பாடம் 8
கடவுளுடைய விரோதிகள் யார்?
கடவுளுடைய பிரதான விரோதி பிசாசாகிய சாத்தான். அவன் ஓர் ஆவி ஆள், யெகோவாவுக்கு விரோதமாக கலகம் செய்தவன். சாத்தான் தொடர்ந்து கடவுளுக்கு விரோதமாக சண்டை செய்கிறான், மனிதருக்கு பெரும் தொல்லைகளையும் உண்டாக்குகிறான். சாத்தான் தீங்கு செய்பவன். அவன் ஒரு பொய்யன், கொலைகாரன்.—யோவான் 8:44.
கடவுளுக்கு விரோதமாக கலகம் செய்வதில் சாத்தானுடன் மற்ற ஆவி ஆட்களும் சேர்ந்து கொண்டனர். பைபிள் அவர்களை பேய்கள் என அழைக்கிறது. சாத்தானைப் போலவே, பேய்களும் மனிதருக்கு விரோதிகள். மக்களுக்கு தீங்கு செய்ய விரும்புகிறார்கள். (மத்தேயு 9:32, 33; 12:22) சாத்தானையும் அவனுடைய பேய்களையும் யெகோவா நிரந்தரமாக அழித்துவிடுவார். மனிதரை தொல்லைப்படுத்த அவர்களுக்கு இன்னும் கொஞ்ச காலம்தான் இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 12:12.
கடவுளுடைய நண்பராயிருக்க விரும்பினால், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென சாத்தான் விரும்புகிறானோ அதை செய்யக் கூடாது. சாத்தானும் பேய்களும் யெகோவாவை வெறுக்கிறார்கள். அவர்கள் கடவுளுடைய விரோதிகள், உங்களையும் கடவுளுடைய விரோதியாக்க விரும்புகிறார்கள். நீங்கள் யாரை பிரியப்படுத்த விரும்புகிறீர்கள்—சாத்தானையா அல்லது யெகோவாவையா? நித்திய ஜீவன் வேண்டுமானால், நீங்கள் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டும். மக்களை ஏமாற்றுவதற்கு பலவித தந்திரங்களையும் வழிகளையும் சாத்தான் வைத்திருக்கிறான். நிறைய பேர் அவனால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 12:9.