-
மத்தேயு 21:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 “அதோ! அங்கே தெரிகிற அந்தக் கிராமத்துக்குப் போங்கள்; அங்கே போனவுடன், ஒரு கழுதையும் அதன் குட்டியும் கட்டி வைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள்; அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டுவாருங்கள்.
-
-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
ஒரு கழுதையும் அதன் குட்டியும் கட்டி வைக்கப்பட்டிருப்பதை: மத்தேயு மட்டும்தான் ஒரு கழுதையையும் அதன் குட்டியையும் சேர்த்துக் குறிப்பிட்டிருக்கிறார். (மாற் 11:2-7; லூ 19:30-35; யோவா 12:14, 15) மாற்குவும் லூக்காவும் யோவானும் கழுதைக்குட்டியை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இயேசு கழுதைக்குட்டியின் மீது மட்டும் சவாரி செய்ததால் அவர்கள் அதை மட்டும் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.—மத் 21:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
-