ஒளி கொண்டுசெல்வோர்—என்ன நோக்கத்துக்காக?
“உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன்.”—அப்போஸ்தலர் 13:47.
1. அப்போஸ்தலர் 13:47-ல் குறிப்பிடப்பட்ட கட்டளை பவுல் அப்போஸ்தலன்மீது எவ்விதமாகச் செல்வாக்குச் செலுத்தியிருந்தது?
“நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் [யெகோவா, NW] எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்,” என்று பவுல் அப்போஸ்தலன் சொன்னார். (அப்போஸ்தலர் 13:47) அதை அவர் சொன்னது மாத்திரமில்லாமல், ஆனால் அதன் முக்கியத்துவத்தையும் அவர் உணர்ந்துகொண்டிருந்தார். ஒரு கிறிஸ்தவனாக ஆனதற்குப் பின்பு, பவுல் அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதற்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். (அப்போஸ்தலர் 26:14-20) அது நமக்கும் கட்டளையிடப்பட்டிருக்கிறதா? அப்படியானால், அது ஏன் நம்முடைய நாளில் முக்கியமாக இருக்கிறது?
மனிதவர்க்கத்துக்கு ‘ஒளி அணைந்துபோன’போது
2. (எ) உலகம் அதனுடைய முடிவுகாலத்திற்குள் பிரவேசித்தபோது, அதன் ஆவிக்குரிய மற்றும் ஒழுக்கசம்பந்தமான சூழலை வெகுவாக பாதித்த என்ன சம்பவித்தது? (பி) ஆகஸ்ட் 1914-ல் நடந்துகொண்டிருந்ததைப் பார்த்த ஒரு பிரிட்டிஷ் அரசியல் மேதை என்ன சொன்னார்?
2 இன்று உயிரோடிருக்கும் பெரும்பாலான ஆட்கள் பிறப்பதற்கு முன்பே, இந்த உலகம் அதனுடைய முடிவுகாலத்திற்குள் பிரவேசித்துவிட்டது. முக்கியத்துவமிக்க சம்பவங்கள் வேகமாக ஒன்றன்பின் ஒன்றாக நடந்தேறின. ஆவிக்குரிய மற்றும் ஒழுக்கசம்பந்தமான இருளை முக்கியமாக ஊக்குவிப்பவனாகிய பிசாசாகிய சாத்தான் பூமிக்குத் தள்ளப்பட்டான். (எபேசியர் 6:12; வெளிப்படுத்துதல் 12:7-12) மனிதவர்க்கம் ஏற்கெனவே அதன் முதல் உலகப் போரில் மூழ்கிவிட்டிருந்தது. ஆகஸ்ட் 1914-ன் துவக்கத்தில், போர் நடைபெறுவது உறுதி என்பதாக தோன்றினபோது, அயல்நாட்டு விவகாரங்களின் பிரிட்டிஷ் அரசு செயலர் சர் எட்வார்ட் க்ரே, லண்டனில் தன் அலுவலக ஜன்னல் அருகே நின்றுகொண்டு சொன்னார்: “ஐரோப்பா முழுவதிலும் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; அங்கே திரும்பவும் விளக்கேற்றப்படுவதை நம்முடைய வாழ்நாளில் நாம் பார்க்கமாட்டோம்.”
3. மனிதவர்க்கத்தின் எதிர்பார்ப்புகளைப் பிரகாசிப்பிக்கச்செய்ய முயற்சிசெய்வதில் உலகத் தலைவர்கள் என்ன வெற்றியைக் கண்டிருக்கிறார்கள்?
3 விளக்குகளை மறுபடியும் ஒளிரச்செய்யும் முயற்சியில், சர்வதேச சங்கம் 1920-ல் இயங்க ஆரம்பித்தது. ஆனால் விளக்கு அணைந்துஅணைந்துகூட எரியவில்லை. இரண்டாம் உலகப் போரின் முடிவில், உலகத் தலைவர்கள் மீண்டும் முயன்றுபார்த்தனர், இம்முறை ஐக்கிய நாடுகள் அமைப்பை ஏற்படுத்தினர். மறுபடியுமாக, விளக்குகள் பிரகாசமாக எரியவில்லை. இருப்பினும் அதிக அண்மைக்காலச் சம்பவங்களை முன்னிட்டுப் பார்க்கையில், உலகத் தலைவர்கள் “ஒரு புதிய உலக ஒழுங்கு”பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உருவாக்கியிருக்கும் எந்தப் “புதிய உலகமும்” மெய்யான சமாதானத்தையும் பாதுகாப்பையும் அளித்திருப்பதாகச் சொல்லவே முடியாது. மாறாக, ஆயுதந்தரித்த சண்டைகள், இனப் பூசல்கள், குற்றச்செயல், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, சுற்றுச்சூழல் தூய்மைக்கேடு, வியாதிகள் ஆகியவை மக்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதைத் தொடர்ந்து கெடுத்துவருகின்றன.
4, 5. (எ) எப்பொழுது மற்றும் எவ்விதமாக மனித குடும்பத்தின்மீது இருள் வந்தமர்ந்தது? (பி) நிவாரணம் அளிக்கும்பொருட்டு என்ன தேவையாக இருக்கிறது?
4 உண்மையில், 1914-க்கு வெகுமுன்னரே மனிதவர்க்கத்துக்கு ஒளி அணைந்துவிட்டிருந்தது. அது சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பாக, நம்முடைய முதல் மானிட பெற்றோர் கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்துக்கு எந்த மதிப்பும் கொடாமல் தங்களுடைய சொந்தத் தீர்மானங்களைச் செய்யத் தெரிந்துகொண்டபோது நிகழ்ந்தது. அப்போது முதற்கொண்டு இருந்துவரும் மனிதகுலத்தின் துயரமான அனுபவங்கள், “இருளின் அதிகாரம்” என்று பைபிள் குறிப்பிடுகிற ஒன்றின்கீழ் நடக்கும் சோகக்கதைகளாக மாத்திரமே இருக்கின்றன. (கொலோசெயர் 1:13) முதல் மனிதனாகிய ஆதாம் பிசாசாகிய சாத்தானின் செல்வாக்கின்கீழ்தானே உலகத்தைப் பாவத்திற்குள் தள்ளினான்; ஆதாமிலிருந்து பாவமும் மரணமும் எல்லா மனிதவர்க்கத்துக்கும் பரவினது. (ஆதியாகமம் 3:1-6; ரோமர் 5:12) மனிதவர்க்கம் இவ்விதமாக ஒளி மற்றும் உயிரின் ஊற்றுமூலராக இருக்கும் யெகோவாவின் அங்கீகாரத்தை இழந்தது.—சங்கீதம் 36:9.
5 மனிதவர்க்கத்தில் எவருக்கும் ஒளி பிரகாசிக்கும்படி செய்வதற்கு ஒரே வழி, அவர்கள் மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனின் அங்கீகாரத்தைச் சம்பாதிப்பதாக இருக்கும். அப்பொழுது, பாவத்தின் காரணமாக “சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலான” ஆக்கினைத்தீர்ப்பு அகற்றப்படலாம். இது எவ்விதமாக கூடியகாரியமாகும்?—ஏசாயா 25:7.
“ஜாதிகளுக்கு ஒளியாகக்” கொடுக்கப்பட்டவர்
6. இயேசு கிறிஸ்துவின்மூலமாக என்ன மகத்தான எதிர்பார்ப்புகளை யெகோவா நமக்கு கூடியகாரியமாக்கியிருக்கிறார்?
6 ஆதாமும் ஏவாளும் பரதீஸிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பேகூட, நீதியை நேசிப்பவர்களுக்கு மீட்பராக இருக்கப்போகும் ஒரு “வித்தை” யெகோவா முன்னறிவித்தார். (ஆதியாகமம் 3:15) வாக்குப்பண்ணப்பட்ட அந்த வித்தின் மானிட பிறப்பைத் தொடர்ந்து, யெகோவா, வயதுசென்றவனாயிருந்த சிமியோனை எருசலேம் ஆலயத்தில், அவரை “புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளி”யாக அடையாளங்காட்டும்படி செய்வித்தார். (லூக்கா 2:29-32) இயேசுவின் பரிபூரண மானிட ஜீவ பலியில் விசுவாசத்தின்மூலம், மனிதர்கள் உடன்பிறந்த பாவத்தினால் விளைந்த ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்படமுடியும். (யோவான் 3:36) யெகோவாவின் சித்தத்துக்கிசைவாக, இப்பொழுது அவர்கள் பரலோக ராஜ்யத்தின் பாகமாகவோ அல்லது பரதீஸிய பூமியின்மீது அதன் குடிமக்களாகவோ பரிபூரணத்தில் நித்திய ஜீவனை எதிர்நோக்கியிருக்கமுடியும். என்னே ஒரு மகத்தான ஏற்பாடு அது!
7. ஏசாயா 42:1-4-லுள்ள வாக்குறுதிகளும் அவற்றின் முதல்-நூற்றாண்டு நிறைவேற்றமும் ஆகிய இரண்டும் நம்மை நம்பிக்கையால் நிரப்புவதற்கு காரணமென்ன?
7 இயேசு கிறிஸ்துதாமே இந்த மகத்தான எதிர்பார்ப்புகளின் நிறைவேற்றத்தின் உத்தரவாதியாக இருக்கிறார். இயேசு துயரத்திலிருந்த மக்களுக்கு சுகமளித்ததன் சம்பந்தமாக, அப்போஸ்தலனாகிய மத்தேயு ஏசாயா 42:1-4-ல் எழுதப்பட்டுள்ளவற்றை அவருக்கே பொருத்தினார். அந்த வேதவசனத்தின் ஒரு பகுதி இவ்வாறு வாசிக்கிறது: “இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.” எல்லா ஜாதிகளுக்கும் தேவைப்படுவது இதுவே அல்லவா? தீர்க்கதரிசனம் தொடர்ந்து கூறுகிறது: “அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார். அவர் நெரிந்தநாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும்,” இருப்பார். இதற்கிசைவாக, இயேசு ஏற்கெனவே துயரத்திலிருந்த மக்களை கொடூரமாக நடத்தவில்லை. அவர் அவர்களுக்கு இரக்கத்தை காண்பித்து, யெகோவாவின் நோக்கங்களைப்பற்றி அவர்களுக்கு கற்பித்து, அவர்களுக்கு சுகமளித்தார்.—மத்தேயு 12:15-21.
8. என்ன கருத்தில் இயேசுவை யெகோவா “ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும்” “ஜாதிகளுக்கு ஒளி”யாகவும் கொடுத்திருக்கிறார்?
8 இந்தத் தீர்க்கதரிசனத்தை கொடுத்தவர் தம்முடைய தாசனாகிய இயேசுவைக் கருத்தில் கொண்டு அவரிடம் இவ்விதமாகச் சொல்கிறார்: “நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், கர்த்தராகிய [யெகோவாவாகிய NW] நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப் பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.” (ஏசாயா 42:6, 7) ஆம், யெகோவா இயேசு கிறிஸ்துவை உடன்படிக்கையாக, முறைப்படியான உறுதியான உத்தரவாதியாக கொடுத்திருக்கிறார். அது எத்தனை உற்சாகமளிப்பதாக உள்ளது! இயேசு பூமியின் மீதிருக்கையில் மனிதவர்க்கத்துக்கு மெய்யான அக்கறையைக் காண்பித்தார்; மனிதவர்க்கத்துக்காக அவர் தம்முடைய ஜீவனையும்கூட கொடுத்தார். இவரிடம்தானே யெகோவா எல்லா தேசங்களின் மீதான ஆளுகையை ஒப்படைத்திருக்கிறார். யெகோவா அவரை ஜாதிகளுக்கு ஒளி என்பதாகக் குறிப்பிட்டதுகுறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. இயேசுதாமேயும்கூட இவ்வாறு சொன்னார்: “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்.”—யோவான் 8:12.
9. அப்போதிருந்த காரிய ஒழுங்கை மேம்படுத்துவதற்காக இயேசு ஏன் தம்மை அர்ப்பணிக்கவில்லை?
9 என்ன நோக்கத்துக்காக இயேசு உலகத்திற்கு ஒளியாக சேவித்தார்? அது நிச்சயமாகவே எந்த ஓர் உலகப்பிரகாரமான அல்லது பொருள்சம்பந்தமான நோக்கத்திற்கோ அல்ல. அப்போதிருந்த அரசியல் அமைப்பை சீர்திருத்த முயற்சிசெய்யவும் உலகத்தின் அதிபதியான சாத்தானிடமிருந்தோ அல்லது மக்களிடமிருந்தோ அரசபதவியை ஏற்கவும் மறுத்தார். (லூக்கா 4:5-8; யோவான் 6:15; 14:30) துயரத்திலிருந்தவர்களுக்கு இயேசு மிகுதியான இரக்கத்தைக் காண்பித்து மற்றவர்களால் முடியாத வழிகளில் அவர்களின் துயர்துடைத்தார். ஆனால் உடன்பிறந்த பாவத்தால் தெய்வீக ஆக்கினைத்தீர்ப்பின் கீழிருப்பதாலும் காணக்கூடாத பொல்லாத ஆவி சக்திகளால் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாலும் மனித சமுதாய அமைப்பிற்குள் நிரந்தர துயர்தீர்ப்பைக் கொண்டிருக்கமுடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். தெய்வீக உட்பார்வையோடு, இயேசு கடவுளுடைய சித்தத்தைச் செய்வதைச் சுற்றி தம்முடைய முழு வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டார்.—எபிரெயர் 10:7.
10 அப்படியென்றால் என்ன வழிகளில் மற்றும் என்ன நோக்கத்துக்காக இயேசு உலகத்திற்கு ஒளியாக சேவித்தார்? அவர் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு தம்மைதாமே அர்ப்பணித்தார். (லூக்கா 4:43; யோவான் 18:37) யெகோவாவின் நோக்கத்தைப்பற்றிய சத்தியத்துக்கு சாட்சிபகருவதன்மூலம், இயேசு தம்முடைய பரலோக தகப்பனின் பெயரையும்கூட மகிமைப்படுத்தினார். (யோவான் 17:4, 6) கூடுதலாக, உலகத்திற்கு ஒளியாக இயேசு மதசம்பந்தமான பொய்களை வெளிப்படுத்தி, இவ்விதமாக மதசம்பந்தமான அடிமைத்தனத்தில் பிடித்துவைக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஆவிக்குரிய விடுதலையை அளித்தார். அவனால் பயன்படுத்தப்பட தங்களை அனுமதிக்கிறவர்களைக் காணக்கூடாத வகையில் கட்டுப்படுத்துகிறவன் என்பதாக சாத்தானை வெளிப்படுத்திக்காட்டினார். இயேசு அந்தகாரக் கிரியைகளையும்கூட தெளிவாக அடையாளங்காட்டினார். (மத்தேயு 15:3-9; யோவான் 3:19-21; 8:44) குறிப்பிடத்தக்கவிதமாக, தம்முடைய பரிபூரண மனித உயிரைக் கிரயபலியாக ஒப்புக்கொடுப்பதன்மூலம் உலகத்துக்கு வெளிச்சமாக நிரூபித்தார். இவ்விதமாக இந்த ஏற்பாட்டில் விசுவாசத்தை அப்பியாசிக்கிறவர்களுக்கு பாவமன்னிப்பையும், கடவுளோடு ஓர் அங்கீகரிக்கப்பட்ட உறவை பெற்றுக்கொள்ளவும் யெகோவாவின் சர்வலோகக் குடும்பத்தின் பாகமாக நித்திய ஜீவனின் எதிர்பார்ப்புக்கும் வழியைத் திறந்து வைத்தார். (மத்தேயு 20:28; யோவான் 3:16) கடைசியாக, அவருடைய வாழ்நாள் முழுவதுமாக பரிபூரண தேவபக்தியைக் காத்துக்கொள்வதன்மூலம், இயேசு யெகோவாவின் அரசுரிமைக்கு ஆதரவளித்து, பிசாசைப் பொய்யனாக நிரூபித்து, இவ்விதமாக நீதியை நேசிப்பவர்களுக்கு நித்திய நன்மைகளைக் கூடியகாரியமாக்கினார். ஆனால் இயேசு ஒருவர்மட்டுமே ஒளி கொண்டுசெல்பவராக இருக்க வேண்டியிருந்ததா?
“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்”
11. அவர்கள் ஒளி கொண்டுசெல்வோராக இருப்பதற்கு, இயேசுவின் சீஷர்கள் என்ன செய்யவேண்டியவர்களாக இருந்தனர்?
11 மத்தேயு 5:14-ல் இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்: “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.” அவர்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டியவர்களாக இருந்தனர். அவர்கள் வாழும் முறையின்மூலமாகவும் அவர்களுடைய பிரசங்கிப்பின் மூலமாகவும், அவர்கள் மற்றவர்களை மெய்யான அறிவொளியின் ஊற்றுமூலராகிய யெகோவாவினிடமாக வழிநடத்தவேண்டும். இயேசுவைப் போலவே, அவர்கள் யெகோவாவின் பெயரை தெரியப்படுத்தவும் அவருடைய அரசுரிமைக்கு ஆதரவளிக்கவும் வேண்டும். இயேசு செய்ததுபோல, அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தை மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கையென அறிவிக்கவேண்டும். மதசம்பந்தமான பொய்களையும், அந்தகாரத்தின் கிரியைகளையும், இந்தக் காரியங்களுக்குப் பின்னாலிருக்கும் பொல்லாங்கனையும்கூட அவர்கள் அம்பலப்படுத்தவேண்டும். கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் எல்லா இடங்களிலுமுள்ள ஆட்களுக்கு இயேசு கிறிஸ்துவின்மூலமாக இரட்சிப்புக்கான யெகோவாவின் அன்புள்ள ஏற்பாட்டைப்பற்றி சொல்லவேண்டும். முதலில் எருசலேமிலும் யூதேயாவிலும் ஆரம்பித்து பின்னர் சமாரியாவுக்கும் சென்று இயேசு கட்டளையிட்டிருந்த விதமாகவே அந்த நியமிப்பை என்னே வைராக்கியத்துடன் பூர்வ கிறிஸ்தவர்கள் நிறைவேற்றினர்!—அப்போஸ்தலர் 1:8.
12. (எ) ஆவிக்குரிய ஒளி எந்தளவுக்கு விரிவாக்கப்பட இருந்தது? (பி) ஏசாயா 42:7-ஐபற்றி பவுல் எதைப் பகுத்துணருவதற்கு யெகோவாவின் ஆவி உதவிசெய்தது, அந்தத் தீர்க்கதரிசனம் நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கவேண்டும்?
12 இருப்பினும், நற்செய்தி பிரசங்கிக்கப்படுவது அந்தப் பகுதிக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. இயேசு தம்மை பின்பற்றியவர்களிடம், “சகல ஜாதிகளையும் சீஷராக்கு”ம்படியாக கட்டளையிட்டார். (மத்தேயு 28:19) தர்சு பட்டணத்தானாகிய சவுல் மதம் மாறிய சமயத்தில், சவுல் (அப்போஸ்தலனாகிய பவுலாக ஆனவர்) யூதர்களுக்கு மட்டுமல்ல ஆனால் புறஜாதிகளுக்கும்கூட பிரசங்கிக்கவேண்டும் என்று கர்த்தர் திட்டவட்டமாக சொல்லியிருந்தார். (அப்போஸ்தலர் 9:15) பரிசுத்த ஆவியின் உதவியோடு, பவுல் அது எதை உட்படுத்தியது என்பதை மதித்துணரலானார். இவ்விதமாக, அவர் இயேசுவில் நேரடியாக நிறைவேறும் ஏசாயா 42:7-லுள்ள தீர்க்கதரிசனம், கிறிஸ்துவில் விசுவாசத்தை அப்பியாசிக்கிற அனைவருக்கும்கூட மறைமுகமாக குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டளையாக இருப்பதை பகுத்துணர்ந்தார். ஆகவே, அப்போஸ்தலர் 13:47-ல், ஏசாயாவிலிருந்து அவர் மேற்கோள் காட்டுகையில், பவுல் இவ்வாறு சொன்னார்: “நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கி”றார். உங்களைப் பற்றி என்ன? ஒளி கொண்டுசெல்வோராக இருக்க அந்தக் கடமையை நீங்கள் பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா? இயேசுவையும் பவுலையும் போல, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதைச் சுற்றி உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறீர்களா?
நம்மை வழிநடத்த கடவுளிடமிருந்து ஒளியும் சத்தியமும்
13. சங்கீதம் 43:3-க்கு இசைவாக, நம்முடைய ஊக்கமான ஜெபம் என்ன, எதற்கு எதிராக இது நம்மை பாதுகாக்கிறது?
13 நம்முடைய சொந்த திட்டங்களின்மூலமாக மனிதவர்க்கத்தின் எதிர்காலத்தைப் பிரகாசிப்பிக்க ‘ஒளியை மீண்டும் கொண்டுவர’ நாம் முயற்சிசெய்வோமானால், கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையின் குறிப்பை நாம் வினைமையான விதத்தில் தவறவிட்டுக்கொண்டிருப்போம். இருப்பினும் உலகம் பொதுவில் என்ன செய்துகொண்டிருந்தாலும், உண்மை கிறிஸ்தவர்கள் ஒளியின் உண்மையான ஊற்றுமூலராக யெகோவாவை நோக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய ஜெபம், சங்கீதம் 43:3-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளதைப் போன்றிருக்கிறது. அது சொல்கிறது: “உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.”
14, 15. (எ) என்ன வழிகளில் யெகோவா இப்பொழுது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் அனுப்பிக்கொண்டிருக்கிறார்? (பி) கடவுளுடைய வெளிச்சமும் சத்தியமும் நம்மை உண்மையில் நடத்துவதை நாம் எவ்வாறு காட்டலாம்?
14 யெகோவா தொடர்ந்து தம்முடைய உண்மைப்பிரமாணிக்கமுள்ள ஊழியர்களின் ஜெபத்துக்கு பதிலளித்துவருகிறார். தம்முடைய நோக்கத்தை அறிவிப்பதன்மூலமும், அவருடைய ஊழியர்கள் அதை புரிந்துகொள்ள உதவிசெய்வதன்மூலமும், பின்னர் அவர் அறிவித்ததை நிறைவேற்றத்துக்கு கொண்டுவருவதன்மூலமும் அவர் வெளிச்சத்தை அனுப்புகிறார். நாம் கடவுளிடம் ஜெபிக்கையில், அது வெறுமென பரிசுத்தமான தோற்றத்தை அளிப்பதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு அல்ல. சங்கீதம் சொல்வது போலவே, யெகோவாவிடமிருந்து வரும் வெளிச்சம் நம்மை வழிநடத்தவேண்டும் என்பதே நம்முடைய ஊக்கமான ஆசையாக இருக்கிறது. கடவுள் அருளிச்செய்யும் வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்வதோடு இணைந்துவரும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம். பவுல் அப்போஸ்தலனைப் போலவே, யெகோவாவின் வார்த்தையின் நிறைவேற்றம் அதில் விசுவாசத்தை அப்பியாசிக்கும் அனைவருக்கும் மறைமுகமான கட்டளையை அது கொண்டிருக்கிறது என்பதை நாம் பகுத்துணருகிறோம். கடவுள் அந்த நோக்கத்துக்காக நம்மிடமாக ஒப்படைத்துள்ள நற்செய்தியை நாம் மற்றவர்களிடம் சொல்லிமுடிக்கும் வரையாக நாம் அவர்களுக்கு கடனாளிகளாக இருப்பதாக உணருகிறோம்.—ரோமர் 1:14, 15.
15 நம்முடைய நாளில் யெகோவா அனுப்பியிருக்கும் வெளிச்சமும் சத்தியமும் இயேசு கிறிஸ்து தம்முடைய பரலோக சிங்காசனத்திலிருந்து சுறுசுறுப்பாக ஆட்சிசெய்துகொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. (சங்கீதம் 2:6-8; வெளிப்படுத்துதல் 11:15) தம்முடைய ராஜரீக வந்திருத்தலின் போது, ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும் என்று இயேசு முன்னுரைத்தார். (மத்தேயு 24:3, 14) அந்த வேலை தீவிரமாக, பூகோளமெங்கும் இப்பொழுது செய்யப்பட்டுவருகிறது. அந்த வேலையை நம்முடைய வாழ்க்கையில் நாம் அதிமுக்கியமானதாக்கிக் கொண்டிருந்தால், அப்போது சங்கீதக்காரன் சொன்னதுபோல கடவுளுடைய வெளிச்சமும் சத்தியமும் நம்மை நடத்துகின்றன.
யெகோவாவுடைய மகிமையே பிரகாசித்திருக்கிறது
16, 17. யெகோவா எவ்விதமாக 1914-ல் ஸ்திரீபோன்ற தம்முடைய அமைப்பின்மீது தம்முடைய மகிமையை பிரகாசிக்கச் செய்தார், அவளுக்கு அவர் என்ன கட்டளையைக் கொடுத்தார்?
16 ஆன்மாவுக்கு கிளர்ச்சியூட்டும் மொழியில், எவ்விதமாக தெய்வீக ஒளி எல்லா இடங்களிலுமுள்ள ஆட்களுக்கு பரவச்செய்யப்படுகிறது என்பதை வேதவாக்கியங்கள் விவரிக்கின்றன. யெகோவாவின் “ஸ்திரீ” அல்லது உண்மைப்பிரமாணிக்கமுள்ள ஊழியர்களடங்கிய அவருடைய பரலோக அமைப்பிடமாக சொல்லப்பட்ட ஏசாயா 60:1-3 இவ்விதமாகச் சொல்கிறது: “எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] மகிமை உன் மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.”
17 யெகோவாவின் மகிமை அவருடைய பரலோக ஸ்திரீபோன்ற அமைப்பின்மீது 1914-ல் பிரகாசித்தது. அப்போது நீண்டகாலம் காத்திருந்த பிறகு, அவள் இயேசு கிறிஸ்துவை ராஜாவாகக் கொண்ட மேசியானிய ராஜ்யத்தைப் பிறப்பித்தாள். (வெளிப்படுத்துதல் 12:1-5) பூமி அனைத்தின்மீதும் உரிமையுள்ள அந்த அரசாங்கத்தை அங்கீகரிக்கும் வகையில் யெகோவாவின் மகிமைப்பொருந்தின ஒளி அதன்மீது பிரகாசிக்கிறது.
18. (எ) ஏசாயா 60:2-ல் முன்னறிவிக்கப்பட்டபடி ஏன் இருள் பூமியை மூடிக்கொண்டிருக்கிறது? (பி) தனியாட்கள் எவ்விதமாக பூமியின் இருளிலிருந்து விடுவிக்கப்படலாம்?
18 அதற்கு நேர் எதிர்மாறாக, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடிக்கொண்டிருக்கிறது. ஏன்? ஏனென்றால் தேசங்கள் மனித ஆட்சிக்கு ஆதரவாக இருந்து கடவுளுடைய அன்பின் குமாரனுடைய அரசாங்கத்தை நிராகரித்துவிடுகிறார்கள். ஒரு வகையான மனித அரசாங்கத்தை ஒழித்து மற்றொன்றை தேர்ந்தெடுப்பதன்மூலம், அவர்கள் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் துயர்துடைப்பை இது கொண்டுவருவதில்லை. காட்சிக்குப் பின்னால் ஆவி மண்டலத்திலிருந்து தேசங்களை இயக்கிக்கொண்டிருப்பது யார் என்பதை அவர்கள் காணத் தவறுகின்றனர். (2 கொரிந்தியர் 4:4) மெய்யான ஒளியின் ஊற்றுமூலரை அவர்கள் நிராகரித்துவிடுகிறார்கள், ஆகவே அவர்கள் இருளில் இருக்கிறார்கள். (எபேசியர் 6:12) இருப்பினும், தேசங்கள் என்ன செய்தாலும், தனியாட்கள் அந்த இருளிலிருந்து விடுவிக்கப்பட முடியும். எந்த வகையில்? கடவுளுடைய ராஜ்யத்தில் முழுவிசுவாசம் வைத்து அதற்கு கீழ்ப்பட்டிருப்பதன்மூலமாக.
19, 20. (எ) இயேசுவைப் பின்பற்றும் அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள்மீது ஏன் மற்றும் எவ்விதமாக யெகோவாவின் மகிமை பிரகாசித்திருக்கிறது? (பி) என்ன காரணத்துக்காக யெகோவா தம்முடைய அபிஷேகம்பண்ணப்பட்டவர்களை ஒளி கொண்டுசெல்வோராக ஆக்கியிருக்கிறார்? (சி) முன்னறிவிக்கப்பட்டபடி, எவ்விதமாக “ராஜாக்கள்” மற்றும் “தேசங்கள்” கடவுள்-கொடுத்த ஒளியினிடத்துக்கு வந்திருக்கிறார்கள்?
19 கிறிஸ்தவமண்டலம் கடவுளுடைய ராஜ்யத்தில் விசுவாசம் வைத்து அதற்கு கீழ்ப்பட்டிருக்கவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்டோர் அதைச் செய்திருக்கிறார்கள். இதன் விளைவாக, யெகோவாவின் தெய்வீக அங்கீகார வெளிச்சம் அவருடைய பரலோக ஸ்திரீயின் காணக்கூடிய இந்தப் பிரதிநிதிகள்மீது பிரகாசித்திருக்கிறது, அவருடைய மகிமை அவர்கள்மேல் காணப்பட்டிருக்கிறது. (ஏசாயா 60:19-21) உலக அரசியல் அல்லது பொருளாதார காட்சியில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும் பறித்துக்கொண்டுவிடமுடியாத ஆவிக்குரிய ஒளியை அவர்கள் அனுபவித்துக் களிக்கிறார்கள். அவர்கள் மகா பாபிலோனிலிருந்து யெகோவாவினால் விடுவிக்கப்படுவதை அனுபவித்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 18:4) அவர்கள் அவருடைய சிட்சையை ஏற்றுக்கொண்டு உண்மைப்பிரமாணிக்கத்துடன் அவருடைய அரசுரிமையை ஆதரித்திருக்கும் காரணத்தால் அவர்கள் அவருடைய அங்கீகாரப் புன்முறுவலை அனுபவிக்கிறார்கள். எதிர்காலத்துக்கு பிரகாசமான எதிர்பார்ப்புகள் அவர்களுக்கிருக்கிறது, அவர்களுக்கு முன் அவர் வைத்திருக்கிற நம்பிக்கையில் அவர்கள் களிகூருகிறார்கள்.
20 ஆனால் எந்த நோக்கத்துக்காக யெகோவா அவர்களோடு இம்முறையில் நடந்துகொண்டிருக்கிறார்? அவர்தாமே ஏசாயா 60:21-ல் சொல்லியிருப்பதுபோல, அவர் “மகிமைப்படும்படி,” அவருடைய நாமம் கனப்படுத்தப்பட்டு மற்றவர்கள்—அவர்கள்தாமே நிலையான நன்மைகளைப்பெற்றுக்கொள்ளும்படி—ஒரே மெய்க் கடவுளாக அவரிடமாக நெருங்கிவரும்படி அப்படி செய்திருக்கிறார். இதற்கு இணக்கமாக, 1931-ல் மெய்க்கடவுளின் இந்த வணக்கத்தார் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றனர். அவர்களுடைய சாட்சிகொடுத்தலின் விளைவாக ஏசாயா முன்னறிவித்தது போல “ராஜாக்கள்” ஒளியினிடத்துக்கு வந்திருக்கிறார்களா? ஆம்! பூமியின் அரசியல் ஆட்சியாளர்கள் அல்ல, ஆனால் கிறிஸ்துவோடு அவருடைய பரலோக ராஜ்யத்தில் ராஜாக்களாக ஆட்சிசெய்வதற்கு வாய்ப்புடைய மீந்திருக்கும் எண்ணிக்கையானவர்கள் வந்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 1:5, 6; 21:24) “தேசங்களைப்”பற்றி என்ன? அவர்கள் இந்த ஒளியினிடத்துக்கு கவர்ந்திழுக்கப்பட்டிருக்கிறார்களா? நிச்சயமாகவே! எந்தத் தனிப்பட்ட அரசியல் தேசமும் கவர்ந்திழுக்கப்படவில்லை, ஆனால் எல்லா தேசங்களிலுமிருந்து ஒரு திரளான கூட்டமான ஜனங்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் பக்கமாக தங்கள் நிலைநிற்கையை எடுத்திருக்கிறார்கள், அவர்கள் கடவுளுடைய புதிய உலகிற்குள் மீட்டுக்கொள்ளப்படுவதை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறார்கள். அது உண்மையிலேயே நீதி வாசமாயிருக்கும் ஒரு புதிய உலகமாக இருக்கும்.—2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 7:9, 10.
21. யெகோவா தம்முடைய சித்தத்தைப்பற்றிய புரிந்துகொள்ளுதலை நமக்கு தந்தருளியிருப்பதில் அவருடைய தகுதியற்ற தயவின் நோக்கத்தை நாம் தவறவிடவில்லை என்பதை நாம் எவ்விதமாக காண்பிக்கலாம்?
21 வளர்ந்துவரும் ஒளி கொண்டுசெல்வோரின் கூட்டத்தில் நீங்கள் ஒருவரா? இயேசுவைப் போல நாமும் ஒளி கொண்டுசெல்வோராக இருக்கும்படிக்கு அவருடைய சித்தத்தைப்பற்றிய புரிந்துகொள்ளுதலை யெகோவா நமக்கு தந்தருளியிருக்கிறார். யெகோவா நம்முடைய நாளில் தம்முடைய ஊழியர்களிடம் ஒப்படைத்திருக்கும் வேலையில் வைராக்கியத்தை வெளிகாட்டுவதன்மூலம், கடவுள் நமக்கு நீட்டியிருக்கும் தகுதியற்ற தயவின் நோக்கத்தை நாம் தவறவிடவில்லை என்பதை நாம் அனைவரும் காட்டுவோமாக. (2 கொரிந்தியர் 6:1, 2) நம்முடைய நாளில் இதைவிட அதிக முக்கியமானதொரு வேலை எதுவும் இல்லை. மேலும் அவரிடமிருந்து வரும் மகிமைபொருந்தின ஒளியை மற்றவர்களுக்கு பரவச்செய்வதன்மூலம் யெகோவாவை மகிமைப்படுத்துவதைக்காட்டிலும் பெரியதோர் சிலாக்கியம் நமக்கில்லை.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ மனிதவர்க்கத்தின் ஆழ்ந்த கவலைக்குரிய பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணங்கள் யாவை?
◻ என்ன வழிகளில் இயேசுவும் அவரை பின்பற்றுபவர்களும் “உலகத்துக்கு ஒளி”யாயிருக்கிறார்கள்?
◻ யெகோவாவின் வெளிச்சமும் சத்தியமும் நம்மை எவ்வாறு நடத்துகின்றன?
◻ யெகோவா எவ்விதமாக தம்முடைய அமைப்பின்மீது தம்முடைய மகிமை பிரகாசிக்கும்படி செய்திருக்கிறார்?
◻ என்ன நோக்கத்துக்காக யெகோவா தம்முடைய மக்களை ஒளி கொண்டுசெல்வோராக ஆக்கியிருக்கிறார்?
10. என்ன வழிகளில் மற்றும் என்ன நோக்கத்துக்காக இயேசு உலகத்துக்கு ஒளியாக சேவித்தார்?
[பக்கம் 9-ன் படங்கள்]
ஏதேனில் நடந்த சம்பவம் இன்றைய மனிதவர்க்கத்தின் ஆழ்ந்த கவலைக்குரிய பிரச்னைகளைப் புரிந்துகொள்ள நமக்கு உதவிசெய்கிறது
[படத்திற்கான நன்றி]
Tom Haley/Sipa
Paringaux/Sipa