப்படிக் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு என்ன விளைபயன்களுடன்?
7. கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதானது பலமுறைகளில் ஓர் சவாலாக இருந்தபோதிலும் அது கூடிய காரியம் என்பதற்கு என்ன நிச்சயம் நமக்கிருக்கிறது?
8, 9. (எ) வேறொருவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகையில் ஏன் கூர்ந்த கவனிப்பும் ஒருமுகப்படுத்தப்பட்ட முழு கவனமும் தேவையானது? (பி) இயேசுவின் அடிச்சுவடுகளிலிருந்து அலைந்துதிரிந்து சென்று விடாதபடிக்கு நம்மை எந்தப் பைபிள் பூர்வ ஆலோசனை தடுத்து நிறுத்தும்?
10. (எ) பதிந்து கிடக்கும் வெவ்வேறான அடிச்சுவடுகள், ஒன்றன்குறுக்கே மற்றொன்று செல்லுமானால் என்ன அபாயம் இருக்கிறது? (பி) ஆவிக்குரிய கருத்திலே, தவறான அடிச்சுவடுகளை பின்பற்றுவதன் விளைவுகள் ஏன் வினைமையானதாக இருக்கும்?
11. பூர்வ கிறிஸ்தவர்களுக்கு பவுல் என்ன எச்சரிக்கை கொடுத்தான், இது இன்று எவருக்கு முன்மாதிரியாக திகழ்கிறது?
12. (எ) கள்ள அடிச்சுவடுகளைப் பின்பற்றி தவறாக வழிநடத்தப்படுவதிலிருந்து விலக, எவ்வாறு 2 தீமோத்தேயு 1:13 நமக்கு உதவுகிறது? (பி) வேறே சுவிசேஷங்களின் தனித்தன்மைகள் எவ்வாறு விளக்கப்பட்டிருக்கின்றன?
13. வேறொருவருடைய அடிச்சுவடுகளைப் பின்தொடருகையில் எப்படி நடை வேகம் உட்பட்டிருக்கிறது?
14. (எ) எந்தெந்த வழிவகைகளில் நாம் இயேசுவின் நடைவேகத்திற்கு இசைய நடக்க மாட்டோம்? (பி) “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யை விட துணிச்சலோடு விரைவாக செல்வது ஏன் முட்டாள்தனமானது?
15. சரியான நடைவேகத்தை காத்துக் கொள்வதில் எவ்வாறு அரசனாகிய தாவீதும் இயேசுவும் சிறந்த முன்மாதிரியாயிருந்தார்கள்?
16. (எ) நாம் எப்போதும் செயல்படுவதை விட எவ்வாறு பின்தங்கி மெதுவாக செயல்படுவோம்? விளக்குக. (பி) யெகோவா பொறுமையாயிருப்பதன் நோக்கம் என்ன? அந்த பொறுமையை தவறான வகையில் பயன்படுத்தாமல் எவ்வாறு விலகியிருக்க வேண்டும்?
17. ராஜ்ய பிரசங்கித்தலுடன், சீரான முன்னேற்றத்தில் தொடர்ந்திருப்பதற்கு என்ன செய்யவேண்டியிருக்கிறது, நம்மை நாமே என்ன கேள்வியை கேட்டுக்கொள்வதற்கு இது நம்மை வழிநடத்துகிறது?
18. ஏன் ஓர் ஆள் மட்டுக்கு மீறிய தன்னம்பிக்கை கொண்டவராக ஆகலாம், இந்த அபாயத்தைப் பற்றி பைபிள் எவ்வாறு எச்சரிக்கிறது?
19. (எ) அவ்வப்போது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் என்ன நேரிடுகிறது? (யாக்கோபு 3:2) (பி) ரோமர் 7:19, 24-ல் உள்ள பவுலின் வார்த்தைகளை நாம் எவ்வாறு கருதவேண்டும்?
20. (எ) ஜீவனுள்ள நம்முடைய ஓட்டத்தில் எப்படி நீதிமொழிகள் 24:16 நமக்கு உதவுகிறது? (பி) நாம் என்ன செய்ய தீர்மானமுள்ளவர்களாக இருக்க வேண்டும்?
[பக்கம் 26-ன் படம்]
தன்னுடைய இலக்கின் பேரில் கண்களை ஊன்றவைப்பதன் மூலம் நிச்சயமாகவே நீதிமான் திரும்பவும் எழுந்திருப்பான்