-
ஆன்மீக விஷயங்களில் ராஜா தன் மக்களைப் புடமிடுகிறார்கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!
-
-
18 ‘கடலில் வீசப்படுகிற . . . இழுவலை’: கடல்போல் இருக்கிற மனிதர்கள் மத்தியில் நல்ல செய்தி பிரசங்கிக்கப்படுவதை இந்த இழுவலை அர்த்தப்படுத்துகிறது. “எல்லா வகையான மீன்களையும்” வாரிக்கொள்ளுதல்: நல்ல செய்தி எல்லா விதமான மக்களையும் கவருகிறது. அதாவது, உண்மைக் கிறிஸ்தவர்களாக ஆவதற்கு முயற்சி எடுக்கிறவர்களையும் கவருகிறது; சத்தியத்தை ஆர்வமாகக் கேட்டாலும் உண்மை வணக்கத்தினராக ஆகாதவர்களையும் கவருகிறது.e “நல்ல மீன்களைக் கூடைகளில்” சேகரித்தல்: நல்மனமுள்ள ஆட்கள், கூடைகளைப் போன்ற சபைகளில் சேர்க்கப்படுகிறார்கள். அங்கே அவர்கள் யெகோவாவுக்கு சுத்தமான வணக்கத்தைச் செலுத்த முடியும். “ஆகாத” மீன்களைத் தூக்கியெறிதல்: இந்தக் கடைசி நாட்களில், கிறிஸ்துவும் தேவதூதர்களும் “நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களை” தனியாகப் பிரித்துவருகிறார்கள்.f இதன் மூலம் நல்மனமில்லாத ஆட்கள், அதாவது தவறான நம்பிக்கைகளை அல்லது பழக்கவழக்கங்களை விட்டுவிட மனமில்லாத ஆட்கள், சபைகளைக் கறைப்படுத்தாதபடி பாதுகாத்திருக்கிறார்கள்.g
-
-
ஆன்மீக விஷயங்களில் ராஜா தன் மக்களைப் புடமிடுகிறார்கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!
-
-
f ஆகாத மீன்களிலிருந்து நல்ல மீன்களைப் பிரிப்பதும், வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளைப் பிரிப்பதும் ஒன்றல்ல. (மத். 25:31-46) வெள்ளாடுகளையும் செம்மறியாடுகளையும் பிரிப்பது, அதாவது கடைசி நியாயத்தீர்ப்பு கொடுப்பது, மிகுந்த உபத்திரவத்தின்போது நடக்கும். அதனால், ஆகாத மீன்களைப் போல இருப்பவர்கள் யெகோவாவிடம் திரும்பி வரவும், கூடைகளைப் போன்ற சபைகளில் சேர்க்கப்படவும் இன்னும் வாய்ப்பு இருக்கிறது.—மல். 3:7.
-