மனித கீழ்ப்படியாமையின் மத்தியிலும் பரதீஸிய எதிர்பார்ப்புகள் ஆதாரமுள்ளவை
1. காலம் சென்றபோது முதல் மனிதனும் மனுஷியும் எங்கே காணப்பட்டார்கள்? என்ன சுற்றுப்புறச்சூழலில்?
காலம் கடந்துவிட்டது. முதல் மனிதனும் மனுஷியும் இனிமேலும் அப்பாவித்தனமாக நிர்வாணமாக இல்லை. அவர்கள் மிருகங்களின் தோலாலான நீண்ட உடைகளை உடுத்தியிருக்கிறார்கள். அவர்கள் பரிபூரண ஏதேன் தோட்டத்தினுடைய வாயிலுக்குச் சற்று வெளியே இருக்கிறார்கள். அவர்களுடைய முதுகுப்புறம் தோட்டத்தை நோக்கியிருக்கிறது. அவர்களுக்கு முன்னாலிருந்த காட்சியை அவர்கள் பார்க்கிறார்கள். பண்படுத்தப்படாத நிலத்தை மட்டுமே அவர்கள் காண்கிறார்கள். அது கடவுளுடைய ஆசீர்வாதத்தை கொண்டில்லை என்பது தெளிவாக இருக்கிறது. அவர்களுக்கு முன்னால், முள்ளையும் குருக்கையும் காணமுடிகிறது. அவர்கள் கீழ்ப்படுத்தும்படியாக பொறுப்பளிக்கப்பட்ட பூமி இதுவல்லவா? ஆம், ஆனால் முதல் மனிதனும் மனுஷியும் இப்பொழுது இந்தக் கவனிக்கப்படாத நிலத்தின் மீது ஏதேன் தோட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் அங்கு வெளியே இல்லை.
2 இப்பேர்ப்பட்ட மாறுபட்ட காட்சியைப் பார்க்கும் இவர்கள் ஏன் திரும்பி வந்து பரதீஸிய தோட்டத்துக்குள் பிரவேசிக்கக்கூடாது? எளிதில் சொல்லலாம், ஆனால் அவர்களுக்குப் பின்னால், தோட்டத்தின் வாசலில் என்ன இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். தோட்டத்திற்குள்ளேயும்கூட அவர்கள் முன்னொரு போதும் பார்த்திராத ஜீவன்கள், கேருபீன்களும், தொடர்ந்து தானாகவே வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயமும். அந்த மனிதனும் மனுஷியும் இவைகளைக் கடந்து உயிரோடே தோட்டத்துக்குள் ஒருபோதும் போகமுடியாது!—ஆதியாகமம் 3:24.
3. முதல் தம்பதியின் சூழ்நிலைமைகளில் அத்தனை தீவிரமான மாற்றம் ஏற்பட என்ன சம்பவித்துவிட்டது?
3 என்ன நடந்துவிட்டது? அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விஞ்ஞானத்தைக் குழப்பமடையச் செய்ய அத்தனை சிக்கலான ஒரு புரியாப் புதிராக இல்லை. அது எளிமையாக விளக்கப்படுகிறது. முதல் மனிதனுக்கும் மனுஷிக்கும் அவர்களுடைய விவாக நாளில் அவர்களுக்குக் கடவுளால் கொடுக்கப்பட்ட வேலை அவர்களுக்கு முன்னால் வைத்த மகத்தான எதிர்ப்பார்ப்புகளை, செயலுருவில் காண்பது, ஒரு சிறிய விஷயத்தில் அவர்கள் தங்களுடைய பரலோகத் தகப்பனுக்குக் கீழ்ப்படியும் நிபந்தனையின் பேரில் சார்ந்திருந்தது. அவர்களுடைய பரிபூரண கீழ்ப்படிதல், தனி ஓர் உணவு விலக்கலினால் சோதிக்கப்பட இருந்தது: அவர்கள் “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை” புசிக்கக்கூடாது. (ஆதியாகமம் 2:16, 17) கடவுளுடைய கட்டளையை மீறி அதை அவர்கள் செய்வார்களேயானால், அவர்கள் நிச்சயமாகவே சாவார்கள். இதைத்தான் கடவுளுடைய தீர்க்கதரிசியாக, ஆதாம் தன்னுடைய மனைவியாகிய வயதில் குறைந்த மனித சிருஷ்டியிடம் சொன்னான். ஆனால் திடீரென்று, அந்த நாக்காஷ், அந்தச் சர்ப்பம் விலக்கப்பட்ட “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்திலிருந்து” புசிப்பதற்கு எதிராக ஆதாமை எச்சரிப்பதில் கடவுள் சொல்லியிருந்த காரியத்தின் உண்மைத்தன்மையை மறுதலித்தது. கடவுளுடைய கட்டளையை மீறி விலக்கப்பட்ட கனியைப் புசிப்பது, அவள் கடவுளைப் போலாவதில் விளைவடைந்து, எது நன்மை எது தீமை என்பதைத் தீர்மானிப்பதில் கடவுளைச் சார்ந்திருக்காதபடிச் செய்யும் என்று நம்பும்படியாக சர்ப்பம் ஸ்திரீயை வஞ்சித்தது.—ஆதியாகமம் 3:1–5.
புராண இலக்கிய பதிவு அல்ல
4, 5. சர்ப்பம் முதல் மனுஷியை வஞ்சித்ததுப் பற்றிய ஒரு பதிவு கட்டுக்கதை இல்லை என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் எவ்விதமாகக் காண்பிக்கிறான்?
4 நம்பமுடியாததா? அது அதிகமாக ஒரு புராண கதையாக, உண்மைகளை ஆதாரமாகக் கொண்டில்லாத ஒரு கட்டுக் கதையாக தொனிப்பதால் நவீன அறிவொளிப்பெற்ற முழு வளர்ச்சியடைந்த மனங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாததாகத் தோன்றுகிறதா? இல்லை, இன்னும் அதிகமாக வாசிக்கப்படுகிற எழுத்தாளனும் நம்பத்தகுந்த எழுத்தாளனும், தான் எழுதுகிற காரியத்தின் திருத்தமானத்தன்மையை அறிந்தவனுமான, விசேஷமாகத் தெரிந்துகொள்ளப்பட்ட அப்போஸ்தலனுக்கு அவ்விதமாக இல்லை. உலகப் பிரகாரமான ஞானம் நிறைந்த கொரிந்து பட்டணத்திலிருந்த வயது வந்த கிறிஸ்தவர்கள் இருந்த சபைக்கு இந்தப் பவுல் அப்போஸ்தலன் இவ்விதமாக எழுதினான்: “ஆகிலும் சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.”—2 கொரிந்தியர் 11:3.
5 பவுல் நிச்சயமாகவே, புறமத கிரேக்க மதத்திலுள்ள கட்டுக்கதைகளை நன்கு அறிந்திருந்த அந்தக் கொரிந்தியர்களுக்குத் தன் குறிப்பை விளக்க, ஒரு புராணக் கதையை, ஒரு பழங்கதையைக் குறிப்பிட்டு பேசமாட்டான். “தேவ வசனம்” என்பதாக அவன்தானே அறிவித்திருந்த ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்டிருந்த எபிரெய வேதாகமத்திலிருந்து மேற்கோள் காண்பிப்பவனாய், அப்போஸ்தலனாகிய பவுல் “சர்ப்பம் தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது” என்பதாக உறுதி செய்தான். (1 தெசலோனிக்கேயர் 2:13) மேலுமாக “ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைப்” போதிக்கும் கடமை ஒப்படைக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ கண்காணிக்கு எழுதுகையில், அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னான்: “முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும் ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.”—2 தீமோத்தேயு 1:13; 1 தீமோத்தேயு 2:13,14.
6. (எ) கடவுளுக்கு எதிரான ஆதாமின் மீறுதல் ஸ்திரீயினுடையதிலிருந்து எவ்விதமாக வேறுபட்டது? (பி) சர்ப்பத்தைப் பற்றி ஸ்திரீ ஒரு கதையைக் கட்டிக் கொண்டில்லை என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?
6 ஸ்திரீ விலக்கப்பட்ட கனியிலிருந்து புசித்ததால் ஏற்பட்ட விளைவுகள் நிச்சயமாக சரித்திரத்தின் மறுக்கமுடியாத உண்மைகளாக இருப்பது போலவே, சர்ப்பத்தால் அவள் வஞ்சிக்கப்பட்டதும் கட்டுக்கதை அல்ல, ஓர் உண்மையாகும். இவ்விதமாக கடவுளுக்கு எதிராக மீறுதலுக்குட்பட்ட பின்பு, அவள் சாப்பிடுவதில் தன் கணவனைத் தன்னோடு சேர்ந்துகொள்ளுமாறு தூண்டினாள். ஆனால் அவன் சாப்பிட்டது, அவன் முழுவதுமாக வஞ்சிக்கப்பட்டதால் அல்ல. (ஆதியாகமம் 3:6) அதற்குப் பின் கடவுளுக்கு அவர்கள் கணக்குக் கொடுத்ததைப் பற்றிய உரை இவ்விதமாகச் சொல்கிறது: “அதற்கு ஆதாம்: ‘என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன்’ என்றான். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] ஸ்திரீயை நோக்கி: ‘நீ இப்படிச் செய்தது என்ன’ என்றார். ஸ்திரீயானவள்: ‘சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன்’ என்றாள்.” (ஆதியாகமம் 3:12, 13) அந்த ஸ்திரீ நாக்காஷ் பற்றி, அந்தச் சர்ப்பத்தைப் பற்றி ஒரு கதையைக் கட்டிக்கொண்டில்லை, யெகோவா தேவன் அவளுடைய விளக்கத்தை ஒரு கட்டுக்கதையாக, புராணக் கதையாகக் கருதவில்லை. அவளுடைய கடவுளும் சிருஷ்டிகருமாகிய தமக்கு எதிராக மீறுதலுக்குட்படும்படி ஸ்திரீயை வஞ்சிப்பதில் ஒரு கருவியாக இருந்ததன் பேரில் அந்தச் சர்ப்பத்தின்மீது அவர் நடவடிக்கை எடுத்தார். வெறுமென ஒரு புராணக்கதையிலுள்ள சர்ப்பத்தோடு செயல்தொடர்புக் கொள்வது கடவுளுக்கு மதிப்புக் குறைவானதாக இருக்கும்.
7. (எ) சர்ப்பத்திடமாகக் கடவுளின் தீர்ப்பை பைபிள் பதிவு எவ்விதமாக விவரிக்கிறது? (பி) முதல் மனுஷியை வஞ்சித்த சர்ப்பம் நம்மையும்கூட எவ்விதமாக வஞ்சிக்க முடியும்? (அடிக்குறிப்பிலுள்ள குறிப்பைச் சேர்த்துக் கொள்ளவும்.)
7 ஏதேன் தோட்டத்தில் அந்தச் சர்ப்பத்திடம் கடவுளின் நீதியான தீர்ப்பை விவரிப்பதாய் பதிவு சொல்வதாவது: “அப்பொழுது தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] சர்ப்பத்தைப் பார்த்து: ‘நீ இதைச்செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்’ என்றார்.” (ஆதியாகமம் 3:14, 15) எந்த நிதான அறிவுள்ள நீதிமன்றமும் உண்மைகளோடு வாதாடி கட்டுக்கதைகளை அல்ல, ஆனால் உண்மையான அத்தாட்சியைப் பிரித்தெடுக்கிறது. யெகோவா தேவன், தம்முடைய தீர்ப்பை, புராணக் கதையிலுள்ள ஒரு சர்ப்பத்திடமாகச் சொல்வதன் மூலம் தம்மை முட்டாளாக, புத்திக் கெட்டவராக ஆக்கிக் கொள்ளவில்லை. ஆனால் பதில் சொல்லும் பொறுப்புடையதாக, உண்மையிலேயே இருந்த ஒரு சிருஷ்டியின் மீது தீர்ப்பை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். அவன் ஒருபோதும் இல்லை, அவன் வெறுமென ஒரு கட்டுக்கதையே, பூமியின் மீதுள்ள எந்தப் பொல்லாங்குக்கும் அவன் பொறுப்புள்ளவனாக இல்லை என்பதாக நினைக்கும்படியாக அதே சர்ப்பம் நம்மை வஞ்சித்துவிடுமேயானால், அது வேடிக்கைக்குரிய ஒன்றாக இல்லாமல் பரிதாபத்துக்குரிய ஒன்றாக இருக்கும்.a
8. கடவுள் ஸ்திரீக்கு வழங்கிய தீர்ப்பு என்ன? அவளுடைய பெண் பிள்ளைகளுக்கும் பேத்திமார்களுக்கும் என்ன விளைவுகளோடு?
8 சர்ப்பத்தை உட்படுத்திய ஸ்திரீயின் கூற்றை உண்மையாகக் கருதுவதாய் மனிதனின் மனைவியைக் குறித்து பதிவு சொல்கிறதாவது: “அவர் ஸ்திரீயை நோக்கி: ‘நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான்.’” (ஆதியாகமம் 3:16) அவள் ஆதாமை விவாகம் செய்து கொண்ட சமயத்தில், கடவுள் அவர்களிடம், “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்,” என்று சொல்லி ஆசீர்வதித்தபோது, இது போன்ற எதுவும் சேர்த்துச் சொல்லப்படவில்லை. (ஆதியாகமம் 1:28) பரிபூரண மனித தம்பதிக்குக் கொடுக்கப்பட்ட அந்த ஆசீர்வாதமான வேலை ஸ்திரீக்கு அதிகமான மகப்பேற்றைக் குறித்தப் போதிலும், அனாவசியமான வேதனையையும் அளவுக்கு அதிகமான பிள்ளைப் பேற்று நோவையும் அவள் கணவனால் ஒடுக்கப்படுவதையும் குறிப்பிடவில்லை. மீறுதலுக்குள்ளான ஸ்திரீக்கு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, ஒவ்வொரு சந்ததியிலும் அவளுடைய பெண் பிள்ளைகளையும் பேத்திமார்களையும் பாதிக்க இருந்தது.
ஆதாமுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் கடவுளுடைய சட்டம் உயர்த்தப்படுகிறது
9, 10. (எ) கடவுள் என்ன எச்சரிப்பை ஆதாமுக்கு நேரடியாகக் கொடுத்திருந்தார்? இப்பேர்ப்பட்ட ஒரு தண்டனையை வழங்குவதில் அவர் உறுதியாக இருந்தால் என்ன விளைவுகள் ஏற்படும்? (பி) கடவுள் ஆதாமுக்கு எதிராக என்ன தீர்ப்பை வழங்கினார்?
9 ஆனால் மீறுதலில் தன்னைச் சேர்ந்து கொள்ளும்படியாகத் தான் தூண்டின அந்த மனிதனோடு அந்தப் பெண் மாறிவிட்ட என்ன சூழ்நிலைமைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்? இந்த மனிதனிடம் கடவுள் நேரடியாகச் சொல்லியிருந்ததாவது: “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” (ஆதியாகமம் 2:17) வெறுமென ஒரு சிறிய துண்டு பழத்தை ஆதாம் சாப்பிட்டதற்காக, இப்பேர்ப்பட்ட ஒரு முடிவான தீர்ப்பை வழங்குவதில் நியாயாதிபதியாகிய கடவுள் உறுதியாக இருப்பாரா? இப்பேர்ப்பட்ட ஒரு தண்டனையை நிறைவேற்றுவது எதை அர்த்தப்படுத்தும் என்பதை எண்ணிப்பாருங்கள்! ஆதாமும் ஏவாளும் தங்கள் விவாக நாளின்போது மனதில் எண்ணி மகிழ்ந்த அந்த எழுச்சியூட்டும் எதிர்பார்ப்பை, அதாவது முழு பூமியையும் தங்கள் பிள்ளைகளால், ஒரு பரிபூரண மனித இனத்தால் நிரப்பும் அந்த எதிர்பார்ப்பை அழிப்பதாக இருக்கும். தங்கள் கடவுளும் பரலோகத் தகப்பனுமானவரோடு சமாதான உறவில் முடிவில்லா இளமையில் பரதீஸிய பூமியை அமைதியோடு என்றுமாக சுதந்தரித்துக் கொள்ளும் எதிர்பார்ப்பு அந்தச் சந்ததியாருக்கு இருந்தது. நிச்சயமாகவே, எல்லா மனிதவர்க்கத்தின் முதல் மனித பெற்றோரின் மீது தண்டனையை கண்டிப்பாகச் செயலாக்குவதன் மூலம் மனிதவர்க்கத்தின் தொடர்பாகவும் மனிதனின் பூமிக்குரிய வீட்டின் தொடர்பாகவும் தம்முடைய சொந்த மகத்தான நோக்கத்தைக் கடவுள் கெடுத்துக் கொள்ள மாட்டார்! ஆனால் பைபிள் பதிவில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளபடி தெய்வீகத் தீர்ப்பை கவனியுங்கள்:
10 “பின்பு அவர் ஆதாமை நோக்கி: ‘நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவி கொடுத்து, புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்’ என்றார்.”—ஆதியாகமம் 3:17–19.
11. ஆதாமுக்கு எதிரான கடவுளுடைய நியாயத்தீர்ப்புக்கு அவன் பாத்திரமாக இருப்பதைக் கீழ்ப்படிதலைப் பற்றிய என்ன உண்மைகள் விளக்குகின்றன?
11 அந்தத் தீர்ப்பு மனிதனின் மீது மரண தண்டனையை நிறைவேற்றுவதை அர்த்தப்படுத்தியது. பூமி முழுவதையும் தழுவிய பரதீஸிய தோட்டத்தை என்றுமாக பண்படுத்திப் பராமரித்து, அன்புடனும் அமைதியுடனும் ஒன்றாகச் சேர்ந்து வாசம் செய்யும் பரிபூரணமான ஆண்களாலும் பெண்களாலும் பரதீஸிய பூமியை நிரப்ப வேண்டும் என்ற கடவுளுடைய நோக்கத்துக்கு ஏற்படும் விளைவுகள் எவ்விதமாயிருப்பினும் அப்படிச் செய்வதை அர்த்தப்படுத்தியது. அந்த மனிதன், விலக்கப்பட்டிருந்த “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப்” புசிக்க வேண்டாம் என்று அவனுக்குச் சொன்ன கடவுளுடைய வார்த்தைக்குச் செவி கொடுப்பதற்குப் பதிலாக, தன்னுடைய மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்திருந்தான். அவன்தானே அவனுடைய கடவுளும் சிருஷ்டிகருமானவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போனால், தன்னுடைய பிள்ளைகளை சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படியும்படி உறுதியாக அவன் அவர்களுக்குக் கற்பிப்பானா? யெகோவா தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கு அவர்களுக்குக் கற்பிப்பதில் அவனுடைய சொந்த முன்மாதிரி ஒரு பேச்சுக் குறிப்பாக இருக்குமா?—1 சாமுவேல் 15:22-ஐ ஒப்பிடவும்.
12, 13. (எ) ஆதாமினுடைய பாவம் அவனுடைய பிள்ளைகளை எவ்வாறு பாதிக்கும்? (பி) ஆதாம் ஏன் பரதீஸில் அல்லது பூமியிலேயும்கூட என்றுமாக வாழ தகுதியற்றவனாக இருந்தான்?
12 மனித பரிபூரணத்திலிருந்தபோது ஆதாம் தானே செய்ததுப் போல அவனுடைய பிள்ளைகள் கடவுளுடைய சட்டத்தைப் பரிபூரணமாக கடைப்பிடிக்கக்கூடியவர்களாக இருப்பார்களா? பரம்பரைச் சட்டத்தினுடைய முறைமைப்படி, அவன் தன்னுடைய பலவீனத்தையும், கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் வேறு வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கும் மனச்சாய்வையும் தன்னுடைய பிள்ளைகளுக்குக் கடத்தமாட்டானா? உண்மை சரித்திரம் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றன.—ரோமர் 5:12.
13 ஒரு மனித உயிரினத்துக்காக, கடவுளிடமாக பரிபூரண அன்பின் வெளிக்காட்டாகக் கடவுளுக்குப் பரிபூரணமாகக் கீழ்ப்படிவதிலிருந்து விலகிச் சென்ற இப்பேர்ப்பட்ட ஒரு மனிதன், என்றுமாக பரதீஸில் அல்லது பூமியிலேயும்கூட வாழத் தகுதியுள்ளவனா? அவனைப் பூமியின் மீது என்றுமாக வாழ அனுமதிப்பதும்கூட பாதுகாப்பாக இருக்குமா? மீறுதலுக்குட்பட்ட நிலையில் பூமியின் மீது என்றுமாக அவனை வாழ அனுமதிப்பது, கடவுளுடைய சட்டத்தை உயர்த்துவதாக இருந்து அவருடைய மெய்யான நீதியை வெளிப்படுத்துமா அல்லது அது கடவுளுடைய சட்டத்துக்கு அவமரியாதையைக் கற்பித்து கடவுளுடைய வார்த்தை நம்பமுடியாதது என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக இருக்குமா?
ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்படுகிறார்கள்
14. ஆதாமுக்கும் அவளுடைய மனைவிக்கும் எதிராக கடவுளின் நடவடிக்கையை பைபிள் பதிவு எவ்வாறு விவரிக்கிறது?
14 கடவுள் என்ன வகையில் இந்தக் காரியங்களைத் தீர்மானித்தார் என்பதை பைபிள் பதிவு நமக்குச் சொல்கிறது: “தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார். பின்பு தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW]: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப் போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்ய வேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல் செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.”—ஆதியாகமம் 3:21–24.
15. (எ) நிர்வாணமான நிலையில் ஆதாமுக்கும் அவனுடைய மனைவிக்கும் ஏற்பட்ட வெட்க உணர்வுக்குக் கடவுள் எவ்விதமாக கரிசனைக் காண்பித்தார்? (பி) முதல் தம்பதி எவ்விதமாக ஏதேன் தோட்டத்துக்கு வெளியே துரத்தப்பட்டார்கள்? (சி) ஏதேன் தோட்டத்துக்கு வெளியே ஆதாமும் அவனுடைய மனைவியும் மாறிவிட்டிருந்த என்ன சூழ்நிலைமைகளை எதிர்ப்பட்டார்கள்?
15 பாவிகளான ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நிர்வாணமான நிலையில் இப்பொழுது ஏற்பட்ட வெட்க உணர்வுகளுக்குத் தெய்வீக நியாயாதிபதி கரிசனையைக் காண்பித்தார். விவரமாகக் குறிப்பிடப்படாத ஏதோ ஒரு வகையில், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அத்தியிலைகளைத் தைத்து உண்டுபண்ணியிருந்த அரைக்கச்சைகளுக்குப் பதிலாக, நீண்ட தோலாடைகளை அவர் அவர்களுக்கு உடுத்துவித்தார். (ஆதியாகமம் 3:7) தோலாடைகள் நீண்ட நாட்கள் உழைத்து, ஏதேன் தோட்டத்துக்கு வெளியே இருந்த முள்ளுக்கும் குருக்குக்கும் நோவு உண்டுபண்ணும் மற்ற காரியங்களுக்கும் எதிராக அதிகப் பாதுகாப்பை அவர்களுக்கு அளிக்கும். பாவம் செய்த பிறகு அவர்களுக்குண்டான கெட்ட மனச்சாட்சியின் காரணமாக ஏதேன் தோட்டத்திலுள்ள விருட்சங்களுக்குள்ளே அவர்கள் ஒளிந்துகொள்ள முயன்றார்கள். (ஆதியாகமம் 3:8) இப்பொழுது தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்பு கடவுளால் தோட்டத்திலிருந்து துரத்தப்படுவதில் ஒரு வகையான தெய்வீக அழுத்தத்தை அவர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் கிழக்கே துரத்தப்பட்டார்கள். விரைவில் அவர்கள் தோட்டத்துக்கு வெளியே, அதற்குள் செல்லாதபடிக்கு என்றுமாக தடை செய்யப்பட்டவர்களாய் தங்களைக் கண்டார்கள். இனிமேலும் அவர்கள் அந்தத் தோட்டத்தை விரிவுபடுத்தி அதனுடைய பரதீஸிய நிலைமைகளைப் பூமி முழுவதிலும் பரப்புவதற்காக வேலை செய்துகொண்டிருக்க மாட்டார்கள். இப்பொழுது முதற்கொண்டு அவர்கள் நிலத்தினுடைய சகலவித செடிகளிலிருந்தும் ஆகாரத்தைப் புசிப்பார்கள். ஆனால் அது மனித உயிரில் நித்தியமாக அவர்களை காத்துப் பேணாது. அவர்கள் “ஜீவவிருட்சம்” இருக்கும் இடத்திற்குள் நுழையாதபடி தடை செய்யப்பட்டிருந்தார்கள். கொஞ்சகாலத்துக்குப் பின்பு—எவ்வளவு காலத்துக்குப் பின்பு?—அவர்கள் மரிக்க வேண்டும்!
யெகோவாவின் ஆதிநோக்கம் முறியடிக்கப்படமுடியாதது
16. கடவுள் என்ன செய்ய நோக்கங் கொள்ளவில்லை? ஏன்?
16 மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட இந்த இரண்டு உயிரினங்களும் தமக்கு எதிராக பாவம் செய்துவிட்டபடியால், முழுமொத்தமான பெருந்தீயில் பூமியை, சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்களோடுக் கூட அழிக்கக் கடவுள் இப்பொழுது தீர்மானித்தாரா? அவர் இப்பேர்ப்பட்ட ஒரு காரியத்தைச் செய்திருந்தால் ஒரு நாக்காஷ் ஆரம்பித்துவைத்த ஒன்றின் காரணமாக அவருடைய மகிமைப் பொருந்திய நோக்கத்தில் அவர் முறியடிக்கப்பட்டுவிட்டார் என்பதை இது அர்த்தப்படுத்தாதா? வெறும் ஒரு சர்ப்பத்தால் கடவுளுடைய நோக்கமனைத்தையும் தகர்த்துவிட முடியுமா? அவர் ஆதாமிடமும் ஏவாளிடமும் அவர்களுடைய விவாக நாளில், அவர்களை ஆசீர்வதித்து அவர்கள் சம்பந்தமாக தம்முடைய நோக்கம் என்ன என்பதை சொன்னபோது, தம்முடைய நோக்கத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்: பரிபூரண மனித இனத்தால் முழு பூமியையும் நிரப்புவதும், ஏதேன் தோட்டத்தின் பரிபூரண நிலைக்குப் பூமி முழுவதையும் கீழ்ப்படுத்துவதும், பூமியிலும் அதன் தண்ணீர்களிலுமுள்ள தாழ்வான எல்லா உயிரினங்களையும் எல்லா மனிதவர்க்கமும் சமாதானத்தோடு ஆண்டு கொள்வதுமாகும். நிறைவேற்றப்பட்ட கடவுளுடைய நோக்கத்தின் பிரகாசமான ஒரு காட்சியாக இது இருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளினூடே ஆறு சிருஷ்டிப்பு நாட்களின் மூலமாக இதற்காகவே அவர் ஆயத்தங்களைச் செய்திருக்கிறார்! போற்றத்தகுந்த இந்த நோக்கமானது வெறுமென ஒரு சர்ப்பத்தினாலும் முதல் மனித தம்பதியின் முறைகேட்டினாலும் இப்பொழுது செயலுருவில் காணப்பெறாமல் விடப்படுமா? நிச்சயமாக இல்லை!—ஏசாயா 46:9–11 ஒப்பிடவும்.
17. ஏழாவது நாளின் சம்பந்தமாக, கடவுள் என்ன செய்ய தீர்மானித்திருந்தார்? இந்த நாள் எவ்விதமாக முடிவடையும்?
17 அது இன்னும் ஓய்வுநாளாக, யெகோவா தேனின் ஏழாவது நாளாக இருந்தது. அந்த நாளை ஆசீர்வதிக்க அவர் தீர்மானம் பண்ணி அதைப் பரிசுத்தமாக்கியிருந்தார். அதைச் சபிக்கப்பட்ட நாளாகச் செய்ய அவர் எதையும் அனுமதிக்கமாட்டார். அவருடைய அந்த ஓய்வுநாளில் நிகழும்படியாக திட்டமிடப்படும் எந்தச் சாபத்தையும் அவர் தோல்வியடையச் செய்து, அதை ஆசீர்வாதமாக மாற்றி அந்த நாள் ஆசீர்வதிக்கப்பட்டதாக முடிவடையச் செய்வார். அது முழு பூமியையும் பரிசுத்தமான இடமாக விட்டுச் செல்லும். கடவுளுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படும். இது பரிபூரண மனித இனத்தால் செய்யப்படும்.—மத்தேயு 6:10-ஐ ஒப்பிடவும்.
18, 19. (எ) பாவிகளான முதல் மனித தம்பதியின் துன்பப்படுகின்ற சந்ததியார் ஏன் மகிழ்ச்சிக் கொள்ளலாம்? (பி) இனி வரவிருக்கும் காவற்கோபுரம் பத்திரிகையின் பத்திகள் எதைக் குறித்துச் சிந்திக்கும்?
18 கடவுள் ஏமாற்றமடையவில்லை. அவர் தம்முடைய நோக்கத்தை கைவிடவில்லை. எல்லா உரிய நன்மதிப்பும் தமக்கே உண்டாக, நோக்கங்கொள்கிறவரும் தாம் நோக்கங் கொண்டதை முழுமையாக நிறைவேற்றுகிறவருமான தம்மை முழுமையாக நம்பத்தகுந்தவர் என்பதாக மெய்ப்பித்துக் காட்ட அவர் தீர்மானித்தார். (ஏசாயா 45:18) பாவிகளான முதல் மனித தம்பதியின் அபூரணமான துன்பப்படுகிற சந்ததியார், மகிழ்ச்சிக் கொண்டு தங்களுக்கு நித்திய நன்மையுண்டாகும் வகையில் கடவுள் உண்மையுடன் தம்முடைய ஆதிநோக்கத்தை நிறைவேற்றுவதைக் காண எதிர்நோக்கியிருக்கலாம். ஏற்கெனவே, அவருடைய ஓய்வுநாளின் பல ஆயிர வருடங்கள் கடந்துவிட்டன. அவருடைய விசேஷித்த ஆசீர்வாதத்தைக் கொண்டிருக்கப் போகும் அந்த நாளின் கடைசிப் பகுதி அருகாமையில் இருக்க வேண்டும். அவருடைய ஓய்வுநாளின் “சாயங்காலம்” கடந்து போய் கொண்டிருக்கிறது. முந்தைய ஆறு சிருஷ்டிப்பு நாட்களிலிருந்தது போலவே “விடியற்காலம்” வரவேண்டும். இந்த “விடியற்காலம்” அதன் பரிபூரணத்தை அடைந்து, கடவுளுடைய மாற்றமுடியாத நோக்கத்தின் மகத்தான நிறைவேற்றத்தை, பார்த்துக்கொண்டிருக்கும் அனைவரும் முழுமையாகக் காணும்படியாகச் செய்யப்படுகையில், பதிவில் பின்வருமாறு எழுதுவது கூடியகாரியமாக இருக்கும்: ‘சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஏழாம் நாள் ஆயிற்று’. ஆம், வியப்பூட்டும் ஓர் எதிர்பார்ப்பு!
19 இவை அனைத்துமே எண்ணிப்பார்ப்பதற்கு மயிர்க்கூச்செறியச் செய்யும் எதிர்பார்ப்புகளாகும்! இனிவரும் காவற்கோபுரம் பத்திரிகையின் பத்திகளில் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு, கடவுளுடைய கட்டளைகளை நேசிக்கிறவர்களுக்கு, முன்பாக இருக்கும் மனதைக் கவரும் பரதீஸிய எதிர்பார்ப்புகளைக் குறித்து அதிகம் சொல்லப்படும். (w89 8/1)
[அடிக்குறிப்புகள்]
a வெளிப்படுத்துதல் 12:9-ல் பிசாசாகிய சாத்தான் “பழைய பாம்பு” என்பதாக அடையாளங் காட்டப்படுகிறான்; யோவான் 8:44-ல் இயேசு கிறிஸ்து அவனை “பொய்க்குப் பிதா” என்று குறிப்பிட்டு பேசுகிறார்.
நீங்கள் என்ன சொல்வீர்கள்?
◻ முதல் மனித தம்பதி தங்களுடைய பரதீஸிய வீட்டை ஏன் இழந்துபோனார்கள்?
◻ சர்ப்பத்தினால் ஏவாள் வஞ்சிக்கப்பட்டது ஒரு கட்டுக்கதை அல்ல என்பது நமக்கு எப்படித் தெரியும்?
◻ ஸ்திரீயின் மீது கடவுள் என்ன தீர்ப்பை வழங்கினார்?
◻ ஆதாமின் மீது கடவுள் என்ன தீர்ப்பை வழங்கினார்? இது கடவுளுடைய சட்டத்தை ஏன் உயர்த்தியது?
◻ பரதீஸில் பரிபூரண மனிதர்களால் பூமி நிரப்பப்பட வேண்டும் என்ற தம்முடைய நோக்கத்தின் சம்பந்தமாக கடவுள் ஏன் ஏமாற்றமடையவில்லை?
2. அந்த மனிதனும் மனுஷியும் ஏன் பரதீஸிய தோட்டத்துக்குள் மீண்டும் பிரவேசிக்க முற்படுவதில்லை?