-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
கேட்டுக்கொண்டே . . . தேடிக்கொண்டே . . . தட்டிக்கொண்டே இருங்கள்: இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வினைச்சொற்கள், தொடர்ந்து நடக்கும் செயல்களைக் குறிக்கின்றன. அதனால், விடாமல் ஜெபம் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன. மூன்று வினைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது, சொல்லப்படும் கருத்துக்கு வலிமை சேர்க்கிறது. இதேபோன்ற குறிப்பைத்தான் லூ 11:5-8-ல் உள்ள உவமையில் இயேசு சொல்லியிருக்கிறார்.
-