வரவிருக்கும் ஆயிரம் வருடங்களுக்காக இப்பொழுது ஒழுங்கமைத்தல்
1. இப்போது முதற்கொண்டு ஆயிரம் வருடங்களுக்கு மேலாக பூமியின் மீது நிலைமை என்னவாக இருக்கும்?
என்ன! மனிதவர்க்கம் இப்போதிலிருந்து இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்தப் பூமியில் இன்னும் இருக்கும் என்பதை நாம் அர்த்தப்படுத்துகிறோமா? சரியாக அதைத்தானே நாம் அர்த்தப்படுத்துகிறோம்! இன்னும் அதிகமாக, அப்பொழுது எல்லா மனிதவர்க்கத்தினரும், இந்தக் கிரகத்தின் மீது மனிதன் வாழ ஆரம்பித்த சமயத்தில் முதல் மனிதனும் மனுஷியும் இருந்தது போல உடலிலும் இருதயத்திலும் மனதிலும் பரிபூரணராக இருப்பர். ஆம் இப்போதிலிருந்து ஆயிரம் வருடங்களில், மனிதர்கள் தங்களுடைய கடவுளும், தங்களைப் புதுப்பிக்கிறவருமானவரின் சாயலிலும் ரூபத்திலும் இருப்பர். (ஆதியாகமம் 1:26–30) அவர்கள் ஜனநெருக்கடியில்லாதிருக்கும் சுத்திகரிக்கப்பட்ட பூமியின் மீது இன்பமான, பரதீஸான “ஏதேன் தோட்டத்தில்” முழுமையாக வாழ்க்கையை அனுபவித்துக்களித்து கொண்டிருப்பர். (ஆதியாகமம் 2:15) இவை அனைத்துமே பூமியினிடமாகவும் அதன் மேல் குடியிருக்கப்போகிறவர்களிடமாகவும் சிருஷ்டிகர் கொண்டிருந்த ஆதிநோக்கத்தின் நிறைவேற்றமாக இருக்கும். இந்த அழகிய சாதனை எல்லா எதிர்ப்பின் மத்தியிலும் எல்லா மனிதவர்க்கத்தையும் ஆசீர்வதிக்கப் போவதாக அவர் கொடுத்திருக்கும் அன்புள்ள வாக்குறுதிக்கு உண்மையுள்ளவராக அவரை நிரூபிக்கும்.
2. எவ்விதமாக சுமார் 19 நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த ஆட்கள், பரிபூரணமாக்கப்பட்ட மனிதவர்க்கத்தினர் எப்படியிருப்பர் என்பதைக் கண்டார்கள்?
2 ஆசீர்வாதமான அந்தச் சாதனை 19 நூற்றாண்டுகளுக்கும் முன்பாக, பரிபூரண மனிதனாக பூமியின் மீது 33 1/2 ஆண்டுகள் செலவழித்த அவருடைய மகிமைப்படுத்தப்பட்ட குமாரனின் ஆயிரம் வருட ஆட்சியை நிறைவு செய்வதாக இருக்கும். அந்தச் சமயத்தில் அவர் அளித்த தோற்றத்தின் தன்மையைக் குறித்து நாம் வாசிப்பதாவது: “அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” (யோவான் 1:14) ஆகவே இயேசு கிறிஸ்துவில் அப்போதிருந்த இஸ்ரவேல் ஜனங்கள், ஒரு பரிபூரண மனித சிருஷ்யைக் கண்டார்கள். (லூக்கா 3:23, 38) ஆம், 19 நூற்றாண்டுகளுக்கு முன்பாக சில ஆட்கள் வரவிருக்கும் பூமிக்குரிய பரதீஸில் பரிபூரணமாக்கப்பட்ட மனிதவர்க்கத்தினர் எப்படி இருப்பர் என்பதைக் கண்டார்கள்.
3, 4. (எ) இயேசு கிறிஸ்துவாலும் 1,44,000 பேராலும் ஆளப்படும் யெகோவாவின் ஆட்சி எவ்வளவு நீண்ட காலமாயிருக்கும்? (பி) அந்தக் காலப்பகுதிக்குப் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர் என்ன? உவர்ட்ச் டவர் பிரசுரங்கள் சிலவற்றின் தலைப்புகளில் இது எவ்விதமாகப் பிரதிபலிக்கப்பட்டது?
3 இயேசு கிறிஸ்துவாலும் மகிமைப்படுத்தப்பட்ட அவருடைய 1,44,000 சீஷர்களாலும், ஆளப்படும் யெகோவாவின் ராஜ்ய ஆட்சிக் காலம், ஆயிரம் வருடங்களாக இருக்கும் என்பதாக முன்னறிவிக்கப்பட்டது. அந்த ஆயிரவருட ஆட்சியின் சம்பந்தமாக வயதான யோவான் அப்போஸ்தலன் எழுதியதாவது: “நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதன் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். (மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.) இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.”—வெளிப்படுத்துதல் 20:4–6.
4 ஆயிரமாண்டுகள், ஓர் ஆயிர வருடக் காலப்பகுதியாக இருப்பதன் காரணமாக, அந்தக் காலப்பகுதி கிறிஸ்துவின் ஆயிரம் வருட ஆட்சிக்காலம் என்றழைக்கப்படுகிறது. இந்தப் பைபிள் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு அதைக் கற்பிக்கிறவர்கள், “ஆயிரம்” என்பதற்குரிய கிரேக்க வார்த்தையின்படி, இயேசு நாதரின் நல்லாயிரஆண்டு ஆட்சியில் நம்பிக்கையுடையவர் அல்லது திரு ஆயிரக்கோட்பாட்டாளர் என்பதாக சிலசமயங்களில் அழைக்கப்படுகின்றனர். வேதாகமத்தில் படிப்புகள் (Studies in the Scriptures) புத்தகம் (ஒரு சமயம் உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்டது) ஆரம்பத்தில் ஆயிர வருட ஆட்சி தொடக்கம் (Millennial Dawn) என்றழைக்கப்பட்டது அக்கறையூட்டுவதாயிருக்கிறது. மேலும் ஒரு சமயம் பைபிள் மாணாக்கரால் பயன்படுத்தப்பட்ட பாட்டு புத்தகத்தின் தலைப்பு ஆயிரம் வருட ஆட்சி தொடக்கத்தின் கீர்த்தனை (Hymns of the Millennial Dawn) என்பதாக இருந்தது.
5. கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் போது சாத்தான் மற்றும் பேய்களின் நிலைமை என்னவாக இருக்கும்?
5 வெளிப்படுத்துதல் 20:4-லுள்ள “ஆயிரம் வருஷம்” அடையாள அர்த்தமுள்ளதாயிராமல் ஆயிரம் சூரிய ஆண்டுகளைக் குறிப்பிடுகிறது. அந்த ஆயிரம் வருடங்களின் போது, பிசாசாகிய சாத்தானும் அவனுடைய பேய் கூட்டமும், அபிஸில் இருப்பார்கள். ஏனென்றால் கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியைப் பற்றி சொல்வதற்கு முன்பாக அப்போஸ்தலனாகிய யோவான் சொன்னதாவது: “ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைந்து, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.”—வெளிப்படுத்துதல் 20:1–3.
6. (எ) கிறிஸ்துவின் ஆயிரம் வருட ஆட்சியின் முடிவுக்கு சில ரோமன் கத்தோலிக்கர் என்ன தேதியைக் கொடுத்திருக்கிறார்கள்? (பி) கத்தோலிக்கரின் உரிமைப்பாராட்டல் உண்மையாக இருந்திருந்தால் சாத்தான் “குழி”யிலிருந்து விடுவிக்கப்படும் அந்தக் “கொஞ்சக் காலம்” ஏற்கெனவே எவ்வளவு காலமாக நீடித்திருக்கிறது?
6 சில ரோமன் கத்தோலிக்கர்கள் இயேசு கிறிஸ்துவின் ஆயிரம் வருட ஆட்சி, ஃபிரெஞ்சு சேனைகள், ரோமைக் கைப்பற்றி அதன் ஆட்சியாளரான போப்பை பதவியிறக்கம் செய்தபோது, முடிவடைந்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அவர் ஃபிரான்சுக்கு கைதியாக நாடுகடத்தப்பட்ட இடத்தில் போய் இறந்து போனார். பின்னர் சாத்தானும் அவனுடைய பேய்களும் “கொஞ்சக்காலத்துக்கு” தங்கள் ஏமாற்றும் வேலையை மீண்டும் தொடங்குவதற்காக “குழி” அல்லது “அபிஸி”லிருந்து விடுவிக்கப்பட்டார்கள் என்பதாகக் கத்தோலிக்க குருமார் சொல்லியிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 20:1–3, கத்தோலிக்க டூவே மொழிபெயர்ப்பு) அது உண்மையாக இருந்திருக்குமானால் அந்தக் “கொஞ்சக்காலம்” அருகாமையில் முடிவுக்கு வராமல், 191 ஆண்டுகளாக ஏற்கெனவே தொடர்ந்திருப்பதை அர்த்தப்படுத்துவதாக இருக்கும்.
7. இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் காலத்தையும் இயல்பையும் குறித்து பைபிள் தெரிவிப்பது என்ன?
7 ஆனால் வேதவசனங்களின் பிரகாரம், இயேசு கிறிஸ்துவின் மெய்யான ஆயிர வருட ஆட்சி இன்னும் எதிர்காலத்துக்குரியதாக இருக்கிறது. பைபிள் தீர்க்கதரிசனத்தின் நவீன நாளைய நிறைவேற்றம், அது மிக அருகாமையில், சமீபத்திலிருப்பதாக காண்பிக்கிறது. மெய்யான ஆயிர வருட ஆட்சியின் போது, சாத்தானும் அவனுடைய பேய்களும் உண்மையில் அபிஸிற்குள் தள்ளப்படுவர், இயேசு கிறிஸ்துவும் அவருடைய உடன் சுதந்திரவாளிகளான 1,44,000 பேரும் பிசாசின் அமைப்பிலிருந்து எந்தவித குறுக்கீடுமின்றி எல்லா மனிதவர்க்கத்தின் மீதும் ஆட்சி செலுத்துவர். யெகோவா அவருடைய “சிநேகிதனாகிய” ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கையின் நிறைவேற்றமாக, மீட்டுக்கொள்ளப்பட்ட எல்லா மனிதவர்க்கத்தின் நித்திய ஆசீர்வாதம், “திரள் கூட்டத்தாரோடு” ஆரம்பமாகும். இவர்கள் இந்தப் பொல்லாத ஒழுங்கு முறையை முடிவுக்குக் கொண்டுவரும் ஈடிணையற்ற “உபத்திரவத்தை” தப்பிப்பிழைத்தவர்களாக இருப்பர். இது “ஆட்டுக்குட்டியானவருடைய (இயேசு கிறிஸ்து) இரத்தத்திலே” மீட்டுக் கொள்ளப்பட்ட இலட்சக்கணக்கான மரித்த ஆட்களுக்கு விரிவாக்கப்படும். (யாக்கோபு 2:21–23; வெளிப்படுத்துதல் 7:1–17; ஆதியாகமம் 12:3; 22:15–18; மத்தேயு 24:21, 22) இந்த நோக்கத்துக்காக, இவர்கள் ஞாபகார்த்தக் கல்லறைகளில் அவர்களுடைய மரண நித்திரையிலிருந்து பூமியின் மீது ஜீவனுக்கு உயிர்த்தெழுப்பப்படுவர்.—யோவான் 5:28, 29.
ஒரு கிறிஸ்தவ அமைப்பு
8. புது சிருஷ்டி புத்தகம் என்ன அமைப்பை விவரித்தது, ஆனால் என்ன அமைப்பு சம்பந்தப்பட்ட வேலையைக் குறித்து அது குறிப்பிடவில்லை?
8 தெய்வீக நோக்கத்தின் நிறைவேற்றத்தில், ஆசீர்வாதங்கள் வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக புதிய ஓர் அமைப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த அமைப்பைக் குறித்து நாம் வாசிப்பதாவது: “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்.” “கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்.” (2 கொரிந்தியர் 5:17; கலாத்தியர் 6:15) 1904-ல் அந்தப் புது சிருஷ்டி (The New Creation) புத்தகம், பொ.ச. முதல் நூற்றாண்டில் ஏற்பட்ட இந்தப் புதிய அமைப்புக்குக் கவனத்தைத் திருப்பியது. (Studies in the Scriptures, தொடர் 6, படிப்பு 5, தலைப்பு, “புதிய சிருஷ்டியின் அமைப்பு”) 1914-ல் புறஜாதியாரின் காலங்களின் முடிவு எதை அர்த்தப்படுத்தக்கூடும் என்ற அதனுடைய கருத்தின் காரணமாக, மனித சரித்திரத்தின் முதல் உலகப் போரின் முடமாக்கியப் பாதிப்புகளுக்குப் பின்பு நடக்கவிருந்த குறிப்பிடத்தக்க அமைப்பு சம்பந்தப்பட்ட வேலையைக் குறித்து அந்தப் புத்தகம் குறிப்பிடவில்லை. —லூக்கா 21:24.
9. என்ன உடனடித் தேவையை எதிர்ப்பட புது சிருஷ்டியின் மீதியானோர் தயாரானார்கள்?
9 ஆவிக்குரிய புது சிருஷ்டியின் மீதியானோர் 1918-ல் முதல் உலகப்போரின் முடிவு வரையாக பாதுகாக்கப்பட்டதும் யுத்தத்திற்கு பின்னான ஆண்டாகிய 1919-ல் மாம்சத்தில் இன்னும் உயிரோடே வைக்கப்பட்டதும், வியப்பூட்டிய ஓர் எதிர்பாரா நிகழ்ச்சியாக இருந்தது. ஆனால் ஆயிரம் வருட ஆட்சிக் கால நிலைமை இன்னும் நடைமுறையில் இல்லை. அப்படியென்றால், இயேசு கிறிஸ்துவோடு ஆயிரம் வருட வேலையில் பங்கு கொள்ளும் அதன் பரலோக நம்பிக்கையை செயலுருவில் காண்பதற்கு முன்பாக பூமியின் மீது புது சிருஷ்டியின் மீதியானோருக்குச் செய்வதற்கு இன்னும் அதிகமான வேலை இருந்தது தெளிவானது. ஆகவே மீதியானோர் புதிய ஊக்கமளிக்கப்படவும் மீண்டும் ஒழுங்கமைக்கப்படவும் தேவை ஏற்பட்டது. ஆகவே தளராத விசுவாசத்தோடும் முன்னாலிருந்த கிளர்ச்சியூட்டும் வேலையை செய்தற்கு ஆவலோடும் அவர்கள் உடனடித் தேவையை எதிர்ப்பட தயாரானார்கள்.
10. புதிய காரிய ஒழுங்கு முறைக்குள் தப்பிப்பிழைக்க எதிர்பார்க்கப்பட்ட இலட்சக்கணக்கானோரின் சம்பந்தமாக என்ன கேள்விகள் எழுந்தன?
10 மனிதவர்க்கத்தினரில் சிலர், இந்தப் பொல்லாத ஒழுங்கின் முடிவை தப்பிப்பிழைத்து இயேசு கிறிஸ்துவின் ஆயிரம் வருட ஆட்சிக்குள் செல்வது, அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோரால் எதிர்பார்க்கப்பட்டது. விசேஷமாக யுத்த வருடமாகிய 1918-ல் கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் அன்ஜலஸில் “இப்பொழுது உயிரோடிருக்கும் இலட்சக்கணக்கானோர் ஒரு வேளை ஒருபோதும் மரிக்கமாட்டார்கள்” என்ற பொதுப் பேச்சுக்குப் பின்பு இது இவ்வாறாக இருந்தது. அர்மகெதோனை எதிர்காலத்தில் தப்பிப்பிழைக்க இருந்த இந்த இலட்சக்கணக்கானோர் ஒழுங்கமைக்கப்பட வேண்டுமா? (வெளிப்படுத்துதல் 16:14–16) “புதிய பூமி”யின் பாகமாவதற்கு ஆயிர வருட ஆட்சியினுள் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பாக, மீதியானோரோடுகூட ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் அவர்கள் ஈடுபடுவார்களா? (2 பேதுரு 3:13) இந்தக் கேள்விகள் யுத்தத்திற்குப் பின்னால் நடந்த நிகழ்ச்சிகளினால் பதிலளிக்கப்படும்.
11. (எ) மீதியானோரோடு ஒரே மந்தையாக மாற இருந்த வேறே ஆடுகளோடு என்ன செய்யப்படவேண்டும்? (பி) நம்பிக்கைகளிலிருந்த வித்தியாசம் மீதியானோருக்கும் வேறே ஆடுகளுக்குமிடையே பிரிவினைக்கு ஏன் காரணமாயில்லை?
11 நல்ல மேய்ப்பர் இயேசு கிறிஸ்துவின் பின்வரும் வார்த்தைகள் சரியான நேரத்தில் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டன: “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவி கொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.” (யோவான் 10:16) அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் 1919-லிருந்து யுத்தத்துக்குப் பின்னால் செய்யப்பட வேண்டிய வேலைக்காக ஒழுங்கமைக்கப்படுவது அவசியமாயிருந்து, பின்னால் வேறே ஆடுகள் இந்தத் தொழுவத்திலுள்ள மீதியானோரோடு ஒரே மந்தையாக ஆக வேண்டுமானால் அப்போது என்ன? ஏன், வேறே ஆடுகளும்கூட, அந்த மீதியானோரோடுகூட இணையாக, ஒழுங்கமைக்கப்பட வேண்டியதாக இருக்கும்! வேறே ஆடுகள் வித்தியாசமான நம்பிக்கையுடையவர்களாய்—இன்பமான பூமிக்குரிய பரதீஸில் வாழும் நம்பிக்கையுடையவர்களாய்—இருக்கும் உண்மை, அவர்களுக்கும் மீதியானோருக்குமிடையே பிரிவினைக்குக் காரணமாயிருக்கக்கூடாது. அனைவரும் ஒரே மேய்ப்பனையே பின்பற்றி வந்தார்கள், ராஜ்யத்தில் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் மகிமைப்படுத்தப்படும் வரையாக இரு சாராருக்குமிடையே எந்த பிரிவினையும் இருக்காது.
12. (எ) மனிதவர்க்கத்தின் இரட்சிப்பைக் காட்டிலும் அதிக முக்கியத்துவமுள்ளதாயிருப்பது என்ன? (பி) ராஜ்யத்தை விளம்பரப்படுத்துவது எப்போது மற்றும் ஏன் அடிப்படை முக்கியத்துவமுடையதானது?
12 பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதர்களின் இரட்சிப்பு, சாத்தானுடைய உலகின் ஆதிக்கத்தின் முடிவு, பூமி முழுவதிலும் மீண்டும் நிலைநாட்டப்படும் பரதீஸுக்குக் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் கொண்டு செல்லப்படுவது ஆகியவை யெகோவாவின் அன்புள்ள நோக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். என்றபோதிலும், அனைத்துலகிலும் இன்னும் அதிக முக்கியத்துவமுடைய ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன? யெகோவா தேவனுடைய பரிசுத்த நாமம் பரிசுத்தப்படுவதோடுகூட அவருடைய சர்வலோக அரசுரிமை நிலைநாட்டப்படுவதாக அது இருக்கிறது. ஆளுகை செய்து கொண்டிருந்த ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக, யெகோவாவின் ராஜ்யத்தை விளம்பரப்படுத்துவது காலபொருத்தமுடையதாயிருந்த காரியம் 1922-ல் ஒஹையோவிலுள்ள சீடர் பாய்ன்டில் நடைபெற்ற சர்வ தேசீய பைபிள் மாணாக்கரின் இரண்டாவது மாநாட்டின்போது வலியுறுத்திப்பட்டது. 1914-ல் புறஜாதியாரின் காலங்கள் முடிவுக்கு வந்திருந்ததன் காரணமாக, இயேசுவின் தீர்க்கதரிசன வார்த்தைகளை நிறைவேற்றுவதற்கு அது சரியான காலமாக இருந்தது: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) யெகோவாவின் அனைத்துலக அரசுரிமையை நிலைநாட்டி அவருடைய பரிசுத்த நாமத்தை பரிசுத்தப்படுத்தும் ராஜ்யம் 1914-ல் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டாயிற்று, இயேசு கிறிஸ்து அவருடைய சத்துருக்களின் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துவதற்கு கிடைக்கக்கூடிய எல்லா வழிவகைகளையும் கொண்டு பிரசங்கிக்க வேண்டியிருந்த மகத்தான நற்செய்தி இதுவே!
13. ராஜ்ய அறிவிப்பு வேலைக்காகக் கடவுள் என்ன ஏற்பாடு செய்தார்? ஏன்?
13 யெகோவா சர்வலோக அளவில் ஒழுங்கமைப்பாளராக இருக்கிறார். ஏனென்றால் அவர் மகா உயர்ந்தவர், உன்னதமானவர். இந்த ஒழுங்குமுறை முடிவுக்கு வருவதற்கு முன்பாக, இங்கே, பூமியில் தம்முடைய ராஜ்யத்தைப் பற்றிய அறிவிப்பு வேலை அனைத்து நாடுகளிலும் முழுமையாக ஒழுங்கமைக்கப்படுவதை இப்பொழுது பார்த்துக்கொண்டார். ஆகவே அபிஷேகம் பண்ணப்பட்டவர்களில் உயிரோடிருந்த மீதியான உறுப்பினர்கள், அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு சர்வதேசீய அமைப்புக்குள் இணைக்கப்பட்டனர். சாத்தான் யெகோவாவின் சர்வலோக அரசுரிமையை எதிர்த்து சவால் விட்டிருப்பதன் காரணமாக, அந்த அரசுரிமையின் உண்மைநிலையும் உரிமையும் எல்லாக் காலத்துக்குமாக நிலைநாட்டப்பட வேண்டும், நியாயநிரூபணஞ் செய்யப்பட வேண்டும் என்பதை உலகுக்கு அவர்கள் அறிவிக்க வேண்டும்.
ஆயிரம் வருட ஆட்சிக்கு முன்னான அமைப்பு
14. (எ) நம்முடைய பொது சகாப்தத்துக்கு முன்பு என்ன அமைப்பு, யெகோவாவின் சர்வலோக அமைப்பின் பூமிக்குரிய பாகமானது? (பி) தாவீது எவ்விதமாக குறிப்பிடத்தக்க அமைப்பாளனாக நிரூபித்தான்?
14 நம்முடைய பொது சகாப்தத்துக்கு முன்பு 15 நூற்றாண்டுகளாக யெகோவா தேவன் பூமியின் மீது காணக்கூடிய ஓர் அமைப்பைக் கொண்டிருந்தார். பைபிள் சரித்திரத்தின் முதல் உலக வல்லரசாக இருந்த எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனத்தை மீட்டுக்கொண்ட பின்னர் அதனை ஒழுங்குபடுத்தி அமைப்பதற்காக அவர் தீர்க்கதரிசியாகிய மோசேயைத் தம்முடைய மத்தியஸ்தராக பயன்படுத்தினார். மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் இஸ்ரவேல், யெகோவாவின் சர்வலோக அமைப்பின் காணக்கூடிய பாகமாக ஆனது. கடவுளுடைய அந்தத் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்தின் மத்தியில் குறிப்பிடத்தக்க அமைப்பாளராக இருந்தது மேய்ப்பனும் அரசனுமாயிருந்த தாவீதாகும். அவனைப் பற்றி நாம் வாசிப்பதாவது: “தாவீது அவர்களை [யெகோவாவின் பரிசுத்த ஸ்தலத்தில் சேவித்த லேவியர்களை] கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.” “எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும் பரிசுத்த ஸ்தலத்துக்கும் தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும் . . . சீட்டுப்போட்டு அவர்களை [ஆசாரியர்களை] வகுத்தார்கள்.”—1 நாளாகமம் 23:3, 6; 24:1, 5, தி நியு இங்கிலீஷ் பைபிள்.
15. (எ) இஸ்ரவேலர் என்ன விதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தார்கள்? (பி) வேறு எவரும் எகிப்தைவிட்டு வர தெரிந்து கொண்டார்கள்? அவர்கள் இஸ்ரவேலரோடுகூட நிலைத்திருந்தார்களா?
15 தாவீதினுடைய காலத்துக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக, இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வந்தபோது, அவர்கள் மூர்க்கத்தனமாகத் தாறுமாறாக தலைதெறிக்க வெளியே ஓடிவரவில்லை, ஆனால் ஒழுங்கான முறையில் புறப்பட்டு வந்தார்கள். இது அவர்களுடைய மத்தியஸ்தனாகிய மோசேயின் பங்கில் நல்ல ஒழுங்கமைப்பு வேலையைச் சுட்டிக் காண்பித்தது. இஸ்ரவேல் அல்லாத திரள்கூட்டத்தார் அவர்களோடுகூட புறப்பட்டு வந்து, எல்லா எகிப்திய கடவுட்களைக் காட்டிலும் வல்லமை வாய்ந்தவராக இருந்த அற்புதங்களைச் செய்கிற கடவுளாகிய யெகோவாவின் மக்களோடு எதிர்கால நிலையைப் பகிர்ந்துகொள்வதை தெரிந்துகொண்டார்கள். அநேக துன்பங்களின் மத்தியிலும் சில காலத்துக்குப் பின்னர், இந்தப் “பல ஜாதியான அந்நிய ஜனங்கள்” யெகோவாவின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்தினுடைய ஆதரவைக் கொண்டிருந்ததன் காரணமாக பிரமிக்க வைத்த சீனாய் வனாந்தரத்தில் இன்னும் அவர்களோடேக்கூட இருந்தார்கள். (யாத்திராகமம்12:37–51; எண்ணாகமம் 11:4) இஸ்ரவேலரோடுகூட “பல ஜாதியான அந்நிய ஜனங்கள்” மோசேயின் வாரிசான யோசுவாவின் தலைமையின் கீழ் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசித்தார்கள், ஏனென்றால் இப்படிப்பட்டப் பரதேசிகளுக்கு ஏற்பாடுகள் அங்கே செய்யப்பட வேண்டும் என அவர் கட்டளையிட்டிருந்தார்.
16. (எ) பல ஜாதியான அந்நிய ஜனங்கள் யாருக்குப் படமாக இருந்தார்கள்? (பி) இந்த ஒழுங்கின் முடிவைத் தப்பிப்பிழைப்பதற்கு இவர்கள் என்ன செய்ய வேண்டும்?
16 பார்வோனிய எதிப்திலிருந்து வந்த அந்தப் பல ஜாதியான அந்நிய ஜனங்கள் 20-ம் நூற்றாண்டின் திரள்கூட்டத்துக்குப் படமாக இருந்தார்கள். அவர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலாக இல்லாமல், நல்ல மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவின் வேறே ஆடுகளாக இருக்கிறார்கள். அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரோடுகூட அவர்கள் பெரிய பார்வோனாகிய பிசாசாகிய சாத்தானைக் கடவுளாகக் கொண்ட மாதிரிப் படிவ எகிப்தாகிய இந்தக் காரிய ஒழுங்குமுறையிலிருந்து முழுமையாக விடுதலைப்பெறுவதை எதிர்நோக்கியிருக்கிறார்கள். (யோவான் 10:16; 2 கொரிந்தியர் 4:4; வெளிப்படுத்துதல் 7:9) ஆனால் சாத்தானின் பழைய உலகின் பயங்கர அழிவைத் தப்பிப்பிழைத்து பெரிய யோசுவாவாகிய இயேசு கிறிஸ்துவின் கீழ் வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகிற்குள் பிரவேசிக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும்? (2 பேதுரு 3:13) அவர்கள் யெகோவாவின் காணக்கூடிய அமைப்பின் மையக்கருவான அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோருடைய அமைப்பு சம்பந்தப்பட்ட ஏற்பாட்டோடு ஒத்துழைக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
17. சீர்குலைந்துவரும் இந்த உலகில், திரள் கூட்டத்தாரிலுள்ளவர்கள் எவ்விதமாகச் செயல்படுகிறார்கள்? அவர்கள் எதை எதிர்நோக்கியிருக்கிறார்கள்?
17 விசேஷமாக 20-ம் நூற்றாண்டின் நான்காவது பத்தாண்டின் இடைப்பகுதி முதற்கொண்டுதானே வேறே ஆடுகளின் திரள்கூட்டத்தார் மகிமைப்படுத்தப்பட்ட ஒரே மேய்ப்பனாகிய ஆளுகைச் செய்யும் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரே மந்தைக்குள் கொண்டுவரப்படுகிறார்கள். ஐக்கிய நாடுகள் அமைப்பு இருந்தபோதிலும், அதிகமதிகமாக, தொடர்ந்து சீர்குலைந்துவரும் ஓர் உலகில், இந்தத் திரள் கூட்டத்தாரிலுள்ளவர்கள், அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரை முழு இருதயத்தோடு ஆதரித்து இவ்விதமாக யெகோவாவின் பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியப்படுத்தும் வல்லமைக்கு அத்தாட்சியைக் கொடுக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது பூமியின் மீது விசேஷித்த சேவையை ஆவலாய் எதிர்நோக்கியவர்களாய், தீர்மானமாக, மீதியானோரோடுகூட அவர்கள் தொடர்ந்து ஒழுங்கமைக்கப்பட்டவர்களாயிருக்கிறார்கள். (W89 9/1)
“இவர்கள் . . . அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.”—வெளிப்படுத்துதல் 20:6.
◻இயேசு கிறிஸ்துவின் ஆயிரம் வருட ஆட்சியின் காலத்தையும் இயல்பையும் குறித்து வேதாகமம் என்ன சுட்டிக் காண்பிக்கிறது?
◻மனிதவர்க்கத்தின் இரட்சிப்பைக் காட்டிலும் எது மிக அதிக முக்கியத்துவமுள்ளதாக இருக்கிறது?
◻நம்முடைய பொது சகாப்தத்துக்கு முன்பு, எந்த அமைப்பு யெகோவாவின் சர்வலோக அமைப்பின் பூமிக்குரிய பாகமாக ஆனது?
◻பல ஜாதியான அந்நிய ஜனங்களால் முன்படமாக குறிக்கப்பட்டவர்கள் எவ்விதமாக ஆயிரம் வருட ஆட்சிக்குள் தப்பிப்பிழைக்கிறார்கள்?