“கேட்டின் மகனாகிய பாவமனுஷ”னுக்கு எதிரான கடவுளின் நியாயத்தீர்ப்பு
“நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.” —மத்தேயு 7:19.
1, 2. கேட்டின் மகனாகிய பாவமனுஷன் எது? அது எப்படி வளர்ந்தது?
“கேட்டின் மகனாகிய பாவ மனுஷ”னின் வருகையைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைக்கும்படி கடவுளால் ஏவப்பட்டபொழுது அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய நாட்களிலேயே அது தோன்ற ஆரம்பித்துவிட்டதென சொன்னான். முந்தையக் கட்டுரை விளக்கியவிதமாகவே, மெய்க்கிறிஸ்தவத்திற்கெதிராக விசுவாச துரோகம் செய்வதில் முன்நின்று வழிநடத்தும் ஒரு தனிப்பட்ட வகுப்பைப் பற்றி பவுல் பேசிக்கொண்டிருந்தான். சத்தியத்திலிருந்து விலகி வருதல் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் முக்கியமாக கடைசி அப்போஸ்தலனின் மரணத்துக்குப் பின் ஆரம்பமானது. இந்த அக்கிரமக்கார வகுப்பு கடவுளுடைய வார்த்தைக்கு எதிராக இருக்கும் கொள்கைகளையும் செயல்களையும் அறிமுகப்படுத்தியது.—2 தெசலோனிக்கேயர் 2:3, 7; அப்போஸ்தலர் 20:29, 30; 2 தீமோத்தேயு 3:16, 17; 4:3, 4.
2 காலப்போக்கில், இந்த அக்கிரமக்கார வகுப்பு வளர்ந்து கிறிஸ்தவமண்டல குருவர்க்கமாக மாறியது. நான்காம் நூற்றாண்டில் ரோமப் பேரரசர் கான்ஸ்டன்டீனால் விசுவாச துரோக சர்ச்சுகளும் புறமத அரசும் ஒட்டவைக்கப்பட்டபோது அதன் ஆளும் திறமையில் வலிமைக்கூடியது. கிறிஸ்தவமண்டலம் தொடர்ந்து துண்டுதுண்டாகி பலபிரிவுகளாக ஆனபோது குருவர்க்கம் தொடர்ந்து தங்களை பாமரர்களுக்கு மேலாக அநேக சமயங்களில் உலக ஆட்சியாளர்களுக்கும் மேலாக உயர்த்தியிருக்கின்றனர்.—2 தெசலோனிகேயர் 2:4.
3. கேட்டின் மகனாகிய பாவமனுஷனின் முடிவு என்ன?
3 கேட்டின் மகனாகிய பாவ மனுஷனின் முடிவு என்ன? பவுல் முன்னறிவித்தான்: “அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனை கர்த்தர் (இயேசு) . . . அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.” (2 தெசலோனிக்கேயர் 2:8) கடவுள் சாத்தானின் முழு ஒழுங்குமுறையையும் அதன் முடிவுக்குக் கொண்டுவரும்போது இந்தக் குருவர்க்கத்தினரின் அழிவும் இருக்கும் என்று இது அர்த்தப்படுத்துகிறது. கடவுள் தமது பரலோக ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவை தேவதூதரின் அழிக்கும் சேனையை வழிநடத்த உபயோகிப்பார். (2 தெசலோனிக்கேயர் 1:6–9; வெளிப்படுத்துதல் 19:11–21) குருவர்க்கத்தினர் கடவுளையும் கிறிஸ்துவையும் அவமதித்ததாலும் இலட்சக்கணக்கான ஆட்களை மெய்வணக்கத்திலிருந்து விலகிச் செல்ல வழிநடத்தியதாலும் இந்த முடிவு அவர்களுக்குக் காத்துக்கொண்டிருக்கிறது.
4. எந்த நியமத்தின் அடிப்படையில் கேட்டின் மகனாகிய பாவமனுஷன் நியாயந்தீர்க்கப்படுவான்?
4 எந்த நியமத்தின் அடிப்படையில் கேட்டின் மகனாகிய பாவமனுஷன் நியாயந்தீர்க்கப்படுவான் என்பதை இயேசு குறிப்பிட்டார். “கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்லமரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்க மாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். . . . பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.”—மத்தேயு 7:15–21; தீத்து 1:16; 1 யோவான் 2:17-ஐயும் பார்க்கவும்.
சிறந்த கிறிஸ்தவ கனிகள்
5. சிறந்த கிறிஸ்தவ கனிகளுக்கான அஸ்திபாரம் என்ன? ஓர் அடிப்படை கற்பனை என்ன?
5 சிறந்த கிறிஸ்தவ கனிகளுக்கான அஸ்திபாரம் 1 யோவான் 5:3-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்” என்று குறிப்பிடுகிறது. மேலும் இது ஓர் அடிப்படை கற்பனை “உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்பதே. (மத்தேயு 22:39) எனவே நிறம், தேசம் இவற்றிற்கப்பாற்பட்டு கடவுளின் உண்மை ஊழியர் தங்கள் அயலாரை நேசிக்க வேண்டும்.—மத்தேயு 5:43–48; ரோமர் 12:17–21.
6. முக்கியமாக யாரிடம் கிறிஸ்தவ அன்பு காட்டப்பட வேண்டும்?
6 முக்கியமாக கடவுளுடைய ஊழியர்கள் தங்களுடைய ஆவிக்குரிய சகோதரர்களிடம் அன்பு காட்ட வேண்டும். “தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூர வேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.” (1 யோவான் 4:20, 21) இயேசு சொன்ன அந்த அன்பு மெய்க் கிறிஸ்தவர்களின் அடையாளக் குறியாக இருக்கிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.”—யோவான் 13:35; ரோமர் 14:19, கலாத்தியர் 6:10; 1 யோவான் 3:10–12-ஐயும் பார்க்கவும்.
7. மெய்க்கிறிஸ்தவர்கள் எப்படி உலகம் முழுவதும் இணைக்கப்பட்டிருக்கின்றனர்?
7 கடவுளுடைய ஊழியர்களை ஐக்கியத்தில் இணைப்பதற்கு சகோதர அன்பு “பசையை”ப் போல் இருக்கிறது: “இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.” (கொலோசெயர் 3:14) மெய்க் கிறிஸ்தவர்கள் உலக முழுவதிலுமுள்ள தங்கள் சகோதரர்களுடன் ஐக்கியப்பட்டு இருக்க வேண்டும். கடவுளுடைய வார்த்தை: “நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்” இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. (1 கொரிந்தியர் 1:10) உலகளாவிய அளவில் தங்கள் அன்பையும் ஐக்கியத்தையும் காத்துக்கொள்ள இந்த உலகத்தின் அரசியல் காரியங்களில் கடவுளுடைய ஊழியர்கள் நடுநிலைமை வகிக்க வேண்டும். இயேசு: “நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல” என்றார்.—யோவான் 17:16.
8. கிறிஸ்தவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை இயேசு எப்படி மெய்ப்பித்துக்காட்டினார்?
8 பேதுரு, இயேசுவை கைது செய்ய வந்த மனிதர்களுள் ஒருவன் காதை வெட்ட ஒரு பட்டயத்தை உபயோகித்த சமயத்தில் இயேசு தாம் மனதில் எந்தளவு எண்ணியிருந்தார் என்பதை அவர் காட்டினார். எதிர்ப்பவர்களிடமிருந்து தேவகுமாரனை பாதுகாப்பதற்காக இப்படிப்பட்ட சக்திகளைப் பயன்படுத்துவதை இயேசு உற்சாகப்படுத்தினாரா? இல்லை, ஆனால் அவர் பேதுருவிடம்: “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு” என்று சொன்னார். (மத்தேயு 26:52) இவ்வாறு மெய்க் கிறிஸ்தவர்கள் தேசத்தின் யுத்தங்களில் பங்கு கொள்வதில்லை அல்லது தங்களுடைய நடுநிலைமைக்காக அவர்கள் பங்குகொள்ள மறுப்பது கொல்லப்படுவதில் விளைவடைந்தாலும் எந்த விதத்திலும் மனித இரத்தத்தைச் சிந்த மறுத்திருக்கின்றனர். பல நூற்றாண்டுகளாக, இன்றும்கூட அநேகர் இதையே எதிர்ப்படுகின்றனர். கிறிஸ்துவின் கீழான கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே நித்தியத்திற்கும் யுத்தத்தையும் இரத்தம் சிந்துதலையும் எடுத்துப்போடும் என்று அவர்கள் அறிந்திருக்கின்றனர்.—சங்கீதம் 46:9; மத்தேயு 6:9, 10; 2 பேதுரு 3:11–13.
9. (எ) முதல் கிறிஸ்தவர்களைப் பற்றி சரித்திரம் நமக்கு என்ன சொல்லுகிறது? (பி) இது எப்படி கிறிஸ்தவமண்டல மதங்களோடு ஒப்பிடும்போது முரணாக உள்ளது?
9 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மனித இரத்தத்தை சிந்தவில்லை என்று சரித்திரம் உறுதி செய்கிறது. முந்தைய இறையியல் பேராசிரியர் பீட்டர் டி ரோசா எழுதுகிறார்: “இரத்தம் சிந்துதல் பெருங்குற்றமாக இருந்தது. இதன் காரணமாகவே கிறிஸ்தவர்கள் பட்டயங்களையோ அல்லது மற்ற கருவிகளையோ கொண்டு சண்டையிடும் காட்சிகளை எதிர்த்தனர். . . . ரோமைக் காப்பாற்ற யுத்தமும் மற்ற யுத்த கருவிகளைப் பயன்படுத்துவதும் தேவையாக இருந்தபோதிலும் கிறிஸ்தவர்கள் அதில் சேர்ந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். . . . இயேசுவைப் போலவே கிறிஸ்தவர்கள் தங்களைச் சமாதானத்தின் தூதுவர்களாக எண்ணினர்; எந்தச் சந்தர்ப்பத்திலும் மரணத்தின் தூதுவர்களாக இல்லை.” மறுபக்கத்தில், ஐக்கியமற்ற மதங்களடங்கிய கிறிஸ்தவமண்டலம் அன்பின் கட்டளையை மீறிவிட்டனர், அளவிடமுடியாதளவு இரத்தத்தைச் சிந்தியுள்ளனர். அவர்கள் சமாதானத்தின் தூதுவர்களாக இருப்பதற்குப் பதிலாக திரும்பத்திரும்ப மரணத்தின் தூதுவர்களாகவே இருந்திருக்கின்றனர்.
இரத்தக்கறைப் படிந்த மகா பாபிலோன்
10. மகா பாபிலோன் என்றால் என்ன? அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
10 சாத்தான் “இந்த உலகத்தின் அதிபதியாக” “இப்பிரபஞ்சத்தின் தேவனாக” இருக்கிறான். (யோவான் 12:31; 2 கொரிந்தியர் 4:4) கிறிஸ்தவமண்டலம் மற்றும் அவளுடைய குருவர்க்கத்தினர் உட்பட உலகளாவிய பொய் மத ஒழுங்கு முறையை பல நூற்றாண்டுகளாக சாத்தான் தன் உலகத்தின் பாகமாக கட்டி வந்திருக்கிறான். இந்த உலகளாவியப் பொய் மத ஒழுங்கு முறையை பைபிள் “மகா பாபிலோன், (ஆவிக்குரிய) வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்” என்று அழைக்கிறது. (வெளிப்படுத்துதல் 17:5) பொய் மதம் மற்றும் கடவுளை அவமதிக்கும் கொள்கைகளையும் செயல்களையும் நடப்பித்த பூர்வ நகரமாகிய பாபிலோனிலே இன்றைய பொய் மதங்கள் வேர்கொண்டிருக்கின்றன. எனவேதான் பூர்வ பாபிலோனின் மறுபகுதி பொய் மத உலகப் பேரரசு என்று பொருள்படும் மகா பாபிலோன் என அழைக்கப்படுகிறது.
11. மகா பாபிலோனைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது? ஏன்?
11 மத பாபிலோனைக் குறித்ததில் கடவுளுடைய வார்த்தை: “தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது” என்று சொல்லுகிறது. (வெளிப்படுத்துதல் 18:24) கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தத்திற்கும் இந்த உலகத்தின் மதங்கள் எவ்விதத்தில் பொறுப்பாக முடியும்? எல்லா மதங்களும்—கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் மற்றும் கிறிஸ்தவமல்லாத மதங்களும்கூட—தேசத்தின் யுத்தங்களை—ஆதரித்திருக்கின்றனர், மன்னித்துவிட்டிருக்கின்றனர், அல்லது தேசங்களின் யுத்தங்களை முன்னின்று நடத்தியிருக்கின்றனர்; அவர்களோடு ஒத்துப்போகாத கடவுள் பயமுள்ள ஆட்களை துன்புறுத்தியிருக்கின்றனர் அல்லது கொன்றிருக்கின்றனர்.
கடவுளை அவமதிக்கும் ஒரு பதிவு
12. மற்ற மதத்தலைவர்களைக் காட்டிலும் ஏன் கிறிஸ்தவமண்டல குருவர்க்கத்தினர் அதிக கணக்குக் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்?
12 கிறிஸ்தவமண்டல குருவர்க்கம் மற்ற மதத்தலைவர்களைக் காட்டிலும் அதிக அளவில் இரத்தம் சிந்துதலுக்கு உட்பட்டிருந்ததால் கணக்குக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர். ஏன்? ஏனென்றால் அவர்கள் கடவுள்பெயரை ஏற்றுக்கொண்டதோடு கிறிஸ்துவினுடையதையும் ஏற்றுக்கொண்டிருந்தனர். அதன் காரணமாக அவர்கள் இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற கடமைப்பட்டிருந்தனர். (யோவான் 15:10–14) ஆனால் அவர்கள் அந்தப் போதனைகளைப் பின்பற்றவில்லை. இவ்வாறு அவர்கள் அதிக அவதூற்றை கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் கொண்டுவந்தனர். நேரடியாக, சிலுவைப் போர்கள், மற்ற மதப்போர்கள், மரணத்தை விளைவிக்கும் கருவிகளைக் கொண்டு நடத்தப்பட்ட வழக்காராய்ச்சிகள், துன்புறுத்தல்கள். மறைமுகமாக, யுத்தத்தில் மற்ற தேசத்திலுள்ள தன் உடன்மனிதர்களைக் கொன்றதற்கு சர்ச்சுகளிலுள்ள ஆட்களுக்கு மன்னிப்பு போன்ற இந்த இவ்விரு வழிகளிலும் இரத்தம் சிந்துதல்களுக்கு குருவர்க்கத்தினர் பொறுப்புடையவர்கள்.
13. 11 முதல் 13-ம் நூற்றாண்டுகள் முடிய குருவர்க்கத்தினர் எதற்குப் பொறுப்புள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்?
13 உதாரணமாக 11 முதல் 13-ம் நூற்றாண்டுகள் முடிய கிறிஸ்தவமண்டல குருவர்க்கத்தினர் சிலுவைப் போர்களை அறிமுகப்படுத்தினர். இவை கடவுள் மற்றும் கிறிஸ்துவின் பெயரால் கொடுமையான இரத்தம் சிந்துதலிலும் போர்க்காலங்களில் கொள்ளையடித்தலிலும் விளைவடைந்தது. நூறாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். சிலுவைப் போர் உட்படுத்தியவற்றில் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் 1212-ல் நடந்த பிள்ளைகளின் சிலுவைப் போரில் முட்டாள்தனமாகக் கொல்லப்பட்டனர்.
14, 15. 13-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க சர்ச் அறிமுகப்படுத்திய எதைப் பற்றி ஒரு கத்தோலிக்க எழுத்தாளர் எப்படி குறிப்பிடுகிறார்?
14 13-ம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க சர்ச் கடவுளை அவமதிக்கும் மற்றொரு அச்சமூட்டும் காரியத்தை—மரணத்தை விளைவிக்கும் கருவிகளைக் கொண்டு நடத்தப்பட்ட வழக்காராய்ச்சியை அதிகாரப்பூர்வமாக அனுமதித்தது. இது ஐரோப்பாவில் ஆரம்பித்து அமெரிக்காசிலும் பரவி ஆறு நூற்றாண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இது போப்பாதிக்கத்தால் தோற்றுவிக்கப்பட்டும் ஆதரிக்கப்பட்டும் வந்தது. இது சர்ச்சோடு ஒத்துப்போகாமல் முரணாக செயல்படும் எல்லாரையும் துன்புறுத்தி ஒழித்துக்கட்டுவதற்கு செய்யப்பட்ட கொடுங் கொலை முயற்சியாக இருந்தது. சர்ச் முதலில் கத்தோலிக்கரல்லாதவரை மாத்திரமே துன்புறுத்தியபோதிலும் இந்த மரணத்தை விளைவிக்கும் கருவிகளைப் பயன்படுத்தி கொலை செய்யும் வழக்காராய்ச்சியின் குறியிலக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டது.
15 “அதிகப் பற்றுள்ள கத்தோலிக்கன்” என்று தன்னைக் குறிப்பிடும் பீட்டர் டி ரோசா தன்னுடைய சமீபத்திய புத்தகமாகிய போப்—போப்பாதிக்கத்தின் இருண்ட பகுதி-யில் சொல்லும்போது: “யூதர்களைத் துன்புறுத்தியதிலும், வழக்காராய்ச்சிக்கும், திருச்சபைக்கு முரணான கோட்பாடுடைய ஆயிரக்கணக்கானவர்களைக் கொலை செய்வதற்கும் நீதி விசாரணையின் பாகமாக துன்புறுத்தலை மீண்டும் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்துவதற்கும் சர்ச் தானே பொறுப்புள்ளதாக இருந்தது. . . . பேரரசர்களை ஏற்படுத்தவும் தள்ளிவிடவும்கூட போப்புகள் செய்தனர். பேரரசர்கள் தங்கள் குடிமக்கள் மீது துன்புறுத்தல் மற்றம் மரணத்தைக் காட்டி பயமுறுத்தி கிறிஸ்தவத்தை வற்புறுத்தி ஏற்கச் செய்தனர். . . . சுவிசேஷ செய்தியின் விலை சிலிர்க்கச் செய்வதாக இருந்தது.” பைபிளைச் சிலர் சொந்தமாகக் கொண்டிருந்தது தானே கொலை செய்யப்படுவதற்கு அவர்கள் செய்த ஒரே “குற்றமாக” இருந்தது.
16, 17. மரணத்தை விளைவிக்கும் கருவிகளைக் கொண்டு நடத்தப்பட்ட வழக்காராய்ச்சிகளைப் பற்றி என்ன குறிப்புகள் சொல்லப்பட்டிருக்கின்றன?
16 13-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த மூன்றாம் போப் இன்னொசன்ட் என்பவரைப் பற்றி டி ரோசா குறிப்பிடுகிறார்: “கடைசியானதும் அதிக நாகரிகமற்ற முறையில் துன்புறுத்தப்பட்டதும் [ரோம] பேரரசர் அல்லது டயோக்கிலீஷன் [மூன்றாம் நூற்றாண்டு]-ல் தானே, அதில் ஏறக்குறைய இரண்டாயிரம் கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதிலும் அழிக்கப்பட்டனர் என கணக்கிடப்படுகிறது. போப் இன்னொசன்டின் சிலுவைப் போரின் முதல் கொடுமையான சம்பவம் [பிரான்சிலுள்ள “திருச்சபைக்கு முரணான போட்பாட்டாளர்”களுக்கு எதிரானது] அந்த எண்ணிக்கையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமான ஆட்கள் கொல்லப்பட்டதாகும். . . . ஒரே சமயத்தில் மூன்றாம் நூற்றாண்டில் கொல்லப்பட்ட ஆட்களைக் காட்டிலும் அதிகமான கிறிஸ்தவர்களை ஒரே ஒரு போப் கொன்றிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தது ஓர் அதிர்ச்சியான காரியமாயிருக்கிறது. . . . [இன்னொசன்ட்] எவ்வித கணநேர இரக்கமுமின்றி கிறிஸ்து எதிர்க்கும் எல்லாக் காரியங்களையும் கிறிஸ்துவின் பெயரால் செய்திருக்கிறார்.”
17 டி ரோசா குறிப்பிடுகிறார்: “போப்பின் பெயரில் [வழக்காராய்ச்சியாளர்கள்] அதிக நாகரிகமற்ற முறையில் கொல்லப்படுவதற்கும் சரித்திரத்தில் மனிதபண்புநலம் இல்லாமல் இனம் அழிவதற்கு பொறுப்புடையவர்களாக இருந்திருக்கின்றனர்.” ஸ்பெய்னில் இருக்கும் டார்க்யூமாடா, டாமனிக்க வழக்காராய்ச்சியாளனைப் பற்றி சொல்கிறார்: “1483-ல் நியமிக்கப்பட்ட அவர் கொடுங்கோன்மையாக 15 வருடங்கள் ஆட்சி செய்தார். அவருக்கு பலியானவர்கள் 1,14,000 பேர், இவர்களில் 10,220 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.”
18. மரணத்தை விளைவிக்கும் கருவிகளைக் கொண்டு நடத்தப்பட்ட வழக்காராய்ச்சியின் தனித்தன்மைகளை எப்படி ஓர் எழுத்தாளர் குறிப்பிடுகிறார்? அது ஆறு நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இருந்ததற்கு என்ன காரணத்தை அவர் கொடுக்கிறார்?
18 இந்த எழுத்தாளர் இவ்விதமாக முடிக்கிறார்: “வழக்காராய்ச்சியின் பதிவு எந்த அமைப்புக்கும் மனஉளைவை ஏற்படுத்தும் ஒன்றாகும்; கத்தோலிக்க சர்ச்சுக்கு இது பாழாக்குதல் . . . சாதாரண நீதிக்கும்கூட ஆறு நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போப்பாதிக்கம் எதிராளியாக இருந்தது என்று சரித்திரம் காண்பிக்கிறது. 13-ம் நூற்றாண்டு முதலாக வந்த 80 போப்புகளில் ஒருவர்கூட இறையியலையும் கொலைக்கருவிகளைக் கொண்டு வழக்காராய்ச்சி செய்வதையும் எதிர்க்கவில்லை. அதற்கு முரணாக இந்த மரணத்தை விளைவிக்கும் கருவியை உபயோகிப்பதில் ஒருவர் பின் ஒருவராக தங்களுடைய சொந்த கொடுமையை அதிகரித்தனர். இரகசியம் என்னவென்றால்: போப்புகள் நடைமுறையாக திருச்சபைக்கெதிரான முரண் கருத்துக்களோடு எப்படி ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததிக்குத் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தனர்? இயேசுவின் சுவிசேஷத்தை எல்லாச் சமயத்திலும் அவர்கள் எப்படி மறுதலித்தனர்?” அவர் பதிலளிக்கிறார்: “மேற்றிராணியார்கள் முன் ஆட்சிசெய்தவர் செய்தது ‘தவறு’ என்று குறிப்பிடுவதைக் காட்டிலும் சுவிசேஷத்தை மாற்றி அமைப்பதை விரும்பினார். இல்லையென்றால் அது போப்பாதிக்கத்தையே வீழ்த்திவிடும்.”
19. வேறு எந்த அக்கிரம நடவடிக்கையும் குருவர்க்கத்தினரால் பொருட்படுத்தாமல் விடப்பட்டிருக்கிறது?
19 கொடுமையான அடிமைத்தன அமைப்பிலும்கூட குருவர்க்கத்தினரின் பாகம் அக்கிரமமானதாக இருக்கிறது. கிறிஸ்தவமண்டல நாடுகள் அநேக ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக அவர்களுடைய சொந்த நாடுகளிலிருந்து கடத்தி வெகுதூரம் கொண்டு சென்று நூற்றாண்டுகளாக விலங்குகளைப் போல சரீரப்பிரகாரமும் மனதின்பிரகாரமும் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். வெகு குறைந்த குருவர்க்க வகுப்பினரே இந்தக் காரியத்தை தீவிரமாக எதிர்த்தனர். அவர்களில் சிலர் இதைக் கடவுளுடைய சித்தம் என்றும்கூட உரிமைப் பாராட்டினர்.—மத்தேயு 7:12-ஐ பார்க்கவும்.
20-ம் நூற்றாண்டின் இரத்தப்பழி
20. இந்த நூற்றாண்டிலே எப்படி கேட்டின் மகனாகிய பாவமனுஷனின் இரத்தப்பழி உச்சநிலையை அடைந்திருக்கிறது?
20 நம்முடைய நூற்றாண்டில் இந்தக் கேட்டின் மகனாகிய பாவமனுஷனின் இரத்தப்பழி உச்சநிலையை அடைந்திருக்கிறது. பத்தாயிரக்கணக்கானவர்களின் உயிரை இழக்கச் செய்த சரித்திரத்தின் எல்லா யுத்தங்களிலும் மோசமான யுத்தங்களை குருவர்க்கத்தினர் ஆதரித்திருக்கின்றனர். இரண்டு உலக மகா யுத்தங்களிலும் இருபக்கங்களிலுமிருந்து அதே மதத்தைச் சேர்ந்த “சகோதரர்கள்” ஒருவரை ஒருவர் கொல்வதற்கு துணைபுரிந்திருக்கின்றனர். உதாரணமாக இரண்டாம் உலக மகா யுத்தத்தில், ஃபிரென்ச் மற்றும் அமெரிக்க கத்தோலிக்கர்கள் ஜெர்மன் மற்றும் இத்தாலிய கத்தோலிக்கர்களையும்; பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க புராட்டஸ்டன்டினர் ஜெர்மன் புராட்டஸ்டன்டினரையும் கொன்றனர். சில சமயங்களில் அவர்கள் அதே மதத்தைச் சார்ந்தவர்களை மட்டுமின்றி அதே தேச பின்னணியுடைய ஆட்களையும்கூட கொன்றிருக்கின்றனர். இந்த இரண்டு உலக மகா யுத்தங்களும் கிறிஸ்தவமண்டலத்தினரின் இருதயத்தில் திடீர் உணர்ச்சியெழுச்சியாக இருக்கிறது. அவர்கள் குருவர்க்கத்தினரும் அன்பின் கற்பனைக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கும் அதைக் கற்பிக்கவில்லை.
21. யுத்தத்தில் குருவர்க்கத்தினரின் பங்குபற்றி மற்ற மூலங்கள் என்ன சொல்லுகின்றன?
21 தி நியு யார்க் டைம்ஸ் உறுதியாக கூறுகிறது: “முந்தைய காலத்தில் உள்நாட்டு கத்தோலிக்க குருமார் ஆட்சியில் எல்லாச் சமயத்திலும் எப்பொழுதும் அவர்களுடைய தேசத்தின் போர்களை ஆதரவளித்திருக்கின்றனர். அவர்கள் தங்கள் படைகளை ஆசீர்வதித்து அவர்களுடைய வெற்றிக்காக ஜெபங்களை ஜெபித்திருக்கின்றனர். மற்றொரு பகுதியில் மற்றொரு குருமார் தொகுதி வெளிப்படையாகவே எதிர்மாறான விளைவுக்காக ஜெபிக்கின்றனர். . . .கிறிஸ்தவ ஆவிக்கும் யுத்தம் சம்பந்தமான நோக்குநிலைக்கும் இடையேயான வேறுபாடு . . . இரக்கமற்ற விதத்தில் யுத்த கருவிகள் அதிகமாக்கப்படுவது அநேகருக்குத் தெளிவாக தெரிகிறது.” ஐக்கிய மாகாணங்கள் செய்திகள் மற்றும் உலக அறிக்கை: “தங்களை கிறிஸ்தவர்களாக உரிமைப்பாராட்டும் தேசங்கள் அடிக்கடி வன்முறையை உபயோகித்ததால் கிறிஸ்தவத்தின் பெருமை பெருமளவில் சேதப்படுத்தப்பட்டுவிட்டது” என்று குறிப்பிடுகிறது.
22. நம்முடைய நாட்களில் வேறு எதற்கும் குருவர்க்கத்தினர் பொறுப்புடையவர்கள்?
22 இன்று அதிகாரப்பூர்வமான எந்த வழக்கு விசாரணையும் இல்லாதபோதிலும் அரசாங்கத்தைக் கொண்டு “தீர்க்கதரிசி”களையும் “பரிசுத்தவான்”களையும் அவர்களிலிருந்து இவர்கள் வித்தியாசப்படுவதனால் குருமார்கள் துன்புறுத்துகின்றனர். ‘சட்டத்தின் போர்வையில் சூழ்ச்சியான செயல்’களைச் செய்ய அரசியல்வாதிகளை வற்புறுத்துகின்றனர். இந்த வழியில் நம்முடைய நூற்றாண்டில் தடையுத்தரவிடுவதற்கும், சிறையிலடைப்பதற்கும், அடிப்பதற்கும், துன்புறுத்தலுக்கும் மரணத்துக்கும்கூட கடவுள் பயமுள்ள ஆட்களைக் கொண்டு செல்வதற்கு அவர்கள் காரணமாகவோ அல்லது அதை ஆதரிப்பவர்களாகவோ இருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 17:6; சங்கீதம் 94:20, புதிய ஆங்கில பைபிள்.
கணக்குக் கொடுக்க அழைக்கப்படுகின்றனர்
23. கடவுள் கேட்டின் மகனாகிய பாவமனுஷனை ஏன் கணக்குக் கொடுக்கும்படி அழைக்கிறார்?
23 உண்மையாகவே பூமியில் கொல்லப்பட்ட தீர்க்கதரிசிகள், பரிசுத்தவான்கள் ஆகிய எல்லாருடைய இரத்தமும் பொய் மதத்தில் காணப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 18:24) குருவர்க்கத்தினரின் குற்றப்பழி அதிகமாக இருப்பதால் அதிக மோசமான இரத்தஞ்சிந்துதல் கிறிஸ்தவமண்டலத்தில் உண்டாயிருக்கிறது. எவ்வளவு சரியாகவே பைபிள் அவர்கள் “கேட்டின் மகனாகிய பாவமனுஷன்” என்று அடையாளக் குறியைக் கொடுத்திருக்கிறது! ஆனால் கடவுளுடைய வார்த்தை மேலும் சொல்லுகிறது: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” (கலாத்தியர் 6:7) எனவே கடவுள் அக்கிரமக்கார குருவர்க்கத்தினரைக் கணக்குக் கொடுக்க அழைப்பார்.
24. உலகத்தை அசைக்கும் என்ன சம்பவங்கள் சீக்கிரத்தில் நிகழ இருக்கிறது?
24 இயேசு “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்,” என்று சொன்னார். (மத்தேயு 7:23) மேலும் அவர் அறிவித்தார்: “நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.” (மத்தேயு 7:19) நன்கு பழகிக் கொண்டிருந்த அரசியல் அம்சங்கள் வேசியாகிய இவளிடமாக திரும்பும்போது எல்லாப் பொய்மதங்களோடுகூட இந்தக் கேட்டின் மகனாகிய பாவமனுஷன் நெருப்பால் அழிக்கப்படுவதற்கான காலம் வெகுசீக்கிரமாக வருகிறது: “அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து அவளை நெருப்பினாலே சுட்டெரித்துப் போடுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 17:16) இப்படிப்பட்ட உலகத்தையே அசைக்கும் சம்பவங்கள் சீக்கிரத்தில் நிகழ இருப்பதால் கடவுளுடைய ஊழியர்கள் அவர்களைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லவேண்டியது அவசியம். அடுத்தக் கட்டுரை இதை அவர்கள் எவ்வாறு செய்கிறார்கள் என்பதைக் கலந்தாராய்கிறது. (w90 2⁄1)
கலந்தாராய்வதற்கான கேள்விகள்
◻ கேட்டின் மகனாகிய பாவமனுஷன் எது? அது எப்படி வளர்ந்தது?
◻ சிறந்த என்ன கனிகளை மெய்க்கிறிஸ்தவர்கள் உண்டுபண்ண வேண்டும்?
◻ மகா பாபிலோன் யார்? இரத்தப்பழியை எந்தளவு அவள் உடையவளாக இருக்கிறாள்?
◻ கேட்டின் மகனாகிய பாவமனுஷன் கடவுளை அவமதிக்கும் என்ன பதிவை உண்டுபண்ணியிருக்கிறான்?
◻ கேட்டின் மகனாகிய பாவமனுஷனை கணக்குக் கொடுக்கும்படி கடவுள் எப்படி அழைப்பார்?
[பக்கம் 20-ன் படம்]
கடவுள் மற்றும் கிறிஸ்துவின் பெயரால் நிகழ்த்தப்பட்ட சிலுவைப் போர்கள் பயங்கரமான இரத்தம் சிந்துதலில் விளைவடைந்தன
[பக்கம் 21-ன் படம்]
“உள்நாட்டு கத்தோலிக்க குருமார் ஆட்சியில் எல்லாச் சமயத்திலும் எப்பொழுதும் அவை தேசத்தின் போர்களை ஆதரித்திருக்கின்றன”
[படத்திற்கான நன்றி]
U.S. Army