யெகோவாவை உண்மைத்தவறாமல் சேவியுங்கள்
“உண்மைத்தவறாதவர்களுக்கு நீர் [யெகோவா] உண்மைத்தவறாதவராகவும் செயல்படுவீர்.”—2 சாமுவேல் 22:26, NW.
1. தம்மிடம் உண்மைத்தவறாமல் இருப்பவர்களிடம் யெகோவா எவ்வாறு செயல்படுகிறார்?
யெகோவா தம்முடைய மக்களுக்குச் செய்யும் எல்லாவற்றிற்கும் கைம்மாறு செய்ய முடியாது. (சங்கீதம் 116:12) அவருடைய ஆவிக்குரிய மற்றும் பொருள் சம்பந்தமான ஈவுகளும் கனிவான இரக்கமும் எவ்வளவு வியக்கத்தக்கது! தம்மிடம் உண்மைத்தவறாமல் இருப்பவர்களிடம் கடவுளும் உண்மைத்தவறாதவராக செயல்படுகிறார் என்பதை பண்டைய இஸ்ரவேலின் அரசனாகிய தாவீது அறிந்திருந்தார். “கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லா சத்துருக்களின் கைக்கும், [ராஜா] சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது,” தாவீது தான் இயற்றிய பாடல் ஒன்றில் அவ்வாறு கூறினார்.—2 சாமுவேல் 22:1.
2. இரண்டு சாமுவேல் 22-ம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்ட தாவீதின் பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகள் யாவை?
2 ஜெபத்திற்கு பதிலளிக்கும்விதமாக “இரட்சகருமானவர்” [விடுவிப்பளிப்பவர், NW] என்பதாக யெகோவாவைத் துதிப்பதன்மூலமாக தாவீது தன் பாடலைத் (சங்கீதம் 18-ற்கு இணையாக) தொடங்கினார். (2 சாமுவேல் 22:2-7) தம்முடைய பரலோக ஆலயத்திலிருந்து, பலமான எதிரிகளினின்று தம்முடைய உண்மைத்தவறாத ஊழியனை விடுவிப்பதற்காகக் கடவுள் செயல்பட்டார். (வசனங்கள் 8-19) ஒரு நேர்மையான பாதையில் தொடர்ந்ததற்காகவும் யெகோவாவின் வழிகளைக் காத்துக்கொண்டதற்காகவும் இவ்விதமாக தாவீது பலனளிக்கப்பட்டார். (வசனங்கள் 20-27) கடவுளால் கொடுக்கப்பட்ட பெலனால் செய்யப்பட்ட செயல்கள் அடுத்ததாக வரிசைப்படுத்தப்பட்டன. (வசனங்கள் 28-43) கடைசியாக, தாவீது தன் சொந்த ஜனங்கள் மற்றும் எதிரான ஜாதிகளிடமிருந்தும் வந்த குறைகூறுதல்களினின்று விடுதலையைச் சுட்டிக்காண்பித்து, “தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான ரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின[வருக்கு] . . . கிருபை செய்கிறார்,” என்பதாக யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறார். (வசனங்கள் 44-51) ஒரு நேர்மையான பாதையில் தொடர்ந்திருந்து, அவருடைய பெலனில் சார்ந்திருப்போமானால், யெகோவா நம்மையும் விடுவிக்க முடியும்.
உண்மைத்தவறாமல் இருத்தல் எதை அர்த்தப்படுத்தும்
3. வேதப்பூர்வ நோக்குநிலையிலிருந்து, உண்மைத்தவறாமல் இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
3 தாவீதின் விடுதலை பாட்டு நமக்கு இந்த ஆறுதலளிக்கும் உறுதியை அளிக்கிறது: “உண்மைத்தவறாமல் இருப்பவர்களிடம் நீர் [யெகோவா] உண்மைத்தவறாதவராகவும் செயல்படுவீர்.” (2 சாமுவேல் 22:26, NW) எபிரெய பெயரடைச்சொல்லாகிய சாஸித் “உண்மைத்தவறாமல் இருப்பவர்,” அல்லது “கிருபை உடையவர்” என்பதைக் குறிக்கும். (சங்கீதம் 18:25, அடிக்குறிப்பு, NW) செஸெத் என்ற பெயர்ச்சொல், ஒரு பொருளுடன் அதனோடு தொடர்புடைய நோக்கத்தை அடையும்வரையாகத் தன்னை அன்பாகப் பற்றிஇணைத்து வைத்துக்கொள்ளும் தயவு என்னும் கருத்தைக் கொண்டிருக்கிறது. அவருடைய ஊழியர்களும் அவருக்காக வெளிக்காட்டுவதுபோலவே, யெகோவா அந்தவிதமான தயவை தம்முடைய ஊழியர்களிடத்தில் வெளிக்காட்டுகிறார். இந்த நீதியான, பரிசுத்த உண்மைத்தவறாமை ‘கிருபை’ மற்றும் ‘மாறாத அன்பு’ என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (ஆதியாகமம் 20:13; 21:23) கிரேக்க வேத எழுத்துக்களில், ஹாஸியோடெஸ் என்ற பெயர்ச்சொல்லும் ஹோஸியாஸ் என்ற பெயரடைச்சொல்லும் வெளிப்படுத்துகிறபடி, “உண்மைத்தவறாமை” என்பது பரிசுத்தம் மற்றும் பயபக்தி என்ற கருத்தை ஏற்கிறது. அத்தகைய உண்மைத்தவறாமை உண்மைத்தன்மையையும் பக்தியையும் உள்ளடக்குகிறது; அது முழுஈடுபாடுடனும் கவனத்துடனும் கடவுளிடமாக எல்லா கடமைகளையும் செய்துமுடிப்பதை அர்த்தப்படுத்துகிறது. யெகோவாவுக்கு உண்மைத்தவறாமல் இருத்தல் என்பது, ஓர் உறுதியான பசையைப்போல செயல்படும் பலமான பக்தியால் அவரைப் பற்றிக்கொண்டிருத்தலை அர்த்தப்படுத்தும்.
4. யெகோவாவின் உண்மைத்தவறாமை எவ்வாறு காண்பிக்கப்படுகிறது?
4 யெகோவாவுடைய சொந்த உண்மைத்தவறாமை பல வழிகளில் காண்பிக்கப்படுகிறது. உதாரணமாக, அவருடைய மக்கள்மீதுள்ள மாறாத அன்பு மற்றும் நியாயத்திற்கும் நீதிக்குமான அவருடைய உண்மைத்தவறாமை காரணத்தால், அவர் பொல்லாதவர்களுக்கு விரோதமாக நியாயநடவடிக்கை எடுக்கிறார். (வெளிப்படுத்துதல் 15:3, 4; 16:5) ஆபிரகாமோடு அவர் செய்திருந்த உடன்படிக்கைக்கான உண்மைத்தவறாமை, இஸ்ரவேலருடன் நீடிய பொறுமையுடன் இருக்கும்படி அவரைத் தூண்டியது. (2 இராஜாக்கள் 13:23) கடவுளுக்கு உண்மைத்தவறாமல் இருப்பவர்கள் தங்களுடைய உண்மைத்தவறாத போக்கின் முடிவுவரையாக அவருடைய உதவியில் சார்ந்திருக்கலாம்; அவர் அவர்களை நினைவில் கொள்வார் என்றும் நிச்சயமாய் இருக்கலாம். (சங்கீதம் 37:27, 28; 97:10) இயேசு, கடவுளுடைய முக்கியமான ‘உண்மைத்தவறாதவராக,’ [NW] அவருடைய ஆத்துமா ஷீயோலில் விடப்படுவதில்லை என்ற அறிவினால் பலப்படுத்தப்பட்டார்.—சங்கீதம் 16:10; அப்போஸ்தலர் 2:25, 27.
5. யெகோவா உண்மைத்தவறாமல் இருப்பதால், அவர் தம்முடைய ஊழியர்களிடம் எதை எதிர்பார்க்கிறார், மேலும் என்ன கேள்வி கவனிக்கப்படும்?
5 யெகோவா தேவன் உண்மைத்தவறாதவராக இருப்பதால் தம்முடைய ஊழியர்களிடமிருந்து அவர் உண்மைத்தவறாமையை எதிர்பார்க்கிறார். (எபேசியர் 4:24) உதாரணமாக, சபை மூப்பர்களாக நியமிக்கப்படுவதற்கு தகுதிபெற ஆண்கள் உண்மைத்தவறாதவர்களாய் இருக்கவேண்டும். (தீத்து 1:8) அவரை உண்மைத்தவறாமல் சேவிப்பதற்கு யெகோவாவின் மக்களை என்ன காரணங்கள் அசைவிக்க வேண்டும்?
கற்றுக்கொண்ட காரியங்களுக்குப் போற்றுதல்
6. நாம் கற்றிருக்கும் வேதப்பூர்வ காரியங்களைக்குறித்து எவ்வாறு உணரவேண்டும், அவ்விதமான அறிவைக்குறித்து எதை நினைவில் வைக்கவேண்டும்?
6 நாம் கற்றுக்கொண்டிருக்கும் வேதப்பூர்வ காரியங்களுக்கான நன்றியுணர்ச்சி நாம் யெகோவாவை உண்மைத்தவறாமல் சேவிப்பதற்கு அசைவிக்கவேண்டும். அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவை உந்துவித்தான்: “நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.” (2 தீமோத்தேயு 3:14, 15) அத்தகைய அறிவு கடவுளிடமிருந்து “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்,” மூலமாக வந்தது என்பதை நினைவில் வையுங்கள்.—மத்தேயு 24:45-47.
7. கடவுளால் உண்மையுள்ள ஊழியக்காரன்மூலமாக கொடுக்கப்படும் ஆவிக்குரிய உணவைக்குறித்து மூப்பர்கள் எவ்வாறு உணரவேண்டும்?
7 குறிப்பாக, நியமிக்கப்பட்ட மூப்பர்கள், கடவுளால் உண்மையுள்ள ஊழியக்காரன் மூலமாக கொடுக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்துள்ள ஆவிக்குரிய உணவிற்கு போற்றுதலுள்ளவர்களாய் இருக்கவேண்டும். சில வருடங்களுக்கு முன், ஒருசில மூப்பர்கள் அத்தகைய போற்றுதலில் குறைவுபட்டனர். இந்த ஆட்கள், “காவற்கோபுரம் பத்திரிகையிலுள்ள கட்டுரைகளைக்குறித்து குறைகாண்பவர்களாகவும், அதை . . . கடவுளுடைய சத்தியத்தை எடுத்துச்சொல்லும் வழியாக ஏற்றுக்கொள்ள விரும்பாமல், தங்களுடைய சிந்தனையின் வழியில் மற்றவர்களைச் செல்வாக்குச் செலுத்த எப்பொழுதும் முயற்சிசெய்தனர்” என்பதாக ஒரு பார்வையாளர் குறிப்பிட்டார். இருப்பினும், உண்மைத்தவறாத மூப்பர்கள் கடவுளால் உண்மையுள்ள ஊழியக்காரன் மூலமாகக் கொடுக்கப்பட்ட எந்த ஆவிக்குரிய உணவையும் தள்ளிவிடுவதற்கு ஒருபோதும் மற்றவர்களைச் செல்வாக்குச் செலுத்த முயற்சிசெய்வதில்லை.
8. உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்மூலமாக அளிக்கப்பட்ட வேதப்பூர்வ குறிப்பு ஒன்றை நாம் முழுமையாக போற்றமுடியாவிட்டால் அப்போது என்ன?
8 யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களாக, நாம் எல்லாரும் அவருக்கும் அவருடைய அமைப்புக்கும் உண்மைத்தவறாதவர்களாக இருக்கவேண்டும். கடவுளுடைய ஆச்சரியமான ஒளியினின்று சற்றேனும் விலகி, இப்போது ஆவிக்குரிய மரணத்திற்கும் முடிவாக அழிவிற்கும் வழிநடத்தக்கூடிய ஒரு விசுவாசதுரோக போக்கைத் தொடர்வதைக்குறித்து ஒருபோதும் நாம் சிந்தித்துப்பார்க்கவுங்கூடாது. (எரேமியா 17:13) ஆனால், உண்மையுள்ள ஊழியக்காரனால் அளிக்கப்பட்ட ஏதோவொரு வேதப்பூர்வ குறிப்பை ஏற்றுக்கொள்வது அல்லது முழுமையாக போற்றுவது நமக்குக் கடினமாக இருந்தால் அப்போது என்ன? அப்படியானால், நாம் சத்தியத்தை எங்கிருந்து கற்றுக்கொண்டோம் என்பதைத் தாழ்மையுடன் ஒப்புக்கொள்ளவேண்டும்; காரியங்களைப்பற்றி ஏதாவது பிரசுரிக்கப்பட்ட தெளிவுபடுத்தலுடன் அது முடிவுக்கு வரும்வரையாக இந்தச் சோதனையைக் கையாளுவதற்கான ஞானத்திற்காக ஜெபியுங்கள்.—யாக்கோபு 1:5-8.
கிறிஸ்தவ சகோதரத்துவத்தைப் போற்றுங்கள்
9. கிறிஸ்தவர்கள் கூட்டுறவின் ஆவியைக் கொண்டிருக்க வேண்டும் என்று 1 யோவான் 1:3-6 எவ்வாறு காண்பிக்கிறது?
9 நம்முடைய கிறிஸ்தவ சகோதரத்துவத்தினுள் நிலவும் கூட்டுறவின் ஆவிக்கான இருதயப்பூர்வமான போற்றுதல், யெகோவாவை உண்மைத்தவறாமையுடன் சேவிப்பதற்கு மற்றொரு தூண்டுவிப்பைத் தருகிறது. உண்மையில், இந்த ஆவியின்றி, கடவுளோடும் கிறிஸ்துவோடுமான நம்முடைய உறவு முழுமையானதாக இருக்கமுடியாது. அப்போஸ்தலன் யோவான் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களிடம் சொன்னார்: “நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி [“கூட்டுறவுள்ளவர்களாகும்படி,” டையக்ளாட்], நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. . . . நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.” (1 யோவான் 1:3-6) எல்லா கிறிஸ்தவர்களுக்கும், அவர்களுடைய நம்பிக்கை பரலோகத்திற்குரியதாக அல்லது பூமிக்குரியதாக இருந்தாலும், இந்த நியமம் பொருந்துகிறது.
10. ஒரு தனிப்பட்ட பிரச்னையைத் தீர்த்துகொள்வதில் தெளிவாகவே எயோதியாளுக்கும் சிந்திக்கேயாளுக்கும் கடினமாக இருந்தபோதிலும், பவுல் இந்தப் பெண்களை எவ்வாறு நோக்கினார்?
10 ஒரு கூட்டுறவின் ஆவியை நிலைத்திருக்கச் செய்வதற்கு முயற்சி தேவையாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, கிறிஸ்தவ பெண்களாகிய எயோதியாளும் சிந்திக்கேயாளும் தங்களுக்குள்ளிருந்த ஒரு பிரச்னையைத் தீர்ப்பதைத் தெளிவாகவே கடினமாகக் கண்டார்கள். பவுல் இவ்வாறாக, “கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க,” அறிவுரை கூறினார். மேலும் அவர் “என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது,” என்று கூறினார். (பிலிப்பியர் 4:2, 3) அந்தத் தேவபக்தியுள்ள பெண்கள், பவுலோடும் மற்றவர்களோடும் “சுவிசேஷ விஷயத்”திலே, பாடுபட்டிருக்கிறார்கள்; ‘ஜீவபுஸ்தகத்தில் பெயருடையவர்களாய் இருப்பவர்களில்,’ அவர்களும் இருக்கிறார்கள் என்று அவர் நிச்சயமாக இருந்தார்.
11. ஓர் உண்மைத்தவறாத கிறிஸ்தவன் ஓர் ஆவிக்குரிய பிரச்னையை எதிர்ப்பட்டால், எதை மனதில் கொள்வது பொருத்தமாக இருக்கும்?
11 யெகோவாவின் அமைப்பில் எதை செய்வதற்கு சிலாக்கியத்தைக் கொண்டிருக்கிறார்கள் மற்றும் எப்படி அவரை உண்மைத்தவறாமல் சேவித்திருக்கிறார்கள் என்பதைக் காண்பிப்பதற்கு, கிறிஸ்தவர்கள் அடையாளக்குறிகளை அணிவதில்லை. அவர்களுக்கு ஓர் ஆவிக்குரிய பிரச்னை இருக்குமானால், யெகோவாவுக்கான அவர்களுடைய பல வருட உண்மைத்தவறாத சேவையை அசட்டைசெய்வது எவ்வளவு அன்பற்றதாக இருக்கும்! “உத்தம கூட்டாளியே” என்றழைக்கப்பட்டவர், மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆர்வமுள்ள ஓர் உண்மைத்தவறாத சகோதரராக இருந்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு மூப்பராக இருந்தால், நீங்கள் பரிவிரக்கத்துடன் உதவி செய்ய தயாராக இருக்கும் ஓர் “உத்தம கூட்டாளி”யா? கடவுள் செய்வதைப்போல், நாம் எல்லாரும் நம்முடைய உடன்விசுவாசிகளால் செய்யப்பட்ட நன்மைகளைக் கவனித்து, அவர்களுடைய பாரங்களை அவர்கள் சுமப்பதற்கு அன்புடன் உதவுவோமாக.—கலாத்தியர் 6:2; எபிரெயர் 6:10.
போவதற்கு வேறு இடமில்லை
12. இயேசுவின் கூற்றுகள் ‘அநேக சீஷர்களைப் பின்வாங்க செய்தபோது,’ பேதுரு என்ன நிலைநிற்கையை எடுத்தார்?
12 நித்திய ஜீவனுக்காக நாம் போவதற்கு வேறு இடமில்லை என்பதை நினைவில் கொண்டோமானால், யெகோவாவை அவருடைய அமைப்போடு சேர்ந்து சேவிப்பதற்கு நாம் உந்துவிக்கப்படுவோம். இயேசுவின் கூற்றுகள் ‘அநேக சீஷர்களை பின்வாங்கிப்போகும்படி’ செய்தபோது, அவர் தம்முடைய அப்போஸ்தலரை நோக்கி கேட்டார்: “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?” பேதுரு பதிலளித்தார்: “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்.”—யோவான் 6:66-69.
13, 14. (எ) முதல் நூற்றாண்டு யூதமதம் ஏன் தெய்வீக ஆதரவை இழந்தது? (பி) கடவுளுடைய காணக்கூடிய அமைப்பைக்குறித்து ஒரு நீண்டகால சாட்சி என்ன சொன்னார்?
13 பொ.ச. முதல் நூற்றாண்டின் யூத மதத்தில் “நித்திய ஜீவ வசனங்கள்” காணப்படவில்லை. இயேசுவை மேசியா அல்ல என்று புறக்கணித்தது அதன் முக்கியமான பாவமாகும். யூதமதம் அதன் எந்த ஒரு வகையிலும், எபிரெய வேத எழுத்துக்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாயில்லை. சதுசேயர் தூதர்கள் இருப்பதை மறுத்தனர்; அவர்கள் உயிர்த்தெழுதலையும் விசுவாசிக்கவில்லை. பரிசேயர் இந்த விஷயங்களில் அவர்களுடன் ஒத்துப்போகவில்லை என்றாலும், அவர்கள் தங்களுடைய வேதப்பூர்வமற்ற பாரம்பரியங்களால் கடவுளுடைய வார்த்தையை அவமாக்கினார்கள். (மத்தேயு 15:1-11; அப்போஸ்தலர் 23:6-9) இந்தப் பாரம்பரியங்கள் யூதர்களை அடிமைப்படுத்தி, பலர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதை கடினமாக்கிற்று. (கொலோசெயர் 2:8) ‘தன் பிதாக்களின் பாரம்பரியத்திற்கான’ வைராக்கியம் சவுலை (பவுலை) அவருடைய அறியாமையில், கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களைக் கொடுமையாகத் துன்புறுத்தும் ஒருவராக ஆக்கியது.—கலாத்தியர் 1:13, 14, 23.
14 யூத மதம் கடவுளுடைய ஆதரவை இழந்தது, ஆனால் யெகோவா தம்முடைய மகனைப் பின்பற்றுபவர்களாலான—‘நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ள ஜனங்களாலான’ அமைப்பை ஆசீர்வதித்தார். (தீத்து 2:14) அந்த அமைப்பு இன்னும் நிலைத்திருக்கிறது; அதைக் குறித்து ஒரு நீண்டகால சாட்சி சொன்னார்: “எனக்கு மிகவும் முக்கியமான காரியம் ஒன்று உண்டு என்றால், அது யெகோவாவின் காணக்கூடிய அமைப்போடு இணைந்து செல்லும் காரியமாய் இருந்திருக்கிறது. மனித நியாயங்களின்பேரில் சார்ந்திருத்தல் எவ்வளவு நியாயமற்றது என்று என்னுடைய ஆரம்பகால அனுபவம் போதித்தது. அந்தக் குறிப்பைப்பற்றி என் மனதில் உறுதிபூண்டதும், நான் உண்மையான அமைப்பில் தொடர்ந்திருக்க தீர்மானமாயிருந்தேன். ஒருவர் யெகோவாவின் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் வேறு எவ்விதத்தில் பெறமுடியும்?” தெய்வீக ஆதரவிற்காகவும் நித்திய ஜீவனுக்காகவும் போவதற்கு வேறு எந்த இடமுமில்லை.
15. யெகோவாவுடைய காணக்கூடிய அமைப்போடும் அதில் உத்தரவாதம் ஏற்போருடனும் ஏன் ஒத்துழைக்க வேண்டும்?
15 யெகோவாவின் அமைப்போடு ஒத்துழைக்க நம்முடைய இருதயங்கள் நம்மை உந்துவிக்கவேண்டும், ஏனென்றால் அது மட்டுமே அவருடைய ஆவியால் இயக்கப்பட்டு, அவருடைய பெயரையும் நோக்கங்களையும் அறிவிக்கிறது என்று நமக்குத் தெரியும். சந்தேகமின்றி, அதில் உத்தரவாதத்தை ஏற்பவர்கள் அபூரணரே. (ரோமர் 5:12) ஆனால், ஆரோனும் மிரியாமும், அவர்களிடம் அல்ல, கடவுளால் கொடுக்கப்பட்ட உத்தரவாதம் மோசேயிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை மறந்து அவரிடம் குற்றங்கண்டுபிடித்தபோது, அவர்களுக்கு விரோதமாக “கர்த்தருடைய கோபம் மூண்டது.” (எண்ணாகமம் 12:7-9) இன்று, உண்மைத்தவறாத கிறிஸ்தவர்கள் ‘தங்களை முன்நின்று நடத்துகிறவர்களுடன்’ ஒத்துழைக்கிறார்கள், ஏனென்றால் அதையே யெகோவா எதிர்பார்க்கிறார். (எபிரெயர் 13:7, 17) ஒழுங்காக கூட்டங்களுக்குச் செல்வதையும், ‘மற்றவர்களை அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவும்படியான’ குறிப்புகள் சொல்வதையும் நம்முடைய உண்மைத்தவறாமைக்கான அத்தாட்சி உட்படுத்துகிறது.—எபிரெயர் 10:24, 25.
கட்டியெழுப்புகிறவர்களாய் இருங்கள்
16. மற்றவர்களுக்கு எதை செய்யவேண்டும் என்ற விருப்பமும் நாம் யெகோவாவை உண்மைத்தவறாமல் சேவிக்கும்படி தூண்ட வேண்டும்?
16 மற்றவர்களைக் கட்டியெழுப்புகிறவர்களாய் இருக்கவேண்டும் என்ற விருப்பமும், யெகோவாவை உண்மைத்தவறாமல் சேவிக்கும்படியாக நம்மைத் தூண்டுவிக்க வேண்டும். பவுல் எழுதினார்: “அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும் [கட்டியெழுப்பும், NW].” (1 கொரிந்தியர் 8:1) ஒரு குறிப்பிட்ட வகையான அறிவு அதை உடையவர்களை இறுமாப்படையச் செய்யும் என்பதால், அன்பு அத்தகைய குணத்தைக் காண்பிப்பவரையும் கட்டியெழுப்பும் என்பதாக பவுல் அர்த்தப்படுத்தியிருக்க வேண்டும். உவய்ஸ் மற்றும் இங்லிஷ் என்ற பேராசிரியர்களின் ஒரு புத்தகம் சொல்கிறது: “பொதுவாக அன்பு செய்யும் திறமை கொண்டவர் பதிலாக அன்பு செய்யப்படுவார். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நற்கிரியையையும் கரிசனையையும் பரப்பும் திறமை . . . அத்தகைய உணர்ச்சிகளைக் காண்பிப்பவர்மீதும் அதைப் பெறுபவர்மீதும் ஒரு குறிப்பிடத்தக்க ஆக்கப்பூர்வமான பாதிப்பைக் கொண்டிருந்து, இவ்விதமாக இருவருக்கும் இன்பத்தைக் கொண்டுவருகிறது.” அன்பைக் காண்பிப்பதன்மூலம், நாம் மற்றவர்களையும் நம்மையும் கட்டியெழுப்புகிறோம்; இயேசுவின் வார்த்தைகள் சுட்டிக்காட்டியபடி: “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் [அதிக சந்தோஷமுள்ளது, NW].”—அப்போஸ்தலர் 20:35.
17. அன்பு எவ்வாறு கட்டியெழுப்புகிறது, அது நாம் எதை செய்வதிலிருந்து நம்மைத் தடுக்கும்?
17 நியமங்கள் சார்ந்த அன்பைக் குறிப்பிடும்வகையில், 1 கொரிந்தியர் 8:1-ல் பவுல் அகாப்பே என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தினார். அது கட்டியெழுப்புகிறது, ஏனென்றால் அது நீடிய சாந்தமும் தயவுமுள்ளது, எல்லாவற்றையும் தாங்குகிறது, சகிக்கிறது, ஒருக்காலும் ஒழியாது. இந்த அன்பு, பெருமை மற்றும் பொறாமை போன்ற சேதப்படுத்தும் உணர்ச்சிகளை அகற்றுகிறது. (1 கொரிந்தியர் 13:4-8) அத்தகைய அன்பு, நம்மைப்போலவே அபூரணராக இருக்கும் நம்முடைய சகோதரரைப்பற்றி குறைகூறுவதிலிருந்து நம்மை விலகியிருக்கச் செய்யும். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் மத்தியில் “பக்கவழியாய் நுழைந்”த “பக்கியற்றவர்க”ளைப் போலாகாதபடி நம்மைத் தடுக்கும். இந்த ஆட்கள், “கர்த்தத்துவத்தை அசட்டைப்பண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள் [மகத்துவமானவர்களைத் தூஷித்தார்கள், NW”]; அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவ கண்காணிகளாக அப்படிப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட மகிமையை தெளிவாகவே பழித்துரைத்தனர். (யூதா 3, 4, 8) யெகோவாவுக்கு உண்மைத்தவறாமை உள்ளவர்களாக, அவ்விதமான எதையும் செய்வதற்கான சோதனைக்கு ஒருபோதும் இடமளிக்காமல் இருப்போமாக.
பிசாசை எதிர்த்து நில்லுங்கள்!
18. சாத்தான் யெகோவாவின் மக்களுக்கு என்ன செய்ய விரும்புவான், ஆனால் ஏன் அவனால் அவ்வாறு செய்ய முடியாது?
18 கடவுளுடைய மக்களாக நம்முடைய ஐக்கியத்தை சாத்தான் அழிக்க விரும்புகிறான் என்ற அறிவு, யெகோவாவை உண்மைத்தவறாமல் சேவிப்பதற்கான நம்முடைய தீர்மானத்தை அதிகரிக்கவேண்டும். கடவுளுடைய எல்லா மக்களையும் அழிப்பதற்குங்கூட சாத்தான் விரும்புவான்; சாத்தானுடைய பூமிக்குரிய வேலையாட்கள் சிலவேளைகளில் உண்மை வணக்கத்தாரை கொன்றிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரையும் கொன்றுவிடும்படி கடவுள் சாத்தானை அனுமதிக்கமாட்டார். “மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனை அழிக்கும்படிக்கு” இயேசு மரித்தார். (எபிரெயர் 2:14) குறிப்பாக, 1914-ல் கிறிஸ்து ராஜாவான பிறகு, சாத்தான் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டது முதற்கொண்டு, அவன் ஆதிக்கம் செலுத்துவதற்கான பகுதி கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் யெகோவாவின் குறித்த நேரத்தில், இயேசு சாத்தானையும் அவனுடைய அமைப்பையும் அழித்துவிடுவார்.
19. (எ) பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பத்திரிகை சாத்தானின் முயற்சிகளைக்குறித்து என்ன எச்சரிக்கை விடுத்தது? (பி) சாத்தானுடைய கண்ணிகளைத் தவிர்க்க, உடன் விசுவாசிகளோடான நம்முடைய கையாளுதலில் எதைக்குறித்து கவனம் செலுத்தவேண்டும்?
19 இந்தப் பத்திரிகை ஒருமுறை எச்சரித்தது: “பிசாசாகிய சாத்தானால், கடவுளுடைய மக்கள் மத்தியில் ஒழுங்கின்மையை உருவாக்க, அவர்களுக்குள்ளே சண்டை சச்சரவுகளை வருவிக்க, அல்லது சகோதரத்துவத்துக்கான அன்பை அழித்துவிடக்கூடிய ஒரு தன்னல மனப்போக்கை வளர்க்கவும் வெளிக்காட்டவும் செய்விக்க முடியுமானால், அவன் அதன்மூலமாக அவர்களை அழிப்பதிலும் வெற்றியடைவான்.” (தி உவாட்ச் டவர், மே 1, 1921, பக்கம் 134) ஒருவேளை பழிதூற்றுவதற்கு அல்லது ஒருவரோடொருவர் சண்டைபோடுவதற்கு நம்மைத் தூண்டுவதன்மூலம் நம்முடைய ஐக்கியத்தை அழித்துவிட பிசாசை அனுமதிக்காமல் இருப்போமாக. (லேவியராகமம் 19:16) யெகோவாவை உண்மைத்தவறாமையுடன் சேவிக்கும் ஒருவருக்கு நாம் தனிப்பட்டவர்களாக, கேடுவிளைவிக்கும்விதத்தில் அல்லது அவர்களுக்கு வாழ்க்கையை மிகவும் கடினமாக்கும்விதத்தில் நடந்துகொள்ளும்படியாக சாத்தான் நம்மை ஒருபோதும் ஏமாற்றிவிடாமல் இருப்பானாக. (2 கொரிந்தியர் 2:10, 11-ஐ ஒப்பிடவும்.) மாறாக, பேதுருவின் வார்த்தைகளைப் பொருத்திப் பிரயோகிப்போமாக: “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்.” (1 பேதுரு 5:8, 9) சாத்தானுக்கு எதிராக ஓர் உறுதியான நிலைநிற்கை எடுப்பதன்மூலம், நாம் யெகோவாவின் மக்களாக நம்முடைய ஆசீர்வாதமான ஐக்கியத்தைக் காத்துக்கொள்ளலாம்.—சங்கீதம் 133:1-3.
ஜெபத்தோடே கடவுளைச் சார்ந்திருங்கள்
20, 21. ஜெபத்தோடு யெகோவாவைச் சார்ந்திருத்தல் அவரை உண்மைத்தவறாமல் சேவிப்பதுடன் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது?
20 ஜெபத்தோடு கடவுளைச் சார்ந்திருத்தல், தொடர்ந்து யெகோவாவை உண்மைத்தவறாமல் சேவிக்க நமக்கு உதவிசெய்யும். அவர் நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிப்பதை நாம் பார்க்கும்போது, நாம் அவரோடு எப்போதும் இருந்ததைவிட நெருக்கமாக இழுக்கப்படுகிறோம். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதியபோது, யெகோவா தேவனை ஜெபத்தோடு சார்ந்திருத்தலைத் தூண்டினார்: “புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.” (1 தீமோத்தேயு 2:8) எடுத்துக்காட்டாக, மூப்பர்கள் ஜெபத்தோடே கடவுளைச் சார்ந்திருப்பது எவ்வளவு முக்கியமானது! சபை காரியங்களைப்பற்றி கலந்தாலோசிப்பதற்காகக் கூடும்போது, யெகோவாவுக்கு உண்மைத்தவறாமல் இருப்பதைக்குறித்த அத்தகைய வெளிக்காட்டு, தீராத தர்க்கங்களையும் சாத்தியமான கோப வெளிக்காட்டுதல்களையும் தடுக்க உதவி செய்யும்.
21 ஜெபத்தோடு யெகோவா தேவனைச் சார்ந்திருத்தல் அவருடைய சேவையில் சிலாக்கியங்களைக் கவனிப்பதற்கு உதவி செய்யும். பல பத்தாண்டுகள் யெகோவாவை உண்மைத்தவறாமல் சேவித்த ஒரு மனிதனால் இவ்வாறு சொல்லமுடிந்தது: “கடவுளுடைய உலகளாவிய அமைப்பால் கொடுக்கப்பட்ட எந்த வேலையையும் நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்வதும், நம்முடைய நியமிப்பில் அசையாமல் நிலைத்திருப்பதும், நம்முடைய மனமார்ந்த முயற்சிகளின்மேல் கடவுளுடைய புன்முறுவலைக் கொண்டுவரும். கொடுக்கப்பட்ட வேலை கீழ்த்தரமானதாகத் தோன்றினாலும், அடிக்கடி, அந்த வேலை உண்மையாக செய்யப்படாவிட்டால் மற்ற முக்கியமான சேவைகள் செய்யப்பட முடியாமல் போய்விடுகிறது. இவ்வாறாக, நாம் மனத்தாழ்மை உள்ளவர்களாகவும், நம்முடைய பெயரையல்ல ஆனால் யெகோவாவுடைய பெயரை மகிமைப்படுத்துவதிலும் நேரடியான அக்கறை உள்ளவர்களாய் இருந்தால், நாம் எப்போதும் ‘உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், யெகோவாவுடைய வேலையில் செய்வதற்கு அதிகத்தை உடையவர்களாயும்’ இருப்போம் என்பதில் நிச்சயமாய் இருக்கலாம்.”—1 கொரிந்தியர் 15:58.
22. யெகோவாவுடைய பல ஆசீர்வாதங்கள் நம்முடைய உண்மைத்தவறாமையை எப்படி பாதிக்கவேண்டும்?
22 யெகோவாவுடைய சேவையில் நாம் எதை செய்தாலும், நிச்சயமாக, அவர் நமக்குச் செய்பவற்றிற்கு நாம் அவருக்கு கைம்மாறு செய்யமுடியாது. கடவுளுடைய நண்பர்களால் சூழப்பட்ட கடவுளுடைய அமைப்பில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம்! (யாக்கோபு 2:23) சாத்தான் தானேயும் வேரோடு பிடுங்கமுடியாதபடி ஆழமாக வேரூன்றப்பட்ட சகோதர அன்பிலிருந்து பிறக்கும் ஐக்கியத்தால் யெகோவா நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். ஆகவே நம்முடைய உண்மைத்தவறாத பரலோக தகப்பனைப் பற்றிக்கொண்டு அவருடைய மக்களுடன் சேர்ந்து வேலை செய்வோமாக. இப்போதைக்கும் நித்தியத்திற்கும் யெகோவாவை உண்மைத்தவறாமல் சேவிப்போமாக.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ உண்மைத்தவறாமல் இருத்தல் என்றால் என்ன?
◻ யெகோவாவை உண்மைத்தவறாமல் சேவிக்கும்படி நம்மைத் தூண்டும் சில காரணங்கள் யாவை?
◻ நாம் ஏன் பிசாசை எதிர்த்து நிற்கவேண்டும்?
◻ யெகோவாவின் உண்மைத்தவறாத ஊழியராய் இருக்கும்படி ஜெபம் நமக்கு எப்படி உதவக்கூடும்?
[பக்கம் 23-ன் படம்]
யெகோவாவின் உண்மைத்தவறாத ஊழியர்கள், சிங்கம்போன்ற அவர்களுடைய எதிரியாகிய பிசாசு, அவர்களுடைய ஐக்கியத்தைத் தகர்த்தெறிய அனுமதிப்பதில்லை