ஜூன் 5-11
எரேமியா 51-52
பாட்டு 37; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே நிறைவேறியது”: (10 நிமி.)
எரே 51:11, 28—பாபிலோன் யாரால் கைப்பற்றப்படும் என்று யெகோவா முன்கூட்டியே சொல்லியிருந்தார் (it-2-E பக். 360 பாரா. 2-3)
எரே 51:30—எதிரி படையை எதிர்த்து பாபிலோனியர்கள் போர் செய்ய மாட்டார்கள் என்று யெகோவா முன்கூட்டியே சொல்லியிருந்தார் (it-2-E பக். 459 பாரா 4)
எரே 51:37, 62—பாபிலோன் கடைசியில் பாழாக்கப்படும் என்றும் யெகோவா முன்னதாகவே சொல்லியிருந்தார் (it-1-E பக். 237 பாரா 1)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எரே 51:25—பாபிலோன் ஏன் “அழிவு உண்டாக்குகிற மலை” என்று அழைக்கப்படுகிறது? (it-2-E பக். 444 பாரா 9)
எரே 51:42—பாபிலோனை “மூழ்கடித்த” “கடல்” எதைக் குறிக்கிறது? (it-2-E பக். 882 பாரா 3)
எரேமியா 51 முதல் 52 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 51:1-11
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒவ்வொரு வீடியோவையும் காட்டிய பிறகு, அதிலிருக்கும் முக்கிய குறிப்புகளைக் கலந்து பேசுங்கள். jw.org வெப்சைட்டில், பைபிள் போதனைகள் > குடும்பத்துக்கு தேவையான உதவி என்ற தலைப்பின்கீழ் இருக்கும் தகவல்களை ஊழியத்தில் காட்டச் சொல்லி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள். மறுசந்திப்பில், குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தைக் கொடுப்பதுபோல் ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“யெகோவாவுடைய வாக்குறுதிகள்மீது உங்களுக்கு பலமான விசுவாசம் இருக்கிறதா?”: (15 நிமி.) கேள்வி-பதில். பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றி சகோதர சகோதரிகளிடம் அடிக்கடி பேசினால் நம் விசுவாசம் பலமாகும். இதை செய்யும்படி சபையாரை உற்சாகப்படுத்துங்கள்.—ரோ 1:11, 12.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 3 பாரா. 16-21
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 4; ஜெபம்