-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
பெத்பகே: இது ஒலிவ மலைமேல் இருந்த ஒரு கிராமம். “முதல் அத்திப் பழங்களின் வீடு” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வார்த்தையிலிருந்து இந்தப் பெயர் வந்திருக்கிறது. பாரம்பரிய நம்பிக்கையின்படி, இது ஒலிவ மலையின் தென்கிழக்குச் சரிவில், அதன் உச்சிக்குப் பக்கத்தில், எருசலேமுக்கும் பெத்தானியாவுக்கும் இடையில் இருந்தது. எருசலேமிலிருந்து சுமார் 1 கி.மீ. (1 மைலுக்கும் குறைவான) தூரத்தில் இருந்தது.—மாற் 11:1; லூ 19:29; இணைப்பு A7-ஐயும் வரைபடம் 6-ஐயும் பாருங்கள்.
-