தத்துவஞானம்
சொற்பொருள் விளக்கம்: தத்துவஞானம் என்ற இந்தச் சொற்றொடர் “ஞானத்தை நேசிப்பதைக்” குறிக்கும் கிரேக்க வேர்ச்சொற்களிலிருந்து வருவிக்கப்பட்டது. இங்கே பயன்படுத்தியுள்ளபடி, தத்துவஞானம் கடவுளில் நம்பிக்கை வைப்பதை ஏற்பதன்பேரில் கட்டியமைத்தில்லை, ஆனால் அது ஆட்களுக்கு சர்வலோகத்தைப்பற்றி ஒருங்கிணைந்த நோக்கைக் கொடுக்க முயற்சி செய்கிறது மேலும் அவர்களைக் குறைகாணும் சிந்தனையாளராக்கும்படியும் பிரயாசப்படுகிறது. சத்தியத்துக்காக நாடித்தேடுவதில் கூர்ந்து கவனிப்பதைப் பார்க்கிலும் ஊகித்தாரயும் வழிவகைகளையே முதன்மையாகப் பயன்படுத்துகிறது.
உண்மையான அறிவையும் ஞானத்தையும் நம்மில் எவராவது எவ்வாறு அடையலாம்?
நீதி. 1:7, NW; சங். 111:10: “யெகோவாவுக்குப் பயப்படுவதே அறிவின் . . . [மற்றும்] ஞானத்தின் ஆரம்பம்.” (சர்வலோகம் அறிவுநுட்பம்வாய்ந்த சிருஷ்டிகரின் வேலையாயிராமல் ஏதோ குருட்டு, குளறுபடியான சக்தியால் மாத்திரமே உண்டாயிருந்தால், சர்வலோகத்தைப்பற்றிய ஒருங்கிணைந்த எந்த நோக்கும் கூடியதாயிராது, அல்லவா? அதுதானே குளறுபடியானதாயுள்ள ஒன்றை ஆராய்வதிலிருந்து ஞானம் என்று தகுதிபெறும் எதுவும் பலனாய் வரமுடியாதல்லவா? கடவுளையும் அவருடைய நோக்கத்தையும் கவனத்தில் ஏற்காது விட்டுவிட பிரயாசப்பட்டு, சர்வலோகத்தை அல்லது உயிரைத்தானே விளங்கிக்கொள்ள முயற்சிசெய்வோர், இடைவிடாத ஏமாற்றத்தையே எதிர்ப்படுகின்றனர். தாங்கள் கற்பதை அவர்கள் தவறாகப் பொருள் விளக்குகின்றனர் மேலும் தாங்கள் சிறு அளவுகளாகத் திரட்டின உண்மை விஷயங்களைத் தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். கடவுளில் நம்பிக்கையைக் கவனத்தில் ஏற்காதுவிடுவது திருத்தமான அறிவுக்குரிய இன்றியமையாத உயிர்மூலத்தை அழித்துப்போட்டு உண்மையில் ஒத்திருக்கும் எந்த எண்ணக் கட்டமைப்பையும் முடியாததாக்குகிறது.)
நீதி. 2:4-7, தி.மொ.: “வெள்ளியைப்போல் அதை நாடிப் புதையலைத் தேடுவதுபோல் அதைத் தேடுவாயாகில், யெகோவாவுக்குப் பயப்படுவது இன்னதென்று நீ உணர்வாய், கடவுளை அறியும் அறிவைக் கண்டடைவாய். ஞானம் அளிப்பவர் யெகோவாவே, அறிவும் உணர்வும் அவர் வாயிலிருந்து உதிக்கும். சுகவாழ்வை [நடைமுறை ஞானத்தை, NW] நேர்மையாளருக்காக வைத்திருப்பார்.” (யெகோவா தம்முடைய எழுதப்பட்ட வார்த்தையின்மூலமும் தம்முடைய காணக்கூடிய அமைப்பின்மூலமும் தேவைப்பட்ட உதவியை அளிக்கிறார். ஊக்கமான ஆவலும் தனிப்பட்ட முயற்சியும், இவற்றோடுகூட ஒருங்கிணைந்த முறையில் ஒருவரின் யோசிக்கும் திறமையைப் பயன்படுத்துவதும் தேவைப்படுகின்றன.)
இந்தத் தோற்றுமூலத்திலிருந்து முழுமையான உண்மையைக் கண்டடைய எதிர்பார்ப்பது நடைமுறையானதா?
2 தீமோ. 3:16; யோவன் 17:17, தி.மொ.: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.” “[இயேசு தம்முடைய பரலோகத் தகப்பனிடம் சொன்னதாவது:] “உமது வார்த்தையே சத்தியம்.” (சர்வலோகத்தின் சிருஷ்டிகர் அதைப்பற்றி முழு தெளிந்தறிவைக் கொண்டிருப்பாரென்பது நியாயமல்லவா? பைபிளில் சர்வலோகத்தைப்பற்றிய எல்லாவற்றையும் அவர் நமக்குச் சொல்லியில்லை, ஆனால் அவர் அதில் எழுதி பதிவுசெய்யப்படும்படி செய்திருப்பது வெறும் ஊகக் கூற்று அல்ல; அது சத்தியம். மேலும் பூமிக்கான மற்றும் மனிதவர்க்கத்துக்குமான அவருடைய நோக்கம் என்னவென்பதையும் அதை அவர் எவ்வாறு நிறைவேற்றுவார் என்பதையும் அவர் பைபிளில் கூறியிருக்கிறார். இந்த நோக்கம் முழுமையாயும், கூடிய மிகச் சிறந்த முறையிலும் நிறைவேற்றப்படுமென்பதற்கு அவருடைய சர்வவல்லமையுள்ள ஆற்றலும், மகா உயர்ந்த ஞானமும், பழுதற்ற நீதியும், மிகுந்த அன்பும் உத்தரவாதமளிக்கின்றன. இவ்வாறு தம்முடைய நோக்கத்தைப்பற்றிய அவருடைய வாக்கு முற்றிலும் நம்பத்தக்கதென அவருடைய பண்புகள் நமக்கு உறுதியளிக்கின்றன; அது சத்தியம்.)
மனிதத் தத்துவஞானங்களின் தொடக்கம் என்ன?
வரம்புகளுள்ள மக்களிடமிருந்து அவை வந்தன: பைபிள் நமக்குப் பின்வருமாறு தகவலளிக்கிறது: “மனுஷனுடைய வழி அவன் வசத்தில் இல்லை . . . தன் நடையை நடத்துவது நடக்கிறவன் வசத்தில் இல்லை.” (எரே. 10:23, தி.மொ.) இந்த வரம்புக்குட்பட்டநிலையைப் பொருட்படுத்தாமல்விட முயலுவது நல்ல பலன்களை உண்டுபண்ணவில்லையென சரித்திரம் சாட்சிபகருகிறது. ஒரு சந்தர்ப்பத்தில், “யெகோவா பெருங்காற்றினின்று யோபுக்குப் பதில் பேசுபவராய்: அறிவிலா வார்த்தைகொண்டு எனது ஆலோசனையை அந்தகாரப்படுத்தும் இவன் யார்? புருஷனைப்போல் நீ இடைகட்டிக்கொள், நான் கேட்பவற்றை நீ அறிவித்திடுவாய்; நான் பூமிக்கு அஸ்திபாரமிடும்போது நீ எங்கிருந்தாய்? அறிவாளியாயின் அறிவித்திடுவாய்,” என்று கேட்டார். (யோபு 38:1-4) (மனிதர் இயல்பாய் வரம்புகளையுடையவர்கள். கூடுதலாக, வாழ்க்கையில் அவர்களுடைய அனுபவம் சம்பந்தப்பட்ட முறையில் குறுகியதாயும் பொதுவாய் ஒரு நாகரிக வகைக்கு அல்லது ஒரு சூழ்நிலைமைக்கு மட்டுப்பட்டதாயும் இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கொண்டுள்ள அறிவு வரம்புக்குட்பட்டிருக்கிறது, மேலும் எல்லாம் அத்தகைய அளவில் ஒன்றோடொன்று இணைந்திருப்பதால் தாங்கள் போதியளவு சிந்தனைசெலுத்தியிராத அம்சங்களை எப்போதும் காண்கின்றனர். அவர்கள் தொடங்கிவைக்கும் எந்தத் தத்துவஞானமும் இந்த வரம்புகளைப் பிரதிபலிக்கும்.)
அபூரணரான மனிதர் அவற்றைத் தோற்றுவித்தனர்: “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களா”னார்கள். (ரோமர் 3:23) “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” (நீதி. 14:12) இத்தகைய அபூரணத்தினிமித்தம், மனித தத்துவஞானங்கள் ஒருவேளை கணநேர இன்பத்துக்கும் ஆனால் அதோடு ஏமாற்றத்துக்கும் மிகுந்த துயரத்துக்கும் வழிநடத்துகிற ஓர் அடிப்படையான தன்னலத்தை அடிக்கடி பிரதிபலிக்கின்றன.)
பேய்த்தன ஆவிகள் அவர்கள்பேரில் செல்வாக்குச் செலுத்துகின்றன: “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.” (1 யோவான் 5:19) “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட”வன். (வெளி. 12:9) “நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.” (எபே. 2:2) (கடவுளுடைய நற்பலனளிக்கும் நேர்மையான கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமற்போகும்படி ஆட்களை ஊக்குவிக்கும் தத்துவஞானங்கள் இத்தகைய செல்வாக்கைப் பிரதிபலிக்கின்றன. சரித்திரம் சாட்சிபகருகிறபடி, மனித தத்துவஞானங்களும் திட்டங்களும் மனிதவர்க்கத்தின் பெரும் பகுதிகளுக்குப் பெரும்பாலும் துயரத்தையே கொண்டுவந்திருக்கின்றன.)
மனித தத்துவஞானத்துக்குப் பதில் இயேசு கிறிஸ்துவின் போதகங்களைக் கற்பது ஏன் தெளிவான சிந்தனையின் அத்தாட்சியாயுள்ளது?
கொலோ. 1:15-17, தி.மொ.: “காணப்படாத கடவுளின் தற்சுரூபமும் சர்வ சிருஷ்டிக்கும் முதற் பேறுமானவர் அவரே [இயேசு கிறிஸ்து]. அவரில் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோக பூலோகங்களிலுள்ளவைகளும், . . . யாவும், அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டன. அவர் எல்லாவற்றிற்கு முந்தினவர், யாவும் அவரில் நிலைநிற்கின்றன.” (கடவுளுடன் அவருக்கிருக்கும் மிக நெருங்கிய உறவு கடவுளைப்பற்றிய சத்தியத்தைக் கற்க நமக்கு அவர் உதவிசெய்யக்கூடும்படி செய்கிறது. மேலும், அவர்மூலமாய் மற்ற எல்லாக் காரியங்களும் உண்டாக்கப்பட்டபடியால், சிருஷ்டிக்கப்பட்ட சர்வலோகம் முழுவதையும் பற்றி முழுமையான அறிவை இயேசு உடையவர். மனித தத்துவஞானி எவரும் இதில் எதையும் அளிக்க முடியாது.)
கொலோ. 1:19, 20: “சகல பரிபூரணமும் அவருக்குள்ளே [இயேசு கிறிஸ்துவுக்குள்] வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் [வாதனையின் கழுமரத்தில், NW] சிந்தின இரத்தத்தினாலே . . . யாவையும் அவர்மூலமாய்த் தம்மோடு சமாதானப்படுத்தி ஒப்புரவாக்கிக்கொள்ளவும் பிதாவுக்குப் பிரியமாயிற்று.” (இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் மூலமே கடவுள், சிருஷ்டிப்பு முழுவதையும் தம்முடன் திரும்ப ஒத்திசைவுக்குள் கொண்டுவரும்படி நோக்கங்கொண்டிருக்கிறார். மேலும், தானியேல் 7:13, 14-ல் காட்டியிருக்கிறபடி, கடவுள் இயேசுவினிடமே பூமி முழுவதன்மீதும் ஆளும் அரசாதிகாரத்தையும் ஒப்படைத்திருக்கிறார். ஆகையால் நம்முடைய எதிர்கால வாழ்க்கை எதிர்பார்ப்புகள் அவரை அறிவதன்பேரிலும் அவருடைய போதனைக்கு உகந்தவாறு இணங்கி செயல்படுவதிலும் சார்ந்திருக்கிறது.)
கொலோ. 2:8, தி.மொ.: “தத்துவசாஸ்திரம் மாயமான வஞ்சகம் இவற்றினால் ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; அவை மனுஷரின் பாரம்பரை முறைமைக்கும் உலகத்தின் பாலபோதனைகளுக்கும் இசைந்தவைகளேயன்றிக் கிறிஸ்துவுக்கு இசைந்தவைகளல்ல.” (கடவுளுக்குத்தானே அடுத்தவராயுள்ள, சர்வலோகத்திலும் இரண்டாவது பெரிய ஆளாகிய இயேசு கிறிஸ்துவின் சீஷனாக உண்மையான ஞானத்தை அடைவதற்குப் பதில் இத்தகைய ஏமாற்றமான மனித தத்துவஞானத்தைத் தெரிந்துகொள்வது எவ்வளவு விசனகரமான தவறாயிருக்கும்!)
மனித தத்துவஞானம் அளிக்கும் “ஞானத்தை” கடவுள் எவ்வாறு கருதுகிறார்?
1 கொரி 1:19-25: “ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது. ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தைத் தேவன் பைத்தியமாக்கவில்லையா? எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், [உலகத்துக்குப்] பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்கத் தேவனுக்குப் பிரியமாயிற்று. . . . இந்தப்படி, [உலகம் கருதுகிறபடி] தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; [மனுஷர் நோக்குகிறபடி] தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.” (கடவுளுடைய பங்கில் இத்தகைய நோக்குநிலை நிச்சயமாகவே திடீர் தாக்குதலோ அல்லது அநியாயமோ அல்ல. எதையும்விட மிக அதிக விரிவாய்ப் பரவச் செய்யப்பட்டுள்ள புத்தகமாகிய பைபிளில், தம்முடைய நோக்கத்தைப்பற்றித் தெளிவான விவரத்தை அவர் அளித்திருக்கிறார். செவிகொடுத்துக் கேட்க மனமுள்ள யாவருடனும் அதைக் கலந்துபேச அவர் தம்முடைய சாட்சிகளை அனுப்பியிருக்கிறார். எந்தச் சிருஷ்டியாவது கடவுளுடைய ஞானத்தைப் பார்க்கிலும் மேலான ஞானம் தனக்கு இருக்கிறதென எண்ணுவது எத்தகைய முட்டாள்தனம்.)