கடவுளுடைய பிரமாணங்களை ‘உள்ளத்திற்குள்’ பதியச் செய்தல்
1 இயேசு கிறிஸ்து யெகோவாவின் பிரமாணங்களை ‘உள்ளத்திற்குள்’ கொண்டிருப்பார் என்பதாக தீர்க்கதரிசனமுறைக்கப்பட்டது. (சங். 40:8) அது உண்மையாக நிறைவேறிற்று, தன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு அது அவருக்கு உதவிசெய்தது.
2 அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களும்கூட அதேபோன்று யெகோவாவின் பிரமாணங்களைத் தங்களுடைய ‘மனதிலும் இருதயத்திலும் எழுதப்படும்படி’ செய்தார்கள். (எபி. 8:10) இது அவர்கள் நல்நடத்தையை தொடர்ந்து காத்துவருவதற்கும் அவர்களுடைய ஊழியத்தை முழுமையாய் நிறைவேற்றுவதற்கும் உதவி செய்தது. யெகோவாவின் பிரமாணங்கள் நம்முடைய மனதிலிருக்கிறதென்பதையும் இருதய பலகையில் எழுதப்பட்டிருக்கிறதென்பதையும் நாம் அனைவரும் எப்படி நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்?—நீதி. 3:3.
தனிப்பட்ட படிப்பும் ஆராய்ச்சியும்
3 கடவுளுடைய வார்த்தையை தனிப்பட்ட விதமாய் படிப்பது சத்தியத்தை நமக்குச் சொந்தமானதாக ஆக்கிக்கொள்ள உதவிசெய்யும். படிப்பு ஆராய்ச்சியையும் தியானத்தையும் உட்படுத்துகிறது. அது விவரங்களுக்கு ஜாக்கிரதையுடன் கவனம் செலுத்தக்கூடிய தொடர்ச்சியான நோக்கமுள்ள ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையாகும். சங்கத்தின் பிரசுரங்கள் வரும்போது நாம் அதை வாசிப்பவர்களாக இருப்பது மட்டுமின்றி நம்முடைய வாராந்தர கூட்டங்களுக்காக நம்மை தயார் செய்யக்கூடிய ஒழுங்கான படிப்புத் திட்டத்தை கொண்டிருப்பதற்கு நம்மை நாமே சிட்சித்துக்கொள்ள வேண்டும்.
4 நல்ல படிப்பு பழக்கங்கள் சத்தியம் சம்பந்தப்பட்ட நம்முடைய உறுதிப்பட்டை பலப்படுத்துகிறது மற்றும் நம்முடைய எதிர்கால நம்பிக்கையை பிரகாசிக்கச் செய்கிறது. ஆம், நாம் “இரட்சிப்பினிடமாக வளருகிறோம்.” (1 பேதுரு 2:2) நாம் வேத வசனங்களிலிருந்து அக்கறையூட்டும் காரியங்களைக் கற்றுக்கொள்ளும்போது நாம் அவற்றைக் குறித்து பேச விரும்புகிறோம். இவ்வாறாக, நாம் கற்றுக்கொண்ட காரியங்களைக் குறித்து பேசுவதன் மூலம் நம்முடைய அயலாரிடம் அன்பு காட்ட நாம் தூண்டப்படுகிறோம். “ராஜ்யத்தின் வசனங்களை” வைராக்கியத்துடன் பேசுவதில் நமது பங்கு நல்ல படிப்பு பழக்கத்தின் மூலம் நாம் அடைந்திருக்கும் ஆவிக்குரிய காரியங்களுக்கான போற்றுதலுடன் பிணைந்திருக்கிறது.—மத். 13:19.
படிப்பதற்கான உதவிகள்
5 சத்தியத்தின் மிகச் சிறந்த அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு நமக்கு எது தேவையோ அதை யெகோவாவின் அமைப்பு கொடுத்திருக்கிறது. 1930-1985 இன்டெக்ஸை நீங்கள் நன்கு உபயோகிக்கிறீர்களா? இந்த சிறந்த உபகரணத்தோடும் மேலும் இப்பொழுது கிடைக்கக்கூடியதாக இருக்கும் பல்வேறு பிரசுரங்களோடும் திருத்தமான அறிவின் ஆ என்னே ஒரு பொக்கிஷத்தை நாம் கொண்டிருக்கிறோம்! இதில் நாம் கவனியாமல் விடமுடியாத ஆங்கில புத்தகங்கள் உட்பார்வை மற்றும் வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் ஆகியவை ஆகும். இவற்றை நீங்கள் திறம்பட்ட விதத்தில் உபயோகிக்கிறீர்களா?
6 தனிப்பட்ட படிப்பிலிருந்து மிகுதியானவற்றை பெறுவதானது அதற்காக நாம் எந்தளவுக்குப் பிரயாசப்படுகிறோம் என்பதன் பேரில் சார்ந்திருக்கிறது. உங்களுடைய அனுதின சூழ்நிலைக்கு ஏற்றவாறு எப்பொழுது மற்றும் எங்கே ஒருமுக சிந்தனைக்கும் தியானத்துக்கும் நமக்குத் தேவைப்படக்கூடிய அமைதியும் தனிமையும் கிடைக்கும் என்பதை தீர்மானியுங்கள். படிக்க துவங்கும் முன்பு யெகோவாவின் உதவிக்காக ஜெபம் செய்ய நிச்சயமாயிருங்கள். இந்தக் கடினமான காலங்களில் ஞானமாய் நடப்பதற்கு கடவுளுடைய வார்த்தையின் சத்தியங்களை நமது இருதயத்திலும் மனதிலும் நாம் ஆழமாய் பதித்திருக்க வேண்டும். (நீதி. 7:1-3; யோசு. 1:8) தம்முடைய பிரமாணங்களையும் நினைப்பூட்டுதல்களையும் நமக்குள் பதியச் செய்வதற்கும் யெகோவா தமது ஆவியைப் பயன்படுத்துகிறார். (யோவான் 14:26; 1 கொரி. 2:10) தம்முடைய வார்த்தையின் பொக்கிஷங்களை கண்டடைவதற்கும் புரிந்துகொள்ளுவதற்கும் செய்யப்படும் மனப்பூர்வமான விண்ணப்பங்களை அவர் புறக்கணிக்கமாட்டர்.—நீதி. 2:1-6.
7 கடவுளுடைய பிரமாணங்களை நம்முடைய ‘உள்ளத்திற்குள்’ பெற்றுக்கொள்வதற்காக வேண்டி நம்முடைய படிப்பு திட்டத்தில் நாம் ஒழுங்கையும் உறுதியையும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறாக நாம் மிகுதியான ஆவிக்குரிய தன்மையை வளர்ப்பவர்களாயிருப்போம். சத்தியத்தை இன்னுமதிக சிறப்பாய் விளங்கிக்கொள்வோம். மற்றவர்கள் சத்தியத்தை அறிந்துகொள்ளும்படி உதவி செய்வதில் நம்முடைய திறமைகள் அதிகரிக்கும். நம்முடைய கால்கள் “ஜீவ பாதையில்” மேலுமதிக உறுதியாய் பதிந்திருப்பதை காத்துக்கொள்வோம்.—சங். 16:11; கொலோ. 2:7.