வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்கு தயாரிக்க தேவையான தகவல்கள்
செப்டம்பர் 4-10
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எசேக்கியேல் 42-45
“மீண்டும் உண்மை வணக்கம்!”
(எசேக்கியேல் 43:10-12) மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்கள் தாங்கள் செய்த குற்றங்களை நினைத்து வெட்கப்பட வேண்டும். அதனால், நீ பார்த்த ஆலயத்தைப் பற்றி அவர்களிடம் விளக்கிச் சொல். அதன் வடிவமைப்பை அவர்கள் ஆராய்ந்து பார்க்கட்டும். அவர்கள் செய்த அக்கிரமத்தையெல்லாம் நினைத்து அவர்கள் வெட்கப்பட்டால், ஆலயத்தின் வரைபடத்தை அவர்களுடைய கண் முன்னால் வரைந்து காட்டு. அதன் எல்லா பகுதிகளையும், உள்ளே போகிற வாசல்களையும், வெளியே போகிற வாசல்களையும், நுணுக்கமான மற்ற விவரங்களையும் வரைந்து காட்டு. ஆலயம் சம்பந்தப்பட்ட எல்லா சட்டதிட்டங்களையும் அவர்களுக்கு எடுத்துச் சொல். அப்போதுதான், அவர்கள் அதன் கட்டமைப்பைப் பற்றி விவரமாகத் தெரிந்துகொள்வார்கள், அதற்குரிய சட்டதிட்டங்களின்படி செய்வார்கள். ஆலயத்தைப் பற்றிய சட்டம் இதுதான்: மலை உச்சியில் இருக்கிற மொத்த இடமும் மகா பரிசுத்தமான இடமாக இருக்கும். இதுதான் ஆலயத்தைப் பற்றிய சட்டம்.
it-2-E பக். 1082 பாரா 2
ஆலயம்
ஆலயத்தைப் பற்றி எசேக்கியேல் பார்த்த தரிசனம். கி.மு. 593-ல், எருசலேம் நகரமும் சாலொமோனின் ஆலயமும் அழிக்கப்பட்ட பின்பு 14-ஆம் வருஷம், குருமாரும் தீர்க்கதரிசியுமான எசேக்கியேல் உயரமான ஒரு மலைமேல் கொண்டுபோகப்பட்டார். அங்கே யெகோவாவின் பிரமாண்டமான ஆலயத்தை அவர் பார்த்தார். (எசே 40:1, 2) சிறையிருப்பிலிருந்த ஜனங்கள் வெட்கப்பட வேண்டும் என்பதற்காகவும், மனந்திருந்த வேண்டும் என்பதற்காகவும், உண்மையுள்ளவர்களை ஆறுதல்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தான் பார்த்த எல்லாவற்றையும் ‘இஸ்ரவேல் ஜனங்களிடம்’ சொல்லும்படி எசேக்கியேல் கட்டளையிடப்பட்டிருந்தார். (எசே 40:4; 43:10, 11) அளவு பற்றிய விவரம் தரிசனத்தில் தெளிவாகக் கொடுக்கப்பட்டது. “அளவுகோல்” (பெரிய அளவுகோல் 3.11 மீ; 10.2 அடி) மற்றும் “முழம்” (பெரிய முழம் 51.8 செ.மீ; 20.4 அங்.) என்பதுதான் அங்கே பயன்படுத்தப்பட்ட அலகு. (எசே 40:5, அடிக்குறிப்பு) அளவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததால், தரிசனத்தில் வந்த இந்த ஆலயம், பிற்பாடு செருபாபேல் கட்டிய ஆலயத்தின் (பாபிலோனிலிருந்து விடுதலையானதிலிருந்து முதல் நூற்றாண்டு வரை இருந்த காலப்பகுதியில்) மாதிரியாக இருந்திருக்கலாம் என்று சிலர் நினைத்தார்கள். ஆனால், இதை உறுதிப்படுத்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(எசேக்கியேல் 43:8, 9) முன்பு, எனக்கும் அவர்களுக்கும் நடுவில் ஒரு சுவர் மட்டும் இருக்கும்படி என்னுடைய ஆலயத்தின் வாசலுக்குப் பக்கத்திலேயே அவர்களுடைய ஆலயத்தின் வாசலையும், என்னுடைய ஆலயத்தின் கதவு நிலைகளுக்குப் பக்கத்திலேயே அவர்களுடைய ஆலயத்தின் கதவு நிலைகளையும் வைத்தார்கள். எல்லா அருவருப்பான காரியங்களையும் செய்து என்னுடைய பரிசுத்தமான பெயரைக் கெடுத்தார்கள். அதனால் நான் கோபத்தில் அவர்களை அழித்தேன். இப்போது, எனக்குத் துரோகம் செய்வதை அவர்கள் விட்டுவிடட்டும். அவர்களுடைய ராஜாக்களுடைய உடல்களை என் முன்னாலிருந்து தூரமாக வீசியெறியட்டும். அப்போது, நான் அவர்களோடு என்றென்றும் இருப்பேன்.
it-2-E பக். 467 பாரா 4
பெயர்
கடவுளுடைய பெயரைத் தாங்கியிருந்த இஸ்ரவேலர்கள் அவருடைய நீதியான சட்டங்களின்படி வாழாததன் மூலம் கடவுளுடைய பரிசுத்தமான பெயரைக் கெடுத்தார்கள். (எசே 43:8; ஆமோ 2:7) இஸ்ரவேலர்கள் உண்மையில்லாமல் போனதால், கடவுள் அவர்களைத் தண்டித்தார். அதனால், மற்ற தேசத்தாரும்கூட கடவுளுடைய பெயரை அவமதித்தார்கள். (சங் 74:10, 18-ஐயும், ஏசா 52:5-ஐயும் ஒப்பிடுங்கள்.) யெகோவாதான் அவர்களுக்கு இந்தத் தண்டனையை கொடுத்தார் என்பதை அந்தத் தேசங்கள் புரிந்துகொள்ளவில்லை. அதனால், யெகோவா தன்னுடைய மக்களைப் பாதுகாக்காமல் போனதால்தான் இஸ்ரவேலர்களுக்கு இந்த அவல நிலை வந்ததாக அவர்கள் நினைத்தார்கள். தன்னுடைய பெயருக்கு வந்த நிந்தனையைப் போக்குவதற்காக, யெகோவா நடவடிக்கை எடுத்தார். இஸ்ரவேலர்களில் மீதியாக இருந்தவர்களை மறுபடியும் கூட்டிச்சேர்த்தார்.—எசே 36:22-24.
(எசேக்கியேல் 45:9, 10) உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேலின் தலைவர்களே, நீங்கள் செய்யும் அக்கிரமத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது!’ ‘ஜனங்களை அடக்கி ஒடுக்குவதையும் கொடூரமாகத் தாக்குவதையும் விட்டுவிட்டு, நீதியையும் நியாயத்தையும் செய்யுங்கள். என் ஜனங்களுடைய சொத்துகளைப் பறிப்பதை நிறுத்துங்கள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். ‘அளப்பதற்காக நீங்கள் பயன்படுத்துகிற தராசும், எப்பா அளவும், பாத் அளவும் துல்லியமாக இருக்க வேண்டும்.
it-2-E பக். 140
நியாயம்
ஒருவர் யெகோவாவால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டால், அவர் யெகோவாவின் நியாயமான சட்டங்களைப் பற்றி தெரிந்துவைத்திருக்கவும், அதன்படி நடக்கவும் வேண்டியிருந்தது. (ஏசா 1:17, 18; 10:1, 2; எரே 7:5-7; 21:12; 22:3, 4; எசே 45:9, 10; ஆமோ 5:15; மீ 3:9-12; 6:8; சக 7:9-12)
செப்டம்பர் 11-17
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 1001
மனிதகுமாரன்
எபிரெய வேதாகமத்தில், மனிதகுமாரன் என்ற வார்த்தை எசேக்கியேல் புத்தகத்தில் நிறைய தடவை இருக்கிறது. இந்தத் தீர்க்கதரிசியை, “மனிதகுமாரனே” என்று 90-க்கும் அதிகமான தடவை கடவுள் அழைக்கிறார். (எசே 2:1, 3, 6, 8) இந்தத் தீர்க்கதரிசி வெறுமனே பூமியில் வாழும் மனிதன் என்பதை வலியுறுத்துவதற்காக இந்தப் பட்டப்பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், மனிதர்களுடைய சார்பில் பேசுபவருக்கும், தீர்க்கதரிசியுடைய செய்தியின் ஊற்றுமூலராயிருக்கிற உன்னதமான கடவுளுக்கும் இருக்கிற வித்தியாசத்தை இந்தப் பட்டப்பெயர் எடுத்துக்காட்டுகிறது. தானியேல் 8:17-ல், தீர்க்கதரிசியான தானியேலுக்கும் இதே பட்டப்பெயர்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 18-24
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(தானியேல் 1:5) அதோடு, தான் சாப்பிடுகிற அதே உணவையும் தான் குடிக்கிற அதே திராட்சமதுவையும் அவர்களுக்குத் தினமும் கொடுக்கும்படி கட்டளை கொடுத்தான். மூன்று வருஷங்கள் பயிற்சி கொடுத்த பின்பு அரண்மனையில் அவர்களுக்குப் பொறுப்புகளைத் தர வேண்டும் என்றும் சொன்னான்.
(தானியேல் 1:8) ராஜாவுடைய உணவினாலும் திராட்சமதுவினாலும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாது என்று தானியேல் தன் இதயத்தில் தீர்மானமாக இருந்தார். அதனால், அவற்றைச் சாப்பிட்டுத் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமல் இருக்க தலைமை அதிகாரியிடம் அனுமதி கேட்டார்.
it-2-E பக். 382
மேஷாக்
ராஜாவுடைய உணவு ‘தீட்டுள்ளதாக’ இருந்தது என்று அவர்கள் நினைத்ததற்கு மூன்று காரணங்கள் இருந்திருக்கலாம்: (1) திருச்சட்டத்தின்படி அசுத்தமாக இருந்த மிருகங்களை பாபிலோனியர்கள் சாப்பிட்டார்கள்; (2) அந்த மிருகங்களிலிருந்து இரத்தம் சரியாக நீக்கப்பட்டிருக்கிறதா என்று அவர்கள் கவனமாகப் பார்க்க மாட்டார்கள், சில மிருகங்கள் நெரித்துக் கொல்லப்பட்டன; (3) பொய் கடவுள்களை வணங்கிய அந்த மக்கள், மிருகங்களை முதலில் அவர்களுடைய கடவுள்களுக்குப் பலி கொடுத்தார்கள், அப்படிப்பட்ட இறைச்சியைச் சாப்பிடுவது அந்தக் கடவுள்களை வழிபடுவதன் பாகமாக இருந்ததாக அவர்கள் நினைத்தார்கள்.—தானி 1:8; 1கொ 10:18-20, 28-ஐ ஒப்பிடுங்கள்.
செப்டம்பர் 25–அக்டோபர் 1
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(தானியேல் 5:17) அதற்கு தானியேல், “ராஜாவே, பரிசுகள் உங்களிடமே இருக்கட்டும். இல்லையென்றால், வேறு யாருக்காவது கொடுங்கள். எப்படியிருந்தாலும், நான் இந்த எழுத்துக்களை உங்களுக்கு வாசித்துக் காட்டி விளக்குகிறேன்.
(தானியேல் 5:29) உடனே, தானியேலுக்கு ஊதா நிற உடையை உடுத்திவிட்டு, தங்கச் சங்கிலியைப் போட்டுவிடும்படி பெல்ஷாத்சார் கட்டளை கொடுத்தான். பின்பு, அவருடைய ராஜ்யத்தில் தானியேல் மூன்றாம் அதிபராவார் என்ற அறிவிப்பு செய்யப்பட்டது.
w88-E 10/1 பக். 30 பாரா. 3-5
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
எபிரெயரான தானியேல் உள்ளே கொண்டுவரப்பட்டபோது, தானியேலை ஊதா நிறத்தில் உடுத்தப்போவதாகவும், அவருக்குத் தங்கச் சங்கிலியைப் போட்டுவிடப்போவதாகவும், தன்னுடைய ராஜ்யத்தின் மூன்றாம் அதிபராக நியமிக்கப்போவதாகவும் ராஜா சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், தீர்க்கதரிசி மரியாதையோடு இப்படிப் பதிலளித்தார்: “ராஜாவே, பரிசுகள் உங்களிடமே இருக்கட்டும். இல்லையென்றால், வேறு யாருக்காவது கொடுங்கள். எப்படியிருந்தாலும், நான் இந்த எழுத்துக்களை உங்களுக்கு வாசித்துக் காட்டி விளக்குகிறேன்.”—தானியேல் 5:17.
எழுத்துக்களை வாசித்து அதன் அர்த்தத்தை சொல்ல, தானியேலுக்கு யாரும் லஞ்சம் கொடுக்கவோ பரிசுகள் கொடுக்கவோ வேண்டியிருக்கவில்லை. ராஜாவே அந்தப் பரிசுகளை வைத்துக்கொள்ளலாம் அல்லது அவற்றை வேறு யாருக்காவது கொடுக்கலாம். எப்படியிருந்தாலும், தானியேல் விளக்கம் சொல்வார். பணத்துக்காக அல்ல, உண்மை கடவுளான யெகோவா விளக்கம் சொல்லச் சொல்லியிருந்ததால் அப்படிச் செய்வார். யெகோவா சீக்கிரத்தில் பாபிலோனை நியாயந்தீர்க்க இருந்தார்.
தானியேல் 5:29-ல் வாசிக்கிறபடி, தானியேல் அந்த எழுத்துக்களை வாசித்து அதன் அர்த்தத்தைச் சொன்ன பிறகு, அவருக்கு அந்தப் பரிசுகளைக் கொடுக்கும்படி ராஜா கட்டளையிட்டார். அந்த உடையையும் சங்கிலியையும் தானியேலே போட்டுக்கொள்ளவில்லை. பெல்ஷாத்சார் ராஜாவுடைய கட்டளையின்படிதான் அவை தானியேலுக்குப் போடப்பட்டது. இது தானியேல் 5:17-ல் இருக்கிற வார்த்தைகளோடு முரண்படுகிறது என்று சொல்ல முடியாது. ஏனென்றால், தன்னுடைய நோக்கம் சுயநலமற்றது என்பதை தானியேல் அந்த வசனத்தில் மிகவும் தெளிவாகக் காட்டியிருக்கிறார்.