வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்கு தயாரிக்க தேவையான தகவல்கள்
அக்டோபர் 3-9
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(நீதிமொழிகள் 1:7) யெகோவாவுக்குப் பயப்படுவதே அறிவைப் பெறுவதற்கு முதல் படி. முட்டாள்கள்தான் ஞானத்தையும் புத்திமதியையும் அலட்சியம் செய்கிறார்கள்.
it-2-E 180
அறிவு
அறிவின் ஊற்றுமூலம். யெகோவாதான் அறிவின் ஊற்றுமூலமாக இருக்கிறார். அவர்தான் நம் உயிருக்கு ஊற்றுமூலர். உயிர் இருந்தால்தான் ஒருவரால் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முடியும். (சங் 36:9; அப் 17:25, 28) கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்திருக்கிறார். அவருடைய படைப்புகளை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் மனிதர்களால் தங்களுடைய அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். (வெளி 4:11; சங் 19:1, 2) அதோடு, கடவுள் தன்னுடைய வார்த்தையாகிய பைபிளை கொடுத்திருக்கிறார். அதிலிருந்து அவருடைய விருப்பத்தையும் நோக்கத்தையும் மனிதர்களால் கற்றுக்கொள்ள முடியும். (2தீ 3:16, 17) அதனால், யெகோவாவின் உதவி இல்லாமல் உண்மையான அறிவை ஒருவரால் பெற்றுக்கொள்ள முடியாது. கடவுளுடைய மனதைக் கஷ்டப்படுத்திவிடுவோமோ என்ற பயம் ஒருவருக்கு இருக்க வேண்டும். அப்படிப் பயப்படுவதே அறிவைப் பெறுவதற்கான முதல் படி. (நீதி 1:7) அப்போதுதான் ஒருவரால் உண்மையான அறிவைப் பெற முடியும். கடவுள் பயம் இல்லாதவர்கள் தங்களுடைய சொந்த அறிவை நம்பி இருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை வைத்து தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
(நீதிமொழிகள் 6:1-5) என் மகனே, நீ ஒருவனுடைய கடனுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டால், முன்பின் தெரியாதவனோடு கைகுலுக்கி ஒப்பந்தம் செய்துகொண்டால், 2 உத்தரவாதம் கொடுத்துவிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டால், வாக்குக் கொடுத்துவிட்டு பிரச்சினையில் சிக்கிக்கொண்டால், 3 என் மகனே, நான் சொல்வதுபோல் செய்து அதிலிருந்து தப்பித்துக்கொள். நீ அவனிடம் நன்றாக மாட்டிக்கொண்டதால், அவசரமாகப் போய், உன்னையே தாழ்த்தி, அவனிடம் கெஞ்சு. 4 அதுவரைக்கும் கண் அசந்துவிடாதே. உன் கண் இமைகளை மூடவிடாதே. 5 வேட்டைக்காரனின் கையிலிருந்து தப்பிக்கிற கலைமானை போலவும், வேடனின் கையிலிருந்து தப்பிக்கிற பறவையைப் போலவும் நீ தப்பித்துக்கொள்.
அக்டோபர் 17-23
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(நீதிமொழிகள் 15:15) கஷ்டத்தில் தவிப்பவனுக்கு எல்லா நாளும் திண்டாட்டம்தான். ஆனால், இதயத்தில் சந்தோஷமாக இருப்பவனுக்கு எப்போதும் விருந்துக் கொண்டாட்டம்தான்.
g-E 11/13 16
நம் எல்லாருக்குமே ஏதாவது பிரச்சினை வருவதால் நாம் சோர்ந்துவிடுகிறோம். ஆனால், என்ன பிரச்சினை வந்தாலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும். அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று கவனியுங்கள்.
• நாளைக்கு என்ன நடக்குமோ என்று கவலைப்பட்டுக்கொண்டு இன்றைக்கு சோகமாக இருக்காதீர்கள். “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள். நாளைக்கு நாளைய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுகள் போதும்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார்.—மத்தேயு 6:34.
• உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களைப் பற்றி யோசியுங்கள். நீங்கள் சோகமாக இருக்கும்போது அப்படிப்பட்ட நல்ல விஷயங்களை எழுதி, அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நீங்கள் முன்பு செய்த தவறுகளைப் பற்றி எப்போதும் யோசித்துக்கொண்டு இருக்காதீர்கள். அதிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொண்டீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். வண்டியை ஓட்டும் ஒருவர் பின்னால் வரும் வண்டிகளைக் கண்ணாடியில் சில சமயம் பார்த்தாலும் அவருடைய முழு கவனமும் முன்னால்தான் இருக்கும். அதேபோல் நடந்ததைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருக்காமல் நடக்கப்போவதைப் பற்றி யோசிக்க வேண்டும். நாம் செய்யும் தவறுகளைக் கடவுள் மனதார மன்னித்துவிடுகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.—சங்கீதம் 130:4.
• கவலைகள் உங்களை வாட்டும்போது நம்பிக்கையான ஒருவரிடம் மனம்விட்டு பேசுங்கள். அப்போது அவர்களுடைய ஆறுதலான பேச்சு உங்களுக்கு இதமாக இருக்கும். “கவலை ஒருவருடைய இதயத்தைப் பாரமாக்கும். ஆனால், நல்ல வார்த்தை அதைச் சந்தோஷப்படுத்தும்” என்று நீதிமொழிகள் 12:25 சொல்கிறது. அப்படிப்பட்ட “நல்ல வார்த்தை” நம் குடும்பத்தாரிடம் இருந்தோ நம்பிக்கையான நண்பரிடம் இருந்தோ வரலாம். ஏனென்றால் அவர்கள் எப்போதும் குறை கண்டுபிடிக்காமல் ‘எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறார்கள்.’—நீதிமொழிகள் 17:17.
அக்டோபர் 31–நவம்பர் 6
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நீதிமொழிகள் 22-26
“நடக்க வேண்டிய வழியில் நடக்க பிள்ளையைப் பழக்கு”
(நீதிமொழிகள் 22:15) “பிள்ளையின் நெஞ்சில் முட்டாள்தனம் வேரூன்றியிருக்கும். ஆனால், தண்டனையின் பிரம்பு அதை அவனைவிட்டு நீக்கிவிடும்.”
(நீதிமொழிகள் 23:13, 14) பிள்ளையைத் தண்டிக்காமல் இருக்காதே. நீ பிரம்பால் அடித்தால் அவன் ஒன்றும் செத்துவிட மாட்டான். 14 நீ அவனைப் பிரம்பால் அடித்தால்தான் கல்லறைக்குப் போகாதபடி அவனைக் காப்பாற்ற முடியும்.
it-2-E 818 ¶4
பிரம்பு
அப்பா-அம்மாவுக்கு இருக்கும் அதிகாரம். “பிரம்பு” என்பது அப்பா-அம்மாவுக்கு பிள்ளைகள்மீது இருக்கும் அதிகாரத்தைக் குறிக்கிறது. நீதிமொழிகள் புத்தகத்தில் இந்த வார்த்தை நிறைய தடவை இருக்கிறது. பிள்ளைகளைக் கண்டித்துத் திருத்துவதற்கு அப்பா-அம்மா பயன்படுத்தும் எல்லா முறைகளும் இதில் உட்படுகிறது. சில சமயம் பிரம்பால் அடிப்பதையும் இது குறிக்கிறது. பிள்ளைகளைக் கண்டித்துத் திருத்தும் பொறுப்பை கடவுள் அப்பா-அம்மாவுக்கு கொடுத்திருக்கிறார். அவர்கள் அதைச் சரியாக செய்யவில்லை என்றால் அது அவர்களுடைய பிள்ளைகளை அழிவுக்கு வழி நடத்தும். அவர்களுக்கும் அவமானத்தைக் கொண்டுவரும். அதோடு, கடவுள் அவர்களைத் தண்டிப்பார். (நீதி 10:1; 15:20; 17:25; 19:13) “பிள்ளையின் நெஞ்சில் முட்டாள்தனம் வேரூன்றியிருக்கும். ஆனால், தண்டனையின் பிரம்பு அதை அவனைவிட்டு நீக்கிவிடும்.” “பிள்ளையைத் தண்டிக்காமல் இருக்காதே. நீ பிரம்பால் அடித்தால் அவன் ஒன்றும் செத்துவிட மாட்டான். நீ அவனைப் பிரம்பால் அடித்தால்தான் கல்லறைக்குப் போகாதபடி அவனைக் காப்பாற்ற முடியும்.” (நீதி 22:15; 23:13, 14) சொல்லப்போனால், “பிரம்பைக் கையில் எடுக்காதவன் தன் மகனை வெறுக்கிறான். ஆனால், மகனை நேசிக்கிறவன் அவனை அக்கறையோடு கண்டித்துத் திருத்துகிறான்.”—நீதி 13:24; 19:18; 29:15; 1சா 2:27-36.