ஜெபங்களுக்கு ஏற்ற கிரியைகள் தேவை
“துன்மார்க்கருக்கு யெகோவா தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.”—நீதிமொழிகள் 15:29.
யெகோவாவின் தேவைகள் எல்லாம் ஞானமும், நீதியும், அன்பானதுமாய் இருக்கின்றன. அவை பாரமானவைகளல்ல. (1 யோவான் 5:3) ஜெபத்தைக் குறித்து அவருடைய தேவைகளையும் இது உட்படுத்துகிறது. அதில் ஒன்று நம்முடைய ஜெபங்களுக்கிசைய நாம் நம்முடைய வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதும். நாம் எடுக்கும் நடவடிக்கை யெகோவா தேவனைப் பிரியப்படுத்த வேண்டும். அப்படியில்லையென்றால் நம் வேண்டுதல்களையும் மன்றாட்டுகளையும் தயவுடன் கருத்தில் கொள்வார் என்று நாம் அவரிடம் எப்படி எதிர்பார்க்கக்கூடும்?
2. ஏசாயாவின் நாட்களில் வழிவிலகிச் சென்ற இஸ்ரவேலர்கள் கவனியாததுபோல கிறிஸ்தவ மண்டலத்திலுள்ள அநேகரும் ஜெபத்தின் இந்த குறிப்பிட்ட அம்சத்தை கவனிக்கிறதில்லை. ஆகையால்தான் யெகோவா நம்முடைய தீர்க்கதரிசி தம்மைப் பிரதிநித்துவம் செய்து இவ்வாறு சொல்லும்படி செய்தார்: “நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும், நான் கேளேன் . . .நீங்கள் கழுவுங்கள்; நீங்களே சுத்தம் செய்து கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை எண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு தீமை செய்தலை விட்டு ஓயுங்கள், நன்மை செய்யப் படியுங்கள்.” (ஏசாயா 1:15-17) ஆம், அந்த இஸ்ரவேலர்களுக்குக் கடவுளின் அநுக்கிரகம் தேவைப்பட்டால், அவரைப் பிரியப்படுத்தும் வகையில் நடந்திருக்க வேண்டும். சரியாக சொன்ன பிரகாரமே: “நீங்கள் ஜெபம் செய்யும்போது நீங்கள் கேட்க வேண்டும்.”
3. உண்மையாகவே யெகோவா தேவன் தன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலருக்கு இந்தச் சத்தியங்களை அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கண்டார். ஆகவே இவ்விதமாக வாசிக்கிறோம்: பிரமாணத்தைக் கேட்பதிலிருந்து தன் செவியை விலக்குகிறவன்—அவன் ஜெபமும் கடவுளுக்கு அருவருப்பானது. துன்மார்க்கருக்கு யெகோவா தூரமாயிருக்கிறார்; நீதிமானின் ஜெபத்தையோ கேட்கிறார்.” (நீதிமொழிகள் 28:9; 15:29) இந்த நிலையின் காரணமாக, எரேமியா புலம்பினான்: “நீர் (யெகோவா) ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.” (புலம்பல் 3:44) உண்மையாகவே, ஆவியால் தூண்டப்பட்டு மீகாவின் மூலம் கொடுக்கப்பட்ட எச்சரிப்பு நிறைவேற்றமடைந்தது: “அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறு உத்தரவு கொடாமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக் கொள்வார்.”—மீகா 3:4; நீதிமொழிகள் 1:28-32.
4. எனவே நம்முடைய ஜெபங்களின்படி நாம் வாழவேண்டிய அவசியம் இருக்கிறது. இன்று இந்த உண்மைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய முக்கியத்துவம் இருக்கிறதா? நிச்சயமாகவே இருக்கிறது. கிறிஸ்தவமண்டலத்திலிருக்கும் நிலையின் காரணமாக மாத்திரமல்ல, ஒப்புக்கொடுத்த யெகோவாவின் ஜனங்களின் நிலைமைகளினாலுங்கூட, கடந்த ஆண்டு நற்செய்தியைப் பிரசங்கித்த 30 இலட்சத்திற்கும் அதிகமான பிரஸ்தாபிகளில் 37,000 பேருக்கு மேலானோர் கிறிஸ்தவமல்லாத காரியத்தை நடப்பித்ததன் காரணமாக சபைநீக்கம் செய்யப்பட்டனர். இது சுமார் 80-க்கு ஒருவர் என்ற விகிதம். மெய்யாகவே இவர்களில் அநேகர் அவ்வப்போது ஜெபித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தாங்கள் ஜெபத்திற்கிசைவாக நடந்திருப்பார்களா? இல்லவே இல்லை! ஏதோ ஒரு வகையில் பத்தாண்டு காலமாக முழு நேர ஊழியத்தில் இருந்த மூப்பர்களும்கூட, சிட்சிக்கப்பட்டவர்களில் சிலராக இருந்தனர். எவ்வளவு வருந்தத்தக்கது! உண்மையாகவே, “தன்னை நிற்கிறவன் என்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” தன்னைச் சிருஷ்டித்தவருக்கு தன் ஜெபம் ஏற்கத்தகாததாக இராதபடிக்கு தன் நடக்கையைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கக்கடவன்.—1 கொரிந்தியர் 10:12.
ஜெபங்களுக்கு ஏற்ற கிரியைகள் ஏன் தேவைப்படுகின்றன
5. நமது ஜெபங்கள் யெகோவாவால் கேட்கப்படுவதற்கு, நாம் ஒழுக்கத்திற்குரிய பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் சுத்தமுள்ளவர்களாக இருப்பதுமட்டுமன்றி, நாம் எதற்காக ஜெபிக்கிறோமோ அதற்காக உழைப்பதன் மூலம் நம் ஜெபங்களின் உண்மைத்தன்மையையும் நிரூபிக்க வேண்டும். உண்மைத் தன்மைக்கும், புத்திநுட்பத்துடன் கூடிய முயற்சிக்கும் ஜெபம் மாத்திரமே மாற்றீடு அல்ல. அவருடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றுவதன்மூலம், அவருடைய வார்த்தையை ஊக்கத்துடன் பொருத்தி, நமக்கு எதை நாமே செய்துகொள்ளமுடியுமோ அதை யெகோவா செய்ய மாட்டார். இதன் சம்பந்தமாக, நம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும். ஏனெனில், அப்போதுதான் நம்முடைய ஜெபங்களுக்கு அவர் பதிலளிக்க ஆதாரம் இருக்கும். ஒருவர் சரியானபடி சொன்னது போல, ‘நம்மால் எந்தளவிற்கு கிரியை செய்ய மனதிருக்கிறதோ அதற்கு மேலாக கேட்கக்கூடாது.’
6. என்றபோதிலும், இந்தக் கேள்வி கேட்கப்படலாம்: ‘நாம் ஜெபிப்பதற்கேற்ப உழைக்க வேண்டியிருப்பதால் ஏன் நாம் ஜெபிக்க வேண்டும்?’ குறைந்தபட்சம் இரண்டு நல்ல காரணங்களுக்காக நாம் ஜெபிக்கவேண்டும் முதலாவது, நம்முடைய ஜெபத்தின் மூலம் எல்லா நல்ல காரியங்களும் கடவுளிடமிருந்து வருகின்றனெவென்று நாம் அங்கிகறிக்கிறோம். அவர் நன்மையும் பூரணமானதுமான எந்த ஈவும் அளிப்பவராக இருக்கிறார்—சூரிய ஒளி, மழை, பயனுள்ள காலங்கள், இன்னும் அதைப்போல் அநேகம்! (மத்தேயு 5:45; அப்போஸ்தலர் 14:16, 17; யாக்கோபு 1:17) இரண்டாவதாக, நம்முடைய முயற்சிகளை வெற்றியடைகின்றனவா இல்லையா என்பது யெகோவாவின் ஆசீர்வாதத்தைச் சார்ந்திருக்கிறது. நாம் சங்கீதம் 127:1-ல் வாசிப்பது போல்: “யெகோவா தாமே வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; யெகோவா தாமே நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.” இதே குறிப்பைக் கொடுக்கும் வார்த்தைகளாக அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 3:6, 7-ல் “நான் நட்டேன் அப்பலோ நீர்பாய்ச்சினான், தேவனே விளையச் செய்கிற தேவனாலே எல்லாமாகும்,” என்று கூறுகிறார்.
சில பண்டைய உதாரணங்கள்
7. யெகோவாவின் விசுவாசமுள்ள ஊழியர்கள் தாங்கள் எதற்காக ஜெபித்தார்களோ அதற்காக உழைத்தார்கள் என்று காட்டும் நிகழ்ச்சிகள் பலவற்றை வேத வாக்கியங்கள் தெரிவிக்கின்றன. பிரதிநித்துவம் வாய்ந்த சில உதாரணங்களைப் பற்றி நாம் சிந்திப்போம் ஆபிரகாமின் பேரனான யாக்கோபு, பிறப்புரிமையாகிய ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டதால் அவனுடைய மூத்த சகோதரனான ஏசா அவன் மேல் கொலைக்குச் சமமான வெறுப்பு கொண்டான். (ஆதியாகமம் 27:41) சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் யாக்கோபு பதன்-ஆராமிலிருந்து தன்னுடைய பிறப்பிடத்திற்கு, அதிக கால் நடைகளோடு கூடிய ஒரு பெரிய குடும்பத்துடன் திரும்புகையில், அவன், ஏசா தன்னை சந்திக்கும்படி புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டான். ஏசாவின் விரோதத்தை நினைவுகூர்ந்தவனாய், யாக்கோபு தன்னுடைய சகோதரனின் கடுங்கோபத்திலிருந்து தன்னைக் காக்கும்படியாக யெகோவாவிடம் உருக்கமாக ஜெபித்தான். ஆனால் அவன் அதை அத்துடன் விட்டுவிட்டானா? நிச்சயமாகவே இல்லை. அவன் தனக்கு முன்னதாக உதார குணத்துடன் வெகுமதிகளை அனுப்பினான். அவன் பகுத்துணர்வுடன்: “எனக்கு முன் செல்லும் வெகுமதிகளைக்கொண்டு அவனை சாந்தப்படுத்திக் கொள்ளலாம்,” என்று எண்ணினான். அது அவ்வாறே நடந்தது, ஏனெனில் இரு சகோதரர்களும் சந்தித்தபோது, ஏசா யாக்கோபைத் தழுவிக்கொண்டு அவனை முத்தமிட்டான்.—ஆதியாகமம் அதிகாரங்கள் 32, 33.
8. நாம் எதற்காக ஜெபிக்கிறோமோ, அதற்காக உழைக்க வேண்டியதைப் பற்றிய மற்றொரு உதாரணத்தை தாவீது கொடுத்தான். அவனுடைய குமாரன் அப்சலோம் அவனுடைய சிங்காசனத்தை ஆக்கிரமித்தபோது தாவீதின் ஆலோசகனான அகித்தோப்பேலும் அப்சலோமோடு சேர்ந்து கொண்டான். ஆகவே அகித்தோப்பேலின் ஆலோசனை நடக்காதபடி செய்யும்படியாக, தாவீது ஊக்கமாக ஜெபித்தான். தாவீது வெறுமென ஜெபத்தோடு விட்டுவிட்டானா? இல்லை, அவனுடைய உண்மை ஆலோசகனான ஊசாய் அப்சலோமோடு சேர்ந்து கொள்ளும்படியும், அதனால் அகித்தோப்பேலின்படி செயல்பட்டான், அகித்தோப்பேலின் ஆலோசனையின்படி செயல்பட்டான், அகித்தோப்பேலின் ஆலோசனையை நிராகரித்தான்.—2 சாமுவேல் 15:31-37; 17:1-14; 18:6-8.
9. நம்மை எச்சரிக்கும் வகையில் எடுத்துக் கூறப்படும் மற்றொரு உதாரணம், நெகேமியாவினுடையது. அவன் செய்து முடிக்க வேண்டிய ஒரு பெரிய திட்டத்தைக் கொண்டிருந்தான்-எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்டுதல், என்றபோதிலும், பல விரோதிகள் அவனுக்கு எதிராக சதி செய்து கொண்டிருந்தனர். நெகேமியா ஜெபமும் செய்தான், அதற்கிசைய நடவடிக்கையும் எடுத்தான். நாம் வாசிக்கிறோம்: “நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம் பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும் பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம்.” அப்போதிலிருந்து, நெகேமியாவின் இளம் மனிதரில் பாதிபேர், மதிலைக் கட்டிக் கொண்டிருந்த மற்ற பாதிப்பேரைக் காப்பாற்றும்படி தயாராக நின்றனர்.—நெகேமியா 4:9, 16.
இயேசுவின் முன்மாதிரி
10. நாம் ஜெபிப்பதன் பேரில் உழைக்க வேண்டியதற்கு இயேசுகிறிஸ்து நமக்கு ஒரு சிறந்த முன்மாதிரியை வகித்துள்ளார். அவர், “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று நாம் ஜெபிக்கும்படி நமக்குக் கற்பித்தார். (மத்தேயு 6:9) ஆனால் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் இயேசு செய்தார், அதனால் அவருக்குச் செவிகொடுத்தவர்களும் தன்னுடைய பிதாவின் நாமத்தைப் பரிசுத்தப்படுத்தலாம். அதைப்போன்றே, “பிதாவே, உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும்” என்று ஜெபிப்பதோடு இயேசு தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. (யோவான் 12:28) இல்லை, இயேசுதாமே தன் பிதாவின் நாமத்தை மகிமைப்படுத்தினார், மற்றவர்களையும் அவ்வாறு செய்யவைக்க தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்.—லூக்கா 5:23-26; 17:12-15; யோவான் 17:4.
11. ஜனங்கள் கொண்டிருந்து மிகுதியான ஆவிக்குரிய தேவையைக் காண்கையில் இயேசு தன்னுடைய சீஷர்களிடம் கூறினார்: “அறுப்பு மிகுதி, வேளையாட்களோ கொஞ்சம். ஆகையால் அறுப்புக்கு தமது வேலையாட்களை அனுப்பும்படி அறுப்பின் எஜமானிடம் (யெகோவா தேவன்) வேண்டிக் கொள்ளுங்கள்.” (மத்தேயு 9:37, 38) இயேசு காரியங்களை அப்படியே விட்டுவிட்டாரா? ஒருபோதுமில்லை! அதற்குப் பிறகு, அவர் தமது 12 சீஷர்களை இரண்டிரண்டு பேராக பிரசங்கிப்பதற்கு அல்லது ‘அறுவடை’ செய்யும் சுற்றுப் பிரயாணத்திற்கு அனுப்பினார். பின்னால், இயேசு 70 சுவிசேஷப் பிரசங்கிகளை அதே வேலையை செய்யும்படி அனுப்பினார்.—மத்தேயு 10:1-10; லூக்கா 10:1-9.
இந்த நியமத்தைப் பொருத்துதல்
12. தெளிவாகவே, நாம் நமது ஜெபங்களுக்கிசைய செயல்பட வேண்டுமென்றும், ஒத்திசைவாய் இருக்க வேண்டும்மென்றும் யெகோவா தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். “அக்கறையுள்ள ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்று நாம் ஜெபிக்கும்படி இயேசு நமக்குக் கூறியிருக்கிறார். (மத்தேயு 6:11) அப்படியானால், அவரைப் பின்பற்றுகிறவர்கள் சரியாகவே, அதற்காக கடவுளிடம் வேண்டுகின்றனர். ஆனால் அதைப்பற்றி எந்த ஒரு காரியமும் செய்யாமல், நம் பரம தகப்பன் நம் ஜெபத்திற்குப் பதிலளிக்கும்படி நாம் எதிர்பார்க்கிறோமா? நிச்சயமாகவே அவ்வாறில்லை. அதனால் தான் நாம் வாசிக்கிறோம்: “சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும்”—ஒருவேளை ஜெபத்தின் மூலம் அவ்வாறு விரும்பியிருந்தும்—“அவன் ஆத்துமா ஒன்றும் பெறாது.” (நீதிமொழிகள் 13:4) அப்போஸ்தலனாகிய பவுலும் அதே குறிப்பை 2 தெசலோனிக்கேயர் 3:10-ல் கூறுகிறான்: “ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது.” அன்றாட ஆகாரத்திற்காக ஜெபிப்பதானது, அதற்காக உழைக்க மனமுள்ளவனாய் இருக்க விரும்புவதோடு இசைவாயிருக்க வேண்டும். அக்கறையூட்டும் வகையில், பவுல் ஞானமாகக் கூறினான்: “வேலை செய்ய மனதில்லாதிருந்தால் சாப்பிடவுங்கூடாது” என்பதாக வேலை செய்ய விரும்பும் சிலர், வேலை வாய்ப்பில்லாதவராக, வியாதியாக அல்லது வேலை செய்ய முடியாதளவுக்கு வயதானவராக இருக்கலாம். அவர்கள் வேலை செய்ய விரும்புகிறார்கள். ஆளால் இது அவர்களது சூழ்நிலைகளுக்கப்பால் இருக்கிறது. எனவே, அவர்கள் தங்களுடைய அன்றாட ஆதாரத்திற்காக சரியாகவே ஜெபிக்கலாம், அதைப் பெறும்படி நம்பலாம்.
13. தமது பரலோகத் தகப்பனிடம் அவருடைய பரிசுத்த ஆவிக்காக நாம் கேட்கும்படியாகவும் இயேசு நமக்கு ஆலோசனை கூறினார். இயேசு நம்மிடம் நிச்சயமாய்க் கூறியபடி பூமிக்குரிய பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுப்பதை விட, கடவுள் நமக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பதற்கு அதிக விருப்பமுள்ளவராய் இருக்கிறார். (லூக்கா 11:13) ஆனால், நம் பங்கில் எந்தவித முயற்சியும் எடுக்காமல், யெகோவா தேவன் தமது பரிசுத்த ஆவியை நமக்கு அற்புதமாக அருளுவார் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா? ஒருபோதுமில்லை! பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் நாம் செய்யவேண்டும். அதற்காக ஜெபிப்பதோடுகூட, கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாக உட்கொள்ளவேண்டும். ஏன்? ஏனென்றால், யெகோவா தேவன் தமது பரிசுத்த ஆவியைத் தமது வார்த்தைக்குப் புறம்பாக கொடுக்கிறதில்லை, நாமும், இன்று யெகோவா பயன்படுத்தும் பூமிக்குரிய வழியாகிய “உண்மையும் விவேகமுள்ள அடிமை வகுப்பி”னரைப் பிரதிநித்துவஞ் செய்யும் யெகோவாவின் சாட்சிகளின் ஆளுங்குழுவைப் புறக்கணித்தால், பரிசுத்த ஆவியைப் பெறும்படியாக நம்ப முடியாது. இந்த “அடிமை”யிடமிருந்து பெற்றுக் கொள்ளும் உதவியாலன்றி, நாம் வாசிப்பதன் முழுக்கருத்தைப் புரிந்து கொள்ளவோ அல்லது நாம் கற்றுக் கொள்வதைப் பொருத்தும் விதத்தையோ நாமாகவே செய்ய முடியாது.—மத்தேயு 24:45-47.
14. ஜெபங்களுக்கு இசைய நாம் செயல்பட வேண்டும் என்ற இந்த நியமமானது, இயேசுவின் பாதி சகோதரனான சீஷனாகிய யாக்கோபின் இந்த வார்த்தைகளுக்கும் பொருந்துகிறது. “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” (யாக்கோபு 1:5; மத்தேயு 13:55) ஆனால் கடவுள் இந்த ஞானத்தை ஏதோ அற்புதத்தின் மூலம் நமக்கு அருளுகிறாரா? இல்லை. நாம் பின்வருமாறு வாசிப்பதுபோல முதலாவதாக நாம் சரியான மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும்: “சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிப்பார்.” (சங்கீதம் 25:9) சாந்தகுணமுள்ளவர்”களுக்கு கடவுள் எப்படிப் போதிப்பார்? அவருடைய வார்த்தையைக் கொண்டு, மறுபடியும், நீதிமொழிகள் 2:1-6-ல் “என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும் பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதயல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்போது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். யெகோவா ஞானத்தை தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளபடி, அதைப் புரிந்து கொள்ளவும், அதைப் பொருத்தவும் ஒரு முயற்சியை நாம் எடுக்க வேண்டும்.
15. சாலொமோன் ஞானத்திற்காக ஜெபித்தபோது, கடவுள் அற்புதமாக அவருடைய ஜெபத்திற்குப் பதிலளித்த போது, ஜெபங்கள் அதன்பேரில் உழைப்பைத் தேவைப்படுத்துகிறது என்ற நியமமும் பொருந்தியதா? ஆம், பொருத்தியது, ஏனென்றால், இஸ்ரவேலின் அரசனாக, சாலொமோன் சட்டத்தின் அவனுடைய சொந்தப் பிரதியை எழுதி, அதை தினந்தோறும் வாசித்து அவனுடைய வாழ்க்கையில் அதைப் பொருத்தும்படி தேவைப்பட்டான். ஆனால் சாலொமோன் அதன் கற்பனைகளுக்கு மாறாகச் சென்றபோது, குதிரைகளையும், மனைவிகளையும் பெருக்கியபோது, அவனுடைய ஜெபங்களுக்கிசைவாக இல்லை. அதன் விளைவாக சாலொமோன் மெய் வணக்கத்திலிருந்து விலகியவனாக, “உணர்வற்ற ஒருவனைப் போன்று” மரித்தான்.—சங்கீதம் 14:1; உபாகமம் 17:16-20; 1 இராஜாக்கள் 10:26; 11:3, 4, 11.
16. ஜெபத்தோடுகூட அதற்கு இசைவான கிரியைகளும் இருக்கவேண்டும் என்ற நியமம், நம்மில் ஆழமாகப் பதிந்துவிட்டிருக்கும் தன்னலமான சில பழக்கவழக்கங்களை மேற்கொள்ள கடவுளுடைய உதவிக்காக விண்ணப்பிக்கையிலும் பொருந்துகிறது. இவ்விதமாக, ஒரு பயனியர் சகோதரி, நவீனகால பாணியிலமைந்த சங்கீத நாடகங்களை, காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரையில் ஒவ்வொரு நாளும் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாக தன்னை அனுமதித்தாள். ஒரு மாவட்ட மாநாட்டில் கொடுக்கப்பட்ட இது தொடர்பான பேச்சாகிய, ஒழுக்கங்கெட்ட இத்தகைய நிகழ்ச்சிகள் எவ்வளவு தீமையானது என்ற பேச்சிலிருந்து கற்றுக்கொண்ட பிறகு அவள் இந்த விஷயத்தை கடவுளிடம் ஜெபத்தில் வைத்தாள். ஆனால் அப்பழக்கத்தை மேற்கொள்வதற்கு அவளுக்கு அது கொஞ்ச காலத்தை எடுத்தது. ஏன்? ஏனெனில் அவள் சொன்னது போல்: ‘நான் அப்பழக்கத்தை மேற்கொள்ள ஜெபிப்பேன், ஆனாலும் எப்படியோ அந்நிகழ்ச்சிகளைப் பார்த்துவிடுவேன். ஆகவே நான் முழு நாளாக வெளி ஊழியத்தில் தங்கிவிடுவதன் மூலம், அந்த சோதனையையுங்கூட கொண்டிருக்க மாட்டேன் என்று தீர்மானித்தேன். முடிவாக, காலையிலேயே டெலிவிஷன் பார்ப்பதை நிறுத்திவிட்டு, அப்படியே முழு நாளும் அதிலிருந்து விலகியிருக்குமளவுக்கு நான் வந்துவிட்டேன்.’ ஆம், அவளுடைய பலவீனத்தை மேற்கொள்ள உதவிக்காக ஜெபிப்பதோடுகூட, அதை மேற்கொள்வதற்காக உழைக்கவும் வேண்டியவர்களாயிருந்தாள்.
ஜெபமும் நம்முடைய சாட்சி கொடுத்தலும்
17. ஜெபத்தோடுகூட உழைப்பும் தேவை என்ற நியமம் வேறு எதைப் பார்க்கிலும் ராஜ்ய-பிரசங்கிப்பு வேலைக்கு அதிகம் பொருத்தமாக இருக்கிறது இப்படியாக, யெகோவாவின் சாட்சிகள் அனைவரும் அறுப்புக்கு அதிகமான வேலையாட்கள் அனுப்பும்படி ஜெபிப்பதுமட்டுமின்றி அந்த வேலையில் தங்களைத் தாங்களே ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அதன் விளைவாக, ஒவ்வொரு நாட்டிலும் ஆச்சரியமான அதிகரிப்பைப் பார்த்திருக்கின்றனர். ஒரே ஒரு உதாரணத்தைக் கவனிக்கையில் 1930-ல் சில்லி-யில் ஒரே ஒரு யெகோவாவின் சாட்சியே இருந்தார். இன்று அந்த ஒரு சாட்சி ஓராயிரமாக மட்டுமல்ல, ஆனால் சுமார் 30,000 சாட்சிகளாக அதிகரிக்கிறார். (ஏசாயா 60:22) இது வெறுமென ஜெபங்களின் விளைவாக மட்டுமிருந்ததா? இல்லை, உழைப்பு உட்பட்டிருந்தது. ஏன், 1986-ல் மட்டுமே சில்லி-யில் யெகோவாவின் சாட்சிகள் 64,92,000-ற்கும் அதிகமான மணிநேரத்தை பிரசங்க வேலைக்கு அற்பணித்தனர்!
18. பிரசங்க வேலை 4, இதே காரியம் உண்மையாக இருக்கிறது. சாட்சிகள் அதிகரிப்புக்காக மட்டும் ஜெபிப்பதில்லை, ஆனால், இரகசியமாக மறைந்து வேலை செய்யும் குழுவாக இருந்து தொடர்ந்து பிரசங்கிக்கின்றனர். இந்நாடுகளில் எதிர்ப்புகளின் மத்தியிலும் அதிகரிப்பு இருக்கிறது. இவ்விதமாக, யெகோவாவின் சாட்சிகள் அத்தகைய எதிர்ப்புகளின் மத்தியிலும் அதிகரிப்பு இருக்கிறது. இவ்விதமாக, யெகோவாவின் சாட்சிகள் அத்தகைய எதிர்ப்புகளின் மத்தியிலும் 33 நாடுகளில் 1986-ஊழிய ஆண்டின்போது 3,,26,00,000-ற்கும் அதிகமான மணிநேரத்தை 4.6 சதவிகித அதிகரிப்பில் களிகூர்ந்தனர்!
19. மெய்தான், ஜெபங்கள் உழைப்பைத் தேவைப்படுத்துகின்றன என்ற நியமம் தனிப்பட்டவிதத்தில் ஒவ்வொருவரைக் குறித்ததிலும் பொருந்துகிறது. நாம் ஒரு பைபிள் படிப்பைப் பெற யெகோவாவிடம் ஜெபிக்கலாம் ஆனால் ஒன்றைப் பெறுவதற்கு நம்மால் கூடியதையெல்லாம் செய்யாதவர்களாயிருக்கலாம். அதுவே ஒரு பயனியரின் அனுபவமாயிருந்தது. ஒரே ஒரு வேதப்படிப்பைக் கொண்டவளாக, அவள் இன்னும் அநேக படிப்புகளுக்காக ஜெபித்தாள். அவள் அத்துடன் அப்படியே விட்டுவிட்டாளா? இல்லை, ஆனால் அவள் அவளுடைய ஊழியத்தை கவனமாக ஆராய்ந்து பார்த்தாள். மறுசந்திப்புகள் செய்கையில், ஒரு வீட்டு வேதப்படிப்பை அவர்கள் கொண்டிருக்கக்கூடும் என்ற பொருளை தான் கொண்டுவராதிருந்ததைக் கண்டுபிடித்தாள். இதன் பேரில் உழைப்பதன் மூலம் அவள் விரைவில் மேலுமாக இரண்டு வேதப்படிப்புகளைப் பெற்றாள்.
20. ஜெபங்கள் உழைப்பைத் தேவைப்படுத்துகின்றன என்பதை நிரூபிக்க மேலும் அநேக உதாரணங்கள் கொடுக்கப்படக்கூடும். உதாரணமாக, குடும்பத்திலோ, அல்லது சபையிலோ தனிப்பட்ட உறவுகள் சம்பந்தப்பட்டவை இருக்கின்றன. ஆனால் முன்னதாக நிகழ்ந்திருக்கும் உதாரணங்கள், ஜெபங்கள் உழைப்பை தேவைப்படுத்துகின்றன என்பதை முழுமையாகத் தெளிவாய்க் காட்ட போதுமானவையாயிருக்கின்றன. இது தர்க்கரீதியானது, ஏனெனில் நாம் நம்முடைய நடத்தையைக்கொண்டே யெகோவா தேவனைப் புண் படுத்துகையில், அவர் நம் வேண்டுதலுக்குச் சாதகமான சிரத்தையெடுப்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. நமக்கு நாமே செய்ய முடியாதவற்றை யெகோவா நமக்காகச் செய்யும்படி நாம் எதிர்பார்க்கையில், நம்மால் கூடியதையெல்லாம் நம் ஜெபங்களுக்கிசைவாக நாம் செய்ய வேன்டும் என்பதையும் இது குறிக்கிறது. மெய்யாகவே, யெகோவாவின் நியமங்கள் ஞானமானவையாகவும் நீதியானவையாகவும் இருக்கின்றன. அவை அர்த்தமுள்ளவையாகவும், அதற்கிசைய நாம் செய்யப்படுகையில் நம்முடைய சொந்த நலனுக்கானவையாகவும் இருக்கின்றன. (W87 7/1)
உங்களுக்கு நினைவிருக்கிறதா
◻ ஜெபத்தைக் குறித்து எந்தத் தேவை பூர்வகால இஸ்ரவேலிலிருந்த பலரால் கவனியாமல் விடப்பட்டது?
◻ நாம் விரும்பும் காரியத்திற்காக ஜெபிப்பதோடு கூட, உழைக்கவும் வேண்டிய தேவையைக் கேட்பதில் கடவுள் ஏன் நியாயமற்றவராக இல்லை?
◻ யெகோவாவின் ஊழியர்கள் தாங்கள் எதற்காக ஜெபித்தார்களோ அதற்காக உழைத்தார்களென்பதை என்ன பூர்வகால உதாரணங்கள் காட்டுகின்றன?
◻ கடவுளுடைய பரிசுத்த ஆவிக்காகவும், ஞானத்திற்காகவும் நாம் ஜெபிக்கையில் கடவுள் பதிலளிக்க நாம் என்ன செய்கிறவர்களாயிருக்க வேண்டும்?
◻ ஜெபங்கள் கிரியைகளைத் தேவைப்படுத்துகின்றன என்ற நியமம் எப்படி நமது வெளி ஊழியத்திற்குப் பொருந்துகிறது?
[கேள்விகள்]
1. கடவுள் நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் அளிக்கிறாரென்றால் எந்த ஒரு நிபந்தனை சிந்திக்கப்பட்டாக வேண்டும்?
2, 3. ஏசாயா, எரேமியா. மீகா இவர்களின் வார்த்தைகளின்படி இஸ்ரவேலரின் ஜெபங்களுக்கு யெகோவா ஏன் பதிலளிக்கவில்லை?
4. யெகோவாவின் ஜனங்களில், ஜெபங்களோடு சேர்ந்த கிரியையின் தேவைகளுக்குப் போற்றுதல் செய்கிறதில்லை என்று எது குறிப்பிடுகிறது?
5. யெகோவா நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்க, நம்முடைய உண்மைத் தன்மையை நாம் எவ்வாறு நிரூபிக்க வேண்டும்?
6. என்ன இரண்டு காரணங்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும்?
7, 8. (எ) யாக்கோபின் வாழ்க்கையில் நடந்த என்ன நிகழ்ச்சி, ஜெபம் செய்வதோடு நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என்பதற்கு அவன் போற்றுதல் தெரிவித்தான் என்பதைக் காட்டுகிறது? (பி) இதைக்குறித்து என்ன உதாரணத்தை தாவீது ராஜா அளித்தான்?
9. ஜெபங்களுக்கு இசைய செயல்படவேண்டும் என்ற நியாயத்தைத் தான் மதித்துணர்ந்தான் என்பதை நெகேமியா எப்படிக் காட்டினான்?
10, 11 இயேசுவால் அளிக்கப்பட்ட என்ன முன்மாதிரிகள் அவர் தன்னுடைய ஜெபத்திற்கிசைய செயல்பட்டார் என்பதைக் காட்டுகின்றன?
12. அன்றுள்ள ஆகாரத்தைக் கடவுள் நமக்குத் தரும்படி கேட்கும் நமது ஜெபங்களுக்கும் வேலைசெய்வதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
13. தமது பரிசுத்த ஆவிக்கான ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
14, 15. (எ) ஞானத்திற்கான நம்முடைய ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிக்க நாம் எப்படி ஒத்துழைக்க வேண்டும்? (பி) இது சாலொமோன் ராஜாவின் மாதிரியிலிருந்து எப்படி எடுத்துக் காட்டப்படுகிறது?
16. மாம்ச பலவீனங்களை மேற்கொள்ளும் பொருட்டான நமது ஜெபங்கள் கிரியைகளோடு இசைவாக செயல்பட வேண்டும் என்பதை எந்த உதாரணம் காட்டுகிறது?
17-19. (எ) யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடைய ஜெபங்களுக்கிசைவாக செயல்பட்டிருக்கின்றனர் என்பதை எவ்வுண்மைகள் காட்டுகின்றன? (பி) ஒரு தனிப்பட்டவரின் என்ன உதாரணம் அதே குறிப்பைக் காட்டுகிறது?
20. ஜெபங்கள் உழைப்பைத் தேவைப்படுத்தும் நியமம் எவ்வாறு சாராம்சமாகக் கூறப்படலாம்?
[பக்கம் 17-ன் படம்]
அறுப்புக்கு மிகுதியான வேலையாட்களுக்காக ஜெபிக்கும்படி தம்முடைய சீஷர்களை இயேசு துரிதப்படுத்தினார். ஆனால் அவர் அவர்களை பிரசங்க அல்லது ‘அறுவடை’ வேலைக்கு வெளியில் அனுப்பவும் செய்தனர்
[பக்கம் 18-ன் படம்]
நீங்கள் தொலைக்காட்சியைப் பார்க்கும் காரியத்தில் உங்களைக் கட்டுப்படுத்த உதவிக்காக ஜெபிக்கிறீர்களா? அப்படியானால் ஜெபம், அதைச் சார்ந்த நடவடிக்கையைத் தேவைப்படுத்துகிறது என்ற நியமத்தை, உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியை அணத்துவிடுவதன் மூலம் பொருத்துங்கள்