வெப்சைட் டிப்ஸ்
முதல் பக்கத்தில் வந்த கட்டுரைகளைக் கண்டுபிடியுங்கள்
jw.org வெப்சைட்டின் முதல் பக்கத்தில் வரும் சிறப்புக் கட்டுரைகளை யெகோவாவின் சாட்சிகள் நிறைய பேர் ஊழியத்தில் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கட்டுரைகளை எலெக்ட்ரானிக் வடிவத்தில் அனுப்புவது ரொம்ப ஈஸியாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தக் கட்டுரைகள் பொதுவாக, நம் காலத்தில் எப்படி பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுகின்றன என்று சொல்கின்றன. இந்தக் கட்டுரைகள் “இப்போது நம் ஊழியத்துக்கு ரொம்ப ரொம்பப் பொருத்தமாக இருக்கின்றன” என்று ஒரு சகோதரர் எழுதினார்.
முதல் பக்கத்தில் வரும் இந்தக் கட்டுரைகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கின்றன. அப்படியென்றால், ஏற்கெனவே வந்த கட்டுரைகளை நாம் எங்கே கண்டுபிடிக்கலாம்?
jw.org வெப்சைட்டின் முதல் பக்கத்தில், வலது பக்கம் கொஞ்சம் கீழே பார்த்தால் “இன்னும் பார்க்க” என்ற லின்க் இருக்கும். ஒருவேளை நீங்கள் மொபைலில் பார்த்தால், “சிறப்பம்சங்கள்” என்ற பகுதி முடிந்த பிறகு அந்த லின்க் இருக்கும். அந்த லின்க்கை க்ளிக் செய்தால் “சமீபத்தில் முதல் பக்கத்தில் வந்த சிறப்புக் கட்டுரைகள்” என்ற ஒரு பக்கத்தில், ஏற்கெனவே வந்த சில கட்டுரைகள் இருக்கும்.
jw.org-ல் அல்லது JW லைப்ரரியில், “லைப்ரரி” என்ற தலைப்பை க்ளிக் செய்யுங்கள். அதன்பின், “தொடர்கட்டுரைகள்” என்ற தலைப்பை க்ளிக் செய்துவிட்டு, அதில் “வேறுசில தலைப்புகள்” என்ற லின்க்கை க்ளிக் செய்யுங்கள். அங்குதான், முதல் பக்கத்தில் வந்த நிறைய சிறப்புக் கட்டுரைகள் இருக்கும்.