பிரசங்கிக்க பன்னிரண்டு காரணங்கள்
நாம் ஏன் பிரசங்கிக்கிறோம், கற்பிக்கிறோம்? நல்மனமுள்ள ஆட்களை வாழ்வுக்கு வழிநடத்துவதற்காகவா? (மத். 7:14) கீழே உள்ள பட்டியலில் அதுதான் முதலாவதாக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முக்கிய காரணம் அது அல்ல. பின்வரும் 12 காரணங்களில் எது ரொம்ப முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
1. மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறது.—யோவா. 17:3.
2. கெட்டவர்களை எச்சரிக்கிறது.—எசே. 3:18, 19.
3. பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்.—மத். 24:14.
4. யெகோவா நீதியானவர் என்பதை நிரூபிக்கிறது; திருந்துவதற்கு வாய்ப்பே கொடுக்காமல் கெட்டவர்களை அழித்துவிட்டார் என்று யாரும் குறை சொல்ல முடியாது.—அப். 17:30, 31; 1 தீ. 2:3, 4.
5. இயேசுவின் பலியால் வாங்கப்பட்ட மக்களுக்கு ஆன்மீக விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டியது நம் கடமை.—ரோ. 1:14, 15.
6. இரத்தப்பழி நம்மேல் வந்துவிடக்கூடாது.—அப். 20:26, 27.
7. நம் மீட்புக்கு மிக முக்கியம்.—எசே. 3:19; ரோ. 10:9, 10.
8. சக மனிதர்மீதுள்ள அன்பிற்கு அடையாளம்.—மத். 22:39.
9. யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் கீழ்ப்படிவதைக் காட்டுகிறது.—மத். 28:19, 20.
10. நம் வழிபாட்டின் பாகம்.—எபி. 13:15.
11. கடவுள்மேல் உள்ள அன்பைக் காட்டுவதற்கான வாய்ப்பு.—1 யோ. 5:3.
12. யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்த உதவுகிறது.—ஏசா. 43:10-12; மத். 6:9.
இவை மட்டுமல்ல இன்னும் காரணங்கள் இருக்கலாம். உதாரணத்திற்கு, பிரசங்கிப்பதால் நம் நம்பிக்கை பலப்படும். கடவுளுடைய சக வேலையாட்களாகச் சேவை செய்யும் பாக்கியம் கிடைக்கும். (1 கொ. 3:9) ஆனாலும், 12 ஆவது காரணம்தான் மிக மிக முக்கியம். செய்தியைக் கேட்கிறார்களோ இல்லையோ, நாம் போய் பிரசங்கிப்பது யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துகிறது, அவரை நிந்திக்கிறவனுக்கு பதிலடி கொடுக்கிறது. (நீதி. 27:11) ஆம், ‘இடைவிடாமல் கற்பித்து, . . . நற்செய்தியை அறிவிக்க’ நமக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.—அப். 5:42.