“ஒளி கொண்டுசெல்வோர்” மாவட்ட மாநாட்டுக்கு வாருங்கள்
“இதோ, இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடும்.” (ஏசாயா 60:2) அந்த வார்த்தைகள் இன்று எவ்வளவு உண்மையாக இருக்கின்றன! சந்தேகமின்றி, பொய் மதம் என்ன வகையான வணக்கம் கடவுளைப் பிரியப்படுத்துகிறது என்பதைக் குறித்ததில் மக்களை இருளில் வைத்திருக்கிறது. ஏன்? ஏனென்றால் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுளாகிய சாத்தான், “அவிசுவாசிகளின் மனதை குருடாக்கியிருக்கிறான்.”—2 கொரிந்தியர் 4:4.
சாத்தானால் குருடாக்கப்பட்டுள்ளவர்களுக்கு நேர் எதிர்மாறாக, யெகோவாவின் சாட்சிகள் இருக்கின்றனர். ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகள் இவர்களுக்குப் பொருந்தும்: “ஆனாலும் உன் மேல் கர்த்தர் உதிப்பார். அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.” (ஏசாயா 60:2) இருளிலிருந்து கடவுளுடைய ஆச்சரியமான ஒளிக்கு வந்ததற்காக அவர்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்! சொல்லர்த்தமாக குருடாயிருப்பவர்களும்கூட சத்தியத்தைக் காணும்படியாக அது ஆவிக்குரிய ஒளியாக, மனதுக்கு அறிவொளியூட்டும் கடவுளுடைய வார்த்தையின் சத்தியமாக இருக்கிறது.
இருப்பினும் உதவி தேவைப்படுகிறது. கடவுள் அருளும் உதவிகளை அனுகூலப்படுத்திக் கொள்ளாமல், வெறுமென பைபிளை வாசிக்கும் ஒருவர் ஒளியை காண்பது கூடாத காரியமாக இருக்கிறது. அதன் காரணமாகவே யெகோவா தேவன் மத்தேயு 24:45-47-ல் முன்னுரைக்கப்பட்டுள்ள “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யை கொடுத்திருக்கிறார். இன்று அந்த “அடிமை” யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழுவினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. இந்தக் குழுவின் வழிநடத்துதலின் கீழ்தானே “ஒளி கொண்டுசெல்வோர்,” மாவட்ட மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பிலிப்பியர் 2:14-லுள்ள பவுலின் வார்த்தைகளுக்கு இசைவாக யெகோவாவின் மக்கள் அனைவரும் மேம்பட்ட ஒளி கொண்டுசெல்வோராக இருப்பதற்கு உதவிசெய்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். அங்கே கிறிஸ்தவர்கள் “உலகத்திலே சுடர்களைப் போலப் பிரகாசிக்”கும்படி அறிவுரை கூறப்படுகிறார்கள்.—மத்தேயு 5:14, 16.
இந்தியாவில், “ஒளி கொண்டுசெல்வோர்,” மாவட்ட மாநாடுகள் தொடர் செப்டம்பரில் துவங்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை காலை 10:20 மணிக்கு இசை நிகழ்ச்சி ஒன்று, முன்னாலிருக்கும் ஆவிக்குரிய நிகழ்ச்சிநிரலுக்குத் தயாராக சரியான இருதய மற்றும் மன நிலையில் இருப்பதற்கு அனைவருக்கும் உதவிசெய்யும். ஒவ்வொரு நாளும் அதன் சொந்த பொருளை உடையதாக இருக்கிறது, “உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பும்,” என்பது வெள்ளிக்கிழமைக்கான பொருளாகும்.—சங்கீதம் 43:3.
வெள்ளி காலை நிகழ்ச்சிநிரலின் முக்கிய பேச்சு, “ஒளி கொண்டுசெல்வோர்—என்ன நோக்கத்துக்காக?” என்பதாகும். நிச்சயமாகவே, கிறிஸ்தவர்கள் எந்த ஒரு தனிப்பட்ட, சுயநல உள்நோக்கத்துடன் ஒளி கொண்டுசெல்வோராக இல்லை. மாறாக, முக்கிய ஒளி கொண்டுசெல்பவரான இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்த அதே காரணங்களுக்காக அவர்கள் சேவிக்கிறார்கள், அதாவது சத்தியத்துக்குச் சாட்சி கொடுக்கவும், சிருஷ்டிகரின் நாமத்தை மகிமைப்படுத்தவும் ஆகும். பொருத்தமாகவே இயேசு தம்மைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “நான் உலகத்திலிருக்கையில் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன்.” (யோவான் 9:5) இதன் காரணமாகவே, தம்முடைய அடிச்சுவடுகளை நாம் கவனமாக பின்பற்றும்படி நமக்கு ஒரு மாதிரியை அவர் வைத்துப் போனார். (1 பேதுரு 2:21) அந்த முதல் நாள் பிற்பகல் யோசியா அரசனைப் பற்றிய ஒரு பேச்சும் ஒரு பைபிள் நாடகமும் இருக்கும், இது இளைஞருக்கு விசேஷ அக்கறைக்குரியதாக இருக்கும்.
சனிக்கிழமையின் பொருள், “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள்; . . . உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது.” (மத்தேயு 5:14, 16) காலை நிகழ்ச்சிநிரல் “உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது,” என்ற தலைப்பில் ஒரு தொடர்பேச்சை கொண்டிருக்கும். யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பவர்களுக்கு முழுக்காட்டுதல் பெற வாய்ப்பளிக்கப்படும். பிற்பகல் நிகழ்ச்சிநிரலில், “கிறிஸ்துவின் பிரசன்னம் மற்றும் வெளிப்பாட்டின் மீது விளக்கமளித்தல்,” என்ற தலைப்பில் அறிவொளியூட்டும் தொடர்பேச்சு அளிக்கப்படும்.
மாநாட்டின் மூன்றாவதும் கடைசியுமான நாளான ஞாயிற்றுக்கிழமைக்கு தெரிந்துகொள்ளப்பட்ட பொருள், “வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொண்டிருங்கள்.” (எபேசியர் 5:8) காலை நிகழ்ச்சிநிரல், குடும்ப பொறுப்புகளைப் பற்றி சிந்திக்கும், “கிறிஸ்தவ குடும்பத்தில் ஒருவரையொருவர் கவனித்தல்,” என்ற தலைப்பின் கீழ் ஒரு தொடர்பேச்சைக் கொண்டிருக்கும். கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் கீழ்ப்பட்டிருத்தல் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை விளக்கும் ஒரு பேச்சும்கூட இடம்பெறும்.
ஞாயிறு பிற்பகல் “உலகத்தின் ஒளியைப் பின்பற்றுங்கள்,” என்ற தலைப்புடைய பொதுபேச்சோடு மாநாடு அதன் உச்சக்கட்டத்தை அடையும். இந்தப் பேச்சு யோவான் 1:1-16-ஐ கலந்தாலோசித்து, இயேசு கிறிஸ்துவே உலகத்தின் ஒளியாக இருக்கிறார் என்பதை அழுத்திக் கூறி பைபிள் அறிவிற்கான அவசியத்தைக் காண்பிக்கும். “வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொண்டிருங்கள்,” என்ற ஊக்கமான அறிவுரையோடு மாநாடு முடிவுக்கு வரும்.
யெகோவா அவருடைய காணக்கூடிய அமைப்பின் மூலமாக ஏற்பாடு செய்திருக்கும் இந்த ஆவிக்குரிய விருந்துக்கு உங்கள் போற்றுதலைக் காண்பியுங்கள். வெள்ளி காலை ஆரம்ப பாட்டு முதல் ஞாயிறு பிற்பகல் முடிவு ஜெபம் வரையாக அங்கே இருங்கள். மேடையிலிருந்து சொல்லப்படும் எல்லாவற்றுக்கும் கவனமாக செவிசாயுங்கள். கவனத்தை ஒருமுகப்படுத்த உங்களுக்கு உதவுவதற்கும், எதிர்காலத்தில் எடுத்துப் பார்ப்பதற்கும் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். கடைசியாக, ஏதாவது ஒரு வகையான வாலண்டியர் சேவையில் ஒரு பங்கைக்கொண்டிருக்க திட்டமிடுங்கள். இவ்விதமாக, பெற்றுக்கொள்வதிலிருக்கும் ஆசீர்வாதத்தை மட்டுமல்ல, ஆனால் கொடுப்பதிலிருக்கும் இன்னும் அதிகமான ஆசீர்வாதத்தையும்கூட நீங்கள் அனுபவித்து மகிழுவீர்கள்.—அப்போஸ்தலர் 20:35. (w92 5/1)