“இயேசு கிறிஸ்து கர்த்தர்”—எவ்வாறு, எப்போது?
“கர்த்தர் என் கர்த்தரை நோக்கி, நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.” இது கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிளின்படி சங்கீதம் 110:1-ன் மொழிபெயர்ப்பாகும். இங்கே “கர்த்தர்” என்பவர் யார், அவர் யாரிடம் பேசுகிறார்?
எபிரெய மூலவாக்கியத்தின் மேலும் திருத்தமான ஒரு மொழிபெயர்ப்பு இந்த முதல் கேள்விக்கு விரைவில் பதிலளிக்கிறது. “யெகோவா என் கர்த்தரிடம் வசனித்துச் சொல்வதாவது: . . . ” இவ்வாறு, “கர்த்தர்” என்று பெரிய எழுத்துக்களில் உள்ளது சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவையே குறிக்கிறது. கிங் ஜேம்ஸ் வர்ஷன் “கர்த்தர்” என்பதற்கு வேறுபட “கர்த்தர்” என்பதைப் பயன்படுத்துவதன் மூலம் கடவுளுடைய பெயரை ஒப்புக்கொள்கிறபோதிலும், இத்தகைய பட்டப்பெயர்களை குழப்பமுண்டாக்குவது முதல் தடவையல்ல. ஏனெனில் எபிரெயுவிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பூர்வ கிரேக்க செப்டுவஜின்ட், அதன் பிற்பட்ட பிரதிகளில் யெகோவா என்பதற்கு “கர்த்தர்” என்பதைப் பயன்படுத்தினது. ஏன்? ஏனெனில் “கர்த்தர்” என்ற பட்டப்பெயர் கடவுளுடைய பெயரான டெட்ரகிராமட்டனை (יהוה) பதிலீடு செய்தது. A. E. கார்வி என்ற நிபுணர் சொல்வதாவது: “கர்த்தர் [kyʹri·os] என்ற இந்தப் பட்டப் பெயர் பயன்படுத்தப்பட்டது யூத ஜெபாலயத்தில் வேதவாக்கியங்கள் வாசிக்கப்பட்டபோது அந்த உடன்படிக்கை பெயராகிய யாவே [யெகோவா] என்பதைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இந்தப் பட்டப்பெயரைப் பயன்படுத்தினதிலிருந்து மிக எளிதாயும் பெரும்பாலும் நிச்சயமாயும் விளக்கப்படுகிறது.”
பைபிள் யெகோவாவை ‘ஈடற்றப் பேரரசராகிய கர்த்தராக’ இருப்பதாய் அடையாளம் காட்டுகிறது. (ஆதியாகமம் 15:2, 8, NW; அப்போஸ்தலர் 4:24, NW; வெளிப்படுத்துதல் 6:10, NW) “உண்மையான கர்த்தர்” என்றும் ‘சர்வ பூமிக்கும் கர்த்தர்’ என்றும் அவர் அழைக்கப்படுகிறார். (யாத்திராகமம் 23:17, NW; யோசுவா 3:13; வெளிப்படுத்துதல் 11:4, NW) அவ்வாறெனில், சங்கீதம் 110:1-ன் அந்த மற்ற “கர்த்தர்” யார், அவர் எவ்வாறு “கர்த்தர்” என யெகோவாவால் ஒப்புக்கொள்ளப்படலானார்?
இயேசு கிறிஸ்து ‘கர்த்தராக’
நான்கு சுவிசேஷங்களிலும் இயேசு “கர்த்தர்” என அழைக்கப்படுகிறார், லூக்காவிலும் யோவானிலும் மிக அடிக்கடி அவ்வாறு அழைக்கப்படுகிறார். பொ.ச. முதல் நூற்றாண்டில், இந்தப் பட்டப்பெயர் மதிப்புக்கும் மரியாதைக்குமுரியதாக, “ஐயா” என்பதற்குச் சமமாக இருந்தது. (யோவான் 12:21; 20:15, கிங்டம் இன்டர்லீனியர் மாற்குவின் சுவிசேஷத்தில், இயேசுவைக் குறிப்பிடுகையில் “போதகர்,” அல்லது ரபூனி என்ற பதமே மிக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. (மாற்கு 10:51, தி.மொ.-ஐ லூக்கா 18:41, NW-உடன் ஒத்துப்பாருங்கள்.) தமஸ்குவுக்குப் போகும் வழியில், “நீர் யார், கர்த்தரே?” என்ற சவுலின் கேள்வியுங்கூட இதே பொதுவான மரியாதைக்குரிய கருத்தடங்கிய கேள்வியாக இருந்தது. (அப்போஸ்தலர் 9:5, NW) ஆனால் இயேசுவைப் பின்பற்றினோர் தங்கள் எஜமானரை யாரென அறிந்துகொண்டபோது “கர்த்தர்” என்ற பட்டப்பெயரை அவர்கள் பயன்படுத்தினது வெறும் மரியாதைக்குரியதாக இருந்ததைப் பார்க்கிலும் மிக அதிகத்தை வெளிப்படுத்தினதெனத் தோன்றுகிறது.
தம்முடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பின்தொடர்ந்து, ஆனால் தாம் பரலோகத்துக்கு ஏறிச்செல்வதற்கு முன்பாக, இயேசு தம்முடைய சீஷர்களுக்குத் தோன்றி பின்வரும் இந்த அதிர்ச்சிதரும் அறிவிப்பைச் செய்தார்: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.” (மத்தேயு 28:18) பின்பு, பெந்தெகொஸ்தே நாளன்று, ஊற்றப்பட்ட பரிசுத்த ஆவியின் ஏவுதலின்கீழ், பேதுரு சங்கீதம் 110:1-ஐக் குறிப்பிட்டு பின்வருமாறு கூறினார்: “ஆகையால், நீங்கள் மரத்தில் அறைந்த இந்த இயேசுவையே, கடவுள் கர்த்தரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் வீட்டாரனைவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள்.” (அப்போஸ்தலர் 2:34-36, NW) வதைப்பதற்குரிய கழுமரத்தின்மீது அவமதிப்பான ஒரு மரணமடையும் நிலைவரையாக அவர் உண்மையுள்ளவராக இருந்ததனால், இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு எல்லாவற்றிலும் உயர்ந்த பரிசளிக்கப்பட்டார். அப்போது அவர் பரலோகங்களில் தம்முடைய கர்த்தாதிபத்தியத்துக்குள் பிரவேசித்தார்.
கடவுள் ‘[கிறிஸ்துவை] எல்லா துரைத்தனத்துக்கும் அதிகாரத்துக்கும் வல்லமைக்கும் கர்த்தத்துவத்துக்கும், இந்த யுகத்தில் மாத்திரமல்ல இனிவரும் யுகத்திலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக அவரை உன்னதங்களில் தமது வலதுபாரிசத்தில் வீற்றிருக்கச் செய்தார்’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினபோது பேதுருவின் வார்த்தைகளை உறுதிப்படுத்தினார். (எபேசியர் 1:20, 21, தி.மொ.) இயேசு கிறிஸ்துவின் கர்த்தத்துவம் மற்ற எல்லா கர்த்தத்துவங்களுக்கும் மேலானது, அது புதிய உலகத்துக்குள் தொடர்ந்திருக்கும். (1 தீமோத்தேயு 6:15) அவர் “எல்லாவற்றிற்கும் மேலாக” உயர்த்தப்பட்டு, “பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று” எல்லாரும் ஒப்புக்கொள்ளும்படி ‘எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்’ அருளப்பட்டார். (பிலிப்பியர் 2:9-11) சங்கீதம் 110:1-ன் முதல் பாகம் இவ்வாறு நிறைவேற்றப்பட்டது, “தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும்” இயேசுவின் கர்த்தத்துவத்துக்குக் கீழ்ப்படுத்தப்பட்டனர்.—1 பேதுரு 3:22; எபிரெயர் 8:1.
எபிரெய வேதவாக்கியங்களில், “கர்த்தாதி கர்த்தர்” என்ற சொற்றொடர் யெகோவாவுக்கு மாத்திரமே பொருந்துகிறது. (உபாகமம் 10:17; சங்கீதம் 136:2, 3) ஆனால் பேதுரு தேவாவியின் ஏவுதலின்கீழ் கிறிஸ்து இயேசுவைக் குறித்து பின்வருமாறு கூறினார்: “இவர் மற்ற எல்லாருக்கும் கர்த்தராக இருக்கிறார் [அல்லது, “நம்மெல்லாருக்கும் கர்த்தர்,” குட்ஸ்பீட்].” (அப்போஸ்தலர் 10:36, NW) அவர் நிச்சயமாகவே “மரித்தோர்மீதும் உயிருள்ளோர்மீதும் கர்த்தர்.” (ரோமர் 14:8, 9, NW) கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவைத் தங்கள் கர்த்தரும் உடைமையாளருமாகத் தடையின்றி ஒப்புக்கொண்டு, விலைமதியா மிக அருமையான அவருடைய இரத்தத்தைக்கொண்டு கிரயத்துக்குக் கொள்ளப்பட்டு அவருடைய ஆட்சிக்கு உட்பட்டவர்களாக அவருக்கு மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிதலைக் காட்டுகிறார்கள். பொ.ச. 33 பெந்தெகொஸ்தே முதற்கொண்டு இயேசு கிறிஸ்து தம்முடைய சபையின்மீது ராஜாதி ராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தராகவும் ஆட்சிசெய்துவந்திருக்கிறார். ஆனால் இப்போது, 1914 முதற்கொண்டு, அவர், அந்தப் பதவியில் தம்முடைய சத்துருக்கள் ‘தம்முடைய பாதங்களுக்கு மணையாக்கப்பட்டு’ ஆள அரசாதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறார். ‘அவர்கள் மத்தியில் கீழ்ப்படுத்திக்கொண்டு செல்ல’ அவருக்கு இப்போதே சரியான காலமாக இருந்தது, எல்லாம் சங்கீதம் 110:1, 2-ன் (NW) நிறைவேற்றமாகவேயாகும்.—எபிரெயர் 2:5-8; வெளிப்படுத்துதல் 17:14; 19:16.
அவ்வாறெனில், “சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று தம்முடைய மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் முன்னால் பேசின இயேசுவின் வார்த்தைகளை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்? (மத்தேயு 11:25-27, NW; லூக்கா 10:21, 22) இது ஏற்கெனவே கலந்தாராய்ந்தவற்றைப் போன்ற அத்தகைய பரந்த ஒரு கூற்றல்ல. மத்தேயு மற்றும் லூக்கா இரண்டிலுமே, இயேசு உலகப்பிரகாரமாக ஞானிகளாயிருப்போருக்கு மறைக்கப்பட்டதாயிருந்ததும் ஆனால் தாம் பிதாவை ‘முழுமையாக அறிந்திருப்பதால்’ தம் மூலமாக வெளிப்படுத்தப்பட்டதுமான அறிவைப்பற்றி பேசிக்கொண்டிருந்தாரென சூழமைவு வெளிப்படுத்துகிறது. அவர் தண்ணீரில் முழுக்காட்டப்பட்டு கடவுளுடைய ஆவிக்குரிய குமாரனாகப் பிறப்பிக்கப்பட்டபோது, இயேசு, தம் மனிதவாழ்க்கைக்கு முன்னால் பரலோகத்தில் வாழ்ந்த வாழ்க்கையையும் அதோடு சென்ற எல்லா அறிவையும் நினைவுபடுத்திக் காண முடிந்தது, ஆனால் இது அவருடைய பிற்பட்ட கர்த்தத்துவத்திலிருந்து வேறுபட்ட ஒன்றாக இருந்தது.—யோவான் 3:34, 35.
கர்த்தராக இயேசு கிறிஸ்துவை வேறுபடுத்திக் கண்டறிவது
“கர்த்தர்” ஆகிய யெகோவா தேவனைத் தெளிவாகக் குறிப்பிடும் எபிரெய வேதவாக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களை மொழிபெயர்க்கையில், கிறிஸ்தவ கிரேக்க வேதவாக்கியங்களின் சில மொழிபெயர்ப்புகள் ஒரு பிரச்னையை அளிக்கின்றன. உதாரணமாக, கிங் ஜேம்ஸ் வர்ஷன் அல்லது தி நியூ ஜெருசலெம் பைபிள் ஆகிய இரண்டிலொன்றில் லூக்கா 4:19-ஐ ஏசாயா 61:2 உடன் ஒத்துப் பாருங்கள். “கர்த்தர்” என்ற பட்டப்பெயரை இயேசு யெகோவாவிடமிருந்து தான் எடுத்துக்கொண்டாரென்றும் மாம்சத்தில் இருந்த இயேசு உண்மையில் யெகோவாவே என்றும் சிலர் சொல்கின்றனர், ஆனால் இது ஒரு விவாதமே, இதற்கு வேதப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை. வேதவாக்கியங்களில், யெகோவா தேவனும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவும் ஒருவரிலிருந்து மற்றவர் எப்போதும் கவனமாய் வேறுபடுத்திக் காட்டப்பட்டிருக்கின்றனர். இயேசு தம்முடைய பிதாவின் பெயரைத் தெரியப்படுத்தி அவரைப் பிரதிநிதித்துவம் செய்தார்.—யோவான் 5:36, 37.
பின்வரும் உதாரணங்களில், எபிரெய வேதவாக்கியங்களிலிருந்து வரும் மேற்கோள்களை, அவை கிரேக்க வேதவாக்கியங்களில் தோன்றுகிறபடி கவனியுங்கள். யெகோவா தேவனும் அவருடைய அபிஷேகம் செய்யப்பட்டவரும் அல்லது மேசியாவும் இருவரும் அப்போஸ்தலர் 4:24-27-ல் குறிப்பிடப்படுகின்றனர், இது சங்கீதம் 2:1, 2-லிருந்து மேற்கோள் எடுத்துக் குறிப்பிடுகிறது. ரோமர் 11:33, 34-ன் சூழமைவு, ஏசாயா 40:13, 14-லிருந்து எடுக்கப்பட்ட மேற்கோளுடன், எல்லா ஞானத்துக்கும் அறிவுக்கும் மூலகாரணராகக் கடவுளையே தெளிவாகக் குறிப்பிடுகிறது. கொரிந்திய சபைக்கு எழுதி, பவுல் இந்த மேற்கோளைத் திரும்பக் கூறுகிறார், “யெகோவாவின் மனதை அறிந்துகொண்டவன் யார்?” பின்பு பின்வருமாறு மேலும் கூட்டுகிறார்: “நாங்களோ கிறிஸ்துவின் மனதை உடையோராக இருக்கிறோம்.” கர்த்தராகிய இயேசு மிகப் பல முக்கியமான காரியங்களில் யெகோவாவின் மனதைத் தம்மைப் பின்பற்றினோருக்கு வெளிப்படுத்தினார்.—1 கொரிந்தியர் 2:16, NW.
எபிரெய வேதவாக்கியங்களிலுள்ள ஒரு வசனம், சிலசமயங்களில், அவர் வல்லமையும் அதிகாரமும் அளிக்கும் கருத்தில் யெகோவாவைக் குறிப்பிடுகிறது, அது இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றமடைகிறது. உதாரணமாக, சங்கீதம் 34:8, தி.மொ., “யெகோவா நல்லவர் என்று ருசித்தறியுங்கள்” என நம்மை அழைக்கிறது. ஆனால் பேதுரு: “கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்” என்று சொல்கையில் இதைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பொருத்திப் பயன்படுத்துகிறார். (1 பேதுரு 2:3, NW) பேதுரு ஒரு நியமத்தை எடுத்து, அது இயேசு கிறிஸ்துவின் காரியத்திலும் எவ்வாறு உண்மையாக உள்ளதென்று காட்டுகிறார். யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும், இருவரையும் பற்றிய அறிவை உள்ளத்தில் ஏற்று அதன்பேரில் செயல்படுவதன் மூலம், கிறிஸ்தவர்கள் பிதாவிடமிருந்தும் அவருடைய குமாரனிடமிருந்தும் நிறைவான ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழக்கூடும். (யோவான் 17:3) பேதுரு பொருத்திப் பயன்படுத்தியிருப்பது ஈடற்ற பேரரசரான கர்த்தராகிய யெகோவாவை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் ஒரே ஆளாக்கிவிடுகிறதில்லை.—1 பேதுரு 2:3, NW-க்குரிய அடிக்குறிப்பைப் பாருங்கள்.
அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு சொல்கையில், யெகோவா தேவனின் மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சம்பந்தப்பட்ட ஸ்தானங்கள் வெகு தெளிவாக்கப்படுகின்றன: “பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.” (1 கொரிந்தியர் 8:6; 12:5, 6) எபேசுவிலிருந்த கிறிஸ்தவ சபைக்கு எழுதி, பவுல் “எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும்” ஆனவரிலிருந்து, இந்த ‘ஒரே கர்த்தர்,’ இயேசு கிறிஸ்துவை முற்றிலும் தனிவேறுபட்டு இருப்பவராக அடையாளம் காட்டினார்.—எபேசியர் 4:5, 6.
யெகோவா எல்லாருக்கும் மேலாக ஈடற்ற உன்னதர்
1914-ம் ஆண்டு முதற்கொண்டு, வெளிப்படுத்துதல் 11:15-ன் பின்வரும் வார்த்தைகள் உண்மையாக நிரூபித்திருக்கின்றன: “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும் [யெகோவா தேவனுக்கும்], அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம்பண்ணுவார்.” தி நியூ இன்டர்நாஷனல் டிக்ஷனரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் தியாலஜி (புத்தகம் 2, பக்கம் 514) பின்வருமாறு கூறுகிறது: “கிறிஸ்து எல்லா அதிகாரங்களையும் அடக்கிவென்ற பின்பு (1 கொ. 15:25), பிதாவாகிய கடவுளுக்குத் தம்மைக் கீழ்ப்படுத்துவார். இவ்வாறு இயேசுவின் கர்த்தத்துவம் அதன் இலக்கை அடைந்திருக்கும், கடவுளே சகலத்திலும் சகலமுமாக இருப்பார். (1 கொ. 15:28)” கிறிஸ்து இயேசு, தம்முடைய ஆயிர ஆண்டு ஆட்சியின் முடிவில், தம்முடைய பிதாவாகிய சர்வவல்லமையுள்ள கடவுளிடம், தமக்கு முன்னளிக்கப்பட்ட வல்லமையையும் அதிகாரத்தையும் திரும்ப ஒப்படைத்துவிடுகிறார். இவ்வாறு, ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனாகிய’ யெகோவாவுக்கே எல்லா மகிமையும் வணக்கமும் நேர்மையாகவே கொடுக்கப்படுகின்றன.—எபேசியர் 1:17.
இயேசு இப்போது கர்த்தாதி கர்த்தராக இருக்கிறபோதிலும், கடவுட்களின் கடவுள் என்று அவர் ஒருபோதும் அழைக்கப்படுகிறதில்லை. யெகோவாவே எல்லாருக்கும் மேலாக ஈடற்ற உன்னதராக நிலைத்திருக்கிறார். இவ்வாறு, யெகோவா “எல்லாருக்கும் எல்லாமுமாக” இருப்பார். (1 கொரிந்தியர் 15:28, NW) இயேசுவின் கர்த்தத்துவம், கிறிஸ்தவ சபையின் தலைவராக அவருக்குரிய சரியான இடத்தை அவருக்கு அளிக்கிறது. இந்த உலகத்தின் உயர் பதவிகளில் வல்லமைவாய்ந்த “கர்த்தர்கள்” பலரை நாம் காணலாமெனினும், கர்த்தாதி கர்த்தராக இருப்பவரிலேயே நாம் நம்முடைய நம்பிக்கையை வைக்கிறோம். எனினும், ‘கடவுளே எல்லார்மீதும் ஆளும்படி’ இயேசு கிறிஸ்து, தம்முடைய உயர்ந்த மேம்பட்ட பதவியில், தம்முடைய பிதாவுக்குக் கீழ்ப்பட்டவராகவே இன்னும் நிலைத்திருக்கிறார். (1 கொரிந்தியர் 15:28, தி டிரான்ஸ்லேட்டர்ஸ் நியூ டெஸ்டமென்ட்) தம்முடைய சீஷர்கள் தம்மைத் தங்களுடைய கர்த்தரென ஏற்கிறபோதிலும், அவர்கள் பின்பற்றுவதற்காக, மனத்தாழ்மைக்குரிய எத்தகைய சிறந்த முன்மாதிரியை இயேசு வைத்திருக்கிறார்!
[பக்கம் 30-ன் பெட்டி]
“புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்கள் கடவுளைப்பற்றி பேசுகையில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் பிதாவுமானவரையே கருதுகின்றனர். இயேசு கிறிஸ்துவைப்பற்றி அவர்கள் பேசுகையில், அவரைக் கடவுளாகப் பேசுகிறதுமில்லை எண்ணுகிறதுமில்லை. இவர் கடவுளுடைய கிறிஸ்து, கடவுளுடைய குமாரன், கடவுளுடைய ஞானம், கடவுளுடைய வார்த்தை. நைஸீன் கோட்பாட்டுக்கு மிக நெருங்க வருகிற, பரி. யோவானுக்கு முகவுரை என்பதுங்கூட, முழுமையாகக் கருத சுவிசேஷத்தில் கூறப்பட்ட கீழ்ப்படும் கோட்பாட்டுக்குப் பொருந்த வாசிக்கப்பட வேண்டும்; மேலும் இந்த முகவுரை, ஆங்கிலத்தில் அது தோன்றுகிறதைப் பார்க்கிலும் கிரேக்கில் சார்படையற்ற [தியாஸ் (the·osʹ)] உடன் குறைந்த முறையில் சந்தேகத்துக்கிடமற்றதாக உள்ளது.”—“இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவம்,” (The Divinity of Jesus Christ) ஜான் மார்ட்டின் க்ரீடு எழுதியது.