-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
இடுக்கமான வாசல் வழியாகப் போங்கள்: பூர்வ காலங்களில், மதில் சூழ்ந்த நகரங்களுக்கு நுழைவாசல்கள் இருந்தன. மக்களுடைய வாழ்க்கைமுறையையும் நடத்தையையும் விவரிப்பதற்கு பாதை அல்லது “வழி” போன்ற வார்த்தைகளை பைபிள் பயன்படுத்துகிறது. இங்கே சொல்லப்பட்டிருக்கும் இரண்டு விதமான பாதைகள், கடவுளுக்குப் பிரியமான வாழ்க்கைமுறையையும் அவருக்குப் பிரியமில்லாத வாழ்க்கைமுறையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. ஒருவர் எந்தப் பாதையில் போகிறார் என்பதைப் பொறுத்துதான் அவர் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்படுவாரா மாட்டாரா என்பது தீர்மானிக்கப்படும்.—சங் 1:1, 6; எரே 21:8; மத் 7:21.
வாசல் அகலமானது, . . . பாதை விசாலமானது: பழமையான சில கையெழுத்துப் பிரதிகளில், “அதன் பாதை அகலமானது, விசாலமானது” என்று கொடுக்கப்பட்டிருந்தாலும், பழமையான பல கையெழுத்துப் பிரதிகளில் “வாசல் அகலமானது, . . . பாதை விசாலமானது” என்றுதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது, மத் 7:14-ல் உள்ள இணையான கருத்தோடும் ஒத்துப்போகிறது.—இணைப்பு A3-ஐப் பாருங்கள்.
-