ஊழியத்தில் நம் திறமைகளை மெருகூட்ட... உங்களோடு ஊழியம் செய்பவருக்கு உதவுங்கள்
ஏன் முக்கியம்: இருவராக ஊழியம் செய்வது நல்லது என்பதை இயேசு உணர்ந்திருந்தார். அதனால்தான், தம்முடைய 70 சீடர்களை ஊழியத்திற்கு இரண்டிரண்டு பேராக அனுப்பினார். (லூக். 10:1) நம்மோடு ஊழியம் செய்பவர் ஏதாவது இக்கட்டான சூழ்நிலையை எதிர்ப்பட்டால் அல்லது வீட்டுக்காரரின் கேள்விக்குப் பதிலளிக்க கஷ்டப்பட்டால் நாம் அவருக்கு உதவலாம். (பிர. 4:9, 10) நாம் சொல்லும் அனுபவங்களும், தேவைப்படும்போது கொடுக்கும் ஆலோசனைகளும் அவர் ஊழியத்தைத் திறம்பட செய்ய கைகொடுக்கும். (நீதி. 27:17) ஒரு வீட்டிலிருந்து அடுத்த வீட்டிற்குச் செல்லும் வழியிலும் உற்சாகமூட்டும் விஷயங்களைப் பேசுவது அவரைப் பலப்படுத்தும்.—பிலி. 4:8.
இந்த மாதம் முயன்று பாருங்கள்:
ஒருவரோடு ஊழியம் செய்த பிறகு, அவர் பேசியதோ செய்ததோ உங்களுக்கு எப்படி உதவியாக இருந்ததென அவரிடம் சொல்லுங்கள்.