யா யெகோவாவை நம்புங்கள்!
“ஜனங்களே, யெகோவாவை எல்லா காலத்துக்கும் நம்புங்கள்; யா யெகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.”—ஏசாயா 26:4, NW.
“கொடூரமான ஜாதிகளின் நகரம் தரைமட்டும் தாழ்த்தப்படுவது வெற்றிப்பாடலைக் கேட்பதாயிருக்கிறது! (ஏசாயா 25:3) பொருத்தமாகவே ஏசாயா 26-ம் அதிகாரம் 1-6 வசனங்கள் பேரரசராகிய யெகோவா தேவனுக்கு ஆர்ப்பரிப்பின் துதிபாடலைக் கொண்டிருக்கிறது. அது இப்பொழுதுங்கூட “யூதா தேசத்தில்” பாடப்படுகிறது. யூதா என்பதற்கு “புகழப்படுவது” என்பது பொருள். இந்த இடத்திலுங்கூட கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு கர்த்தராகிய யெகோவா என்ற கூற்றைப் பயன்படுத்துகிறது, இங்கு அந்தத் தெய்வீக நாமம் இரட்டிப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பாடலின் வார்த்தைகள் புதிய உலக மொழிபெயர்ப்பில் காணப்படுவது எவ்வளவு கிளர்ச்சியுள்ளதாயிருக்கிறது; இதில் எல்லா இடங்களிலும் இந்தத் தெய்வீக நாமம் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது!
2 அந்த இனிய கீதத்தை இப்பொழுது கேளுங்கள்: “பெலனான நகரம் நமக்கு உண்டு; [யெகோவா, NW] இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார். சத்தியத்தைக் கைக்கொண்டு வருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள். உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். கர்த்தரை [யெகோவாவை, NW] என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யெகோவா [யா யெகோவா, NW] நித்திய கன்மலையாயிருக்கிறார். அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்; அவர் தரைமட்டும் தாழ்த்தி அது மண்ணாகுமட்டும் இடியப்பண்ணுவார். கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும். இந்தப் பாடலை இப்பொழுது பாடுகிற அந்த நம்பிக்கையுள்ள ஆட்களோடு—யெகோவாவின் சாட்சிகளோடு—இருப்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரியது!
3 கர்த்தராகிய யெகோவா—யா—யெகோவா பெருமையுள்ளவர்களைத் தரைமட்டும் தாழ்த்தி அவரில் எல்லா சமயத்திலும் நம்பியிருப்பவர்களை இரட்சிப்பார். ஒரு சமயத்தில் “சின்னவனாக” இருந்தபோதிலும் இந்த ஆவிக்குரிய இஸ்ரவேல் “பலத்த ஜாதியாக,” “நீதியுள்ள ஜாதி”யாக ஆகியிருக்கிறான். யெகோவாவின் நகரம் போன்ற அமைப்பின் “வாசல்கள்” வழியாய் முப்பது இலட்சத்துக்கும் அதிகமான நற்பிரியமுள்ள தோழர்களாகிய ஒரு பலத்த கூட்டம் பிரவேசித்திருக்கிறது. ஒன்றுசேர்ந்து அவர்கள் ஒரு சர்வதேச சகோதரத்துவமாக இருக்கின்றனர். அவர்களுடைய எண்ணிக்கை ஐக்கிய நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகளில் 57 உறுப்பு நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகமாக இருக்கிறது. ஆனால் கடவுளுடைய “ஜாதி” அல்லது “தேசமும்” அதனோடு கூட்டுறவு கொள்கிறவர்களும் உண்மையிலேயே ஐக்கியமாயிருக்கிறார்கள். அவருடைய நியமங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே பூமி முழுவதுமுள்ள இவர்களுடைய மனச்சாய்வு. கடவுளுடைய “ஜாதி”யின் அல்லது “தேசத்தின்” அமைப்புச் “சுவர்கள்,” சத்தியத்துக்கு ஆதரவாக, அதன் உண்மையுள்ள நடத்தையைக் கெடுத்திட சாத்தான் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக ஓர் அரணாகச் சேவிக்கிறது. கடவுளுடைய மக்கள் உண்மையோடு முன்னேறிச் செல்வதை பகைஞன் முறித்திட முடியாது! நம்முடைய நம்பிக்கை எப்பொழுதுமே ‘நித்திய கன்மலையாயிருக்கிற யா யெகோவாவில்’தான் இருக்கும்.—ஏசாயா 54:17; 60:22.
4 “உயர்ந்த நகரமாகிய” “மகா பாபிலோனை” யெகோவா தாழ்த்திடப் போகிறார் என்ற எச்சரிப்பை நாம் சொல்லுகிறபோது, பூமியின் சிறுமையானவர்களும் எளிமையானவர்களும் ராஜ்யத்தின் நற்செய்தியை ஆவலுடன் ஏற்றுக்கொள்வதைக் காண்பது நம்முடைய இருதயத்துக்கு மகிழ்வூட்டுவதாயிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 18:2, 4, 5) அடையாள அர்த்தத்தில் அவர்களுங்கூட அந்த “உயர்ந்த நகரத்தை” மிதிக்கிறார்கள், அதாவது அதை அழிக்கும் செயலில் ஈடுபடுவதன் மூலமல்ல, ஆனால் அந்தக் கெட்டுப்போன ஒழுங்குமுறை மீது யெகோவாவின் பழிவாங்கும் நாளைக் குறித்து அறிவிப்பதில் பங்கு கொள்வதன் மூலம் அப்படிச் செய்கிறார்கள். (ஏசாயா 61:1, 2) பல பத்தாண்டுகளாக, யெகோவாவின் சாட்சிகள் ஜீவனைக் காக்கும் ராஜ்ய செய்தியை அவர்களுடைய வீடுகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் துன்மார்க்கரிடமும்கூட தயவைக் காண்பித்திருக்கிறார்கள். ஆனால் பலன் ஏசாயா 26:10-ல் குறிப்பிடப்பட்டது போல் இருந்திருக்கிறது: “துன்மார்க்கனுக்கு தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து யெகோவாவுடைய மகத்துவத்தைக் கவனியாதே போகிறான்.”
5 திரும்ப நிலைநாட்டப்படுதல் குறித்த தீர்க்கதரிசனம் இன்று பெரிய நிறைவேற்றத்தையுடையதாயிருக்கிறது. வாய்ப்பு கொடுக்கப்பட்ட போதிலும், “நீதியுள்ள தேசத்தில்” யெகோவாவின் தயவைப் பெறுவதற்கு வெகு சிலரே விரும்புகின்றனர். யெகோவாவையும் அவருடைய உத்தம சாட்சிகளையும் தூஷிக்கிறவர்கள் “யெகோவாவுடைய மகத்துவத்தைக்” காண மாட்டார்கள், ஏனென்றால் யெகோவாவின் நாமம் பரிசுத்தப்படுத்தப்பட்ட பிறகு மனிதவர்க்கத்துக்கு வரும் மகத்துவமான ஆசீர்வாதங்களை அநுபவித்துக்களிக்க அவர்கள் தப்பிப் பிழைக்க மாட்டார்கள். (ஏசாயா 11:9) இந்தத் தீர்க்கதரிசனம் பரதீஸான பூமியில் கல்லறைகளிலிருந்து எழுப்பப்படுகிறவர்களுக்கும் பொருந்தக்கூடும். அந்தச் சமயத்தில் தெய்வீக “சுருள்களில்” தெளிவுபடுத்தப்படும் கடவுளுடைய தகுதிகளுக்கு இசைவாக வாழ்ந்திட மறுக்கும் எவரும், தங்களுடைய பெயர்களை “ஜீவ புத்தகத்தில்” கொண்டிருக்க மாட்டார்கள்.—வெளிப்படுத்துதல் 20:12, 15; எசேக்கியேல் 33:11-ஐ ஒப்பிடவும்.
யெகோவா சமாதானத்தை கட்டளையிடுகிறார்
6 என்றபோதிலும் கடவுளுடைய உத்தம மக்கள், யா யெகோவா உயர்வாய்ப் போற்றப்பட வேண்டும், மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற உள்ளான அக்கறையுடையவர்களாயிருக்கின்றனர். தம்முடைய மக்களுக்கு “சமாதானத்தைக் கட்டளையிட” வேண்டுகிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியுடன் பின்வருமாறு கூறுகிறார்கள்: “இந்த ஜாதியைப் பெருகப் பண்ணினீர்; யெகோவாவே, இந்த ஜாதியைப் பெருகப் பண்ணினீர். நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் நெடுந்தூரத்தில் தள்ளி வைத்தீர்.” (ஏசாயா 26:12, 15) பூமியெங்கும் 210 நாடுகளில் யெகோவா தம்முடைய ஆவிக்குரிய தேசத்தில் செம்மறியாடு போன்ற மக்களைத் தொடர்ந்து சேர்த்துக்கொண்டிருக்கிறார். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான புதிய கூட்டாளிகள் முழுக்காட்டப்பட்டு வருகிறார்கள். உச்சநிலை மாதங்களில் ஐந்து லட்சத்துக்குமதிகமான விசேஷ, ஒழுங்கான மற்றும் துணைப்பயனியர்கள் சேவை செய்து வருகிறார்கள். அதிகமதிகமாக ராஜ்ய மன்றங்களும் மாநாட்டு மன்றங்களும் கட்டப்படுகின்றன. காவற்கோபுர சங்கத்தின் கிளைக் காரியாலயங்கள் தங்கள் பெத்தேல் வீடுகளையும் அச்சாலைகளையும் விஸ்தரித்து வருவதோடு, கூடுதலாக அச்சு இயந்திரங்களைச் சேர்த்து வருகிறார்கள். வளர்ச்சி தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது!
7 இந்த வளர்ச்சிக்குக் காரணம், பூமியிலுள்ள கடவுளுடைய மக்களின் விவகாரங்களை “சமாதானப் பிரபு” வழிநடத்தி வருவது. ஏசாயா தன்னுடைய தீர்க்கதரிசனத்தில் முன்னதாகக் குறிப்பிட்டது போன்றிருக்கிறது: “தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.” (ஏசாயா 9:6, 7) அந்த வார்த்தைகள் இன்று எவ்வளவு அருமையாக நிறைவேறியிருக்கிறது! யெகோவாவை நம்பியிருக்கும் ஆட்கள் அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்தின் சமாதானத்தையும், நீதியையும் நியாயத்தையும் ஏற்கெனவே அநுபவித்து வருகிறார்கள். இயேசுவின் உண்மையுள்ள சீஷர்களால் மட்டுமே அநுபவிக்கப்படும் ஓர் அன்பான ஐக்கியத்தில் அவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது. (யோவான் 13:34, 35) மேலும், அவர்கள் இயேசுவின் ராஜ்ய ஆட்சியும் “யெகோவாவை அறிகிற அறிவும்” பூமி முழுவதையும் நிரப்பிடும் வேகமாக நெருங்கிக்கொண்டு வரும் அந்தக் காலத்தை அதிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.—ஏசாயா 11:9; தானியேல் 2:35, 44, 45.
8 ராஜ்ய விஸ்தரிப்பு உச்சநிலையை எட்டும்போது, ஏசாயா 26:20-லுள்ள யெகோவாவின் அழைப்பு ஒலிக்கிறது: “என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்ச நேரம் ஒளித்துக்கொள்.” இந்தத் தீர்க்கதரிசனத்தின் “உள் அறைகள்,” இன்று பூமி முழுவதும் யெகோவாவின் சாட்சிகளுக்கு சேவை செய்யும் 54,000-க்கும் அதிகமான நகர்போன்ற சபைகளோடு நெருங்க சம்பந்தமுடையதாயிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. யெகோவாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் காத்திருந்து பார்க்க வேண்டும். ஏசாயாவின் நாட்களில் கொடிய அசீரியனை வீழ்த்திய விதமாக, அவர் துன்மார்க்கரை அழிக்கும்போது, தம் மீது நம்பிக்கையுள்ள மக்களை அவர் பாதுகாப்பார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம்.—ஏசாயா 10:24-26.
மீட்பு நிச்சயம்!
9 எசேக்கியா அரசன் எந்த காரணத்துக்காக யெகோவாவில் நம்பிக்கை வைத்தானோ இன்றும் அதே காரணத்துக்காக யெகோவாவின் சாட்சிகள் அவரில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். யெகோவாவை தன்னுடைய பேரரசராக ஏற்று அவரை முழுமையாக சார்ந்திருந்தான். எனவேதான் அசீரியனின் மிரட்டல் உச்சக் கட்டத்தை எட்டியபோது, அவன் யெகோவாவிடம் பின்வரும் வார்த்தைகளில் ஜெபம் செய்தான்: “சேனைகளின் யெகோவாவே, கேரூபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். யெகோவாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; யெகோவாவே, நீர் உமது கண்களைத் திறந்து பாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பிய வார்த்தைகளையெல்லாம் கேளும்.” (ஏசாயா 37:16, 17) யெகோவாவை வெறுப்பவர்களால் துன்புறுத்தப்படும்போதும், பரிகசிக்கப்படும்போதும், வையப்படும்போதும், உங்கள் இருதயத்திலும் அதுபோன்ற ஜெபம் பொங்கி எழுகிறதல்லவா? யெகோவாவில் முழு நம்பிக்கையுடையவர்களாக, அவருடைய பெயரில் சுமத்தப்பட்டிருக்கும் பழியை நீக்கிப்போட நீங்கள் விண்ணப்பிப்பதில்லையா? வாதனையின் கழுமரத்தில் மரிப்பதற்கு முன்பு இயேசு அவ்விதமே உணர்ந்தார். தன் பிதாவுக்கு ஏற்பட்ட நிந்தனையினிமித்தம் தான் பருகவிருந்த பாத்திரம் தன்னைவிட்டு “நீங்கக் கடவது” என்றும் விண்ணப்பித்தார்.—மத்தேயு 26:39-44.
10 அந்த அசீரியனிடமிருந்து மீட்பை நாடுவதில் தனக்குத் தன்னல நோக்கம் எதுவும் இல்லை என்பதை எசேக்கியாவின் ஜெபம் காண்பித்தது. தன்னுடைய மாம்சத்தை மட்டும் மீட்டுக்கொள்ள முற்படவில்லை. மாறாக யெகோவாவின் நாமம் பரிசுத்தப்படவேண்டும், அவருடைய அரசுரிமை மகிமைப்படுத்தப்படவேண்டும் என்பதிலேயே அவன் அக்கறையாயிருந்தான். இப்படியாக அவனுடைய ஜெபம் பின்வரும் வார்த்தைகளில் முடிந்தது: “இப்பொழுதும், எங்கள் தேவனாகிய யெகோவாவே, நீர் ஒருவரே யெகோவா என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும்.” (ஏசாயா 37:20) அதுபோல நாமும் கடைசி யுத்தமாகிய அர்மகெதோன் யுத்தத்துக்கு முன்பு வரும் சோதனைகளை நாம் எதிர்படும்போது, யெகோவாவின் நாமம் பரிசுத்தப்படுவதற்கு இரண்டாவதாகவே நம்முடைய தனிப்பட்ட இரட்சிப்பு இருக்கிறது என்பதை நாம் மனதில் வைக்கவேண்டும். நம்முடைய பேரரசர் எசேக்கியேல் மூலமாக ஏறக்குறைய 60 முறைகள் அறிக்கை செய்ததுபோல இருக்கிறது: “அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.”—எசேக்கியேல் 38:23.
11 எசேக்கியா ஜெபித்த பின்பு, சனகெரிபுக்கு விரோதமாக யெகோவா சொன்ன செய்தியை ஏசாயா அரசனுக்குத் தெரிவித்தான். ஜீவனுள்ள தேவனை நிந்திப்பதில் அந்த அசீரியன் எப்பேர்ப்பட்ட தவறை செய்தான்! ஏசாயாவின் மூலம் யெகோவா சனகெரிப் குறித்து பின்வருமாறு சொன்னார்: “யாரை நிந்தித்து தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.” இஸ்ரவேலின் பரிசுத்தர்தாமே அன்றிரவு செயல்பட்டார்! சனகெரிப் சேனையின் கருவாய் அமைந்த 1,85,000 அசீரிய இராணுவத்தினரை சங்கரித்து, “செத்த பிரேதங்களாக்க” யெகோவாவின் ஒரே ஒரு தூதன் போதுமாயிருந்தது. அந்த அகந்தைக் கொண்ட அரசன் வெட்கத்தில் நினிவேக்குப் பின்வாங்கிச் சென்றான், சில ஆண்டுகளுக்குப் பின்பு அவன் விக்கிரகாராதனையில் தொடர்ந்தபோது தன்னுடைய சொந்த குமாரர்களால் கொலை செய்யப்பட்டான். யெகோவாவின் சாட்சிகளை நிந்தித்து துன்புறுத்துகிற சாத்தானுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் யெகோவா அதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வார் என்பது குறித்து நாம் நம்பிக்கையுடனிருக்கலாம்.—ஏசாயா 37:23, 36-38.
“கொலை செய்யப்பட்டவர்களி”னிமித்தம் பழிவாங்குதல்
12 அந்தச் சமயத்தில் யுத்தக் களத்தின் காட்சி பயங்கரமாயிருந்தது, ஆனால் “மிகுந்த உபத்திரவத்தின்” சமயத்தில் அதைவிட பயங்கரமான பழிதீர்ப்பு நிறைவேற்றப்படும். (மத்தேயு 24:21) அந்தப் பெருங்கொலையின் அளவைப் பார்க்க யெகோவா நம்மை அழைக்கிறார்: “இதோ! பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி யெகோவா தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.” (ஏசாயா 26:21) முதலாவதாக மதத் தவறுகளின் சார்பாகப் பேசுகிறவர்கள் மீது நியாயத்தீர்ப்பின் அழிவை நிறைவேற்ற யெகோவா அரசியல் சக்திகளைப் பயன்படுத்துவார். அந்த நாளில் அவர்களுடைய பொய் தெய்வங்கள் அவர்களை இரட்சிக்காது! ரோமாபுரியின் போப் கலப்பு விசுவாச ஜெபங்களை ஏறெடுப்பதற்கு “மகா பாபிலோனின்” எல்லா மதங்களையும் ஒன்றுகூட்டட்டும். இந்தக் கலப்பு விசுவாசத்தின் ஆதரவாளர்கள் எவருமே உண்மையான ஜீவனுள்ள தேவனை கனம்பண்ணுவதில்லை. அவர்களுடைய போதனைகள் தவறானவையும் பைபிள் சார்ந்ததல்லாததும்போல அவர்களுடைய வழியும் அப்படியே இருக்கிறது. கடந்த நூற்றாண்டுகளெல்லாம் அவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்து வந்திருக்கின்றனர். வன்முறையற்ற கிறிஸ்தவர்களின் இரத்தத்தை சிந்தியிருக்கிறார்கள். இந்த 20-ம் நூற்றாண்டில் தவறிழைத்திருக்கும் இவர்களில் பலர் யெகோவாவின் சாட்சிகளை துப்பாக்கிக்கும் கோடரிக்கும் இறையாக்கும் வகையில் சிறையிலும் கான்ஸன்ட்ரேஷன் முகாம்களிலும் போட்ட கொடூரமான சர்வாதிகாரிகளை ஆதரித்திருக்கின்றனர். யெகோவா தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் அறிவிக்கிறதுபோல “கொலை செய்யப்பட்டவர்களினிமித்தம்” அவர்கள் பழிவாங்கப்படுவார்கள்.—உபாகமம் 32:41, 43; ஏசாயா 1:24; 63:4; வெளிப்படுத்துதல் 17:15-18; 18:21, 24.
13 பொய் மதம் பாழாக்கப்பட்டப் பிறகு, யெகோவா எஞ்சியிருக்கும் கிறிஸ்துவின் ராஜ்யத்துக்கு எதிரான மற்றனைவருக்கும் எதிராகச் செயல்படுவார். அவ்வெதிரிகளுக்கும் “மகா பாபிலோனுக்கும்” ஏசாயா 13:6, 9-லுள்ள வார்த்தைகள் பொருந்துகின்றன: “அலறுங்கள், யெகோவாவின் நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும். இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காக யெகோவாவுடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிர கோபமுமாய் வருகிறது.” சங்கீதக்காரனாகிய தாவீது முன்னறிவித்தது போல இருக்கும்: “யெகோவா தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.”—சங்கீதம் 145:20 வெளிப்படுத்துதல் 19:11-21.
14 ஏசாயா 34-ம் அதிகாரம் வசனங்கள் 1 முதல் 8-லுள்ள வார்த்தைகளையும் பூமியின் தேசங்கள் கவனிப்பது நல்லது. “ஜாதிகளே [தேசங்களே, NW] கேட்கிறதற்குக் கிட்டி வாருங்கள்; ஜனங்களே, கவனியுங்கள் . . . சகல ஜாதிகளின் மேலும் யெகோவாவுடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின் மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார். அவர்களிலே கொலை செய்யப்பட்டவர்கள் வெளியே எறியுண்டு கிடப்பார்கள்; அவர்களுடைய பிரேதங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோம் . . . அது யெகோவா பழிவாங்கும் நாள்.” அரசியல் உலகிலும் பெரிய வியாபாரத்திலும் பொய்மதத்திலும் இன்று ஊழலும் ஒழுக்கக்கேடும் மிகுந்திருக்கிறது. ஆனால் யெகோவா ஒரு சுத்தமான பூமியை நோக்கங் கொண்டிருக்கிறார். இதனிமித்தம் அவர் ஜாதிகளை—அவரை நீதியாக சேவிப்பதற்கு தங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைக்க மனமுள்ள ஆட்களை—தப்பிப்பிழைத்தலுக்குக் கூட்டிச் சேர்க்கிறார். மற்றவர்களெல்லாரும் அவருடைய பழிவாங்கும் நாளில் அழிய வேண்டும்.—எரேமியா 25:31-33.
ஒரு சமாதானமான பரதீஸ்
15 ஏசாயா 35-ம் அதிகாரத்தில், கடவுளுடைய தீர்க்கதரிசி, இன்று யெகோவாவில் நம்பியிருக்கும் திரும்ப நிலைநாட்டப்பட்ட அவருடைய மக்களின் நிலையைக் குறித்து அடையாள பாஷையில் அழகாக சித்தரிக்கிறான். ஆவிக்குரிய ஒரு பரதீஸுக்குள் கூட்டிச் சேர்க்கப்பட்டவர்களாக இவர்கள் “யெகோவாவுடைய மகிமையையும் நமது தேவனுடைய மகத்துவத்தையும்” காண்கிறார்கள். அவர்கள் சொல்லர்த்தமான ஒரு பரதீஸையும் எதிர்நோக்கியவர்களாய் பின்வரும் வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றத்திற்குக் காத்திருக்கிறார்கள்: “அப்பொழுது குருடர்களின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப் போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும் கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.” (ஏசாயா 35:1, 2, 5, 6) அந்த எதிர்பார்ப்பில் மகிழ்ச்சி காண்கிறீர்களா? அந்த வாக்குறுதிகளை யெகோவா நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு யெகோவாவின் பேரிலிருக்கிறதா?
16 யெகோவாவில் நம்பிக்கையுள்ளவர்களாக, புதியவர்களையும் விசுவாசம் பலப்படவேண்டிய மற்றவர்களையும் நீங்கள் உற்சாகப்படுத்துவதில் பங்குகொள்ளலாம். பரதீஸை விவரிக்கையில் பின்வரும் இந்த அவசர கோரிக்கையைத் தீர்க்கதரிசியாகிய ஏசாயா சேர்த்துக்கொள்கிறான்: “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள் மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள், இதோ உங்கள் தேவன் நீதியைச் சரிகட்டவும் உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.” (ஏசாயா 35:3, 4) ஆம், நீதியினிடமாக சாய்ந்த இருதயங்களையுடைய எல்லாரும் பரதீஸான பூமியில் பிரவேசிப்பதற்கு யெகோவாவில் நம்பிக்கை வளர்ப்பதைக் காண விரும்புகிறோம்.
17 எனவே நாம் தளர்ந்த கைகளை ஆதரித்து தாங்குவோமாக, அப்பொழுது அவர்கள் “ஜீவ வசனத்தை [உறுதியாக, NW] பிடித்துக்கொள்”வார்கள். தள்ளாடுகிற முழங்கால்களையுடையவர்களை நிலைநிறுத்துவோமாக, அப்பொழுது “யெகோவாவுக்குப் பிரியமுண்டாக” அவருக்குப் பாத்திரராய் நடந்திட உதவுகிறவர்களாக இருப்போம். (பிலிப்பியர் 2:14; கொலோசெயர் 1:10) ஆம், இருதயத்தில் சோர்வுற்றவர்களுக்கு ஆறுதலளிப்போமாக, சோதனைகளை அல்லது துன்புறுத்தல்களை எதிர்ப்படுகிறவர்கள் “திடன்கொண்டு பயமில்லாமல் திரு வசனத்தைச் சொல்லும்படி” ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவோமாக. (பிலிப்பியர் 1:14; 1 தெசலோனிக்கேயர் 5:14) எபேசியர் 5:15, 16) அப்பொழுது யெகோவாவின் பழிவாங்கும் நாள் வரும்போது, ‘அவர் வந்து தம்முடையவர்களை இரட்சிப்பதில்’ அவருடைய ஆசீர்வாதம் குறித்து நிச்சயமாயிருக்கலாம். அந்த நாளில் இரட்சிப்புக்காக யெகோவாவில் நம்பிக்கையாயிருக்கும் ஆட்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்களா?
18 யெகோவாவில் எப்பொழுதும் நம்பிக்கையாயிருப்பவர்களுக்கு அந்த நாளுக்குப் பின்பு எப்பேர்ப்பட்ட மகத்துவமான எதிர்பார்ப்பு இருக்கிறது! பாவமுள்ள ஒடுக்குகிற ஆட்கள் இல்லாமற் போவார்கள்! புதியதோர் உலகில் யா யெகோவாவை நேசிப்பவர்கள் அவருடைய குமாரனால் பாவமற்ற பரிபூரண நிலைக்குத் திரும்ப நிலைநாட்டப்படுவார்கள்! அந்தக் காலத்துக்காக நீங்கள் காத்துக்கொண்டில்லையா? நீங்கள் யெகோவாவில் நம்பியிருப்பது உங்களை அந்த மகத்தான நாளிடமாக வழிநடத்தும். ஆம், ஜனங்களே, எப்பொழுதும் யெகோவாவில் நம்பியிருங்கள், இது உங்களுக்கு இரட்சிப்பைக் குறிக்கும்! (w88 1⁄15)
விமர்சனக் கேள்விகள்
◻ ஏசாயா 26-ன் வெற்றிப் பாடல் நம்மை என்ன செய்யத் தூண்டுகிறது?
◻ எந்த “உயர்ந்த நகரத்தை” யெகோவா தாழ்த்திடுவார்? அதை நாம் எப்படி மிதித்திடுவோம்?
◻ சனகெரிபின் மிரட்டலின்போது எசேக்கியா ஏறெடுத்த ஜெபத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
◻ ஏசாயா 26:21-ல் “கொலை செய்யப்பட்டவர்களி”னிமித்தம் எப்படி பழிவாங்கப்படுகிறது?
◻ நாம் யா யெகோவாவில் நம்பியிருப்பதன் பலன் என்னவாக இருக்கும்?
[கேள்விகள்]
1, 2. ஏசாயா 26:1-6-ல் கொடுக்கப்பட்டிருக்கும் மகிழ்ச்சிக்குரிய துதி பாடல் என்ன? ஏன் அது கொடுக்கப்பட்டிருக்கிறது?
3. (எ) “நீதியுள்ள ஜாதி” [தேசம், NW] எது? அதன் திறந்த “வாசல்கள்” வழியாய்ப் பிரவேசித்திருப்பவர்கள் யார்? (பி) முறித்துப் போடுவதற்கான பகைவரின் முயற்சிகள் இருந்தபோதிலும் யெகோவாவின் அமைப்பு எப்படி ஐக்கியமாக முன்னேறுகிறது?
4, 5. (எ) “உயர்ந்த நகரம்” எது? யெகோவாவின் மக்கள் எப்படி அதை அடையாள அர்த்தத்தில் மிதித்துப் போடுகின்றனர்? (பி) ஏசாயா 26:10-ன் தீர்க்கதரிசனம் எப்பொழுது அதன் பெரிய நிறைவேற்றத்தைக் கொண்டிருக்கிறது? எப்படி? (சி) இந்தத் தீர்க்கதரிசனத்துக்கு வேறு என்ன பொருத்தமும் உண்டு?
6. யெகோவாவின் உத்தம மக்கள் மகிழ்ச்சியோடு எழுப்பும் குரலின் வார்த்தைகள் என்ன? ஏன்?
7. யெகோவாவின் நகர்போன்ற அமைப்பின் விஸ்தரிப்புக்கு என்ன விளக்கம் இருக்கிறது?
8. ஏசாயா 26:20-லுள்ள யெகோவாவின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுவது என்ன? “உள் அறைகள்” எதோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது?
9. (எ) அரசனாகிய எசேக்கியா யெகோவாவில் தன் நம்பிக்கையை எவ்விதம் வெளிப்படுத்தினான்? (பி) யெகோவாவை விரோதிக்கிறவர்களால் நாம் துன்புறுத்தப்படும்போது அல்லது அடிக்கப்படும்போது நம்முடைய சரியான பிரதிபலிப்பு என்னவாக இருக்க வேண்டும்?
10. (எ) எசேக்கியாவின் ஜெபம் அவனுடைய அடிப்படை அக்கறையைக் குறித்து நமக்கு தெரிவிப்பது என்ன? (பி) அர்மகெதோனுக்கு முன்னால் நாம் பரீட்சைகளை எதிர்படும்போது எப்படி எசேக்கியாவைப் போல் இருக்கலாம்?
11. (எ)சனகெரிப் என்ன தவறு செய்தான்? இதைக் குறித்து யெகோவா என்ன சொன்னார்? (பி) சனகெரிபுக்கு ஏற்பட்ட விளைவை நோக்கும்போது, நாம் என்ன நம்பிக்கையைக் கொண்டிருக்கலாம்?
12. (எ) அர்மகெதோனில் நிறைவேற்றப்படும் பழிவாங்குதல் குறித்து ஏசாயா 26:21 எவ்விதம் விளக்குகிறது? (பி) அர்மகெதோனுக்கு முன்பாகவே பழிவாங்கப்படுவதற்கு அந்தக் “கொலை செய்யப்பட்டவர்கள்” யார்? எப்படி?
13. “யெகோவாவின் நாளைக்” குறித்து ஏசாயா என்ன முன்னறிவித்தான்? அந்த வார்த்தைகள் யாருக்குப் பொருந்துகிறது?
14. ஏசாயா மேலுமாக சொன்ன எந்த வார்த்தைகளுக்கு ஜாதிகள் அல்லது தேசங்கள் செவிகொடுக்க வேண்டும்? ஏன்?
15. அதிகாரம் 35-ல் ஏசாயா (எ) தற்காலத்தைக் குறித்தும் (பி) எதிர்காலத்தைக் குறித்தும் விளக்குவது என்ன?
16, 17. (எ) பரதீஸைக் குறித்து விளக்குகையில் ஏசாயாவின் அவசரமான வேண்டுகோள் என்ன? (பி) இந்த வேண்டுகோளுக்கு யெகோவாவின் மக்கள் எப்படி பிரதிபலிக்க வேண்டும்?
18. யெகோவாவில் நம்பிக்கையுடைய ஆட்களுக்கு எதிர்காலத்தில் என்ன மகத்தான எதிர்பார்ப்பு இருக்கிறது? அவர்களுடைய தீர்மானம் என்ன?
[பக்கம் 22-ன் பெட்டி]
போப் ஆட்சி மன்றம் மீது வழக்கு தொடருவதா?
மிலானின் இல் கியார்னேல் பத்திரிகையில் உம்பெர்ட்டே சினிஸ்கால்சி எழுதிய ஒரு கட்டுரையின் சுருக்கத்தைக் கொடுத்த உவர்ல்டு பிரஸ் ரிவ்யு பின்வருமாறு கூறுகிறது: “இத்தாலியின் வழக்கைத் தொடருவதற்கான உச்ச நீதிமன்றம் கடுமையாக குறை கூறப்படுகிறது. ஏனென்றால் ஜூலை [1987-ல்] பான்கோ அம்புரோஸியானோ ஊழல் குற்றச்சாட்டு உட்பட்டிருந்த மூன்று வத்திக்கான் வங்கி அதிகாரிகளை கைது செய்யும்படியாக கொடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டது.” வத்திக்கானுக்கும் இத்தாலி அரசுக்குமிடையே இருந்த ஒரு பழைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம், ஆர்ச் பிஷப்பாகவும் வங்கியின் தலைமை இயக்குனரும் பிரதான கணக்கராகவுமிருந்த வங்கியின் அக்கிராசனருக்கு விடுபாட்டுரிமை வழங்கியது. அந்தச் செய்திப் பத்திரிகை தொடர்ந்து கூறியதாவது: “சில குறை காணும் ஆட்கள், நீதிபதிகளின் தீர்மானத்துக்காக அவர்களைக் குறைசொல்லாவிட்டாலும், இத்தாலிய மண்ணில் சட்டத்தின் வரம்பை மீறியவர்களுக்கு விடுபாட்டுரிமை வழங்குவதனால் இத்தாலிய சட்டத்திற்கு முன்னால் அந்த ஒப்பந்தம் அல்லது உடன்பாடு அவமதிக்கப்பட்டுவிடுகிறது. இத்தாலியில் இழைக்கப்படும் குற்றங்களுக்கு போப் ஆட்சி மன்றம் மீது வழக்கு தொடருவதற்கு இத்தாலியின் நீதிமுறைக்கு அனுமதி வழங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் ஏற்பட வேண்டுமென்று சில சட்ட நிபுணர்கள் வற்புறுத்துகிறார்கள்.”