ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 9-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி பிப்ரவரி 15 காவற்கோபுரத்தையும் பிப்ரவரி 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது பிரசங்கம்) அளிப்பதை நடித்துக் காட்டுங்கள். ஒவ்வொரு நடிப்பிலும் ஒரேவொரு பத்திரிகையை மட்டுமே சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். ஒரு அளிப்பில் ‘எனக்கு என் சொந்த மதம் இருக்கிறது’ என சம்பாஷணையைத் தொடரவிடாமல் இடைமறிப்பவர்களிடம் என்ன சொல்வது என்பதை நடித்துக் காட்ட சொல்லுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 18-19-ஐக் காண்க.
10 நிமி: “யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தை படித்து பயன் பெறுங்கள்.” இந்தக் கட்டுரையின் அடிப்படையில் சபை புத்தகப் படிப்பு கண்காணியின் பேச்சு. பாரா 2-ஐ சிந்திக்கையில் படிப்பு அட்டவணையிடம் கவனத்தைத் திருப்புங்கள். பாரா 3-ஐ சிந்திக்கையில் அப்புத்தகத்தில் பக்கம் 25-லுள்ள பாரா 23-ஐக் கலந்தாலோசியுங்கள்.
25 நிமி: “யெகோவாவின் அருஞ்செயல்களை தொடர்ந்து அறிவியுங்கள்.”a (பாராக்கள் 1-10) ஊழியக் கண்காணி நடத்த வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைப் பயன்படுத்துங்கள். நினைவு ஆசரிப்பு காலத்தில் வெளி ஊழியத்தில் அதிகளவு ஈடுபட உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 90, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 16-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: “கடவுளின் பலத்தால் செய்யப்படும் வேலை.”b அறிவிப்போர் ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 547-8-லுள்ள குறிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 நிமி: “யெகோவாவின் அருஞ்செயல்களை தொடர்ந்து அறிவியுங்கள்.”c (பாராக்கள் 11-17) கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைப் பயன்படுத்துங்கள். மறுசந்திப்பு செய்கையில் நினைவு ஆசரிப்புக்கு வரும்படி ஒரு பிரஸ்தாபி அழைப்பதை சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள்.
பாட்டு 75, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 23-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி மார்ச் 1 காவற்கோபுரத்தையும் பிப்ரவரி 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது பிரசங்கம்) அளிப்பதை நடித்துக் காட்டுங்கள். ஒவ்வொரு நடிப்பிலும் ஒரேவொரு பத்திரிகையை மட்டுமே சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். ஒரு அளிப்பின் முடிவில், அடுத்த முறை சந்திக்கையில் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை உபயோகித்து பதிலளிப்பதற்கு வசதியாக சிந்தனையைத் தூண்டும் கேள்வி ஒன்றை எழுப்புவதை நடித்துக் காட்டுங்கள்.
15 நிமி: “தவறாமல் கூட்டங்களுக்கு செல்வது—முதலிடத்தில்.”d சபையின் ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் கலந்துகொள்ள என்ன செய்திருக்கிறார்கள் என்பதை சொல்லும்படி ஓரிருவரை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: “சபை நடுவில்” யெகோவாவை துதியுங்கள். காவற்கோபுரம், செப்டம்பர் 1, 2003, பக்கங்கள் 19-22-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. (1) கூட்டங்களில் நாம் பதில் சொல்வதற்கான காரணத்தை சங்கீதம் 22:22, 25 எப்படி சிறப்பித்துக் காட்டுகிறது? (2) ஜெபம் ஏன் உதவியாக இருக்கிறது? (3) தயாரிப்பு ஏன் அவசியம்? (4) கூட்டங்களில் நம் எல்லாருக்கும் என்ன இலக்கு இருக்க வேண்டும்? (5) முன் வரிசைகளில் நாம் உட்காருவது ஏன் உதவியாக இருக்கும்? (6) மற்றவர்கள் சொல்லும் பதிலை கேட்பது ஏன் முக்கியம்? (7) நாம் எப்படி சொந்த வார்த்தைகளில் பதிலளிக்கலாம்? (8) நம்முடைய பதில்களால் நாம் எப்படி மற்றவர்களை உற்சாகப்படுத்த முடியும்? (9) நடத்துபவருக்கு என்ன பொறுப்பு உள்ளது?
பாட்டு 81, முடிவு ஜெபம்.
மார்ச் 1-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பிப்ரவரி மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். மார்ச் மாதத்திற்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள்; ஜனவரி 2002, நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் ஆலோசனையாக கொடுக்கப்பட்டுள்ள அளிப்புகளில் ஒன்றை சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள்.
15 நிமி: சக விசுவாசிகளுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுதல். (நீதி. 18:24; 27:9) டிசம்பர் 1, 2000, காவற்கோபுரம், பக்கங்கள் 22-3-ன் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். மெய் வணக்கத்தின் பயன்களில் ஒன்று உண்மையான நண்பர்களைப் பெறுவதற்கான வாய்ப்பாகும். கூட்டங்களில், வெளி ஊழியத்தில், வேறு சந்தர்ப்பங்களில் நாம் அனுபவிக்கும் தோழமை நமக்கு அதிக உற்சாகத்தை அளிக்கிறது. சபையிலுள்ள மற்றவர்களுடன் நாம் எப்படி நட்பை வளர்த்துக்கொள்ள முடியும்? “அழியா நட்புக்கு ஆறு படிகள்” என்ற பெட்டியை மறுபார்வை செய்யுங்கள், நம் சகோதரர்களிடம் நடந்துகொள்ளும் விதத்தில் நாம் எப்படி ஒவ்வொரு குறிப்பையும் பின்பற்றலாம் என்பதன் பேரில் சபையாரைப் பதில் சொல்ல சொல்லுங்கள்.
20 நிமி: “யெகோவா எதிர்பார்ப்பவற்றை நம்மால் செய்ய முடியும்.”e கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைப் பயன்படுத்துங்கள். நேரம் அனுமதித்தால் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை சிறப்பித்துக் காட்டுங்கள்.
பாட்டு எண் 98, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.