மாவட்ட, சர்வதேச மாநாடுகள் தேவனை மகிமைப்படுத்த நம்மை உந்துவிக்கின்றன!
இதுவரை நடைபெற்றிருக்கும் “தேவனை மகிமைப்படுத்துங்கள்” மாவட்ட, சர்வதேச மாநாடுகள் அபார சாட்சி பகர்ந்துள்ளன. சிறப்பு வாய்ந்த இந்த தேவராஜ்ய நிகழ்ச்சிகள் யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்தியுள்ளன; ‘யெகோவாவுக்கு அவருடைய பெயருக்குரிய மகிமையைச் செலுத்த’ நம் திறமையை முன்னேற்றுவித்திருக்கின்றன. (சங். 96:8, NW) உண்மையில், யெகோவாவின் அற்புத குணங்களைப் பறைசாற்றும் அவரது வியத்தகு படைப்பின் செயலுக்காக அவர் மகிமையைப் பெற தகுதியானவர்.—யோபு 37:14; வெளி. 4:11.
மாநாட்டில் நீங்கள் எடுத்த குறிப்புகளையும் பின்வரும் கேள்விகளையும் வைத்துக்கொண்டு, ஜனவரி 19-ல் துவங்கும் வாரத்தில் நடைபெறும் மாநாட்டு நிகழ்ச்சிகளின் மறுபார்வைக்கு தயாரித்து அதில் பங்கு பெறுங்கள்.
1. உயிரற்ற சிருஷ்டிப்பு தேவனுடைய மகிமையை எவ்வாறு அறிவிக்கிறது, மனிதர் அவரைத் துதிப்பதிலிருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது? (சங். 19:1-3; “தேவனின் மகிமையை சிருஷ்டிப்பு அறிவிக்கிறது”)
2. எந்த தற்கால உண்மைக்கு மறுரூபக் காட்சி முன்நிழலாக உள்ளது, இந்த உண்மையால் கிறிஸ்தவர்கள் இன்று எந்த விதத்தில் உந்துவிக்கப்படுகின்றனர்? (முக்கியப் பேச்சு, “மகிமையான தீர்க்கதரிசன காட்சிகள் நம்மை உந்துவிக்கின்றன!”)
3. தானியேல் தீர்க்கதரிசி காட்டியது போன்ற மனத்தாழ்மையை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம், அவ்வாறு செய்வதனால் நாம் எவ்வாறு நன்மை அடைவோம்? (தானி. 9:2, 5; 10:11, 12; “தாழ்மையுள்ளோருக்கு யெகோவாவின் மகிமை வெளிப்படுத்தப்படுகிறது”)
4. (அ) கடவுளின் நியாயத்தீர்ப்பு பற்றிய என்ன மூன்று காரியங்களை ஆமோஸ் தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்? (ஆமோ. 1:3, 11, 13; 9:2-4, 8, 14) (ஆ) ஆமோஸ் 2:12-ல் காணப்படும் எச்சரிப்பின் உதாரணத்திலிருந்து என்ன நடைமுறை பாடத்தை இன்று யெகோவாவின் சாட்சிகள் கற்றுக்கொள்ளலாம்? (“ஆமோஸ் தீர்க்கதரிசனம்—நம் நாளுக்கான அதன் செய்தி”)
5. (அ) ஒருவர் குடித்து வெறிக்காவிட்டாலும் மதுபானத்தை மிதமிஞ்சி குடிப்பதனால் வரும் ஆபத்துக்கள் என்னென்ன? (ஆ) மிதமிஞ்சி குடிக்கும் பழக்கத்தை எப்படி மாற்றிக் கொள்ளலாம்? (மாற். 9:43; எபே. 5:18; “மதுபான துஷ்பிரயோகம் என்ற கண்ணியை தவிருங்கள்”)
6. ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற புதிய பிரசுரத்திலிருந்து நீங்கள் எவ்வாறு நன்மையடைகிறீர்கள்? (“‘நல்ல தேசம்’—பரதீஸிற்கு முன்நிழல்”)
7. என்ன மூன்று வழிகளில் நாம் ‘யெகோவாவின் மகிமையை கண்ணாடி போல பிரதிபலிக்கலாம்’? (2 கொ. 3:18; “யெகோவாவின் மகிமையை கண்ணாடி போல பிரதிபலியுங்கள்”)
8. நியாயமற்ற விதத்தில் நாம் பகைக்கப்படுவதற்கு யார் முக்கிய காரணம், அவ்வாறு பகைக்கப்பட்டாலும் நம் உத்தமத்தைக் காத்துக்கொள்ள எது நமக்கு உதவும்? (சங். 109:1-3; “காரணமின்றி பகைக்கப்படுதல்”)
9. மேன்மை பற்றிய கிறிஸ்துவின் சிந்தை என்பது என்ன, இந்த சிந்தையை இன்னும் முழுமையாக வளர்த்துக் கொள்வதன் அவசியத்தை ஒருவர் எவ்வாறு உணரலாம்? (மத். 20:20-26; “மேன்மை பற்றிய கிறிஸ்துவின் சிந்தையை வளர்த்துக்கொள்ளுங்கள்”)
10. உடல் சோர்வின் மத்தியிலும் ஆவிக்குரிய வகையில் சுறுசுறுப்பாக நிலைத்திருப்பதற்கு எது நமக்கு உதவும்? (“சோர்வாக இருந்தாலும் சோர்ந்து விடுவதில்லை”)
11. பொய்யைப் பரப்புவதற்கு சாத்தான் பயன்படுத்தும் சில வழிகள் யாவை, நம் விசுவாசத்தை தகர்ப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்குப் பொருத்தமான வேதப்பூர்வ பதிலடி என்ன? (யோவா. 10:5; “‘அந்நியருடைய சத்தத்திற்கு’ எச்சரிக்கையாக இருங்கள்”)
12. (அ) மாற்கு 10:14, 16-லுள்ள இயேசுவின் உதாரணத்தை பெற்றோர் எவ்வாறு பின்பற்றலாம்? (ஆ) பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புதிய புத்தகத்தில் உங்களுக்குப் பிடித்த அம்சம் எது? (“நம் பிள்ளைகள்—அருமையான செல்வங்கள்”)
13. இளைஞர்கள் எவ்வழிகளில் யெகோவாவைத் துதிக்கிறார்கள்? (1 தீ. 4:12; “இளைஞர்கள் யெகோவாவைத் துதிக்கும் வழிகள்”)
14. “எதிர்ப்பின் மத்தியிலும் தைரியமாக சாட்சி கொடுங்கள்” என்ற நாடகத்தில் எந்தக் காட்சிகள் உங்கள் மனதைத் தொட்டன?
15. இவர்களுடைய முன்மாதிரியை நாம் எப்படி பின்பற்றலாம்: (அ) பேதுரு மற்றும் யோவான் (அப். 4:10) (ஆ) ஸ்தேவான் (அப். 7:2, 52, 53) (இ) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையினர் (அப். 9:31; நாடகமும் “நற்செய்தியை அறிவிப்பதை ‘விட்டுவிடாதீர்கள்’” என்ற பேச்சும்)
16. (அ) தேவனை நாம் எந்தெந்த வழிகளில் மகிமைப்படுத்த தீர்மானம் எடுத்திருக்கிறோம்? (ஆ) “தேவனை மகிமைப்படுத்துங்கள்” மாநாட்டில் நாம் கற்றுக்கொண்டவற்றை கடைப்பிடிக்கையில் எதைக் குறித்து நிச்சயமாய் இருக்கலாம்? (யோவா. 15:9, 10, 16; “‘மிகுந்த கனிகளைக் கொடுத்து’ யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்”)
[பக்கம் 1-ன் பெட்டி]
மாநாட்டில் கேட்ட அருமையான ஆவிக்குரிய போதனைகளை தியானித்தோமெனில், நாம் கற்றுக்கொண்டவற்றைக் கடைப்பிடிக்க தூண்டப்படுவோம். (பிலி. 4:8, 9) “எதைச் செய்தாலும் தேவனுடைய மகிமைக்கென்று செய்ய” நாம் தீர்மானித்திருப்பதை இது உறுதிப்படுத்தும்.—1 கொ. 10:31.