பெயருக்கேற்ப திகழ்ந்த எருசலேம்
“நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன்.”—ஏசாயா 65:18, பொ.மொ.
1. கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட நகரத்தைப் பற்றி எஸ்றா எவ்வாறு உணர்ந்தார்?
கடவுளுடைய வார்த்தையில் மிகுந்த பற்றுடையவர் எஸ்றா. ஒருகாலத்தில் யெகோவாவின் மெய் வணக்கத்தோடு எருசலேமுக்கு அதிக ஈடுபாடு இருந்தது. எஸ்றா யூத ஆசாரியனாக இருந்ததால் இதை நெஞ்சார நேசித்தார். (உபாகமம் 12:5; எஸ்றா 7:27) கடவுளுடைய நகரத்தின்மீது அவருக்கிருந்த பிரியத்தை பைபிளின் சில புத்தகங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. அந்தப் புத்தகங்கள்தான் முதலாம், இரண்டாம் நாளாகமம் மற்றும் எஸ்றா. இவற்றை ஏவுதலால் எழுதியவரும் அவரே. எருசலேம் என்ற பெயர் முழு பைபிளிலும் 800-க்கும் அதிகமான தடவை இடம்பெற்றிருக்கிறது. அதில் சுமார் காற்பகுதி இந்தப் புத்தகங்களில் காணப்படுகிறது.
2. எருசலேம் என்ற பெயரின் முக்கியத்துவத்தில் என்ன தீர்க்கதரிசன அர்த்தத்தை நாம் காணலாம்?
2 பைபிளில், “எருசலேம்” என்ற பதம் இரட்டை வடிவம் என அழைக்கப்படும் எபிரெய மொழியின் வடிவில் இருப்பதாக புரிந்துகொள்ளலாம். கண்கள், காதுகள், கைகள், கால்கள் போன்று ஜோடிகளாக வரும் உறுப்புக்களுக்கு இந்த இரட்டை வடிவம் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இரட்டை வடிவிலான எருசலேம் என்ற இப்பெயரை, கடவுளுடைய ஜனங்கள் இரட்டை அர்த்தத்தில், அதாவது ஆவிக்குரிய விதமாகவும் சொல்லர்த்தமாகவும் அனுபவிக்கப்போகும் சமாதானத்தின் தீர்க்கதரிசனமாக கருதலாம். எஸ்றா இதை முழுமையாக புரிந்துகொண்டாரா என்பதைக் குறித்ததில் மௌனமே பைபிளின் பதில். ஆனால், கடவுளுடைய ஜனங்கள் சமாதானத்தை அனுபவிக்க ஆசாரியனாகிய எஸ்றா தன்னாலான முழு உதவியையும் அளித்தார். எருசலேம் அதன் பெயருக்கேற்ப அதாவது, “இரட்டிப்பான சமாதானத்தின் கருவூலமாய் [அல்லது, அடித்தளமாய்]” திகழுவதற்கு நிச்சயமாகவே அவர் வெகுபாடு பட்டார்.—எஸ்றா 7:6.
3. மீண்டும் எஸ்றாவின் நடவடிக்கைகளைப் பற்றி பைபிள் சொல்வதற்கு முன்பு எத்தனை வருடங்கள் கடந்துசென்றன, பின்பு எந்த சூழ்நிலையில் நாம் அவரை சந்திக்கிறோம்?
3 எருசலேமுக்கு எஸ்றா விஜயம் செய்ததற்கும் அந்நகரத்திற்கு நெகேமியா வந்ததற்கும் இடைப்பட்ட 12 வருடங்களில் எஸ்றா எங்கே இருந்தார் என்பதை பைபிள் சொல்வதில்லை. இக்காலகட்டத்தில் தேசத்தில் நிலவிய மோசமான ஆவிக்குரியத்தன்மையைப் பார்த்தால் எஸ்றா அங்கே இருந்திருக்க முடியாதென்றே தோன்றுகிறது. என்றபோதிலும், நகரத்தின் மதிற்சுவர் கட்டப்பட்டவுடனேயே மீண்டும் எருசலேமில் ஓர் உண்மையுள்ள ஆசாரியனாக பணியாற்றியதாக பைபிள் சொல்கிறது.
வியத்தகு மாநாட்டு தினம்
4. இஸ்ரவேலின் ஏழாவது மாத முதல் நாளின் முக்கியத்துவம் என்ன?
4 இஸ்ரவேலின் மத நாட்காட்டியின்படி ஏழாவது மாதம் திஷ்ரி. சரியாக சொல்லப்போனால், இது முக்கிய பண்டிகை மாதமாகையால் எருசலேமின் மதிற்சுவர் சரியாகவே இந்தச் சமயத்தில் கட்டி முடிக்கப்பட்டது. திஷ்ரி மாதத்தின் முதல் நாள் விசேஷ முதல் பிறை நிலா பண்டிகை; இது எக்காளப் பண்டிகை என அழைக்கப்படுகிறது. அந்த நாளில், யெகோவாவுக்கு பலிசெலுத்தப்படுகையில் ஆசாரியர்கள் எக்காளம் ஊதினர். (எண்ணாகமம் 10:10; 29:1) இந்த நாள் இஸ்ரவேலரை இரண்டு காரியத்திற்கு ஆயத்தப்படுத்தியது. முதலாவதாக, திஷ்ரி 10-ம் தேதியில் வரும் வருடாந்தர பிராயச்சித்த நாளுக்காகவும், இரண்டாவதாக அதே மாதத்தில் 15-ம் தேதியிலிருந்து 21-வது தேதி வரைக்கும் கொண்டாட்டப்படும் சந்தோஷமான சேர்ப்புக்கால பண்டிகைக்காகவும் ஆயத்தப்படுத்தியது.
5. (அ) ‘ஏழாம் மாதம் முதல் நாளை’ எஸ்றாவும் நெகேமியாவும் எவ்வாறு நன்றாய் பயன்படுத்திக்கொண்டனர்? (ஆ) இஸ்ரவேலர் ஏன் அழுதனர்?
5 “ஏழாம் மாதம் முதல் நாள்,” ‘மக்கள் அனைவரும்’ ஒன்றுகூடிவந்தனர்; ஒருவேளை நெகேமியாவாலும் எஸ்றாவாலும் உற்சாகப்படுத்தப்பட்டு அவ்வாறு கூடிவந்திருக்கலாம். ஆடவரும் பெண்டிரும் “புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும்” அதில் அடங்குவர். எஸ்றா மேடையில் ஏறி “காலைமுதல் நண்பகல்வரை” நியாயப்பிரமாணத்தை வாசிக்கையில் கூடியிருந்த சிறுவர் சிறுமியரும் கூர்ந்து கேட்டார்கள். (நெகேமியா 8:1-4, பொ.மொ.) வாசிக்கப்படும் விஷயத்தை மக்கள் புரிந்துகொள்வதற்காக சீரான கால இடைவெளியில் லேவியர்கள் உதவிசெய்தனர்; தாங்களும் தங்களுடைய முன்னோர்களும் கடவுளுடைய சட்டத்திற்கு எந்தளவுக்கு கீழ்ப்படியாமல் இருந்திருக்கிறார்கள் என்பது அவர்களுடைய இருதயத்தை தொட்டபோது இஸ்ரவேலர் கண்ணீர் சிந்தினர்.—நெகேமியா 8:5-9.
6, 7. யூதர்கள் அழுவதை நிறுத்துவதற்கு நெகேமியா செய்த காரியத்திலிருந்து கிறிஸ்தவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
6 ஆனால் இது துக்கப்பட்டு அழுவதற்கான நேரமல்ல. இது பண்டிகை நாள், எருசலேமின் மதிற்சுவரை மக்கள் இப்பொழுதுதான் திரும்பக் கட்டி முடித்திருந்தனர். ஆகவே, சரியான மனநிலையை கொண்டிருக்க நெகேமியா அவர்களுக்கு உதவினார்: “நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, தங்களுக்கென ஒன்றும் ஆயத்தஞ் செய்யாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நமது ஆண்டவருக்குப் பரிசுத்தநாள், விசாரப்பட வேண்டாம், யெகோவாவினால் வரும் மகிழ்ச்சியே உங்கள் பலம்” என்றார். “ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், போஜனபானம் பண்ணவும் பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும்” கீழ்ப்படிதலோடு போனார்கள்.—நெகேமியா 8:10-12, தி.மொ.
7 இந்த விவரப்பதிவிலிருந்து கடவுளுடைய ஜனங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம். கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பேச்சுக்கள் கொடுக்கும் சிலாக்கியமுள்ளவர்கள் இந்த முன்மாதிரியை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும் புத்திமதியை சிலசமயங்களில் கொடுப்பதோடுகூட, கடவுளுடைய சட்டங்களைக் கைக்கொள்வதால் வரும் நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் வலியுறுத்திக் காட்டுகின்றன. கடவுளுடைய ஜனங்கள் செய்த சிறந்த வேலைக்காக பாராட்டும் சகித்திருப்பதற்கு ஊக்கமும் கொடுக்கப்படுகிறது. இத்தகைய கூட்டங்களில், கடவுளுடைய வார்த்தையிலிருந்து உற்சாகமூட்டும் அறிவுரையைப் பெறுவதால் அவர்கள் மகிழ்ச்சி பொங்கும் இருதயத்தோடே திரும்பிச் செல்ல வேண்டும்.—எபிரெயர் 10:24, 25.
உவகையளிக்கும் மற்றொரு கூட்டம்
8, 9. ஏழாம் மாதம் இரண்டாம் நாளில் என்ன விசேஷ கூட்டம் நடந்தது, இதனால் கடவுளுடைய ஜனங்கள் எப்படி உணர்ந்தனர்?
8 அந்த விசேஷ மாதத்தின் இரண்டாம் நாளில், “ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடிவந்தார்கள்.” (நெகேமியா 8:13) இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு எஸ்றா நன்கு தகுதிபெற்றவராக இருந்தார். ஏனெனில் ‘கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தார்.’ (எஸ்றா 7:10) கடவுளுடைய ஜனங்கள் இன்னுமதிகமாய் நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு இசைவாக நடக்கவேண்டிய அம்சங்களை இந்தக் கூட்டம் சிறப்பித்துக் காண்பித்தது. வரவிருந்த கூடாரப் பண்டிகையை கொண்டாடுவதற்காக சரியான தயாரிப்பு வேலைகள் செய்வதும் உடனடித் தேவையாக இருந்தது.
9 இந்தப் பண்டிகை ஒரு வாரம் நீடித்தது. அது சரியான விதத்தில் கொண்டாடப்பட்டது. பல்வகை மரங்களின் கிளைகளாலும் இலைகளாலும் வேயப்பட்ட கூடாரங்களில் எல்லா ஜனங்களும் வாசம் பண்ணினார்கள். தங்களுடைய வீடுகளின் மொட்டை மாடிகளில், முற்றங்களில், ஆலயத்தின் பிராகாரங்களில், எருசலேமின் வீதிகளிலும் இந்தக் கூடாரங்களை ஜனங்கள் போட்டார்கள். (நெகேமியா 8:15, 16) ஜனங்கள் ஒன்றுகூடி கடவுளுடைய சட்டத்தை வாசிப்பதற்கு இது என்னே ஒரு சிறந்த வாய்ப்பு! (உபாகமம் 31:10-13-ஐ ஒப்பிடுக.) இது ஒவ்வொரு நாளும், அதாவது “முதலாம் நாள் தொடங்கிக் கடைசி நாள் மட்டும்” செய்யப்பட்டது. அது கடவுளுடைய ஜனங்களுக்கு ‘மிகுந்த சந்தோஷத்தைக்’ கொண்டுவந்தது.—நெகேமியா 8:17, 18.
கடவுளுடைய வீட்டை புறக்கணிக்கக் கூடாது
10. ஏழாம் மாதம் 24-ஆம் நாளில் ஏன் ஒரு விசேஷ கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது?
10 கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் காணப்படும் பெருந்தவறுகளை திருத்துவதற்கு தகுந்த நேரமும் இடமும் உள்ளது. இதற்கு இதுவே நேரம் என்பதை உணர்ந்து, எஸ்றாவும் நெகேமியாவும் திஷ்ரி மாதம் 24-ம் தேதியை உபவாச நாளாக ஏற்பாடு செய்தனர் என தெரிகிறது. மீண்டும் கடவுளுடைய சட்டம் வாசிக்கப்பட்டது, ஜனங்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டனர். சோரம்போன மக்களிடம் கடவுள் இரக்கத்தோடு நடந்துகொண்டதை லேவியர்கள் எடுத்துக்காட்டி, யெகோவாவுக்கு துதியை இனிய வார்த்தைகளில் இயற்றினர். பின்பு தங்களுடைய பிரபுக்கள், லேவியவர்கள், ஆசாரியர்கள் ஆகியோரால் முத்திரையிடப்பட்ட “உறுதியான உடன்படிக்கை” செய்தனர்.—நெகேமியா 9:1-38.
11. யூதர்கள் செய்துகொண்ட ‘உறுதியான உடன்படிக்கை’ என்ன?
11 எழுத்து வடிவிலான ‘உறுதியான உடன்படிக்கையை’ நிறைவேற்ற பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அவர்கள் “தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்”வார்கள். ‘தேசத்தின் ஜனங்களுடன்’ திருமண ஒப்பந்தங்கள் செய்யமாட்டோமென ஒப்புக்கொண்டனர். (நெகேமியா 10:28-30) மேலும், ஓய்வுநாளை கடைப்பிடிப்பதாகவும், மெய் வணக்கத்தை ஆதரிப்பதற்கு வருடாந்தரம் நிதியுதவி கொடுப்பதாகவும், பலிபீடத்திற்கு விறகு தருவதாகவும், தங்களுடைய மந்தைகளில் முதற்பலனை பலியாக கொடுப்பதாகவும், ஆலயத்தின் சாப்பாட்டு அறைகளில் வைப்பதற்கு தங்களுடைய தேசத்தின் முதற்கனிகளைக் கொண்டுவருவதாகவும் யூதர்கள் வாக்குறுதி அளித்தனர். சந்தேகமின்றி, ‘கடவுளின் கோவிலைப் புறக்கணிப்பதில்லை’ என அவர்கள் தீர்மானித்தார்கள்.—நெகேமியா 10:32-39.
12. இன்று கடவுளுடைய ஆலயத்தைப் புறக்கணிக்காதிருப்பதில் என்ன உட்பட்டுள்ளது?
12 இன்று, யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயப் பிராகாரத்தில் ‘பரிசுத்த சேவை செய்யும்’ சிலாக்கியத்தை யெகோவாவின் ஜனங்கள் புறக்கணிக்காமல் இருப்பதற்கு கவனமாய் இருக்கவேண்டும். (வெளிப்படுத்துதல் 7:15, NW) யெகோவாவின் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்காக விடாமல் இருதயப்பூர்வமாய் ஜெபிப்பதையும் இது உட்படுத்துகிறது. இப்படிப்பட்ட ஜெபங்களுக்கு இசைவாக வாழ்வது, கூட்டங்களுக்கு தயாரிப்பதையும் அவற்றில் பங்கெடுப்பதையும் உட்படுத்துகிறது. அதோடு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான ஏற்பாடுகளில் கலந்துகொள்வதும், அக்கறை காட்டும் நபர்களை மீண்டும் சந்திப்பதும், சாத்தியமானால் அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்துவதும் முக்கியம். கடவுளுடைய ஆலயத்தைப் புறக்கணிக்க விரும்பாத அநேகர், பிரசங்க வேலைக்கும் மெய் வணக்கத்திற்கான இடங்களை பராமரிப்பதற்கும் நன்கொடை தருகிறார்கள். கூட்டங்கள் நடத்த அவசரமாய் தேவைப்படும் கட்டடங்களைக் கட்டுவதற்கும் அவற்றை சுத்தமாயும் நேர்த்தியாயும் வைத்திருப்பதற்கும் நம்முடைய ஆதரவை அளிக்கலாம். உடன் விசுவாசிகள் மத்தியில் சமாதானத்தை வளர்ப்பதும் பொருளாதார அல்லது ஆவிக்குரிய உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதுமே கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயத்திற்கான அன்பை காண்பிப்பதற்கு முக்கிய வழி.—மத்தேயு 24:14; 28:19, 20; எபிரெயர் 13:15, 16.
குதூகலமான திறப்பு விழா
13. எருசலேமின் மதிற்சுவருக்கு திறப்பு விழா நடத்துவதற்கு முன்பு அவசர கவனம்செலுத்த வேண்டியிருந்த காரியம் என்ன, அநேகர் எத்தகைய சிறந்த முன்மாதிரி வைத்தனர்?
13 நெகேமியாவின் நாளில் முத்திரையிடப்பட்ட ‘உறுதியான உடன்படிக்கை,’ எருசலேமின் மதிற்சுவர் திறப்பு விழா நாளுக்கு கடவுளுடைய பூர்வ ஜனங்களை தயார்படுத்தியது. ஆனால் மற்றொரு முக்கியமான விஷயத்திற்கும் கவனம்செலுத்த வேண்டியிருந்தது. இப்பொழுது 12 வாயிற்கதவுகளுடன் பெரும் மதிற்சுவரால் சூழப்பட்ட எருசலேமில் வாழ அதிக ஜனங்கள் தேவைப்பட்டனர். இஸ்ரவேலர் சிலர் அங்கு வாழ்ந்துகொண்டிருந்தபோதிலும், “பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது, அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள்.” (நெகேமியா 7:4) இப்பிரச்சினையைத் தீர்க்க, ஜனங்கள் ‘தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்தில் . . . குடியிருக்கப்பண்ண, சீட்டுகளைப் போட்டார்கள்.’ இந்த ஏற்பாட்டிற்கு முழுமனதாய் ஒத்துழைத்ததால், “எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த மனுஷர்களையெல்லாம்” வாழ்த்துவதற்கு ஜனங்கள் தூண்டப்பட்டார்கள். (நெகேமியா 11:1, 2) எங்கு முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவர்களுக்கு பெருமளவு தேவை இருக்கிறதோ அங்கு இடம் மாறிச்செல்வதற்கேற்ற சூழ்நிலைமைகளையுடைய இன்றைய மெய் வணக்கத்தாருக்கு இது என்னே ஒரு சிறந்த முன்மாதிரி!
14. எருசலேமின் மதிற்சுவர் திறப்பு விழா நாளில் என்ன நிகழ்ந்தது?
14 எருசலேம் மதிற்சுவரின் மகத்தான திறப்பு விழா நாளிற்காக முக்கியமான தயாரிப்பு வேலைகள் விரைவில் ஆரம்பமாயின. இசை கலைஞர்களும் பாடகர்களும் யூதாவை சுற்றியிருந்த நகரங்களிலிருந்து கூட்டிச் சேர்க்கப்பட்டனர். இவர்கள் துதிசெலுத்தும் இரண்டு பெரிய குழுக்களாக அமைக்கப்பட்டனர், ஒவ்வொரு குழுவிற்கும் பின்னால் ஊர்வலம் செல்லும். (நெகேமியா 12:27-31, 36, 38) பாடகர் குழுக்களும் ஊர்வலங்களும் ஆலயத்திற்கு வெகு தொலைவிலான மதிற்சுவரிலிருந்து—ஒருவேளை பள்ளத்தாக்கின் வாசலிலிருந்து—எதிரெதிர் திசையில் புறப்பட்டு தேவாலயத்தில் சந்திக்கின்றன. “அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.”—நெகேமியா 12:43.
15. ஏன் எருசலேம் மதிற்சுவரின் திறப்புவிழா நிரந்தர சந்தோஷத்திற்குரிய ஒன்றாக இல்லை?
15 மகிழ்ச்சியான இக்கொண்டாட்டம் நடைபெற்ற நாளைப் பற்றி பைபிள் குறிப்பிடுவதில்லை. இது எருசலேமை புதுப்பித்ததன் உச்சக்கட்டமாக இல்லாவிட்டாலும், முக்கிய அம்சமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயமாகவே, நகரத்திற்குள் இன்னும் நிறைய கட்டட வேலைகள் செய்யவேண்டியிருந்தன. காலப்போக்கில், எருசலேமின் குடிமக்கள் தங்களுடைய சிறந்த ஆவிக்குரிய நிலையை இழந்துவிட்டனர். உதாரணமாக, நகரத்திற்கு நெகேமியா இரண்டாவது தடவை வந்தபோது, கடவுளுடைய வீடு மீண்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டார், இஸ்ரவேலர் மறுபடியும் புறமத பெண்களை கல்யாணம் செய்துகொண்டிருந்தனர். (நெகேமியா 13:6-11, 15, 23) இந்த மோசமான நிலைமைகள் தீர்க்கதரிசியாகிய மல்கியாவின் புத்தகத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. (மல்கியா 1:6-8; 2:11; 3:8) ஆகவே எருசலேம் மதிற்சுவரின் திறப்புவிழா நிரந்தர சந்தோஷத்திற்குரிய ஒன்றாக இல்லை.
நித்திய சந்தோஷத்திற்குரிய ஒன்று
16. என்ன உச்சக்கட்டமான சம்பவங்களை கடவுளுடைய ஜனங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்?
16 இன்று, கடவுள் தம்முடைய பகைவர்மீது வெற்றிவாகை சூடும் நாளை யெகோவாவின் ஜனங்கள் ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது, எல்லா வகையான பொய் மதத்தையும் உட்படுத்தும் அடையாளப்பூர்வ நகரமாகிய ‘மகா பாபிலோனின்’ அழிவுடன் ஆரம்பமாகும். (வெளிப்படுத்துதல் 18:2, 8) பொய் மதத்தின் அழிவே வரக்கூடிய மிகுந்த உபத்திரவத்தின் முதல் கட்டம். (மத்தேயு 24:21, 22) நமக்கு முன் கிளர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற உள்ளது, அதாவது ‘புதிய எருசலேமின்’ குடிகளாகிய 1,44,000 பேரடங்கிய மணவாட்டியோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரலோக திருமணம் நடைபெற உள்ளது. (வெளிப்படுத்துதல் 19:7; 21:2) இவர்கள் திருமண பந்தத்தில் இணையும் அந்த உச்சக்கட்டம் எப்பொழுது என நாம் துல்லியமாய் சொல்ல முடியாது, ஆனால் அது நிச்சயமாகவே மகிழ்ச்சி பொங்கும் சம்பவமாய் இருக்கும்.—காவற்கோபுரம் (ஆங்கிலம்), ஆகஸ்ட் 15, 1990, பக்கங்கள் 30-1-ஐக் காண்க.
17. புதிய எருசலேம் முழுமை பெறுவதைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
17 புதிய எருசலேம் வெகு விரைவில் முழுமை பெறுமென்று நமக்கு நன்றாகவே தெரியும். (மத்தேயு 24:3, 7-14; வெளிப்படுத்துதல் 12:12) பூமிக்குரிய எருசலேம் நகரத்தைப் போல, அது ஒருபோதும் ஏமாற்றத்திற்கு வழிநடத்தாது. ஏனென்றால் அதன் குடிமக்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள், ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், பரிசோதிக்கப்பட்டவர்கள், புடமிடப்பட்டவர்கள். மரணம் வரை உண்மைத்தன்மையுடன் இருப்பதன் மூலம் சர்வலோக உன்னத அரசராகிய யெகோவா தேவனுக்கு ஒவ்வொருவரும் உண்மைப் பற்றுறுதியை என்றும் நிரூபித்துக் காண்பித்திருப்பார்கள். மீதமுள்ள மனிதவர்க்கத்தினருக்கு, அதாவது ஜீவிப்போருக்கும் மரித்தோருக்கும் இது முக்கியமான அர்த்தமுடையது!
18. நாம் ஏன் ‘மகிழ்ந்து களிகூர’ வேண்டும்?
18 இயேசுவின் கிரய பலியில் விசுவாசம் வைத்திருக்கிற மனிதவர்க்கத்தாரிடம் புதிய எருசலேம் தன்னுடைய கவனத்தைத் திருப்பும்போது என்ன சம்பவிக்கும் என்பதை கவனியுங்கள். “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (வெளிப்படுத்துதல் 21:2-4) மேலும், மனிதவர்க்கத்தை பரிபூரணத்திற்கு உயர்த்த இந்த நகரத்தைப் போன்ற ஏற்பாட்டையே கடவுள் பயன்படுத்துவார். (வெளிப்படுத்துதல் 22:1, 2) ‘அவர் சிருஷ்டிக்கிறதினாலே நாம் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருப்பதற்கு’ இவை என்னே சிறந்த காரணங்கள்!—ஏசாயா 65:18.
19. கிறிஸ்தவர்கள் கூட்டிச்சேர்க்கப்படுகிற ஆவிக்குரிய பரதீஸ் என்ன?
19 என்றபோதிலும், மனந்திரும்பும் மானிடர்கள் கடவுளிடமிருந்து உதவியைப் பெறுவதற்கு அதுவரை காத்திருக்க வேண்டியதில்லை. 1919-ம் ஆண்டில், யெகோவா 1,44,000 பேரில் கடைசி அங்கத்தினர்களை ஆவிக்குரிய பரதீஸில் கூட்டிச்சேர்க்க ஆரம்பித்தார். அங்கே ஆவியின் கனிகள், அதாவது அன்பு, சந்தோஷம், சமாதானம் ஆகியவை நிறைந்திருக்கும். (கலாத்தியர் 5:22, 23) அபிஷேகம் செய்யப்பட்டவர்களுடைய விசுவாசமே இந்த ஆவிக்குரிய பரதீஸின் குறிப்பிடத்தக்க அம்சம். குடியிருக்கப்பட்ட பூமி முழுவதும் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிக்கும் வேலையை இவர்கள் மிகச் சிறப்பாக முன்நின்று வழிநடத்தியிருக்கின்றனர். (மத்தேயு 21:43; 24:14) அதன் விளைவாக, பூமிக்குரிய நம்பிக்கையுடைய சுமார் அறுபது லட்சம் ‘வேறே ஆடுகளும்கூட’ ஆவிக்குரிய பரதீஸுக்குள் நுழைந்து பலன்தரும் வேலையை அனுபவித்து மகிழும்படி அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். (யோவான் 10:16) இயேசு கிறிஸ்துவின் கிரய பலியில் விசுவாசம் வைத்து தங்களை யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதன் மூலம் இதற்கு தகுதிபெற்றிருக்கின்றனர். புதிய எருசலேமின் வருங்கால அங்கத்தினர்களுடன் அவர்கள் கூட்டுறவு கொள்வது ஆசீர்வாதமாய் இருந்திருக்கிறது. இவ்வாறு, அபிஷேகம் செய்யப்பட்டவர்களுடன் யெகோவா செயல்தொடர்புகொண்டு ‘புதிய பூமிக்காக’ உறுதியான அடித்தளத்தைப் போட்டிருக்கிறார். புதிய பூமி என்பது பரலோக ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியை சுதந்தரிக்கப் போகும் கடவுள் பயமுள்ள மானிட சமுதாயமாகும்.—ஏசாயா 65:17; 2 பேதுரு 3:13.
20. புதிய எருசலேம் எவ்வாறு அதன் பெயருக்கேற்ப திகழும்?
20 ஆவிக்குரிய பரதீஸில் இப்பொழுது யெகோவாவின் ஜனங்கள் அனுபவித்து மகிழும் சமாதானமான நிலைமைகள் பூமியில் நிஜமான பரதீஸில் விரைவில் அனுபவிக்கப்படும். மனிதவர்க்கத்தை ஆசீர்வதிக்க பரலோகத்திலிருந்து புதிய எருசலேம் இறங்கி வரும்போது இது சம்பவிக்கும். இரட்டை அர்த்தத்தில், ஏசாயா 65:21-25-ல் வாக்குப்பண்ணப்பட்டுள்ள சமாதானமான நிலைமைகளை கடவுளுடைய ஜனங்கள் அனுபவிப்பார்கள். பரலோக புதிய எருசலேமில் வாழப்போகும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் ‘வேறே ஆடுகளும்,’ யெகோவாவின் ஐக்கியப்பட்ட வணக்கத்தாராக, இப்பொழுதே ஆவிக்குரிய பரதீஸில் தெய்வ சமாதானத்தை அனுபவித்து வருகின்றனர். ‘கடவுளுடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுகையில்,’ இப்படிப்பட்ட சமாதானம் நிஜமான பரதீஸுக்குள்ளும் நீடிக்கும். (மத்தேயு 6:10) ஆம், எருசலேம் என்ற பெயருக்கேற்ப, ‘இரட்டை சமாதானத்தின் [உறுதியான] அடித்தளமாக’ கடவுளுடைய மகிமையான பரலோக நகரம் திகழும். அது, அதன் மகத்தான சிருஷ்டிகராகிய யெகோவா தேவனுக்கும் அதன் ராஜ மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் துதியுண்டாகும் வண்ணம் நித்தியத்துக்குமாக நிலைநிற்கும்.
ஞாபகமிருக்கிறதா?
◻ ஜனங்களை எருசலேமில் நெகேமியா கூட்டியபோது என்ன நிறைவேற்றப்பட்டது?
◻ கடவுளுடைய வீட்டை புறக்கணிக்காமல் இருப்பதற்கு பூர்வ யூதர்கள் என்ன செய்யவேண்டியிருந்தது, நாம் என்ன செய்ய வேண்டும்?
◻ நிரந்தர சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொண்டுவருவதில் எவ்வாறு ‘எருசலேம்’ உட்பட்டுள்ளது?
[பக்கம் 23-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
எருசலேமின் வாசல்கள்
எண்கள் தற்கால உயரத்தை மீட்டரில் காட்டுகின்றன
மீன் வாசல்
பழைய வாசல்
எப்பிராயீமின் வாசல்
மூலை வாசல்
அகலமான மதில்
வீதி
பள்ளத்தாக்கின் வாசல்
இரண்டாம் பாகம்
பூர்வ வடக்கு மதில்
தாவீதின் நகரம்
குப்பைமேட்டு வாசல்
இன்னோம் பள்ளத்தாக்கு
அரண்
ஆட்டு வாசல்
காவல்வீட்டு வாசல்
ஆலயப் பகுதி
விசாரிப்பு வாசல்
குதிரை வாசல்
ஓபேல்
வீதி
தண்ணீர் வாசல்
கீகோன் ஊற்று
ஊருணி வாசல்
ராஜாவின் தோட்டம்
என்ரொகேல்
டைரோப்பியன் (மத்திய) பள்ளத்தாக்கு
கீதரோன் ஆற்றுப் பள்ளத்தாக்கு
740
730
730
750
770
770
750
730
710
690
670
620
640
660
680
700
720
740
730
710
690
670
நகரம் அழிக்கப்பட்ட சமயத்திலும் நெகேமியா தலைமையில் மதிற்சுவரை திரும்பக் கட்டிய சமயத்திலும் எருசலேமின் மதிற்சுவர் இந்தளவு இருந்திருக்கலாம்