உங்கள் பிள்ளைகள் பள்ளியில்உறுதியாக நிற்கின்றனரா?
1 “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரே. 10:23) பள்ளியில் அழுத்தங்களையும் சோதனைகளையும் எதிர்ப்படும்பொழுது நம் பிள்ளைகளைக்குறித்ததில் இது எவ்வளவு மேலும் அதிக உண்மையாயிருக்கிறது! ஒவ்வொரு பள்ளி ஆண்டும் அவர்களுடைய விசுவாசத்திற்கான பரீட்சைகளாலும், உத்தமத் தன்மை, யெகோவாவிற்கான அன்பு இவைகளோடு சேர்ந்து வருகிறது என்பதை கிறிஸ்தவ இளைஞர்கள் உணருகின்றனர். சபையில் இருக்கும் இளைஞராகிய நீங்கள் பள்ளியில் உறுதியாக நிற்கிறீர்களா? எதிர்காலத்தில் வரும் பரீட்சைகளுக்காக பெற்றோராகிய நீங்கள் எவ்வாறு உங்கள் பிள்ளைகளை திடப்படுத்துவீர்கள்?
பள்ளி புரோஷுரை உபயோகியுங்கள்
2 விசேஷமாக கிறிஸ்தவ பெற்றோர்களுக்கும் அவர்களுடைய பள்ளி வயது பிள்ளைகளுக்கும் பள்ளி புரோஷுர் 1983-ல் ஏற்பாடு செய்யப்பட்டது. சில பள்ளி நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்ட யெகோவாவின் சாட்சிகளின் நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தெளிவாக தெரிவிப்பதற்கு உதவி செய்ய இது அமைக்கப்பட்டிருக்கிறது. ஒழுக்க சம்பந்தமான நடத்தையின் விஷயத்தில் யெகோவாவின் சாட்சிகளின் ஒன்றுபட்ட ஸ்தானத்தைக் குறித்தும் இது வழிகாட்டி குறிப்புகளை அளிக்கிறது.
3 அநேக இளைஞர்களுக்கு இந்தப் புரோஷுர் உண்மையான பாதுகாப்பாக நிரூபித்திருக்கிறது. உதாரணமாக ஒரு சாட்சி பெற்றோர் பாலுறவு சம்பந்தப்பட்ட கல்வி சொற்பொழிவுகள் ஒழுக்கங்கெட்டவர்கள் என்று அறிந்த ஆட்களால் மாணாக்கர்களுக்கு கொடுக்கப்படப்போகிறது என்பதை அறிந்தார். புரோஷுரை கையில் வைத்துக்கொண்டு, தனது வேதப்பூர்வமான எதிர்ப்புகளை அவள் கலந்தாலோசிக்க முடிந்தது, மேலும் தன் மகளின் வகுப்புகளில் பொருத்தமான மாற்றங்களை செய்வதில் வெற்றியடைய முடிந்தது.
4 பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பு பெற்றோர்கள் புரோஷுரில் அடங்கியுள்ள கருத்துக்களை பிள்ளைகளின் நினைவுக்கு கொண்டு வர நேரம் எடுத்து தங்களுடைய பிள்ளைகளின் மனங்களையும் இருதயங்களையும் திடப்படுத்தலாம். பிள்ளைகளின் குறிப்பிட்ட வயது, வகுப்பு, பள்ளி ஆகியவற்றிற்கு தக்க கவனத்தோடு, அந்த வருடத்தின்போது விசேஷமாக உதவியாக இருக்கும் தேர்ந்தெடுத்த குறிப்புகளை புரோஷுரிலிருந்து பெற்றோர்கள் அழுத்திக் காட்டலாம். (நீதி. 14:15; 22:3) உங்கள் பிள்ளைகள் ஒருவேளை எதிர்ப்படக்கூடிய சூழ்நிலைகளை அவர்களோடு ஒத்திகை பாருங்கள். மேலும் பிரசுரிக்கப்பட்ட தகவல் ‘அவன் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துவதில்’ எப்படி பலனளிக்கக்கூடியதாயிருக்கிறது என்பதை நடித்துக் காட்டுங்கள்.—எபிரெயர் 12:13.
5 தங்கள் தனிப்பட்ட நோக்குநிலைகளையும் நம்பிக்கைகளையும் குறித்து கேள்வி கேட்போர்க்கு பிள்ளைகள் “எல்லாருக்கும் முன்பாக தங்கள் விசுவாசத்தை தற்காக்க,” பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அதிக உதவி செய்யலாம். (1 பேதுரு 3:15) சிலர் விஷங்களில் பெற்றோர்கள் நேரடியாக ஆசிரியரோடு பேச ஒருவேளை தீர்மானிக்கலாம். சில கிறிஸ்தவ பெற்றோர்கள் அவ்வப்போது பள்ளிக்கு விஜயம் செய்கின்றனர், ஏனென்றால் இது ஆசிரியர்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு நல்ல உறவை உருவாக்க உதவி செய்யும். இப்பேர்ப்பட்ட தனிப்பட்ட அக்கறை பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள உறவையும் பலப்படுத்துகிறது. அனுமதிப்பார்களேயானால் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு இணங்கி சில பெற்றோர்கள் நேரம் எடுத்துக்கொண்டு வகுப்பறை கலந்தாலோசிப்புகளில் உட்கார்ந்திருக்கின்றனர். சில சமயங்களில் இது பெற்றோருக்கு சூழ்நிலைமைகளைக் குறித்தும் நம் பிள்ளைகள் நாளுக்கு நாள் எதிர்ப்படும் தனித்தன்மை வாய்ந்த அழுத்தங்களைக் குறித்தும் உண்மையான உணர்வைக் கொடுக்கிறது.—1 பேதுரு 3:8.
தினந்தோறும் சாட்சியாக இருங்கள்
6 கொலராடோவில் உள்ள ஒரு வாலிப சாட்சி வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்தை ஒவ்வொரு நாளும் படிக்கும்போது கடினமான வார்த்தைகளை புரிந்துகொள்ள தன் ஆசிரியை தனக்கு உதவி செய்யுமாறு கேட்பான். ஒரு நாள் தன் புத்தகம் காணாமற் போனதை அவன் அறிந்தான். அந்த ஆசிரியை சுகவீனத்தின் காரணமாக பள்ளியிலிருந்து சீக்கிரம் சென்றதால் அவனிடமிருந்து அந்தப் புத்தகத்தை அந்த நாளுக்காக “கடன்வாங்கி சென்றதாக” பின்பு கண்டுபிடித்தான். அவன் தின வசனத்தை வாசிப்பதை தவற விரும்பவில்லை. இது ஆசிரியைக்கு சொந்த வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்தை அளிக்குமாறு வழிநடத்தியது.
7 பள்ளி ஆண்டு அச்சமும் கவலையுமான கணங்களை கொண்டுவருகிறது என்பது உண்மைதான். இருந்தபோதிலும், நம்பிக்கையுள்ள நோக்கோடுகூடிய ஊக்கமான தயாரிப்பு, ‘செயல்பட தங்கள் மனதின் அரையைக் கட்டிக் கொண்டு,’ இளைஞர்கள் பள்ளிகளில் செலவழிக்கும் நேரத்தை யெகோவாவின் துதிக்காக செலவிட பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் உதவி செய்யும்.—1 பேதுரு 1:13.