-
“நீங்கள் உயிர் அடைவீர்கள்”தூய வணக்கம்—பூமியெங்கும்!
-
-
“எங்களுடைய எலும்புகள் காய்ந்துவிட்டன, எங்களுக்கு நம்பிக்கையே போய்விட்டது”
6. அந்தத் தரிசனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள யெகோவா சொன்ன என்ன வார்த்தைகள் எசேக்கியேலுக்கு உதவின?
6 அடுத்ததாக அந்தத் தரிசனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள எசேக்கியேலுக்கு யெகோவா உதவினார். “இந்த எலும்புகள் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரையும் குறிக்கின்றன” என்று சொன்னார். சொல்லப்போனால், எருசலேமின் அழிவைப் பற்றி சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் இறந்த நிலையில் இருப்பதாக உணர்ந்தார்கள். அதனால் அவர்கள், “எங்களுடைய எலும்புகள் காய்ந்துவிட்டன, எங்களுக்கு நம்பிக்கையே போய்விட்டது, நாங்கள் ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளப்பட்டோம்” என்று புலம்பினார்கள். (எசே. 37:11; எரே. 34:20) ஆனால், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக யெகோவா ஒரு செய்தியைச் சொன்னார். காய்ந்துபோன எலும்புகள் பற்றிய இந்தத் தரிசனத்தில் அந்த நம்பிக்கையூட்டும் செய்தி அடங்கியிருந்தது.
-
-
“நீங்கள் உயிர் அடைவீர்கள்”தூய வணக்கம்—பூமியெங்கும்!
-
-
8. (அ) ‘இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருமே’ எப்படி இறந்த நிலையில் இருந்தார்கள்? (ஆ) இஸ்ரவேல் ஜனங்கள் அடையாள அர்த்தத்தில் இறந்துபோனதற்கான காரணத்தை எசேக்கியேல் 37:9 எப்படிக் காட்டுகிறது? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
8 இந்தத் தரிசனத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் வருத்தமான விஷயம் இஸ்ரவேலர்களிடம் எப்படி நிறைவேறியது? கி.மு. 740-ல் பத்துக் கோத்திர ராஜ்யம் வீழ்ச்சியடைந்து அதன் மக்கள் சிறைபிடிக்கப்பட்ட சமயத்திலேயே அது நிறைவேற ஆரம்பித்தது. அதன் பிறகு, சுமார் 130 வருஷங்களுக்குப் பின், யூதா மக்களும் நாடுகடத்தப்பட்டார்கள். இப்படி, ‘இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருமே’ சிறையிருப்புக்குத் தள்ளப்பட்டார்கள். (எசே. 37:11) அந்தச் சமயத்தில், சிறையிருப்பில் இருந்த எல்லாருமே, தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த எலும்புகளைப் போல ஆன்மீக விதத்தில் இறந்த நிலையில் இருந்தார்கள்.a எசேக்கியேல், “மிகவும் காய்ந்துபோன” எலும்புகளைப் பார்த்ததாகச் சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அவர்கள் ரொம்பக் காலமாகவே இறந்த நிலையில் இருந்ததை இது காட்டுகிறது. இஸ்ரவேல் ராஜ்யமும் யூதா ராஜ்யமும் சேர்ந்து மொத்தம், 200 வருஷங்களுக்கும் மேல், அதாவது கி.மு. 740-லிருந்து கி.மு. 537 வரை, அந்த நிலையில் இருந்தன.—எரே. 50:33.
-
-
“நீங்கள் உயிர் அடைவீர்கள்”தூய வணக்கம்—பூமியெங்கும்!
-
-
a தரிசனத்தில் எசேக்கியேல், இயற்கையாகவே இறந்துபோனவர்களின் எலும்புகளை அல்ல, ‘கொல்லப்பட்ட ஜனங்களின்’ எலும்புகளைத்தான் பார்த்தார். (எசே. 37:9) அடையாள அர்த்தத்தில் ‘இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருமே’ கொல்லப்பட்டார்கள். முதலில் பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தை அசீரியர்களும், பிறகு இரண்டு கோத்திர யூதா ராஜ்யத்தை பாபிலோனியர்களும் கைப்பற்றி, அந்த மக்களைச் சிறைபிடித்து, நாடுகடத்தியபோது இது நடந்தது.
-