அதிகாரம் 16
பாய்ந்தோடும் நான்கு குதிரை வீரர்கள்!
தரிசனம் 3—வெளிப்படுத்துதல் 6:1-17
பொருள்: நான்கு குதிரை வீரர்களின் சவாரி, பலிபீடத்தின் கீழ் உயிர்த்தியாகம் செய்த சாட்சிகள் மற்றும் கோபாக்கினையின் மகா நாள்
நிறைவேற்றத்தின் காலம்: 1914 முதற்கொண்டு இந்த ஒழுங்குமுறையின் அழிவு வரையாக
1. இயேசு திறக்கிற, ஆவலைத் தூண்டுகிற புஸ்தகச் சுருளின் உட்பொருளை யெகோவா எவ்வாறு யோவானுக்கு வெளிப்படுத்துகிறார்?
நெ ருக்கடியான இந்த நாளில், “சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளில்” நாம் மிகுந்த அக்கறையுள்ளவர்களாக இல்லையா? நாம்தாமேயும் உட்பட்டிருப்பதனால், நிச்சயமாகவே நாம் அவ்வாறிருக்கிறோம்! எனவே, இயேசு ஆவலைத் தூண்டுகிற அந்தப் புஸ்தகச் சுருளைத் திறப்பதற்கு செல்லும்போது நாம் இப்போது யோவானுடன் சேர்ந்துகொள்வோமாக. குறிப்பிடத்தக்க வகையில், யோவான் அதை வாசிக்க வேண்டியது இல்லை. ஏன் இல்லை? ஏனெனில், அதனுடைய பொருளடக்கம் அவருக்கு சத்துவம் வாய்ந்த, செயல் நிறைந்த காட்சிகளால் “அடையாளங்களில்” அனுப்பப்படுகிறது.—வெளிப்படுத்துதல் 1:1, 10, NW.
2. (அ) யோவான் எதைப் பார்க்கிறார் மற்றும் அவர் எதைக் கேட்கிறார், கேருபீனின் தோற்றம் என்ன தெரிவிக்கிறது? (ஆ) முதல் கேருபீனின் கட்டளை யாருக்கு சொல்லப்படுகிறது, மேலும் நீங்கள் ஏன் அவ்வாறு பதிலளிக்கிறீர்கள்?
2 இயேசு புஸ்தகச் சுருளின் முதல் முத்திரையை உடைக்கையில் யோவான் சொல்லுவதற்கு கவனம் செலுத்துங்கள்: “ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்துபார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச் சொல்லக் கேட்டேன்.” (வெளிப்படுத்துதல் 6:1) இது முதல் கேருபீனின் சத்தமாயிருக்கிறது. இதனுடைய சிங்கம் போன்ற தோற்றமானது, யோவானுக்கு யெகோவாவின் அமைப்பு அவருடைய நீதியான நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவதில் தைரியத்துடன் செயல்படும் என்பதைத் தெரிவிக்கிறது; மேலும் அந்தக் கட்டளை யாருக்குச் சொல்லப்படுகிறது? இந்தத் தீர்க்கதரிசன காட்சிகளில் பங்குபெற ஏற்கெனவே யோவான் அழைக்கப்பட்டிருப்பதனால், இது யோவானுக்கு இருக்க முடியாது. (வெளிப்படுத்துதல் 4:1) அந்த ‘இடி முழக்கம் போன்ற சத்தம்,’ எழுச்சிகொள்ளச் செய்யும் நான்கு உட்கதைகளின் வரிசையில் முதலில் உள்ள மற்ற பங்கேற்பாளர்களை அழைத்துக் கொண்டிருக்கிறது.
வெள்ளைக் குதிரையும் அதனுடைய புகழ்பெற்ற சவாரியாளனும்
3. (அ) இப்போது யோவான் எதை விவரிக்கிறார்? (ஆ) பைபிளின் அடையாள முறைமைக்கு ஒத்திசைவாக வெள்ளைக் குதிரை எதைப் படமாகக் காட்ட வேண்டும்?
3 யோவானும், அவரோடு வைராக்கியமான யோவான் வகுப்பாரும் மற்றும் இன்றைய கூட்டாளிகளும், வேகமாக செல்லும் ஒரு நாடகத்தைப் பார்க்க சிலாக்கியமளிக்கப்பட்டிருக்கின்றனர்! யோவான் சொல்கிறார்: “நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதன் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.” (வெளிப்படுத்துதல் 6:2) ஆம், அந்த இடிமுழக்கமான “வா” என்பதற்கு விடையாக ஒரு வெள்ளைக் குதிரை முன்னோக்கிப் பாய்கிறது. பைபிளில், குதிரை அடிக்கடி போர் நடவடிக்கையை அடையாளப்படுத்துகிறது. (சங்கீதம் 20:7; நீதிமொழிகள் 21:31; ஏசாயா 31:1) இந்தக் குதிரை, ஒருவேளை ஓர் அழகான பொலிகுதிரை, கறைபடாத பரிசுத்தத்தன்மையை காட்டும், வெண்மையுடன் பளிச்சிடுகிறது. (ஒப்பிடவும்: வெளிப்படுத்துதல் 1:14; 4:4; 7:9; 20:11.) யெகோவாவின் பரிசுத்த கண்களில் சுத்தமாகவும் நீதியாகவும் இருக்கிற போர் நடவடிக்கைகளை வருணிப்பதற்கு இது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!—வெளிப்படுத்துதல் 19:11, 14-ஐயும் காண்க.
4. வெள்ளைக் குதிரையின் சவாரியாளர் யார்? விளக்கவும்.
4 இந்தக் குதிரையின் சவாரியாளர் யார்? அவர் ஒரு வில்லை, யுத்தத்தின் ஒரு தாக்கும் ஆயுதத்தை கொண்டிருக்கிறார், ஆனால் அவர் ஒரு கிரீடமும் கொடுக்கப்பட்டிருக்கிறார். கர்த்தருடைய நாளின்போது கிரீடங்கள் அணிந்தவர்களாக காணப்படுகிற நீதிமான்கள், இயேசுவும் 24 மூப்பர்களால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்கிற வகுப்பாரும் மட்டுமே. (தானியேல் 7:13, 14, 27; லூக்கா 1:31-33; வெளிப்படுத்துதல் 4:4, 10; 14:14)a 24 மூப்பர்களுடைய தொகுதியின் ஓர் உறுப்பினர் அவருடைய சொந்த தகுதியின்பேரில் ஒரு கிரீடத்தைப் பெற்றுக்கொள்வது படமாக காட்டப்பட்டில்லை. எனவே, இந்தத் தனித்த குதிரை வீரர் இயேசு கிறிஸ்துவாகத்தான் இருக்கவேண்டும். வேறு எவரும் இல்லை. யோவான் அவரை பரலோகத்தில் 1914-ன் வரலாற்று சிறப்புமிக்க சமயத்தின்போது காண்கிறார். அப்பொழுது யெகோவா “நான் என்னுடைய ராஜாவை அபிஷேகம் பண்ணி வைத்தேன்” என்று அறிவித்து, மேலும், இது ‘நான் ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாக கொடுக்கும்’ நோக்கத்திற்காக என்று சொல்கிறார். (சங்கீதம் 2:6-8)b இப்படியாக, முதல் முத்திரையை உடைப்பதில் அவர்தாமேயும், எவ்வாறாக புதிதாக முடிசூட்டப்பட்ட அரசராக, தேவனுடைய குறிக்கப்பட்ட காலத்தில் யுத்தத்திற்கு பாய்ந்து செல்கிறார் என்பதை இயேசு வெளிப்படுத்துகிறார்.
5. வெளிப்படுத்துதல் 6:2-க்கு ஒப்பாக சவாரியாளரை சங்கீதக்காரன் எவ்வாறு விவரிக்கிறார்?
5 இந்தக் காட்சி சங்கீதம் 45:4-7 (NW) யெகோவாவால் முடிசூட்டப்பட்ட ராஜாவுக்கு சொல்லப்பட்டதுடன் அழகாக ஒத்திசைகிறது: “சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும். உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனங்கள் உமக்குக் கீழே விழுந்து கொண்டிருப்பார்கள். முடிவில்லாமல், என்றுமுள்ளபடிக்கும் தேவனே உமது சிங்காசனம், உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன், உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்.” அந்தத் தீர்க்கதரிசன விவரங்களை நன்கு அறிந்தவராக, இது ராஜாவாக இயேசுவின் நடவடிக்கைக்குப் பொருந்துகிறதை யோவான் போற்றக்கூடியவராக இருப்பார்.—எபிரெயர் 1:1, 2, 8, 9-ஐ ஒப்பிடவும்.
வெற்றியடைந்து கொண்டு முன்செல்லுதல்
6. (அ) சவாரியாளர் ஏன் ஜெயங்கொள்கிறவராக போகவேண்டும்? (ஆ) எந்த வருடங்களின்போது ஜெயத்தின் சவாரி தொடர்கிறது?
6 இருப்பினும், ஏன், புதிதாக முடிசூட்டப்பட்ட அரசர் யுத்தத்திற்கு சவாரி செய்ய வேண்டும்? இது ஏனெனில் அவருடைய ராஜரீகம், யெகோவாவின் பிரதான எதிரியான, பிசாசாகிய சாத்தானிடமிருந்தும், மேலும் பூமியின் மீது—தெரிந்தோ தெரியாமலோ—சாத்தானுடைய நோக்கத்தை சேவிக்கிறவர்களிடமிருந்தும் வருகிற கசப்பான எதிர்ப்பின் மத்தியிலும், நிலைநாட்டப்பட்டிருக்கிறது. ராஜ்யத்தின் பிறப்புதானேயும் பரலோகத்தில் ஒரு பெரிய யுத்தத்தை தேவைப்படுத்துகிறது. மிகாவேல் (அர்த்தம், “கடவுளைப் போன்று இருப்பவர் யார்?”) என்ற பெயரில் யுத்தம் செய்து, சாத்தானையும் அவனுடைய பேய்களையும் இயேசு மேற்கொள்கிறார். மேலும் அவர்களை பூமிக்குத் தள்ளுகிறார். (வெளிப்படுத்துதல் 12:7-12) இயேசுவின் ஜெயங்கொள்ளும் சவாரியானது கர்த்தருடைய நாளின் ஆரம்ப பத்தாண்டுகளினூடாக செம்மறியாட்டைப் போன்ற மனிதர்கள் கூட்டிச் சேர்க்கப்பட்டுவருகையிலும் தொடர்கிறது. முழு உலகமும் ‘பொல்லாங்கனின் வல்லமைக்குள்’ இன்னும் இருக்கிறபோதிலும், ஒவ்வொருவரும் விசுவாசத்தின் ஜெயத்தை அடைய உதவுவதற்கு இயேசு தம்முடைய அபிஷேகஞ்செய்யப்பட்ட சகோதரர்களையும் அவர்களுடைய கூட்டாளிகளையும் அன்பாகத் தொடர்ந்து மேய்த்துக்கொண்டு வருகிறார்.—1 யோவான் 5:19, NW.
7. கர்த்தருடைய நாளின் முதல் பத்தாண்டுகளில் பூமியின் மீது இயேசு என்ன ஜெயங்களைக் கொண்டிருக்கிறார், மேலும் நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
7 கர்த்தருடைய நாளின் கடந்த 90-க்கும் அதிகமான வருடங்களின்போது இயேசு வேறே என்ன ஜெயங்களைக் கொண்டிருக்கிறார்? உலகம் முழுவதும், தனிப்பட்டவர்களாக மேலும் ஒரு சபையாக, அவருடைய ஊழியத்தைக் குறித்து அத்தாட்சி கொடுப்பதில் அப்போஸ்தலனாகிய பவுலினால் விளக்கப்பட்டதைப் போன்று, யெகோவாவின் மக்கள் அநேக கஷ்டங்கள், அழுத்தங்கள், துன்புறுத்தல்களை அனுபவித்திருக்கின்றனர். (2 கொரிந்தியர் 11:23-28) யெகோவாவின் சாட்சிகளுக்குச் சகித்திருப்பதற்காக, குறிப்பாக யுத்த மற்றும் வன்முறை அரங்குகளில், “மகத்துவமுள்ள வல்லமை” தேவையாக இருந்திருக்கிறது. (2 கொரிந்தியர் 4:7) ஆனால் மிக அதிக கடினமான சூழ்நிலைமைகளிலுங்கூட, உண்மையுள்ள சாட்சிகளால் பவுலைப் போன்று சொல்ல முடிந்திருக்கிறது: ‘என்னாலே பிரசங்கம் நிறைவேறுவதற்காக கர்த்தர் எனக்குத் துணையாக நின்று என்னைப் பலப்படுத்தினார்.’ (2 தீமோத்தேயு 4:17) ஆம், இயேசு அவர்களின் சார்பாக ஜெயங்கொண்டுள்ளார். மேலும் நம்முடைய விசுவாச ஜெயத்தை முடிப்பதற்கு நாம் தீர்மானத்துடன் இருக்கும் வரை, நம்முடைய சார்பாகவும் ஜெயங்கொள்வதற்கு அவர் தொடர்ந்து முன்செல்வார்.—1 யோவான் 5:4.
8, 9. (அ) யெகோவாவின் சாட்சிகளுடைய முழு உலக சபை என்ன ஜெயங்களில் பங்கெடுத்திருக்கிறது? (ஆ) யெகோவாவின் சாட்சிகளுடைய வளர்ச்சி எங்கு உண்மையிலேயே மிகச் சிறப்பாக இருக்கிறது?
8 யெகோவாவின் சாட்சிகளுடைய முழு உலக சபை அதனுடைய ஜெயங்கொள்கிற ராஜாவினுடைய வழிநடத்துதலின் கீழ் அநேக ஜெயங்களில் பங்கெடுத்துள்ளது. மிகச் சிறப்பாக, அவர்கள்தாமேயும் சாத்தானின் அரசியல் அமைப்பினால் தற்காலிகமாக ‘ஜெயங்கொள்ளப்பட்டிருந்தபோது’ அவர் இந்த பைபிள் மாணாக்கர்களை 1918-ல் அழிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தார். இருப்பினும், 1919-ல் அவர்களை மீட்க அவர் சிறைச்சாலை கம்பிகளை உடைத்து, மேலும் நற்செய்தியை “பூமியின் கடைசிபரியந்தமும்” அறிவிப்பதற்கு அவர் அவர்களை உயிர்ப்பூட்டினார்.—வெளிப்படுத்துதல் 13:7; அப்போஸ்தலர் 1:8.
9 இரண்டாம் உலக யுத்தத்தின்போதும் அதற்கு முன்பும், சர்வாதிகார அச்சு வல்லரசுகள் யெகோவாவின் சாட்சிகளை துடைத்தழிப்பதற்கு முயன்றனர். மதத் தலைவர்கள், குறிப்பாக ரோமன் கத்தோலிக்க குருக்கள் ஆட்சியினர், வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அடக்கியாளும் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு கொடுத்த அநேக நாடுகளில் இது இவ்விதமாக இருந்தது. ஆனால், 1939-ல் யுத்தம் தொடங்கினபோது பிரசங்கித்துக் கொண்டிருந்த 71,509 சாட்சிகள் 1945-ல் அது முடிவுக்கு வந்தபோது 1,41,606-ஆக ஆனார்கள். பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் நீண்ட வருடங்களை சிறைகளிலும் சித்திரவதை முகாம்களிலும் செலவிட்டு, மேலும் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டிருந்தபோதிலும்கூட இது இவ்வாறு இருந்தது. உலக முழுவதும் சுறுசுறுப்பான சாட்சிகளின் எண்ணிக்கை இன்று அறுபது லட்சத்துக்கும் மிக அதிகமாகவே விரிவடைந்திருக்கிறது. கத்தோலிக்க நாடுகளில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது. மேலும் துன்புறுத்தல் மிக கொடியதாக இருந்த இடங்களிலும்—ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில், மொத்தமாக 6,00,000-க்கும் அதிகமான சுறுசுறுப்பான ஊழியர்கள் இருப்பதாக சாட்சிகள் இன்று அறிக்கை செய்கின்றனர்.—ஏசாயா 54:17; எரேமியா 1:17-19.
10. ஜெயங்கொள்ளுகிற ராஜா, அவருடைய மக்களை ‘நற்செய்தியை ஆதரித்து அதைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்டுவதில்’ என்ன வெற்றிகளுடன் ஆசீர்வதித்திருக்கிறார்?
10 நம்முடைய ஜெயங்கொள்ளுகிற ராஜா அவருடைய வைராக்கியமுள்ள மக்களை, நீதிமன்றங்களிலும் ஆட்சியாளர்களின் முன்பாகவும் ‘நற்செய்தியை ஆதரித்து அதை சட்டப்பூர்வமாக நிலைநாட்டுவதிலும்’ அநேக வெற்றிகளுக்கு அவர்களை வழிநடத்துவதன் மூலம் ஆசீர்வதித்திருக்கிறார். (பிலிப்பியர் 1:7, NW; மத்தேயு 10:18; 24:9) இது ஒரு சர்வதேச அளவில் இருந்திருக்கிறது—ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, கிரீஸ், இந்தியா, ஸ்வாஸிலாந்து, ஸ்விட்ஸர்லாந்து, துருக்கி, மேலும் மற்ற நாடுகளில். ஐக்கிய மாகாணங்கள் உச்ச நீதிமன்றத்தில் யெகோவாவின் சாட்சிகளால் பெறப்பட்ட 50 சட்டப்பூர்வமான வெற்றிகளில்—நற்செய்தியை “வீட்டுக்கு வீடு வெளியரங்கமாக” அறிவிக்கவும் மேலும் விக்கிரகாராதனைக்குரிய நாட்டுப்பற்று சடங்குகளிலிருந்து விலகியிருக்கவும் உரிமையை உறுதியளித்திருப்பதும்—அடங்கியிருக்கிறது. (அப்போஸ்தலர் 5:42; 20:20, NW; 1 கொரிந்தியர் 10:14) இவ்வாறாக, உலகளாவிய சாட்சி கொடுத்தலின் ஒரு விரிவுபடுத்தலுக்காக வழியானது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
11. (அ) சவாரியாளர் எவ்வாறு ‘அவருடைய ஜெயத்தை முடிக்கிறார்’? (ஆ) இரண்டாவது, மூன்றாவது மேலும் நான்காவது முத்திரைகள் உடைக்கப்படுவதானது நம்மீது என்ன விளைவைக் கொண்டிருக்க வேண்டும்?
11 இயேசு எவ்வாறு ‘அவருடைய ஜெயத்தை முடிவுக்குக்’ கொண்டு வருகிறார்?c நாம் பார்க்கப்போகிற பிரகாரம், பொய் மதத்தை நீக்கிப்போடுவதன் மூலமும் அதற்குப் பிறகு மீந்திருக்கும் சாத்தானின் காணக்கூடிய அமைப்பின் ஒவ்வொரு துண்டுப் பகுதியையும் அடையாளப்பூர்வமான ‘அக்கினிக்கடலாகிய’ அழிவிற்குள் எறிவதன் மூலமும், யெகோவாவின் அரசுரிமையை மெய்ப்பித்துக் காட்டுவதில் அவர் இதைச் செய்கிறார். முழு நம்பிக்கையுடன், நம்முடைய “ராஜாதி ராஜா,” சாத்தானின் அடக்குமுறையான அரசியல் அமைப்பின் மீது பெறப்போகும் இறுதி வெற்றியின் நாளாகிய அர்மகெதோனுக்கு இவ்வாறாக இப்பொழுது நாம் எதிர்நோக்கி இருக்கிறோம்! (வெளிப்படுத்துதல் 16:16; 17:14; 19:2, 14-21; எசேக்கியேல் 25:17) இதற்கிடையில், வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்யும் தோற்கடிக்கப்பட முடியாத ஜெயங்கொள்ளுகிறவர், யெகோவா நேர்மை இருதயமுள்ளவர்களை பூமியின் மீதுள்ள அவருடைய நீதியான தேசத்திற்குத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டிருக்கையில், தொடர்ந்து சவாரி செய்கிறார். (ஏசாயா 26:2; 60:22) அந்த மகிழ்ச்சிக்குரிய ராஜ்ய விஸ்தரிப்பில் அபிஷேகம் செய்யப்பட்ட யோவான் வகுப்பாரோடு நீங்கள் பங்கு கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், அடுத்த மூன்று முத்திரைகள் உடைக்கப்படும்போது அப்போஸ்தலனாகிய யோவான் என்ன பார்க்கிறாரோ அது இன்றைய நாளுக்கான யெகோவாவின் வேலையில் இன்னும் அதிகமாக பங்கேற்பதற்கு சந்தேகமில்லாமல் உங்களைத் தூண்டியெழுப்பும்.
பார், சிவப்புநிறக் குதிரை!
12. அரசராக அவருடைய காணக்கூடாத வந்திருத்தலை அடையாளப்படுத்த இயேசு என்ன சொன்னார்?
12 பூமியின் மீதான இயேசுவினுடைய ஊழியத்தின் முடிவுப் பகுதியில் அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் தனித்திருக்கையில் கேட்டார்கள்: “உம்முடைய வந்திருத்தலுக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” பதில் சொல்கையில், பெரிய அழிவுகளை முன்னறிவித்து, அது “வேதனைகளுக்கு ஓர் ஆரம்பம்” என்றார். இயேசு சொன்னார்: “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும், வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.” (மத்தேயு 24:3, 7, 8, NW; லூக்கா 21:10, 11) புஸ்தகச் சுருளின் மீதமுள்ள முத்திரைகள் உடைக்கப்படும்போது, யோவான் பார்ப்பதானது, அந்தத் தீர்க்கதரிசனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க இணைப்பொருத்தத்தைக் கொடுக்கிறது. மகிமைப்படுத்தப்பட்ட இயேசு இரண்டாவது முத்திரையை உடைக்கையில் இப்போது கவனியுங்கள்!
13. என்ன வேறுபாடு யோவானுக்கு தெரிய இருந்தது?
13 “அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது நீ வந்துபார் என்று சொல்லக் கேட்டேன்.” (வெளிப்படுத்துதல் 6:3) இது இரண்டாவது கேருபீன், இளங்காளையின் தோற்றத்தைக் கொண்டு, கட்டளையைக் கொடுக்கிறது. இங்கு அடையாளப்படுத்தக்கூடிய குணமானது வல்லமையாக இருக்கிறது, ஆனால் வல்லமை நீதியாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், வேறுபட்ட விதத்தில், யோவான் இப்போது பயங்கரமான, மரணத்தை ஏற்படுத்தும் வல்லமையின் வெளிக்காட்டைக் காண இருக்கிறார்.
14. என்ன குதிரை மற்றும் சவாரியாளனை யோவான் அடுத்து பார்க்கிறார், மேலும், இந்தத் தரிசனம் எதைப் படமாகக் காட்டுகிறது?
14 அப்படியானால், “வா” என்ற இந்த இரண்டாவது அழைப்பாணை எவ்வாறு பதிலளிக்கப்படுகிறது? இம்முறையில்: “சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதன் மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 6:4) மெய்யாகவே ஓர் அச்சம் தரும் தரிசனம்! இது எதை படமாகக் காட்டுகிறது என்பதைப் பற்றி சந்தேகமேயில்லை: யுத்தம்! யெகோவாவின் ஜெயங்கொள்ளுகிற ராஜாவுடைய நீதியான, வெற்றிவாய்ந்த யுத்த நடவடிக்கை அல்ல, ஆனால் கொடூரமான, மனிதனால் உண்டாக்கப்பட்ட, தேவையில்லாத இரத்தம் சிந்துதலையும் வேதனையையும் கொண்ட சர்வதேச யுத்த நடவடிக்கை. இந்தச் சவாரியாளன் ஓர் அக்கினி-சிவப்பான குதிரையின் மீது அமர்ந்திருப்பது எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது!
15. இரண்டாவது குதிரையாளனின் சவாரியில் பாகமில்லாதிருக்க நாம் ஏன் விரும்புகிறோம்?
15 நிச்சயமாகவே, யோவான், இந்தக் குதிரையாளனுடனும் அவனுடைய வெகு வேகமான சவாரியுடனும், பங்கைக்கொண்டிருக்க விரும்பமாட்டார், ஏனென்றால் கடவுளுடைய மக்களைப் பற்றி இவ்வாறு தீர்க்கதரிசனமுரைக்கப்பட்டிருக்கிறது: “இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” (ஏசாயா 2:4) இன்னும் “இந்த உலகத்தில்” இருப்பினும், யோவானும் விரிவுப்பொருத்தத்தில், யோவான் வகுப்பாரும் திரள் கூட்டத்தாரும் இன்று இந்த இரத்தக் கறைபடிந்த ஒழுங்குமுறையின் ‘பாகமாக இல்லை.’ நம்முடைய ஆயுதங்கள் ஆவிக்குரியதாகவும், மாம்சத்திற்கேற்ற யுத்த நடவடிக்கைகளாயிராமல் சத்தியத்தை சுறுசுறுப்பாக அறிவிப்பதற்கு “தேவ பலமுள்ளவையாகவும்” இருக்கின்றன.—யோவான் 17:11, 14; 2 கொரிந்தியர் 10:3, 4.
16. எப்போது மேலும் எப்படி சிவப்புக் குதிரை சவாரியாளன் ‘ஒரு பெரிய பட்டயம்’ கொடுக்கப்பட்டான்?
16 வெள்ளைக் குதிரையின் சவாரியாளர் அவருடைய கிரீடத்தைப் பெற்ற வருடம் 1914-க்கு முன்பாக அநேக யுத்தங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இப்போதோ சிவப்புக் குதிரையின் சவாரியாளன் ‘ஒரு பெரிய பட்டயம்’ கொடுக்கப்பட்டிருக்கிறான். இது எதை குறிப்பாகத் தெரிவிக்கிறது? முதல் உலக யுத்தம் வெடித்துக் கிளம்பியதுடன், மனித யுத்த நடவடிக்கைகள் முன் எப்போதும் இருந்ததைக் காட்டிலும் அதிக இரத்த வெறிகொண்ட, அதிக அழிவை ஏற்படுத்துகிறதாக ஆகியிருக்கின்றன. 1914-18-ன் போதான இரத்தக் குளியலில், பீரங்கி வண்டிகள், விஷக் காற்று, ஆகாய விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், மிகப் பெரிய பீரங்கிகள், மேலும் தானியங்கி ஆயுதங்கள் முதல் முறையாகவோ முன் எப்போதுமில்லாதபடியான அளவிலோ பயன்படுத்தப்பட்டன. சில 28 தேசங்களில், வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட படை வீரர்கள் மட்டுமல்ல, ஜனத்தொகை முழுவதுமே யுத்த முயற்சியில் கட்டாயப்படுத்தப்பட்டனர். உயிர்ச்சேதப் புள்ளிவிவரமானது பயங்கரமானதாகவும் இருந்தது. தொண்ணூறு லட்சத்திற்கும் அதிகமான படை வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் பொது மக்கள் உயிர்ச்சேதப் புள்ளிவிவரமானது பேரளவானதாயிருந்தது. யுத்தத்தின் முடிவிலும் கூட, பூமியின் மீது உண்மையான அமைதி திரும்பவில்லை. அந்த யுத்தத்திற்கு 50-க்கும் அதிகமான வருடங்களுக்கு பிறகு, ஜெர்மானிய ஆட்சி வல்லுநர் கான்ராடு அடினாவர் விமர்சித்தார்: “1914 முதற்கொண்டு மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து பாதுகாப்பும் அமைதியும் மறைந்துவிட்டிருக்கிறது.” உண்மையாகவே, அக்கினி-நிறமுடைய குதிரை சவாரியாளனுக்கு பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டதாக இது இருந்தது!
17. முதல் உலக யுத்தத்தைத் தொடர்ந்து ‘பெரிய பட்டயத்தை’ பயன்படுத்துதல் எவ்வாறு தொடர்ந்திருக்கிறது?
17 பிறகு, சிவப்பு நிற குதிரை சவாரியாளன், இரத்த தாகம் தூண்டப்பட்டவனாக, இரண்டாம் உலக யுத்தத்தில் குதித்தான். படுகொலையின் கருவிகள் இன்னும் அதிக கொடூரமானது, மேலும் உயிர்ச்சேதப் புள்ளிவிவரம் முதல் உலக யுத்தத்தைக் காட்டிலும் நான்கு மடங்குக்கு உயர்ந்தது. 1945-ல் இரண்டு அணு குண்டுகள் ஜப்பானின் மீது வெடிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் பல பத்தாயிரக்கணக்கானவர்களை ஒரு கணத்தில் முழுவதுமாக அழித்துப் போட்டது. இரண்டாவது உலக யுத்தத்தின்போது, சிவப்புக் குதிரை சவாரியாளன் 5.5 கோடி உயிர்களின் ஒரு பெரிய அறுவடையை அறுவடை செய்தான். அப்போதுங்கூட அவன் திருப்தியடையவில்லை. இரண்டாவது உலக யுத்தத்திலிருந்து ‘பெரிய பட்டயத்தின்’ கீழ் 2 கோடிக்கும் அதிகமான ஆத்துமாக்கள் வீழ்ந்திருக்கிறது என்பதாக நம்பகமான அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
18, 19. (அ) இராணுவ தொழில்நுட்பத் திறனுக்கு ஒரு வெற்றியாக இருப்பதற்கு பதிலாக, இரண்டாவது உலக யுத்தம் முதல் படுகொலையானது எந்த உண்மைக்கு அத்தாட்சியாக இருக்கிறது? (ஆ) என்ன ஆபத்து மனிதகுலத்தை எதிர்ப்படுகிறது, ஆனால் வெள்ளைக் குதிரையின் மீது சவாரி செய்பவர் அதை சரியீடு செய்ய என்ன செய்வார்?
18 இராணுவ தொழில்நுட்பத் திறனுக்கான ஒரு வெற்றி என்பதாக இதை நாம் அழைக்க முடியுமா? மாறாக, இது, அந்த இரக்கமற்ற சிவப்புக் குதிரை பாய்ந்தோடுகிறது என்பதற்கான ஓர் அத்தாட்சியே. மேலும், அந்தக் குதிரையின் ஓட்டம் எங்கே முடிவடையும்? ஒரு தற்செயலான அணுயுத்தம் நிகழும் சாத்தியம் இருப்பதாக சில விஞ்ஞானிகள் பேசிக்கொள்கிறார்கள்—ஒரு திட்டமிடப்பட்ட அணு பேரழிவைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை! ஆனால் மகிழ்ச்சிகரமாக, வெள்ளைக் குதிரையின் ஜெயங்கொள்ளுகிற சவாரியாளர் இதைப் பற்றி வேறு எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்.
19 சமுதாயமானது, தேசிய தற்பெருமை மற்றும் பகைமையின் மீது அமைக்கப்பட்டிருக்கும் வரை, மனிதவர்க்கமானது அணு ஆபத்தின் பீப்பாயின் மீது தொடர்ந்து அமர்ந்திருக்க வேண்டியதுதான். தேசங்கள், நம்பிக்கையற்ற நிலையினால், எல்லா அணு எரிசக்தியையும் நீக்கிப்போட்டாலும், அவர்கள் அவற்றை செய்யும் அறிவை வைத்திருப்பார்கள். தாமதமில்லாமல், அவர்களுடைய கொலைத்தனமான அணு சாதனங்களை அவர்கள் உற்பத்தி செய்ய முடியும்; ஆகவே, மரபு வழக்கமான [அணுகுண்டல்லாத] ஆயுதங்களையுடைய எந்த யுத்தமும் ஒரு பெரிய பேரழிவுக்கும் சீக்கிரத்தில் திடீரென்று வளர்ச்சியடையும். வெள்ளைக் குதிரையின் சவாரியாளர் அக்கினி நிறமான குதிரையின் மீது அமர்ந்து பைத்தியக்காரத்தனமாக பாய்ந்தோடும் சவாரியாளனுக்கு முன் சென்று, ஆம், தடை செய்தாலே ஒழிய இன்று தேசங்களை மூடியிருக்கிற தற்பெருமையும் பகைமையும் மனித இனத்தின் தற்கொலைக்கு வழிநடத்தும். சாத்தானால் கட்டுப்படுத்தப்பட்ட உலகத்தின் மீது தம்முடைய ஜெயத்தை முடிக்கவும், பைத்தியக்காரத்தனமான நம்முடைய காலங்களின் நிலையற்ற அணுசார்ந்த தடைகளைவிட மிக அதிக மேம்பட்ட ஒரு சக்தியாகிய அன்பின்—கடவுள் மற்றும் அயலான் மீதான அன்பின்—அடிப்படையிலான ஒரு புதிய பூமிக்குரிய சமுதாயத்தை நிலைநாட்டவும் ராஜாவாகிய இயேசு சவாரி செய்வார் என்று நாம் முழு நம்பிக்கையோடிருப்போமாக.—சங்கீதம் 37:9-11; மாற்கு 12:29-31; வெளிப்படுத்துதல் 21:1-5.
ஒரு கருப்புக் குதிரை பாய்ந்தோடி வருகிறது
20. வெள்ளைக் குதிரை சவாரியாளர் எந்த ஒரு பெரிய இடையூரான நிலைமையையும் சமாளிப்பார் என்பதற்கு என்ன உறுதியை நாம் கொண்டிருக்கிறோம்?
20 இப்போது இயேசு மூன்றாவது முத்திரையை உடைக்கிறார்! யோவான் நீ என்ன காண்கிறாய்? “அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லக் கேட்டேன்.” (வெளிப்படுத்துதல் 6:5அ) மகிழ்ச்சிகரமாக, இந்த மூன்றாவது கேருபீன் ‘மனுஷமுகம் போன்ற முகத்தைக்’ கொண்டிருக்கிறது, அன்பின் குணத்தைக் காட்டுகிறது. இன்று அந்தச் சிறந்த குணம் யெகோவாவின் அமைப்பு முழுவதிலும் ஊடுருவிப் பரவியிருப்பதைப் போலவே நியமத்திற்குட்பட்ட அன்பு கடவுளுடைய புதிய உலகில் எங்கும் நிறைந்திருக்கும். (வெளிப்படுத்துதல் 4:7; 1 யோவான் 4:16) ‘எல்லாச் சத்துருக்களையும் தேவன் தமது பாதத்திற்குக் கீழாக்கிப் போடும் வரைக்கும், அரசராக ஆளுகை செய்யவேண்டிய’ வெள்ளைக் குதிரையின் சவாரியாளர், யோவானின் நுண்ணாய்விற்கு அடுத்ததாகக் கொண்டுவரப்படுகிற பெரிய இடையூறுகள் நிறைந்த நிலைமையை அன்பாக அகற்றிப் போடுவார் என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம்.—1 கொரிந்தியர் 15:25.
21. (அ) கறுப்புக் குதிரை மேலும் அதனுடைய சவாரியாளன் மூலமாக என்ன படமாகக் காட்டப்பட்டிருக்கிறது? (ஆ) கறுப்புக் குதிரை இன்னும் மூர்க்கத்தனமாக இருக்கிறது என்பதை எது நிரூபிக்கிறது?
21 “நீ வந்து பார்” என்ற மூன்றாவது ஆணைக்கு பிரதிபலிக்கையில் யோவான் என்ன பார்க்கிறார்? “நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன்; அதின் மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.” (வெளிப்படுத்துதல் 6:5ஆ) முழுமையான பஞ்சம்! அதுதானே அந்தத் தீர்க்கதரிசன காட்சியின் அச்சமூட்டுகிற செய்தியாக இருக்கிறது. கர்த்தருடைய நாளின் ஆரம்பப் பகுதியின்போது உணவானது தராசைக் கொண்டு பங்கிட்டுக் கொடுக்கப்படும், என்ற நிலைமைகளை இது முன்னதாகச் சுட்டிக்காட்டுகிறது. 1914-லிருந்து, பஞ்சமானது தொடர்ந்து இருக்கக்கூடிய ஓர் உலகளாவிய பிரச்சினையாக இருக்கிறது. நவீன கால யுத்த நடவடிக்கைகள் பொதுவாகப் பசியிலிருப்போரை போஷிப்பதில் பயன்படுத்துகிற வள ஆதாரங்களைப் போர் ஆயுதங்கள் அளிக்கப்படுவதற்கு அடிக்கடி திருப்பிவிடப்படுகிறது, அது தொடர்ந்து பஞ்சத்தைக் கொண்டு வருகிறது. பண்ணை வேலையாட்கள் இராணுவப் பணிக்கு கட்டாயமாக சேர்க்கப்படுகிறார்கள், யுத்தத்தினால்—சிதைவுற்ற வயல்களும், எதிரிக்கு விட்டுக்கொடுப்பதற்கு முன் அழிக்கும் கொள்கைகளும் உணவு உற்பத்தியைக் குறைத்துப் போடுகின்றன. முதல் உலக யுத்தத்தின்போது, லட்சக்கணக்கானவர்கள் பசியினால் துன்பப்பட்டு இறந்துபோனபோது இது எவ்வளவு உண்மையாக இருந்தது! மேலுமாக, பஞ்சத்தின் கருப்புக் குதிரை சவாரியாளன் யுத்த முடிவுடன் சாந்தமடைந்துவிடவில்லை. 1930-களின்போது, உக்ரெய்னில் ஒரே ஒரு பஞ்சத்தில் ஐம்பது லட்சம் பேர் மாண்டனர். இரண்டாவது உலக யுத்தம் அதை பின்தொடர்ந்து அதிக உணவு பற்றாக்குறைகளையும் பஞ்சங்களையும் கொண்டு வந்தது. கறுப்புக் குதிரையானது அதனுடைய பாய்ந்தோடுதலை தொடர்ந்து கொண்டிருக்கையில், உலக உணவு ஆலோசனைக் குழு, 1987-ன் மத்தியில் 5,120 லட்சம் மனிதர்கள் பட்டினியிலிருக்கிறார்கள் என்றும், ஒவ்வொரு நாளும் 40,000 குழந்தைகள் பசி சம்பந்தமான பாதிப்புகளினால் இறக்கின்றனர் என்றும் அறிவித்தது.
22. (அ) என்ன தேவை என்பதை விவரித்து ஒரு சத்தம் என்ன சொல்கிறது? (ஆ) ஒரு பங்கு கோதுமை மற்றும் மூன்று பங்கு வாற்கோதுமையின் விலையின் மூலம் குறிப்பிடப்பட்டிருப்பது என்ன?
22 யோவான் நமக்குச் சொல்வதற்கு அதிகத்தைக் கொண்டு இருக்கிறார்: “அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்று படி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.” (வெளிப்படுத்துதல் 6:6) உணவு அளிப்பை ஜாக்கிரதையாக கவனிக்க வேண்டிய ஒரு தேவையை விவரிப்பதில் எல்லா நான்கு கேருபீன்களும் ஐக்கியப்பட்டிருக்கின்றன—பொ.ச.மு. 607-ல் எருசலேமின் அழிவிற்கு முன் ‘அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட’ வேண்டியிருந்த மக்களைப் போன்று. (எசேக்கியேல் 4:17) யோவானின் காலத்தில், ஒரு படி அளவான கோதுமையானது ஒரு படைவீரனுக்கு ஒரு நாளுக்கான பங்காயிருந்தது. அப்படிப்பட்ட ஒரு பங்கானது என்ன மதிப்பாயிருக்கும்? ஒரு பணம் [ஒரு தினாரியஸ்]—ஒரு முழு நாளின் கூலி! (மத்தேயு 20:2)d ஒரு மனிதனுக்கு ஒரு குடும்பம் இருந்தால் அப்போது என்ன? அதற்கு பதிலாக, தீட்டப்படாத, வாற்கோதுமையை மூன்று பங்கு வாங்கிக்கொள்ளலாம். இருப்பினும், அது ஒரு சிறிய குடும்பத்தை மட்டுமே போஷிக்க முடியும். மேலும் வாற்கோதுமையானது, கோதுமையைப் போன்று ஒரு தரமான உணவாகக் கருதப்படவில்லை.
23. “எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே” என்ற வாக்கியத்தின் மூலம் குறிப்பிடப்பட்டிருப்பது என்ன?
23 “எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே,” என்ற வாக்கியத்தின் மூலம் குறிப்பிடப்பட்டிருப்பது என்ன? இதை, உணவு பற்றாக்குறையுடனும் பட்டினியாகக்கூட அநேகர் இருப்பினும், பணக்காரர்களின் இன்பப் பொருள்கள் சேதமடையாது என்று அர்த்தப்படுத்துவதாக சிலர் கருதியிருக்கின்றனர். ஆனால், மத்திய கிழக்கில், எண்ணெயும் திராட்சரசமும் உண்மையிலேயே இன்பப் பொருள்களாக இல்லை. பைபிள் காலங்களின்போது, அப்பம், எண்ணெய், மற்றும் திராட்சரசம் சாதாரண உணவுப் பொருட்களாக கருதப்பட்டன. (ஒப்பிடவும்: ஆதியாகமம் 14:18; சங்கீதம் 104:14, 15.) தண்ணீர் எல்லா சமயங்களிலும் நல்லதாக இல்லை, அதனால் திராட்சரசமானது குடிப்பதற்கு பரவலாக பயன்படுத்தப்பட்டது. மேலும் சில சமயங்களில் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது. (1 தீமோத்தேயு 5:23) எண்ணெயைப் பற்றியதில், எலியாவின் நாளில் சாரிபாத்தைச் சேர்ந்த ஒரு விதவை ஏழையாயிருந்தும், அவளிடம் மீதமிருந்த மாவைச் சமைப்பதற்கு கொஞ்சம் எண்ணெயை உடையவளாக இருந்தாள். (1 இராஜாக்கள் 17:12) ஆகவே, “எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே” என்ற கட்டளையானது, இந்த அடிப்படை பொருட்களை அதிக விரைவாக பயன்படுத்தாமல், சிக்கனமாயிருக்க வேண்டும் என்ற அறிவுரையாகத் தோன்றுகிறது. அப்படியில்லையென்றால், அவை ‘சேதமாகிவிடும்,’ அதாவது பஞ்சம் முடிவதற்கு முன்பாக தீர்ந்துவிடும்.
24. கறுப்புக் குதிரையானது அதனுடைய ஓட்டத்தை அதிக நீண்ட நாட்களுக்கு ஏன் தொடராது?
24 வெள்ளைக் குதிரையின் சவாரியாளர், அந்தப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் கறுப்புக் குதிரையை விரைவில் அடக்கிவிடுவார் என்பதினால் நாம் எவ்வளவு மகிழ்ச்சியோடு இருக்கக்கூடும்! புதிய உலகத்திற்காக அவருடைய அன்பான ஏற்பாடு சம்பந்தமாக இவ்விதம் எழுதப்பட்டிருக்கிறது: “அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ள வரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும் . . . பூமியின் மீது உணவுத் தானியங்கள் நிறைந்திருக்கும்; மலைகளின் உச்சியின் மீது பொங்கி வழியும்.”—சங்கீதம் 72:7, 16, NW; ஏசாயா 25:6-8-யும் காண்க.
மங்கின நிறமுள்ள குதிரையும் அதனுடைய சவாரியாளனும்
25. இயேசு நான்காவது முத்திரையை உடைக்கையில், யோவான் யாருடைய சத்தத்தைக் கேட்கிறார், மேலும் இது எதை அர்த்தப்படுத்துகிறது?
25 சம்பவங்களின் விவரிப்பானது இன்னும் முழுவதுமாக சொல்லப்படவில்லை. இயேசு நான்காவது முத்திரையை உடைக்கிறார், யோவான் விளைவை நமக்குச் சொல்கிறார்: “அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்.” (வெளிப்படுத்துதல் 6:7) இது பறக்கும் கழுகைப் போன்றிருக்கிற கேருபீனின் சத்தமாக இருக்கிறது. தூரப் பார்வையுள்ள ஞானம் குறிப்பிடப்பட்டிருக்கிறது, மேலும் உண்மையாகவே யோவான், யோவான் வகுப்பார், மற்ற தேவனுடைய பூமிக்குரிய அனைத்து ஊழியர்களும், இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு உட்பார்வையுடன் கவனிக்கவும் செயல்படவும் வேண்டிய தேவையிருக்கிறது. அப்படிச் செய்கையில், இன்றைய நாளின் பெருமை வாய்ந்த, ஒழுக்கங்கெட்ட சந்ததியின் உலக-ஞானவான்களைத் தொந்தரவு செய்யும் வாதனைகளிலிருந்து ஓரளவான பாதுகாப்பை நாம் கண்டடையக்கூடும்.—1 கொரிந்தியர் 1:20, 21.
26. (அ) நான்காவது குதிரை சவாரியாளன் யார், மேலும் அவனுடைய குதிரையின் நிறம் ஏன் பொருத்தமாக இருக்கிறது? (ஆ) நான்காவது குதிரை சவாரியாளனைப் பின்தொடர்வது யார், மேலும் அவனுடைய பலி ஆட்களுக்கு என்ன நேரிடுகிறது?
26 நான்காவது குதிரை சவாரியாளன் அழைப்பிற்கு பிரதிபலிக்கையில், என்ன புதிய பயங்கரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன? யோவான் நமக்குச் சொல்கிறார்: “நான் பார்த்தபோது, இதோ மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன் பின் சென்றது.” (வெளிப்படுத்துதல் 6:8அ) கடைசிக் குதிரையின் சவாரியாளன் ஒரு பெயரைக் கொண்டிருக்கிறான்: மரணம். திருவெளிப்பாட்டின் நான்கு குதிரை வீரர்களில் ஒருவன் மட்டுமே அவனுடைய அடையாளத்தை அவ்வளவு நேரடியாக வெளிப்படுத்துகிறான். பொருத்தமாகவே, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையின் மீது மரணம் சவாரி செய்கிறது. ஏனென்றால், மங்கின (கிரேக்குவில், க்ளோரோஸ் [khlo·rosʹ]) என்ற வார்த்தை கிரேக்க இலக்கியத்தில் வியாதியால் ஏற்பட்டது போன்ற வெளிறிப் போன முகங்களை விவரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் பொருத்தமாகவே, மரணமானது ஹேடிஸினால் (கல்லறை) விளக்கப்படாத ஏதோ முறையில் பின்தொடரப்படுகிறது. ஏனெனில் ஹேடீஸானது நான்காவது குதிரை சவாரியாளனின் பாழ்க்கடிப்புகளுக்கு பலியான பெரும்பாலோரை தன்னுள் பெற்றுக்கொள்ளுகிறது. மகிழ்ச்சிகரமாகவே, ‘மரணமும் ஹேடீஸும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவிக்கும்போது’ இவர்களுக்கு உயிர்த்தெழுதல் உண்டாகும். (வெளிப்படுத்துதல் 20:13, NW) ஆனால் மரணமானது அந்தப் பலியாட்களை எவ்வாறு பெறுகிறது?
27. (அ) மரணம் என்னும் சவாரியாளன் எவ்விதம் அவனுடைய பலியாட்களைத் தனக்கு உரிமையாக்குகிறான்? (ஆ) மரணம் ‘பூமியின் காற்பங்கிலுள்ளவர்கள்’ மீது அதிகாரத்தை உடையதாக இருக்கிறது என்பதன் அர்த்தம் என்ன?
27 வழிகளில் சிலவற்றை தரிசனம் வரிசைப்படுத்திக் கூறுகிறது: “பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும் [மரணத்திற்கேதுவான கொள்ளை நோயினாலும், NW] பூமியின் துஷ்டமிருகங்களினாலும் பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 6:8ஆ) சொல்லர்த்தமாக பூமியின் ஜனத்தொகையில் நான்கில் ஒரு பங்காக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் பூமியின் பெரும் பகுதி, நெருக்கமாகவோ சிதறியுள்ள வகையிலோ குடியிருந்தாலும் சரி இந்தச் சவாரியினால் பாதிக்கப்படுவார்கள். இந்தக் குதிரை சவாரியாளன், இரண்டாவது குதிரை சவாரியாளனின் பெரிய பட்டயத்திற்கும் மேலும் மூன்றாவதின் பஞ்சங்கள், உணவு பற்றாக்குறைகளினால் பலியானவர்களையும் அறுவடை செய்கிறான். அவன் லூக்கா 21:10, 11-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி மரணத்திற்கேதுவான கொள்ளை நோயிலிருந்தும் பூமியதிர்ச்சிகளிலிருந்தும் தன்னுடைய சொந்த அறுவடையையும்கூட அறுவடை செய்கிறான்.
28. (அ) ‘மரணத்திற்கேதுவான கொள்ளை நோய்’ பற்றிய தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியிருக்கிறது? (ஆ) இன்று யெகோவாவின் மக்கள் அநேக நோய்களிலிருந்து எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்?
28 இங்கே தற்காலத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது ‘மரணத்துக்கேதுவான கொள்ளை நோய்.’ முதல் உலக யுத்தத்தின் பாழ்க்கடிப்புகளைத் தொடர்ந்து, 1918-19-ன் ஒரு சில மாதங்களிலே ஸ்பானிஷ் சளிக்காய்ச்சல் 2 கோடிக்கும் அதிகமான ஆட்களை அறுவடை செய்தது. பூமியின் மீதான இந்தப் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொண்ட ஒரே ஒரு பகுதியானது செயின்ட் ஹெலினா என்ற தீவாக இருந்தது. ஜனத்தொகை பேரளவாகக் குறைந்துபோன இடங்களில், சடலங்கள் குவியல்களாக எரிக்கப்பட்டன. பெரும் அளவு புகையிலைத் தூய்மைக்கேட்டினால், உண்டுபண்ணப்படுகிற இருதயநோய் மற்றும் புற்றுநோய் திகிலூட்டும் விகிதத்தில் இன்று உள்ளன. “அருவருப்பின் பத்தாண்டுகள்” என்று விவரிக்கப்பட்ட 1980-களின் சமயத்தில், பைபிள் தராதரங்களின்படி ஒழுக்கமற்றதாக இருக்கும் வாழ்க்கை முறை ‘மரணத்திற்கேதுவான கொள்ளை நோயுடன்’ எய்ட்ஸின் கொடுமையையும் கூட்டியது. வருடம் 2000-த்தில், “ஒருவேளை இதுவே உலகறிந்த மிக மோசமான கொள்ளைநோய்” என்று எய்ட்ஸ் நோயை ஐ.மா. சர்ஜன் ஜெனரல் குறிப்பிட்டதாக அறிக்கை செய்யப்பட்டது. உலக முழுவதிலும் 5 கோடியே 20 லட்சம் பேர் எச்ஐவி/எய்ட்ஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகவும், அவர்களில் 2 கோடி பேர் இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார். இன்று அநேக வியாதிகள் கடத்தப்படுவதற்கு காரணமாயிருக்கும் வேசித்தனம் மற்றும் இரத்தத்தை தவறாகப் பயன்படுத்துதலிலிருந்து தங்களை விலக்கி வைத்துக்கொள்வதற்கான அவருடைய வார்த்தையின் ஞானமான அறிவுரைகளுக்கு யெகோவாவின் ஜனங்கள் எவ்வளவு நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள்!—அப்போஸ்தலர் 15:28, 29; 1 கொரிந்தியர் 6:9-11-ஐ ஒப்பிடவும்.
29, 30. (அ) எசேக்கியேல் 14:21-ன் ‘நான்கு கொடிய தண்டனைகள்’ இன்று என்ன பொருத்தத்தைக் கொண்டிருக்கும்? (ஆ) வெளிப்படுத்துதல் 6:8-ன் ‘துஷ்ட மிருகங்கள்’ மூலம் நாம் என்ன புரிந்துகொள்ள முடியும்? (இ) தீர்க்கதரிசன காட்சியின் முக்கிய குறிப்பு என்னவாகத் தோன்றுகிறது?
29 யோவானின் தரிசனம் அகால மரணத்திற்கு நான்காவது காரணமாக துஷ்ட மிருகங்களைக் குறிப்பிடுகிறது. உண்மையில், நான்காவது முத்திரை உடைக்கப்படுவதன் மூலம் நான்கு காரியங்கள் குறிப்பிடப்படுகின்றன—யுத்த நடவடிக்கை, பஞ்சம், நோய், மேலும் துஷ்ட மிருகங்கள்—இவை பூர்வ காலங்களில் அகால மரணத்தின் பிரதான காரணங்களாக கருதப்பட்டன. ஆகவே, இன்றுள்ள அகால மரணத்திற்கான எல்லா காரணங்களையும் அவை முன்குறிப்பவையாய் இருக்கும். இது யெகோவா இஸ்ரவேலை எச்சரித்த விதமாகவே இருக்கிறது: “ஆகையால் . . . நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம் பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்ட மிருகங்கள், கொள்ளை நோய் என்னும் இந்த நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்?”—எசேக்கியேல் 14:21.
30 வெப்பமண்டல நாடுகளில் துஷ்ட மிருகங்கள் ஆட்களை பலியாகக் கொண்டிருக்கிறபோதிலும் நவீன காலங்களில் துஷ்ட மிருகங்களினால் ஏற்படும் மரணம் பற்றிய தலையங்கங்கள் வெகு அரிதாகவே உள்ளன. எதிர்காலத்தில், யுத்த நடவடிக்கையினால் தேசங்கள் பாழாக்கப்பட்டால் அல்லது பசியோடிருக்கும் மிருகங்களுடன் போராடுவதற்கு பஞ்சத்தினால் மக்கள் அதிகம் மெலிந்து போனால் அவை இன்னும் அதிகமாக ஆட்களைப் பலியாகக் கொள்ளும். கூடுதலாக, இன்று, அநேக மனிதர்கள் பகுத்தறிவற்ற மிருகங்களைப் போன்று ஏசாயா 11:6-9-ல் விவரிக்கப்பட்டுள்ளதற்கு முற்றிலும் நேர்மாறாக மிருகத்தனமாக மனநிலைகளைக் காண்பிக்கின்றனர். இந்த மக்கள், உலகம் முழுவதிலும் பாலுறவு சம்பந்தமான குற்றங்களின் அதிகரிப்பு, கொலை, பயங்கரவாதம், மேலும் நவீன உலகில் குண்டுவெடிப்புகள் போன்றவற்றிற்கு அதிக உத்தரவாதமுடையவர்களாக இருக்கிறார்கள். (ஒப்பிடவும்: எசேக்கியேல் 21:31; ரோமர் 1:28-31; 2 பேதுரு 2:12.) நான்காவது குதிரை சவாரியாளன் அவற்றின் பலி ஆட்களையும்கூட அறுவடை செய்கிறான். உண்மையிலேயே, இந்தத் தீர்க்கதரிசன காட்சியின் முக்கிய குறிப்பு, மங்கின குதிரையின் சவாரியாளன் அநேக வழிகளில் மனிதவர்க்கத்தின் அகால மரணத்தை அறுவடை செய்கிறான் என்பதாகத் தோன்றுகிறது.
31. சிவப்பு, கறுப்பு மற்றும் மங்கின நிறமுள்ள குதிரை சவாரியாளர்களின் பாழாக்குதல்கள் இருந்தபோதிலும், நாம் ஏன் உற்சாகப்படுத்தப்படுகிறோம்?
31 முதல் நான்கு முத்திரைகள் உடைக்கப்படுவதனால் வெளிப்படுத்தப்படும் தகவல் நமக்கு மீண்டும் உறுதியளிக்கிறது, ஏனென்றால் இன்றைக்கு அதிக பரவலாக இருக்கும் அகால மரணத்திற்கு காரணங்களாயிருக்கும் யுத்த நடவடிக்கை, பசி, வியாதி, இன்னும் மற்றவற்றைக் குறித்ததில் நம்பிக்கையை இழந்துவிடாதபடி அது நமக்கு கற்பிக்கிறது; தற்போதைய பிரச்சினைகளை மனிதத் தலைவர்கள் தீர்ப்பதற்கு தவறிவிட்டிருப்பதைக் குறித்ததிலும் நம்முடைய நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. சிவப்பு, கறுப்பு, மற்றும் மங்கின நிறமுள்ள குதிரைகளின் சவாரியாளர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதாக உலக நிலைமைத் தெரிவித்தால், வெள்ளைக் குதிரை சவாரியாளர் அவருடைய சவாரியை ஆரம்பிப்பதில் முதல்வராக இருந்தார் என்பதை மறந்துவிடாதீர்கள். இயேசு ராஜாவாக ஆகியிருக்கிறார், மேலும் பரலோகங்களிலிருந்து சாத்தானை வெளியே தள்ளும் அளவுக்கு ஏற்கெனவே வெற்றியடைந்திருக்கிறார். மிகுந்த உபத்திரவத்தினூடாக பாதுகாப்பதற்காக ஆவிக்குரிய இஸ்ரவேலின் குமாரர்களில் மீதியானவர்களையும் பத்து லட்சக்கணக்கான அகில உலக திரள் கூட்டத்தாரையும் கூட்டி சேர்ப்பதும் அவருடைய மேலுமான வெற்றிகளில் அடங்கி இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:4, 9, 14) அவருடைய வெற்றியை முடிக்கும் வரையாக அவருடைய சவாரி தொடர வேண்டும்.
32. முதல் நான்கு முத்திரைகள் ஒவ்வொன்றும் உடைக்கப்படுவது எந்தத் தனிச்சிறப்பைக் காட்டுகிறது?
32 முதல் நான்கு முத்திரைகள் ஒவ்வொன்றும் உடைக்கப்படுவது “நீ வந்து பார்” என்ற கட்டளையினால் பின்தொடர்ந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும், ஒரு குதிரையும் அதனுடைய சவாரியாளனும் பாய்ந்தோடி வந்தனர். ஐந்தாவது முத்திரையின் ஆரம்பத்திலிருந்து, நாம் இவ்விதமான ஒரு கட்டளையை இனிமேலும் கேட்பதில்லை. ஆனால், அந்தக் குதிரையாளர்கள் இன்னும் சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள், மற்றும் இந்த ஒழுங்குமுறையின் முடிவு முழுவதுமாக தொடர்ந்து பாய்ந்து கொண்டிருப்பார்கள். (மத்தேயு 28:20-ஐ ஒப்பிடவும்.) இயேசு மீதி மூன்று முத்திரைகளை உடைக்கையில், மற்ற முக்கியத்துவம் வாய்ந்த என்ன சம்பவங்களை வெளிப்படுத்துகிறார்? சில சம்பவங்கள் மனித கண்களுக்கு காணப்படாதவையாக இருக்கின்றன, மற்றவை, காணப்படுபவையாக இருந்தாலும், இன்னும் எதிர்காலத்துக்குரியவையாக இருக்கின்றன. என்றபோதிலும், அவற்றின் நிறைவேற்றம் நிச்சயம். அவை என்ன என்பதை நாம் பார்ப்போமாக.
[அடிக்குறிப்புகள்]
a இருப்பினும், வெளிப்படுத்துதல் 12:1-ன் “ஸ்திரீ” அடையாள அர்த்தமான ‘பன்னிரண்டு நட்சத்திரங்களின் கிரீடத்தை’ கொண்டிருக்கிறாள் என்பதைக் கவனியுங்கள்.
b இயேசு 1914-ல் அவருடைய ராஜ்யத்திற்கு வந்தார் என்ற விவரமான ஆதாரத்திற்கு, யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டுள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் பக்கங்கள் 215-18-ஐக் காண்க.
c அநேக மொழிபெயர்ப்புகள் இந்தச் சொற்றொடரை “ஜெயங்கொள்வதற்கு” (ரிவைஸ்டு ஸ்டான்டர்டு, தி நியூ இங்கிலிஷ் பைபிள், கிங் ஜேம்ஸ் வர்ஷன்) அல்லது “ஜெயத்தின் மீது உறுதிபூண்ட” (ஃபிலிப்ஸ், நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்) என்று மொழிபெயர்த்திருக்கையில், இந்த இறந்தகால வினைச்சொல்லின் கருத்துப் புனைவியல் பாங்கு மூல கிரேக்கில் முழுமையானத்தன்மை அல்லது முடிவானத்தன்மையின் அர்த்தத்தைக் கொடுக்கிறது. அதனால், ராபெர்ட்சனின் புதிய ஏற்பாட்டில் வார்த்தை படங்கள் (ஆங்கிலம்) புத்தகம் இப்படியாக குறிப்பிடுகிறது: “இந்த இறந்தகால வினைச்சொல் பதமானது முடிவான வெற்றியைக் குறிப்பிடுகிறது.”
d துணைக்குறிப்புகளடங்கிய புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், அடிக்குறிப்பைப் பார்க்கவும்.
[பக்கம் 92-ன் பெட்டி]
ராஜா ஜெயங்கொள்ளுகிறவராக சவாரி செய்கிறார்
1930-கள் மேலும் 1940-களின்போது, யெகோவாவின் சாட்சிகளின் ஊழியம் சட்டப்பூர்வமல்லாதது, குற்றமுள்ளது அல்லது கவிழ்கிறதாகவும்கூட காணப்படும்படி செய்வதற்கு உறுதிபூண்டிருந்த எதிரிகள் முயற்சி செய்தனர். (சங்கீதம் 94:20) 1936-ம் வருடத்தில் மட்டுமே, ஐக்கிய மாகாணங்களில் 1,149 கைது செய்தல்கள் பதிவு செய்யப்பட்டன. சாட்சிகள் அநேக சட்டப்பூர்வமான வழக்குகளை ஐக்கிய மாகாண உச்ச நீதிமன்றம் வரையாக தொடர்ந்தனர். மேலும் பின்வருபவை அவர்களுடைய சிறப்பான வெற்றிகளில் சில.
மே 3, 1943-ல் உச்ச நீதிமன்றம் மர்டாக் எதிராக பென்சில்வேனியா வழக்கில், சாட்சிகள் இலக்கியங்களைப் பணத்திற்கு கொடுக்கும் காரியத்தில் அனுமதி பெற வேண்டிய ஒரு தேவையில்லை என்பதாக தீர்மானித்தது. அதே நாளில், மார்ட்டின் எதிராக ஸ்டுருதெர்ஸ் நகரம் வழக்கில், வீட்டுக்கு வீடு கைப்பிரதிகள் மற்றும் விளம்பர காரியங்களை விநியோகிப்பதில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும்போதும் கதவு மணிகளை அடிப்பது சட்ட விரோதம் அல்ல என்பதாக முடிவு செய்தது.
ஜூன் 14, 1943-ல் உச்ச நீதிமன்றம் டெய்லர் எதிராக மிஸ்ஸிசிப்பி வழக்கில், சாட்சிகள் அவர்களுடைய பிரசங்க வேலையின் மூலம் அரசாங்கத்திற்கு உண்மையற்றத் தன்மையை உற்சாகப்படுத்தவில்லை என்று தீர்ப்பளித்தது. அதே நாளில், மேற்கு வெர்ஜினியா மாகாண கல்வி வாரியம் எதிராக பார்னட் வழக்கில் நீதிமன்றம், கொடியை வணங்க மறுக்கும் யெகோவாவின் சாட்சிகளின் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து வெளியேற்ற ஒரு பள்ளி வாரியத்திற்கு உரிமை இல்லை என்று முடிவு செய்தது. அதற்கு அடுத்த நாளே, ஆஸ்திரேலியாவின் முழு உயர்நீதி மன்றம் யெகோவாவின் சாட்சிகளின் மீதான அந்த நாட்டின் தடையை நீக்கியது, தடை “ஒழுங்கற்றது, மனம் போல் போகிறது, மேலும் ஒடுக்குமுறையானது” என்று அறிவித்தது.
[பக்கம் 94-ன் பெட்டி]
“சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது”
தொழில்நுட்பம் திறன் எங்கு கொண்டு செல்கிறது? அகில உலக வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் தலைவர், ஐவன் L. ஹெட் என்பவரின் பேச்சிலிருந்து, தி குளோப் அண்ட் மெய்ல், டொரண்டோ, கனடா, ஜனவரி 22, 1987 பத்திரிகை பின்வருமாறு அறிவித்தது:
“உலகில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நான்கில் ஒருவர் ஆயுதங்களின் பேரில் வேலை செய்கின்றனர், என்று நம்பத்தகுந்த விதத்தில் கணக்கிடப்பட்டுள்ளது. . . . 1986-ன் வீதங்களின்படி செலவானது ஒரு நிமிடத்திற்கு 15 லட்சம் டாலர்களை விட அதிகம். . . . இந்த விதமாக தொழில்நுட்பத் திறனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தின் விளைவாக நாம் எல்லாரும் அதிக அளவு பாதுகாப்புடன் இருக்கிறோமா? வல்லரசுகளின் உடைமையாயிருக்கும் அணுஆயுதச் சாலைகள், இரண்டாம் உலக யுத்தத்தில் எல்லா போர் வீரர்களும் பயன்படுத்திய படைக்கலன்களைப் போன்று 6,000 மடங்கு வெடிக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஆறாயிரம் இரண்டாம் உலக யுத்தங்கள். 1945-லிருந்து, ஏழு வாரங்களுக்கும் குறைவாகவே இராணுவ நடவடிக்கையிலிருந்து உலகம் விடுபட்டு இருந்தது. சர்வதேச அல்லது உள்நாட்டு அளவிலான 150-க்கும் மேற்பட்ட போர்கள் நடந்திருக்கின்றன. 1.93 கோடி உயிர்கள் எடுக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் இந்த ஐக்கிய நாடுகளின் சகாப்தத்தின் திறமையான புதிய தொழில்நுட்பத் திறன்களின் விளைவு.”
2005-ல், போர் நடவடிக்கை காரணமாக 2 கோடிக்கும் அதிகமானோர் செத்துமடிந்ததாகச் சொல்லப்பட்டது.
[பக்கம் 98, 99-ன் படம்]
வெளிப்படுத்துதல் புத்தகத்தின் அமைப்புத்திட்டம்
வெளிப்படுத்துதல் புத்தகத்தை கலந்து ஆராய்ந்து இதுவரையாக முன்னேறி வந்திருக்கையில், இப்புத்தகத்தின் அமைப்புத் திட்டத்தை அதிகத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஆரம்பிக்கிறோம். அதன் கிளர்ச்சியூட்டும் முன்னுரைக்குப் பின் (வெளிப்படுத்துதல் 1:1-9), வெளிப்படுத்துதல் பின்வரும் 16 தரிசனங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாக கருதப்படலாம்.
1-வது தரிசனம் (1:10–3:22): யோவான் தேவ ஆவியால் ஏவப்பட்டு மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவைப் பார்க்கிறார், இவர் ஏழு சபைகளுக்கு அறிவுரையுள்ள அனலான செய்திகளை அனுப்புகிறார்.
2-வது தரிசனம் (4:1–5:14): யெகோவா தேவனின் பரலோக சிங்காசனத்தின் மிகச் சிறப்பான தோற்றம். இவர் ஆட்டுக்குட்டியானவருக்கு ஒரு புஸ்தகச் சுருளைக் கொடுக்கிறார்.
3-வது தரிசனம் (6:1-17): புஸ்தகச் சுருளின் முதல் ஆறு முத்திரைகளை உடைத்து, ஆட்டுக்குட்டியானவர் கர்த்தருடைய நாளில் சம்பவிக்க வேண்டிய சம்பவங்களின் கூட்டு தரிசனத்தைப் படிப்படியாக வெளிப்படுத்துகிறார். திருவெளிப்பாட்டின் நான்கு குதிரை சவாரியாளர்கள் பாய்ந்தோடுகிறார்கள், கடவுளுடைய உயிர்த்தியாகம் செய்த அடிமைகள் வெள்ளை அங்கிகளைக் பெறுகிறார்கள், கோபாக்கினையின் மகா நாள் விவரிக்கப்படுகிறது.
4-வது தரிசனம் (7:1-17): ஆவிக்குரிய இஸ்ரவேலின் 1,44,000 பேர் முத்திரை போடப்படும் வரையாக அழிவின் காற்றைத் தேவதூதர்கள் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா தேசங்களிலிருந்தும் வரக்கூடிய ஒரு திரள்கூட்டத்தினர் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் இரட்சிப்பின் மகிமையைச் செலுத்தி, மிகுந்த உபத்திரவத்தினூடாக தப்பிப்பிழைப்பதற்காக கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள்.
5-வது தரிசனம் (8:1–9:21): ஏழாவது முத்திரை உடைக்கப்படுகையில், ஏழு எக்காள சத்தங்கள் இருக்கின்றன. அவற்றில் முதல் ஆறு ஐந்தாவது தரிசனத்தைக் கொண்டிருக்கின்றன. இந்த ஆறு எக்காளச் சப்தங்கள் மனிதவர்க்கத்தின்மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை முன்னறிவிக்கின்றன. ஐந்தாவது ஆறாவது எக்காளங்களும்கூட முதல் மற்றும் இரண்டாவது ஆபத்துக்களை முன்னுரைக்கின்றன.
6-வது தரிசனம் (10:1–11:19): ஒரு பலமுள்ள தூதன் யோவானிடம் ஒரு சிறு புஸ்தகச் சுருளைக் கொடுக்கிறான். ஆலயம் அளக்கப்படுகிறது மற்றும் இரண்டு சாட்சிகளின் அனுபவங்களை நாம் கற்றுக்கொள்கிறோம். ஏழாவது எக்காளம் ஊதப்படுவதோடு அது உச்சக்கட்டத்தை அடைந்து, கடவுளுடைய எதிரிகளுக்கான மூன்றாவது ஆபத்தை முன்னறிவிக்கிறது—வரவிருக்கும் யெகோவா மற்றும் அவருடைய கிறிஸ்துவின் ராஜ்யம்.
7-வது தரிசனம் (12:1-17): இது ராஜ்யத்தின் பிறப்பை விவரிக்கிறது. மிகாவேல் சர்ப்பத்தை, சாத்தானை, பூமியிலே விழத் தள்ளுவதில் விளைவடைகிறது.
8-வது தரிசனம் (13:1-18): வல்லமையுள்ள மூர்க்க மிருகம் சமுத்திரத்திலிருந்து ஏறிவருகிறது, ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான இரண்டு கொம்புகளையுடைய மிருகம் மனிதவர்க்கம் அதை வணங்கும்படியாக துரிதப்படுத்துகிறது.
9-வது தரிசனம் (14:1-20): சீயோன் மலையின்மீது 1,44,000 பேரின் மிகச் சிறந்த முன் காட்சி. பூமியைச் சுற்றிலும் தேவதூதர்களின் செய்திகள் கேட்கப்படுகின்றன. பூமியின் திராட்சக் குலைகளை அறுக்கப்படுகின்றன. தேவனுடைய கோபாக்கினையின் திராட்ச ஆலை மிதிக்கப்படுகிறது.
10-வது தரிசனம் (15:1–16:21): பரலோக நியாயஸ்தலத்தின் இன்னொரு கணநேரத் தோற்றம், யெகோவாவின் கோபாக்கினையின் ஏழு கலசங்கள் பூமியின்மீது ஊற்றப்படுவது தொடர்கிறது. இந்தப் பகுதியும்கூட, சாத்தானுடைய ஒழுங்குமுறையின் முடிவின் தீர்க்கதரிசன விளக்கத்தோடு முடிவடைகிறது.
11-வது தரிசனம் (17:1-18): மகா பாபிலோனாகிய மகா வேசி சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஏறியிருக்கிறாள். அந்த மிருகம் சிறிது காலத்துக்கு அபிஸுக்குள் போய் ஆனால் மறுபடியும் வந்து அவளைப் பாழாக்குகிறது.
12-வது தரிசனம் (18:1–19:10): மகா பாபிலோனின் வீழ்ச்சியும் முடிவான அழிவும் அறிவிக்கப்படுகிறது. அவள் அழிக்கப்பட்டபின், சிலர் அழுது புலம்புகிறார்கள், மற்றவர்கள் யெகோவாவைத் துதிக்கிறார்கள்; ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் அறிவிக்கப்படுகிறது.
13-வது தரிசனம் (19:11-21): இயேசு பரலோகத்தின் சேனைகளை வழிநடத்தி சாத்தானுடைய ஒழுங்குமுறை, அதன் சேனைகள் மற்றும் அதை ஆதரிக்கிறவர்களின்மீது தேவனுடைய கோபாக்கினையின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிறார், அவர்களுடைய பிணங்களைப் பறவைகள் சாப்பிட்டு திருப்தியடைகின்றன.
14-வது தரிசனம் (20:1-10): பிசாசாகிய சாத்தான் அபிஸுக்குள் தள்ளப்படுதல், கிறிஸ்து மற்றும் அவருடைய உடன் அரசர்களின் ஆயிர வருட ஆட்சி, மனிதவர்க்கத்தின் கடைசி சோதனை, சாத்தானும் அவனுடைய பேய்த் தூதர்களும் அழிக்கப்படுதல்.
15-வது தரிசனம் (20:11–21:8): பொதுவான உயிர்த்தெழுதலும் மகா நியாயத்தீர்ப்பின் நாளும்; புதிய வானமும் புதிய பூமியும் தோன்றுகிறது, நீதியான மனிதவர்க்கத்துக்கு நித்திய ஆசீர்வாதங்கள்.
16-வது தரிசனம் (21:9–22:5): வெளிப்படுத்துதல் ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகிய புதிய எருசலேமின் மகிமையான தரிசனத்துடன் உச்சக்கட்டத்தை அடைகிறது. மனிதவர்க்கத்திற்கான ஆரோக்கியமும் ஜீவனுக்குமான கடவுளுடைய ஏற்பாடு அந்த நகரத்திலிருந்து புறப்பட்டு வருகிறது.
யெகோவா, இயேசு, தேவதூதன் மற்றும் யோவானிடமுமிருந்து அனலான வாழ்த்துதல்கள் அறிவுரையுடன் வெளிப்படுத்துதல் முடிவுக்கு வருகிறது. ஒவ்வொருவருக்கும் அழைப்பு “வா” என்பதாக இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 22:6-21.