பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஏசாயா 6-10
மேசியா தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்
அச்சடிக்கப்பட்ட பிரதி
கலிலேயா மாகாணத்தில் மேசியா ஊழியம் செய்வார் என்று இயேசு பிறப்பதற்கு சுமார் 700 வருஷங்களுக்கு முன்பு ஏசாயா சொல்லியிருந்தார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை கலிலேயா முழுவதும் இயேசு சொன்னபோது இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது.—ஏசா 9:1, 2.
முதல் அற்புதத்தைச் செய்தார் —யோவா 2:1-11 (கானா)
அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார் —மாற் 3:13, 14 (கப்பர்நகூம் அருகில்)
மலைப் பிரசங்கத்தில் நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார்—மத் 5:1–7:27 (கப்பர்நகூம் அருகில்)
ஒரு விதவையின் ஒரே மகனை உயிர்த்தெழுப்பினார் —லூ 7:11-17 (நாயீன்)
உயிர்த்தெழுந்த பிறகு 500-க்கும் அதிகமான சீஷர்களுக்குக் காட்சியளித்தார்—1கொ 15:6 (கலிலேயா)