கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கடவுள்பக்தியும் உடற்பயிற்சியும்
உடற்பயிற்சி நன்மை தருமா? தரும். ஆனால், ஆன்மீகப் பயிற்சியோடு ஒப்பிடும்போது அது ஓரளவுக்குத்தான் நன்மை தரும். (1தீ 4:8) அதனால், கிறிஸ்தவர்கள் விளையாட்டுகளுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.
ஸ்போர்ட்ஸ்—என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? என்ற ஒயிட்போர்டு அனிமேஷன் வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
1. விளையாட்டுகளின் மூலம் என்ன திறமைகளை நாம் வளர்த்துக்கொள்ளலாம்?
2. ஒரு விளையாட்டு நமக்கு நல்லதா கெட்டதா என்பதைத் தீர்மானிக்க என்ன மூன்று விஷயங்கள் உதவும்?
3. என்ன விளையாட்டுகளைப் பார்ப்பது அல்லது விளையாடுவது என்பதை முடிவு செய்ய சங்கீதம் 11:5 எப்படி நமக்கு உதவும்?
4. எப்படி விளையாடுவது என்பதை முடிவு செய்ய பிலிப்பியர் 2:3 மற்றும் நீதிமொழிகள் 16:18 எப்படி உதவும்?
5. விளையாட்டுகளைப் பார்ப்பதில் அல்லது விளையாடுவதில் அளவுக்கு அதிகமான நேரத்தைச் செலவிடாமல் இருக்க பிலிப்பியர் 1:10 எப்படி நமக்கு உதவும்?