உங்களுடைய பிள்ளையின் கல்வியும் நீங்களும்
“கல்வியையும் அதனுடைய முக்கியத்துவத்தையும் பற்றிய உங்களுடைய பிள்ளையின் கருத்துக்கள் உங்களில்தானே ஆரம்பமாகின்றன. உங்களுடைய பிள்ளைகள் எதை கனப்படுத்தி எதை பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ அதற்கு நீங்கள் உயிருள்ள முன்மாதிரியாக இருக்க வேண்டும்.”—சிறப்பான கல்வியைப் பற்றி தேசீய பொறுப்பாண்மைக் குழு.
நீவாழம் இடத்தில் பள்ளிகள் எவ்வாறு இருக்கின்றன? அவை சிறப்பாக இருந்தாலும் குறைபாடுள்ளதாக இருந்தாலும், உங்களுடைய பிள்ளை பெரும்பாலும் அதிகமான நேரத்தை அங்கேதானே செலவழிக்கிறான். என்ன விதமான செல்வாக்குகள் அவன் மீது செலுத்தப்படுகின்றன? ஒழுங்காக உங்களுடைய பிள்ளையின் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களோடு நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதே நிச்சயமாக தெரிந்துக்கொள்ள ஒரே வழியாக இருக்கிறது. மேலும் உங்களுடைய பிள்ளையோடு எப்பொழுதும் பேச்சுத் தொடர்பை வைத்துக்கொள்ளுங்கள். பள்ளியின் சம்பந்தமாக அவர்களுக்கிருக்கும் பிரச்னைகள் அல்லது கவலைகளைக் குறித்து விழிப்புள்ளவர்களாய் இருங்கள்.
உண்மைதான், அநேக பெற்றோர்களும்கூட, படிப்பறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நியூ யார்க் நகர தொடக்கப் பள்ளியின் முதல்வர் விழித்தெழு!-விடம் குறிப்பிட்டது போல: “படிப்பறியாத பெற்றோரும்கூட தன்னுடைய பிள்ளையின் கல்வியைக் குறித்ததில் அதிக நம்பிக்கையுள்ளவராக அதை அணுகலாம். தன்னுடைய பிள்ளையை பள்ளிக்கு போகும்படியாக உற்சாகப்படுத்தலாம். பிள்ளை அவனுடைய வீட்டுப் பாடங்களைச் செய்கிறானா என்பதையும் படிப்பதற்கு அவனுக்கு சரியான சூழ்நிலை இருக்கிறதா என்பதையும் நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். “இன்று பள்ளியில் நீ என்ன கற்றுக் கொண்டாய் என்பதாக கேட்பதன் மூலம் பள்ளியில் கற்றுக் கொண்டதை நினைவுக்கு கொண்டுவர உதவலாம்.”
பெற்றோர் கொடுக்கக்கூடிய அதிமுக்கியமான கல்வி “யெகோவாவின் சிட்சையும் மனகட்டுப்பாடுமே” என்பதையும் மறந்துவிடாதீர்கள். (எபேசியர் 6:4) இவ்விதமாக கற்பிக்கப்படும் பிள்ளைக்கு கல்வி சம்பந்தமான திறமைகளில் தேர்ச்சிப் பெறுவதற்கு பலமான தூண்டுதல் இருக்கிறது. (உபாகமம் 17:18, 19; 1 தீமோத்தேயு 4:13 மற்றும் 5:8) அந்த பிள்ளைக்கு சாதனையைப் பற்றிய ஒரு சமநிலையான நோக்கு இருக்கும். அவன் இரக்கமற்ற போட்டிகளை தவிர்க்கிறவனாக இருப்பான். பள்ளியின் அழுத்தங்களையும் சோர்வுகளையும் அவனால் நல்ல முறையில் சமாளிக்க முடியும்.a—பிரசங்கி 4:4; கலாத்தியர் 5:26.
தோல்வியடைந்து கொண்டிருக்கும் பள்ளிகள் மனித ஆட்சி குறைபாடுள்ளது என்பதற்கு அதிகரித்து வரும் அத்தாட்சியின் ஒரு பாகமாக இருக்கிறது. (எரேமியா 10:23) சீக்கிரத்தில் கடவுள் பூமியின் ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொள்வார் என்பதை உலக சம்பவங்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன. (லூக்கா 21:10-28) அவருடைய ஆட்சியின் கீழ் படிப்பறிவு இடைவெளியோ பள்ளிக் கவலையோ இருக்காது. பூமியின் குடிமக்கள் அனைவரும் “யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்.” (ஏசாயா 54:13) மேலும் “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஏசாயா 1:9.
இதற்கிடையில் உங்களுடைய பிள்ளையின் படிப்பில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது பள்ளிகள் சோதனையில் தோல்வியடைந்தாலும் உங்களுடைய பிள்ளை வெற்றி பெறுவான். (g85 9/22)
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு! பத்திரிகையில் 5/8/85, 6/8/85 மற்றும் 7/8/85 வெளியீடுகளில் “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகள் சில நல்ல ஆலோசனைகளைக் கொண்டிருக்கின்றன. கூடுதலாக 1/8/84, 1/22/84, 3/8/84 மற்றும் 3/22/84 ஆங்கில வெளியீடுகளையும் பார்க்கவும்.