பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 51–52
யெகோவா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே நிறைவேறியது
நடக்கப்போகும் சம்பவங்களை யெகோவா முன்பே துல்லியமாக சொல்லியிருந்தார்
“அம்புகளைத் தீட்டிப் பளபளப்பாக்குங்கள்”
‘பாபிலோனின் வீரர்கள் போர் செய்வதை நிறுத்திவிட்டார்கள்’
நபோனிடஸ் செய்திப்பட்டியல் இப்படிச் சொல்கிறது: “போர் செய்யாமலேயே கோரேசின் படை பாபிலோனுக்குள் நுழைந்தது.” இந்த வார்த்தைகள் எரேமியாவின் தீர்க்கதரிசனத்தோடு ஒத்துப்போகிறது.
“பாபிலோன் வெறும் கற்குவியலாகும்,” “காலமெல்லாம் பாழாய்க் கிடக்கும்”
கி.மு. 539-ன் ஆரம்பத்திலிருந்து, பாபிலோனுடைய பேரும் புகழும் மறைய ஆரம்பித்தது. பாபிலோனை தன்னுடைய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக்க நினைத்த மகா அலெக்ஸாண்டர் திடீரென இறந்துவிட்டார். முதல் நூற்றாண்டில், யூதர்களில் ஒரு சிறு தொகுதி பாபிலோனில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களை சந்திக்க பேதுரு அங்கு போயிருந்தார். ஆனால், நான்காம் நூற்றாண்டில் இந்த நகரம் பாழாகிப் போனது. இப்படி அந்த நகரம் சுவடே தெரியாமல் போய்விட்டது.