ஆயிரம் வருட ஆட்சிக்குள் தப்பிப்பிழைப்பதற்காக ஒழுங்கமைக்கப்பட்டவர்களாய் நிலைத்திருத்தல்
“அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.”—யோவான் 10:16.
1. என்றுமாக ஜீவித்திருக்கிற கடவுளுக்கு, ஓர் ஆயிரமாண்டுகள் எவ்விதமாக இருக்கிறது?
யெகோவா மனிதவர்க்கத்துக்குக் காலத்தின் சிருஷ்டிகராக இருக்கிறார். நித்தியத்திலிருந்து நித்தியத்துவம் வரையாகவும் இருக்கும் சாவாமையுள்ள கடவுளாகிய அவருக்கு, ஓர் ஆயிரம் ஆண்டுகள், வேகமாகக் கடந்து செல்லும் ஒரு பகல் பொழுதாக அல்லது வெறுமென நமது இராக்காவல் போல இருக்கிறது.—சங்கீதம் 90:4; 2 பேதுரு 3:8.
2. எல்லா மனிதவர்க்கத்தையும் ஆசீர்வதிப்பதற்கு யெகோவா என்ன காலப்பகுதியை ஒதுக்கிவைத்திருக்கிறார்?
2 கடவுள் ஓர் ஆயிரமாண்டுகளைக் கொண்ட அடையாள அர்த்தமுள்ள ஒரு நாளைக் குறித்திருக்கிறார். அந்த நாளில் அவர் பூமியிலுள்ள எல்லாக் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பார். (ஆதியாகமம் 12:3; 22:17, 18; அப்போஸ்தலர்17:31) இதில் இப்பொழுது மரித்துவிட்டிருப்பவர்களும், இன்னும் உயிரோடிருக்கிறவர்களும் அடங்குவர். கடவுள் இதை எவ்விதமாகச் செய்வார்? ஏன், அவருடைய அடையாள அர்த்தமுள்ள ஸ்திரீயினுடைய “வித்தாகிய” இயேசு கிறிஸ்துவினால் ஆளப்படும் அவருடைய ராஜ்யத்தின் மூலமாக இதைச் செய்வார்!—ஆதியாகமம் 3:15.
3. (எ) கடவுளுடைய ஸ்திரீயின் வித்தினுடைய குதிங்கால் எவ்விதமாக நசுக்கப்பட்டது? ஆனால் அது எவ்விதமாக குணமாக்கப்பட்டது? (பி) இயேசு கிறிஸ்துவின் ஆயிரம் வருட ஆட்சியின் முடிவில், அடையாள அர்த்தமுள்ள சர்ப்பத்துக்கு அவர் என்ன செய்வார்?
3 கடவுளுடைய ஸ்திரீயினுடைய (அல்லது பரலோக அமைப்பு) வித்தின் அடையாள அர்த்தமுள்ள குதிங்கால் நம்முடைய பொது சகாப்தம் 33-ம் ஆண்டில் இயேசு கிறிஸ்து ஓர் இரத்த சாட்சியின் மரணத்தை அடைந்து மூன்று நாட்களின் பகுதிகளில் மரித்தவராக இருந்தபோது நசுக்கப்பட்டது. ஆனால் மூன்றாவது நாளில் உயிரைக் கொடுப்பவராகிய சர்வவல்லமையுள்ள கடவுள், ஆவிமண்டலத்தில் சாவாமையுள்ள வாழ்க்கைக்குத் தம்முடைய உத்தமக் குமாரனை உயிர்த்தெழுப்புவதன் மூலம் அந்தக் காயத்தைக் குணமாக்கினார். (1 பேதுரு 3:18) இயேசு இனி ஒருபோதும் மரிக்க மாட்டாராதலால், மனிதவர்க்கத்தின் மீது ஆயிரமாண்டுகளுக்கு ராஜாவாக ஆட்சி செய்யவும், ஆயிர வருட ஆட்சியின் முடிவுக்குப்பின் அடையாள அர்த்தமுள்ள சர்ப்பத்தின் தலையை “நசுக்கி” முழுவதுமாக அவனை இல்லாதபடி அழித்துப் போடவும்கூடிய நிலையில் இருக்கிறார். உண்மையுள்ள மீட்டுக்கொள்ளப்பட்ட மனிதவர்க்கத்துக்கு அது என்னே ஓர் ஆசீர்வாதமாக இருக்கும்!
4. என்ன விதமான திட்டத்தைக் கடவுள் அவருடைய ஜனங்களோடு நிறைவேற்றிவருகிறார்?
4 1914-ல் புறஜாதியாரின் காலங்கள் முடிவடைந்தது முதற்கொண்டு, இந்தக் “காரிய ஒழுங்கின் முடிவின்” சமயத்தில், யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் பூமி முழுவதிலும் ஒழுங்கமைக்கப்படுதல் வெகுவாக முன்னேறி வந்திருக்கிறது. (மத்தேயு 24:3; லூக்கா 21:24, கிங் ஜேம்ஸ் வெர்ஷன்) ஆயிர வருட ஆட்சிக்கு முன்னேற்பாடாக செய்யப்படும் இந்த ஒழுங்கமைப்பு சம்பந்தப்பட்ட திட்டம், பெரிய அமைப்பாளராகிய யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாகவும் அவருடைய வழிநடத்துதலின் கீழும் செய்யப்பட்டுவருகிறது. அவருடைய மணவாட்டிப் போன்ற பரலோக அமைப்பாகிய அவருடைய ஸ்திரீயின் மூலமாக, 1914-ல் இயேசு கிறிஸ்துவால் ஆளுகைச் செய்யப்படும் வாக்குப் பண்ணப்பட்ட அவருடைய ராஜ்யத்தின் பிறப்பு நிகழ்ந்தது. இது பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தால் உண்மைஉறுதி செய்யப்படுகிறது.
5. எதனுடைய பிறப்பு வெளிப்படுத்துதல் 12:5-ல் முன்னுரைக்கப்பட்டது? காவற்கோபுரம் பத்திரிகையில் இது எப்போது முதலில் விளக்கப்பட்டது?
5 இவ்விதமாகவே வெளிப்படுத்துதல் 12:5-லுள்ள பின்வரும் இந்த வார்த்தைகள் மகத்துவமான முறையில் நிறைவேற்றமடைந்திருக்கின்றன: “சகல ஜாதிகளையும் இருப்புக் கோலால் ஆளுகை செய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது.” கடவுளுடைய ஸ்திரீயின் புதிதாகப் பிறந்த குழந்தையால் படமாகக் காண்பிக்கப்படும் கிறிஸ்துவின் மூலமாக ஆளப்படும் யெகோவாவின் ராஜ்யத்தின் பிறப்பு, முதலில் 1925, மார்ச் 1 ஆங்கில காவற்கோபுரம் பத்திரிகையில் விளக்கப்பட்டது. 1914-ல் பரலோகத்தில் இந்த மேசியானிய ராஜ்யத்தின் பிறப்பு, 1919-ல் பூமியில் சீயோனின் ‘பிள்ளைகளுடைய’ “ஜாதி” அல்லது “தேசம்” (NW) பிறப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது.—ஏசாயா 66:7, 8.
6 யெகோவா அனைத்துலகின் மீதும் தம்முடைய நியாயமான அரசுரிமையை நிலைநாட்டுவதற்குக் கருவியாகப் பயன்படுத்தும் யெகோவாவின் ராஜ்யத்தின் பிறப்பு—ஆம், அது பூமி முழுவதிலும் விளம்பரம் செய்யப்படுவதற்கு தகுதியுள்ள ஒன்றாயிருந்தது! அவருடைய காணக்கூடாத “பிரசன்னத்தின்” அத்தாட்சியோடு சம்பந்தப்பட்ட இயேசுவின் வார்த்தைகளை நிறைவேற்றுவதற்குரிய காலமாக அது இருந்தது: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:3, 14) ஐக்கியப்பட்ட, சர்வதேசீய முழு பூமி அளவிலான ஒத்திசைவான பிரசங்கிப்பு வேலை யெகோவாவின் சர்வலோக அமைப்பின் காணக்கூடிய பகுதியை ஒழுங்கமைப்பதை நிச்சயமாகவே கேட்பதாயிருக்கும். அப்போதைய தலைவரான J.F. ரதர்ஃபோர்டினால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டி இதற்கு ஆதரவாயிருந்தது. ஆகவே, யுத்தத்துக்குப் பிற்பட்ட ஆண்டாகிய 1919-லிருந்து, உன்னத அமைப்பாளராகிய யெகோவா தேவனின் வழிநடத்துதலுக்காகவும் ஆசீர்வாதத்துக்காகவும் ஜெபத்தோடு, மீட்கப்பட்ட ஒரு ஜாதியாக சங்கத்தின் உண்மையுள்ள ஆதரவாளர்கள் ஒழுங்கமைக்கப்படுதல் உறுதியாக முன்னோக்கிச் சென்றது. இரண்டாம் உலகப் போரின் சூழலில் பாசிஸ கொள்கையினரின் கடுமையான எதிர்ப்பு, ஹிட்லரின் நாசி இயக்கம், கத்தோலிக்க நடவடிக்கை ஆகியவற்றின் மத்தியிலும் யெகோவாவின் சாட்சிகள் பூமி முழுவதிலும் சத்துரு உலகுக்கு ஓர் ஐக்கிய முன்னணியாகக் காட்சியளித்தார்கள்.
7. (எ) ஒருவரோடொருவர் என்ன உறவில் நிலைத்திருப்பதன் மூலமாக மாத்திரமே யெகோவாவின் ஜனங்கள் மகா உபத்திரவத்தைத் தப்பிப்பிழைக்க எதிர்பார்க்க முடியும்? (பி) ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்தவர்கள், எவ்விதமாக உலகளாவிய ஜலப்பிரளயத்தைக் கடந்து வந்தார்கள்? அவர்கள் யாருக்கு முன்னடையாளமாக இருந்தனர்?
7 அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரும் திரள் கூட்டத்தாருமாகிய யெகோவாவின் சாட்சிகள் மாத்திரமே உன்னத அமைப்பாளரின் பாதுகாப்பின் கீழ் ஐக்கியப்பட்ட ஓர் அமைப்பாக, பிசாசாகிய சாத்தானால் ஆதிக்கம் செலுத்தப்பட்டுவருகின்ற, அழிவுக்காக வைக்கப்பட்ட வரவிருக்கும் இந்த ஒழுங்கின் முடிவை தப்பிப்பிழைப்பதற்கு வேத ஆதாரமுள்ள நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9–17; 2 கொரிந்தியர் 4:4) இயேசு கிறிஸ்து குறிப்பிட்ட விதமாக எல்லா மனித சரித்திரத்திலும் மிக மோசமானதாக இருக்கும் உபத்திரவத்தை தப்பிப்பிழைக்கும் அந்த “மாம்சமாக” அவர்கள் இருப்பார்கள். நோவாவின் நாட்களிலிருந்தது போலவே அவர் வெளிப்படும் நாளிலும் இருக்கும் என்பதாக இயேசு சொன்னார். முடிப்பதற்கு பல வருடங்களாக ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியை எடுத்துக் கொண்ட பேழையினுள்ளே உலகளாவிய ஜலப்பிரளயத்தை எட்டு மனித ஆத்துமாக்கள் மாத்திரமே தப்பிப்பிழைத்தனர். அவர்கள் ஐக்கியப்பட்ட குடும்பத் தொகுதியாக தப்பிப்பிழைத்தனர். (மத்தேயு 24:22, 37–39; லூக்கா 17:26–30) நோவாவின் மனைவி கிறிஸ்துவின் மணவாட்டிக்கும், அவனுடைய குமாரர்களும் மருமக்கள்மாரும், அதிகரித்து வரும் திரள் கூட்டமாகப் பெருகிவிட்டிருக்கும் இயேசுவின் இந்நாளைய “வேறே ஆடு”களுக்கும் இணையாக இருக்கிறார்கள். இந்தத் திரள்கூட்டத்தாரின் முடிவான அளவை இப்பொழுது நாம் அறியாதவர்களாக இருக்கிறோம். (யோவான் 10:16) பெரிய நோவாவாகிய இயேசு கிறிஸ்துவின் கீழ், ஆயிரம் வருட ஆட்சிக்குள் தப்பிப் பிழைக்க, அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோராகிய “தெரிந்துகொள்ளப்பட்ட”வர்களோடு ஒழுங்கமைக்கப்பட்டவர்களாய் நிலைத்திருக்க வேண்டும். இந்தத் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் நிமித்தமாகவே “மகா உபத்திரவத்தின்” நாட்கள் குறைக்கப்படும்.—மத்தேயு 24:21, 22.
ஆயிரம் வருட ஆட்சிக்குள் தப்பிப்பிழைத்தல்
8. தம்முடைய பிரசன்னத்தைப் பற்றிய அவருடைய தீர்க்கதரிசனத்தை முடிக்கையில், இயேசு என்ன உவமையைக் கொடுத்தார்? அதைப் புரிந்துகொள்வதன் சம்பந்தமாக 1935, ஜுன் 1 எவ்விதமாக முக்கியத்துவமுடையதாக இருந்தது?
8 மத்தேயு சுவிசேஷத்தின்படி, இயேசு தம்முடைய பிரசன்னதின் அடையாளத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை ஓர் உவமையோடு முடித்தார். செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமை என்பதாக பொதுவாகக் குறிப்பிடப்படும் இவ்வுவமை, 1914-ல் புறஜாதியாருடைய காலங்களின் முடிவில் ஆரம்பமான இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவின் சமயமாகிய இப்பொழுது பொருந்துகிறது. (மத்தேயு 25:31–46) இந்த உவமையின் செம்மறியாடுகள் திரள்கூட்டத்தினரின் உறுப்பினர்களாக இருப்பதை புரிந்துகொள்வதன் சம்பந்தமாக 1935, ஜூன் 1, சனிக்கிழமை முக்கியத்துவமுடையதாக இருந்தது. அந்த நாளில், வாஷிங்டன் டி.சி.-யில் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு மாநாட்டின்போது, 840 பேர், இயேசு கிறிஸ்துவின் மூலமாக யெகோவா தேவனுக்குத் தாங்கள் செய்திருந்த ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக முழுக்காட்டப்பட்டார்கள். இவர்களில் பெரும்பாலானோர், J.F. ரதர்ஃபோர்ட் வெளிப்படுத்துதல் 7:9–17-ன் பேரில் கொடுத்தப் பேச்சுக்கு உடனடியாகப் பிரதிபலித்து இந்த நடவடிக்கை எடுத்தனர். நல்ல மேய்ப்பனுடைய வேறே ஆடுகளின் திரள் கூட்டத்தின் பாகமாக வேண்டும் என்பது அவர்களுடைய ஆசையாக இருந்தது. வரவிருக்கும் மகா உபத்திரவத்தைத் தப்பிப் பிழைத்து, இந்த ஒழுங்குமுறையின் முடிவு வரையாகவும், பின்னர் மேய்ப்ப ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சிக்குள்ளும் வாழும் வாய்ப்பை பெறுவது அவர்களுடைய ஆசையாக இருந்தது. கடைசியாக அவர்கள் பரதீஸிய பூமியின் மீது நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வர்.—மத்தேயு 25:46; லூக்கா 23:43.
9. செம்மறியாடுகள் “[அவர்களுக்காக] ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச்” சுதந்தரித்துக் கொள்ளும்படியாக ஏன் அழைக்கப்படுகின்றனர்? அவர்கள் எவ்விதமாக ராஜாவின் சகோதரர்களுக்கு நன்மை செய்வதற்கு மிகச் சிறந்த நிலையிலிருக்கின்றனர்?
9 இந்தச் செம்மறியாடுகளைப் போன்றவர்கள், “உலகம் உண்டானது முதல் [அவர்களுக்காக] ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்”ளும்படியாக ஏன் அழைக்கப்படுகிறார்கள்? அவர்கள் அவருடைய “சகோதரர்களுக்கு” நன்மையான காரியங்களைச் செய்ததால், அது தமக்கே செய்யப்பட்டவை என்பதாக ராஜா அவர்களுக்குச் சொல்கிறார். “சகோதரர்கள்” என்ற சொற்றொடரினால், இந்தக் காரிய ஒழுங்கின் முடிவில் இன்னும் பூமியிலிருக்கும் தம்முடைய ஆவிக்குரிய சகோதரர்களில் மீதியானோரை ராஜா அர்த்தப்படுத்துகிறார். மேய்ப்பரும் ராஜாவுமாகிய இயேசு கிறிஸ்துவின் இந்தச் சகோதரர்களோடு ஒரே மந்தையாகிவிட்டதன் காரணமாக அவர்கள் இப்படிப்பட்டவர்களின் மீதியானோரோடு இயன்ற அளவு மிக நெருங்கியக் கூட்டுறவை வைத்துக்கொண்டு இவ்விதமாக அவர்களுக்கு நன்மைச் செய்ய மிகச் சிறந்த நிலையிலிருப்பர். முடிவு வருவதற்கு முன்பாக, இயேசுவின் சகோதரர்கள் பூமி முழுவதிலுமாக ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தைப் பிரசங்கிப்பதற்காக அவர்கள் பொருள் சம்பந்தமாகவும்கூட உதவி செய்வர். இதன் சார்பாக, ஒரே மேய்ப்பனின் ஒரே மந்தையாக, செம்மறியாடுகள் மீதியானோரோடு தொடர்ந்து ஒழுங்கமைக்கப்பட்டவர்களாயிருக்கும் தங்களுடைய சிலாக்கியத்தை உயர்வாக மதிப்பர்.
10. செம்மறியாடுகளுக்கு “உலகம் உண்டானது முதல் [அவர்களுக்காக] ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்வது” எதை அர்த்தப்படுத்துகிறது?
10 “[அவர்களுக்காக] ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச்” சுதந்தரித்துக் கொள்வது, இந்தச் செம்மறியாடுகள் ஆயிரமாண்டுகள் பரலோகத்தில் இயேசு கிறிஸ்துவோடும் அவருடைய சகோதரர்களோடும்கூட ஆட்சி செய்வார்கள் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக ஆயிரமாண்டு ஆட்சியின் ஆரம்பத்திலிருந்தே செம்மறியாடுகள் ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியைச் சுதந்தரித்துக் கொள்வர். அவர்கள் ஆதாம் ஏவாளின் சந்ததியாக இருப்பதன் காரணமாக, கிறிஸ்துவின் மூலமாக ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யம், தன் ஆட்சின் கீழ் கொண்டுவரப்போகும் இந்தப் பூமிக்குரியப் பகுதி, மீட்டுக்கொள்ளப்படத்தக்க மனிதவர்க்கத்துக்காக “உலகம் உண்டானது முதல்” ஆயத்தம் பண்ணப்பட்டதாயிருக்கிறது. மேலுமாக, செம்மறியாடுகள் ராஜாவின் பூமிக்குரிய பிள்ளைகளாக ஆக, அவர் அவர்களுக்கு “நித்திய பிதா”வாகிறார். இவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் பூமிக்குரிய ஒரு பகுதியைச் சுதந்தரித்துக் கொள்கிறார்கள்.—ஏசாயா 9:6, 7.
11. செம்மறியாடுகள் ராஜ்யத்தின் சார்பாக தாங்கள் நிற்பதை எவ்விதமாக காண்பிக்கிறார்கள்? இதன் காரணமாக, என்ன ஆசீர்வாதம் அவர்களுடையதாயிருக்கிறது?
11 அடையாள அர்த்தமுள்ள வெள்ளாடுகளுக்கு நேர் எதிர்மாறாக, செம்மறியாடுகள் ராஜ்யத்தின் சார்பாக தாங்கள் நிற்பதை சந்தேகத்திற்கிடமின்றி காண்பிக்கிறார்கள். எவ்விதமாக? வெறுமென வார்த்தைகளால் அல்ல, ஆனால் செயல்களின் மூலமாக. ராஜா காணப்படக்கூடாதவராக பரலோகங்களில் இருப்பதன் காரணமாக அவர்கள் அவருடைய ராஜ்யத்துக்கு ஆதரவாக அவருக்கு நேரடியாக நன்மை செய்யமுடியாதவர்களாக இருக்கின்றனர். ஆகவே அவர்கள் இன்னும் பூமியின் மீது உயிரோடிருக்கும் அவருடைய ஆவிக்குரிய சகோதரர்களுக்கு நன்மை செய்கிறார்கள். இப்படிப்பட்ட நன்மைகளைச் செய்வதற்காக, வெள்ளாடுகளின் பகைமைக்கும் எதிர்ப்புக்கும் துன்புறுத்தலுக்கும் இவர்கள் உள்ளானாலும், ராஜா செம்மறியாடுகளை, ‘பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்பதாக அழைக்கிறார்.
12. தப்பிப்பிழைக்கும் செம்மறியாடுகள், யாரை மீண்டும் வரவேற்கும் சிலாக்கியத்தைப் பெறுவர்? மீதியானோரின் உறுப்பினர்கள் என்ன கருத்துக்களை மனதில் கொண்டிருந்திருக்கிறார்கள்?
12 ராஜாவின் ஆவிக்குரிய சகோதரர்களுக்கு நன்மை செய்யும் செம்மறியாடுகளைப் போன்ற திரள்கூட்டத்தார் ஆயிர வருட ஆட்சிக்குள் தப்பிப்பிழைக்கும் சந்தோஷமான சிலாக்கியத்தினால் ஆசீர்வதிக்கப்படுவர். காலப்போக்கில், ஞாபகார்த்த கல்லறைகளிலுள்ள மரித்த மனிதர்களை வரவேற்பதில் பங்கு கொள்வர். (யோவான் 5:28, 29; 11:23–25) இவர்களில் உண்மையுள்ள முற்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் அடங்குவர். இவர்கள் யெகோவாவின் அரசுரிமை நிலைநாட்டப்படும்படிக்கும் ஒருவேளை முற்பகுதியில் “மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்”படிக்கும் அதிகமாக துன்பமனுபவித்தும் சகித்துமிருக்கின்றனர். (எபிரெயர் 11:35) எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் காணப்படும் பகுதியளவிலான பட்டியலில் குறிப்பிடப்படும் இப்படிப்பட்ட உயிர்த்தெழுப்பப்பட்ட உண்மையுள்ள ஆண்களிலும் பெண்களிலும் யோவான் ஸ்நானகன் இடம் பெறுவான். (மத்தேயு 11:11) பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தேவுக்கு முன் மரித்த இப்படிப்பட்ட உண்மையுள்ளவர்கள் உயிர்த்தெழுப்பப்படுகையில் அவர்களை வரவேற்பதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரில் சிலர் தப்பிப்பிழைத்து, தொடர்ந்து உயிரோடிருப்பர் என்பதாக நினைத்தார்கள். அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் இந்தச் சிலாக்கியத்தைப் பெறுவார்களா?
13. பூமியின் மீது உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களை வரவேற்கவும் அவர்களை கவனித்துக் கொள்ளவும் மீதியானோர் உடனிருப்பது ஏன் அவசியமாயிராது?
13 இது அவசியமாயிராது. உபத்திரவத்தைத் தப்பிப்பிழைக்கும் திரள்கூட்டத்தார் நிலைமையை சமாளிப்பதற்கும், உயிர்த்தெழுப்பப்பட்டவர்களுக்குப் “புதிய வான”ங்களின் கீழ் “புதிய பூமி”யை அறிமுகஞ் செய்வதற்கும் போதிய எண்ணிக்கையில் ஆயத்தமாயிருப்பர். (2 பேதுரு 3:13) இப்பொழுதேயும்கூட, திரள்கூட்டத்தார் இதற்காக ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறார்கள். இன்று, பூமியின் மீது இயேசுவின் ஆவிக்குரிய சகோதரர்கள் 9000-க்கும் குறைவாக இருக்க, பொது உயிர்த்தெழுதலுக்காக படிப்படியாகச் செய்யப்படும் எல்லா முன்னேற்பாடுகளையும் கவனித்துக் கொள்ள இவர்கள் எப்படியும் மிகச்சிலராகவே இருப்பர். (எசேக்கியேல் 39:8–16) அப்படியென்றால் இங்குதானே, எண்ணிக்கையில் இலட்சக்கணக்கில் செல்லும் திரள்கூட்டத்தார் மிகச் சிறப்பாகச் செயல்படுவர். இப்பேர்ப்பட்ட ஒரு சிலாக்கியம் சந்தேகமின்றி இவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
14. (எ) திரள் கூட்டத்தாரில் பலர் எதற்காக பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார்கள்? அவர்களில் அநேகர் ஏன் இப்பொழுது உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும்? (பி) வெகு சீக்கிரத்தில் என்ன சம்பவங்கள் நடைபெற வேண்டும்? வேறே ஆடுகளுக்கு என்ன வேலை காத்துக்கொண்டிருக்கிறது?
14 திரள்கூட்டத்தாரில் அநேகர் ஏற்கெனவே சபை சம்பந்தமான பொறுப்புகளிலும் பூமி முழுவதிலும் கடவுளுடைய அமைப்பு நடத்திவரும் கட்டிட திட்டங்களின் மூலமாகவும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார்கள். திரள்கூட்டத்தாரில் கூடுதலான ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ள மனிதர்கள் இப்பொழுது யெகோவா பூமியின் மீது பயன்படுத்தி வரும் அமைப்பில் அதிகமான பொறுப்புகளைக் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டு வருவதைப் பார்ப்பது உற்சாகமளிப்பதாக இருக்கிறது. அபிஷேகம் பண்ணப்பட்டவர்களில் மீதியானோருக்கு வயதாகிக் கொண்டே வருகிறது. இவர்கள் முன்னிலும் குறைவாகவே பளுவைச் சுமக்க முடிகிறவர்களாக இருக்கின்றனர். ராஜாவின் இந்தச் சகோதரர்கள், வேறே ஆடுகளைச் சேர்ந்த ஆவிக்குரிய தகுதிப்பெற்ற மூப்பர்களும் உதவி ஊழியர்களும் அமைப்பு சம்பந்தமாகக் கொடுக்கமுடிகிற அன்புள்ள உதவியை வரவேற்கிறார்கள். வெகு சீக்கிரத்தில், மகா பாபிலோன் பூமிக்குரிய காட்சியிலிருந்து அகற்றப்படும். அப்பொழுது வெளிப்படுத்துதல் 19:1–8 குறிப்பிடுகிறபடியே அவருடைய மணவாட்டியாகிய முழு 1,44,000 பேரோடும்கூட ஆட்டுக்குட்டியானவரின் விவாகம் பரலோகங்களில் நிறைவு பெறும். புதிய வானங்களின் கீழ் புதிய பூமியாக சேவிக்கும் வேறே ஆடுகள் யெகோவாவுக்குத் துதியுண்டாக, பூமி முழுவதும் குடியிருக்கப்பட்ட பரதீஸாக மாற்றப்படும் வரையாக மகத்தான முன்னிலை மீட்புப் பணியை நிறைவேற்றுவதில் ராஜாவை பிரதிநிதித்துவம் செய்வர்.—ஏசாயா 65:17; ஏசாயா 61:4–6 ஒப்பிடவும்.
15. ஆயிரம் வருட ஆட்சிக்கு திரள் கூட்டத்தார் என்ன எதிர்பார்ப்புகளை முன்னோக்கி இருக்கிறார்கள்?
15 கிறிஸ்துவின் ஆயிரம் வருட ஆட்சியின் போது, மனிதவர்க்கத்தில் மீட்டுக்கொள்ளப்பட்ட மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுகையில் தப்பிப்பிழைக்கும் திரள்கூட்டத்தார் மிகப் பெரியதும் அதிக கனமுள்ளதுமான சிலாக்கியங்களை அனுபவித்துக்களிப்பர். அவர்கள் அப்பொழுது ராஜாவின் குமாரர்களும் குமாரத்திகளுமாவர். அவர்களில் இப்படிப்பட்ட குமாரர்கள், தாவீது ராஜாவின் குமாரர்கள் பல்வேறு பொறுப்புகளையுடையவர்களாயிருந்த பிரபுக்களாக இருந்தது போலவே, பிரபுக்களின் பதவியிலிருப்பது கூடிய காரியமாக இருக்கும்.a இது யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட ராஜாவைக் குறித்து இயற்றப்பட்ட 45-வது சங்கீதத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது.
16. சங்கீதம் 45 உண்மையில் யாருக்கு முகவரியிட்டு எழுதப்பட்டுள்ளது? இதை எவ்வாறு நிரூபிக்கமுடியும்?
16 சங்கீதம் 45 உண்மையில் எந்த ராஜாவுக்கு முகவரியிட்டு எழுதப்பட்டிருக்கிறது? ஏன், இயேசு கிறிஸ்துவுக்கு! சங்கீதம் 45:7-ஐ மேற்கோள் காண்பிக்கையில் எபிரெயர் 1:9 இவ்விதமாகப் பொருத்துகிறது. அது வாசிப்பதாவது: “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்.” ஆகவே உண்மையில் மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவினிடமாகத்தானே சங்கீதம் 45:16 சொல்வதாவது: “உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.”
17. என்ன காரியத்திலும் யாரிலும் ராஜாவாகிய இயேசு கிறிஸ்து விசேஷமாக அக்கறையுள்ளவராக இருக்கிறார்?
17 பொருத்தமாகவே, இயேசு கடந்துவிட்ட தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையைக் காட்டிலும் ஆளுகைச் செய்யும் ராஜாவாக தம்முடைய எதிர்காலத்தில் அதிக அக்கறையுள்ளவராக இருக்கிறார். நிச்சயமாகவே அவர் அந்தக் கடந்த காலத்தை, விசேஷமாக ஆபிரகாமிய வித்தின் மூலமாக எல்லாக் குடும்பங்களையும் ஆசீர்வதிக்கப் போவதாக யெகோவா செய்திருந்த வாக்குத்தத்தத்தில் உட்பட்டிருக்கும் தம்முடைய மனித மூதாதையர்களை அவர் மறப்பதில்லை. ஆனால் இப்பொழுது அவருடைய முக்கிய அக்கறை, ராஜாவை உருவாக்கினவரான யெகோவா தேவனின் நோக்கப்படி அருகிலுள்ள எதிர்காலத்தில் இருக்கிறது. ஆகவே இயேசுவின் பூமிக்குரிய பிள்ளைகள், குறிப்பாக அவர்களிலுள்ள குமாரர்கள், அவருக்குக் கீழ் பிரபுக்களின் ஸ்தானங்களில் சேவிக்க தகுதிப் பெற்றவர்கள் அக்கறைக்குரிய இடத்தைப் பெறுவர்—அவருடைய பூமிக்குரிய முற்பிதாக்களைக் காட்டிலும் அதிகமாக.
18. தம்முடைய பூமிக்குரிய முற்பிதாக்களைக் காட்டிலும் பிரபுக்களான குமாரர்களில் இயேசுவின் அதிகமான அக்கறையை சங்கீதம் 45:16-ன் ஒரு சில மொழிபெயர்ப்புகள் எவ்விதமாக அழுத்திக் காண்பிக்கின்றன?
18 முற்பிதாக்களைக் காட்டிலும் பிரபுக்களான குமாரரில் இயேசுவின் அதிகமான அக்கறை பல்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சில, சங்கீதம் 45:16-ஐ இவ்விதமாக மொழிபெயர்க்கின்றன: “உமது குமாரர்கள் உமது பிதாக்களின் ஸ்தானத்துக்கு அடியெடுத்து வைத்து, தேசமெங்கும் பிரபுக்களாக உயர்வடைவார்கள்.” (மொஃபட்) “உமது பிதாக்களின் இடத்தை உமது குமாரர்கள் கொண்டிருப்பார்கள்; நீர் அவர்களை தேசமெங்கும் பிரபுக்களாக்குவீர்.” (வசனம் 17, தி நியு அமெரிக்கன் பைபிள்) “உமது பிதாக்களுக்கு பதிலாக உமக்கு பிள்ளைகள் பிறக்கின்றன; பூமியெங்கும் நீர் அவர்களை பிரபுக்களாக்குவீர்.”—சாமுவேல் பாக்ஸ்டர் மற்றும் குமாரர்களால் பிரசுரிக்கப்பட்ட தி செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு.
19. இப்பொழுது திரள்கூட்டத்தாரில் ஒரு சில மனிதர்கள் என்ன சபை உத்தரவாதங்களையுடையவர்களாக இருக்கின்றனர்? ராஜாவாகிய இயேசு கிறிஸ்து அவருடைய ஆயிர வருட ஆட்சியின்போது என்ன ஸ்தானத்துக்கு அவர்களை நியமனம் செய்யக்கூடும்?
19 எதிர்கால பிரபுக்கள் மெய்யாகவே நம் மத்தியிலிருப்பது பெரும் மகிழ்ச்சியை நமக்குத் தருகிறது. அவர்கள் நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவின் சத்தத்துக்குச் செவி கொடுக்கும் வேறே ஆடுகளின் மத்தியில் காணப்படுகிறார்கள். விசேஷமாக 1935-ல் வாஷிங்டன் டி.சி.-யில் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் வெளிப்படுத்துதல் 7:9–17-க்கு விளக்கம் தரப்பட்ட சமயம் முதற்கொண்டு அவர்கள் அதற்கு செவிகொடுத்து வருகிறார்கள். இன்று, உலகம் முழுவதிலும் 212 தேசங்களில் 57,670-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் இந்தத் திரள்கூட்டத்தாரின் வேறே ஆடுகளில் ஆயிரக்கணக்கானோர் மூப்பர்களாக அல்லது கண்காணிகளாகச் சேவித்து வருகிறார்கள். இன்னும் பூமியில் இருந்துவரும் இயேசுவின் ஆவிக்குரிய சகோதரர்களில் மீதியானோரோடுகூட ஒழுங்கமைக்கப்பட்டவர்களாய் நிலைத்திருப்பதன் மூலம், இந்த மனிதர்கள், வாக்குப் பண்ணப்பட்ட புதிய பூமியின் மீது அவருடைய ஆயிர வருட ஆட்சியின்போது ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவின் பூமிக்குரிய குமாரர்களாக முழுமையாக சுவிகாரம் செய்யப்படுவதற்கு தகுதியுள்ளவர்களாக நிற்பர். (2 பேதுரு 3:13) இப்படியாக, அவர்கள் புதிய பூமியில் பிரபுக்களாக சேவிக்க நியமிக்கப்படக்கூடும்.
20. (எ) பூமியின் மீது நியமிக்கப்படுகிறவர்களிடமாக ராஜா என்ன மனநிலையைக் கொண்டிருப்பார்? (பி) திரள்கூட்டத்தார் யாரை வரவேற்பர்? திரும்பவருகிறவர்களுக்கு முன்பாக என்ன வாய்ப்பு இருக்கிறது?
20 ராஜாவாகிய இயேசு கிறிஸ்து இப்பொழுது இன்றைய நாளைய யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளிலுள்ள உண்மையுள்ள வேறே ஆடுகளின் கண்காணிப்பு தகுதியை ஒப்புக்கொள்வது போலவே புதிதாக நியமனம் செய்யப்படும் இந்தப் பிரபுக்களின் தகுதியை ஒப்புக்கொள்ளவும் மகிழ்ச்சியடைவார். வேறே ஆடுகளின் திரள்கூட்டத்தின் அனைத்து உறுப்பினர்களும்—பெண்களும் ஆண்களும்—இயேசுவின் சத்தத்தைக் கேட்டு உலகளாவிய பரதீஸாக மாற்றப்பட இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட பூமியின் மீது மனித பரிபூரணத்தில் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்காக எழுந்துவரும் மரித்தவர்களை வரவேற்கும் கிளர்ச்சியூட்டும் சிலாக்கியத்தைக் கொண்டிருப்பர். (யோவான் 5:28, 29) மிக உயர்வான சலுகைப் பெற்ற இந்த உயிர்த்தெழுப்பப்பட்டவர்களில், இயேசு கிறிஸ்துவின் மீட்கப்பட்ட முன்னோர்கள் அடங்குவர். “மேன்மையான உயிர்த்தெழுதலை” பெறும் நம்பிக்கையில், யெகோவா தேவனுக்கு மரணம் வரையாக தங்கள் பக்தியை நிரூபிக்க மனமுள்ளவர்களாயிருந்த உண்மையுள்ள மனிதர்களாக இவர்கள் இருந்தார்கள். (எபிரெயர் 11:35) ஆனால் தங்களுடைய மீட்பரும் ராஜாவுமாகிய இயேசு கிறிஸ்துவின் ஆயிரம் வருட ஆட்சியின்போது, மனித பரிபூரண வாழ்க்கைக்கு உயர்த்தப்படுவது வெறுமென ஓர் ஆரம்பமாக மாத்திரமே இருக்கிறது. ஆயிர வருட ஆட்சியின் முடிவில் மீட்கப்பட்ட மனிதவர்க்கத்தின் மீது கொண்டுவரப்படும் கடைசி சோதனையின்போது யெகோவா தேவனின் கீழ் முறிக்கமுடியாதபடி ஒழுங்கமைக்கப்பட்டவர்களாய் நிலைத்திருப்பதன் மூலம் அவர்கள் யெகோவாவின் சர்வலோக அமைப்பின் பூமிக்குரிய பகுதியாக பரதீஸில் முடிவில்லாத வாழ்க்கைக்குத் தங்களைப் பாத்திரராக நிரூபிக்கிறவர்களாக இருப்பர்.—மத்தேயு 25:31–46; வெளிப்படுத்துதல் 20:1–21:1. (w89 9/1)
[அடிக்குறிப்புகள்]
a 2 சாமுவேல் 8:18, புதிய உலக மொழிபெயர்ப்பு ஒத்துவாக்கிய பைபிள், அடிகுறிப்பு.
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻ அனைத்து மனிதவர்க்கத்தின் ஆசீர்வாதத்துக்காகவும் யெகோவா எந்தக் காலத்தை ஒதுக்கிவைத்திருக்கிறார்?
◻ ஒருரோடொருவர் என்ன உறவில் நிலைத்திருப்பதன் மூலமாக மாத்திரமே, மகா உபத்திரவத்தை நாம் தப்பிப்பிழைக்கமுடியும்?
◻ ‘உலகம் உண்டானது முதல் அவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்வது’ செம்மறியாடுகளுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
◻ ஆயிரம் வருட ஆட்சியின் போது, திரள்கூட்டத்தார் என்ன சிலாக்கியங்களில் பங்குபெறக்கூடும்?
6. (எ) ராஜ்ய பிறப்பு, இயேசு முன்னறிவித்த எந்த வேலையைச் செய்வதைத் தேவைப்படுத்தியது? (பி) இந்த வேலையைச் செய்வது, யெகோவாவின் மக்களின் பங்கில் எதைக் கேட்பதாயிருந்தது? என்னவிதமான முன்னணியாக அவர்கள் இப்போது காட்சியளிக்கிறார்கள்?