பைபிளின் பிரதான குறிப்புகள் சாலொமோனின் உன்னதப்பாட்டு 1:1—8:14
உண்மையான அன்பு வெற்றிசிறக்கிறது!
ஒருக்காலும் அழியாத அன்பும் உண்டு. அது நிலையானது, சகிக்கிறது, வெற்றிசிறக்கிறது. இப்படிப்பட்ட அசையாத அன்பு இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய “மணவாட்டிக்கும்” அல்லது ஆவியால் பிறப்பிக்கப்பட்ட சபைக்கும் இடையே இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:2, 9; எபேசியர் 5:21-33) இந்த அன்பு சாலொமோனின் உன்னதப்பாட்டுகளில் எவ்வளவு அழகாக வர்ணிக்கப்படுகிறது!
ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரவேலின் அரசனாகிய சாலொமோனால் இயற்றப்பட்ட இந்த “உன்னதப்பாட்டு” (1:1) ஒரு மேய்ப்பனுக்கும் சூனேம் (சூலேம்) கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணுக்குமிடையே இருந்த அன்பைக் குறித்துப் பேசுகிறது. தனக்கு ஏராளமான சொத்தும் சீரும் இருந்தபோதிலும் இவற்றைக் கொண்டு அந்தச் சூலேமியப் பெண்ணின் அன்பைப் பெற்றிட முடியவில்லை, ஏனென்றால் அவள் தன்னுடைய அன்புக்குரிய மேய்ப்பனுக்கு உண்மையுள்ளவளாயிருந்தாள்.
கவிநயம் கொண்ட இந்தப் புத்தகம் கவனமாகவும் போற்றுதலுடனும் வாசிக்கப்படும்போது கிறிஸ்தவ விவாக பந்தத்தின் சிறப்பு அம்சங்களாகிய தூய்மையும் மென்மையும் உண்மையும் நிலையானதுமான அன்பு குறித்து விவாகமாகாத மற்றும் விவாகமான யெகோவாவின் ஊழியர்களின் சிந்தனைக்கு உணவாக சேவிக்கிறது. ஆம், உண்மையான அன்பின் வெற்றி குறித்த இந்த உன்னதப்பாட்டிலிருந்து நாம் எல்லோருமே நன்மையடைய முடியும்.
சாலொமோன் முகாமில் சூலேமியப் பெண்
தயவுசெய்து சாலொமோனின் உன்னதப்பாட்டு 1:1-14-ஐ வாசியுங்கள். சாலொமோனின் கூடாரங்களில் சூலேமிய பெண், தன் அன்புக்குரிய மேய்ப்பன் அங்கு இருப்பதுபோல் பேசினாள். சாலொமோன் அவளுடைய அழகை வருணித்து, பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட ஆபரணங்களால் அவளை அலங்கரிப்பதாக வாக்கு கொடுக்கிறான். அனால் அவள் அவனுடைய தீய நோக்குடைய முயற்சிகளை எதிர்த்து நின்றது மட்டுமின்றி, தன்னுடைய உண்மையான அன்பு அந்த மேய்ப்பனுக்கு மட்டுமே உரிதானது என்பதை சாலொமோனுக்குத் தெரியப்படுத்தினாள்.
◆ 1:2, 3—திராட்சரசம் மற்றும் பரிமள தைலம் ஆகிய ஒப்புவமானங்கள் ஏன் பொருத்தமானவையாயிருந்தன?
திராட்சரசம் இருதயத்தை மகிழ்விக்கிறது, சோர்ந்த ஆத்துமாவை பலப்படுத்துகிறது. (சங்கீதம் 104:15; நீதிமொழிகள் 31:6) இதமளிக்கும் தன்மைகொண்ட பரிமளதைலம் பிரியமான விருந்தினர் மீது ஊற்றப்பட்டது. (சங்கீதம் 23:5; லூக்கா 7:38) எனவே இக்கட்டான நிலையிலிருந்த சூலேமிய பெண் தன் மேய்ப்பனின் “நேசத்”தையும் “நாமத்”தையும் நினைவுபடுத்திப் பார்ப்பதன் மூலம் பலப்படுத்தப்பட்டாள், ஆறுதலளிக்கப்பட்டாள். அதுபோல கிறிஸ்துவின் அபிஷேகம்பண்ணப்பட்ட ஆட்களில் மீதியானவர்கள் இன்னும் உலகத்தில் இருப்பவர்களாய், அவரைப் பிரிந்து இருப்பவர்களாய் இருந்தாலும், தங்களுடைய மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பையும் வாக்குறுதிகளையும் தியானிப்பதன்மூலம் உற்சாகம் பெறுகிறார்கள்.
நமக்குப் பாடம்: சாலொமோன் அந்த சூலேமிய பெண்ணை “வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களைக்” கொண்டு அலங்கரித்திருக்கக்கூடும், ஆனால் இந்தப் பொருள் சம்பந்தப்பட்ட சோதனையை அவள் எதிர்த்து நின்றாள், மற்றும் அந்த மேய்ப்பனிடமாகத் தனக்கிருந்த மாறாத அன்பை அவள் உறுதிபடுத்தினாள். (1:11-14) அவளுடைய மனப்பான்மையை சிந்தித்துப்பார்ப்பது, இந்த உலகத்தின் கவர்ச்சியான பொருளாசையை வெறுத்து தன்னுடைய பரலோக மணவாளனுக்கு உண்மையுடன் நிலைத்திருக்கும்படி “மணவாட்டி” வகுப்பை பலப்படுத்துவதாயிருக்கும். நாம் பூமிக்குரிய நம்பிக்கையுடையவர்களாயிருந்தால், விவாகமாவதற்கான எண்ணமுடையவர்களாக இருந்தால், இந்த இளம் பெண்ணின் முன்மாதிரி, பொருள் சம்பந்தமான அக்கறைகளின் பேரிலல்ல ஆனால் ஆவிக்குரிய அக்கறைகளின் பேரில் முதன்மையான கவனஞ்செலுத்தும்படியாக நம்மைத் தூண்டக்கடவது.
பரஸ்பர ஏக்கம்
1:15–3:5-ஐ வாசிக்கவும். மேய்ப்பன் அரச முகாமில் பிரவேசிக்கிறான். எல்லோரையும்விட தன்னை அதிகமாக மதித்து போற்றிய அந்த அடக்கமான சூலேமிய பெண் பேரில் தனக்கிருக்கும் அன்பைக் குறித்தும் புகழுகிறான். அவர்கள் பிரிக்கப்பட்டபோது அவள் தன்னுடைய அன்புக்குரியவனுடன் தான் செலவழித்த இன்பமான நேரங்களை எண்ணிப்பார்த்தாள். அவன் தன்னிடமாக விரைந்து வரும்படியாகக் கெஞ்சினாள். இரவில் அவனுக்காக ஏங்கினாள்.
◆2:1, 3—இந்தச் சொல்லணிகள் அர்த்தப்படுத்துவது என்ன?
சூலேமிய பெண் தன்னை சாதாரண “சாரோனின் ரோஜா” என்று குறிப்பிடுகிறாள். ஏனென்றால் அவள் தாழ்மையான அடக்கமான ஒரு பெண்; சர்வசாதாரணமாகக் காணப்படும் மலர்களில் ஒருத்தியாகத்தானே தன்னைக் கருதினாள். என்றபோதிலும் மேய்ப்பனோ அவளை “முள்ளுகளுக்குள்ளே லீலிப்புஷ்பமாக”க் கருதினான், ஏனென்றால் அவள் அழகுள்ளவளாகவும் திறமையுள்ளவளாகவும் யெகோவாவுக்கு உண்மையுள்ளவளாகவும் இருந்தாள். அவளுக்கு அந்த மேய்ப்பன் “காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி மரம்,” ஏனென்றால் அவன் ஆவிக்குரிய சிந்தையுடைய ஓர் இளம் மனிதன், கடவுள் பக்தி மிகுந்தவன், மற்றும் விரும்பத்தகுந்த தன்மைகளையும் திறமைகளையும் உடையவன். விவாகமாகாத ஒரு கிறிஸ்தவன் வாழ்க்கைத் துணைக்காகத் தேடும்போது அந்த சூலேமிய பெண்ணிடமும் அவளுடைய அன்புக்குரிய மேய்ப்பனிடமும் காணப்பட்ட அதே விதமான தன்மைகளையுடைய ஓர் உண்மையுள்ள உடன் விசுவாசிக்காகப் பார்க்க வேண்டும்.
◆3:5—இந்த ஆணை ஏன் இந்த விலங்குகளோடு சம்பந்தப்படுத்தப்பட்டது?
மான்களும் வனரகளும் அமைதியும் அருளும் அழகும் மிகுந்த விலங்கினங்கள், அதே சமயத்தில் வேகமும் உறுதியான கால்களும் கொண்டவை. எனவே அந்தப் பெண் “எருசலேமின் குமாரத்திகளை” அருளும் அழகுமுடையவற்றைக் கொண்டு ஓர் ஆணைக்குள் கட்டுப்படுத்தினாள். தன்னுடைய அன்புக்குரிய மேய்ப்பனைத் தவிர வேறு எவரிலும் அன்புகொள்ளச் செய்வதிலிருந்து அந்தப் பெண்கள் விலகியிருக்குமாறு இந்த விலங்குகள் பேரில் ஒரு கட்டுப்பாட்டை வைப்பவளாயிருந்தாள்.
நமக்குப் பாடம்: எருசலேமின் குமாரத்திகள் அல்லது அரச மன்றத்தின் பணிப்பெண்கள், தனக்கு “மனதாகுமட்டும் தன்னில் அன்பை எழுப்பாமலிருக்கும்படி’ அவர்களை ஆணையால் கட்டுவித்தாள். (2:7; 3:5) எவர் பேரிலும் காதல் கொள்வது கூடாத காரியம் என்பதை இது குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. சூலேமிய பெண் சாலொமோனில் எந்தக் கவர்ச்சியையும் காணவில்லை அல்லது உணரவில்லை. அப்படியிருக்க, விவாகத்தில் இணைவது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் விவாகமாகாத கிறிஸ்தவர்கள் உண்மையாக நேசிக்கப்படக்கூடிய யெகோவாவின் உண்மையுள்ள வணக்கத்தானை அல்லது வணக்கத்தாளை விவாகத் துணையாகக் கொண்டிருக்க எத்தனிப்பது எவ்வளவு ஞானமானது!—1 கொரிந்தியர் 7:39.
எருசலேமில் இளம் பெண்
3:6—6:3-ஐ வாசிக்கவும். சாலொமோன் எருசலேமுக்கு மகிமையோடு திரும்பினான். அங்கு அந்த இளம் பெண்ணோடு தொடர்பு கொண்டான் அந்த மேய்ப்பன். அவளை அன்பு வார்த்தைகளால் பலப்படுத்தினான். ஒரு கனவில், இரவு நேரத்தில் தன்னுடைய அன்புக்குரியவர் கதவைத் தட்டும் சத்தத்திற்குப் பிரதிபலித்தவளாய் அவனுக்காக முழு முயற்சியுடன் தேடினாள், அப்பொழுது காவலாளர்கள் அவளை தவறாக நடத்தினார்கள். அவளுடைய அன்புக்குரியவரை அந்தளவுக்கு நேசிப்பதற்குக் காரணம் கேட்கப்பட்டபோது, “எருசலேமின் குமாரத்திகளிடம்” அவனைக் குறித்து அருமையாக விவரித்தாள்.
◆ 5:12—மேய்ப்பனின் கண்கள் எப்படி ‘பாலில் குளிக்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவை?’
ஏற்கெனவே சூலேமிய பெண்ணின் கண்கள் மென்மையும் அருளும் மிகுந்தவையாயிருந்ததால், புறாக்கண்களுக்கு ஒப்பிடப்பட்டது. (1:15; 4:1) ஏன், அந்த மேய்ப்பன் அவளை தன் “புறா” என்றும் அழைத்தான். (5:2) இங்கு காதல் ஏக்கங்கொண்ட அந்த இளம் பெண் மேய்ப்பனின் கண்களைப் பால்குளத்தில் குளிக்கும் சாம்பல்-நீல வண்ண புறாக்களுக்கு ஒப்பிட்டாள். (5:8, 12) அநேகமாய் இந்த ஒப்புமை மேய்ப்பனின் கண்களில் சுற்றியுள்ள பிரகாசமான வெண்ணிறப் பகுதியின் நடுவிலுள்ள கருமைக் கண்மணிகளைச் சுட்டிக்காட்டுவதாயிருக்கிறது.
நமக்குப் பாடம்: சூலேமிய பெண் ஓர் “அடைக்கப்பட்ட தோட்டம்” போலிருந்தாள். (4:12) பூர்வ இஸ்ரவேலில் தோட்டங்கள் ஒரு நல்ல நீருற்று, வித்தியாசமான காய்கறிச் செடிகள், பூச்செடிகள் மற்றும் மரங்களைக் கொண்ட ஓர் அழகிய பரதீஸ் போன்றிருந்தன. பொதுவாக அது ஒரு வேலி அல்லது மதில் சுவற்றைக் கொண்டதாக இருந்தது. பூட்டப்பட்ட ஒரு கதவு வழியாகவே தோட்டத்திற்குள் செல்ல முடியும். (ஏசாயா 5:5) அந்த மேய்ப்பனுடைய பார்வையில் சூலேமிய பெண்ணின் ஒழுக்கத் தூய்மையும் அழுகும், அரிய எழிலும் அருங்கனிகளும், நறுமணமும் அழகும், அகமகிழச் செய்யும் இன்ப சூழ்நிலையும் கொண்ட ஒரு தோட்டத்தைப் போன்றிருந்தது. அவளுடைய நேசத்தை எவனும் பெற்றுவிட முடியாது, ஏனென்றால் அவள் கற்புள்ளவளாயிருந்தாள், வரவேற்கப்படாத அத்து மீறி வரும் ஆட்களுக்கு “அடைக்கப்பட்ட தோட்டமாக” இருந்தாள். உரிமைபெற்ற நாயகனுக்கு மட்டுமே திறக்கப்பட்ட தோட்டமாயிருந்தாள். ஒழுக்கத்திலும் உண்மைத் தன்மையிலும் அந்த சூலேமிய பெண் இன்னும் விவாகமாகாதிருக்கும் கிறிஸ்தவ பெண்களுக்கு ஓர் அருமையான முன்மாதிரியை வைத்தாள்.
“யாவின் ஜுவாலை”
6:4—8:14-ஐ வாசிக்கவும். சாலொமோன் அந்தப் பெண்ணின் அழகை உயர்த்திப் பேசினான், ஆனால் அவளோ அவனை நிராகரித்து, தன்னுடைய பற்று அந்த மேய்ப்பனுக்கே உரியது என்று அறிக்கை செய்தாள். அவளுடைய அன்பைப் பெறமுடியாதவனாய் சாலொமோன் அவளை வீட்டிற்கு அனுப்பிவிட்டான். “நேசர்” தன்னுடைய பக்கத்திலிருக்க, அவள் தன்னுடைய உறுதியை நிரூபித்த ஒரு முதிர்ச்சியுள்ள பெண்ணாக சூலேமுக்குத் திரும்பினாள். அவளுக்கும் அவளுடைய மேய்ப்பனுக்குமிடையே இருந்த அன்பு மரணத்தைப்போல் வலிமையுள்ளதாகவும் அதின் தழல் “யாவின் ஜுவாலையைப்” போலவும் இருந்தது.
◆ 6:4—“செளந்தரிய நகரம்” என்ன?
இந்த வார்த்தைகளை “திர்சா” என்றும் குறிப்பிடலாம், அதாவது “இன்பம்” அல்லது “மகிழ்ச்சி” என்பது பொருள். திர்சா அழகுக்குப் பேர்பெற்ற ஒரு பட்டணம், இது இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தின் முதல் தலைநகராயிருந்தது.—1 இராஜாக்கள் 14:17; 16:5, 6, 8, 15.
◆ 7:4—அந்த இளம் பெண்ணின் கழுத்து எப்படி “யானைத் தந்தத்தினால் செய்த கோபுரத்தைப் போல” இருந்தது?
அது தந்தம் போன்று மென்மையான கழுத்தும் கோபுரம்போன்று ஒல்லியான கழுத்துமாக இருந்தது. ஏற்கெனவே அவளுடைய கழுத்து “தாவீதின் கோபுரத்”திற்கு ஒப்பிடப்பட்டது, ஒருவேளை எருசலேமின் கிழக்கு மதில் பக்கமாயிருந்த அரசனின் வீட்டு கோபுரத்திற்கு ஒப்பிடப்பட்டது. அதன்மீது ‘பராக்கிரமசாலிகளின் ஓராயிரம், வட்ட கேடயங்கள் மாட்டப்பட்டிருந்தன,’ இது சூலேமிய பெண்ணின் அழகிய கழுத்து வட்ட வட்டமான ஆபரணங்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தது என்பதையும் குறிப்பிடுவதாயிருக்கிறது.—4:4; நெகேமியா 3:25-27.
◆ 8:6, 7—அன்பு எப்படி “மரணத்தைப் போல் வலிது?”
மரணம் பாவமுள்ள மனிதரின் உயிரை பலிவாங்குவதில் சற்றும் பின்வாங்குவதில்லை. உண்மையான அன்பு அந்தளவுக்கு வலிமைபெற்றது. தனிப்பட்ட பக்தியை வற்புறுத்திக் கேட்கும் காரியத்தில் அப்படிப்பட்ட அன்பு பாதாளம் எப்படி மரித்த சடலங்களை விட்டுக்கொடுக்காதோ அதுபோல விட்டுக்கொடுக்காதது. யெகோவா தேவன் அன்பு கூரும் திறமையை மனிதருக்குக் கொடுத்திருப்பதால், இந்தத் தன்மை அவரிடமிருந்தே புறப்படுகிறது, பொருத்தமாகவே அது “யாவின் ஜுவாலை” என்று குறிப்பிடப்படுகிறது. ஐசுவரியவனாயிருந்த சாலொமோன் அரசன்கூட அப்படிப்பட்ட அன்பை விலைகொடுத்து வாங்க முடியவில்லை.
நமக்குப் பாடம்: அரசனாகிய சாலொமோனிடமாக சூலேமிய பெண்ணின் அனுபவம், அவள் வெற்றிகரமாக தேர்ச்சிபெற்ற ஒரு கடுமையான பரீட்சையாக இருந்தது. அவள் அன்பிலும் கற்பிலும் நிலையற்றவளாய் இருக்கவில்லை. வரவேற்கப்படாத அல்லது விரும்பப்படாத ஒருவருக்காக எளிதில் திறந்துவிடக்கூடியதும், குறுக்கே கேதுரு மரப்பலகையால் கட்டுப்படுத்தப்பட வேண்டியதுமான ஒரு கதவைப் போல் இல்லை. இல்லை, அந்தக் கன்னிப்பெண் இந்த உலகத்தின் எல்லா பொருள் சம்பந்தமான கவர்ச்சிகளுக்கும் எதிராக ஒரு மதில்போல நின்று, அரசனின் கவர்ச்சிகள் மீது வெற்றிசிறந்தாள். அதுபோல இன்றைய கிறிஸ்தவ பெண்களும் கடவுளைச் சார்ந்தவர்களாகவும் அந்த சூலேமிய பெண்ணின் அருமையான முன்மாதிரியை மனதில் கொண்டவர்களாகவும் யெகோவாவுக்குத் துதியுண்டாகும் வகையில் கற்புள்ள நியமங்களுக்காக உறுதியாய் நிலைநிற்கும் தன்மையை தனிப்பட்ட விதத்தில் நிரூபித்துக் காட்டலாம்.—8:8-10.
நிச்சயமாகவே, அன்பைப் பொருளாகக் கொண்டிருக்கும் இந்த “உன்னதப்பாட்டு” இயேசுவுக்கும் அவருடைய பரலோக “மணவாட்டி”யாக தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கும் இடையே இருக்கும் பந்தத்திற்கு நம்முடைய போற்றுதலை அதிகரிக்கிறது. ஆனால் யெகோவாவிடம் பக்திவைராக்கியமுடைய எல்லா இளம் ஆண்களும் பெண்களும், கணவன்மார்களும் மனைவிமார்களும் சோதனைகளை எதிர்ப்படும்போது அந்த சூலேமிய பெண்ணின் மற்றும் மேய்ப்பனின் உத்தமத்தைப் பின்பற்றுவதில் நன்மை காணலாம். மற்றும் கடவுளுடைய வார்த்தையின் இந்த அருமையான பகுதி வெற்றி சிறக்கும் அன்பின் ஊற்றுமூலராகிய யெகோவாவுக்கு என்றும் உண்மை தவறாதவர்களாயிருக்க நம்மை உந்துவிக்க வேண்டும். (w87 11/15)