பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 20-21
“உங்களில் உயர்ந்தவனாக இருக்க விரும்புகிறவன் உங்களுக்குச் சேவை செய்கிறவனாக இருக்க வேண்டும்”
பெருமைபிடித்த வேத அறிஞர்களும் பரிசேயர்களும் மற்றவர்களுடைய மனதைக் கவர நினைத்தார்கள். தங்களுக்குப் பேரும் புகழும் கிடைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள். (மத் 23:5-7) ஆனால், இயேசு அவர்களைப் போல் இருக்கவில்லை. ‘மனிதகுமாரன் மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கு வந்தார்.’ (மத் 20:28) யெகோவாவின் சேவையில், நமக்குப் பாராட்டைத் தேடித்தரும் வேலைகளை மட்டுமே செய்ய ஆசைப்படுகிறோமா? நாம் கிறிஸ்துவைப் போல மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சேவையைப் பெரும்பாலும் மற்றவர்கள் கவனிக்க மாட்டார்கள்; ஆனால், யெகோவா கவனிப்பார்! அப்போது, அவருடைய பார்வையில் உயர்ந்தவர்களாக இருப்போம். (மத் 6:1-4) மனத்தாழ்மையான ஒருவர் . . .
ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்யும் வேலையையும் பராமரிக்கும் வேலையையும் செய்வார்
வயதானவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவ முன்வருவார்
கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக நன்கொடைகள் தருவார்