ஆகஸ்ட் 5-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 5-ல் துவங்கும் வாரம்
பாட்டு 61; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 22 பாரா. 7-14, பெட்டிகள் பக். 174, 177 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ரோமர் 1-4 (10 நிமி.)
எண் 1: ரோமர் 3:21–4:8 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: உண்மை கிறிஸ்தவர்கள் ஏன் தங்களை இந்த உலகத்தில் ‘அந்நியர்களாகவும் தற்காலிகக் குடிகளாகவும்’ கருதுகிறார்கள்?—1 பே. 2:11; 1 யோ. 2:15-17 (5 நிமி.)
எண் 3: மிகுந்த உபத்திரவத்தின்போது உண்மையுள்ள கிறிஸ்தவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?—நியாயங்காட்டி பக். 315 பாரா 3–பக். 316 பாரா 3 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஆகஸ்ட் மாதத்தில் பத்திரிகைகளை அளிப்பதற்கு ஆலோசனைகள். கலந்தாலோசிப்பு. ஜூலை-செப்டம்பர் விழித்தெழு! பிரதியை உங்கள் பிராந்தியத்திலுள்ள மக்கள் ஏன் விரும்பிப் படிப்பார்கள் என்பதை 30-60 விநாடிகளில் சொல்லுங்கள். பின்பு, விழித்தெழு! அட்டைப்பட கட்டுரை சம்பந்தமாக ஆர்வத்தைத் தூண்டும் என்ன கேள்வியைக் கேட்கலாம் என்றும், எந்த வசனத்தை வாசிக்கலாம் என்றும் சபையாரிடம் கேளுங்கள். பத்திரிகைகளை எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள்.
10 நிமி: சபை தேவைகள்.
10 நிமி: என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. லூக்கா 5:27-32-ஐ வாசியுங்கள். ஊழியத்தில் இந்தப் பதிவு நமக்கு எப்படி உதவும் என்பதைக் கலந்தாலோசியுங்கள்.
பாட்டு 119; ஜெபம்