கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம்
4 அதனால்தான், இந்த ஊழியத்தைக் கடவுளுடைய இரக்கத்தால் பெற்றிருக்கிற நாங்கள் சோர்ந்துபோவதில்லை. 2 மறைவாகச் செய்யப்படுகிற வெட்கக்கேடான காரியங்களை ஒதுக்கித்தள்ளியிருக்கிறோம். தந்திரமாக நடக்காமலும் கடவுளுடைய வார்த்தையைக் கலப்படம் செய்யாமலும் சத்தியத்தைத் தெரியப்படுத்துகிறோம்.+ அதனால், கடவுளுக்கு முன்னால் எல்லா மனிதர்களுக்கும்* முன்மாதிரிகளாக இருக்கிறோம்.+ 3 நாங்கள் சொல்கிற நல்ல செய்தி திரையால் மறைக்கப்பட்டிருந்தால், அழிவின் பாதையில் போகிறவர்களுக்குத்தான் அது மறைக்கப்பட்டிருக்கும். 4 விசுவாசிகளாக* இல்லாத அவர்களுடைய மனக்கண்களை இந்த உலகத்தின்* கடவுள்+ குருடாக்கியிருக்கிறான்.+ அதனால், கடவுளுடைய சாயலில்+ இருக்கிற கிறிஸ்துவைப் பற்றிய அருமையான நல்ல செய்தியின் ஒளியை அவர்களால் பார்க்க முடிவதில்லை.+ 5 நாங்கள் எங்களைப் பற்றியே பிரசங்கிப்பதில்லை. அதற்குப் பதிலாக, இயேசு கிறிஸ்துவே எஜமான் என்றும், இயேசுவுக்காக நாங்கள் உங்களுடைய அடிமைகள் என்றும்தான் பிரசங்கிக்கிறோம். 6 “இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கட்டும்”+ என்று சொன்ன கடவுள்தான் கிறிஸ்துவின் மூலம்* தன்னைப் பற்றிய அருமையான அறிவொளியை எங்கள் இதயங்களில் பிரகாசிக்க வைத்திருக்கிறார்.+
7 இருந்தாலும், இயல்புக்கு மிஞ்சிய சக்தி எங்களுடையது அல்ல, அது கடவுளுடையது என்பது தெளிவாய்த் தெரிவதற்காக,+ நாங்கள் இந்தப் பொக்கிஷத்தை+ மண்பாத்திரங்களில்*+ பெற்றிருக்கிறோம். 8 நாங்கள் எல்லா விதத்திலும் பயங்கரமாக நெருக்கப்படுகிறோம், ஆனால் முடங்கிப்போவதில்லை. குழம்பித் தவிக்கிறோம், ஆனால் வழி தெரியாமல் திண்டாடுவதில்லை.*+ 9 கொடுமைப்படுத்தப்படுகிறோம், ஆனால் கைவிடப்படுவதில்லை.+ தள்ளப்படுகிறோம், ஆனால் அழிந்துபோவதில்லை.+ 10 இயேசுவைப் போல நாங்கள் வாழ்கிறோம் என்பது எங்கள் உடலில் வெளிப்படுவதற்காக, இயேசு அனுபவித்த மரண அவஸ்தைகளை எங்கள் உடலில் சகித்து வருகிறோம்.+ 11 இயேசுவைப் போல நாங்கள் வாழ்கிறோம் என்பது சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுவதற்காக, உயிரோடிருக்கும் நாங்கள் இயேசுவுக்காக எப்போதும் மரணத்தை எதிர்ப்படுகிறோம்.+ 12 இதனால், எங்களுக்கு மரணம் வருகிறது, உங்களுக்கோ வாழ்வு கிடைக்கிறது.
13 “நான் விசுவாசம் வைத்தேன், அதனால் பேசினேன்”+ என்று எழுதப்பட்டிருக்கிறது. அதேபோன்ற விசுவாசம் எங்களுக்கு இருப்பதால் நாங்களும் விசுவாசம் வைக்கிறோம், அதனால் பேசுகிறோம். 14 இயேசுவை உயிரோடு எழுப்பியவர் இயேசுவைப் போலவே எங்களையும் உயிரோடு எழுப்பி,+ உங்களோடுகூட அவருக்கு முன்பாக நிறுத்துவார் என்று அறிந்திருக்கிறோம். 15 உங்களில் பலர் கடவுளுக்கு நன்றி சொல்வதற்காகவும், அதன் மூலம் அவருடைய அளவற்ற கருணையை நீங்கள் மேலும் மேலும் பெற்று அவருக்கு மகிமை சேர்ப்பதற்காகவும் இவையெல்லாம் உங்களுக்காகவே நடக்கிறது.+
16 அதனால், நாம் சோர்ந்துபோவதில்லை. நம் உடல் அழிந்துவந்தாலும், நம் உள்ளம் நாளுக்குநாள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 17 நமக்கு வரும் உபத்திரவம்* லேசானது, அது நொடிப்பொழுதுதான் இருக்கும். அந்த உபத்திரவத்தால் நமக்கு வரும் மகிமையோ மகத்தானது, அது என்றென்றும் நிலைத்திருக்கும்.+ 18 அதனால், பார்க்க முடிந்த காரியங்கள்மீது அல்ல, பார்க்க முடியாத காரியங்கள் மீதே நம்முடைய கண்களைப் பதிய வைத்திருக்கிறோம்.+ பார்க்க முடிந்த காரியங்கள் தற்காலிகமானவை, பார்க்க முடியாத காரியங்களோ என்றென்றும் நிலைத்திருப்பவை.