உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • te அதி. 13 பக். 55-58
  • இயேசுவின் சீஷரானவர்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசுவின் சீஷரானவர்கள்
  • பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • இதே தகவல்
  • இயேசுவின் சீஷர்கள்
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • இயேசு எந்த விதத்தில் பெரிய போதகர்?
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • இயேசுவின் அன்புக்கு நீங்கள் பிரதிபலிப்பீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • உங்களுக்கு “கிறிஸ்துவின் சிந்தை” இருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
மேலும் பார்க்க
பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
te அதி. 13 பக். 55-58

அதிகாரம் 13

இயேசுவின் சீஷரானவர்கள்

பூமியில் வாழ்ந்த எவரையும் பார்க்கிலும் கடவுளுடைய மிகச் சிறந்த ஊழியராயிருக்கும் ஒருவரைப் பற்றி நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். அவர் யார் என்று உனக்குத் தெரியுமா? — அது சரி. அவர் இயேசு கிறிஸ்துவே.

நீயும் நானும் அவரைப் போல் இருக்கக் கூடுமென்று நீ நினைக்கிறாயா? — நாம் பின்பற்றும்படியாக அவர் நமக்கு முன்மாதிரியை வைத்தார் என்று பைபிள் சொல்லுகிறது. நாம் அவருடைய சீஷராயிருக்கும்படி அவர் நம்மை அழைக்கிறார்.

இயேசுவின் சீஷராக இருப்பதென்றால் அர்த்தமென்ன? — இது பல காரியங்களைக் குறிக்கிறது. இயேசுவின் சீஷராயிருக்க நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதுமட்டுமேயல்ல அவர் சொல்வதை நாம் உண்மையில் நம்பவேண்டும். இயேசு சொல்லுகிற எல்லாவற்றையும் நீ உண்மையில் நம்புகிறாயா? — நாம் உண்மையில் நம்புவோமானால், அவர் நமக்குச் சொல்வதை நாம் செய்வோம், அல்லவா? —

பல ஆட்கள் தாங்கள் இயேசுவில் நம்பிக்கை வைத்திருப்பதாகச் சொல்லுகின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரும் உண்மையில் அவருடைய சீஷராக இருக்கிறார்களா? அப்படி இருக்கிறார்களென்று நீ நினைக்கிறாயா? —

இல்லை; பெரும்பான்மையோர் அப்படி இல்லை. எப்பொழுதாவது ஒரு தடவை அவர்கள் ஒருவேளை கோயிலுக்குப் போகலாம். ஆனால் இயேசு கற்பித்ததைக் கற்றுக்கொள்ள அவர்களில் பலர் ஒருபோதும் நேரத்தைச் செலவிட்டதில்லை. இயேசுவைப் பற்றி அவர்களிடம் பேச நீ முயற்சிசெய்வாயாகில் தங்களுக்கு அதில் சிரத்தை இல்லை என்று ஒருவேளை அவர்கள் சொல்லிவிடுவார்கள். தம்முடைய சீஷர்கள் செய்யவேண்டுமென்று இயேசு கூறின பிரசங்க வேலையில் அவர்கள் பங்குகொள்ளுகிறதும் இல்லை. ஆகவே அவர்கள் உண்மையில் அவருடைய சீஷர்கள் அல்ல.

என்ன வகையான ஆட்கள் இயேசுவின் சீஷர் ஆகின்றனர்? உனக்குத் தெரியுமா? — இயேசு பூமியில் ஒரு மனிதராக இருந்தபோது அவருடைய சீஷராக இருந்தவர்கள் சிலரைச் சந்திப்பது உற்சாக மூட்டுவதாயிருக்கும்.

அவர்களில் சிலர் மீன் பிடிப்பவர்களாக இருந்தனர். ஒரு நாள் இயேசு கலிலேயா கடலோரமாய் நடந்து போகையில் பேதுருவையும் அவனுடைய சகோதரனாகிய அந்திரேயாவையும் கண்டார். அவர்கள் மீன்பிடிக்கும் வலையைக் கடலில் போட்டுக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களை: “என் பின்னே வாருங்கள்,” என்று அழைத்தார்.

இன்னும் சிறிது தூரம் தள்ளிச் சென்றபோது சகோதரரான வேறு இரண்டு மனிதரை இயேசு கண்டார். அவர்களுடைய பெயர் யாக்கோபு, யோவான் என்பதாகும். அவர்கள் தங்கள் தகப்பனுடன் ஒரு படகில் இருந்து, தங்கள் மீன் பிடிக்கும் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு யாக்கோபையும் யோவானையுங்கூட தம்முடைய சீஷராகும்படி அழைத்தார்.

இயேசு உன்னை அழைத்திருந்தாரேயானால், நீ என்ன செய்திருப்பாய்? நீ உடனே இயேசுவோடு போய்விட்டிருப்பாயா? — இயேசு யார் என்பதை இந்த மனிதர் அறிந்திருந்தார்கள். இயேசு கடவுளால் அனுப்பப்பட்டிருந்தார் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே உடனே அவர்கள் தங்கள் மீன் பிடிக்கும் தொழிலை விட்டுவிட்டு இயேசுவுக்குப் பின் சென்றார்கள்.—மத்தேயு 4:18-22.

இந்த மனிதர் அவருக்குப் பின் செல்ல மனமுள்ளவர்களாக இருந்தார்கள் என்பது தெளிவாயிருக்கிறது. சரியானதைச் செய்ய அவர்கள் விரும்பினார்கள், இதுவே முக்கியமானது. ஆனால் அவர்கள் பரிபூரணராக இல்லை. பேதுருவைக் கவனித்துப் பாருங்கள். அவன் தவறான காரியங்களைச் சொல்லி, அது அவனைத் தொந்தரவுக்குள் சிக்க வைத்தச் சமயங்கள் இருந்தன. ஆனால் அவனுக்கு நல்ல இருதயம் இருந்தது. தான் தவறு செய்துவிட்டான் என்று அவன் அறிந்தபோது, தான் ஒரு தவறும் செய்யாதது போல் தோன்றும்படி செய்ய அவன் முயலவில்லை. அவன் செவிகொடுத்து தன்னை மாற்றிக் கொள்ள மனமுள்ளவனாக இருந்தான். பேதுருவைப் போல் நாம் மனமுள்ளவர்களாக இருப்போமானால், நாமும்கூட இயேசுவின் சீஷராகக் கூடும்.

ஐசுவரியவானான ஓர் இளம் அதிபதியினிடங்கூட இயேசு பேசினார். இவ்விதமான ஒரு மனிதன் இயேசுவின் சீஷனாகக் கூடுமா? — அவன் அக்கறைக் காட்டினான். நித்திய ஜீவனை அடைவது எப்படி என்று அவன் இயேசுவைக் கேட்டான். இயேசு அதை அவனுக்கு விளக்கிக் கூறினார். ஆனால், தன்னுடைய செல்வத்தைப் பார்க்கிலும் இயேசுவின் ஒரு சீஷனாக இருப்பதே தன் வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்பதை அந்த மனிதன் கற்றறிந்தபோது, அவன் விசனமடைந்தான். “என்னைப் பின்பற்றி வா,” என்று இயேசு அவனை அழைத்தார். ஆனால் அந்த மனிதன் அவரோடு செல்லவில்லை. கடவுளை நேசித்ததைப் பார்க்கிலும் தன் பணத்தையே அவன் அதிகமாக நேசித்தான்.—லூக்கா 18:18-25.

இயேசு எல்லா வகையான ஆட்களையும் தம்முடைய சீஷராக இருக்கும்படி அழைத்தார். கெட்ட வாழ்க்கையை வாழ்ந்து வந்திருந்தவர்களுங்கூட தங்களை மாற்றிக் கொள்ளக்கூடும். ஆனால் அவர்கள் கற்றுக்கொண்டு மனந்திரும்பி சரியான வழியில் செல்ல மனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் கடவுளைப் பிரியப்படுத்த உண்மையில் விரும்பவேண்டும். நீ செய்ய விரும்புவது அதுதானா? —

இது வரையாக ஆண்களான சீஷர்களைப் பற்றி மாத்திரமே நாம் பேசிக்கொண்டிருந்தோம். இது ஆண்கள் மாத்திரமே இயேசுவின் சீஷராக இருக்கக்கூடும் என்று அர்த்தங்கொள்ளுகிறதா? — இல்லை. பெண்களுங்கூட சீஷரானார்கள். கடவுளைப் பற்றி மற்ற ஜனங்களுக்குச் சொல்வதில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டிருந்த நான்கு குமாரத்திகளைக் கொண்ட ஒரு குடும்பத்தைப் பற்றியுங்கூட பைபிள் சொல்லுகிறது. அது எவ்வளவு சந்தோஷமான ஒரு குடும்பமாக இருந்திருக்க வேண்டும்!—அப்போஸ்தலர் 21:8, 9.

இயேசு கற்பித்துக் கொண்டிருக்கையில், அவர் இளம் பிள்ளைகளில் விசேஷித்த அக்கறை எடுத்தார். அவர் ஏன் அப்படிச் செய்தார்? — பிள்ளைகளுங்கூட தம்முடைய சீஷராகக்கூடும் என்று அவர் அறிந்திருந்தார். பெரியவர்களாக வளர்ந்திருப்பவர்கள் சிறு பிள்ளைகள் செய்ய முடியாத சில காரியங்களைச் செய்யக்கூடும் என்பது உண்மையே. ஆனால் இயேசுவினிடத்திலிருந்து கற்றுக்கொள்ளக் கூடியவர்கள் வளர்ந்த அந்தப் பெரியவர்கள் மாத்திரமே அல்லர். கடவுளைப் பற்றிப் பேசக்கூடியவர்களும் அவர்கள் மாத்திரமே அல்லர். நீயுங்கூட அந்தக் காரியங்களைச் செய்யக்கூடும்.

இயேசுவின் ஒரு சீஷனாயிருக்க நீ விரும்புகிறாயா? — நான் விரும்புகிறேன். உண்மையில் நம்மில் எவரும் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம் அதுவே.

ஆனால், இதை மனதில் வை, நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று வெறுமென சொல்லிக்கொள்வதுதானே நம்மை இந்தப் பெரிய போதகரின் சீஷராக்கி விடுவதில்லை அல்லவா? — நாம் உண்மையில் அவருடைய சீஷராக இருப்போமானால், நாம் செய்யும் ஒவ்வொன்றிலும் அது காட்டப்பட வேண்டும்.

நாம் கடவுளைப் பற்றிப் பேசுகிற கூட்டங்களுக்குப் போகையில் மாத்திரமே கிறிஸ்தவர்களாக இருப்பதாய்ப் பாசாங்கு செய்துகொண்டு, பின்பு மற்ற நேரங்களில் கெட்டவர்களாக இருக்கமாட்டோம். நாம் இங்கே வீட்டில் கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.

மற்றப் பிள்ளைகளோடு விளையாடுகையில் எப்படி நடந்து கொள்ளுகிறாய் என்பதுங்கூட கிறிஸ்தவனாக இருப்பதில் உட்பட்டிருக்கிறதா? — ஒரு மனிதன் தன் வேலையில் இருக்கையில் என்ன செய்கிறான் என்பதையுங்கூட இது பாதிக்க வேண்டுமா? — ஆம், நாம் உண்மையில் இயேசுவின் சீஷராக இருப்போமானால், நாம் எங்கே இருந்தாலும் கவலையில்லாமல், நாள் முழுவதும் அவ்விதம் நடக்கவேண்டும்.

(இப்பொழுது, இயேசுவின் சீஷரைப் பற்றி மத்தேயு 28:19, 20; யோவான் 8:31, 32; லூக்கா 6:13-15 ஆகியவற்றில் பைபிள் என்ன சொல்லுகிறதென்பதை ஒன்றாகச் சேர்ந்து வாசியுங்கள்.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்